Advertisement

அத்தியாயம் இருபத்தி ஏழு:

விழியகற்றாமல் பார்த்தவள்.. சில நொடிகளில் கைகளை இறக்கிக் கொண்டாள் அவன் கேட்பது தேவையில்லை என்பது போல….

“நீ கையை இறக்கிவிட்டுடா, பார்க்கலாம் எப்படி அதுக்குள்ள நான் வராம போறேன்னு?”, என்று புன்னகைத்தான்.

அந்தப் புன்னகை ஜெயஸ்ரீயைத் தொற்றவில்லை.  அப்படியே தான் அமர்ந்திருந்தாள்… பார்வையை சிபியிடம் இருந்து திருப்பி வயல்வெளியை பார்க்க ஆரம்பித்தாள்.

“வா உள்ள போகலாம்”, என்று சிபி அழைக்கவும்,

“நான் ஒன்னும் இங்க வரலை, அப்பா தான் கூட்டிகிட்டு வந்தார்”, என்றாள் திக்கியபடி சற்று ரோஷமாக.

“சரி! இப்பவும் நீ உள்ள வரலை, நான் தான் கூட்டிட்டு போறேன்”, என்று எழுந்து நின்று அவள் கை பிடிக்க கை நீட்ட.. அவள் கையை நீட்டுவதாக காணோம்.

அவனாகவே கையைப் பற்றி எழுவதற்காக இழுக்கவும், அப்போதும் எழுவதாக காணோம் என்றவுடன்.. குனிந்து அப்படியே அவளை தூக்கினான்… இறங்க, திமிரவெல்லாம் இல்லை, அவன் கையோடு வந்தாள்..

“என்ன நீ ரெண்டு நாள்ல வெயிட் குறைஞ்சிட்ட போல”, என்று பேசிக்கொண்டே அவளைப் படியிடம் இறக்கி விட்டவன்… “ஒரு நிமிஷம்”, என்று உள் சென்றான்… “ஆரத்தி நமக்கு நாமே எடுத்துக்குறோம்”, என்று ஒரு தட்டோடு வந்தவன்.. அவளுடன் நின்று அவர்களுக்கு அவனே அதை சுற்றி… அவனுக்கு பொட்டு வைத்துக் கொண்டு…. ஜெயஸ்ரீயிற்கு பொட்டு வைக்க…. திரும்ப அவளின் கண்களில் கண்ணீர் நிறைந்து நின்றாள்.

அதைப் பார்த்து திகைத்தவன், எதுவும் சொல்லாமல் பொட்டு வைத்து, அந்தத் தட்டை ஓரமாக வைத்தவன், “வா”, என்று அவளை உள் அழைத்துச் சென்று… “இரு வந்துடறேன்”, என்று உடனே வெளியே சென்று அதை ஊற்றி வந்தான்.

அதுவரை நின்று கொண்டுதானிருந்தாள்… சிபி அவள் முன் சென்று நின்றவன்… “நீதான் உன் கைக்குள்ள என்னை விட மாட்ட.. நீ என் கைக்குள்ள வந்துடு”, என்று கை விரித்து நிற்க…

“முடியாது போ!”, என்ற பாவனையை முகத்தில் காட்டி நின்றாள்…

“அட என்ன இது பிடிவாதம், வா ஸ்ரீ!”, என்று அவளைச் சற்று வேகமாக இழுக்க, அவன் மேல் மோதி நின்றவளை விடமாட்டேன் என்பது போல இறுக்கி அணைத்துக் கொள்ள… ஸ்ரீயிடம் ஒரு பிரதிபலிப்புமில்லை… அணைப்பை விடாமல் தலையை நிமிர்த்தி அவள் முகத்தை பார்த்தவன், “என்ன? என்ன பண்ணனும் நான், உன் கோபம் போக”, என்று கேட்க…

அமைதியாக தான் இருந்தாள்…

“எதுக்கு கோபம்”,

“நீங்க…. என்னை… வேண்டாம்… போ… சொன்னீங்க..”,. என்று வார்த்தைகளைக் கத்தரித்து கத்தரித்து பேச,

“அவ்வளவு தானே அதுக்காக வராம இருப்பியா என்ன… பதிலுக்கு நீயும் என்னை வேண்டாம் போன்னு சொல்லிடு சரியாப் போயிடும்… பொதுவா நான் யார் பேச்சையும் கேட்கறது இல்லை, அதனால உன் பேச்சையும் கேட்க மாட்டேன், நீ வேண்டாம் போன்னு சொன்னாலும் வந்துடுவேன்”,  என்று சொல்ல…

