Advertisement

அத்தியாயம் இருபத்தி ஐந்து:

வெற்றியின் வீட்டின் உள்ளே ராமநாதன் ஆர்ப்பாட்டமாகப் பேசிக் கொண்டிருந்தார்….. எல்லோரும் பவ்யமாக நின்று கொண்டிருந்தார்கள்….

“தாத்தா! காஃபி குடிச்சிட்டு பேசுங்க”, என்று சகஜமாக சந்தியா அவரிடம் காஃபியை நீட்ட…….

வரா எப்போதும் போல, “எனக்கு இன்னும் பயம் போகலை! இந்த சந்தியா எப்படி இப்படி பயமில்லாம பேசுறா”, என்று கண்களால் ரமணனிடம் கேட்க….

“இரு! உன்னை என் பொண்ணை விட்டு மொத்த வைக்கிறேன்”, என்பது போல ரமணன் ஒரு லுக் விட….

வள்ளிமாவின் பின் ஒதுங்கினாள்….. “என்ன பண்ணின”, என்று வள்ளிமா கேட்க…..

“இந்த சந்தியா மட்டும் எப்படி தாத்தாகிட்ட கொஞ்சம் கூட பயமேயில்லாம பேசுறா”, என்று மகா முக்கியமான கேள்வியைக் கேட்க…..

“உன் பொண்ணு கூட வளர்ந்துடுவா, நீ வளர மாட்டேங்கற….. அமைதியா இரு, முதல்ல தாத்தா வந்த வேலையை முடிக்கட்டும்….”,

“உன் வீட்டுக்காரன் கூட இருந்தான், உன் பொண்ணை விட நீதான் செல்லம் கொஞ்சுற”, என்று மெதுவான குரலில் அதட்ட…..

“ஓகே”, என்று இப்போது ரமணன் பின் போய் நின்றாள்….. ராமநாதன்  முன் யாருமே அமரவில்லை…… மீனாட்சி படு பவ்யமாக நின்றிருந்தார். ஞானவேல் ஒரு ஓரமாக நின்றான்.

சந்தியா தான், “தாத்தா! எல்லோரையும் உட்கார சொல்லுங்க”, என்று சொல்ல….

அதன் பிறகு ராமநாதன் சொல்ல அமர்ந்தனர்….

அதற்குள் ரோஹித் பயிற்சியை பார்க்க இஷ்டப்பட, சந்தியா ஞானவேலை பார்த்து, “கூட்டிட்டு போங்க”, என்று சொல்ல….. அவன் குழந்தைகள் இருவரையும் அழைத்து சென்ற போது, தேஜூ தானும் என்பது போல ரமணனை தளிர் நடையால் இழுக்க….

அங்கே இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவன்… “வரா, இவளை அவங்களோட அனுப்பு”, என்று ரமணன் சொல்ல…..

வரா அருகில் செல்லும்போதே தேஜு…… ரமணன் பின் மறைய….

“இப்படியா என் மானத்தை வாங்கறது”, என்று ரமணனை வரா முறைத்தாள்.

பின்னே அவள் பேச்சை ரமணன் தான் கேட்பான், அவன் பெண் கேட்பாளா என்ன….. இதை நன்கு தெரிந்த சந்தியா… “தேஜூ குட்டி, குட் குட்டி, இந்த மாமாவோட போங்க”,

“மாமா”, என்ற வார்த்தையை சந்தியா சொல்லக் கேட்டதும்,  தேஜூ சந்தியாவை பார்த்து, “வெட்டி”, என…..

பிடிபட்டவளாக நாக்கை கடித்தாள் சந்தியா.

ராமநாதன் பெரும் குரலெடுத்து சிரிக்க, எப்போதும் போல வரா ரமணனின் கை பற்ற….. அவர்கள் எல்லோர் முகத்திலும் புன்னகை.  

பிறகு சந்தியா தேஜூவிடம், “இல்லை, இது வேற மாமா! போங்க!”, எனவும்…..

“வெட்டி”, என்றாள் மறுபடியும் தேஜூ……

வெற்றியை பார்த்த ரமணன், “உன்னைத் தான் என் பொண்ணு வெட்டின்னு சொல்றா வெற்றி!”, என்று எடுத்துக் கொடுக்க……

 

“தாத்தா……”, என்றாள் சந்தியா, ராமநாதனை பார்த்துப் பரிதாபமாக….

“ரமணா”, என்று அவர் சொல்லவும், புன்னகைத்த ரமணன் வேறு சொல்லவில்லை.

