அடுத்த நாளும் மீனாட்சியை திரு தான் கொண்டு போய் விட்டான்.

ஆனால் துளசியின் முகம் பார்த்தே அவளை எதுவும் பேசவில்லை எதுவும் தொந்தரவு செய்யவில்லை. ஆம் இரவு சரியாக உறக்கம் இல்லாமல் முகம் ஒரு மாதிரி இருக்க கண்கள் சற்று வீங்கி இருக்க, பார்த்தவுடனேயே உடம்பு சரியில்லையா துளசி என்றான்

இல்லை என்பது போல ஒரு தலையசைப்பை கொடுத்து வேலையை பார்க்க

உடம்பு சரியில்லன்னா சொல்லிடனும் டாக்டர் கிட்ட போயிடணும் இது என்ன பண்ணுதுன்னு விடக் கூடாது என்றான் பொறுமையாக

அதற்கும் சரி என்பது போல தலையசைத்து மகளுக்கு சமையல் வேலை பார்க்க

அதில் திருவிற்கு அப்படி ஒரு கோபம் வந்தாலும் அவளின் முகம் பார்த்த பிறகு அவளை அரட்டமுடியவில்லை அவளிடமும் கோபம் காண்பிக்க முடியவில்லை. அமைதியாக சென்று அமர்ந்து கொண்டான்.

=================================

துளசி தன்னை கொஞ்சவில்லை என்ற எண்ணம் பின்னுக்கு போய்விட அம்மா மூலமாக பணப் பிரச்சனைகள் தீர்ந்து இப்போது கவனம் முழுவதும் துளசியிடம் மட்டுமே.

அப்போதும் அவனுக்கு கொஞ்ச வேண்டும் என்று தோன்றவில்லை. இந்த வாரமாக சண்டையிடாமல் குறை சொல்லாமல் அமைதி காத்தாலும், அவனின் பார்வையே மாறி அதில் துளசியை பார்க்கும் போது ஒரு அனுசரணை தெரிந்தாலும், கணவனின் அருகாமை இப்போது முக்கியம் என்று அவனுக்கு புரியவில்லை.    

இப்படி கவனித்தாலும் அவனாக அருகில் செல்ல வில்லை. அன்றும் நீ ரொம்ப டல்லா இருக்க துளசி ஹாஸ்பிடல் போயிட்டு வர்றியா அம்மா கூட என்றான்

இல்லை அடுத்த வாரம் தான் வர சொல்லியிருக்காங்க தேவையில்லை என்று விட்டாள். மீனாட்சியை பள்ளிக்கு அழைத்து செல்வதும் வருவதுமாய் இருக்க மற்ற நேரங்களில் பிசியாக இருந்தான். அதனால் தான் அப்படி கேட்டான். அவள் வேண்டாம் என்ற போதும் அம்மா அவளை கூட்டிட்டு போம்மா ரொம்ப சோர்வா தெரியறா என்று விட

அகிலாண்டேஸ்வரி க்கு வேறு என்ன வேலை போயிட்டு வரலாம் துளசி என்று ஒரு அதட்டல் இட

=============================

திரு என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க, நீ ரொம்ப அவகிட்ட கோபப் படறியோ,

இல்லையேம்மா இந்த நாலஞ்சு நாளா நான் சண்டையே போடலை என

அப்போ அதுக்கு முன்ன போட்டியா அடேய் குழந்தை நல்ல படியா இந்த பூமிக்கு வரணும் அதுவரைக்கும் நீ அவ கிட்ட சண்டை போட்ட பிச்சுபுடுவேன்

நானே எதுவும் சொல்றதில்லை இப்போல்லாம் அவளை இப்போ அவ உடல் ஆரோக்கியம் மட்டுமில்லை மன ஆரோக்யமும் முக்கியம், எனக்கு குறிப்பா சொல்ல தெரியலை ஆனா அவ முன்ன மாதிரி இல்லை எதுலயும் கவனமில்லை, இப்போ ஷோபனா கொஞ்சம் வீட்டை கவனிக்கற தால வேலை ஆகுது.

என்று திரு வை வருத்தேடுத்தார். இதெல்லாம் துளசிக்கு தெரியாமல் தான் பேசினார்.

====================================

அம்மா திட்டிய யோசனையோடே திரு படுத்திருந்தான். உறக்கம் வரவில்லை. நான் தான் இப்போ அவளோட சண்டையே போடலையே அப்புறம் ஏன் இப்படி இருக்கா என்ற யோசனை மட்டுமே.    

நீண்ட நேரம் உறக்கம் வராது போக, வெறுமனே படுத்திருந்தான். பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் அந்த இரவின் மடியில் நன்கு கேட்க, துளசியாக தான் இருக்கும் என்று அனுமாநித்தவன், எழுந்து மகளும் மனைவியும் படுக்கும் உள் ரூம் சென்றான்.

ஆம் மீனாக்ஷி மட்டும் இருக்க, திடீரென்று கதவை திறந்து துளசி பயந்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்து துளசி உள்ளயா இருக்க என்று லேசாக கதவை தட்டி கேட்க

ஆமாம் இருக்கேன் என்று துளசியின் குரல் கேட்ட பிறகு சென்று படிக்கையில் அமர்ந்து கொண்டான்.   

வெகுநேரம் கழித்தே துளசி வர, அவளை பார்த்ததும் எதோ சரியில்லை என்று தோன்ற  

ஏன் இவ்வளவு நேரம் துளசி என்ன பண்ணுது என்றான் கவலையாக

உடல் உபாதைகளை பற்றி மிகவும் சகஜமான பேச்சுக்கள் இதுவரை இருந்ததில்லை. துளசி தயங்க,