Advertisement

எல்லாம் எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. ஆம் இதோ ஒரே வாரம் நேற்று மாலை கௌசல்யா சந்தோஷின் நிச்சயதார்த்தம் முடிந்து இருக்க, இன்று இப்போது ஷர்மிளாவின் வளைகாப்பு நடந்து கொண்டிருந்தது.
சீதா இரண்டு நாட்கள் முடியவே முடியாது மற்ற மூன்று பெண் மக்களுக்கு எப்படி மாப்பிள்ளை பார்த்தோமோ அப்படி தான் பார்க்க வேண்டும். இவ்வளவு வசதியாய் பார்த்தால் அவர்களுக்குள் வேற்றுமை வரும். அதுமட்டுமில்லாமல் கேசவனின் வாழ்க்கை முறை குறித்தும் கேள்வி எழுப்ப…
சீதாவின் மாமனார் மாம்யாரோ நாங்க பண்றோம் உனக்கு பொண்ணோட அம்மாவா வந்து நிக்கணும்னா நில்லு இல்லை வீட்ல இருந்துக்கோ என்று விட்டனர்       
மாமனார் மாமியாரை மீறி அவரால் எதுவுமே முடியவில்லை. இன்னும் வாசனும் அவரிடம் பேசவில்லை ரவியியும் அவரிடம் பேசவில்லை
சீதா முகத்தை தூக்கி வைத்திருக்க மற்ற பெண்கள் அவரை பிடி பிடி யென்று பிடித்து விட்டனர். எங்க தங்கைக்கு வசதியான வாழ்க்கை அமைஞ்சா நான் பொறாமை படுவோமா இல்லை வேண்டாம்னு சொல்வோம் இல்லை நாங்க எல்லாம் வசதியே இல்லாம இருக்கோமா நீ செய்யறது சரியில்லை என்று
அதையும் விட அவர் ஏதோ பேசி அண்ணி கோபித்து சென்றது பின்னர் ஹாஸ்பிடலில் இருந்தது வாசன் அவருடன் பேசாதது எல்லாம் தெரிந்து ஏன் இப்படி பண்ற என்று இன்னும் திட்ட வைத்திருக்க
அமைதியாய் அடக்கி வாசித்தார்.
சந்தோஷ் எல்லோருடனும் நன்றாய் பழகி விட்டான் முக்கியமாய் அவனின் சகலைகளுடன், அது ரகளையாய் கலை கட்ட, எப்போதும் போல ரவி எல்லோருடனும் பேசினாலும் தள்ளி தான் நின்றான்.
பொதுவிலேயே அவன் அப்படி தான். இப்போது மனதும் சுணங்கி இருக்க இன்னுமே அமைதியாகி விட்டான்.
ஆம் ரவியும் ஷர்மியும் அதன் பின்னர் சண்டை எல்லாம் எதுவும் இட்டுக்கொள்ளவில்லை. இவள் தனியாய் பழகவேண்டும் என்று முடிந்தவரை அவளின் வேலைகளை அவள் பார்க்க நினைக்க
ரவியும் நெருங்க வில்லை. பேச்சுக்கள் தேவைக்கு, ரவியின் அக்கறை எங்கேயும் குறையவில்லை ஆனால் நெருக்கமில்லை.  
படுக்கையில் பக்கம் பக்கம் தான். ஆனால் நெருங்கவில்லை அணைப்பு கூட இல்லை. இருவருமே முயற்சிக்க வில்லை. ஒரு ஒட்டியும் ஒட்டாத தன்மை. இருவருமே அதை உடைக்க வில்லை
ஆனால் சண்டை சச்சரவு வாக்குவாதம் போல எதுவும் இல்லை.
அப்புறம் அடுத்த நாள் உனக்கு வளைகாப்பு பண்ணலாம்னு இருக்கேன் , தாத்தா பாட்டிகிட்ட சொல்லிட்டேன். உங்க வீட்ல கூப்பிடறோம் ஆனா அவங்க எதுவும் பண்ணலை நான் தான் பண்றேன்.
அவங்க பண்ணினா அவங்க கூட்டிட்டு போகணும் அதனால அவங்க பண்ண வேண்டாம் உங்கப்பா கிட்ட நான் பேசிக்கறேன் என்று விட்டான்
அன்றைய சண்டையின் நினைவுகளில் வளைகாப்பு வேண்டாம் என்று ஷர்மி சொல்ல.. ஏன் வேண்டாம் எனக்கு என் மனைவிக்கு வளைக்காப்பு செய்யணும் எந்த குறையும் இருக்கக் கூடாது என்று விட்டான் ஒரு மறுத்து பேச முடியாத குரலில்.
ஷர்மியும் அதற்க்கு மேல் பேசவில்லை!
இதோ அதன் பொருட்டு இன்று ஷர்மி மனையில் அமர்திருக்க, எல்லோரும் நலன்கிட்டு கொண்டிருக்க, பேரனின் மனைவியின் வளைக்காப்பு என்று அந்த தள்ளாத வயதிலும் ரவீந்திரனின் பாட்டியே எல்லாம் முன்னின்று செய்தார்.
பெண்கள் எல்லோரும் கண்ணாடி வளையிட்டு முடிக்க, ஆண்கள் முறை வரும் போது வந்த கேசவன் நவரத்தினங்களில் வளை போட்டார் கை கொள்ளவில்லை ஷர்மிக்கு.
ஆம் ஒரே வளையலில் நவரத்தினங்கள் இல்லை ஒரு ஒரு ரத்தினமும் ஒரு வளவி வைரத்தில் ஆரம்பித்து முத்து பவளம் மரகதம் என்று அத்தனையும் எப்படியும் அரைகோடி அளவில் பெரும்
உறவுகள் அத்தனை பேரும் அசந்து தான் பார்த்தனர்
டி என்ன உன் வீட்டுக்காரர் இத்தனை செய்யறார் என்று விசாலியின் அம்மா காதை கடிக்க
அவர் பொண்ணு அவர் செய்யறார் உணகென்னம்மா நீ வாயை மூடிட்டு பேசாம இரு யார் காதுலயாவது விழ போகுது
ஏன் ஒரு ரெண்டு உன் கைல குடுத்து போட சொன்னா என்ன எல்லாம் அவரே போடணுமா என்று அப்போதும் விசாலியின் அம்மா பேச
மா பேசாம இருங்க ஏற்கனவே இப்படி ஏதோ பேச போய் தான் மாப்பிள்ளை எங்களை வளைக்காப்பு செய்ய வேண்டாம் அவரே செய்யறேன்னு சொல்லிட்டார் இப்போ நீ எதுவும் பேசி வைக்காதே யார் காதுலயும் விழுந்து பிரச்சனை ஆச்சு உன்னை தொலைச்சிடுவேன் என்று மிரட்டி கொண்டிருந்தார்                

Advertisement