அப்போதும் அவளின் கண்களில் கண்ணீர் தான்…

விளையாட்டுப் பேச்சையெல்லாம் விட்டு, “என்ன ஸ்ரீ?”, என்று ஆதூரமாக ஒரு வார்த்தைக் கேட்கவும். அவன் மேலயே சாய்ந்து கொண்டு அழ ஆரம்பித்தவள் தான் நிறுத்தவேயில்லை… அப்படி ஒரு அழுகை தலையை நிமிர்த்தவேயில்லை…

எந்த சமாதானமும் எடுபடவில்லை… அப்படியே பின்னிருந்த கட்டிலில் அமர்ந்து, அவளை அமர்த்த… அவன் மடி சாய்ந்து வெகு நேரம் அழுது கொண்டிருக்க… சிறிது நேரத்தில் அவளிடம் அசைவு எதுவுமில்லை..

அவளைப் புரட்டிப் பார்த்தான், கண்கள் மூடியிருக்க… என்னவாயிற்றோ என்று பதறி பார்க்க… உறக்கத்தில் இருந்தாள்… “ஊப்ஸ்”, என்று ஆசுவாசப் பெருமூச்சு விட்டவன்.. அவளின் நெற்றியில் மென்மையாக முத்திரை பதிக்க, அது அவளின் நித்திரையை கலைக்கவில்லை. அவளை அசையாமல் படுக்க வைத்து, வீட்டில் என்ன இருக்கிறது என்று பார்க்க… ஒன்றுமில்லை….

அப்போது சமைக்கத் தேவையானதை லிஸ்ட் எழுதி… தெரிந்த ஸ்கூல் பையன் ஒருவனுக்கு தொலைபேசியில் அழைத்து சொல்ல… அவன் வந்து பணமும் லிஸ்ட்டும் வாங்கிச் சென்று வாங்கி வந்து கொடுத்தான்.

“எழுந்துவிட்டாளா”, என்று பார்க்க எழவில்லை… அவனே சாதம் வைத்து, ரசம் வைத்து, உருளைக் கிழங்கை பொடிமாஸ் செய்து வைத்தான்.

குக்கர் சத்ததிற்கே விழிப்பு வந்து விட்டது… கண் திறந்து பார்த்தால் சிபி ஏதோ சமைத்துக் கொண்டிருப்பது தெரிய… அதை பார்த்துக் கொண்டே படுத்திருந்தாள்.

சிபி அவள் எழும்முன் சமைத்து விடவேண்டும் என்று அவசரமாக வேலை செய்து கொண்டிருந்தான், அதனால் இவள் புறம் கவனம் செல்லவில்லை.

அவன் திரும்பு சமயம் கண் மூடிக் கொண்டாள். அவன்  வேலையை முடித்து இவள் புறம் வந்து பார்க்க… இவள் கண்கள் மூடியிருந்ததால் இன்னும் தூக்கம் போல என்று நினைத்து போய் ஒரு குளியல் போட்டு வேஷ்டி பனியனில் வந்தான்.

அதுவரை எழுந்து அமர்ந்திருந்தவள் இவன் வரும் சத்தம் கேட்டதும் படுத்துக் கொள்ள.. வந்தவன் இன்னுமா தூங்கறா என்னடா இது.. என்று முணுமுணுத்து அந்த இடத்தை விட்டு நகரப் போனவன், மூடிய கண்களுக்குள் அவளின் கருவிழிகளின் அசைவைப் பார்த்தவன்… விழித்து இருக்கிறாள் என்று புரிந்து சத்தமில்லாமல் அவளின் கட்டிலின் பின்புறம் நின்று கொண்டான்.

சத்தம் எதுவும் கேட்காததால் மெல்ல ஜெயஸ்ரீ கண்விழித்து சிபி எங்கே இருக்கிறான் என்பது போல தேட…

சில நிமிடங்கள் அதை பார்த்தவன், “இங்கே இருக்கேன்”, என்று குரல் கொடுக்க… விதிர்த்து திரும்பியவள்… பிடிபட்ட பாவனையை முகத்தில் காட்ட…

“எவ்வளவு நேரமா இது நடக்குது?”, என்று கையைக் கட்டி மிரட்டலாக கேட்க…

“குக்கர் சத்தம் வந்ததுல இருந்து”, என்று நிறுத்தி நிறுத்தி சொல்ல..

