Advertisement

ரவி வீடு வந்தவன், ஷர்மிளாவிடம் இந்த விஷயங்களை எல்லாம் சொல்லலாம் என்று தேட, மீண்டும் ஹாஸ்பிடலில் இருந்தது போல ஒரு ஒதுக்கம் அவனின் பார்வையை சந்திக்க மறுத்தாள்.
ஷ் இப்போ என்ன என்று சலித்து கொண்டவன் என்ன என்று யோசனை செய்ய காலையில் அவன் பேசியது கொண்டு தான் எனப் புரிந்தது.
நீ உன் வாயை அடக்கப் போவதில்லை உன் வாழ்க்கை நிம்மதியாக இருக்கப் போவதில்லை என்று அவனுக்கு அவனே நொந்து கொண்டான்
ஷர்மி உன்கிட்ட சந்தோஷ் கல்யாண விஷயமா பேசணும் என்று அழுத்தமாய்
அதன் பிறகு தான் ரூமின் உள் வந்தாள்
ஊர்ல சொல்லி ஜாதகம் பார்த்துட்டேன் ஆனா அது உன் அண்ணான்னு தெரியாது , பொருத்தம் நல்லா இருக்கு , கௌசி கிட்ட கேட்டேன் அவ எனக்கு ஓகே ண்ணா ஓகே சொல்லிட்டா, உங்கப்பா கிட்ட பேசிட்டேன் அவருக்கும் ஓகே.
அந்தோ பரிதாபம் ஷர்மிளா ஒத்துக்கொள்ளவில்லை. அப்பாவை பேச சொல்றேன் சந்தோஷ் க்கு தங்கையா நான் பேசறேன் அவ்வளவு தான் மேல யாரும் பேசக் கூடாது
அப்பா சைட் எல்லாம் ஒத்தை பசங்க அப்போ பெருசா க்ளோஸ் சர்கிள் ரிலேடிவ் இல்லை
அப்படி பார்த்தா அதிக பழக்கமில்லைனாலும் எங்க ரிலேடிவ் ன்னு பார்த்தா அம்மா வீட்டு சைட் இருக்குற நீங்க தான்
என்ன இருந்தாலும் எங்க அம்மா உங்க வீட்டு பொண்ணு சந்தோஷ் க்காக பொண்ணு கேட்கற உரிமை இருக்கு மீறி குடுக்க மாட்டேன்னு சொன்னா வேற யோசிக்கலாம் விசாலிம்மா முடியவே முடியாது. எங்கப்பாவோட அவங்க கூட நிக்கறது எனக்கு பிரச்சனை கிடையாது ஆனா நாங்க கேட்டு இல்லாதது அவங்க கேட்டு வேண்டாம். எப்படி அத்தை பொண்ணு குடுக்காம போறாங்கன்னு நான் பார்க்கறேன்
கௌசிகிட்ட நீங்க ஓகே சொல்லுங்க என்றாள்
அவசரப் பட வேண்டாம் யோசிக்கலாம் என்றான் அவனின் மனதில் எல்லாம் எல்லாம் பேசிக் கொண்டாலும் சிறு பிசிறு ஒரு அபஸ்வரம் இருந்தது. அது அவனின் அப்பா, அப்பாவை போல அவன் இருந்து விட்டால் கௌசியின் வாழ்க்கை நரகம் அல்லவா?  
என்னவோ சந்தோஷ் சொல்ற வரை தோணலை அவன் சொன்ன பிறகு தோணினது கௌசி அவன் வாழ்க்கைல வந்தா நல்லா இருப்பான். முதல்ல மாதிரி பிரண்ட்ஸ் கூட சுத்தறதில்லை, பார்டி பண்றதில்லை, செலவழிக்கறது இல்லை, இந்த மாதிரி இருந்த சில குறைகளும் இல்லை என் அண்ணான்னு நான் சொல்லலை அவன் ரொம்ப நல்ல பையன். நீங்க கௌசியை நம்பி கொடுக்கலாம், எங்கப்பா மாதிரி இல்லை என்றாள்
ரவி வியப்பாய் பார்க்க, நீங்க குறையா நினைச்சா இது மட்டும் தான் நினைப்பீங்கன்னு தோணினது என்றாள்.   
நான் இதை யோசிச்சேன் ஆனா என்னவோ எனக்கு சந்தோஷ் மேல ஒரு நம்பிக்கை இருக்கு, என் மனசு எப்பவும் சரியாய் தான் சொல்லும். ஆனா அது இல்லை. எங்கம்மா இதை சொல்ல வாய்பிருக்கு என்றான்
ஒஹ் என்றவள் ஆனா எனக்கு யாரோடையும் சண்டை போடா முடியும்னு தோணலை எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகுது அதுவுமில்லாம அப்பா பக்கம் தப்பு இருக்கு எனக்கே ஒப்பாத போது நான் அவரை சப்போர்ட்  பண்ணி பேச முடியாது என்றாள் என்ன செய்ய என்று புரியாத பாவனையில்
நீ கூப்பிட்டா நான் வரணுமா மாட்டேன் என்று மனம் முரண்டு பிடிக்க, போயேண்டி என்று ஒரு பக்கம் சொல்ல
அவளின் மாறிய பாவனைகளை பார்த்து அவளை மேலே யோசிக்க விடவில்லை, போகலாம் என்று என்று நடக்க ஆரம்பிக்க, பின்னால் நடந்தாள்.
அவர்களின் வீடு இருந்த வீதியில் தான் நடந்தார்கள் , பெரிய வீதி , எல்லாம் பங்களா வீடு தான் , ஆனால் கேசவனின் வீடு இன்னுமே பிரம்மாண்டம் தான். பரம்பரை சொத்து மிக முன்னம் வாங்கியது அதனால் அண்ணா நகர் ஏரியாவாகட்டும், வீடு இருக்கும் பரப் பலவு ஆகட்டும் மிக அதிகம். அதுவே இன்றைய நிலைக்கு பல கோடி பெறுமானமுள்ளது.
இவர்களின் வீடும் அங்கே தானே ஆனால் சற்று தூரத்தில், வாடகை ரவி சொன்னதில்லை, மிக அதிகம் தான். அவனுமே சில மாதங்களாக இங்கே தான் இனி தொழில் என்றாகி விட்டது வீடு வாங்கலாம் என்று நினைத்து தான் இருந்தான்.
ஷர்மிளா கேசவநிடமும் சந்தோஷிடமும் பேசியிருக்க அவனின் எண்ணத்தை உடனே செயலாக்க முடிவு செய்து விட்டான் ஷர்மிளாவின் பெயரில்.      
மெதுவாக நடக்க ஆரம்பித்தவன் அவனாகவே வீடு வாங்கலாம்னு இருக்கேன் எங்கே வாங்கலாம் எந்த மாதிரி வாங்கலாம் இல்லை இடம் வாங்கியோ இல்லை பழைய வீடு வாங்கியோ புதுசா கட்டலாமா என்றான்  
         

Advertisement