Advertisement

நிலவு – 22

                  திடீரென அப்படி சொல்லவும் யோசனையுடன் பார்த்தவள் அவனை முறைக்க,

“பேசவுமா கூடாது?…” என கள்ளப்புன்னகையுடன் கண்களை சிமிட்டி கேட்க சட்டென வெட்கம் பொங்க தலை கவிழ்ந்தவள்,

“ஹ்ம்ம் பேசலாமே. அதுக்கு முன்ன இந்த வாங்க போங்க வெண்ணிலா இதெல்லாம் விடுங்க…” என்றவளை இழுத்து தன் கால்களுக்குள் நிறுத்தி நகரவிடாது அணை போட்டவன்  அவளின் தோள்களில் தனது கைகளால் மாலையிட்டு அவளின் முகத்திற்கு நேராய் குனிந்தான்.

என்ன செய்ய போகிறானோ என்கிற படபடப்பிலும், ஆவலிலும் அவனின் விழிகளை எதிர்கொண்டவள் மனம் மயங்க அவளறியாமல் எழுந்த எதிர்பார்ப்புடன் கண்களை மூடிக்கொண்டாள். 

அவனின் சூடான மூச்சுக்காற்று வெண்மதியின் நெற்றியில் ஆரம்பித்து கண்கள், கன்னம், கழுத்து என ஊர்வலம் வர லேசாய் மீசையும் வேறு உராய்ந்ததில் நிலைகுலைந்து போனாள் பெண்.

“முரளி…” என கிசுகிசுப்பான குரலில் அவனை அழைத்தவள் தன் மேல் படர்ந்திருந்த அவனின் கைகளை இறுக்கமாய் பற்றினாள்.

“வெண்ணிலா…” அவனும் அவளை போன்றே ஹஸ்கியான குரலில் அவளை மெதுவாய் சொல்ல அதுவே வெண்மதியை முற்றிலும் கிறங்க செய்ய போதுமானதாக இருந்தது.

“ஹ்ம்ம்…” என்ற முணுமுணுப்பு மட்டுமே அவளிடத்தில்.

“நானும் எத்தனை தடவை தான் சொல்றது வெண்ணிலான்னு சொல்லாம இருக்க முடியாதுன்னு…” என புன்னகையுடன் அவளின் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டே சொல்ல சட்டென விழி திறந்தவள் அவனை சுட்டெரிக்கும் பார்வை பார்க்க,

“நானும் பலதடைவை சொல்லிட்டேன். எனக்கு வரலைன்னு. நீங்க திரும்ப திருபா சொன்னா எப்படி?…” என்று சிரிப்புடன் கேட்க,

“உங்க ங்க கட்டிட்டே அழுங்க. இப்ப என்னை விடுங்க…” என அவனின் கைகளை விட்டு விலக பார்க்க அவளால் நகரமுடியாதபடி இன்னமும் இருக்கு அணைத்தார் போன்று நிறுத்தினான்.

“ப்ச், இதுக்கொண்ணும் குறைச்சலில்லை. விடுங்கன்னு சொல்றேன்ல…” என சொல்ல சொல்ல அவனின் அணைப்பு இறுக முயற்சியை கைவிட்டவளாக அவனின் நெஞ்சோடு சாய்ந்துகொண்டாள்.

அவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன் குறும்பாய் பார்த்து சிரித்தபடி கன்னம் பற்றி,

“என்ன எக்ஸ்பெக்ட் பண்ணுனீங்க வெண்ணிலா?…” எனவும் வெண்மதிக்கு புரிந்துபோனது.

“ராஸ்கல்…” என முணுமுணுத்தவள் முகம் திருப்ப பார்க்க அதை கேட்டவன் அதற்கு விட்டால் தானே?

“என்ன சொன்னீங்க?…” என்றான் மீண்டுமாய்.