“அவ்வளவு நேரமா என்னை சைட் அடிச்சியா..”, என்று சிபி கேட்க..

“கல்யாணம் ஆனதுல இருந்து அடிக்கறேன், இப்போ வந்து கேட்கறீங்க”, என்ற பாவனையில் பார்க்க…

“புரியலை, சொல்லிடேன்!”,     

“கல்யாணம் ஆனதுல இருந்து அடிக்கறேன்”,

“எதை?”.

அவளின் தலையில் மண்டு என்பது போலத் தட்டிக் கொண்டவள், “சைட்டை”, என்றாள் கடுப்பாக.

“ஓஹ்! அது எனக்கு தெரியலைன்னு தான் இவ்வளவு அழுகையா?”,

“ஆம்”, என்பது போல முறைத்துக் கொண்டே ஜெயஸ்ரீ தலையசைக்க…

“மச்சான் கொஞ்சம் லேட் பிக்கப்”, என்றான் வழக்கம் போல..

“இன்னும் எவ்வளவு நாள் சொல்வீங்க”,

“நமக்கு பேரக் குழந்தைங்க வர்ற வரைக்கும்”, என்று கண்ணடித்து சொல்ல…

ஜெயஸ்ரீ ஏதோ வாயில் முணுமுணுக்க…

“இப்போ என்ன?”, என்றான் சிபி.

“பிள்ளைங்களுக்கு இன்னும் வழியைக் காணோம், இதுல பேரன் பேத்திங்களா?”, என்று நிறுத்தி நிறுத்தி வாய் விட்டு சொல்ல….

“ஹா, ஹா”,  என்று சிபி வாய் விட்டுச் சிரித்தான்.

அப்போதும் ஜெயஸ்ரீ புன்னகைக்க வில்லை.

“சரி, முகம் கை கால் கழுவிட்டு வா, சாப்பிடலாம் பசிக்குது, இன்னும் காலையில இருந்து ஒன்னும் சாப்பிடலை”, என்றான்.  

அந்த வார்த்தைகள் சற்று வேலை செய்ய… எழுந்து நேராக அமர்ந்தாள்… ஷூ கழற்ற வேண்டும், சிபி இருப்பதால் தயங்க… சிபி, “இரு நான் கழட்டுறேன்”, என்றுப் புடவையை விலக்க முனைய… “வேண்டாம்!”, என்பது போல ஜெயஸ்ரீ இழுத்துப் பிடிக்க…

“விடு”, என்று அவளை அதட்டி.. ஷூவை கழற்ற, புடவையை அதுவரை தூக்கினான். முழங்கால்களுக்கு மேல் அந்த இடத்தில் துணி வைத்து அதன் மேலே அந்த ஷூவின் ஸ்ட்ராப்பை கட்டி இருந்தாள்.

அந்த ஸ்ட்ராப்பை விலக்கி, ஷூவைக் கழற்ற, “ஷ்ஷ்”, என்ற சத்தம்… என்ன என்பது போல பார்க்க ஸ்ரீயின் முகத்தில் வலியின் சாயல்..

“என்ன ஸ்ரீ?”, என்று கேட்டுக் கொண்டே அந்த துணியை விலக்க.. ஷ் என்று அவனையறியாமல் சத்தம் செய்தான் சிபி… அங்கே தீப் புண்..

“ஐயோ, எப்படி ஆச்சு?”, என்று சிபி பதற… ஜெயஸ்ரீ அசையாமல் அமர்ந்து இருந்தாள்… அதைப் பார்த்ததும், “நீ… நீயே செஞ்சிகிட்டயா?”, என்றான் இன்னும் பதறி,

“ஆமாம்!”, என்பதுப் போல, அவள் தலையசைக்க, “ஏண்டி? ஏண்டி இப்படிப் பண்ணின?”, என்று சிபி கத்தி… “சொல்லு”, என்று அவளை அதட்ட,

“உங்ககிட்ட வரணும் போலவும் இருக்கு, வேண்டாம் போலவும் இருக்கு, நெஞ்செல்லாம் வலிச்சது… அதான் அந்த வலி தெரியாம இருக்க இந்த வலியை செஞ்சிகிட்டேன்… தானாவும் வலிக்கும், இந்த ஸ்ட்ராப் அழுத்த அழுத்த இன்னும் வலிக்கும், ரொம்ப வலிக்குது”,  என்று அவள் திக்கி திக்கி கண்களில் நீர் நிறைய சொல்ல…

