Advertisement

அத்தியாயம் இருபத்தி ஐந்து:

ஹரியின் இறுகிய அணைப்பிற்குள் ப்ரீத்தி தேம்பி தேம்பி அழ, ஹரி அந்த ஃபோட்டோவைக் காட்டி சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து, “விடு ப்ரீத்தி நான் என் லேப் எடுத்துட்டு வர்றேன்”, என்று சொல்லி விலக முற்பட ப்ரீத்தி விலக விடவில்லை.

இப்போது அவள் அவனை அணைத்துக் கொண்டு இருந்தாள். “ஏன் இப்படிப் பண்ணின? ஏன் இப்படிப் பண்ணின?”, என்று திரும்பத் திரும்ப கேட்க….  ஹரியின் எந்த வார்த்தைகளும் சமாதானப்படுத்தவில்லை. அழுது முடிக்கட்டும் என்று விட்டு விட்டான்.

அழுது முடித்து அவளாக விலகிய பிறகு, “என்ன பண்ணினேன் நான் உன்னை! என்னை என்னவோ வில்லன் மாதிரி பேசற”,  

“பின்ன நீ பண்ணினது தப்பு இல்லையா, என்னை யாரு என்னன்னு தெரியாதப்போ, என்னோட ஃபோட்டோவை அப்படி தினமும் பார்த்தது தப்பு இல்லையா?”, என்றாள் மீண்டும் கண்ணில் நீர் துளிர்க்க.

“ஏய், என்ன இது? இப்படி அழற…. யாரு என்னன்னு தெரியாம ஒரு பையன் சட்டையை பிடிச்சு, அவனை கீழ தள்ளிவிட்டு மண்டையை உடைச்சி, வந்த பிரச்சனை தான் இதெல்லாம்….. அவ்வளவு தைரியமான ப்ரீத்தியா இப்படி அழறா”,

“ஏன்? இப்போ மட்டும் என் தைரியத்துக்கு என்ன குறைச்சல்…… இதுவே வேற யாராவது இருந்தா நடக்கறதே வேற! என்ன பண்ணுவேன்னு காட்டட்டுமா!”, என்று கோபப்பட

“வேண்டாம்! வேண்டாம்!….. தெரியாம சொல்லிட்டேன்! முதல்ல நீ அதைப் பாரு, இரு அதை எடுத்துட்டு வர்றேன்!”, என்று சொல்லி வெளியே சென்று அவன் பேகை எடுக்க….

ரகு காபியோடும் பாலோடும் நின்றான்.

“இது உங்களுக்கு, இது ப்ரீத்திக்கு”, என்று கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு, “இன்னும் கொஞ்ச நேரம்!”, என்று ரகுவிடம் சொல்லி வந்தான்.

ஹரி உள்ளே வரும் வரை படபடக்கும் இதயத்தோடு, முகமெல்லாம் வெளுக்க, முயன்று தன் பதட்டத்தை ப்ரீத்தி மறைத்துக் கொண்டிருந்தாள். 

உள்ளே வந்து ஹரி அதை ஆன் செய்து காட்டவும், ஸ்க்ரீன் சேவரே ஹரி மற்றும் ப்ரீத்தி படம் தான்.

அதை படத்தை பார்த்ததும் ப்ரீத்தி கண்களை அகல விரித்தாள். “இதுதான் அவன் மார்ஃபிங் பண்ணின படம்”, என்று ஹரி சொல்ல.

படத்தைப் பார்த்ததும் ப்ரீத்திக்கு அதிர்ச்சி எல்லாமில்லை, ஒரு நிம்மதி தான். ஏனென்றால் ப்ரீத்தி ஏதோ மிகவும் அசிங்கமாக தன்னை சித்தரித்து பார்க்கக் கூடாத நிலையில் இப்படியெல்லாம் எதிர்பார்த்திருக்க அப்படி எதுமில்லை.

