Advertisement

ஆகிற்று குழந்தையை உறுதி செய்து கூட ஒரு வாரம் ஆகிற்று. வீட்டினர் யாருக்கும் இன்னும் சொல்லவில்லை. ஏன் சந்தோஷிற்கு கூட தெரியாது. மனதிற்குள் ஷர்மிக்கு அதுவே ஒரு உதைப்பு. வீட்டினர் எல்லோரும் அவளிடம் அன்பாய் பேசி பழகுகின்றனர். அவர்களிடம் மறைப்பது தப்பு போல ஒரு எண்ணம்.   
ஷர்மியை பார்க்க வந்தவன், ஏன் பேபி டல்லா தெரியற, ரொம்ப படுத்தறாளா என்றபடி விஸ்வாதிகாவை கையில் ஏந்த, ஒரு பத்து நிமிடம் கையில் இருந்தவள் அம்மாவை நோக்கி தாவினாள்.
என்னவோடா அண்ணா என் மகளை ஒரு ரெண்டு மணி நேரம் என்னை தேடாம யாராலாயாவது வெச்சிருக்க முடியுது என்று குறைபட்டாள்.      ஷர்மிக்கு எப்படியடா விஸ்வாதிகாவை வைத்துக் கொண்டு இன்னொரு குழந்தையை பெற்றெடுக்க போகிறோம் என்று கவலையாக இருந்தது.
வீடு முழுவதும் ஆட்கள் இருக்க, அரை மணி நேரம் மிஞ்சி போனால் ஒரு மணி நேரம் அவ்வளவு தான் உடனே அன்னையை தேடுவாள்.      
விடு பேபி பெருசானா பழகிடுவா என்று அவன் சமாதானம் சொல்ல, அண்ணி ஜூஸ் என்றபடி கௌசி மாடி ஏறி வர,
பார்க்கலாம் நாங்களா இவளா னு என்று குழந்தையை வேடிக்கை காண்பித்து தயார் செய்து கிளம்பினர்.
கிடைத்த நேரத்தில் ஷர்மி உறங்கி விட, மாலை ஆறு மணியை நெருங்க, கீழே இருந்து சீதா குரல் கொடுத்தார் ஷர்மி விளகேதுற நேரம் தூங்க கூடாது எழுந்து முகம் கழுவி கீழ வா என்று.
கேசவனும் விசாலியும் மகளையும் பேத்தியையும் பார்க்க வந்தனர். வீட்டினர் பேசிக் கொண்டிருக்க, கீழே இறங்கி வந்த ஷர்மியிடம் எங்க பாப்பா என்று அவர் கேட்க, கௌசியும் சந்தோஷும் வெளில தூக்கிட்டு. போயிருக்காங்க பா என்றவள், சசி ம்மா அப்பா கும் சித்திக்கும் காபி கொண்டு வாங்க என்றாள்.
ஆம் மற்றவர்களிடம் பேசும் போது சித்தி என்று சொல்ல பழகியிருந்தாள் அதுவே கேசவனுக்கும் விசாலிக்கும் போதுமானதாக இருந்தது.
கௌசியும் சந்தோஷும் விச்வாதிகா வுடன் வந்தவர்கள் அண்ணி உங்க பொண்ணு அழவே இல்லை என்று சந்தோஷமாய் சொல்ல, அவள் சொன்ன நேரம் கௌசியின் கைகளில் இருந்து ஷர்மியிடம் தாவினாள்.
செல்லும்போது கூட பேபி நீ ரொம்ப டயர்டா தெரியற, உடம்பை பார்த்துக்கோ. மாமாவை சீக்கிரம் வந்து பட்டு குட்டியை பார்த்துக்க சொல்லு என்றான்
ம்ம் சரி சந்தோஷ் என்று சொல்ல, சீதா வியப்பாய் பார்த்தார், எப்படி தங்கையின் மாற்றங்களை கண்டு கொள்கிறான் என்று. இன்னும் ஒரு மாதம் சென்றதும் எல்லோரிடமும் சொல்லிவிட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
எல்லாம் முடித்து உறங்க வர, விஸ்வாதிகாவை தோளில் போட்டு தட்டி கொடுக்க ஆரம்பித்தான் ரவி.
