Advertisement

அத்தியாயம்.8

அவன் திரும்ப வீட்டுக்கு வர இரவு ஏழு ஆகிவிட்டது. சாப்பிட ஹோட்டலுக்கு கிளம்பி போனவன் ஆபிசில் இருந்து அவரச வேலை வர சொல்லி போன் வரவும் சாப்பிடாமலே ஆபிஸ் சென்று விட்டான்.

வேலை முடிந்து களைப்புடன் வீட்டுக்கு வந்தவன் வீடு பூட்டி இருப்பதை பார்த்ததும் இன்னும் எரிச்சல் தான் வந்தது.

ஆபிஸ் டென்ஷனில் சரியாக சாப்பிடக் கூட இல்லை. இங்கிருந்து போனதும் செக்கியூரிட்டியை வாங்கி வர சொல்லி சாப்பிட்டது தான். மதியம் எல்லாம் வெறும் டீ மட்டும் தான். பயங்கர பசியோடு தான் வீட்டுக்கு வந்தான். ஹோட்டலுக்கு போய் சாப்பிடக் கூட தோன்றவில்லை. அந்த அளவு சோர்வாக இருந்த்து.

நேராக வீட்டுக்கு வந்தால் வீடு பூட்டியிருந்தது அவன் எரிச்சலுக்கு காரணம். அதும் இரவு ஏழு மணி ஆன பிறகும் அவள் வராமல் இருந்தது அவன் கோபத்தை தூண்டிவிட்டது. பத்தாதற்கு வீட்டு சாவியும் அவனிடம் இல்லை. ரெண்டு இருந்தாலும் அவள் வீட்டில் தான் இருப்பாள் என்ற நினைப்பில் அதை அவன் எடுத்து சென்றிருக்கவில்லை.

“ச்சே… எங்க போய் தொலைஞ்சான்னு தெரியலை.” கடுப்புடனே அவளை பற்றி விசாரிக்க எதிர் வீட்டுக்கு சென்றான்.

காலிங் பெல் சத்தம் கேட்டு தாத்தாவின் பேரன் மனைவி தான் வந்து கதவை திறந்தாள்.

அந்த பெண் சூர்யா வாசலில் நிற்பதை  பார்த்து விட்டு “சொல்லுங்க ண்ணா?” என்றாள்.

“எங்க வீடு பூட்டி இருக்கு. அதான் மதி எங்க போறேன்னு உன்கிட்ட  சொல்லிட்டு போனாளானு கேக்க வந்தேன் ம்மா.” என்றான்.

“தாத்தாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வீட்டுக்கு வந்தேன் அண்ணா. அதனால எனக்கு தெரியலை

நீங்க அவ நம்பர்க்கே கால் பண்ணி பாருங்களேன்.” என்றாள்.

அவனிடம் தான் அவள் நம்பர் இல்லையே. இதுவரை அவள் நம்பரை வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு வந்ததில்லை என்பது தான் உண்மை.

அதை சொல்ல முடியாமல் “என்னோட போன் சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆஃப் ஆகிடுச்சு ம்மா. கொஞ்சம் நீயே போன் பண்ணி எங்க இருக்கான்னு கேக்கறியா?” என்றான்.

“சரிங்ண்ணா நான் கேக்கறேன்.” என்று விட்டு அவளே அவள் நம்பர்க்கு அழைத்தாள்.

மதியின் கெட்ட நேரமோ என்னவோ போனை வீட்டிலே வைத்து விட்டு சென்றிருந்தாள். இது தெரியாமல் அவள் இரண்டு மூன்று முறை போன் செய்து பார்த்து விட்டு, “மதி போன எடுக்கலண்ணா.” என்றாள்.

மனைவி மேல் கோபம் வந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “சரிம்மா நீ போ. அவ இங்கதான் எங்கையாவது போயிருப்பா நான் பாத்துக்கிறேன்.” என்று விட்டு தன் வீட்டுக்கு வந்தான்.

அவனுக்கு  எங்காவது போய் முட்டிக் கொள்ளலாம் என்றுதான் இருந்தது.

“ஏ உசுர எடுக்கறதுக்குன்னே இவள எந்தலைல கட்டி வச்சிருக்காங்க.” திட்டிக் கொண்டே வாசல் படியிலையே உக்கார்ந்து கொண்டான்.