அங்கே ஊரில் தேஜூவை தூக்கி வைத்துச் சுற்றும் சந்தியா, வெற்றியை “மாமா”, என்று அவளுக்கு சொல்லிக் கொடுத்திருக்க, அந்த எஃபக்ட் தான் அது.

எல்லோரும் புன்னகைக்க…. “மாஸ்டர்! உங்களை தான் என் பொண்ணு ஏலம் போடறா, உங்க வீட்டுக்காரம்மா ட்ரைனிங்….”, என வராவும் சொல்ல….

“கே கே எல்லாம் போய் வெட்டின்னு வேற ஒரு பேரா”, என்று இன்னும் என்னென்ன பாக்கி இருக்கோ என்று வெற்றி நினைக்கும் போதே….

இன்னொன்றும் புரிந்தது, ரமணன் வீட்டினர் எல்லோருக்கும் சந்தியா தன்னை இஷ்டப்பட்டது தெரிந்திருக்கிறது என்று.  கொஞ்சம் பெருமையாகக் கூட இருந்தது.

“ரமணா”, என்று ராமநாதன் சொல்ல, “தோ, பா…..”, என்று சில பேப்பர்களை எடுத்தான் ரமணன்…..

“நீ இதுல என்கிட்ட”, என்று ஒரு மிகப்பெரிய தொகையைச் சொல்லி, “அவ்வளவு கடன் வாங்கியிருக்கேன்னு எழுதியிருக்கேன். கையெழுத்து போடுப்பா”, என்றார் வெற்றியை பார்த்து ராமநாதன்.

வெற்றி என்ன ஏதென்று கேட்கவில்லை….. உடனே கையெழுத்து போட்டான்.

சந்தியா புரியாமல் பார்க்கவும்…. “நாங்க செய்யக் கூடாதுன்னு சொல்லிட்ட, வேற நாங்க  என்ன செய்ய….”,

“இது புது கார் ஷோ ரூம் ஏஜென்சி உன் பேர்ல……. அப்பா எடுத்துட்டார் வெற்றி…. அதுக்கு செட்டில் பண்ணின பணம். அதைத் தான் கடன் தொகையா எழுதியிருக்கார்…..”,

வெற்றி திகைத்து நிற்க…..

சந்தியா, “என்ன தாத்தா இது? நான் உங்க கிட்ட எதுவும் செய்யக் கூடாதுன்னு சொன்னனே……”,

“உனக்காகத் தான் இந்த கடன் பத்திரமே… வெச்சிக்கோ, பொறுமையா பணம் குடு….”,

சந்தியா ரமணனை பார்க்க…… “அவருக்கு குடுத்து பழக்கப்பட்ட கை சந்தியா….. யாருக்குன்னாலும் உதவி செய்வார்.. உன்னை அவர் பொண்ணா சொல்லும் போது செய்யாம விடுவாரா என்ன வாங்கிக்கோ”,

“வாங்கிக்கோ வெற்றி”, என்று ரமணன் சொல்ல….

“வாங்கு பொண்ணு”, என்று வள்ளிம்மா அதட்ட….. சந்தியா வெற்றியை பார்க்க…. வெற்றி மீனாட்சியை பார்க்க ……

“வாங்க சொல்லுங்கம்மா”, என்றாள் வரா மீனாட்சியை பார்த்து……

“ஐயோ, பாப்பா! நீ கூட வளர்ந்துட்டப் போல….”,

மீனாட்சி தயங்கிச் சம்மதம் சொல்ல… வெற்றி சந்தியாவை வாங்க சொல்ல…. கண்களால் சந்தியா வெற்றியிடம் காட்ட,

வெற்றியும் சந்தியாவும் ராமநாதன் சுந்தரவள்ளி ஆசீர்வாதம் வாங்க, அதை சந்தியா கையில் கொடுத்தனர்.

அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு, ராமநாதன், “கடன் தான்மா திரும்பி குடு…. சரியா, சந்தோஷமா வாங்கு”, என்று சொல்ல…

 

சந்தியாவிற்கு தெரியவில்ல, ஆனால் வெற்றிக்கு தெரிந்தது, அவர்கள் கடனாக எழுதிய தொகையை விட ஷோ ரூமின் மதிப்பு அதிகம் என்று….

வெற்றி சொல்ல வாயெடுக்க….. அதை உணர்ந்த ராமநாதன் சற்று கமரவும் சந்தியா உள்ளே தண்ணீர் கொண்டு வரப் போக…..

