9
         வாழ்க்கை என்பது முடிவு எடுக்கும் வரைதான் குழப்பங்களும்., புலம்பல்களும்., முடிவெடுத்த பின் எதுவாக இருந்தாலும் எளிதாகத்தான் இருக்கும். அப்படித்தான் அபூர்வாவிற்கும் தோன்றியது.

அவன் உறங்கிய பிறகு அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவள்., அவனுடைய மனப் போராட்டத்தை உணர்ந்ததை போல.,  இப்போது அவன்  அறியாமல் அவள் கையை அழுத்தமாக பற்றி இருப்பதை பார்த்தவள்,  முடிவெடுத்துவிட்டாள்.

இறுதியாக எப்படியாவது பேசி அவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும். இல்லையென்றால் அவனோடு இருந்து விட வேண்டும், என்ற முடிவோடு தான் அமர்ந்திருந்தாள்.  சற்று நேரத்தில் வெளியே சத்தம் கேட்கவும், அவனிடமிருந்து மெதுவாக கையை பிரித்து எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

அப்போதுதான் ராஜசேகரும்.,  லலிதாவும் வந்தார்கள். அதே நேரத்தில் மருத்துவர்களும் வந்தனர். மருத்துவர்கள் அறையின் உள்ளே வரவும்,  ராஜசேகரும் லலிதாவும் சேர்ந்தே உள்ளே வந்தனர்.

அப்போது தான் அவன் தூங்குவதைப் பார்த்து விட்டு.,  இரவு நடந்ததை சொன்னார்கள்.

“இப்போது சாப்பிட்டாரா., மாத்திரை போட்டாரா”., என்று டாக்டர்கள் கேட்டார்கள் அபூர்வ பதில் சொன்னாள்.

“சாப்பிட்டாங்க.., மாத்திரை போட்டாங்க.,  கையில் ப்ளட் வந்திருக்கே என்ன பண்ண”., என்று கேட்டாள்.

கட்டை மறுபடியும் பிரித்து போடுவதாக சொன்ன படி., அவன் தூக்கத்தில் இருக்கும் போதே நர்ஸ் ன் உதவியோடு கைக்கட்டை பிரித்து சுத்தம் செய்து வேறு மாற்றினர்.

டாக்டர்கள் வந்து கட்டை மாற்றி மருந்து போட்டது கூட தெரியாத அளவிற்கு.,  ஒரு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். அப்போது லலிதா தான் பயந்து போய் மருத்துவரிடம் கேட்டார்.

” இத்தனை நாள் தூக்க மாத்திரை போட்டாலும் சரி., ஊசி போட்டாலுமே தூங்காம ஒரு மாதிரி இருப்பான். இப்போ நீங்க தொடுறீங்க., மருந்து போடும் போது எப்படியும் வலி இருக்கும் இல்ல.., அந்த வலியை மறந்து தூங்குறானே”.,  என்று பயந்த படி  கேட்டார்.

மருத்துவர்களோ., பயப்பட எதுவுமே இல்லை மா..,   தூங்கட்டும் விடுங்க டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்., என்று சொன்னார்.

லலிதாவும் ராஜசேகரும் அர்த்தத்தோடு பார்வையை பரிமாறிக் கொண்டார்கள். அபூர்வா அவர்கள் மருத்துவரின் பேச்சு காதில் விழுந்தாலும்.,  அவன் கையைப் பற்றிய விவரங்களை டாக்டரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவனுடைய மருத்துவ ரிப்போர்ட் தனக்கு வேண்டும் என்றும்., “வேறு ஊரில் இதற்கு ஏதாவது ட்ரீட்மென்ட் வாய்ப்பு இருக்கிறதா., என்பதை அறிவதற்காக தனக்கு அவனுடைய பரிசோதனை முடிவுகளை தருமாறு டாக்டரிடம் கேட்டாள்”.

கண்டிப்பாக தரச் சொல்லுகிறேன் என்று டாக்டர் சொல்லி விட்டு சென்றார்..

கல்யாண் தன் மனைவியோடு வந்து சேர கல்யாண்னிடம் லலிதா வெளியே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.

அவன் தூங்குவதை பற்றி சொல்ல கல்யாண் க்கு மனதிற்கு திருப்தியாக இருந்தது.

அதன் பிறகு உள்ளே வந்து அபூர்வாவிடம்  பேச வேண்டும் என்று கல்யாண் சொன்னவுடன்., அவன் தூக்கத்தை தொந்தரவு செய்யாத வண்ணம் தள்ளி அமர்ந்து கல்யாணோடு பேசிக் கொண்டிருந்தாள்.

