Advertisement

அவர்களின் ரூமின் உள் வந்ததுமே, ஐ அம் சாரி ரொம்ப வலிக்குதா என்று அவளின் தலையில் அடிபட்ட இடத்தை தான் பார்த்தான்
வலிக்குது ஆனா தாங்க முடியற அளவு தான் 
தேங்க்ஸ் என்றான் சம்மந்தேமேயில்லாமல்
எதுக்கு வலிக்குது ஆனா தாங்க முடியுதுன்னு சொன்னாதுக்கா என்று அவள் புன்னகையோடு கேட்க
அவன் முகத்தைல் புன்னகை என்ன சிறு இளக்கம் கூட இல்லை, இல்லை என்பது போல தலையாட்டியவன், உங்க அப்பாவோட போகாததுக்கு என்றான்
அப்பா பேசினதை மைன்ட் பண்ண வேண்டாம். அவருக்கு எங்களை சரியா பார்க்காம விட்டுட்டோம்ன்னு எப்பவுமே ஒரு உணர்வு. அதனால இன்னைக்கு ரொம்பவும் ப்ரொவோக் ஆகிட்டு பேசிட்டார்
சந்தோஷ் என்கிட்டே சொல்லியிருந்தா நான் எல்லோர் முன்னமும் இந்த விஷயம் வராம தடுதிருபேன் ஆனா அவன் சொல்லலை என்று சொன்னவள்
நானும் சாரி கேட்கணும் என்றாள் தயங்கி
எதுக்கு உங்கப்பா கிட்ட வீடு கேட்டதுக்கா என்றான் உடனே
ஐ am நாட் ஓகே என்று வாய் மொழியாய் முதல் முறையாய் அவளிடம் சொன்னவன்
நான் கோவிலுக்கு போயிட்டு வர்றேன் என்று சொல்லி சென்றான்
அவனுக்கும் கடவுளுக்கும் உள்ள பந்தம் அவள் அறிந்தது தானே. ம்ம் சரி என்றவள் சொல் பேச்சு தட்டாதவளாய் சென்று படுத்துக் கொண்டாள்
கைல மொபைல் வெச்சுக்கோ தலையில வலி எதுவும் அதிகமானா உடனே எனக்கு கால் பண்ணனும் யோசிக்க வேண்டாம் ஹாஸ்பிடல் போயிடலாம் என
அச்சோ எனக்கு ஒன்னுமில்லை வலிக்குது ஆனா சரியாகிடும் நீங்க போயிட்டு வாங்க என்று புன்னகை முகமாகவே பதில் கொடுத்தாள்.
முகம் கழுவி வந்தவன் பார்த்தது படுத்திருந்த ஷர்மியை தான் அவளிடம் ஒரு தலையசைப்புடன் கோவிலுக்கு கிளம்பியவன், கீழே வர, தாத்தா விடம் கோவிலுக்கு போறேன் என்று சொல்லி சென்று விட்டான். நடந்தே தான் சென்றான்.  
அவன் சென்றது புகழ் பெற்ற சிவஸ்தலமான ஆதிகும்பேஸ்வரர் சிவன் கோவில். மகாமகத்திற்கு பெயர் பெற்றது. உள்ளே சென்றதுமே மனதில் அப்படி ஒரு அமைதி. உடனேயே ஷர்மி க்கு அழைத்தான். நான் இப்போதான் கோவிலுக்கு வந்தேன். கொஞ்சம் நேரம் இருந்துட்டு வர்றேன் எதுன்னாலும் கூப்பிடணும் என்று.
ஆம் ஷர்மி அவனுக்கு ஒரு அமைதியை கொடுத்திருக்க சிவன் இன்னுமே கொடுத்தார்.
அவரிடம் தனி தனியாய் எதுவும் எப்போதும் வேண்டமாட்டான். சிறு வயது பழக்கமாய் என் வாழ்வில் எல்லாம் நன்றாக நடத்திக் கொடு என்பதே அவன் வேண்டுதலாய் இருக்கும்.  
இந்த முறை தனி தனியாய் வணங்கினான். என் வாழ்வில் நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த குற்றம் குறைகளை களைந்து கொடு. கேசவனின் பேச்சுக்கள் அவனின் அம்மாவின் பேச்சுக்கள் என்று சகலமும் கடவுள் முன் ஓடின. வெகு நேரம் நின்றிருந்தான் ஈசனை பார்த்து.    
வணங்கி முடித்தவன் சிறிது நேர தியானத்தில் அமர்ந்தான்.
யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவனுக்கு தெரியும்.. அவனின் வெற்றிகள் சாதாரணம் அல்ல.. ஈசனன்றி எதுவும் நடந்திருக்காது. வாழ்க்கையில் எல்லோரும் தான் உழைகின்றனர். இதில் பலர் அவனை விட புத்திசாலிகள் எல்லோருக்கும் எல்லாம் அமைந்து விடுகிறதா என்ன
ஆனால் அவனுக்கு அமைந்திருக்கிறது.. அவரின் அனுக்கரகஹமே.. என்ன என்னவோ நினைவுகள்.. உன் பாதார விந்தமே துணை என்று நினைத்தவன்        
 பின் சிவபுராணத்தை மனதில் ஜெபிக்க ஆரம்பித்தான்
உன்னுடைய எண்ணம் வேறு இலக்கு வேறு நீ போக வேண்டிய தூரம் வேறு சிறு சிறு விஷயங்களும் உன்னை பாதிக்க விடாதே நீதான் கோபத்தை ஆள் வேண்டும் கோபம் உன்னை ஆளக் கூடாது என்று வெகுவாக மனதினை கட்டுக்குள் கொண்டு வந்தான்
இறைவணக்கம் என்பது மதங்களை மீறிய ஒரு விஷயம்.. அது எந்த மதமாயினும் மனதனை நெறி படுத்தும் ஒரு விஷயம்.. சிறு வயதில் இருந்தே ரவி அதன் பிடியில் இருந்தான் அது இப்போது வெகுவாக ஒரு மன அமைதியை கொடுத்தது..
மதம் மதமாகி சில பேர்களை பீடிக்காவிடின் அது ஒரு சிறந்த நெறி! இங்கே நம்முள் பலருக்கும் அது தெரியும் புரியும்! அது எந்த மதமாகினும்!      
வீட்டின் உள் வந்தால் சீதாவை எல்லோரும் ரவுண்டு கட்டி திட்டிக் கொண்டிருக்க.. முன்பிருந்த அலைபுருதல்கள் குற்ற உணர்ச்சி இவற்றில் இருந்து தெளிந்து இருந்தான்.   
அதனால் அவரை விட்டு மற்றவர்களை பிடி பிடியென்று பிடித்தான்.. யாரும் இதனை எதிர்பார்க்கவில்லை.
இவன் நல்லவனா கெட்டவனா என்பது போல பார்த்தனர்.

Advertisement