இரவு எட்டு மணி யாகிவிட துளசி வாசலில் ஒரு பார்வை பார்ப்பதும் பின்பு உள்ளே செல்வதுமாக சமையலைறைக்கும கூடத்துக்கும் நடந்து கொண்டிருந்தாள். ஒரு இடத்தில தடுமாறி பின் தன்னை ஸ்திரம்மாகி கொள்ள அப்போது பார்த்து அகிலாண்டேஸ்வரி அவளை பார்த்து விட்டார் அவருக்கு அப்படியே ரத்த கொதிப்பு எகிறி விட்டது.

சிறிது நேரம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு

எதுக்கு இப்படி நடந்துட்டே இருக்க பேசாம உட்கார் என்று அகிலாண்டேஸ்வரி சற்று சத்தமாகவே அதட்டி விட்டார். அவளின் பெரிய வயிறை தூக்கி அவள் அங்கும் இங்கும் நடக்கும் போது பயமாய் இருந்தது.

விஷயம் ஒன்றுமில்லை மதியம் உணவிற்கும் திரு வரவில்லை மாலையும் வரவில்லை. அதனால் இப்படி வாசலிற்கு உள்ளிறக்கும் துளசி நடந்து கொண்டிருந்தாள்.

அகிலாண்டேஸ்வரி அதட்டவும் முகம் சுருங்கிவிட அமைதியாய் ரூமின் உள்ளே போகப் போக

இங்கேயே உட்காரு நான் சொல்றவரை எந்திரிக்க கூடாது எந்திரிச்சே என்று மீண்டும் ஒரு கடுமையாக அதட்டலிட்டார்.

=============================

சரியாக அப்போது வாயிலில் கார் வந்து நிற்க, யார் என்று பார்க்க மீனாக்ஷி எழுந்து போக, வாயிலில் புத்தம் புது கரும் பச்சை நிற ஸ்கார்பியோ நின்றது.

உள்ளே ஓட்டுனர் இருக்கையில் வெங்கடேஷ் இருக்க, பக்கத்தில் திருநீர்வண்ணன்.

வேகமாக மீனாக்ஷி இறங்கி ஓடி வெங்கடேஷிடம் சென்றவள், யாருது சித்தப்பா இது என,

உன்னோடது தான் என்று சொல்லியபடி இறங்கியவன் உங்கப்பா புதுசா வாங்கியிருக்கான் என

=====================================

அதனால் இன்று சற்று கடுமையாக பேசி உள்ளே செல்ல, அவன் அந்த பக்கம்  செல்ல நீ சொல்லிக் கொடுப்ப தானே சித்தப்பா என

ம்கூம் உங்கப்பா பெர்மிஷன் இல்லாம இந்த விஷயம் அஆகாது ஏறகனவே டூ வீலர் க்கே என்னை வெச்சு செய்யறான் எப்போ எப்போ கோபம் வருதோ அப்போ எல்லாம் கூப்பிட்டு திட்டறான் அவனுக்கு ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் ரொம்ப முக்கியம் லைசன்ஸ் எடுக்கும் வயசு வந்தா தான் சொல்லி கொடுக்கணுமாம்

கோபம் வந்தா உன்னையாவது திட்டுவான் என்னை அடிப்பான் என்று சொல்லிக் கொண்டே அவனும் உள்ளே சென்று விட

ஸ்கார்பியோ வின் கதவை திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.

==========================

உள்ளே நுழைந்ததில் இருந்து அவனை தான் பார்த்திருந்தால் துளசி வந்தவுடனே திருவின் பார்வை அவளை தழுவினாலும் பின் அப்பாவிடம் அம்மாவிடம் என்று தாவி விட்டது

இப்போது பார்வையால் அழைத்தபடி சில அடிகள் எடுத்து வைக்க

துளசி அந்த இடத்தை விட்டு எழாதது புரிய வா துளசி என்றான்

அப்போதும் அவள் அந்த இடம் விட்டு எழாமல் இருக்க

என்ன பண்ணுது என்று அவன் அவளிடம் சென்ற வேகத்திற்கு எல்லோரும் அவனை தான் பார்த்தனர்.

அருகில் வரவும் அத்தை என்னை அவங்க சொல்றவரை எழுந்துக்க கூடாது சொன்னாங்க என்று கொஞ்சம் முறைப்போடு சொல்ல

அம்மா ஏன் அப்படி சொன்னாங்க நீ என்ன பண்ணின என்று பேச ஆரம்பிக்க

எல்லோரும் காரை பார்க்க படியிறங்கி விட்டனர்.

=========================

அம்மாவின் அருகில் சென்றவன் எதுக்கு இவ்வளவு கோபம் அப்படி என்ன செஞ்சா என

அந்த பக்கம் இந்த பக்கம் நடந்துட்டே இருக்கா ஒரு இடத்துல தடுமாரிட்டா விழுந்தா என்ன ஆகறது அப்படி என்ன உனக்கு அவ கிட்ட எப்போ வர்றன்னு சொல்ல மாட்டியா கொஞ்சமாவது உனக்கு பொறுபிருக்கா என்று அவனை பிடிக்க

மா ஒரு சர்பரைஸ் குடுக்கலாம்னு கார் வாங்க போயிட்டேன் மா

அது என்னன்னா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு ரெஜிச்டரேஷன் முடிஞ்சு வர என்று சமாதனாம் சொன்னான்

அவளை உட்காரு சொன்னா எங்கம்மாவை ஏன் திட்டுற ன்னு மீனாக்ஷி சண்டை போடறா என்று சொல்லும் பொது அவரின் குரலே சிறிது கலங்கிவிட

மா உன் பேத்தி எப்படி இருப்பா உன்னை மாதிரி தானே என்று சமாதனம் செய்து அவரை அழைத்துக் கொண்டு காரை பார்க்க போனான்

==============================

கார் கேட்டை விட்டு வெளியே சென்றதும ஆரம்பித்தவன் தான் திரு

அம்மாவிற்கும் மகளிர்க்கும் வை ப்ளட் சேம் ப்ளட் தான்

பாட்டி கிட்ட சண்டை போடுவியா எதுத்து பேசுவியா அவங்க எவ்வளவு வருத்தப் பட்டாங்க தெரியுமா வந்ததும் சாரி கேட்கற என்ன பண்ணிட்டு இருக்க நீ என்று ஆரம்பித்து மீனாக்ஷியை ஒரு வழியாக்கி

திரும்பி துளசியை பார்க்க ஒன்னும் ஆகலை என்று அவள் அவசரமாய் சொல்ல

எதாவது ஆகியிருந்தா என்னடி செஞ்சிருப்ப என்று அவன் கத்திய கத்தலுக்கு துளசியை விட மீனாக்ஷி பயந்து அம்மாவின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

பயம் வேண்டாம் என்று துளசி மென்மையாய் மகளின் தோளை அணைவாய் பிடித்தாள்.

இந்த் கத்து கத்தறேன் கொஞ்சமாவது பயமிருக்கா என்று சொல்லியபடியே முறைக்க

துளசி அவனை பார்த்து ஒரு மோகனப் புன்னகை சிந்தினாள்.