மொத்த குடும்பமும் வெற்றியை, “சொல்லாதே”, என்பது போல அவள் வருவதற்குள் வெற்றியிடம் சொல்லியிருந்தனர்.                                           

“இன்னாடா இது, கமிஷனர் சார் வீடு பூந்து மிரட்டுராறு”, என்று தான் வெற்றிக்குத் தோன்றியது.

“என்ன மாஸ்டர்? ஏதாவது மைன்ட் வாய்ஸா”, என்று வரா சொல்ல……

“ஐயோ, இல்லீங்க வராம்மா”, என்றான் அவசரமாக வெற்றி……

பிறகு, “டிஃபன் சாப்பிட்டிட்டு போகணும் தாத்தா!”, என்று சந்தியா சொல்ல….  எந்த வேற்றுமையும் பார்க்காத ராமநாதன்… “என்ன செய்யப் போற”, என்று கேட்க ஆரம்பிக்க….

“அப்பா! எனக்குக் கொஞ்சம் வேலை, நீங்க இருந்து சாப்பிட்டுட்டு வாங்க”, என்று ரமணன் கிளம்ப…….

வரா, “தானும்”, என்று வள்ளிமாவை பார்க்க, வள்ளிமா ராமனாதனிடம் சொல்ல…..  

“டேய்! மகாலட்சுமியை கூட்டிட்டு போ!”, என்றார் ராமநாதன்… வரா முகம் மலர…..

“அப்பா! அவ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டாதீங்க, எனக்கு வேலை இருக்கு….. நீங்கல்லாம் மெதுவா வாங்க, இங்க தேஜூவை யாரு பார்த்துக்குவா”, என்று சொல்லி ரமணன் கிளம்ப……

“பாருங்க வள்ளிமா காமெடியை! சார், தாத்தாக்கிட்ட வரா மேடம் சொல்றதை கேட்க வேண்டான்னு சொல்றார், ஆனா அவர் தான் அதை அதிகம் கேட்பார்”, என்று சந்தியா சொல்ல…

ரமணன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை.  

“தேஜூவை நான் கூட்டிக்கிட்டு வரேன், நீங்க வரா மேடமை கூட்டிட்டு போங்க”, என்றாள் சந்தியா.   

வெற்றி மூலமாக தான் சந்தியா ரமணன் வீட்டினருக்கு அறிமுகம்…. ஆனால் சரி சமமாக, ஒரு தயக்கமில்லாமல், அவர்களில் ஒருத்தி போல சந்தியா அவர்களிடம் பேசினாள்.

வெற்றியால் அது எப்போதும் முடியாது.. அவன் என்றுமே நெருங்க முயல மாட்டான். “என்ன? ஏது? சார்! அம்மா! இந்த வார்த்தைகளை தாண்ட மாட்டான். ஒரு ஆளுமை சந்தியாவிடம் இருந்ததை உணர்ந்தான்.

ரமணன் சொன்னது போல தன்னிடம் மட்டும் தான் அதை காட்டுவதில்லை என்று புரிந்தது.

ரமணனும் வரா வும் கிளம்ப… அவர்கள் பின்னோடு சென்ற சந்தியா அவர்களை பார்த்து, “தேங்யூ, தேங்யூ வெரி மச்!”, என்றாள்.

சந்தியாவின் தலையில் கை வைத்து ரமணன், “நல்லா இரும்மா”, என்று ஆசீர்வதித்தவன், “வெற்றி, பெஸ்ட் சாய்ஸ்”, என்றான்.

சந்தியா புன்னகைத்தாலும், அவளின் கண்கள் மீண்டும் நன்றியை காட்டியது. கொண்ட கட்லாவால் தனக்கு எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொண்டு, இப்போது அவளின் வாழ்க்கையையும் செப்பனிட்டு கொடுத்திருக்கிறான்.

ரமணன் வேறு சொல்ல வர, அவன் சொல்ல போகும் விஷயத்தை புரிந்த வரா, “வேண்டாம்”, என்று சிறு தலையசைவில் காட்டி, சந்தியாவை ஆதூரமாக அணைத்து விடை பெற்றாள். 

அவர்கள் சென்றதும் சந்தியா பெரியவர்களை கவனிக்க விரைந்தாள்.

ரமணன் சொல்ல வந்தது, அவர்கள் இப்போது எடுத்துக் கொடுத்த ஏஜென்சிக்கு காரணம் வரா…..

