சபரீஷ், ஒரு வார ஓய்வுக்கு பிறகு.. தன் தந்தையின் அலுவலகம் சென்றான். அவினாஷ் நிறம்தான்.. அம்மாவின் சாயல்.. ம்.. அப்பாவின் அமைதியான முகம்.. எதற்கும் எளிதில் டென்ஷன் ஆகமாட்டேன் என சொல்லும் அது.
ஆனந்தின் வீடு இப்போதுதான் கொஞ்சம் உயிர்ப்புடன் இருப்பது போல தோன்றியது பெற்றோருக்கு. பிள்ளைகள் இருந்தால்தான்.. நேரம் ஓடுகிறது போல பெற்றோர்களுக்கு.. அப்படிதான் சித்ராக்கும் ‘அவன் ஒன்பதுக்கெல்லாம் சாப்பிட்டுடுவான்.. காரம் நிறைய வேண்டும்…’ என தானே மகன்களை தாங்கிக் கொண்டு வீட்டையும் பரபரப்பாக்கினார்.
காலையில் தந்தை மகன் இருவரும் ஒன்றாக அலுவலகம் செல்லுவர், மதியம்.. இருவரும் சேர்ந்து உண்ண வருவர்.. சற்று நேரம் ஓய்வுக்கு பிறகு, மாலையில் ஆனந்து கிளப், நண்பர்கள் என பொழுதை கழிக்க.. சபரி அலுவலகம் செல்லுவான். இப்படியாக தொழிலைப் பழகிக் கொண்டிருந்தான் பெரியவன்.
அன்னை சித்ராக்குதான் கவலை.. இளையவனும் இப்படி அலட்டிக் கொள்ளாமல் தொழிலை பார்த்துக் கொண்டு பக்கத்தில் இருக்கலாமே, எதற்காக இப்படி ஓட வேண்டும் என. பெரியவன் அழகாக கிளம்பி நிற்கும் போதெல்லாம் இளையவன் நினைவு வரும் அன்னைக்கு.. எப்போது எந்த கோலத்தில் வந்து நிற்பான் அவினாஷ் என சொல்ல முடியாது. சிலசமயம் முடிகூட வெட்டாமல் காடு மாதிரி வளர்ந்திருக்கும்.. அதில் அக்கறையே இல்லாமல் தன்போல் சுற்றுவான்.
ஆனால், சபரி.. திருத்தமாக மேல்தட்டு ஜாடையில் அமைதியாக கண் நிறைந்து இருந்தான், ஆக அன்னைக்கு இளையவனின் நினைவு அடிக்கடி வந்தது.
நந்தனுக்கு, இந்த மூவரும் இல்லாமல் வேலை ஓடவில்லை. செண்பா அக்காவிற்கு பதில் ஒரு வாரத்திற்கு, ஒரு குக் ஏற்பாடு செய்து தந்தார் மேனேஜர் மாதவன்.
எனவே அம்மு புதிதாக வந்தவருக்கு என்ன.. என்ன.. செய்ய வேண்டும் என சொல்லுவது.. கல்லூரி முடித்து வந்தால், அவர்களுடன் சற்று பேசுவது என அதில் நேரம் செல்ல.. அவினாஷ் என்பவனை கொஞ்சம் தள்ளி வைத்தாள்.
நந்தனுக்கு, மாதவன், ப்ரொடக்ஷன் வேலை எல்லாம் பார்த்துக் கொள்வார். மற்றபடி.. இந்த வசூல் வேலை எல்லாம் கிருபாவினது. எனவே கிருபா இல்லாமல் வசூல் ஆகாது என, தான் எங்கும் செல்லாமல், மால்.. தன் அலுவகலம்.. என இங்கேயே இருந்துக் கொண்டார் நந்தா.
ஆனாலும் அதுவும் ஒருவகையில் நல்லதாக இருந்தது.. கணக்குகளில் எதோ நெருடுவது அப்போதுதான் கண்ணில் பட்டது நந்தாவிற்கு. சிலது கணக்கில் வராத தொடர்புகள்(பினாமி) எல்லாம்.. அடையாளமே தெரியாமல் மறைக்கப்படிருக்குமோ என சந்தேகம் வரத் தொடங்கியது. சட்டென கிருபாவை சந்தேகம் கொள்ள முடியவில்லை.. தவிற்கவும் முடியவில்லை.
நந்தன் இந்த பத்து நாளில் மேலும் ஒரு குழப்பத்திற்கு ஆளானார் தடுமாறினார். கணக்கு வழக்கு என்றால், கங்கா கண்டிப்பாக பார்த்துக் கொள்வார். இது முற்றிலும் வேறு, கிருபா.. நந்தன் என இருவர் மட்டுமே அறிந்தது.. எனவே, நந்தன் அடுத்த குழப்பத்தை சுமந்து கொண்டார்.