ப்ரீத்தியின் முகத்தில் மெல்லிய புன்னகை கூட, அதுவும் மற்றவர்கள் பார்க்கக் கூடாத நிலையே……. ஆனால் ஓகே, இந்த நிலையில் எதை எதையோ எதிர்ப்பார்த்திருக்க, அது பெரிய விஷயமாக தோன்றவில்லை.    

அதில் ப்ரீத்தியும் ஹரியும் முத்தமிட்டுக் கொண்டிருப்பது போல இருந்தது.

அதையே பார்த்தபடி இருந்தாள். “ரொம்ப நேரமா பார்க்குற, வேணுமா”, என்று ஹரி கேட்க…… ஹரியிடம் பார்வையை திருப்பிய ப்ரீத்தியின் கண்கள் சிரித்தது. 

“வேணுமா”, என்று நெருங்க, அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளினாள். “குடுக்காமையோ! வாங்காமையோ! போகமாட்டேன்!”, என்று சரசமாய் ஹரி புன்னகைக்க,

ப்ரீத்தி அவனைப் பார்த்த பார்வை முதல் முறையாக ஹரிக்கு புரியவில்லை. “என்ன ஹனி? என்ன சொல்ல வர்ற?”,

அதற்கு பதில் சொல்லாமல், “இது தான் ஃபோட்டோவா”, 

“ப்ராமிஸ், இந்த போட்டோ தான்! போதுமா! பார்த்துக்கோ!”,

“இது மட்டும் தானா”,

“இது மட்டும் தான் இப்படி லிப் டு லிப், இன்னும் ரெண்டு கட்டிப்பிடிச்சிட்டு இருக்குற மாதிரி போதுமா”, என்றான்.

“அதையும் காட்டு”, காட்டினான்….. தோள் மேல் கை போட்டு அணைத்து நிற்பது போல, அதெல்லாம் ஒன்றுமே இல்லை ப்ரீத்திக்கு.    

இவ்வளவு தானா என்பது போல தான் ப்ரீத்தி பார்த்தாள். பின்னே அவள் ஏதாவது ஆடையில்லாமல் அல்லது வேறு அருவருக்கத்தக்க வகையில் எதிர்பார்த்து இருக்க……

அப்படியெல்லாம் எதுவும் இல்லை….. இருவரும் முத்தமிட்டுக் கொள்வது போல மட்டுமே……

“இப்போ ஓகே வா!”, என்றான் ஹரி.

“இப்போ ஓகே! ஆனா அப்போ ஓகே இல்லை!”, என்று ப்ரீத்தி சொல்ல,

“அதைத்தானே நான் இவ்வளவு நேரமா சொல்லிட்டு இருந்தேன்”,

“மார்ஃபிங் பண்ணினதே தெரியாம ரியல்லா இருக்கில்ல, திறமைசாலி தான் ஜான், ஆனா அந்த திறமையை எவ்வளவு கெட்ட விதமா உபயோகிச்சு இருக்கான்”,   

“எஸ், அதைப் பார்த்துப் பார்த்து தான், உன்னைப் பார்த்தவுடனே அந்த பிஃஹேவியர்”, என்று விளக்கம் கொடுக்க……

என்னவோ ஏதோவென்று பயந்து இருந்தது எல்லாம் விலக….. பூவாய் சிரித்தாள்….. “நீ பண்ணின ரிசெர்வேஷனுக்கு, இப்படி ஒரு எக்ஸ்ப்ளனேஷன்னா…….”,

“ஆனா அப்போ இது ரொம்ப தப்பு தான்”, என்று மீண்டும் சொல்ல….

