Advertisement

ஏன் என்னாச்சு?” என்று விமலன் கேட்க,

“அவர் வரட்டும்” என்று அமர்ந்து கொண்டாள்.

“வரவும் இல்லை, ஃபோனும் எடுக்கலை, இங்க உட்கார்ந்து என்ன பண்ண போற?” என்று குடும்பத்தினர் கேட்க,

“அவர் வரட்டும்” என்று பிடிவாதமாய் அமர்ந்து கொண்டாள்.

“அவர் தான் ஃபோனே எடுக்கலையே, ஏதாவது வேலையா இருக்கும்” என்று விமலனும் கமலனும் எவ்வளவோ சொல்லிய போதும்,

“காலையில எட்டு மணிக்கு என்ன வேலை? வரட்டும்!” என்று அமர்ந்து கொண்டாள்.

“இங்கயா இருந்தீங்க?”

“ம்ம்..: என்றான் தலையசைப்போடு

“அப்புறம் ஏன் வரலை?”

“நீ சொல்லியிருக்கணும்… உங்க அப்பா அம்மா கிட்ட அலையாதீங்க அவரோட நான் வந்துடறேன்னு சொல்லியிருக்கணும்!”

“ஏன்? ஏன் இப்படி பேசறீங்க?” என்றால் புரியாதவளாக.

“எனக்கு என்ன தோணுதோ பேசறேன் ஜெயந்தி” என்றவன், “வா” என்று நடந்தான்.

“வேகமாக அவன் முன் போய் நின்றவள் உங்களால அங்க வந்திருக்க முடியுமா?” என்று கேட்க

அவளை தீர்க்கமாக பார்த்தவன், “நீ எப்பவுமே என்னை குறைச்சு தான் மதிபிடற…. என் படிப்பு கம்மி தான் அதான் உனக்கு எப்பவுமே யோசனை….

ஒன்னு நல்லா தெரிஞ்சிக்கோ உங்களோட படிப்புக்கு வெளிநாடு போயி வேலை செஞ்சா தான் மதிப்பு ஆஅனா என்னோட உழைப்பு என்கேயோருந்தாலும் மதிப்பு தான் சொல்லப் போனா உனக்கு என்னை பத்தி ஒன்னுமே தெரியாது” என்று சொல்ல

———————————————————————————————————————–

“ஏன் என்கிட்டே சொல்லலை?” என்று கேட்க வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள்.. “நல்லா இருக்கு!” என்று சொல்ல அவளை ஒரு பார்வை பார்த்து உள்ளே சென்றான்..

அவளும் உள்ளே வர முயல… நில்லு என்று சென்றவன்.. முன்பு போல ஆரத்தி எடுத்து வந்தான்..

“இந்த முறையாவது நீ என்னை விட்டுட்டு போகாம இருக்கணும்!” என்று சொல்லியபடி அவன் மட்டும் சுற்ற.. ஜெயந்தி எதுவுமே பேசவில்லை

எப்படி இவனை சாமாளிக்க போகிறோம் என்று கவலையானது..

———————————————————————————————————————–

“நல்லா இருக்கு…. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!” என்று சொல்ல

“என்னை பிடிச்சிருக்கா உனக்கு?” என்றான் நேரடியாக

‘என்ன கேள்வி இது?’ என்று அவனை ஆராய

“இல்லை… எனக்கு பல சமையம் தோணுது” என்றான் மனதை மறையாது

“என்னவோ என்னை கடிச்சு குதருற மூட்ல இருக்கீங்க போல…!” என்று சொல்லியபடி அருகில் அமர..

Advertisement