Advertisement

ரவீந்திரனின் பேச்சுக்களில் ஒரு மனக் கசப்பு வந்து அமர்ந்து கொண்டது. ஒஹ் என்னால் தான் எல்லாமா? இருந்து விட்டு போகட்டும் என்பது போல?
மனதை வெகுவாக நிலை படுத்த முயன்றாள். ஆனாலும் மனது பொங்கியது.     
அப்போ நான் நான் தான் தப்பா இவனில்லையா என்று தோன்ற எல்லாவற்றையும் அடித்து உடைக்கும் ஆவேசம் கிளம்பியது. ச்சே ச்சே இவன் என்ன செய்தாலும் பரவாயில்லை என்று மீண்டும் இவனிடமே வந்து ஈஷிக் கொண்டிருக்கிறாய் உனக்கெல்லாம் சூடு சொரணையே கிடையாதா என்று மீண்டும் மனதிற்குள் போராட ஆரம்பித்தாள்.
தலையை பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
அப்பொழுது தான் வெளியில் வந்த சந்தோஷ் இவளை பார்த்ததும் பேபி என்னாச்சு எதுன்னாலும் பார்த்துக்கலாம் என்று அவளின் அருகில் அமர
எப்போ பார்த்தாலும் உன்னையே பார்ப்பியா நீ , போடி சந்தோஷை பார் என்று மனசாட்சி திட்ட, தன்னை ஒதுக்கி வைத்து அவனை முன்னிறுத்தி எதுன்னாலும் பார்த்துக்கலாம் விடு சந்தோஷ் ஆனா இனி தனியா கூப்பிட்டா போகாதே அவ அப்பா நம்பர் இருக்கா, இனி ஒரு தடவை பேசினா சொல்லு அவ அப்பா கிட்ட சொல்லிடலாம் என
ம்ம் சரி என்றவர்கள் உணவருந்த செல்ல, ரவி சந்தோஷை தான் கவனித்தான், கௌசியை எதுவும் பார்க்கிறானா என்று. ம்கூம் சந்தோஷ் எப்போதும் போல தான் இருந்தான் ஒரு வித்தியாசமும் இல்லை.
சந்தோஷிற்கு வேண்டியது ஒரு திருமணம் அது கௌசல்யாவாய் இருந்தால் மிகுந்த சந்தோசம். அவனுக்கு ரவியின் மீது நம்பிக்கை இருந்தது ஒரு சதவிகிதம் நடக்க வாய்பிருந்தாலும் நடத்திக் கொடுப்பான் என்று
அதுவரை மனதை அலைபாய விடக் கூடாது என்பதில் திண்ணமாய் இருந்தான்.
கௌசிக்கு தான் எதுவுமே தெரியாதே அவள் எப்பொழுதும் போல தான் இருந்தாள்
இல்லை அண்ணி தோசைக்கு கல் வெச்சிருக்கேன் , நீங்க சாப்பிடுங்க சூடா தோசை போட்டுட்டு அப்புறம் சாப்பிடறேன் என்றாள்
சந்தோஷ் ஷர்மியிடம் எனக்கு இட்லி வேண்டாம் தோசை தான் வேணும் என்று ரகசியம் பேசினான். பொதுவாய் வேலையாட்கள் சமைப்பதினால் எப்போதும் இட்லி தான். அதனால் நொந்து போயிருந்தான்
டேய் அண்ணா கௌசி இட்லி சூப்பரா இருக்கும் சாஃப்டா, ஒரு ரெண்டு சாப்பிடு என்று அவனுக்கு ஷர்மி எடுத்து வைத்தாள்
ரவி எதிலும் தலையிடவில்லை யாரும் பரிமாற வேண்டும் என்று நினைக்கவில்லை. அவன் பாட்டிற்கு எடுத்து போட்டு உண்ண ஆராம்பித்தான் ஆனால் கண்கள் ஷர்மி என்ன உண்ணுகிறாள் என்பதில் இருந்தது.
இரண்டு இட்லி உண்ட பிறகு கௌசி தோசை சுட சுட ம்கூம் வேறு யாருக்கும் போட வாய்ப்பே கொடுக்காமல் சந்தோஷ் ஒரு கட்டு கட்ட
அண்ணா டேய் நீ இவ்வளவு சாப்ட்டா உன்னை வேண்டாம்னு சொல்லிடுவாடா என்று ஷர்மி கிண்டல் செய்ய
அட அண்ணா டேய், எப்போ இருந்துடா நீ இவ்வளவு ஐடியா அய்யாசாமி ஆன
என்ன பண்ண எனக்கு நானே யோசிக்க வேண்டி இருக்கே என்று சாதாரணமாய் சொன்னாலும் அவன் உணர்ந்து சொல்கிறான் என்று புரிய
உன்னை யாருடா யோசிக்க சொன்னா , அதெல்லாம் நான் யோசிப்பேன் நீ சாப்பிடர வேலையை மட்டும் பாரு என்று ஷர்மி அதட்ட
அங்கே ரவி என்ற ஒருவன் இருப்பது போலவே யாருக்கும் தெரியவில்லை. இவர்கள் இருவரும் பேச கௌசி தோசை சுட, சரி நமக்கு தோசை கிடையாது என்று புரிந்து இட்லியையே இன்னும் வைத்து உண்டு எழுந்தான்.
உண்மையில் ஷர்மி ரவியை பார்க்க கூட விரும்பவில்லை. அதனால் கவனம் முழுவதும் சந்தோஷ் மேலேயே வைத்திருந்தாள்.
பின் போதும் என்று கௌசியிடம் சொன்ன போது, நான் சாப்ட்ட தோசையை நீங்க எண்ணலை யே என்று கேட்க
அதற்கு கௌசி ஏன் எல்லா கோட்டையும் அழிச்சிட்டு முதல்ல இருந்து போடவா என்று கேட்க
ஷர்மிக்கு சந்தோஷிர்க்கும் சிரிப்பு பொங்கி விட, அண்ணனும் தங்கையும் சத்தமாய் சிரிக்க, ரவி அவர்களை தான் பார்த்திருந்தான்
எதையும் உடனுக்குடன் செய்யும் வழக்கம் உள்ளவன் ரவி, அதனாலேயே அவன் வளர்ச்சி. எதையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடும் பழக்கமே கிடையாது.
காலையிலயே சித்தப்பாவிற்கு வாட்ஸ் அப்பில் சந்தோஷின் ஜாதகம் அனுப்பி தாதாத்விடம் கொடுத்து பார்க்க சொல்லியிருந்தான்
அப்பாவிடம் கூட சொல்லவில்லை. சந்தோஷ் என்ற பெயர் மட்டுமே இருந்தது அதனால் அவர்கள் இப்படி என்று அனுமானிக்க வில்லை. யாரினதோ ஜாதகம் என்று நினைத்தனர்.
நான் சொன்ன பிறகு வீட்டில் சொல்லிக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்க தாத்தாவிற்க்கும் சித்தபாவிர்க்கும் ஏதோ ஜாதகம் என்று தெரியும். ஷர்மிளாவின் அண்ணன் என்று அனுமானித்து இருக்கவில்லை
அவர்களும் பார்த்து பத்துக்கு ஒம்போது பொருத்தம் இருக்கு என்று சொல்லிவிட …
இதோ அண்ணனும் தங்கையும் உறங்குகிறார்கள் என்று கௌசியுடன் பேச அமர்ந்து விட்டான். வாசன் உணவுண்டு மதிய உறக்கத்திற்கு போய்விட இவர்கள் இருவரும் மட்டுமே டைனிங் ஹாலில்.

Advertisement