Advertisement

ஷர்மிளா அதற்கு ஒரு புன்னகை மட்டுமே கொடுத்தாள் சோர்ந்த புன்னகை, நிறைய அழுதிருப்பாள் என்று அவளின் கண்களை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.
அவள் உணவை விழுங்க சிரமப் பட்டுக் கொண்டிருக்க, கொஞ்சம் மோர் கொண்டு வரட்டுமா, நீங்க அப்படியே அதை குடிச்சிட்டே சாப்பிடுங்க என்று சொல்ல
கொண்டு வா என்று ரவி சொல்ல, கௌசல்யா செல்லவும், சந்தோஷ் மெதுவாக ஷர்மிளாவிடம் பேபி நீ இப்படி அழக் கூடாது இது உன்னோட ஹெல்த் க்கும் நல்லதில்லை, அதே சமையம் பேபி க்கும் நல்லதில்லை
நீ எவ்வளவு தைரியமான பொண்ணு ஒண்ணுமேயில்லாத விஷயத்துக்கு அப்செடாவியா என்று பேச
நான் உன்கிட்ட அட்வைஸ் கேட்டேனா வாயை மூடு நீ என்றாள்
என்ன இப்படி பேசற ஷர்மி என்று ரவி அதட்ட
என் அண்ணா நான் எப்படி வேணா பேசுவேன் என் அண்ணா கிட்ட பேச நீ சொல்லணும்ன்ற அவசியமில்லை என்று அதற்கும் அவனிடம் காய்ந்ததாள்
ஏய் என்னடி உளர்ற என்றான் கோபமாக
மாமா ப்ளீஸ் நீங்களும் கோபப் படாதீங்க என்றான் சந்தோஷ்
எதையும் கருத்தில் கொள்ளாமல் போ போ யாரும் எனக்கு தேவையில்லை இது என் வீடு நான் இங்க தான் இருபேன் யாருக்கும் என் கூட இருக்க முடிஞ்சா இருங்க இல்லை நீங்க போங்க நான் எங்கேயும் போக மாட்டேன் நான் இங்கே தான் குழந்தை பெத்துக்குவேன் நான் எங்கேயும் போக மாட்டேன் யார் வீட்டுக்கும் போக மாட்டேன் எனக்கு வளைகாப்பும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று ஷர்மி கத்து கத்து என்று கத்த 
ரவியும் சந்தோஷும் செய்வதறியாது திகைத்தனர்.
சத்தம் கேட்டு கௌசல்யாவும் சீதாவும் வாசனும் கூட வர
அவர்களை பார்த்ததும் இன்னும் கத்தினாள் எனக்கொண்ணும் வளைக்காப்பு வேண்டாம் இது என்னோட வீடு நான் இங்க தான் இருபேன் என்னை யாரும் போ ன்னு சொல்ல முடியாது, வேணும்னா உங்க பையனை கூட்டிட்டு போங்க
இப்படி பேசி பேசி தான் கல்யாணமான நாளே உங்க பையனை துரத்தி விட்டீங்க
நல்லது சொன்னா தப்பா உனக்கு உன் பிறந்த வீடு வேண்டாமா என்று அப்போதும் சீதா பேச
நீங்க ரொம்ப பேசறீங்க என்று சீதாவை கை நீட்டி பேச
ரவி இடையில் வந்தவன் கை நீட்டி எல்லாம் பேசாதே , மரியாதை கிடையாது ஷர்மி என்று அவளை அதட்டியவன் அம்மா நீ போ என்ற சொல்ல
ம்ம் எனக்கு மரியாதை தெரியாது ஆனா தெரியவும் வேணாம் , ஐ ரியல்லி ஹேட் you எல்லாம் எல்லாம் உன்னால தான் எங்கேயாவது கல்யாணம் செஞ்சு நிம்மதியா இருந்திருப்பேன் நீ தான் விடலை என்று எல்லோர் முன்னும் பேச,
ரவி க்கு மிகவும் தலையிறக்கமாய் போனது.
திரும்பவும் சீதா ஏதோ பேச வர
மாமா தயவு செஞ்சு அத்தையை கூட்டிட்டு போங்க , இப்போ அவ கர்ப்பமா இருக்கா இந்த சூழ்நிலையில சரியோ தப்போ அவளை கொஞ்சம் அமைதியா விடுங்க என்று சற்று அதட்டலாய் சந்தோஷ் சொல்லிவிட
சந்தோஷ் என்று ரவி அவனை வேகமாய் அதட்டி விட
மிக மிக கணமான சூழல்
ஏதாவதுன்னா நீங்க என்னை தான் அதட்ட முடியும் எங்கண்ணாவை எல்லாம் முடியாது இப்போ என்ன நான் அம்மா வீடு போகணும், எனக்கு பிடிக்கலைன்னாலும் போகணும், எனக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சாலும் உங்க அம்மா போக சொல்வாங்க,  அவ்வளவு தானே, அதுக்கு எதுக்கு வளைக்காப்பு நான் இப்போவே போறேன் என்றவள் நீ வாடா அண்ணா என்று சொல்லி சந்தோஷின் கையை பிடித்துக் கொண்டு ரூமின் வெளியே நடந்தாள்
ஹே பேபி என்ன இது விடு விடு அவர் என்கிட்டே பேசறார் உனக்கென்ன அது அவருக்கும் எனக்கும் உள்ளது என்று சந்தோஷ் பேச பேச இழுத்துக் கொண்டு நடந்தாள்

Advertisement