அருகில் வந்தவன் என்ன என்றான்

துளசி என்ன பதில் சொவது என்று தெரியாமல் ஒன்னுமில்லையே என

சில நொடிகள் அவளை உற்று பார்க்க துளசியின் தலை தானாக கவிழ்ந்தது.

பின்பு மீனாவின் புறம் திரும்பியவன் சாப்பிட போகலாமா என

மா வா என்று துளசியின் கைபிடித்தாள் மீனா

துளசி திருவின் முகம் பார்க்க, போ என்பது போல தலையசைதவன், நீயும் போ மீரா என்று அவளையும் அனுப்பியவன் அவர்களோடு அவனும் வர

பந்தி நடக்கும் இடம் வந்த போது இவர்களின் நெருங்கிய சொந்தம் மட்டுமே அங்கே, வெங்கடேஷும் ராதாவும் தான் மேற்பார்வை பார்த்து இருந்தனர்.

====================================

துளசியும் திருவும் அங்கே பார்த்தனர்.

சத்தியநாதன் தான் பிரசன்னாவிடம் பேசிக் கொண்டிருந்தார். சித்தாபாவாக யாரிடமும் பேச மாட்டாரே என்ற யோசனையோடு,

மீரா நீ மீனாக்ஷியோட சாப்பிட உட்காரு, நான் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்துட்டான்களா பார்த்துட்டு வந்து பிறகு துளசி உட்காரட்டும் யாரவது வந்து கூப்பிட்டாலும் அவர் வரட்டும் ன்னு சொல்லு என்று சொல்லி போனான்

பின்னே இது அவர்களின் விஷேசம் எல்லோரும் முன்னே துளசி அமர்ந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அது அவளிர்க்கே தெரியும் ஆனாலும் துளசி சற்று கவனமற்று இருப்பாதாக தான் அவனுக்கு தோன்றியது.

பிரசன்னா இருக்கும் இட போக பிரசன்னா ஒரு கட்டாயத்தில் தான் நின்று கொண்டிருப்பதாக் அவன் முகம் பார்த்தே தோன்றியது       

===========================

என்னோட சாப்பிடட்டும் மா என்று விட்டான். ஏன் உன் பொண்டாட்டியோட மட்டும் தான் சாபிடுவியா என்று ராதா அமர்ந்திருந்தவள் எழுந்து கொள்ள அதுதானே என்று வெங்கடேஷும் எழ

சண்டையோ என்பது போல எல்லோரும் பார்க்க

திருவோ ராதா நமக்குள்ள சண்டைன்னு உன் வீட்ட்ல பார்ப்பாங்க என

சண்டையா யார் போடுவா நீ போட்டாலும் நான் போடம்மாடேன் ஒழுங்கா என்னோட உட்காரு என வார்த்தை வளர்க்க, பிரசன்னா வும் மீராவும் எல்லாவற்றையும் அஆங் என பார்த்திருந்தனர்.

இவ்வளவு கூட்டம் அவர்களுக்கு புதுசு!


என்னவோ நீ சொல்லியிருக்க என்ன என

அப்போதும் சற்றும் பயமின்றி அப்படியே அமர்ந்திருந்தாள்.

நாம ஏதாவது செஞ்சா அதை ஒத்துக்குற தைரியம் வேணும் அது சரியா இருந்தாலும் சரி தப்பா இருந்தாலும் சரி என்று மகளை கூர்மையாக பார்க்க

அம்மா சொன்னாங்க அப்பா சொன்ன கேட்கனும்னு நான் சொன்னேன் கேட்க மாட்டேன்னு என

ம்ம் அப்புறம் என்றான்

இதுதான் சொன்னேன் என்று அலட்சியமாய் தோள் குலுக்கினால்

இதை சொன்னா எல்லாம் உன்னோட அம்மா முகத்தை அவ்வளவு கோபம் தெரியாது என்று ஆழ்ந்த அமைதியான குரலில் கேட்க

கேட்கலைன்னா என்ன பண்ணுவார் திட்டுவார் அடிப்பார் திட்ட்க்காடும் அடிசிக்காடும் ன்னு சொன்னேன் என சொல்லி, இவ்வளவு தான் சொன்னேன் என்றாள் முறுக்கிய முகத்தோடு.