அப்படியே அமர்ந்து விட்டான்…  “தப்பெல்லாம் நான் செஞ்சா தண்டனை உனக்கா…?”,

“இந்த வலி மட்டுமில்லை, நீங்க போனது கூட அப்படித்தான்”, என்று ஜெயஸ்ரீ சொல்ல…   

அப்படியே அமர்ந்து விட்டான், “என்ன பேச?”, என்று கூட தெரியவில்லை.

“நீங்க என்னை நினைக்கவேயில்லை தானே!”, என்று அவள் கேட்கவும்…

“ப்ளீஸ் ஸ்ரீ! நீ சரியா புரிஞ்சிக்கணும், உன்னை மட்டுமில்லை நான் யாரையுமே நினைக்கலை… அப்படி என் வாழ்க்கைல எல்லாம் தப்பா நடக்கும்னு நான் நினைச்சதேயில்லை. அதோட எதிரொலி நான் யாரையும் நினைக்க இஷ்டப்படலை…”,

“சில சமயம் ஞாபகம் வரும் போது கூட அதை ஒதுக்க தான் முயற்சி செஞ்சிருக்கேன். உண்மையா சொல்லணும்னா காதலோடவோ இல்லை நீ வேணும்னா நான் நினைச்சது இல்லை. ஆனா இப்படி விட்டுட்டு வந்துடோமேன்னு என்னை நானே கீழ நினைச்சிருக்கேன். அப்போக் கூட கண்டிப்பா திரும்ப நீ என்னோட வரமாட்ட, உன்னை ஏன் நினைக்கணும் நினைச்சிருக்கேன்… ஆனா இதெல்லாம் உன்னை திரும்ப பார்க்கற வரைக்கும் தான்…”,

“அதுதான் எனக்கு கோபமா வருது? இப்போ எதுக்கு உங்ககூட வரணும்னு! எதுக்கு நான் மட்டும் உங்களை நினைச்சிட்டு இருந்தேன்னு…”,

“அது உன்னோட தப்பு இல்லை… நம்ம இந்தியப் பெண்களோட தனித்தன்மையே அதுதான்… நம்ம ஊர்ல நடக்கற மிகப் பெரிய காமெடி என்னன்னு கேட்டா கல்யாணம் தான்”, என்றான் சிபி.

“இவர் என்ன பேசுகிறார்”, என்று ஜெயஸ்ரீ விழி விரித்துப் பார்க்க.. “நிஜமா!”, என்றான்.

“யோசிச்சுப்பார் தெரியாத பசங்க கூட ஒரு வார்த்தைக் கூட பேச விடாத பெத்தவங்க.. யார் என்னன்னு தெரியாது, ஆனா ஜாதகம், பொருத்தம்னு பார்த்து… ஒரு ரெண்டு தடவை நேர்ல பார்த்து, குடும்பத்தை பார்த்து… கல்யாணம் பண்ணிக் கொடுத்து… அடுத்த நிமிஷம் அவனோட அனுப்பியும் வெச்சிடறாங்க…”,

“ஆனா அந்தப் பெரிய காமெடியை… ஒரு நல்ல விஷயமா மாத்துறது நம்ம பெண்கள் தான்! அவனைப் பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் அவனை விட்டு மாறுறது இல்லை மனசளவுல கூட… எல்லோரும் இப்படி தான்!”,

“எங்கயோ ஒன்னு ரெண்டு தப்பலாம்… டைவர்ஸ் கேஸ் அதிகமான இந்தக் கால கட்டத்துல கூட… இப்போ இருக்குற ஜனதொகைக்கு நம்ம திருமணங்கள் அதிகம் இப்படித்தான்! இதுல சேர்ந்து வாழறவங்க தான் அதிகம்! பிரிஞ்சு போறது ரொம்ப கொஞ்சம் பேர் தான்!”,

“அதனால நீ இப்படி உன்னை கஷ்டப்படுத்திக்க வேண்டிய அவசியமில்லை. நான் வராமலே போயிருந்தாக் கூட நீ வேற யாரையும் கல்யாணம் செஞ்சிருக்க மாட்ட…”,

“அப்போ தெரிஞ்சு ஏன் போனீங்க… மடையன் மாதிரி?”, என்று கத்திப் பேச முயன்று முடியாமல் விட்டு விட்டுப் பேச..  