“சொன்னாங்க உப்பில்லை ஊறுகாய் இல்லைன்னு. முதல்ல காலை எடுங்க. கிட்சனை விட்டு போங்க…”

“ம்ஹூம் நீங்க முதல்ல சொல்லுங்க. நான் போறேன்…” என்றான் பிடிவாதமாய் அவளின் மூக்கை பிடித்து ஆட்டியபடி.

“நானும் சொல்லமாட்டேன். எவ்வளோ நேரம் இங்கயே உட்கார்ந்திருக்கீங்கன்னு நானும் பார்க்கறேன்…” என்றவள் மீண்டும் அவனின் நெஞ்சில் சாய்ந்து முகம் புதைத்துக்கொள்ள வாய்விட்டு சிரித்தபடி அணைத்தவன்,

“பேசனும்னு சொன்னேன். அதையாவது என்னன்னு கேட்க மாட்டீங்களா?…” என,

“சொல்லும் போது கேட்டுக்கலாம்னு தான்…”

வெண்மதிக்கே தன் செயல் புதிதாய் தெரிய மனம் அதனை வெகுவாய் விரும்புவதை உணர்ந்தவள் வேறெந்த குழப்பத்தையும் தூக்கி சுமக்காமல் அப்போதைய நெருக்கத்தை ஆழ்ந்து அனுபவித்தாள்.

“வெண்ணிலா சைலன்ட் ஆகிட்டீங்க?…”

“நீங்க தான் சொல்றேன்னு சொல்லி இன்னும் சொல்லலை…” என்றாள் அவனுடன் இழைந்தபடி.

“அதுக்கு முன்னால இன்னொன்னு கேட்கனும். தெரிஞ்சுக்கனும் எனக்கு…”

“தெரியலாமே…” சிரிப்புனூடே அவளும் சொல்ல அதில் முரளியின் புன்னகை இன்னுமே விரிய,

“வெண்ணிலாவுக்கு முரளி ஹக் கம்பர்டபிளா இருக்கா?…” எனாவளின் தலையை ஒரு கையால் வருட,

“வாட்?…” என்று நிமிர்ந்தவள் அவனின் முகம் கண்டு கோபத்துடன்,

“போயா…” என கத்திவிட்டு பலம் கொண்டமட்டும் அவனிடமிருந்து விடுபட்டு வேகமாய் அங்கிருந்து அகன்றுவிட அவளின் கோபமே அவனுக்கான பதிலை தந்தது.

“இவன் என்னதான் நினைச்சிட்டு இருக்கான்? என்னவோ நான் இவனோட டச் பிடிக்காத மாதிரி அதனால தள்ளி இருக்கறதா நினைக்கறானா? அப்பா அப்படியே இருக்கட்டும்…” என பெட்ரூமில் அங்குமிங்கும் நடந்தபடி முரளியை திட்டி தீர்த்துக்கொண்டிருந்தாள்.

மெதுவாய் தனக்கும் அவளுக்குமான உணவை எடுத்துக்கொண்டு இன்னொரு கையில் பாலுடன் உள்ளே நுழைய திரும்பி பார்த்தவள் அவன் வந்த விதத்தை பார்த்து வாய்விட்டு சிரித்துவிட்டாள்.

“என்னமோ பர்ஸ்ட்நைட் ரூம்க்கு வராப்ல வரீங்க?…” என கேட்க கொண்டுவந்ததை ட்ரெஸ்ஸிங் டேபிளின் மேல் வைத்தவன் நிமிர்ந்து இடுப்பில் கைவைத்து அவளை முறைக்க,

“வந்தது அப்படித்தான் இருந்துச்சு…” என்றால் அவனின் முகபாவனையில் மெதுவாய்.

ஒரு கையில் ப்ரெட் ஆம்லேட் ட்ரேயும், மறு கையில் ப்ளாஸ்க்கில் பால், இரண்டு க்ளாஸ், கொஞ்சம் சர்க்கரை என இன்னொரு ட்ரேயையும் தூக்கி கீழே விழுந்துவிடாமல் மெதுவாய் வந்து வைக்க இவளானால் எடுத்து உதவாமல் கேலி செய்தாள்.