அப்போது தான் கல்யாண் கேட்டான் “என்ன முடிவு பண்ணிருக்கே, மா”..,

“நான் தான் சொல்லிட்டேனே அண்ணா.,  இன்னும் உங்க தம்பி தான் முடிவு பண்ணனும்”., என்று சொன்னாள்.

“அவன் யோசிக்கிறான், மா., உன்னோட லைப் வீணாக கூடாது ன்னு நினைக்கிறான்.. வாய் திறந்து சொல்லலையே தவிர., அது தான் உண்மை., நான் பேசிப் பார்க்கேன் மா”.., என்றான்.

“அவங்க  என்ன யோசிச்சாலும்., நேற்று எல்லார் முன்னாடியும் சொன்னேன் இல்ல.,  அதுதான் என்னோட முடிவு, அந்த முடிவில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை.,  நான் தெளிவாக இருக்கிறேன் யார் என்ன முடிவு பண்ணாலும்., எனக்கு இப்போ அவங்க ஹெல்த் முக்கியம்., இவங்களை விட்டுட்டு நான் எங்கேயும் போகப் போவதில்லை” என்று சொன்னாள்.

“வீட்டில் என்ன சொன்னாங்க மா”.,  என்று கல்யாண் கேட்டான்.

“வீட்ல என்ன முடிவு பண்ணாலும் எனக்கு அத பத்தி பிரச்சனை இல்ல.,  நான் யாரையும் கேட்க போறதில்லை.,  எங்க மாமா கிட்ட சொல்லிட்டேன்., தாத்தா கிட்ட சொல்லிட்டேன்., அப்பா ஓகே சொல்லிட்டாங்க., அம்மா மட்டும் தானே ப்ராப்ளம் பண்ணுறது.,  அம்மாவுக்கு மைண்ட் பண்ணாதீங்க..,  என்று சொன்னவள்., நீங்க உங்க தம்பி கிட்ட பேசி முடிவு பண்ணுங்க”..,  என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.,

வீட்டில  எல்லோரருமே திருமணம் பற்றி பேச பேசலாம் என்று யோசிக்க..,  அபூர்வா தான்.,  கல்யாண்னிடம் “நரேன் என்ன சொல்கிறானோ.., அதன்படி தான் நடக்க வேண்டும் என்று சொன்னாள். ஏனெனில் எந்த ஒரு விஷயத்திலும் அவனை இப்போது கட்டாயப்படுத்தக் கூடாது என்பது அவளின் எண்ணமாக இருந்தது.  எந்தவிதத்திலும் அவன் காய படுவதை அவள் விரும்பவில்லை. எனவே எதுவாக இருந்தாலும் அவன் எடுக்கும் முடிவு தான் என்பதில் தெளிவாக இருந்தாள்.

அவன் தூக்கத்தில் இருந்து எழும்பவே மதியம் தாண்டியிருந்தது.  நரேனிடம் சாதாரணமாக பேச்சு கொடுத்தபடி மதிய உணவையும் அவள் கையாலேயே கொடுத்தாள். அவன் யோசனையோடு பார்க்க அவள் அருகில் இருந்தவர்களை கண்டுகொள்ளாமல் அவனுக்கு உணவு எடுத்து கொடுக்க தொடங்கவும்., லலிதா சிரித்துக் கொண்டே வெளியே சென்றார்.

அதன்பிறகு கல்யாண் மட்டும் சற்று நேரம் அவனோடு  சாதாரணமாகப் பேசிக் கொண்டே இருந்தது போல் இருந்து விட்டு.,  வெளியே சென்று அம்மாவிடம் பேச தொடங்கினான்.

“அவன் சம்மதிப்பான் னுஎனக்கு தோணுது”என்று சொன்னான்.

“எப்படியோ அவன் சரி என்று சொன்னால் போதும்” என்றார்.

அதே  எண்ணத்திலேயே அனைவரும் இருந்தார்கள்.  நாள்கள் அதுப் போல செல்ல அவள் தினமும் அவனைப் பார்ப்பதை மட்டும் தவிர்க்கவே இல்லை. அவனை நல்லபடியாக பார்த்துக் கொள்வதிலும்., அவனது மருத்துவ ரிப்போர்ட்களை ஸ்கன் செய்து அதை மெயிலில் அனுப்பி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் விசாரிக்க சொல்வதிலும்., வேறு எதுவும் மருத்துவமனைகளில் இதற்கு மருத்துவம் உண்டா என்பதை விசாரிப்பதிலும்., மும்மரமாக இருந்து கொண்டிருந்தாள்.