“எஸ்”, என்று ஒத்துக்கொண்டவன், “அதுவும் பையன் மாதிரி இருந்த உன் தலைமுடியை விட்டு ஒரு அழகான நிறைய முடியிருக்குற பொண்ணுக்குள்ள உன்னை பிட் பண்ணியிருக்கான்…..”,

“நீ இதுல ரொம்ப அழகா இருக்க….. எப்பவும் உன்னை நினைக்க வெச்சது இந்த ஃபோட்டோ…. எப்பவும் உன் ஞாபகம் தான்….. சொல்லப் போனா என்னை உன் ரசிகனாக்கியிருக்கான்”, என்றான் கண்களில் காதலைத் தேக்கி….. 

“ஆனா என் போட்டோ அவனுக்கு எப்படி கிடைச்சது….”,

“அதுவா, எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம், என் குரலில் கலந்தே அது பாடும்னு…… அங்க காலேஜ் கல்சுரல்ஸ்ல மேடையேறி கர்ண கடூரமா கத்தினியே, அப்போ எடுத்திருப்பான்”, என்றான் சிரிப்போடு.

ப்ரீத்தி ஹரியின் கிண்டலை எல்லாம் கண்டு கொள்ளவேயில்லை. அப்படி மனதில் ஒரு ஆசுவாசம், சந்தோசம்…….

இதழ் பதிக்கும் முத்தம் தவிர, வேறு அந்த ஃபோட்டோவில் எதுவும் இல்லை. ஆடைக் குறைப்பு, இல்லை வேறு எந்த மாதிரியும் இல்லை……..

“அந்த ஜான்க்கு நான் தேங்க்ஸ் சொல்லணும்”, என்றாள் ப்ரீத்தி.

“எதுக்கு இந்த ஃபோட்டோனால நான் உன் பின்னாடி வந்ததுக்கா”,

“அய்யே, அதுக்கு இல்லை!”,

“பின்ன!”,

“என்னை கீழ்த்தரமா காட்டாம விட்டதுக்கு…. மனுஷ மனம் ரொம்ப வக்கிரம் நிறைஞ்சது, ஏதாவது ஒரு கன்றாவி ஃபோட்டோல என் முகத்தை ஒட்டியிருந்தா நான் என்ன பண்ணியிருப்பேன்”,

“அவன் செலக்ட் பண்ணியிருக்கற பொண்ணு போட்டிருக்குற மாதிரி ஃபுல் கவர்ட் டிரஸ் என்கிட்டே கூட கிடையாது.  அவன் செஞ்சது சரின்னு சொல்லலை! ஆனா இதைவிட எவ்வளவோ மோசமா செஞ்சிருக்கக் கூடிய வேலையை இதோட விட்டானே!”,

“எல்லோரும் பார்த்திருக்காங்கன்ற டென்ஷன் இல்லையா”, என்று ஹரி கேட்க,

சிரித்தாள், “என்னை தெரிஞ்ச யாரும் இதை நம்ப மாட்டாங்க…. அதுவரைக்கு நான் முடி வளர்க்கவேயில்லையே, எப்பவும் பாய் கட் தான்!

இதுல பாரு அந்த பொண்ணுக்கு லாங் ஹேர்…”, என்றாள். அதுவரை டென்ஷன் வடிந்து ஈசியாக பேசிக் கொண்டு இருந்தவள், “ஸோ, இதனால தான் என்னைத் தேடி வந்திருக்க”, என்று சீரியஸ் ஆனாள்.

“ஐயோ! மறுபடியும் முதல்ல இருந்தா!”, என்பது போல ஹரி ஒரு லுக் விட,

“நீ என்ன சொன்னாலும், நீ செஞ்சது தப்பு ஹரி! நான் எந்த வகையிலையும் உன்னோட தொடர்புல இல்லாத அன்னியப் பெண்ணா இருந்த போது, நீ இந்த மாதிரி என்னோட ஃபோட்டோவை வெச்சு அதை தினமும் பார்த்தது ரொம்ப தப்பு”,

“இது எப்படின்னா சந்தர்ப்பம் கிடைக்காத வரைக்கும் எல்லோரும் நல்லவங்கன்ற மாதிரி தான்…….”,

