Advertisement

அத்தியாயம் பதினாறு :
இரண்டு நாட்கள் அமைதியாக தான் கழிந்தது.. மனதை அமைதி படுத்த முயன்று கொண்டிருந்தாள் ஜெயந்தி. அவனின் பாராமுகம் கொடுக்கும் கோபம் அதிகமாய் இருக்க, கோபத்தில் வார்த்தைகள் விட வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு ஜெயந்திக்கு பக்குவம் இருந்தது. முடிந்தவரை மனதை நிலை படுத்த முயன்று கொண்டிருந்தாள்.
மருதுவும் சரி, ஜெயந்தியும் சரி பேசிக் கொள்ள முயற்சி செய்யவேயில்லை. என்ன தான் செய்கிறாள் பார்ப்போம் என்று மருதுவும் இருக்க, சமைப்பது பெட்டி பிரித்து அடுக்குவது என்று ஜெயந்தியும் பொழுதை கழித்தாள். “என்ன செய்து விட்டேன் நான், ஏன் இந்த கோபம்?” என்ற எண்ணம் தான் அவளிடம்..  
அவளின் பெட்டியை பிரித்து அடுக்கும் போது நிறைய அவனுக்கு வாங்கிய பரிசுகள் தான்.. கூலர்ஸ், பெர்ஃபுயும்ஸ், ஷர்ட்ஸ், ஜாக்கட், ஐ போட், ஒரு லேட்டஸ்ட் மாடல் ஃபோன் கூட அவனுக்கு பழக்கி கொடுக்கலாம் என்று வாங்கியிருந்தாள்.. ஆண்கள் உபயோகிப்பது என்று கண்ணில் பட்டது எல்லாம் வாங்கியிருந்தாள்..
இப்போது அதெல்லாம் அவளை பார்த்து சிரிப்பது போல தோன்றியது..
முன்பு போல பீரோ எல்லாம் இல்லை.. நிறைய கபோர்ட்ஸ் சுவரில் செதுக்கி இருக்க.. அதில் சிலது காலியாய் இருக்க.. அதில் அவளின் உடைகள் எல்லாம் அடுக்கியவள்.. அவனுக்கு வாங்கிய பொருட்கள் ஒரு இடத்தில் அடுக்கி வைத்தாள்.
இப்போது கொடுத்து அதனை அவன் உதாசீனம் செய்தால் தாங்க முடியாது என்று தோன்றியது.. கூடவே அவன் என்ன செய்வான்? என்ன நினைக்கிறான்? எதுவும் தனக்கு தெரியவில்லையே என்று தோன்றியது.
அப்போது கூட அவனை தெரியவில்லை என்று தான் தோன்றியது. அவனின் கடந்த காலம், அவனின் சிறு வயது, அவன் செய்த வேலைகள், இப்படி ஒன்றும் தெரியவில்லை என்று தோன்றவில்லை..
தினமும் மதியம் அவன் உண்டதும் அம்மா வீடு செல்பவள், இரவு அவன் வருமுன் வந்து விடுவாள்.. அவனிடம் தினமும் மதியம் சொல்லி அவன் உண்டவுடனே கிளம்பி விடுவாள் ..
“தினமும் போகணுமா என்ன?” என்று மருதுவின் மனதில் தோன்றிய போதும் அதனை கேட்கவில்லை.
என்ன தான் செய்வாள் அவளும் ஒற்றையாய்.. அதையும் விட பெற்றோரையும் பார்க்க வேண்டுமே!  
மாதா மாதா பணம் அனுப்பினால் தான், ஆனால் மருது சொல்லியது போல அவள் சம்பாதித்தது எல்லாம் செலவு செய்ய அனுப்பி விடவில்லை.. அவர்களின் தேவைக்கு மட்டுமே எடுக்க சொல்லியிருந்தால்.. ஆனால் பணம் அவளின் அப்பா பேரிலும் அம்மா பேரிலும் பாதியாய் பிரித்து அனுப்பிவிடுவாள்.. அது எவ்வளவு இருக்கிறது என்று தெரிய வேண்டி இருந்தது.