அவள் தான் வள்ளிமாவிடம் சொல்லி, “மாஸ்டர் கிட்ட பணம் இருந்தாலும் அவங்க வாழ்க்கை முறை வேற… சந்தியா, அவ தங்கச்சிங்க அமெரிக்க வாழ்க்கைக்கு ரொம்ப கீழ போயிடுவா வள்ளிமா”, என்று சொல்லி அவர்களின் வாழ்க்கை முறையை மாற்ற இந்த ஏற்பாடு…   

“நீ வளர்ந்துட்ட பாப்பா”, என்று ரமணன் சொல்லிக் கொண்டே பைக்கை பறக்க விட…. வராவின் முகத்திலும் திருப்தி.     

காலை உணவை முடித்து ராமநாதனும் சுந்தரவள்ளியும் கிளம்பினர்…

அதனிடையில் சந்தியா அவளின் அம்மா வீட்டினரை வரவழைத்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

“நான் குழந்தைங்களை கொண்டு போய் விட்டுட்டு வரேன்”, என்று சந்தியாவும் கூட கிளம்பினாள்.  தேஜூ அவளை விட்டு நகரவேயில்லை…

வெற்றியை பார்த்து, “வெட்டி”, என்று வேறு சொல்லிக் கொண்டு இருந்தாள். அதற்குள் தன்னை யாரு அடையாளம் காட்டிக் கொடுத்தது என்று வெற்றி தேட, “நாங்க தான் மாஸ்டர்”, என்று ஸ்ருதியும் ரோஹித்தும் வந்து நின்றனர்.

படியிறங்கும் போது ராமநாதன் வெற்றியை அருகில் அழைத்தவர்….. “என் பொண்ணைச் செடி வைக்க விடலயாமே நீ”, என்றார்.

வெற்றி பரிதாபமாக நிற்க…..

“என் பொண்ணுக்கு நிறைய செடி வெச்சுக் குடுக்கணும்”, என்று கட்டளைப் போலவே சொல்லவும்…..

“ஒன்னை பாக்கி விடாம நீ சொல்லியிருக்கியா”, என்று வெற்றியின் கண்கள் சந்தியாவைக் கேள்வி கேட்க…..

“நான் ஒன்னும் செய்ய முடியாது”, என்பது போல சந்தியா மெலிதாக தோள்களை குலுக்கி உதடு பிதுக்கவும்.

“தனியா மாட்டாமயா போவ நீ”, என்று வெற்றியின் கண்கள் அப்பட்டமாக சொல்ல….

சந்தியாவின் முகம் புன்னகையை பூச…..

“இந்த சிரிப்பை இவ்வளவு நாளா எங்க வெச்சிருந்த”, என்று சுந்தரவள்ளி கேட்கவும் சந்தியாவின் முகம் வெட்கத்தில் நன்றாக சிவந்தது.

“நீங்க ஏறுங்க வள்ளிமா”, என்று சலுகையாக சொல்லி காரின் கதவை திறந்து விட்டாள்.  

அவளின் கைகளில் இருந்த தேஜூ உடன்  வெற்றியின் அருகில் வந்து, “வெட்டி மாமாக்கு டாடா சொல்லு”, என்று சந்தியா அவனுக்கு மட்டும் கேட்குமாறு மெதுவாக சொல்லவும்…

“என்ன டீச்சரம்மா எல்லோரும் இருக்காங்கன்னு பேசறீங்களா! தனியா மாட்டாம போயிடுவீங்களா! அப்போ வெச்சிக்கிறேன்!”, என்று வெற்றி சொல்ல….

“கட்டிக்கிட்டவங்களை வெசிக்கிற ஆள் நீங்க தான்… அதான் குட்டி உங்களை வெட்டின்னு கூப்பிடறா”, என்று சொல்லி வேகமாக காரை நோக்கி நகர்ந்து விட்டாள்.

வெற்றியின் முகத்தில் விரிந்த சிரிப்பு,

பின்பு மீனாட்சியிடம் சொல்லிவிட்டு காரில் ஏறும்போது வெற்றியை ஒரு பார்வை பார்க்க……..

அந்த பார்வை, “நீ ஒரு மக்கு”, என்று சொல்லாமல் சொல்ல……

“என்ன? ஏன் இப்படி பார்க்குறா?”, என்று சில நொடி யோசித்தவன் மூளையில் அப்போது தான் பல்ப் எரிய…….

சந்தியா புடவையில் இருந்தாள். “மக்கு பையன்டா நீ வெற்றி”, அவனை அவனேத் திட்டிக் கொள்ளும்போது கார் கிளம்பியிருந்தது.