“நீ வேற யாரையும் கல்யாணம் பண்ணியிருக்க மாட்ட தான்! அதுக்காக என் கூட அந்த சமயத்துல வந்திருப்பேன்னு தோணலை… அதுவுமில்லாம நீயே சொல்ற தானே நான் மடையன்னு..”,

“நீங்க பேசிப் பேசி என்னை குழப்பறீங்க…”,

இப்படிப் பேச்சுக்கள் பல நடந்தாலும், இதமாக அந்தப் புண்ணை சுற்றி தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான்… ஜெயஸ்ரீயிற்கு எரிச்சல் சற்று குறைந்தது.  

அவளின் முகத்தில் வலியின் சாயல் சற்று மட்டுப் படவும், “சரி, நீ தெளிவா என்னை என்ன பண்ணலாம்னு சொல்லு! ஆனா முதல்ல சாப்பிடலாம்…”, என்று சொல்லிக் கொண்டே அவளின் காயத்தைப் பார்த்தான்.

ஆற்றாமைத் தாங்காமல், “துணிப் பட்டாளே இந்தப் புண் எரியும்! என்ன செஞ்சி வெச்சிருக்குற நீ? எனக்கு சூடு வெச்சிருந்தா அதுல ஒரு அர்த்தம் இருக்கு! நீயேன் வெச்சிக்கிட்ட…”, என்றான்.

சில நொடிகள் அவனை பார்த்தவள், “நீங்க சொன்ன மாதிரி நம்ம பெண்கள் அனேகம் பேர் அவங்களைத் தான் வருத்திக்குவாங்க கணவன் மார்களை இல்லை, இது இந்தியப் பெண்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுசும் பொருந்தும்”, என்று ஜெயஸ்ரீ நிறுத்தி நிறுத்தி பதில் சொன்ன விதத்திலேயே சற்று தெளிந்து விட்டாள் என்று புரிந்தது.  

“இப்போ என்ன பெண்களோட பெருமை பேசவா இங்க இருக்கோம்… இது முட்டாள்தனம்.. இப்படி செய்வியா?”, என்று மீண்டும் சிபி கோபப்பட..

“இன்னும் பெருசா யோசிச்சேன், அப்புறம் இது போதும்னு விட்டுட்டேன்”, என்பதை வார்த்தையால் சொல்லாமல் சைகையில் தான் சொன்னாள்.

“என்ன பெருசா?”, என்றான் கலவரமாக.

“இந்தக் கால்ல வெக்கலாம் போல”, என்று சைகையில் காட்டியவள், “அப்புறம் இது ஒண்ணாவது நல்லா இருக்கட்டும்னு விட்டுட்டேன்”, என்பதை வார்த்தையால் சொல்ல.. அவளின் முகத்தில் காலைக் குறித்த வருத்தம்.

“ப்ச், யார் வருத்தப்பட்டாலும் நீ இதுக்காக வருத்தப்படக்கூடாது… நீ செஞ்சது வெளில தெரியாம இருக்கலாம், ஆனா அந்தப் புகழை, அந்த ஆசீர்வாதத்தை, கடவுள் நம்ம குழந்தைகளுக்கு கொடுப்பார்”.  

“எப்பவும் வருத்தமில்லை, ஆனா சில சமயம் முடியாத போது, இப்படி வலிக்கும் போது, ஏன் இப்படி ஆச்சுன்னு கொஞ்சம் வருத்தமா இருக்கும்”, என்று தன் மனதை மறையாமல் உரைத்தாள்.

“சும்மா பேச்சுக்கு சொல்றேன்னு நினைக்காத ஸ்ரீ, இல்லை கணவன்ற உரிமையில் சொல்றேன்னு நினைக்காத, நான் இருக்கேன் உனக்கு…”,

“தானா வர்ற வலி வேற, இப்படி நீ தயவு செஞ்சு இழுத்து வைக்காத.. ஏதோ ஒன்னு நடுவுல பிரிஞ்ஜோம், நான் உன்னை விட்டுப் போனேன் தான்! ஆனா உன்னை விட்டுப் போகணும்னு நினைக்கலை, அது நடந்துடுச்சு உனக்கு புரியுதா?”, என்றான் தவிப்பாக…    