“அப்போ சேன்ஸ் கிடைச்சா நான் பொண்ணுங்க கிட்ட தப்பா நடந்துக்குவேன்னு சொல்றியா”, என்றான் ஹரி இந்த முறை சீரியசாக,

“இருக்கலாம், யாருக்குத் தெரியும், என்னைப் பார்த்தவுடனே கிஸ் பண்ணின தானே!”,

“நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்ன, உன்கிட்டன்றதுனால அந்த பிஃஹேவியர், இதுவே வேற யாராவது இருந்தா நடக்கறதே வேற காட்டட்டுமான்னு கேட்கலை….. அந்த மாதிரி தான் நான் உன் ஃபோட்டோ பார்த்தது, முத்தம் குடுத்தது, எல்லாம் அப்படித்தான்… அது தான் நிஜம்!”,

முகம் இறுகி தான் ப்ரீத்தி அப்போதும் நின்றுகொண்டிருக்க,    

“அப்போ நீ என்னை நம்பலை! அப்படித்தானே!”,

“நீ செஞ்சது தப்பு!”,

“எஸ், தப்பு தான்! நான் எப்பவும் இல்லைன்னு சொல்லலையே!”, என்றான் ஹரியும் கோபமாக,

“ஆனா உங்கம்மா நீ ரொம்ப நல்லவன் மாதிரி பேசறாங்க”,

“சரி, நான் கெட்டவன் தான்! எங்கம்மா கிட்ட இப்போ நான் என்ன செஞ்சு கெட்டவன்னு காட்டணும்! இப்போ என்ன பண்ணனும் அதுக்கு?”, என்றான் திமிராக.

“உன் திமிர் குறையவேயில்லை,  நீ தான் என்னை பின்னாடி சுத்தி லவ் பண்ணினன்னு சொல்லணும்!”, 

“ஷ், உன்னோட புத்திசாலித்தனதுக்கு என்னால முடியலை…… உன் பின்னாடி சுத்தி உன்னை நான் லவ் பண்ணேன்னு சொல்றது, நான் கெட்டவன்னு காட்டுறதா!”, என்றான்.

ப்ரீத்தியின் முகத்தில் குழப்பம், “ஆமாமில்லை…”, என்றாள்.

“நான் புத்திசாலி இல்லை தான்! அதான் உன்னை செலெக்ட் பண்ணியிருக்கேன்!”, என்றாள் கோபமாக கூடவே.

“ஆனா, நான் புத்திசாலி! அதான் உன்னை செலக்ட் பண்ணியிருக்கேன்!”, என்றான் பதிலுக்கு.

இப்படியே ஏட்டிக்கு போட்டியாக பத்து நிமிடங்கள் இருவரும் வார்த்தைச் சண்டையில் ஈடுபட்டனர்.  

ஒரு கட்டத்தில், “இரு, அழுது டயர்ட் ஆகிட்டேன்! பால் சாப்பிட்டிட்டு தெம்பா சண்டை போடறேன்!”, என்று பால் குடித்து முடித்து,

“இரு, வர்றேன்!”, என்று படுக்கையை விட்டு எழுந்து, ப்ரீத்தி ப்ரெஷ் ஆக பாத்ரூம் போக, இதுவரை போர்வை அவளை சரியாக காட்டியிருக்கவில்லை ,

இப்போது நன்றாகப் பார்த்த ஹரி கண்களை விரித்தான், ஒரு ஸ்லீவ்லெஸ் பனியன், ஒரு குட்டி ட்ரௌசர் மட்டுமே அவளின் உடை.