அடுத்தடுத்த நாட்கள் குழப்பத்தில் கரைய.. மூவரும் வந்து சேர்ந்தனர். எல்லாம் சரியாகியது போன்ற ப்ரமை.. இயல்பாக அலுவலகமும் வீடும் தன் வேலையயைப் பார்த்தது.
நந்தன், குழம்பினார், ஏதும் அவர்கள் முன் காட்டிக் கொள்ளவில்லை.. தான் கிருபா மூலமாக செய்கிற எல்லா காரியங்களையும் கவனிக்க.. ஏதேனும் ஏற்பாடு செய்யும் படி கங்காவிடம் ஒரு குறிப்பு கொடுத்து கோத்தகிரி சென்றார்.
கங்கா, இங்கே தேவையான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினார்.. கல்லூரி, நிதி நிறுவனம்.. இரண்டும் நந்தாவின் முக்கிய முதலீடு. ஒன்று தன் மாமனார் பெயரில் இருக்கும் மற்றது கிருபாவின் பெயரில் இருக்கும். எனவே, கிருபாவின் பெயரில் இருப்பது இப்போது கடந்த ஆறுமாதமாக எந்த பங்கும் வரமால் இருக்கிறது. எனவே, கங்கா இப்போது அதை விசாரிக்கத் தொடங்கினார்.
அதை தவிர.. நிறைய தொழில்களில் கொடுக்கல் வாங்கல்கள் உண்டு.
அவினாஷ் முற்றிலும் நார்த், ஹைதரபாத் எனதான் வேலை, தமிழ்நாட்டில் அவனின் இருப்பு இல்லை. எனவே குடும்பத்துடன் போனில் பேசுகிறான் ஒரு முன்னேற்றமாக. ஆனால், அந்த முன்னேற்றம் கூட அம்முவின் விஷையத்தில் இல்லை. அவள் என்ன நினைக்கிறாள் என புரியவே இல்லை, அதை சிந்திக்க நேரமும் இல்லை.. எனவே பார்த்துக் கொள்ளலாம் என அவினாஷும் அமைதியாக இருந்தான்.
மேலும் குருவின் கண்ணில் பட.. என்னென்னமோ முயற்சி செய்கிறான்.. ஆனால் ஏதும் நடக்கவில்லை. அவரின் அருகே செல்லவே முடியவில்லை அவனால், எப்போது லொக்கேஷன் பார்க்க.. இல்லை, ஆர்ட் வொர்க் செய்ய எனத்தான் அவர்களின் டீம் இவனிடம் பணிக்கிறதே தவிர.. மற்றபடி இவன் உள்ளே வரமுடியவில்லை. ம்.. எங்கும், எல்லா துறையிலும் அரசியல் உண்டு.. அது அவினாஷ்க்கும் பொருந்தும் தானே. எனவே பொறுமையாக தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்தான்.
மேலும் அவனின் குரு அவர்.. எனவே தன் திறமை இவரிடம் வெளிப்பட வேண்டும் என முழுமையாக உழைத்தான். நாட்கள்தான் கரைந்தது.. இன்னும் அவனின் கனவு.. கொஞ்சமும் கை எட்டவில்லை போல.. ஓடிக் கொண்டே இருக்கிறான்.
அம்முவிற்கு, தன் படிப்பின் வேலை சரியாக இருந்தது. கூடவே நண்பர்கள்.. அவ்வபோது அவர்களுடன் வெளியே செல்வது என தன்னை இயல்பு நிலைக்கு மாற்றிக் கொண்டாள். ஆனால், மனதில் அசைக்க முடியாத இடத்தில் அவினாஷ் அமர்ந்திருந்தான், அவன் அவ்வபோது தனிமையில் வந்து.. ரகசியமாக சீண்டி சென்றான் அவளை.
நாட்களுக்குத்தான் சிறகு முளைக்கிறதே.. சட் சட் என பரந்து அதை நிறுபிக்கிறது போல.. முன்று மாதங்கள் சென்றது.
சபரிக்கு, பெண் பார்க்கத் தொடங்கி இருந்தார் சித்ரா. சபரியும் சற்று முன்னேற்றம் கண்டிருந்தான்.. தானே தனியாக ஒரு ப்ரொடக்ஷன் கம்பெனி தொடங்க முற்பட்டுக் கொண்டிருந்தான். இது முற்றிலும் சிறு பட்ஜெட் மற்றும் வெப் சீரீஸ்களுக்கு என முடிவு செய்து அதற்கான வேலையில் இருந்தான். வாழ்க்கையின் அமைப்பு ஒவ்வொருவருக்கும் வேறு வேறாக இருந்தது.
நந்தன், எப்போதும் போல் வாரம் ஒருமுறை சென்னை வருவார்.. அப்படி இன்று சென்னை வந்தார். இன்று கங்காவை சந்திப்பதுதான் முக்கிய வேலை.
