சரியாக 11 நாள் ஆன பிறகு அவனிடம் மறுபடியும் திருமணத்தை பற்றி வீட்டில் உள்ளவர்கள் பேசத் தொடங்கினார்கள்.

ஏனென்றால் முதல் நாள் இரவு அவனோடு அதிக நேரம் இருந்து தொழில் சம்பந்தமாக பேசி., சில வேலைகளை முடித்து விட்டு 8 மணிக்கு மேலே கிளம்பி இருந்தாள். கல்யாண் தான் அவளை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து இருந்தான்.

இப்போது எல்லாம் அவனது பிஸினஸ் சமந்தமான வேலை பார்க்க தொடங்கிய பிறகு இப்படி தான் ஆகிறது.  இன்னும் ரெண்டு மூணு நாள்ல டிஸ்சார்ஜ் வேற..,  எல்லோரும் “நீ என்னடா முடிவு பண்ணிருக்க” என்று கேட்டார்கள்.

“கல்யாணம் வேண்டாம்” என்று சொன்னான்.

ராஜசேகர் சில விஷயங்களை எடுத்துக்கூற தொடங்கவும்..,

“அப்ப ப்ளீஸ் கல்யாணத்த பத்தி பேசாதீங்க” என்றான் நரேன்..

“நீ தாண்டா புரியாமல் பேசுறே..,  உன்னை சின்ன விதத்தில் கூட கஷ்டப்படக்கூடாது..,  சங்கடப்படுத்த கூடாதுன்னு.., அந்த பொண்ணு நினைக்கிறா..,  ஏன் அன்னைக்கு கூட நாங்க அவன் ட்ட பேசுறேன் அப்படின்னு சொன்னதற்கு”., அந்த பொண்ணு “இல்ல அவங்கள எந்த விதத்திலும் நீங்க சங்கட படுத்த கூடாது.., அவங்க  என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம்” அப்படின்னு சொல்லுது..,  “உனக்கு சங்கடம் வரக் கூடாதுன்னு , நினைக்கிற பிள்ளைக்கு நீ சங்கடம் வர  வைக்கலாமா” என்று கேட்டார் ராஜசேகர்.

“அவளுக்கு இதுல என்னப்பா பிரச்சனை” என்றான்

லலிதா தான் இடையில் வந்து “ஏண்டா புரிஞ்சுதான் பேசுறியா..,  அந்த பொண்ணு கல்யாணம் ஆகாம நம்ம வீட்ல வந்து இருந்துச்சுன்னா..,  நாளைக்கு அந்த பொண்ண யாரும் ஒரு வார்த்தை  எதுவும் சொல்லிட்டாங்க னா.,  அது அந்த பொண்ணுக்கு சங்கடம் இல்லையாடா.., அவங்க வீட்டுல உள்ளவங்க அந்த பொண்ணோட பிடிவாதத்திற்காக சரி ன்னு சொல்றாங்க.., நீ முடியவே முடியாது ங்கிற.,  அந்த பொண்ணை யோசிச்சு பாருடா”., என்றாள் லலிதா

அவன் அமைதியாக இருக்கவும் ராஜசேகர் தொடர்ந்து பேசத் தொடங்கினார். “உனக்கு தெரியும் இப்ப  அந்த பொண்ணு வர ஆரம்பிச்சு 6  நாள் ஆகுது., நீ யோசிச்சு பாரு இந்த  நாள்ல உன்னை எந்த அளவுக்கு அவர் பாத்துக்குறா., நீயே யோசிச்சு பாரு”.,  என்று பேசிக்கொண்டிருக்கும் போதே நரேன் உடே புகுந்து பேச தொடங்கினான்.

“அப்பா நான் அவளை பார்த்துக்க சொல்லலை.., அவளை  வர வேண்டாம்னு சொல்லிருங்க” என்று சொன்னான்.

அவன் முக மாற்றத்தை கல்யாண் உணர்ந்து தான் இருந்தான்.  மேற்கொண்டு  பேசுமாறு ராஜசேகரை பார்த்து கல்யாண் ஜாடைக் காட்ட ராஜசேகர் தொடர்ந்தார்.

” நான் சொன்னா அந்த பொண்ணு கேட்கும் நம்பிக்கை இல்ல..,  அப்படின்னா நீயே சொல்லிடு” என்று சொன்னார்.

“அவ  பிடிவாதம் பிடிக்கிறா ப்பா”…  என்று சொன்னான்.