கிட்டத்தட்ட ஒருமணி நேரம் சென்ற பிறகே மதுமதி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

ஆட்டோவில் இருந்து இறங்கியவளின் இரு கைகளிலும் பை நிரம்பி இருந்ததது. ஆட்டோவிற்கு பணத்தை குடுத்து அனுப்பிவிட்டு பைகளை தூக்கிக் கொண்டு வந்தாள்.

அவள் கையில் இருந்த பையையும் அதில் இருந்த பொருட்களை  பார்த்ததுமே அவள் இவ்வளவு நேரம் எங்கு சென்றிருந்தாள் என்பதை யூகித்து விட்டான்.

விழிகளில் கோபம் மின்ன நடந்து வந்துக்கொண்டிருந்தவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

கணவன் தன்னை பார்ப்பது புரிந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அவனை கடந்து சென்று ரூமில் பையை வைத்து விட்டு கிச்சினிற்கு சென்றாள்.

ஏற்கனவே அவள் மேல் கோபத்தில் இருந்தவன் அவளின் விட்டேத்தியான செயல் மேலும் கோபத்தை ஏற்றிவிட்டு விட்டது.

அவளின் பின்னாலே  சென்றவன், “மேடம் ஊர் சுத்தி முடிச்சுட்டு ரொம்ப சீக்கரமா வந்துட்டிங்க போல!” நக்கல் கலந்த குரலில் கேட்டான்.

திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தாள். அவளும் வேண்டும் என்றே செய்யவில்லை. வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கவே சென்றாள். ஆனால் போன இடத்தில் நினைத்த நேரத்தை விட கொஞ்சம் அதிகம் ஆகிவிட்டது. போன் செய்து தகவல் சொல்லலாம் என்றால் போனை வீட்டிலே மறந்து விட்டு சென்றுவிட்டாள். அது கடைக்கு சென்ற பிறகே தெரிந்தது. ஆனால் அதை அவன் சாதாரணமாக கேட்டிருந்தால் கண்டிப்பாக பதில் சொல்லியும் இருப்பாள். ஆனால் அவன் கேட்ட விதம் அவளை கோபப்படுத்துவதாகவே இருந்தது.

நிதானமாக தண்ணீரை குடித்து முடித்துவிட்டு டயர்டாக இருக்கவும் டீபோட பாத்திரத்தை அடுப்பில் வைத்து விட்டு ஃப்ரிட்ஜ் இருந்து பால் பாக்கெட்டை எடுத்து கட் செய்து ஊற்றிக்கொண்டே, “அதான் உங்களுக்கே தெரிஞ்சிடுச்சே. அப்பறம் நான் என்ன சொல்ல?” என்றுவிட்டு அவள் வேலையில் கவனம் ஆனாள்.

அதில் கடுப்பானவன், “என்ன டி திமிரா?” என்றான்.

மதி துளியும் பயப்படாமல் “நீங்க சொன்னதுக்கு பதில் சொன்னேன். அது உங்களுக்கு திமிரா தெரிஞ்சா அது என் பிரச்சினை இல்லை. அப்புறம் இன்னொரு தடவை டி சொல்ற வேலை வேண்டாம். எனக்கு பிடிக்கல.” என்றுவிட்டாள்.

“பிடிக்கலைன்னா. இப்ப நீ என்ன சொல்ல வர?” கோபத்துடன் கேட்டான்.

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் பால் பொங்கியதும் இன்ஸ்டென்ட் காப்பி தூளை எடுத்து இரண்டு பேருக்கும் காப்பி கலந்தவள்,

“நீங்க ரொம்ப டென்ஷனா இருக்கீங்க.. இத குடிங்க. நாம அப்புறமா பேசலாம்.” என்றவாறே கப்பை அவனுக்கு முன் நீட்டினாள்.

அடுத்த நொடி சூர்யா தட்டி விட்டதில் அந்த காப்பி டம்ளர் பறந்து சென்று சுவரில் மோதியதில் காப்பி கிச்சன் முழுவதும் பட்டு தெரித்தது.

அவன் செயலில் மதிக்கு எரிச்சல் தான் வந்தது. அவனைத்தான் முறைத்துக் கொண்டு நின்றாள்.