“ஐயோ! என்ன டிரஸ் இது!”,

“ஏன், இதுக்கென்ன?”, என்று வேறு ப்ரீத்தி கேட்க……

“இப்படியே வெளில போவியா!”, என்று ஹரி கலவரமாக கேட்க,

“நோ, நோ, இது என்னோட ரூம்ன்றதுனால தான், அதோ என்னோட ஓவர்கோட், பேன்ட்”, என்று அங்கே தொங்க விட்டிருந்த உடைகளை காட்ட,

“ஷ், பா!”, என்று பெருமூச்சு விட்டான் ஹரி. அவன் பெருமூச்சு விட்ட பாவனையில் ப்ரீத்தி சிரிக்கவும், அவள் பேக் டு நார்மல் என்று புரிந்தது.

இதுதான் சாக்கென்று, அவள் அருகில் வேகமாக சென்றவன்….. “தப்புன்னு பார்த்தா அந்த விஷயம் தப்பு….. பட் அந்த ஃபோட்டோ பார்த்து எனக்கு உன் மேல ஒரு  க்ரஷ்ஷே டிவலப் ஆகிடுச்சு, உண்மை அதான், உன்னை தேடி ஓடி வந்தேன், என்னோட முத்தமும் அதனால தான், பட் வேற யார்கிட்டயும் இந்த மாதிரி நடந்திருக்க மாட்டேன்”, என்று சொல்லியவனின் கைகள் ப்ரீத்தியின் இடையை வளைத்து பிடித்து இருந்தன…..

அவளை நேருக்கு நேர் பார்த்து, ப்ரீத்தியின் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவன், “என்னை நம்பறியா”, என்றான்.

அந்த பார்வையில் உண்மை இருந்தது……

ப்ரீத்தியும் அவனை சளைக்காமல் நேர் பார்வை பார்த்தாள்.

“உன்னோட இந்தக் கண் என்னை பார்த்த முதல் நாள் இருந்து என்கிட்டே பேசுது, அது எனக்கு புரியவும் செய்யுது…… இது உனக்கும் தெரியும்….”,

“இதுக்கு மேல எதுவும் சொல்லி என்னை நான் ப்ரூவ் பண்ண முடியாது….”, என்றான்.   

இதுவரை ஹரியின் கைகள் ப்ரீத்தியின் இடையைச் சுற்றி வளைத்து இருக்க…. இப்போது ப்ரீத்தியும் அவளின் கைகளை அவனின் இடையை சுற்றிப் போட்டு இன்னும் அவனை தன்னுடன் நெருக்கிக் கொண்டவள்,

“நீங்க உங்களை ப்ரூவ் பண்ண சொல்லி நான் எப்போ கேட்டேன்”, என்றாள்.

ப்ரீத்தி மரியாதை பன்மைக்கு மாறியதை தொடர்ந்து சற்று சமாதானமாகிவிட்டாள் என்று புரிந்தது. இருந்தாலும் அவள் சொல்ல வருவது புரியாமல் ஹரி அவளையே பார்த்திருக்க…..

“நீங்க செஞ்சது தப்பு, அதைத் தான் நான் சொல்றேன். அதுக்காக நீங்க என்னை லவ் பண்ணலை, ஃபிளர்ட் பண்றீங்கன்னு சொல்லலை…. பட், அது தப்பு, என்னை தேடி வந்து நாம லவ் பண்ணினதால அது சரியாப் போச்சு”, 

“ஒரு வேலை எனக்கு உங்க மேல லவ் வராம இருந்திருந்தா, அது எவ்வளவு பெரிய தப்பு……”,

“அதான் இப்போ தப்பு இல்லையே! விடேன்!”,

“அதெல்லாம் விட முடியாது!”,

“விடாம, என்னப் பண்ண போற!”, என்று கடுப்பாக ஹரி கேட்க,

“உங்க தப்பை சரி பண்ண முடியாது! அதுக்கு சரி சமமா நானும் தப்பு பண்ணினா ஈகுவல் ஆகிடுவோம்”, என்று புதிய தியரி பேசினாள்.

“என்ன தப்பு பண்ணுவ”, என்று ஹரி சற்று கலவரமாக கேட்டான்.