அவர்களை விட்டு உடனே திரும்பியிருந்தாள்……

அவள் வந்ததும் பின்னேயே வந்துவிட்டான்… மீனாட்சியிடம் விவரம் சொல்லிவிட்டு சந்தியா ரூமினுள் நுழையவும் வெற்றியும் உடன் வந்தான். 

“நாளைக்கு நம்மளை வரச் சொன்னாங்க, எப்போ திறப்பு விழா? என்ன ஏதுன்னு பேசறதுக்கு!”, என்றாள்.

“ம்! சரி!”,

“நாம போகலாமா!”,

“ம்! போகலாம்!”,

“நிறையப் பணம்! அவங்க பணத்தைச் சீக்கிரம் திரும்ப குடுத்துடுவோம் தானே…..”,

“அம்மா! டீச்சரம்மா!  பணப் பிரச்சனை உனக்கு வேண்டாம்னு நான் சொல்லியிருக்கேன்….. அதை நீ யோசிக்க கூடாது….. பெரிய பணம் தான்… ஆனா நான் நினைச்சா முக்கால் வாசி புரட்டிடுவேன்…. சொத்து இருக்குடா நம்மகிட்ட….. என்ன கொஞ்சம் கையை கடிக்கும்”.

“ஆனா உடனே குடுத்தா அது மரியாதையில்லை, கொஞ்ச நாள் போகட்டும்…. கொஞ்ச கொஞ்சமா குடுத்துக்கலாம்…. நம்ம கையையும் கடிக்காது”,

“சரியா……”,

“ம்! சரி!”,

“என்ன சரி?”,

“பணத்தைப் பத்தி நினைக்க மாட்டேன்”,

“வேற என்ன நினைக்கணும்”,

“வேற என்ன நினைக்கணுமா? உங்களைப் பத்தி நினைக்க மாட்டேன்”,

“ஏன்?”, என்று அவன் சிரிப்போடுக் கேட்க… அவன் எதற்கு சிரிக்கிறான் என்று புரியாமல்….

“பின்ன, நீங்க புடவை கட்டச் சொன்னீங்கன்னு நேத்து நைட் அவசரமா நாரயனைனை  வரச் சொல்லி ப்ளோஸ் அம்மா கிட்ட குடுத்து…. அம்மா நைட் உட்கார்ந்து தச்சு காலையில உடனே கொடுத்து விட்டாங்க”,

“அதுக்கு”,

“அதுக்கு என்னவா?”, என்று காண்டு ஆனவள், “அதைக் கட்டியிருக்கேன் நீங்க என்னை பார்க்கக் கூட இல்லை……”,

“புடவை கட்டி இருக்கியா நீ”, என்று ஆச்சரியமாக வெற்றி கேட்வும்,

“பின்ன”, என்று சந்தியா கேட்க கேட்க, அவளே மாற்றத்தை உணர்ந்தாள்….

வெற்றி சத்தமாக சிரித்தான்….

விரைவாக வெற்றியின் பின்புறம் போய் நின்று, “ஐயோ! எதுக்கு இவ்வளவு சத்தம்”, என்று வெற்றியின் வாயை மூடினாள்.

“முன்னாடி வா”,

“வரமாட்டேன்…..”,

“நீ புடைவையா கட்டியிருக்க”, என்று அவள் புறம் திரும்ப முற்பட…

“நீங்க ரொம்ப மோசம்”, என்று அவனின் பின்புறம் கட்டிக்கொண்டாள், புடவை தான் அவன் கையில் இருந்ததே….

வெற்றி அவளின் கைகளை விலக்கி சந்தியாவை முன் இழுக்க….. முன்புறம் வர தயங்கியவளை இழுத்து, முன்புறம் அணைத்துக் கொண்டவன்…. கையில் இருந்த புடவையை தூக்கி கட்டிலில் வீசிக் கொண்டே….

“நான் அதை கழட்டி ரொம்ப நேரம் ஆச்சு”, என்றான்…

அவன் நெஞ்சில் முகத்தை புதைத்து இருந்தவள், “இதுக்கு தான் புடவை கட்ட சொன்னீங்களா”, என்று சிணுங்க….

“பின்ன கல்யாணமாகி ஒரு வாரம் ஆச்சு….. நான் உன்பக்கத்துல வர ஆரம்பிச்சு அஞ்சு நாள் ஆச்சு, இன்னும் உன் இடுப்பை கூட காட்டாம முழுசா மாட்டிக்கிட்டா நான் என்ன பண்றது”, என்று நியாயம் பேச..   