“உனக்கு என்ன பார்த்தா எப்படி தெரியுது? நீ பாட்டுக்கு ஊர் சுத்திட்டு வருவ. கேள்வி கேட்டா திமிரா பதில் சொல்லுவியா? இதுல நான் டீ சொன்னா பிடிக்கலைங்ற. அப்ப  வேற எவன் சொன்னா பிடிக்கும்?” கோபத்தில் வார்த்தைகளை விட்டுக் கொண்டிருந்தான்.

“மரியாதையா பேசுங்க.” பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு கூறினாள்.

“மரியாதையா பேசனுமா? முடியாது டி. என்னடி பண்ணுவ.  கட்டுன புருசன் நா டீ சொல்லக்கூடாதுன்னா  என்ன அர்த்தம்? எனக்கு இப்போ பதில் தெரிஞ்சே ஆகனும்.” பிடிவாதமாக நின்றான்.

“எனக்கு பிடிக்கலைனு சொன்னா புரியாதா? புருசனாம் புருசன் ஏன் அது இப்பதான் தெரிஞ்சா?” கோபத்தில் கத்தியே விட்டாள்.

ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் அவளின் பேச்சு அவனை மிருகமாக மாற்றியது என்று தான் சொல்ல வேண்டும்.

கோபத்தில் அவளின் தோள்பட்டை இரண்டையும் அழுத்தி பிடித்தவன், “டி சொல்றது பிடிக்கலையா இல்லை என்ன பிடிக்கலையா?” என்றான்.

அவன் அழுத்தி பிடித்ததில் தோள்பட்டை வலி எடுக்க    கையை வேகமாக தட்டியவாறே,  “ச்சீய்…” முகத்தை சுழித்து விட்டாள்.

“உங்களோட ஆம்பளை திமிர காட்டுனீங்கன்னா நான் மனுசியா இருக்க மாட்டேன்.” அவள் குரலில் அத்தனை கோபம்.

அவளின் “ச்சீய்” என்ற சொல்லும் முக சுழிப்பும்  அவனின் அறிவை மழுங்கடித்துவிட்டது.  சாதாரணமாக ஆரம்பித்த வார்த்தை எல்லை மீறியது. சூர்யா சிந்திக்கும் நிலையில்  இல்லை.

அவளை இன்னும் நெருங்கி அவள் கைகள் இரண்டையும் பின்னால் கொண்டு சென்று ஒருகையால் பிடித்துக் கொண்டவன் மறுகையை அவளின் உடலில் மேயவிட்டவன், “நான் அப்படித்தான் டி பண்ணுவேன். என்ன டி பண்ணுவ? மேல கையவச்சதுக்கே  கைய தட்டி விட்டு ச்சீய் ங்ற!  புருசன்னு இப்ப தான் நினைப்பு வந்ததாங்கற? உனக்கு அந்த நினைப்பு முதல்ல இருக்காடி?  நா தொட்டதுக்கே முகத்தை சுழிக்கற? இப்ப நா தொடறேன். உன்னால என்னடி பண்ண முடியும்?” என்றவாறே அவளிடம் அத்துமீறினான்.

அவனின் அத்துமீறலும் பேச்சும் அவளுக்கு அருவெறுப்பை தான் தந்தது. பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அதில் மேலும் காண்டானவன் பிடிவாதமாக அவளை தன்னை பார்க்க வைத்தவன் பிடிவாதமாக அவளின் உதட்டில் தன் ஆளுமையை காட்ட ஆரம்பித்தான்.

வீம்புக்காக அவளிடம் எல்லை தாண்டியவன் அடுத்து நடந்த எதுவும் அவன் கட்டுப்பாட்டிலே இல்லை.

கோபத்தில் அவளுக்கு தண்டனை தருவதாக நினைத்து தன் வாழ்க்கையை கேள்விகுறி ஆக்கிக் கொண்டிருந்தான்.

அவனின் அத்துமீறல்  அவளுக்கு அருவெறுப்பை தான் தந்தது. உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி இருந்தவன் அவளின் வெறுப்பை எல்லாம் உணரும் நிலையில் இல்லை.

எங்கிருந்து தான் அவளுக்கு கோபம் வந்ததோ அடுத்த நொடி முழு பலம் கொண்டு அவனை தள்ளியவள் கிச்சன் மேடையில்  இருந்த காய் வெட்டும்  கத்தியை எடுத்து தன் கையை கிழித்துக் கொண்டாள்.