“ம்”, என்றவள், “இப்படித் தான்”, என்று சொல்லி ஹரியை பார்த்த பார்வை ஹரிக்கு விஷயத்தை சொல்ல…… 

“உன்னோட தப்புக்கு வெயிட்ங் ஹனி”, என்றான் காதலாக.

அந்த ஃபோட்டோவில் இத்தனை நாட்கள் ஹரி பார்த்திருந்ததை….. அதற்கு முன்பும் அவன் நடத்திக் காட்டியிருந்ததை ஆர்வமாக தன் செயலாக ப்ரீத்தி செயலாக்க……

எப்போதாவது ப்ரீத்திக்கு தெரிய வருமோ? வந்தால்…… என்ன ஆகுமோ என்ற ஹரியின் மனதில் இருந்த உறுத்தல் எல்லாம் ப்ரீத்தி அவனுக்கு கொடுத்த முத்தத்தில் மறைந்தது.

ப்ரீத்தி அவனை விடவும், “தேங்க்ஸ் ஹனி”, என்றான்…… ப்ரீத்தியின் முத்தத்தில், ஹரியின் கர்வம் சற்றுக் குறைய, முதன் முறையாக ஹரியின் கண்கள் ப்ரீத்தியிடம் மன்னிப்பையும் யாசித்தது.

“கொஞ்சம் உன் திமிர் குறைஞ்சிருச்சு போல”, என்று சிரிப்போடு ப்ரீத்தி கேட்டாள்……

“என்ன திமிர்?”,

“என்னை வான்னு சொன்ன….. அப்போ தான் காட்டுவேன் அது இதுன்னு பெரிய இவன் மாதிரி பேசின…….”,

“அதுவா உன் உடன்பிறப்பு எனக்கு போன் பண்ணினான்”,

“யாரு ரகு வா?”, என்றாள் ஆச்சர்யமாக.

“ம், அவன் தான்! எங்கக்கா உன்னை கமிட்மென்ட்ன்னு சொல்றா! நீ என்ன அவ பார்த்து வைச்சிருக்குற வேலையா……  உங்களை பார்த்து காதலிக்க கூடாதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன்னு நிறைய பேசிட்டான்”,

“இதுல நீ உன் காதல்ல தோத்துப் போயிட்டன்னு டைலாக் வேற விட்டான்!”,

“ஓஹ்! அதுதான் வின் பண்ணிடுவேன்னு காட்ட ஓடி வந்தீங்களா!”,

“இல்லை! அவன் பேசினது கண்டிப்பா என்னை அப்செட் பண்ணிச்சு! ஆனா நான் வந்ததுக்கு அது ரீசன் கிடையாது… அவன் இந்தளவுக்கு பேசினான்னா நீ எந்தளவுக்கு அப்செட் ஆகியிருப்பன்னு பயந்து தான் வந்தேன்”.

“அய்யோடா! என்னை ரொம்ப தான் கன்சிடர் பண்றீங்க!”, என்று ப்ரீத்தி நக்கலடிக்க….  

“எனக்குத் திமிரா? உனக்கு தான் திமிர்! எனக்கு குறைஞ்சு, உனக்கு அதிகமாகிடிச்சு, அதனால நீ எனக்கு குறைச்ச மாதிரி நான் உனக்கு குறைக்கிறேன்”, என்று சொல்லி….. ஹரியும் ப்ரீத்தியின் இதழ்களை முற்றுகையிட, முத்த யுத்தம் ஒன்று துவங்க….. 

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா                                                                                            பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா 

என்று ப்ரீத்தியின் தொலைபேசி விடாமல் அடிக்க………  விலகி யார் என்று பார்த்தாள்.

அது ராஜசேகரனின் அழைப்பு….. இதுவரை ஹரியை அணைத்திருந்த கைகள் விலகி, “அப்பா”, என்று அவனை விட்டுத் தள்ளி நின்றாள்.