“நிஜமாவே கோவம் தானா?…” என அருகில் போனவள் திரும்பவும் அவன் சொல்லியது ஞாபகம் வந்து கோபமாய் திரும்ப,

“என்ன பிரச்சனை உங்களுக்கு?…” என்றான் அழுத்தமாய்.

“இதுதான் இதுதான் பிரச்சனை. உங்களோட இந்த மரியாதை என்னை உங்க மனைவியா உணரவிடமாட்டேங்குது…” என்றாள் அவனைவிட அழுத்தமாய்.

“அப்போ இந்த மரியாதை தன்மை இல்லைனா உடனே என்னோட மனைவியா இப்பவே இந்த நிமிஷமே முழுமையா மாறிடுவீங்கன்னு சொல்லுங்க….” என்றான் கேலியாய்.

“நான் எப்ப அப்படி சொன்னேன்?…” என படக்கென்று சொல்ல,

“பின்ன நீங்க சொன்னதுக்கு மீனிங் அது தானே?…”

“நான் சொல்ல வந்தது வேற. அதாவது வந்து…”

“வந்து எங்க வந்து?…” என இன்னும் சீண்ட பாவமாய் பார்த்தாள் அவனை.

“நான் கேட்டது எதுக்குன்னு தெரியாம நீங்க கோச்சுக்கிட்டு இங்க வந்துட்டீங்க. நின்னு நிதானமா என்னன்னே யோசிக்க மாட்டீங்களா? என்னை நம்பவே மாட்டீங்களா வெண்மதி?…”

“முரளி…” என்றவள் கண்கள் கலங்க,

“இந்த கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் அடுத்த நிமிஷம் நான் இங்க இருக்க மாட்டேன் வெண்மதி…” என்றான் இறுக்கமான குரலில். சட்டென வழிய இருந்த கண்ணீரை உள்ளிளுத்தவள் அவனின் பேச்சு செல்லும் திசையில் மனம் பதற நின்றாள்.

“எதுநடக்க கூடாதென தள்ளி தள்ளி குற்ற உணர்வோடு இருந்தாளோ இதோ சொல்லி காண்பிக்க போகிறான் இவன். உயிரோடு வதைக்க போகிறது என்னை” என நினைத்து சிலை போல நின்றாள்.

“அன்னைக்கு மட்டும் ஒரு நிமிஷம் என்ன நடந்ததுன்னு என்கிட்டே நீங்க சொல்லியிருந்தா இந்த மாதிரி ஒரு சூழ்நிலை நமக்கு வந்திருக்கவே வந்திருக்காது. அப்பாவும் என்னை நம்பலை. ஒருத்தன் போன் பண்ணி மிரட்டுனா உடனே அவனை நம்பிட்டு கல்யாணத்தை நிறுத்தறீங்க…”

“முரளி உங்களுக்கு எப்படி?…” வெண்மதி அதிர்ச்சியுடன் பார்க்க,

“விபீஷே கால் பண்ணினான் எங்கேஜ்மென்ட் நின்ன பத்து நாள்ல. அவ்வளோ கேலி பண்ணி பேசறான் என்ன பொண்ணு பார்த்திருக்கன்னு, ஒரு மிரட்டலுக்கே குடும்பம் பயந்துடுச்சுன்னு. அந்த நிமிஷம் அவன் சொன்னது உண்மை தானே? என்னை நம்பலையே…”

“சத்தியமா அப்படி இல்லை முரளி. இல்லவே இல்லை. அன்னைக்கு நான் இருந்த சூழ்நிலை…” என்றவள் நடந்ததை சொல்ல கேட்டவனின் கெஞ்சம் அத்தனை வலித்தது.

“நான் இல்லையா வெண்ணிலா உங்களுக்கு?…” என்றான் அவளின் கன்னம் தாங்கி.