“அதுக்குன்னு இப்படியா….”,

“நீ என்கிட்ட பேச ஆரம்பிச்சப்போவே உன் புடவையை… ஹா  ஹா…. உனக்குத் தெரியவேயில்லை… நீ என்கூட அவ்வளவு ஆர்வமா பேசிட்டு இருந்த”,

“அதுவும் அந்த புடவை பின்னு வேற வரலை… நான் ரெண்டு மூணு தடவை முயற்சி செஞ்சு கழட்டினேன், உனக்கு அது கூடத் தெரியலை”, என்று மீண்டும் சத்தமாக சிரிக்க…

“ஐயோ! அம்மா வெளில இருக்காங்க!”, என்று மீண்டும் வாயை மூடினாள். 

அதே சமயம் காதலாக வெற்றியை பார்த்து அவன் நெஞ்சினில் முகம் புதைத்துக் கொண்டாள்.  

“என்ன டீச்சரம்மா, புடவையை மெதுவா கழட்டுறேன், அது கூட தெரியாம என்னை சைட் அடிச்சிட்டு பேசிகிட்டு இருக்கீங்க”,  என்று வெற்றி சொல்ல…… 

“ம்ம்ம்! மிரசலாயிட்டேன்!”, என்று வெட்கமாக முகத்தை நெஞ்சினில் அழுத்தினாள்.

“நிஜம்மா, என்னால நம்ப முடியலை….. நீ இவ்வளவு என்னை விரும்பறது… என் கை பட்டா உருகி கரையிற…..”, என்று அணைப்பை இறுக்கினான்.

“ஆனா இந்த மாதிரி ஒரு காதல் எனக்கு உன் மேல இருக்கான்னு தெரியலை… உண்மையா சொல்றேன்…. எனக்கு இன்னும் தெரியலை….. அதுவும் உன்னை பார்க்குற தோழின்ற பார்வையை மாத்தணும்னு நினைச்சு மாத்தினேன்…. அப்புறம் அது பிக் அப் ஆகிடுச்சு வேற விஷயம்…”, 

“அது எனக்குப் பிரச்சனையில்லை, எனக்கு உங்களை பிடிச்சிருக்கு…..எனக்கே அது நான் அது இங்க இருந்து போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது…”, 

“ஆனா ஒரு விஷயம், எனக்கு நிச்சயம். நீங்க என்னை ரொம்ப அக்கறையா பார்த்துக்கிட்டீங்க… உங்க கூட இருக்கும் போது எந்த கவலையும் எனக்கு இருந்ததில்லை, நீங்க பார்த்துக்குவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருந்தது”,

“எனக்கு இருந்த ஒரே கவலை, நீங்க இந்த பிரச்னையில இருந்து வெளில வரணும்னு தான்”, என்று சொன்னவள், “புடவையை கட்டிக்கிறேன்”, என்று கொஞ்சல் மொழி பேச…

புடவையை எடுத்து அவள் கையில் கொடுத்தான் வெற்றி சிரிப்புடன்… அதை வேகமாக கட்டவும்.. அவளை ஆதூரமாக அணைத்துக் கொண்டான்.   

“பரவாயில்லை, புடவையோட விட்டீங்களே”, என்று சலுகையாக குறைபட,

“உன்னோட மதிப்பும் மரியாதையும், உன்னைவிட எனக்கு ரொம்ப முக்கியம், அது என்கிட்டனாலும்”, என்று வெற்றி ஒரு புன்னகையுடன்  அவள் முகம் பார்த்து சொல்ல….  

“இதுக்கு தான் உங்க மேல எனக்கு அவ்வளவு காதல் வந்துடுச்சு”, என்று சொன்னவள் அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்து கொண்டாள்.

இருவருமே அந்த நொடிகளை பூரணமாக அனுபவித்தனர். அவர்களின் ஏகாந்த வேலை….. மௌனங்கள் வார்த்தை…..  

மெதுவாக முகம் நிமிர்த்தி……   

“நிஜமா, உங்க கூட இருக்குற நிமிஷங்கல்ல நான் என்னை மறந்துடறேன்…. நேத்து இருந்து அதே ஃபீல் தான்….”, அவள் சொல்ல சொல்ல இன்னும் இறுக்கிக் கொண்டான்.