அவனுடைய முகமும் சமீப காலமாய் ஏதோ இறுக்கமாய் இருப்பது போலவே தோன்ற, என்னங்க என்னவோ போல இருக்கீங்க என்றாள் ஷர்மி
மகள் உறங்கியிருக்க, அவளை படுக்கையில் விட்டவன், ஒன்னுமில்லை என்று ஸ்திரமாய் சொல்லி படுக்க, குழந்தைக்கும் அவனுக்கும் இடையில் படுத்துக் கொண்டவள், அவனின் முகம் பார்க்க அதில் ஒரு கவலை தெரிந்ததோ.
என்னங்க என
என்ன என்னாங்க என்றவன் அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டவன் எனக்கு தூக்கம் வருது என்றான்
சரி தூங்குங்க என
தூக்கம் வருது ஆனா தூங்க முடியலை என்றவன் என்னை தூங்க வை என்றான்
இதேதடா வம்பு என்று ஷர்மி ரவியை பார்க்க, எஸ் என்னை தூங்க வை என்றான்.
எப்படின்னு அதையும் நீங்களே சொல்லுங்க என
என்னை பிடிச்சிக்கோ என்றவன் சற்று கீழிறங்கி அவளின் நெஞ்சில் முகம் புதைத்து கொள்ள, ஆதூரமாய் அணைத்துக் கொண்டாள். வேறு எதுவும் கேட்கவில்லை.
அவளுக்கு தெரிந்து ரவி, இப்படி இருந்து பார்த்ததே இல்லை. பார்த்த நாளில் ஒன்றுமில்லாமல் இருந்த போதும் அந்த கண்களில் ஏகத்திற்கும் திமிர் தான் இருக்கும். பணிவு என்ற ஒன்று இருக்கவே இருக்காது
நீ வேலை செய்ய வந்தவன் எப்படி இப்படி இருக்கலாம் இப்படி தான் அவர்களுக்குள் முட்டல்.
அதிகாலையில் விஸ்வாதிகா விழித்து சிணுங்க, ஷர்மிக்கு அப்படி ஒரு உறக்கம் கண்ணே திறக்க முடியவில்லை, என்னங்க குழந்தை அழறா பால் குடிக்க வைங்க என்று ரவியை எழுப்ப, உடனே எழுந்து கொண்டவன், மகளை தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வந்தான்.
தாத்தாவும் அப்பாவும் எழுந்து இருந்தனர், வீட்டின் பெண்கள் யாரும் எழவில்லை இன்னும். மகளை கைகளில் வைத்துக் கொண்டே அவன் பாலை காய்ச்ச போக
சொல்லுடா நான் செய்யறேன் என்று வாசன் வர, அவன் அப்பாவிற்கு சொல்ல அவர் செய்ய, மகள் அவனின் தோளில் முகம் புதைத்து பாதி உறக்கத்தில் இருந்தாள் இன்னும் நன்றாக விழிக்கவில்லை
அவன் சிப்பரில் ஊற்றி குடிக்க வைக்க, குடித்தவள் திரும்பவும் அப்பா மேலேயே உறங்க ஆரம்பித்தாள்.
அப்பாவும் தாத்தாவும் இருப்பதால் சில விஷயங்களை அவன் பேச, நீ என்னானாலும் செஞ்சுக்கோ எங்களுக்கு எதுவும் இல்லை என்று தாத்தா சொல்ல
அப்படி கிடையாதுப்பா என்ற வாசன் அதில் இருந்த சிக்கலை சொல்ல, அவனுமே யோசனையில் ஆழ்ந்தான்.

Advertisement