சொல்லப் போனால் இருவரின் நெட் பேங்கிங் அக்கௌன்ட் இவளிடம் தான்.. ஆனால் அதற்குள் போய் நிறைய நாட்கள் ஆகி விட்டன.. அவர்களோ தேவைக்கு அதிகமாய் என்பதை விட தேவைக்கு கூட செலவு செய்யவில்லை.. மாதாமாதம் இவள் லட்சத்திற்கும் மேல் பிரித்து அனுப்பியிருக்க அவர்களோ ஆயிரம் இரண்டாயிரம் கூட எடுப்பது அரிது தான்..
கலைச்செல்வி அப்படி ஒன்றும் செல்வ செழிப்பாய் இல்லை.. எப்போதும் போலவே இருக்க.. மருதுவை மனதில் ஒதுக்கி வைத்து தன் பெற்றவர்களை நிறுத்தினாள். இப்போது விமலனுக்கு பெண் பார்ப்பதினால் அவர்களின் நிலை சற்று உயர்த்திக் காண்பிக்க வேண்டுமே, அப்போது தானே பெண் அமையும்..
முதலில் பார்ப்பது வீட்டு பெண்களின் தோற்றமும் அவர்களின் நகையும் தானே..
மருதுவிற்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதையும் விட அதை செயல் படுத்த முடியாமல் ஒரு பயம் இருந்தது. இப்போது குடும்பம் அவர்களின் செலவு மட்டுமே பார்த்தாள்.
விமலனிற்கு நல்ல சம்பளம் என்பதால் அவனே அம்மாவிற்கு கழுத்திற்கு தங்கத்தில் சங்கிலி வாங்கி போட்டிருந்தான்.. பின்பு வீட்டு செலவு போக அவன் சேமித்து வைத்திருந்தான்..
கமலன் சற்று செலவாளி.. அவனின் பார்ட் டைம் வேலையில் வரும் பணத்தை அப்படியே செலவு செய்து விடுவான் நண்பர்களுடன் ஊர் சுற்றியே.. 
அதனால் நான்கைந்து நாட்களாக அம்மாவை கூட்டி கொண்டு பர்ச்சேஸ்.. மருது ஸ்டோர்ஸில் எல்லாம் இருக்க அவள் அங்கே செல்லவில்லை.. டீ நகர் தான் சென்றாள்.. அம்மா வீட்டிற்கு சில பொருட்கள்.. அப்பாவிற்கு அண்ணன் தம்பிக்கு உடை என்று முதல் சில நாட்களில் இருக்க..  இதில் ஒரு சில வரனும் விமலனிற்கு வந்திருக்க, அதை பற்றிய பேச்சும் ஓடிக் கொண்டிருந்தது. 
அன்று அம்மாவிற்கு சேலைகள், கைக்கு தங்கத்தில் வளையல், கழுத்திற்கு நெக்லசும் அல்லாது ஆரமும் அல்லாது நடுவில் ஒன்று வாங்கியிருந்தவள்,
நேரே அம்மா வீடு செல்லாமல் அம்மாவை அழைத்து தன் வீடு வந்திருந்தாள்.. பீரியட்ஸ் ஆவது போல ஒரு உணர்விருக்க.. வீட்டிற்கு வந்து அதற்கான பாதுகாப்பு செய்து கொண்டு அம்மா வீடு செல்லலாம் என்று நினைத்து வந்திருந்தாள்.
அம்மாவையும் உடன் அழைத்து வந்திருந்தாள்.. அவள் ரூமின் உள்ளே சென்று விட கலைச்செல்வி டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தார். அப்போது பெண் வீட்டில் இருந்து அழைப்பு வர பேசி வைத்தார்.
ஜெயந்தி வந்து ஒரு வாரம் மேல் ஆகிற்று, மருதுவிற்கு அன்று காலையில் இருந்தே ஏனோ கோபமாக இருந்தது. “நான் பேசவில்லை என்றால் இவளும் பேசமாட்டாலாமா, இவள் பேசி நான் பதில் சொல்லாமலா இருக்கிறேன்” என்று இவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
மதியம் அவன் உண்டு முடித்ததும் நான் அம்மா வீட்டிக்கு போறேன் என்று அவனுக்கு முன் அவள் கிளம்பிவிட, அவள் உண்டு முடித்ததும் அவளுடன் வார்தையாட காத்திருந்தான்.
