Advertisement

அவன் செய்தியில் ஆழ்ந்து விட அப்போது தான் கவனித்தான், ஜெயந்தி அமர்ந்து உண்பதை..
‘ஏன் என்னோட உட்கார்ந்து இவ சாப்பிட மாட்டாளாமா இவ?’ என்று அவன் நினைக்க..
‘நீ சாப்ட்டுடியா , என்னோட உட்கார்ந்து சாப்பிடு சொல்ல மாட்டானாம்ன் இவன்?’ என்று நினைத்து அவளும் அவனோடு உண்ணவில்லை
பின்பு உண்டு எழுந்து விட்டவள் எல்லாம் எடுத்து வைத்து, அவனுக்கு பால் கொடுத்து படுக்கையறை உள்ளே சென்றாள்.
இரவில் அவனுக்கு பால் குடித்து பழக்கமில்லை, சேர்ந்து இருந்த ஒரு மாதத்தில் அவனுக்கு என்ன நடந்தது என்ற ஞாபகம் கூட இல்லை இருந்தது எல்லாம் அவனும் அவளும் உறவாடிய பொழுதுகள் மட்டுமே!
=———————————————————————————————————
ஜெயந்திக்கு படுக்கையை பார்த்ததும் அங்கே படுக்க பிடிக்கவேயில்லை, ‘என்னை என் அணைப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டு எழுந்து சென்றான் தானே இனி நான் இங்கே அவனாய் அழைக்கும் வரை படுக்க மாட்டேன்!’
வேகமாக ஒரு பெட்ஷீட் எடுத்து கீழே விரித்து படுத்துக் கொண்டாள்..
மருது வந்து பார்த்தது கீழே படுத்திருக்கும் ஜெயந்தியை தான், ‘ஒ நான் வேண்டாம் கீழே படுத்திருக்கா, போடி நீயும் எனக்கு வேண்டாம்’ என்று நினைத்து படுத்துக் கொண்டான்
ஒன்று அவன் பேச செய்திருக்க வேண்டும் இல்லை அவள் பேச செய்திருக்க வேண்டும் இருவருமே முறுக்கி கொண்டார்..
அதையும் விட மருதாசாமூர்த்தி எதையும் வாழ்க்கையில் இழந்தவனாகவோ இல்லாதவனாகவோ காட்டிக் கொண்டதே இல்லை..
‘நீ போகனுமா போகனுமா போகாமா இருக்க முடியாது நான் இங்க உனக்கு எல்லாம் செய்து தர்றேன்’ இப்படி தான் அவனின் வார்த்தைகள்.. ‘நீ இல்லாம என்னால இருக்க முடியாது ஜெயந்தி என்றோ என்னால இனிமேயும் தனியா இருக்க முடியாது’ என்றோ மனதை திறந்ததில்லை..
அவளின் கனவுகளுக்கும் இவனின் நனவுகளுக்கும் இடையில் ஊசலாடி போ என்று அனுப்பி விட்டான்
உண்மையில் அந்த ஒரு மாதத்தில் அப்படி ஒன்று ஜெயந்தி அவனுக்கு பார்த்து பார்த்து செய்யவில்லை, அவனை பழகவே அந்த ஒரு மாதம் ஆகிவிட்டது கூடவே ஜெர்மனி செல்ல ஏற்பாடுகள்.. அந்த மாதத்தில் அவனை பிடிக்குமா செல்ல வேண்டும் இப்படி தான் வேறு நினைவுகள் ஜெயந்திக்கு இல்லை
அதை அருந்தியனுக்கு தோன்றியது
“ஷப்பா இப்போ கொஞ்சம் சுமாரா இருக்க முன்ன மாதிரி கேவலமா இல்லை”
குர்மா சற்று உப்பு , சப்பாத்தி அவ்வளவு கடினம் ஆனால் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அதனை வயிறு நிறைய உண்டு விட்டு எழுந்தவன் தயாராகி ஸ்டோர்ஸ் சென்று விட்டான்..
அவளின் உணவை உன்ன , மிக மிக சுமார் ரகம் என்று கூட சொல்ல முடியாமல் இருந்த உணவை கஷ்டப் பட்டு உண்டவள் செய்த முதல் வேலை.. ம்மா எனக்கு சமையல் வரலை கத்துக் கொடு என்று கைபேசியில் சொன்னாள்.

Advertisement