“எனக்கு அந்த நிமிஷம் நீங்க தான் கண்ணுக்கு தெரிஞ்சீங்க. ஆனா அதை விட என்னை வளர்த்தவன்களா இருந்தாலும் இப்போ வரைக்கும் என்னை அதை உணரவிட்டதே இல்லை. அவங்களும் எனக்கு முக்கியமா பட்டுச்சு. மங்களம் பெரியம்மா சொன்ன கடன்காரி என்னை உறுத்துச்சு…”

“என்னால வேற என்ன பண்ணிருக்க முடியும் சொல்லுங்க? உங்க முன்னாடியே இன்னொருத்தனை விரும்பறேன்னு சொன்னேன். எனக்கு எப்படி இருந்திருக்கும்?…” என அவனை கட்டிக்கொண்டு விசும்பியபடி பேச அவளின் தோளை ஆறுதலாய் தட்டிகொடுத்தான்.

“இப்போ இப்போ கூட இத்தனை மாசம் கழிச்சு திரும்ப உங்களை மீட் பண்ணிட்டு இந்த மேரேஜ் வேண்டாம்னு நான் பிடிவாதமா இருந்தது கூட  இன்னைக்கு வரைக்கும் கில்டியா பீல் பன்றதால தான். அது புரியாம நீங்க எனக்கு கம்பர்டபிளா இல்லையான்னு கேட்கறீங்க…”

“நான் அந்த அர்த்தத்துல கேட்கலை…” முரளி மீண்டும் சொல்ல,

“இதே தான், கல்யாணத்தை நிறுத்தின காரணம் எனக்கு வேற. நீங்க புரிஞ்சது வேற. நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்கு. நாம பாக்கறது மட்டும் தான் நமக்கு தெரியும். மறுபக்கம் இருக்கறது நியாயமா இல்லையான்னு யாருமே பார்க்கிறதில்லை. தன் இஷ்டத்துக்கு அதுக்கான வர்ணத்தை பூசிக்கறாங்க…”

“வெண்ணிலா போதும் நடந்ததை விடுங்க. அதை இனிமேலும் பேசி நம்மை வருத்திக்க வேண்டாம்…”

“ஆரம்பிச்சிட்டோம்ல. முடிச்சிடுவோம். நீங்க சொன்னீங்களே விபீஷ் அவன் என்னை மீட் பண்ணினான். இந்த மேரேஜ் பண்ணிக்க கூடாதுன்னு மிரட்டினான். அதோட சில கிறுக்குத்தனமா பேச்செல்லாம் பேசினான். அப்பவே சொல்லலாம்னு தான் இருந்தேன்…”

“உங்கள்ட்ட இதை சொல்லாம இருந்த காரணம் கல்யாண நேரத்துல எதுக்கு வீண் பிரச்சனை, சொல்லி உங்களுக்கு கோபம் வந்து அதனால கல்யாணம் நின்னுடுமொன்ற பயத்துல தான் சொல்லலை…” அதுவரை கோபமாய் பேசிக்கொண்டிருந்தவள் கடைச்யில் உள்ளே சென்றுவிட்ட குரலில் சொல்ல முரளிக்கு சிரிப்பு தான் வந்தது.

“விபீஷ் என்கிட்டயே உளற தான் செஞ்சாங்க. புரியாம பேசினாங்க…”

“அவனுக்கென்ன மரியாதை?…” இவள் பொரிய அதற்கும் அட்டகாசமான சிரிப்பொன்றை கொடுத்தவன்,

“அவங்க என் மேல உள்ள கோபத்துல என்ன செய்யன்னு தெரியாம பண்ணிட்டாங்க. இப்ப அவங்களுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு…”

“பாவம் அந்த பொண்ணு. அவன் ஒரு லூஸு…” வெண்மதி அதற்கும் பேச,

“எனக்கும் இதை உங்கட்ட பேசனும்னு தான் தோணுச்சு. நானுமே நம்ம கல்யாணத்தை நினைச்சு தான் விபீஷ் பத்தி பேச்சை எடுக்கலை. ஏற்கனவே அவங்க பண்ணின வேலையால தான் நம்ம மேரேஜ் நின்னு போச்சு. திரும்பவும் அதை நான் விரும்பலை…”

“எல்லாம் செஞ்சுட்டு ஏன் அப்படி கேட்டீங்க? எனக்கு ஹர்ட் ஆகிடுச்சு…”

“எங்க?…” என்றான் குறும்பாய்.