“தேங்க்ஸ், என் மேல கோபம் இருந்தாலும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு, இல்லைனா நான் வாழ்க்கைல நிறைய இழந்திருப்பேன்…”,

“வேற யாரோடயும் இந்த மாதிரியான ஒரு வாழ்க்கையை என்னால கற்பனை செஞ்சுக் கூடப் பார்க்க முடியாது.. தேங்யூ தேங்யூ ஸோ மச்..”, 

“ப்ச், என்ன நீ……. நான் தான் உனக்கு தேங்க்ஸ்! இப்படி ஒரு காதலை என் மேல காட்றதுக்கு. இவ்வளவு காதலிக்கப்படறது எனக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் குடுக்குது தெரியுமா….. அதுவும் நீ ரொம்ப அழகு…. படிச்சிருக்க, இந்த மாதிரி எதுவும் என்கிட்டே இல்லை”,

“நீ போய் எனக்கு தேங்க்ஸ் சொன்னா, அதை விட சிரிப்பான விஷயம் கிடையாது….. நீ கிடைச்சதுக்கு நான் தான் ரொம்ப, ரொம்ப, ரொம்ப அதிர்ஷ்டஷாலி…. அதுவும் நீ காதலை எல்லார் கிட்டயும்  காட்டியிருக்க….. இது எனக்கு நிஜம்மா பெருமையான விஷயம்…”,

“உங்களை ஏன் நீங்க குறைச்சு மதிப்பு போடறீங்க…..”,

“குறைச்சுன்னு சொல்ல முடியாது. ஆனா நீ கண்டிப்பா எனக்கு அதிகம் தான்….”, 

 “இவ்வளவு அழகான ஒரு வாழ்க்கைத் துணையை நான் கனவுல கூட நினைச்சது இல்லை….. அது மாதிரி உன்னோட தைரியம்,உழைப்பு இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்…..”,

“உன்னோட உழைப்பு… எப்பவும் அடுத்தவங்களுக்காகப் பார்க்கறது.. சுயநலமா எதுவும் யோசிக்காதது, எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் சந்தியா. அது எல்லார் கிட்டயும் வராது”,

“உன் தங்கச்சிங்களோட பேசினியா…”,

“ம், பேசினேன்”

மேலே பேச வந்தவனை தடை செய்து, “மாத்தி மாத்தி நம்மளே நம்மை புகழ்ந்துக்குவோமா….. என்ன இது?”, என்றாள்….

“நம்மளை நம்மளே எங்க புகழ்ந்தோம். நான் உன்னை புகழ்ந்தேன், நீ என்னை புகழ்ந்த…”,

“நானும் நீங்களும் வேற வேறையா என்ன…”,

ஒரு நிமிடம் உறைந்து நின்றவன்… உடனேயே சுதாரித்து, “ரொம்ப அழகா பேசற நீ, எனக்கு இந்த மாதிரி எதுவும் வராது…..”,

“அய்யே, உங்களுக்கா பேச வராது….. ஓகே நம்பிட்டேன், எனக்கு இந்த வெற்றியைத் தான் பிடிச்சது…… என்னன்னு சொல்லத் தெரியலை…… நீங்க இப்படி இருந்தாலே போதும்…..”, என்று உண்மையாகச் சொல்ல…..

“வெற்றி,  சாப்பிட வாங்க, மணி மூணு ஆகப் போகுது”, என்று மீனாட்சி குரல் கொடுக்க….

“தோம்மா”, என்ற வெற்றி அப்படியே தான் நின்று கொண்டிருந்தான்.

“போகலாம்”, என்று சந்தியா சொல்ல……

“நிஜமா நான் கனவுல கூட இப்படி நினைச்சது இல்லை”, என்று சொல்ல……

“அச்சோ, அப்போ நினைக்கலைன்னா என்ன? இப்போ நினைங்க…”, என்று சொல்லி, அவள் சற்று ப்ரெஷ் ஆகி வர, அப்போதும்  வெற்றி அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

“வாங்க போகலாம், பசிக்குது..”,  

“இரு நான் கனவு கண்டுட்டு இருக்கேன்”,

“என்ன கனவு…..”, என்றாள் ஆர்வமாக…. 