அவளோ சொல்லிவிட்டு கிளம்பிவிட அப்படி சுர்ரென்று ஒரு கோபம் ஏறியது.
அதன் பொருட்டே ஒன்பது மணி போல வீட்டிற்கு வருபவன் அன்று ஏழு மணிக்கே வந்து விட்டான்.. அவன் நுழைந்ததும் பார்த்தது டி நகரின் ஒரு புகழ் பெற்ற கடையின் பைகள்..
அப்படி ஒரு கோபம் பொங்க ஆரம்பித்தது.. “ஊரில்  உள்ள கடைகளுக்கு எல்லாம் போகத் தெரியும் நம் கடைக்கு வரத் தெரியவில்லையா. அதுவும் என் மனைவி இங்கே எடுக்காமல் அடுத்த கடையில் உடைகளை எடுத்தால் என்னுடைய கடையின் மதிப்பு என்னாவது”
“அதுவும் என் வீட்டில் அடுத்த கடையின் பைகள் பார்ப்பவன் என்ன நினைப்பான்” என்ற எண்ணமும் ஓடியது..
“எங்கே இவள்” என்று தேட ஆரம்பித்தவனுக்கு கலைசெல்வின் குரல் கேட்க அப்படியே வெளியே வந்து முன் வராண்டாவில் அமர்ந்து கொண்டான். மனம் கனன்ற ஆரம்பித்தது..
“இவளுக்கு தான் அறிவில்லை, இவளின் அம்மாவிற்குமா இல்லை. உங்க கடை இருக்கும் போது வேற கடைக்கு போனா நல்லா இருக்காது சொல்ல மாட்டாங்களா? ஏரியாக்காரன் எவனாவது இவங்களை வேற கடையில பார்த்தா என்ன சொல்லுவான்? இவங்களே இவங்க கடையில வாங்கறதில்லை சொல்ல மாட்டான்!” அப்படி ஒரு ஆத்திரம் கிளம்பியது.  
 ஜெயந்தி சோர்வாக வந்து சோஃபாவில் அமர்ந்தவள் “அம்மா” என்று குரல் கொடுக்க, டைனிங் ஹாலில் இருந்து வந்தார்.
அவர் அவளின் சோர்வை கூட கவனியாது “பொண்ணு வீட்டுக்காரங்க ஃபோன் பண்ணினாங்க பொண்ணு பார்க்க எப்போ வர்றோம்னு” என்றார்.
“மா, பொண்ணு போட்டோவை அனுப்ப சொல்லுங்க, பொண்ணு எப்படி இருக்குன்னு பார்க்கணும், ஜாதகம் பார்க்கணும், அதுக்கு அப்புறம் தான் நேர்ல. எந்த பொண்ணு? ரெண்டு மூணு சொன்னீங்கம்மா” என
“அதுதான் எங்க ஒன்னு விட்ட அண்ணன் ஒருத்தர்” என்று ஆரம்பிக்க..
“மா, அவர் பொண்ணு படிக்கவேயில்லை. ப்ளஸ் டூ தான் படிச்சிருக்கு. படிச்ச பொண்ணா பாருங்கம்மா இப்போல்லாம் ரெண்டு பெரும் வேளைக்கு போனா தான் ஆகும்”
‘அவங்க வசதிடி”  
“வசதின்னா அதை வெச்சு என்ன பண்ண? சீர் செய்வாங்க, அதை வெச்சு குடும்பம் நடத்த முடியுமா? பொண்ணு கொண்டு வர்றதை உடனே நீ வித்துடுவியா?” எனப் பேசினாள்.
“இவளுக்கு இவ்வளவு பேச இவ்வளவு யோசிக்க தெரியுமா?” என்று கேட்டிருந்தான் மருது. “அப்போ என்னோட விஷயங்கள் மட்டும் எப்படி புரியாமல் போகும்” என்ற எண்ணம் ஸ்திரமாய் அமர்ந்தது.
“வசதி இருக்கோ இல்லையோ, படிக்காத பொண்ணு வேண்டாம். ஒரு டிகிரியாவது படிச்சிருக்கணும்” என்று அவள் கண்டிப்பாய் பேச,
“ஓஹ், அது தான் என்னை பிடிக்கலையோ?” என்று தோன்ற ஆரம்பித்தது மருதுவிற்கு.