“சொன்னா மட்டும்…” என அவனை போலவே தலைசாய்த்து கண்களை சிமிட்டி வெண்மதி கேட்க அவளின் முகம் தெளிந்திருந்தது.

“சொல்லித்தான் பாருங்களேன்…” என்றவனின் சிரிப்பை விழிகளில் நிரப்பியபடி அவனையே பார்த்திருந்தவள்,

“சொல்ல எக்கச்சக்கமா இருக்கு முரளி. அதுக்கு இந்த உலகத்துல உள்ள வார்த்தைகளும் பத்தாது. இந்த ஜென்மமும் பத்தாது…” என்றவளை காதலுடன் அணைத்தவன் முகம் முழுவதையும் முத்தங்களால் நிறைத்தான்.

“பத்தாது முரளி. எதுவுமே பத்தாது…” என்றவளின் பிதற்றலில் பித்தானவன் போல முத்தங்களின் எண்ணிக்கை கூட கூட தான் சொல்லவந்ததை மறந்து அவளுள் முழுவதுமாய் தொலைய துடித்தான்.

மறுப்பதற்கு எதுவுமில்லை, மொத்தமாய் அன்றைய நாளை வாழ்ந்துவிட இருவருமே தவிக்க முரளியின் செல்போன் சிணுங்கியது. முதலில் கவனியாதவன் அதன் பின் கவனம் திரும்ப ஒருவித சலிப்புடன் அவளிடமிருந்து விலகினான்.

சுகன்யா தான் அழைத்திருந்தது. அப்பொழுது தான் அவரிடம் பேசியிருந்த விஷயமே ஞாபகம் வர வெண்மதியை திரும்பி பார்த்துக்கொண்டே அட்டென் செய்து காதில் வைக்க,

“கால் பன்றேன்னு சொல்லி எவ்வளவு நேரம் ஆச்சு முரளி? உன் அப்பா வேற இதுக்கு நம்மளை காக்க வைக்கிறானேன்னு திட்டுறாரு. என்னப்பா?…” என கேட்க,

“ம்மா நான் இன்னும் கேட்கவே இல்லை…” என சொல்லிக்கொண்டே வெண்மதி அப்பக்கத்தில் அமர,

“என்ன இன்னும் கேட்கலையா? இப்ப கிளம்பினா தானே நேரத்துக்கு இருட்டறதுக்குள்ள இங்க வந்து சேர முடியும். இல்லைனா நாளைக்கு வரீங்களா?…” என,

“இல்லைம்மா இன்னைக்கே கிளம்பிடலாம்…”

“அதெப்படி இன்னும் வெண்மதிட்ட கேட்காம?…”

“ம்மா, சொல்றேன்ல. கிளம்புவோம். கிளம்புவோம்னா கிளம்புவோம்…” என்றான் சிறு வெட்க சிரிப்புடன். முரளியை அறியாதவரா தாய். அவருக்கும் சந்தோஷமே. வேறெதுவும் பேசாமல்,

“சரி சரி, கிளம்பறப்ப கால் பண்ணிடு. பார்த்து வாங்க…” என்று வைத்துவிட,

“எங்க கிளம்பனும்?…” என்றால் வெண்மதி.

“ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணுவோம் வெண்ணிலா. எஸ்டேட் போறோம். உங்களுக்கு லீவ் இருக்கே. அதனால கிளம்புவோம். அடுத்து நீங்க ஆபீஸ் போக ஆரம்பிச்சுட்டா எப்போ லீவ் இருக்குமோ?…” என,

“நேத்து நைட் இதைத்தான் கேட்க வந்தீங்களா?…” என கேட்டதற்கு அவனும் தலையசைத்து,

“இப்பவே கிளம்பினா தான் சரியா இருக்கும். பேக்கிங் ஆரம்பிப்போம். லஞ்ச் போற வழில பார்த்துப்போம்…”

“உங்களுக்கு ஆபீஸ்…”

“அதை ராம் பார்த்துப்பான்…” என்றவன் படபடவென கிளம்ப அவன் சொல்ல சொல்ல அனைத்தையும் எடுத்துவைத்தாள்.

கிளம்பும் முன்னால் பெற்றோருக்கு அழைத்து சொல்லிவிட்டு ஈஸ்வரிக்கு அழைத்தவள் விவரம் சொல்ல,

“இனியாச்சும் புத்தியோட பொழச்சுக்கோ. முரளி அண்ணா பாவம். கில்டியா இருக்குன்னு தள்ளிபோட்டுட்டே இருந்தா என்னைக்கு வாழ ஆரம்பிக்க?…” என அறிவுரையை மழையாய் பொழிய,

“போதும் ஈஸ், இப்படி பேசிட்டே இருந்தா நாங்க எங்க வாழ?…” என தோழியை அதட்ட,

“ஹேய் மதிப்புள்ள நிஜமாவாடி?…” ஈஸ்வரிக்கு சந்தோஷம் தாளவில்லை.

“ஹ்ம்ம் நிறைய யோசிச்சுட்டேன் ஈஸ். இன்னைக்கு நிறைய பேசிட்டோம். தெளிவாகிட்டோம். இனி பிரச்சனை வந்தா கூட அதை பேஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்…” என சொல்லியவளை கட்டிக்கொள்ள வேண்டும் போல இருந்தது ஈஸ்வரிக்கு.

“சந்தோஷமா போய்ட்டு வா மதி…” என்றாள் உள்ளார்ந்த மகிழ்வுடன். பேசிமுடித்துவிட்டு வர பெட்டிகளை காரில் ஏற்றியிருந்தான் முரளி.

இனிமையாய் ஒரு பயணம். இருவருக்கும் மட்டுமாய். நெஞ்சம் நிறைய காதலுடன் இருவரும் அதனை அனுபவித்தனர். அதிலும் முரளியின் உல்லாச மனநிலை எப்போதுமே வெண்மதியை சீண்டுபவன் இன்று கணவன் என்னும் உரிமையில் வேறு வடிவம் பெற்றிருக்க பொறுக்கமாட்டாமல் வெண்மதியே,

“இன்னைக்கு நீங்க சரியே இல்லை…” என திண்டாட்டத்துடன் சொல்ல,

“எவ்வளோ நாள் தான் சரியாவே இருக்கறது? அதான் இனி சரியில்லாம இருந்து பார்ப்போமேன்னு தான்…” என புன்னகையுடன் கூறி அவளை வாய் திறக்கவிடாது சொல்லி வெண்மதியை அவனின் பேச்சில் மயங்க செய்துகொண்டிருந்தான்.

“சிரிச்சவாயன். ஆவுனா சிரிச்சே மயக்கறது…” மயங்கிய மனதை வேறுபுறம் திருப்ப,

“இன்னும் ஏதாவது தெரிஞ்சுக்கனுமா மேடம்?…” ஹஸ்கி வாய்ஸில் மொழிய,

“இவன் பேசாம இருந்தாலே தேவலை…” என நினைத்தவள் இல்லை என்று அவனை பாராமலே தலையசைத்து திரும்பிக்கொள்ள வெண்மதியின் கையை பிடித்தவன்,

“ஆனா எனக்கு தெரிஞ்சுக்கனும் உங்களை. மொத்தமா. ஆனா எப்போ?…”

ஆசையில் குழைத்த ஊடுருவும் குரல் மின்சாரம் பாய்ச்ச சிவந்த முகத்தை முரளி கண்டுவிடாமல் அவனை நிமிர்ந்தும் பாராமல் கையெடுத்து கும்பிட்டாள் வெண்மதி.  

