Advertisement

“நீ இப்படி எல்லாம் பண்ணினா பெண்டாட்டி தாசன் சொல்வாங்க” என்று ஷர்மி சிரித்தாள்.
“யாராவது சொல்றது இருக்கட்டும், நீ சொல்றியா? நீ ஃபீல் பண்றியா நான் என்னவும் செய்வேன் உனக்காகன்னு?” என்று அவன் கேட்க,
சில நொடிகள் யோசித்தவள் “அது தெரியலையே” என்றாள் உண்மையாய்.
“போடி” என்று முறைத்தவன் “இதையும் முடிஞ்சா கண்டுபிடி” என்று சொல்லி, “தூங்கு என்னை கடுப்படிக்காதே” என்றான் விறைப்பாய்.
“பாருடா, என்ன கடுப்படிக்கிறேன்? ஆமாம்ன்னு ஃபீல் பண்ணினா ஆமாம்ன்னு சொல்ல போறேன். இல்லைன்னு ஃபீல் பண்ணினா இல்லைன்னு சொல்ல போறேன். தெரியலைன்னா தெரியலைன்னு தானே சொல்வேன்” என்று சொன்னாள் கர்ம சிரத்தையாய்.
“சில சமயம் பொய் கூட சொல்லலாம் தப்பில்லை” என்றவன் சாலையில் கவனமாக.
ஏனோ தர்கிக்க விரும்பாமல், பிறகு ஷர்மியும் கண்களை மூடிக் கொண்டாள் உறங்க, உறங்கியும் விட்டாள்.
“எனக்குன்னு ஒரு அம்மா, ஒரு மனைவி, நீதி நேர்மை நியாயம் எல்லாம் இவங்க ரெண்டு பேரும் தான் உலகத்துலயே குத்தகை எடுத்த மாதிரி பேசுவாங்க, அதுவும் என்னை மட்டும் பேசுவாங்க இல்லை என்கிட்டே மட்டும் பேசுவாங்க” என்று நொந்து கொண்டான்.    
கண்விழித்தாலும் அசைவு கொடுக்காமல் கணவனை பார்த்திருந்தாள். எப்போதும் போல செமயா இருக்கான் என்று வண்டி ஓட்டும் அவனின் பக்கவாட்டு தோற்றத்தை, அவனின் புஜங்களை, அந்த வலிமையான கைகளை சைட் அடிக்க, ஒரு உள்ளுணர்வு உந்த திரும்பி பார்த்தவன்,
“என்ன பண்ற?” என்றான்.
“ம்ம், சைட் அடிக்கறேன்” என்று புன்னகையோடு சொல்ல,
“எப்போ இருந்து அடிக்கற?” என்று கேட்டான் இலகுவாக.
“கல்யாணம் முடிஞ்சு, இங்க சென்னை வந்த பிறகு என் முன்னாடி குட்டியா செக்சியா ட்ரெஸ் போட்டு சுத்துவல்ல அப்போ இருந்து” என்று சொல்லி கண்ணடிக்க,
ரவியின் முகத்தில் ஒரு உல்லாசப் புன்னகை.
“பரவாயில்லை பார்த்து பார்த்து நான் என் பாடியை, பெர்சனாலிட்டியை, டெவெலப் பண்ணினதை அட்லீஸ்ட் கல்யாணம் செஞ்சு குட்டி ட்ரெஸ்ல சுத்தின பிறகாவது சைட் அடிச்சியே” என்றான்.
“நக்கல் பண்றீங்களா?” என்று முகம் சுருக்கி கேட்டவளிடம்,
“இல்லையில்லை, நீ எப்போவுமே கொஞ்சம் கூட என்னை மதிக்க மாட்ட, அப்போ நீ கவனிக்கணும் என்னோட நடை உடை பாவனை பேச்சு எல்லாம் மாத்தினேன். ம்கூம்! நீ கவனிக்கவே இல்லை” என்றான்.
“இல்லை, இல்லை, ஒரு நொடியும் அங்கே உங்க வீட்ல இருந்த வரை, ஏன் கல்யாணம் முடியும் வரை கூட உன்னை அட்ராக்ட் பண்ண நினைச்சதில்லை அதே சமயம் நீயும் என்னை அட்ராக்ட் பண்ணினதில்லை. நீ பேசினா உன்னை விட பத்து மடங்கு திரும்ப குடுக்கணும் அது மட்டும் தான் என்னோட இன்டென்ஷனா இருக்கும்” என்றவன் “ஆனா இவ ஏன் நம்மை மரியாதையா பார்க்கலைன்னு தோணியிருக்கு” என்றான் மனதை மறையாது.   
அதுவும் உங்க அப்பா நடத்தைக்கு என்னை சொன்ன பாரு அப்படியே உன்னை பேசுவியா பேசுவியான்னு அடிச்சு துவைக்கணும் போல ஒரு ஆத்திரம் என்று சொன்ன போது இன்னும் குரலில் அந்த கோபம் தெரிந்தது.
இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஷர்மி அமைதியாகிவிட
எனக்கு தெரியும் சில கேள்விகளுக்கு நம்மகிட்ட பதில் கிடையாதுன்னு என்று அவள் சார்பாய் அவனே பேசினான்.
எனக்கு தெரியும் சிரமாமயிருக்கும் னு என்று சொன்னவள் அவன் புறம் நன்கு சாய்ந்து அவனின் புஜங்களை பற்றி அவனின் தோளில் சாய்ந்தாள்.
ஷர்மி நேரா உட்காரு எங்கேயும் பிடிச்சிக்க போகுது என்றான் அக்கறையாக
அப்போதும் ஷர்மி அவனை விட்டி விலகாமல் கண் திறக்காமல் இருக்க, என் கையை விட்டா தான் நான் டிஃபன் எடுக்க முடியும் என்று சொன்ன பிறகு மனமேயில்லாமல் விலகினாள்.
வேகமாய் இறங்கி மனைவிக்கு எல்லாம் வைத்துக் கொடுத்து அவனும் உண்டு, அங்கே சாலையோரம் இருந்த ஒரு அடி பம்ப் வகை பைப்பில் அடித்து உண்ட பாத்திரம் கழுவி அதனை காரில் வைத்து என்று பலதும் செய்ய, ஷர்மி அவளின் இருக்கையை விட்டு கூட இறங்கி இருக்கவில்லை. கை கூட அவள் உண்ட தட்டத்தில் கழுவ சொல்லியிருந்தான்.
எல்லாம் வைத்த பிறகு, கொஞ்சம் நேரம் இறங்கி நிக்கிறியா என்றான்
அது தான் அவர்கள் பேசியது அதுவரை ஒரு வார்த்தை கூட இல்லை. எல்லாம் தானாய் ஒரு உரிமையாய் நடந்தது.
அந்த நிமிடங்களை இருவருமே ரசித்தனர் அனுபவித்தனர்.
பின் அவன் கை கொடுக்க இறங்கி நின்றவள், எனக்கு ஒன்னு கேட்கணும் என்றாள்
என்ன கேளு என்றான் சாதாரணமாய்
அது உங்களுக்கு என்னை பிடிக்குமா, எனக்கு உங்களை விட்டு இருக்கவே முடியாது ன்னு தோணும், அப்படி எல்லாம் உங்களுக்கு தோணுமா  என்று கேட்க

Advertisement