“நல்ல சம்பந்தம்” என்று மீண்டும் கலைச்செல்வி பேச..
“மா, யோசிக்கலாம். எனக்கு அவ்வளவா இஷ்டமில்லை. ரொம்ப நாள் முன்ன அந்த பொண்ணை பார்த்திருக்கேன். அப்படி ஒன்னும் நல்லாவும் இருக்காது” என்றும் ஜெயந்தி சொல்ல
“தோற்றம் இவளுக்கு அவ்வளவு முக்கியமோ? அதுதான் நான் இவளை கவரவில்லையோ?” என்றும் ஓட ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றான்..
அவன் எழுந்து உள்ளே வர.. அவனை பார்த்த கலைச்செல்வி எழுந்து நின்றவர் “வாங்க தம்பி” என்றார்.
அவரை “வாங்க” என்றும் அவன் சொல்லவில்லை, பதிலுக்கு ஒரு தலையசைப்பும் இல்லை, ஒரு அன்னியப் பார்வை பார்த்தான்.
அவருக்கு மனதிற்கு என்னவோ போல ஆனது, அவரிடம் அதிகம் பேசாதவன் மருது என்றால் அது வேறு. அவன் நன்றாய் தானே பேசிக் கொண்டு இருந்தான். திருமண பேச்சு வந்த பிறகு தானே குறைந்தது.. இப்போது இந்த ஒரு பாவனை, மரியாதை, மனதிற்கு என்னவோ செய்ய கண்கள் கலங்கி விடுமோ என்று பயந்தவர், “சரி, ஜெயந்தி, நான் கிளம்பறேன்” என்று கிளம்பிவிட்டார்.  
“இருங்கள்” என்றும் சொல்லவில்லை மருது..
இதையெல்லாம் பார்த்திருந்த ஜெயந்திக்கும் இத்தனை நாள் இழுத்து வைத்த பொறுமை பறக்க ஆரம்பித்தது.
நினைத்திருந்தால் தான் அவனின் சட்டையை பிடித்து கேள்வி கேட்க வேண்டும், பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம். ஆனால் தயக்கமா? பயமா? இல்லை அவன் மேல் வைத்து விட்ட அன்பா? கணவன் என்ற நேசமா? காதலா? என்வென்று பகுத்தறிய முடியாத ஒன்று எதையும் செய்ய முடியவில்லை.
மனது அவனின் பார்வைக்கு எதிர்பார்த்து காத்திருக்க சொன்னது.
இப்போது கூட அவள் செய்து விட்ட செயலின் வீரியம் தெரியவில்லை. அவன் கடைக்கு கூப்பிடவில்லை, நான் போகவில்லை என்பதாக தான் எண்ணம்.
நமது கடை இருக்கும் போது அடுத்த இடத்தில வாங்கினால் அதற்கான மதிப்பு குறையும் என்று தெரியவும் இல்லை புரியவும் இல்லை. மருது கூப்பிடவில்லை நான் போகவில்லை என்பது மட்டுமே எண்ணமாக இருந்தது. அதுவும் முதல் நாள் ஏர்போர்டில் இருந்து வரும் போதே “கடைல நிறுத்துங்க” என்று அவள் சொல்லியும் அவன் நிறுத்தவில்லை..         
அம்மாவின் கலங்கிய முகம் பார்த்து “சரி” என்று அம்மாவிடம் தலையசைத்தவள், அம்மா கிளம்பவும் “இந்த பை எடுத்து போங்கம்மா” என்று நகையையையும் புடவை பையையும் கொடுக்க..
“இல்லை, அப்புறம் எடுத்துக்கறேன்” என்று சொல்லி அவர் சென்று விட.. அம்மாவிற்கு வாங்கி கொடுத்த மகிழ்ச்சி அப்படியே மறைந்தது.. கலைச்செல்வி அதனை எல்லாம் ஆசையாய் தான் எடுத்தார். இப்போது மருதுவின் நடவடிக்கை கொண்டே அதனை விட்டு செல்கிறார் என்று புரிந்தது.  

Advertisement