——————————————————————–

திருமணம் ஆகி ஒரு மாதம் நெருங்க இருக்கிறது விபீஷிற்கும் சீமாவிற்கும். ஆனாலும் தாமரை இல்லை தண்ணீர் போல இருவருமே ஒட்டாத பாதையில் தான் இருந்தனர்.

வசுந்தராவிற்கு அதை கண்டு வருத்தமே என்றாலும் திருமணமாவது முடிந்துவிட்டதே என்கிற ஒரு ஆறுதல். அதிலும் சீமா வந்த பின்னர் அவருக்கு யானை பலம் வந்ததை போல ஒரு உணர்வு.

சீமா வசுந்தராவும், நாகராஜனும் மட்டுமே அந்த வீட்டில் என்பதை போல நடந்துகொள்ள அவளின் ஒதுக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் விபீஷின் மனதில் உரிமை உணர்வை தட்டி எழுப்ப,

“தாலி கட்டிட்டு வந்துட்டு இப்ப மூஞ்சியை திருப்பிட்டு போனா என்ன அர்த்தம்? புருஷன்னு ஒருத்தன் உனக்கு நினைப்பே இல்லை அப்படித்தானே?…” என்று அவளிடம் தனிமையில் இரைந்தான்.

தோல்வி தந்த கோபமும், இயலாமையும் விபீஷை பலமாய் தாக்கி இருக்க முரளியை எந்த வகையிலும் தொட முடியாமல் போக வீட்டில் வேறு இந்த கண்டுகொள்ளா தன்மை அவனை வெகுவாய் வாட்டியது.

அவன் கேட்டதற்கும் பதில் சொல்லாமல் பிடிவாதமாய் வாயை திறக்காமல் சீமா விலக,

“என்ன கொழுப்பு உனக்கு? என்னை தெரியலையா இல்லை நான் புருஷன்னே தெரியலையா? நான் நினைச்சா இப்பவே நான் யாருன்னு காண்பிக்க முடியும் தெரியுமா?..” என்று மிரட்ட வேறு செய்ய,

“நீங்க மனைவியா என்னை நடத்தினா நான் புருஷனா உங்களை பாக்க போறேன். நீங்க தான் எனக்கு அந்த உரிமையை தரவே இல்லையே. நான் மட்டும் ஏன் கேட்டு வாங்கனும்?…”

“உனக்கு நிஜமாவே திமிர் தான்…” விபீஷ் சொல்ல,

“ஆமா, அதுக்கு இப்போ என்ன? உங்ககிட்ட கல்யான்ம்ஸ் செஞ்சுக்க சொல்லி உங்க பின்னால சுத்தின மாதிரி இப்போ பொண்டாட்டியா கூட வாழனும்னு சுத்துவேன்னு நினைச்சீங்களா? அதுக்கு வேற ஆளை பாருங்க…” என்றுவிட,

“பின்ன எதுக்குடி கல்யாணம் பண்ணிக்கிட்ட?…” என்றான் கோபமாய்.

“பண்ணிக்கனும்னு தோணுச்சு. விரும்பினேன் இல்லையா? கல்யாண மேடை வரை உங்களோட வந்தேன் இல்லையா? உங்களை மாதிரி இந்த உலகத்துல நல்லவரே இல்லைன்னு நினைச்சேன் இல்லையா?  நீங்க மனசால சுத்தமானவர், யோக்கியன்னு நினைச்சேன் இல்லையா? அதுக்காக தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்…” என சொல்லிவிட்டு சென்றுவிட கோபமாய் தலையணைகளை வீசி எறிந்தான் விபீஷ்.

அவனறியாமல் சீமாவின் மேல் தான் தாலி கட்டிய மனைவி என்னும் உரிமையுணர்வு தலைதூக்கி இருந்தது. இதை அவன் உணராமல் போனதே அவனின் துரதிர்ஷ்டம்.

Advertisement