அன்றைய நாளைக்கு பிறகு அவள் மருத்துவமனை வரும் போது அவளுடைய லேப்டாப்பை எடுத்து வந்து., அதில் சில வேலைகளை பார்த்துக் கொண்டும். போனில் சில வேலைகளை பார்த்துக் கொண்டும்.,  அவனோடு இருக்க தொடங்கியிருந்த நாளிலிருந்து இரண்டு நாள் கழித்து அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தாள்.

“உங்க கிட்ட பேசலாமா” என்று கேட்டாள்.
“அதிசயமா பெர்மிஷன் கேட்குற.. நீ ஆர்டர் தானே போடுவ”., என்றான்.

அவளும் சிரித்தபடி., அது வரை பிசினஸ் பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தவனிடம்., மெல்ல பேசத் தொடங்கினாள். அவள் வந்து கொண்டிருந்த இடைப்பட்ட நாட்களில் அவன் ஓரளவு அவளோடு நன்றாகவே பேசத் தொடங்கியிருந்தான்..

“பிசினஸ் பற்றி என்ன முடிவு பண்ணியிருக்கீங்க”… என்றாள்.

“நான் நடக்க முடியாமல் போன மாதிரி எம் பிஸினஸும்  நடக்க முடியாமல் போயிருச்சு” என்று சொன்னான்.

“நீங்க  ஆசைப்பட்டு தானே தொடங்னீங்க” என்றாள்.

“ஆமா ஆசைப் பட்டு தான் தொடங்கினேன்.. நான் இப்படி இருக்கும்போது என்னோட பிசினஸ் எப்படி பார்க்கமுடியும்”., என்று  அவளிடம் பதிலுக்கு கேட்டுக்கொண்டிருந்தான்.

அருகில் கல்யாண் இருந்தான்.,  ஏதோ பதில் பேசத் தொடங்கும் போது அபூர்வ அவனிடம்  சைகை காட்டி பேசுவதை நிறுத்த.,  அவனும் அத்தோடு  நிறுத்தி விட்டான்.

பிறகு அபூர்வா., மறுபடியும் நரேனிடம் “சரி நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்க.,  அதை சொல்லுங்க”., என்று சொன்னாள்.

“எப்படி பாக்க முடியும் ன்னு சொல்ற”.., என்று அவளை கூர்ந்து பார்த்தப்படி கேட்டவன்., நீ ஏதோ முடிவு பண்ணிட்ட போல..,   நான் என்ன முடிவு பண்ணனும் நினைக்கிற”.., என்று கேட்டான்.

“ஏன் வீட்டிலிருந்து உங்களால பிஸ்னஸ் பார்க்க முடியாதா” என்று கேட்டாள்.

“அது எப்படி முடியும்”.., என்று  அவள் இடம் சற்று சத்தமாகவே கேட்டான்.

லலிதா “என்னடா” என்று கேட்டார். இவள் தான் “ஒன்னும் இல்ல ஆன்ட்டி.,  நீங்க இருங்க”.,  என்று சொன்னாள்.

“நீ என்ன என்னை ஆன்ட்டி ன்னு., கூப்பிடுற ., அத்தை ன்னு கூப்பிடு., நீ தான் எங்க வீட்டு மருமக அப்புறம் என்ன”..,  என்று சொன்னார்.

நரேனோ., லலிதாவிடம் “அம்மா சும்மா இருங்க..,   நீங்களும் என் பேச்சை கேட்கிறீர்களா.,  கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றேன், இல்ல”.., என்றான்.

“அப்புறம் என்ன உரிமையில் அவ.,  இவ., பேசுற” என்று கேட்டார்.

“அது பேச்சுவாக்கில் வந்துருச்சு மா.., என்னை விட சின்ன பொண்ணுதானே,  ஒருமையில் கூப்பிட்டா கூட தப்பில்லை” என்று இவனும் பதிலுக்கு பேசினான்.

அபூர்வா தான் இருவரின் வாதத்தை நிறுத்தினாள். “அய்யோ அத்தை ப்ளீஸ் பேசாதீங்க.., நான் அப்படியே கூப்பிடுறேன்..,  நீங்க இருங்க அத்தை” என்று சொன்னவள்.