“நான் உன்னை நினைக்கலை தான்… ஆனா வேற யாரையும் நினைக்கலை… அதுவும் இந்த ஒரு மாசம் வரை தான்… நீ என்னை நினைக்கறன்னு தெரிஞ்ச அப்புறம், உன்னைப் பத்தி தான் அதிகம் நினைச்சிருக்கேன்.. இது மனைவின்னு மட்டுமில்லை… ஏன்னா கல்யாணம் ஆன நாள் முதல் காதல் இருந்ததோ இல்லையோ மனைவின்ற நினைப்பை நான் நிமிஷமும் மறந்தது இல்லை”, என்றான்

அது ஜெயஸ்ரீயிற்கு நன்கு தெரியும், கூட இருந்த அந்த சில நாட்களில் பல முறை அதை சிபி உணர்த்தி இருந்தான்.

“இது இன்னும் பேசிப் பேசி புரிய வைக்கிற விஷயமில்லை, நாம வாழற வாழ்க்கையில உனக்கு உணர்த்துற விஷயம், உனக்கு உணர்த்துவேன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு, அந்த வாய்ப்பை எனக்கு குடு”, என்றான்.

“வாய்ப்பெல்லாம் கொடுக்க முடியாது”, என்பதுப் போலத் தலையை இடமும் வலமும் ஆட்டினாள்..

“ஏன்?”,

“எனக்கு”, என்பது போல கை காட்டியவள்…. “செலக்டிவ் அம்னீஷியா..”,

“இன்னைக்கு காலையில தான் கல்யாணம் ஆச்சு, அப்பா இங்க விட்டுட்டுப் போயிருக்கார், அவ்வளவு தான் ஞாபகம் இருக்கு”, என்று நிறுத்தி நிறுத்தி ஒரு ஒரு வார்த்தையாகப் பேசினாள்…

முதலில் சிபிக்குப் புரியவில்லை, புரிந்ததும் புன்னைகைக்க..

“மச்சான் லேட் பிக் அப்”, இந்த முறை சிபி சொல்லவில்லை… அவளே சொல்லவும்…. சிபியின் முகம் புன்னகைத்தாலும்… ஒரு மலர்ச்சி இல்லாதது போல தோன்ற…

இரு கைகளையும் இப்படிப் பிடிங்கள் என்பது போல காட்ட… சிபி புரிந்தும் புரியாமல் கைகளை விரிக்க…. அதில் வேகமாக அடங்கி அவன் கழுதைக் கட்டிக் கொண்டு … “மச்சான் லேட் பிக் அப் இல்லை…. பிக் அப் பே இல்லை”, என்று நிறுத்தி நிறுத்தி சொல்லி… அவனைக் கலாய்க்க..

“தேங்க்யூ….”, என்றான் சிபி அணைப்பை விலக்காமல்… அவளின் அணைப்பில்  நிம்மதியுற்றவனாக..

ஆனால் அணைத்த போது, புண்ணில் சேலை பட்டது எரிச்சல் கொடுக்க… “ஷ்”, என்று அவளறியாமல் முகம் சுளித்தவள், இருக்கும் சூழலை கெடுக்க விருப்பமில்லாமல் …. “இதுக்கு தேங்க்ஸ்ஸா, நான் உங்களைத் திட்டுறேன் புரியலையா”, என்று தலை நிமிர்த்தி முகம் பார்த்துக் கேட்க… அவளின் முகத்தில் வலியின் சாயல் பார்த்தவன்….

ஒரு புன்னகை மட்டுமே கொடுத்தான்… காயம் ஆற கண்டிப்பாக நாட்கள் ஆகும் இப்படி செய்துவிட்டாளே என்று வருத்தமாக இருந்தது.  

சிபி அப்படியே அமைதியாகிவிட்டது புரிந்தது… ஜெயஸ்ரீயும் எழ முற்பட… இறங்கி இரண்டு எட்டு வைப்பதற்குள் வலியில் துடித்து விட்டாள்.   அந்தப் புண்ணில் சேலை உராயவும்… வலி… காயம் செய்த போது கூட இப்படி வலியில்லை, இப்போது அதிகம் எரிந்தது.