ம்.. கிருபா குறித்து நிறைய தகவல்கள் வந்திருப்பதாக போனில் சொல்லி இருந்தார் கங்கா.. எனவே தன் சந்தேகம் உறுதியானதுதானா என நினைத்துக் கொண்டே.. சரியான நேரத்தில் தம்பித்தோம்.. என எண்ணிக் கொண்டே வந்து சேர்ந்தார் சென்னைக்கு நந்தன்.
அதிகாலை வீட்டிற்கு வந்தார். எப்போதும் போல.. உடற்பயிற்சி முடித்து.. குளித்து கீழே வந்தார். வீட்டில் செண்பா இல்லை. கிட்செனில் யாரும் இல்லை. தானே சென்று.. ஒரு க்ரீன் டீ எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தார் ஹாலில்.
செபஸ்டீன்… இப்போதுதான் பணிக்கு வந்தார். நந்தாவை பார்த்து “குட் மோர்னிங் சர்” என்றார்.
நந்தாவும் பதில் வாழ்த்து சொல்லி “ஏன், செண்பா அக்கா.. எங்கே..” என்றார், கேள்வியாய் அவரிடம்.
செபஸ்டீன் “இங்கதான் இருப்பாங்க.. ஏதாவது கீரை பறிக்க போயிருப்பாங்க..” என்றார். தன் வேலையை பார்க்க சென்றார்.
அம்மு இறங்கி வந்தாள்.. தன் அப்பாவை பார்க்கவும் “அப்பா, வந்துட்டீங்களா..” என ஆசையாக அருகில் வந்து அமர்ந்தாள்.
நந்தன் அம்முவிடம் “ஏதாவது குடிச்சியா… செண்பா அக்காவை காணோம்.. உனக்கு என்ன வேண்டும்” என்றார்.
அம்மு “ஆமாம் ப்பா, நேத்து நைட் ஆன்ட்டி எதோ அவசரம்ன்னு கிளம்பினாங்க, அங்கிள் உங்ககிட்ட பேசறேன்னு சொன்னார். அதான் ஆன்ட்டி இல்லை.. நான் உங்களுக்கு டீ போடறேன்.. எனக்கு ஆன்ட்டி கத்துக் கொடுத்திருக்காங்க…” என்றாள் உற்சாகமாக.
பெண் ஆசையாக செல்வதை பார்த்து ஏதும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்துக் கொண்டார். மனதில், ‘தனா.. ஏன் இன்னும் சொல்லல…’ என சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.
நேரம் கடந்தது.. அம்மு கல்லூரி கிளம்பினாள் பழங்களை உண்டுவிட்டு. செபஸ்டீன், தாத்தாக்கு ஓட்ஸ் செய்து கொடுத்துவிட்டார்.
நந்தன், மாதவனிடம் அழைத்து வேலைக்கு ஆள் ஏற்பாடு செய்ய பணித்தார். இப்படியாக நந்தன் எதையும் பெரிதுபடுத்தாமல், கிருபா பற்றிய சிந்தனையில் இருந்தார்.
கங்கா, நந்தன் இருவரும் பண்ணை வீடு செல்வதாக ஏற்பாடு. நேரே நந்தன்.. கங்காவின் அலுவலகம் வந்தார். பதினோரு மணிபோல. இருவரும்.. பண்ணை வீடு கிளம்பினர். ஓட்டுனரை மறுத்துவிட்டு இருவரும் கிளம்பினர். சென்னையின் மிக முக்கிய இடம்.. வார நாட்களில் அதிக ட்ராபிக் இல்லாத சாலை.. மிதமான வேகத்தில் நந்தா வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார், அந்த ஹைவேயில்.
கங்கா “அந்த கிருபா.. எதோ செய்கிறான்.. ஆனா, பெருசா பாதிப்பு இல்லை.. ஆனா, தனசேகர்தான் சந்தேகமா இருக்கு… நீ அங்கதான் பார்க்கணும், இப்போ அதுதான் இடிக்குது” என சொல்லிக் கொண்டே பேசிக் கொண்டே வந்தார்.
சொகுசு வீடு சென்றனர். வீட்டை பராமரிப்பவர் வந்து பார்த்து.. என்ன வேண்டும் என கேட்டுச் சென்றார். நந்தாவும்.. கங்காவும்.. சற்று நேரம்.. ‘கொடுக்கள்.. வாங்கள்..’ பற்றி கொஞ்சம் ஆராய்ந்து பேசிக் கொண்டிருந்தனர். உதவியாளர்கள் யாரும் இல்லாமல், தாங்களே.. வாய்மொழி கணக்குகளாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
எல்லா இடங்களிலும்.. கிருபா வந்தார்.. நந்தன அடிக்கடி “கிருபா பார்க்கிறான்.. அவனுக்கு தெரியும்’ என நம்பிக்கையான வார்த்தைகளாகத்தான் சொன்னார். மேலும்.. பணம் என பார்க்கும் போது.. மொத்தமாக கையாடவில்லை. ஆனால், நிறைய பிழை வந்தது.