“ஹலோ… ஏன் அவங்க கிட்ட இப்படி சத்தம் போடுறீங்க.., நீங்க என்ன சொன்னாலும் சரி ன்னு நான் சொன்னேன் இல்ல…,  என்  முடிவு தான் ஏற்கனவே சொல்லிட்டேனே..,  அதில் எந்தவித மாற்றமும் இல்லை” என்று சொல்லிவிட்டு உங்க பி.ஏ வரச் சொல்லுங்க…, உங்க கம்பெனில உங்கள  நம்பி எவ்வளவு பேர் இருப்பாங்க.. அத யோசிங்க..,  பிசினஸ் அ நம்ம இங்க இருந்து எப்படி டீல் பண்றதுன்னு பார்ப்போம்”..,  என்று சொன்னாள்.

அன்று அவனுடைய பிசினஸ் சம்பந்தமான முடிவுகளை எடுக்க வைக்க அவனோடு போராடிக் கொண்டிருந்தாள்.

ஒருவழியாக வீட்டிலிருந்து பிசினஸை பார்க்கும் வழியாக அவன் பி. ஏ   வையும் அருகில் வைத்துக் கொண்டு பேசி அடுத்த இரண்டு நாட்களும் தொழில் சம்பந்தமான முடிவுகளில் அவனை தலையிட வைத்தாள்.

பழையபடி அவன் தொழிலில் ஈடுபாட்டோடு ஈடுபட வைக்க வேண்டும்,  என்ற எண்ணத்தோடு அவனை பழையபடி தொழில் சம்பந்தமான விஷயங்களை பேசி பேசி அவனிடம் விஷயங்களை வாங்கிக்கொண்டு இருந்தாள்.

பி.ஏ வை அருகில் வைத்துக்கொண்டே பேச..,  நரேனின் பிஏ சந்தோஷுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  அதை நேரடியாகவே நரேன் முன்னிலையிலேயே தெரியப்படுத்தினான். அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சரியாக  10 தினங்கள் ஆகி இருந்த போதிலும்.., எட்டு தினங்களில் அவன் பிசினஸ் சம்பந்தமாக எந்த பேச்சும் எடுக்காமல் எதைப் பற்றியும் யோசிக்காமல் மனக்காயம்., வெளிக் காயங்களோடு இருக்க.., அவனை எட்டாவது நாளில் இருந்து பத்தாவது நாளுக்குள் பழையபடி அவனுடைய தொழிலில் ஈடுபாட்டுடன் மூழ்க வைத்தாள்.

அந்த பத்தாவது நாளில் தான் பிஏ சொன்னார்.   “சார் பழையபடி திரும்பி வந்துருவாரு  நம்பிக்கை இருக்கு மேடம்., நீங்க சூப்பரா ஹேன்டில் பண்ணுறீங்க.., இந்த எட்டு நாள் பார்க்காமல் விட்டதை இரண்டே நாள்ல முடிச்சிட்டிங்க… இனி தினமும் பார்க்க சரியா இருக்கும்”.. என்றான்.    நரேன் முன்னிலையிலேயே…

அதற்கு நரேன்.,   “அப்ப எனக்கு பிசினஸ்ல ஒண்ணுமே தெரியாது.,  உங்க மேடம் தான் எல்லாம் எனக்கு சொல்லிக் கொடுக்குறாங்க.,  அப்படித்தானே நீ பேசுற”,  என்று சொல்லி அவனிடம் தோழமையாக எப்போதும் பேசுவது போலவே பேசினான்.

அப்போது சந்தோஷ் சொன்னது… “நிஜம் தான் சார்.,  நான் உங்கள அஞ்சு நாள் பார்க்க வந்தேன்,  நீங்க எதுவுமே பேசல என்ன பார்த்தா கூட முகத்தை திரும்பிட்டீங்க..,  எதைப் பத்தியும் என் ட்ட பேச மாட்டீங்க..,  ஆனால் அன்னைக்கு மேம் கூப்பிட்ட அப்புறம்.., இப்ப ரெண்டு நாளா உன்கிட்ட நல்ல சேஞ்ச் சார்.., பிஸினஸ் பற்றி பழையபடி பேச ஆரம்பிச்சீங்க.. உங்களை இப்படி பாக்குறதுக்கே எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா சார்”..,  என்று சொன்னான்.

” ஏண்டா நான் படுத்துக் கிடப்பதை பார்த்து சந்தோஷமா இருக்கு ன்னு சொல்றியா”..,என்று கேட்டான்.

“ஐயோ சார்.., அப்படி சொல்லல, உங்கள இப்படி பழையபடி பிசினஸ் பற்றி பேசுவதை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு ன்னு சொன்னேன்”..,  என்று சொன்னான்.

“நானும் கிண்டலுக்கு தாண்டா சொன்னேன்”.,   என்று சொல்லி அவனோடு சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தான்…