“நம்ம கார் ஷோ ரூம்க்கு நான் கார்ல போய் இறங்கறேன்….. உள்ள போனா அங்க இருக்குறவங்க, சார் நீங்க வந்தா மேடம் உங்களை உள்ள வரச் சொன்னாங்கன்னு சொல்றாங்க…..”,

“நான் வேகமா உள்ள போறேன்… அங்க எம் டீ ரூம்குள்ள எம் டீ சேர்ல நீ இருக்க……”,

“அ, அப்புறம்”, என்று சந்தியா உச்சுக் கொட்ட……

“ப்ச், நான் சொல்றதை கண்ணுக்குள்ள கொண்டு வா”, என்று சந்தியாவை கை வளைவில் நிறுத்தி அதட்டியவன்… 

“கம்ப்யூட்டர் பார்த்துட்டு இருக்க….. நான் வந்தவுடனே, வீட்டுக்கு போகலாம்னு எந்திரிக்கிற…. நான் பார்த்து மெதுவா எந்திரி, வயிறு இடிச்சிக்க போறேன்னு சொல்றேன்……”,

“இப்போ தான் உங்க பையன் என் வயதுக்குள்ள இடிச்சி முடிசான்னு சொல்ற….”,

கேட்க கேட்க சந்தியாவின் முகம் மகிழ்ச்சியை பூச…..

“அப்புறம் நான் உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டு வரேன்… கேட் வாட்ச்மேன் தொறக்க…… உள்ள நான் கார் கொண்டு போனவுடனே இறங்கி, நீ அங்க இருக்குற செடிகளுக்கு நடுவுல சேர்ல உட்கார்ந்து பேசிட்டு இருக்குற, எங்கம்மாகும் உங்கம்மாக்கும் பக்கத்துல போய் நின்னு பேசற…..”,  என்று வெற்றி பேசிக் கொண்டே போக….

சந்தியா அவன் கனவுகளை கண் முன் கொண்டு வந்து கொண்டிருந்தாள்…

“டேய், வெற்றி!”, என்ற மீனாட்சியின் குரல் மறுபடியும் ஓங்கி ஒலிக்க,

“மா, வர்றோம்!”, என்று இந்த முறை சந்தியா குரல் கொடுத்து வெற்றியை, “வாங்க”, என்று கை பிடித்து இழுத்துக் கொண்டு போனாள்.

கை பிடித்து இழுத்தவளை, “இரு”, என்று நிறுத்தினான்.

“இப்போ என்ன?”, என்று சந்தியா கேட்க,

“என்னை வெட்டின்னா சொன்ன! உன்னை….”, என்று அவளின் இடுப்பை வளைத்து இழுத்து பிடிக்க….

“ஐயோ, தெரியாம சொல்லிட்டேன் கே, கே”, என்று சொல்லி, “ஐயோ கே கே வேற சொல்லிட்டனா”, என்று உதட்டைக் கடிக்க……

அவளின் கடிப்பட்ட உதடுகளை, விரல் கொண்டு வெற்றி மெதுவாக விடிவிக்கவும், அவன் ஸ்பரிசத்தில் மயங்க ஆரம்பித்தாள்….

“இப்போ என்ன கே கே சொல்லு”, என்று வெற்றி கேட்கவும்,

“ம், களவாடிய கள்வன்”, என்று ஒரு மோன நிலையில் சந்தியா உச்சரிக்க,

சிறிது நேரம் அவளின் உதடுகளை களவாடினான்……

பிறகு, “எதைக்  களவாடுனேன்”, என்று கிசுகிசுப்பாக வெற்றி கேள்வி வேறு கேட்க,

“என்னை”, என்றாள் மயக்கும் குரலில் சந்தியா.  

“உன்னையா, எப்போ?”,

“ரொம்ப முன்னாடி, எனக்கே தெரியாம”,  

“அப்போ நேத்து நைட்”, என்று வெற்றி கண் சிமிட்டிக் கேட்கவும்,

“நேத்து நைட்டா, என்ன நடந்துச்சு தெரியலையே”,

“தெரியலையா! என்ன இது?”, என்று வெற்றி போலியாக ஆச்சர்யப்பட,

“ஒரு வேளை சரியா தெரியப் படுத்தலையோ என்னமோ…”, என்றாள் இப்போதும் மயங்கிய குரலில்.   

“பொய்”, என்று சந்தியாவின் வாய் பொத்தினான்.   

விஷமத்தோடு சிரித்தாள்,

“உன்னை…..  என்னை களவாடிய கள்வன்னா சொல்றே.. இரு எல்லாத்தையும் எடுத்துக்கறேன்”, என்று சொல்லி, சந்தியா சொன்ன வார்த்தைகளை அச்சு பிசகாமல் நிறைவேற்ற ஆரம்பித்தான் வெற்றிவேல். 

             

                                          (  நிறைவுற்றது )

 

     

 

         

 

Advertisement