” அதைத்தான் நானும் சொல்லுறேன்.,  பிடிவாதம் பிடிக்கிறா ன்னு தெரியுது இல்ல,  அப்போ கல்யாணம் பண்ணிக்கோ.,  கல்யாணம் பண்ணிக்கிட்டா.,  நம்ம வீட்டிலேயும் ஒரு நிம்மதியான சூழ்நிலை இருக்கும்.., யாரோ ஒரு பொண்ணு உன்கூட இருப்பதற்கும்., உன் மனைவியா உன்கூட இருக்கிறதுக்கும்  வித்தியாசம் இருக்குல்ல”.,  என்று சொன்னார்.

அவர் கூறியதைக் கேட்டவுடன் அமைதியாக யோசித்துக்கொண்டே இருந்தான்., “யோசிச்சு சொல்றேன்” என்று சொன்ன படி அமைதியாக இருந்தான்.

அதிலிருந்து சற்று நேரத்திற்கெல்லாம் அபூர்வா வந்து சேர்ந்தாள்.  அவள் உள்ளே நுழையும்போதே கல்யாண் விஷயத்தை சொன்னான்.  “அவன் ஏதாவது கோபப்பட்டு பேசினாலோ.,  இல்ல வேற ஏதாவது சொன்னாலோ., தப்பா எடுத்துகாத ம்மா.,  ஸ்ட்ரிக்டா இப்படி பேச போய் தான்., அவன் யோசிக்கிறேன் என்று சொல்லி இருக்கான்.,  நீயும் பார்த்துக்கோ”., என்று சொன்னான்.

நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி விட்டு உள்ளே வந்தாள்.

எப்போதும் போல் சிரித்த முகமாக அவனிடம் “குட் மார்னிங் நரேன்” என்று சொல்ல அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான்…

“ஹலோ.,  உங்களுக்கு தான் குட்மார்னிங் சொன்னேன்.,  காது கேக்கலையா” என்று கேட்டாள்.

” கேக்குது.., ஆனா நான் சொல்றதை நீ கேட்பியா”., என்று பேசத் தொடங்கினான்…

“சொல்லுங்க கேட்போம்”..,  என்று சிரித்தபடி எப்போதும் அவன் அருகில் வந்து அவன் கையில் உள்ள காயத்தை பார்ப்பதுபோல பார்த்துவிட்டு அவன் அருகிலேயே அமர.,

அவனோ  “சொன்ன பேச்ச கேளு..,  கல்யாணம் வேண்டாம்”.,  என்று சொன்னான்.

அவளும் அவனை பார்த்து சிரித்துக்கொண்டே “கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று அவனிடம் சிரித்துக்கொண்டே கேட்டாள்.

அவன் “நீ உத வாங்குவ தெரியுமா”.,  என்று சொன்னான்.

“பக்கத்துல தான் இருக்கேன் அடிங்க”., என்று சொன்னாள்.

“விளையாடாத டா.., நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா”., என்று மறுபடியும் கேட்டான்.

” இன்னும் நாலு நாள் தான் டைம் இருக்கு..,  நீங்க தான் முடிவு சொல்லணும்” என்று சொன்னாள்.

“நான் தான் சொல்லுறேன் இல்ல”என்று அவனும் பதிலுக்கு சொன்னான். அப்போது தான் இவள் அவனிடம் சில விவரங்களை சொன்னாள்.

“கல்யாணம் பண்ணிக்கணும் பேசினது தப்பு நினைக்கிறீங்களா..,  எனக்கு தெரிஞ்சு அப்படி எல்லாம் இல்ல..,  நான் உங்ககிட்ட இதற்கான விளக்கத்தை நிறைய சொல்லிட்டேன்., இனி சொல்ல முடியாது.  அதே தேதியில் கல்யாணம் பண்ணிக்கலாம்.,  ரெஜிஸ்டர் மேரேஜ் கூட வச்சுக்கலாம், எனக்கு ஓகே தான்.. ஆனா நீங்க என்ன யோசிக்கிறீங்க ன்னு தெரியல.,  நீங்க சொன்ன கிராண்டா வெச்சுக்க கூட எனக்கு ஓகே தான்.., ஆனால் மேரேஜ் நடக்கணும்.,  நீங்க ஏன் ஹஸ்பன்ட் ஆகனும் அவ்வளவு தான்”… என்றாள்.

“ஏன்டா.. இவ்வளவு பிடிவாதம்”.., என்றான்.

“அம்மா தான்..,  அவங்க வந்து உங்கள இரிடேட் பண்ற மாதிரி பேசினாங்க இல்ல..,  நம்மளால நல்லா வாழ்ந்து காண்பிக்க முடியாது நினைக்கிறீங்களா..,  கண்டிப்பா முடியும் அவங்க முன்னாடி வாழ்ந்து காமிக்கணும்.., அந்த ஒரு ரீசன் தான்.,என்றாள்.

