Advertisement

அவளிடம் மனதை சொல்லிவிட்டவனுக்கு இந்த சூழ்நிலையில் சொல்லி இருக்கக் கூடாதோ என்று தோன்றிய போதும் அவளின் அண்ணா என்ற அழைப்பு தானே சொல்ல வைத்தது.

அவள் என்னை அண்ணனாய் மனதில் வரித்து விட்டால் திருமணம் நடக்கிறதோ இல்லையோ இதை தன்னால் தாள முடியாது என்று புரிந்தது..

ஜெயந்திக்கோ ஐயோ என்று இருந்தது இதை கேட்டதும்… இப்போது இதை எல்லாம் நினைக்காதே முதலில் அண்ணா பிழைத்து எழட்டும்.. பின் அவனிடம் இருந்து தள்ளி இருந்து கொள்ளலாம்… கண்டிப்பா அவன் செய்த உதவிக்கு கை மாறு கிடையாது தான் ஆனால் அதற்காய் திருமணம் எல்லாம் அவளால் யோசிக்க முடியவில்லை

இங்கு திருமணம் என்ற வார்த்தை வந்து விட்ட படியால் காதல் என்ற வார்த்தை எல்லாம் வரவேயில்லை..

அவன் ஏதோ உளறுகிறான் என்றும் நினைக்க் முடியவில்லை அவன் உளறுகிற ஆள் போல தெரியவில்லை… இதில் இருந்து எப்படி வெளிவருவது என்று தெரியவில்லை…

================================================

“சே, சே, அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க. தேடி வந்து உதவி செய்யற ஒரு ஆளை நீ நல்ல விதமா நினைக்கலைன்னாலும் கெட்ட மாதிரி நினைக்காதே” என்று மனசாட்சி அதட்ட..         

விமலனின் பாரத்தோடு இதுவும் ஒரு பாரம் சேர்ந்துகொண்டது…

சோர்வாக வந்து அமர்ந்து கொண்டாள்..

இது அவளிற்கு பெரிய தாக்குதல்… வேறு சூழல் என்றால் அவள் இதனை கையாண்டு இருக்கும் விதமே வேறு.

ஆனால் இனி சூழல் சரியானாலும் மறுப்பை.. அவன் மனம் நோகாதவாறு சொல்ல வேண்டுமே!

அவன் மட்டும் இல்லை என்றால் அண்ணனை உடனே பார்த்திருப்பார்களா? அவன் அத்தனை பேரிடம் சொல்லி வைத்திருந்ததால் தான் உடனே பார்க்க முடிந்தது. அவர்களாய் தெரிந்து சென்று பார்த்திருக்கும் நேரம் அவன் உயிர் கூட பிரிந்திருக்கலாம்.

அப்படியில்லாமல் இருந்தாலும் இப்படி ஒரு ராஜ வைத்தியம் நடந்திருக்குமா முடிந்திருக்காது…

நன்றி வண்டி வண்டியாய் இருக்கிறது அதற்காக திருமணமா .. 

=======================================================

அது தம்பி என்று அவர் தயங்க

நான் பார்த்துக்கறேன்.. பணம் எப்பவும் நான் வேண்டாம் சொல்ல மாட்டேன் உங்களுக்கு எப்ப முடியுமோ திருப்பிக் கொடுத்துக்கலாம் என்றான் அவர் குற்ற உணர்ச்சி போக்குவதற்காக

இவன் என்னடா சம்பாதிக்கறதே எங்களுக்கு செலவு செய்ய தான் ன்ற மாதிரி செஞ்சிட்டு இருக்கான் என்ற எண்ணம் தான் ஜெயந்தி க்கு

அதையும் விட இவனா திருமணதிற்கு பேசினான் என்ற எண்ணம் கூட

ஒருவேளை அது என் கற்பனையோ என்ற எண்ணம் கூட பின்னே அதன் பிறகு அதனை பற்றி பேசவில்லை அட அவளின் புறம் பார்வையை கூட திருப்பவில்லை அப்படியே திருப்பினாலும் அதில் அவளிடம் இந்த மாதிரி ஒரு விஷயத்தை பேசியிருக்கிறான் என்ற பாவனை கூட இருக்காது..

===============================================

அண்ணன் பிழைப்பானா என்ற பயம் அண்ணன் கேசில் மாட்டிக் கொள்வானா என்ற பயம் கமலன் படிப்பு கெட்டு விடுமோ என்ற பயம் எல்லாம் ஜெயந்தியின் மனதில் அப்படி இருக்க

எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து விட்டான் மருது..

அது மனதிற்கு ஒரு தெம்பை கொடுத்திருக்க இந்த சிரிப்பு தானாக வந்தது.. 

அங்கிருந்த வேலை செய்பவர்கள் விஷால் கமலன் எல்லோரும் இவளையே பார்க்க, அவளிடம் பார்வையை திருப்பிய எல்லோரும் பார்ப்பதால் அவளின் சிரிப்பை கூட ரசிக்க முடியாமல்   

மருது என்ன சிரிப்பு என்று கேட்டே விட   

சிரிப்பு வந்தது சிரிச்சேன் என்ன இப்போ என்று உரிமையாக தோளை குலுக்கி அவள் கேட்ட விதத்தில் என்னடா இந்த பொண்ணு இப்படி பேசுது மருது அண்ணன் கிட்ட என்று எல்லோரும் வாயை பிளந்து தான் பார்த்தனர்   

நான் இவளை பார்த்தா கதை கட்டி விட்டுடுவாங்கன்னு கவனமா இருந்தா இவ ஏன்டா இப்படி பேசி வைக்கிறா என்று நினைத்தவன் அவளை பார்த்து விட்டு அவனின் கேபின் சென்று விட்டான்  

Advertisement