சிபி சண்டையிட்டுச் சென்றதும், ஏதோ ஒரு ஆத்திரத்தில் செய்து விட்டாள்… சிபியை பார்க்கும் வரை அந்தக் கோபம் ஆத்திரம் இருக்க… அதுவரை ஒன்றும் தெரியவில்லை…. இப்போது அது எல்லாம் மறைந்து விடவும்…. அந்த இடம் எரிந்தது.   

அதுவரை இருந்த லகுதன்மை போய்.. “இப்படி ஆகும்னு தெரியாது ரொம்ப எரியுது”, என்று கண்களில் நீரோடு சொல்ல…  

தீக் காயம் பார்த்தவுடனேயே அது நிறைய வலியைக் கொடுக்கும் என்று சிபி அறிந்தது தான்.     

 அவளை தூக்கிக் கொண்டவன்…. “சேலை அதுல படாம அதுக்கு மேல வரை தூக்கு”, என்று சொல்ல… ஜெயஸ்ரீ அவன் சொன்னது போல செய்ய உராய்வு இல்லாததால் வலி குறைந்தது…

குளியலறை அருகில் விட்டவன்… “படாம தூக்கிப் பிடி”, என்று சொல்லி சென்று அவளின் உடைகள் இருந்த பையை ஆராய… அதில் லாங் ஸ்கிர்ட் டாப்ஸ் இருக்க… “இதைப் போடு”, என்று கொடுத்தான்…

“நீங்க போங்க”, என்று அவள் சொல்ல…

“சப்போர்ட் இல்லைன்னா விழுந்துடுவ, கஷ்டம்..”,. என்று போகமாட்டேன் என்பது போல நிற்க… ஜெயஸ்ரீயின் முகத்தில் தயக்கத்தை வெகுவாகப் பார்த்தவன்… “நான் கண் மூடிக்கறேன்”, என்று சொல்லி…

கண்களையும் மூடி, அவள் அவனைப் பிடித்துக் கொண்டு உடை மாற்றும் வரை பொறுமையாக நின்று… பின்பு வெளியே வந்து, அவள் சற்று பிரெஷாகி வந்தவுடன்.. அவளை அமர வைத்து, அந்த இடத்தில் துணி படாமல் தூக்கி வைக்க…

“இப்படியே எப்படி உட்கார்ந்து இருப்பேன்”, என்று பாவமாக கேட்டவளிடம்… காலில் இருந்து ஒரு போர்வையால் மூடி விட்டான்.

காயம் இருந்த பகுதி மட்டுமே இப்போது வெளியில் தெரிந்தது…. மற்ற பாகங்கள் எல்லாம் மூடி இருக்க… ஜெயஸ்ரீயை வசதியாக சாய்த்து அமர்த்தி உணவை தட்டில் போட்டுக் கொடுக்க..

அவனுடைய கவனிப்பில் ஜெயஸ்ரீ நெகிழ்ந்து இருந்தாள். அதில் பேச்சே வரவில்லை… “நீங்களும் சாப்பிடுங்க”, என்று சைகை செய்ய ….

அவனும் ஒரு தட்டில் எடுத்து வந்து அவளின் அருகில் அமர்ந்து சாப்பிட்டான்… அவன் உணவே உண்டு முடித்து விட்டான், இருமுறை சாதம் போட்டுக் கொண்டான்.. ஆனால் ஜெயஸ்ரீ அப்படியே வைத்திருக்க…

“நல்லா இல்லையா…?”,

“ரொம்ப நல்லா இருக்கு”, என்பது போல சைகை காட்டினாள்…

“அப்புறம் ஏன் வெச்சிக்கிட்டே இருக்க…?”,

“என்னவோ சாப்பிட முடியலை, அப்புறம் சாப்பிடட்டுமா”, என்பது போல அவள் சைகை செய்ய…  

அதை வாங்கி மூடி வைத்தவன்..

“தனியா இருப்பியா, ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்”, என்றான்.

“எங்க போறீங்க?”, என்று ஸ்ரீயின் கண்களில் கலவரத்தைப் பார்க்கவும்.. “வந்துடறேன்!”, என்று சொல்லிச் சென்றவன்… சிறிது நேரம் கழித்து ஒரு பெண்மணியை அழைத்து வந்தான்.