“அதே முகூர்த்தத்தில் கல்யாணம் வைக்கணும் சொல்றியா”..,என்றான்

” முன்னாடியே கூட பண்ணிக்கலாம்., ஒன்னும் பிரச்சனை இல்ல.., அந்த கல்யாணத்துக்கு உங்க சார்பா நான் போயிட்டு வரேன்., உங்க ஒய்ப் ஆ” என்று சிரித்தபடி சொன்னாள்…

அதைக் கேட்ட போது அவனுக்கு கண் கலங்கியது., அதை மறைத்து அவளை சிரித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தவன்.,  “ஏன் இப்படி எல்லாம் யோசிக்கற” என்று கேட்டான்.

“இல்ல தெளிவாக யோசிக்கிறேன்.,  இப்ப நீங்க எனக்கு பதில் சொல்லுங்க”.,  என்று அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அதற்கு அவனும் அவனுடைய கண்டிஷனாக சில விஷயங்களை தெளிவுபட விவரித்தான்.

“நான் சொல்ற கண்டிஷன் அ கேப்பியா” என்று அவன் கேட்டான்.

“சொல்லுங்க என்ன கண்டிஷன் போட போறீங்க” என்று கேட்டாள்.

“என் வைஃப் ஆ நீ கல்யாணத்துக்கு போறதெல்லாம் சரிதான்.. ஆனா என் மனைவி னா அதுக்குன்னு ஒரு தனி கெத்து இருக்கணும்”.., என்றாள்.

“ஏன் எக்ஸ்ட்ரா குவாலிஃபிகேஷன் எதுவும் வேணுமா”.., என்றாள்.

அவன் சிரித்தபடி “அப்படி சொல்லல., என் வைஃப் யார்ட்டையும் எந்த இடத்திலும் இறங்கி போக கூடாது” என்றான்.

“கண்டிப்பா இறங்கி போகமாட்டேன்” என்றாள்.

“எனக்கு கோபம் இருக்கு.., நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்., என் மனசுல எல்லார் மேலயும் கோபம்., அதிகமான கோபம்., அந்த நேரத்தில் அவங்க ஆறுதல் சொல்ல வேண்டாம். ஆனால் அந்த இடத்தில் மட்டம் தட்டி பேசின அந்த கோபம்., என் மனசுல இருந்துகிட்டே இருக்கு.., சோ என்னை மட்டம் தட்டிப் பேசின யாரும் நம்ம கல்யாணத்துக்கு வருவதை நான் விரும்பல..,  அதுக்கு சம்மதமா சொல்லு…, என்றான்.

“முழு சம்மதம்”…என்றாள்.

“நான் என்ன சொன்னேன் ன்னு புரிஞ்சதா”… என்றான்.

“புரிஞ்சது.. ஏன் அப்படி பார்க்குறீங்க.. அம்மா வ தானே சொன்னீங்க… மத்தவங்க வரலாம் இல்ல” என்றாள்.

“உன்னுடைய சிஸ்டர் மேரேஜ்க்கு முதல் நாள் நம்ம ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்.., கண்டிப்பா தாலி கட்டணுமா என்ன”., என்று கேட்டான்.

“அது உங்க இஷ்டம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்.., ஏன் கைல பெயின் எதுவும் இருக்கா”…, என்றாள்.

“அதெல்லாம் இல்லை.. நீ என்ன சொல்லுற ன்னு பார்த்தேன்”..,என்றான்.

சிரித்தபடி அவனை பார்த்துக் கொண்டே நின்றாள். “என்ன சிரிச்சிட்டே நிற்கிற” என்று கேட்டான்.

” கடைசியா ஒரு வழியாக கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டீங்க” என்றாள்.

“பிடிவாதம்., உன்னோட பிடிவாதம் தான் இப்ப கல்யாணத்தில் வந்து நிக்குது.,  நாளைக்கு எதுவும் பிரச்சினை னா., என்ன பண்ணுவ.., ஒருவேளை எனக்கு சரியா ஆகலைன்னா”.., என்று சொல்லி முடிக்கும் முன்…

பேசத் தொடங்கி இருந்தாள்… “இல்லை உங்களுக்கு கண்டிப்பா சரியாகும்.,  சரியாக்கி காட்டுவேன்.”
என்று உறுதியாய் சொன்னவளை பார்த்து மனம் நிறைய அவன் பார்த்துக் கொண்டிருக்க.,  அதே நேரம் அவன் சம்மதம் சொல்லியதை கேட்டபடி வந்த  கல்யாண் ற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

உடனே வீட்டினர் அடுத்து என்ன செய்வது என்பதை பற்றி கலந்தாலோசிக்க தொடங்கினர்.

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும்”.

அர்த்தம்.

“அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.”