“எடுக்கவா! வேண்டாமா!”, என்று பார்த்திருக்க, “எடு”, என்றான் ஹரி,

“நீங்க இங்க இருக்ககீங்க……”,

“ஃபோன்ல அதெல்லாமா தெரியும் எடு!”,….

“என்னால பொய் சொல்ல முடியாது!”,

“பொய் சொல்லாத! என்னப் பத்தின பேச்சு வராது! தைரியமா எடு! உங்கப்பா என்னைப் பத்தி அவரா பேசி உனக்கு ஞாபகப்படுத்த மாட்டார்!”, என்றான் ராஜசேகரனை தெரிந்தவனாக.

ப்ரீத்தி எடுக்கவும், “என்ன ப்ரீத்தி? ரகு போன் அடிச்சா எடுக்கவேயில்லை, உன் ஃபோனும் இவ்வளவு லேட்டா எடுக்கற”,

“ரகு என்ன பண்றான்னு தெரியலைப்பா, நான் தான் எடுத்துட்டேனே!”,

“ரெண்டு பேரும் எடுக்கலைன்னா டென்ஷன் ஆகுது இல்லை!”, என்று அவர் கவலைப் பட,

“நத்திங் டு வொர்ரிபா!”, என்று ப்ரீத்தி அவரிடம் சகஜமாக பேசியவள், அவரை மேலே பேச விடாமல், “நான் ரகுவை பார்த்துட்டுக் கூப்பிடறேன்”, என்று வைத்து விட்டாள்.

பின்பு ப்ரெஷ் ஆக சென்று, அவள் ப்ரெஷ் ஆகி வரும்போதே, நைட் பேன்ட் ஷர்ட் போல அணிந்து வர, “நானா தான் வாயை விட்டு ஃபுல்லா கவர் பண்ண வெச்சிடேனா”, என்று பாவம் போல ஹரி சொல்ல,

புன்னகைத்தவள், “ரொம்ப நேரம் ஆச்சு, வாங்க!”, என்று ப்ரீத்தி வெளியில் வேகமாக செல்ல, ஹரியும் தொடர்ந்தான்.

ரகு அங்கு தான் அமர்ந்து டீ வீ பார்த்துக் கொண்டு இருந்தான். “ஏன் ரகு அப்பா போன் எடுக்கலை?”,

“பேசி ஏதாவது உளறிட்டேன்னா, அதான் எடுக்கலை…..”, என்றான் அவனும்.

ஹரிக்கு இருவரும் இப்படிப் பேசுவது அவன் ஏதோ திருட்டுத்தனமாக வந்ததாக ஒரு தோற்றத்தைக் கொடுக்க….

“ஓகே! நான் கிளம்பறேன்!”, என்றான் உடனே

“ஏன்?”, என்று ரகுவும்……. “போறீங்களா”, என்று ப்ரீத்தியும் ஒரே சமயத்தில் கேட்க..

“எஸ்! உன்னைப் பார்க்க வந்தேன், பார்த்துட்டேன், ஐ திங்க் நான் சொல்ல வேண்டியதையும் சொல்லிட்டேன்!”, என்றான் ஹரி.

அவ்வளவுதானா மீண்டும் போகிறானா என்று ப்ரீத்தி மறுபடியும் முகத்தை தூக்கி வைத்து அமர்ந்து கொண்டாள். கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.

“ப்ரீத்தி!”, என்று மறுபடியும் ஹரி அருகில் வர,

“நீ வேண்டாம் போ”, என்று ஒருமைக்கு மாற…..

“இப்போ என்ன?”, என்று ரகு தான் இருவரையும் முறைத்தான்.

“அய்ய, நான் எல்லாம் லவ் பண்ணவே மாட்டேன்”, என்று மீண்டும் ரகு ஸ்டேட்மெண்ட் விட,

“இப்படித் தான் நானும் உங்கக்காவை பார்க்கறதுக்கு முன்னாடி சொல்லிட்டு இருந்தேன்”, என்றான் ஹரி ரகுவைப் பார்த்து….

