Advertisement

Neengatha Reengaram 14 – Precap

அவன் படுத்திருந்தான் அவளுக்கு எதிர்புறம் அதனால் அவனின் முகம் தெரியவில்லை. நிச்சயம் உறங்கி இருக்க மாட்டான் என்று தெரிந்தது.

அவனின் அருகில் படுத்துக் கொண்டவள் அவனை நெருங்கி உடல் உரச, அவனின் உடல் இறுகியது..

அவன் திரும்புவதாக காணோம் என்றது அவன் புறம் திரும்பி படுத்து அவன் மேல் கை போட்டு அணைத்து கொள்ள, இறுகிய அவனின் உடலில் உடனே இளக்கம், ஆனால் திரும்பவில்லை எதுவும் பேசவில்லை..

—————————————————————————————————————-

அவள் டிக்கெட் அனுப்பியும் வரவில்லை தன்னையும் அங்கே அழைக்க வில்லை என்பது தாளவே முடியவில்லை

அதுவும் தன்னை பார்த்து காலையில் உங்களால வந்திருக்க முடியுமா என்று கேட்டது இன்னும் இன்னும் கோபத்தை கிளறி இருந்தது அப்போது என்னை பற்றி இவள் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்ற ஆத்திரம் பெருகியது. என்ன நினைத்து என்னை திருமணம் செய்தால் , ஏன் இவளை எனக்கு பிடித்தது என்ற எண்ணம் போய், பிடித்திருந்தால் திருமணம் செய்ய வேண்டும் என்ற அவசியம் என்ன, தன் திருமணம் தவறோ என்று தோன்ற ஆரம்பிக்க.. அதன் கணம் தாங்க முடியவில்லை.. இதற்க்கு அவளின் அணைப்பில் இருந்தான்.. அந்த அணைப்பு கூட அவனை குளிர்விக்க வில்லை..

—————————————————————————————————-

கண்டிப்பாக இருவரும் சேர்ந்து இருந்தால் கோபத்தில் அவளை நிச்சயம் காயப் படுத்தி விடுவோம் என்று புரிந்தவனாக..

“நான் உன்னை தூங்க தான் சொன்னேன் …போ ஜெயந்தி” என்றான் சற்று கடினமான குரலில். அமைதியாக பேச முயன்றும் அந்த குரல் தான் வந்தது..

——————————————————————————————————

அவனின் கோபத்தை யோசித்து அமர்ந்திருந்தாள்.. முதல் முறை பிணக்கு வந்த போது கிட்ட தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் பேசவில்லை.. அதன் பின் கிட்ட தட்ட ஒரு வருடம்..

படிப்பை புரிந்த அளவிற்கு வாழ்க்கையை புரியவில்லையோ .. சிக்கலாக்கி கொண்டேனோ என்று ஜெயந்திக்கு தோன்றியது..

எப்படியாவது அவனை சமாதனப் படுத்தி விடவேண்டும் என்று உறங்கமால் அமர்ந்திருந்தாள்.. ஆனால் மருது காலை வரையுமே வரவில்லை.. அவனின் கைபேசியும் அங்கே தான் இருந்தது..

——————————————————————————————————

அமர்ந்திருந்தவனுக்கு ஜெயந்தி தன்னை தேடுவாள் என்று புரிய தேடட்டும் நன்றாய் தேடட்டும் நான் எங்கே இருக்கிறேன் என்று சொல்லப் போவதில்லை என்ன்று அமர்ந்து கொண்டான்

——————————————————————————————————

Advertisement