“நம்ம ஜி ஹெச்ல சிஸ்டரா இருக்காங்க..”, என்று சொல்லவும்…

அந்தப் பெண்மணியும் அவளின் தீக்காயத்தை ஆராய்ந்து… அவன் தீப்புண் என்று சொல்லியிருந்ததால் கையோடு கொண்டு வந்திருந்த ஒரு ஊசியைப் போட்டு… சில மாத்திரைகளையும் கொடுத்து, அந்தக் காயத்தை ஏதோ மருந்து கொண்டு சுத்தம் செய்ய.. அது ஜில்லென்று இருக்க எரிச்சல் சற்று குறைந்தது.

பிறகு ஏதோ ஒரு ஆயின்மெண்டை கொடுத்து, “இதைப் போடுங்க…. எப்படியும் ஒரு வாரம் பத்து நாள் ஆகும்… தண்ணி படக் கூடாது, அப்புறம் சீல் பிடிக்கும், தெரியாதது இல்லை… இவ்வளவு பெரிய தீக்காயம் ஏற்கனவே ஆகியிருக்கு”, என்று ஜெயஸ்ரீயின் வெந்து போன கால்களை காட்டிச் சென்றார். 

“நீங்க எதுக்கும் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு வாங்கக்கா”, என்றான்.

அதன் பிறகு ஸ்ரீயின் கையில் ஒரு கவரைக் கையில் கொடுத்தான்.. அது ஷார்ட் டாப்ஸ்.. “இது மட்டும் போட்டுக்கோ, இது புண்ல படாது”, என்று வார்த்தையோடு..

“எங்க கிடைச்சது எல்லாம் அவ்வளவு சீக்கிரம்…”,

“எல்லாம் இங்க கிடைக்கும் கொஞ்சம் தூரம் போனா…. இதை மட்டும் போட்டுக்கோ… கீழ பேன்ட் போடவேண்டாம்”, என்ற வார்த்தையோடு…

“என்ன?”, என்று ஜெயஸ்ரீ கேட்க…

“என்ன? என்ன? நாளைக்கு உங்க அப்பா வந்து பார்க்கும் போது இந்தக் காயம் பத்தி தெரிஞ்சா என்ன நினைப்பார்.. இன்னும் எதுவும் சரியாகலைன்னு வருத்தப்பட மாட்டார்… சீக்கிரம் புண் ஆறணும்…. அதுவரை நீ ஷூ போடவே கூடாது”, என்றான். குரலில் ஒரு கலக்கம், வருத்தம், கோபம், என்று அத்தனையும் கலவையாக சேர்ந்து இருந்தது.

மீண்டும் அவளின் தட்டைக் கொண்டு வந்து கொடுத்தவன், “சாப்பிடு”, என்றான்.

“இல்லை, பசியில்லை”, என்றாள்.

“இது பிடிக்கலையா. வேற வாங்கிட்டு வந்து கொடுக்கட்டுமா?”, என்று கேட்க…

“அச்சோ, அப்படி இல்லை!”, என்று வாங்கிச் சாப்பிட்டாள்.

பின்பும் அவளுக்கு தேவையான உதவிகள் செய்து முடித்த போது மணி பத்திற்கும் மேல்…   

“தூங்கு”, என்றான், அவள் படுத்துக் கொள்ளவும்… அவனும் கீழே படுத்துக் கொண்டான். அவள் படுத்திருந்தது கயிற்றுக் கட்டில், கண்டிப்பாக இரண்டு பேர் படுக்க முடியாது.

ஜெயஸ்ரீ மேலே படுத்திருந்தாலும், சிபி கீழே படுத்திருந்தாலும் இருவருக்குள்ளும் ஒரே எண்ணம் தான். இரண்டு வருடம் தான் ஓடிவிட்டது… இன்னும் எதுவும் மாறவில்லை, முன்பு போல ஜெயஸ்ரீ மேலே சிபி கீழே…

மாத்திரைகளின் தாக்கத்தால் ஜெயஸ்ரீ கண் அசர.. நடுவில் விழிப்பு வர.. சிபி படுத்திருக்கும் இடத்தைப் பார்த்தால், அவனைக் காணவில்லை எங்கே என்பது போல பார்க்க… வாயிற் கதவு திறந்து இருக்கவும்…

மெதுவாக இறங்கி… தட்டுத் தடுமாறி.. வாயில் கதவை அடைந்து வெளியே பார்த்தால், படியில் இருட்டை வெறித்து அமர்ந்திருந்தான் சிபி..

அவன் அங்கிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த தோற்றம் ஜெயஸ்ரீயை உருக வைத்தது. ‘

 

Advertisement