“என்கிட்டேப் பேசி பிரயோஜனமில்லை. அவளை சும்மா சும்மா அழ வெச்சிட்டே இருக்கீங்க”, என்று கடுப்பாக ரகு சொல்ல….

“அதுக்கு நான் காரணமில்லை! நீங்க!”, என்றான் ஹரி.

“என்ன நாங்களா?”, என்றான் ரகுவும் திரும்ப.

“பின்ன, அவ என்னோட இருந்தா அழ மாட்டா! அவளை எனக்கு கல்யாணம் பண்ணிக் குடுங்க!”, என்றான் ஹரி……

“உங்கப்பா அம்மாவை வந்து பொண்ணு கேட்கச் சொல்லு! அப்புறம் யோசிக்கறேன்!”, என்ற குரல் கணீரென்று கேட்க,   மூவரும் அவசரமாக  திரும்பினர், சொன்னது சாட்சாத் ராஜசேகர்.

அவர் வீட்டின் வாயிலில் நின்று இருந்தார்.  அவரை அங்கே யாரும் எதிர்பார்க்கவில்லை.

“உங்கம்மாவை அங்க விட்டுட்டு நான் நைட்டே கிளம்பிட்டேன், சொல்லலாம்னா நீங்க போன் எடுக்கலை”, என்றார் கூடுதலாக கேட்காத தகவலாக.

ப்ரீத்தியும் ரகுவும் பதட்டமாக இருக்க….. ஹரி தான் அவரை தைரியமாக எதிர் கொண்டான்.

உடனே கேட்கவும் செய்தான், “ஆன்ட்டி எப்போ இங்க வருவாங்க! நான் எப்போ எங்க அப்பா அம்மாவை வந்து பேச சொல்லட்டும்!”, என்று……

“இந்த பையனுக்கு எவ்வளவு தைரியம்டா”, என்று தான் அவருக்கு தோன்றியது.

ஹரியும் அவரும் இப்போது நேர் பார்வைப் பார்த்துக் கொண்டனர்.

“உங்க அப்பா அம்மா தான் வந்து பொண்ணு கேட்கணும், என் பொண்ணோட மரியாதை எங்கயும் குறையக் கூடாது!”, என்றார்.

“என்ன குறைந்து விடும்?”, என்பது போல ஹரி பார்வை தாங்கி நிற்க,

“உங்க அம்மா நீ காதல் செய்ய மாட்ட, பொண்ணுங்க தான் உன் பின்னாடி சுத்தி உன் மனசை கலைப்பாங்கன்னு சொன்னாங்க”, என்றார்.

“எங்கம்மா அதைச் சொன்ன காரணம் வேற, உங்க பொண்ணு மரியாதை உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு எனக்கும் முக்கியம்! புரிஞ்சிக்கங்க, எப்போ வரட்டும்?”, என்றான் திரும்பவும்……

“நீங்க இந்தியாவுக்கே வந்ததுக்கு பிறகு!”, குரல் ஒலித்தது.  சொன்னது ராஜசேகரன் அல்ல ப்ரீத்தி.

ஜானின் பிரச்சனைத் தான் பேசி தீர்த்துக் கொண்டனர், மற்றவை எல்லாம் அப்படியே தானே இருந்தது.  

ப்ரீத்தியும் ஹரியும் ஒருவரை ஒருவர் பார்க்க…… இருவரின் பார்வையுமே ஓய்ந்து தான் தெரிந்தது! இது முடியாதா! என்பது போல, இருவருக்குமே அவரவர் காரணங்கள்.

அப்போதே தீர்க்க கூடியது எதுவுமில்லை. ஹரி அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை, அங்கே நிற்கவுமில்லை, கிளம்பினான்.

Advertisement