இதெல்லாம் கண் இமைக்கும் நொடிக்குள் நிகழ்ந்து விட்டது. அவள் தள்ளிவிட்ட அதிர்ச்சியில் இருந்தவன் அவளின் செயலை கவனிக்க வில்லை.

அவள் கையை கிழித்துக் கொண்ட பிறகே சுதாரித்தான். அடுத்து அவள் வேறு ஏதும் செய்வதற்குள்ளாகவே கத்தியை பறித்து தூர எறிந்து விட்டான்.

“ஏய் என்ன டி பண்ணி தொலைச்சிருக்க?” என கத்திக் கொண்டே கையை பைப்பை திறந்து விட்டு இரத்தத்தை கழுவி அவள் கழுத்தில் இருந்த ஷாவை உருவி கையை கட்டு போட்டுவிட்டான்.

நல்ல வேளை அவள் லேசாக கிழித்திருந்ததால் காயம் பெரியதாக இல்லை. அதே சமயம் சின்னதும் இல்லை. அவன் கட்டி விட்ட துணியையும் மீறி இரத்த கசிவு தெரிந்தது.

அவன் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் சென்றாலும் முகம் கோபத்தில் சிவந்து கிடந்தது. அவனுக்கு இன்னும் பதட்டம் குறையவே இல்லை.

“நீ முதல்ல வா ஹாஸ்பிடல் போயிடலாம்.” என்றான்.

அதுவரையிலும் அமைதியாக இருந்தவள் அவனிடம் இருந்து கையை உருவிக்கொண்டு கிச்சனை விட்டு வெளியே வந்தவள் ரூமிற்கு சென்று வேறு ஷால் ஒன்றை எடுத்து போட்டு கொண்டு தன் பர்ஸ்சை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

அவள் என்ன செய்கிறாள் என பின்னாடியே வந்தவன் அவள் வாசலை தாண்டி செல்லவும் கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே ஓடியவன் அவள் முன்னால் போய், “என்ன பண்ற மதி? வந்து கார்ல் ஏறு. எதுவா இருந்தாலும் நாம அப்புறம் பேசிக்கலாம்.” என்றான்.

“ப்ளீஸ் வெளியே நின்னு சீன் கிரியேட் பண்ணாதீங்க. எனக்கு தெரியும் என்ன பார்த்துக்க. இது லேசான காயம் தான் இதுக்கெல்லாம் என்னோட உசுரு போகாது. நீங்க பயப்பட வேண்டாம்.” அந்த நேரத்திலும் துளியும் கலங்காமல் பேசினாள்.

“என்ன பேசற மதி. இந்த நேரத்துல எப்படி தனியா போவ… வந்து கார்ல ஏறு.” என கெஞ்சினான்.

“ஊர் சுத்திட்டு வர தெரிஞ்ச எனக்கு தனியா போக தெரியும். வழி விடுங்க.” முறைத்துக் கொண்டே கூறினாள்.

அவள் இனி தான் என்ன சொன்னாலும் கேக்க மாட்டாள் என்பதை உணர்ந்தவன் எதைப்பற்றியும் யோசிக்காமல் கையில் தூக்கி விட்டான்.

“என்ன பண்றீங்க? கீழ இறக்கி விடுங்க.” பல்லை கடித்து கொண்டு கூறினாள்.

“இப்ப நீதான் சீன் கிரியேட் பண்ற மதி. நமக்குள்ள நடக்கற பிரச்சினை மத்தவங்களுக்கு தெரியனும்னு நினச்சினா நீ கத்து.” என்றவன் அவளை தூக்கிச் சென்று காரில் உட்கார வைத்து சீட் பெல்ட்டையும் போட்டு விட்டு மறுபக்கம் வந்து காரை எடுத்தான்.

அவளுக்கு அவனுடன் போக பிடிக்க வில்லை தான். அதேசமயம் மற்றவர்களுக்கு தங்களுடைய சண்டை தெரிவதிலும் விருப்பம் இல்லை. அதனால் அமைதியாக இருந்தாள்.

மருத்துவமனை சென்று விட்டு வீட்டுக்கு வரும் வரைக்கூட ஒருவார்த்தை பேசவில்லை அவள்.

வீட்டிற்கு வந்து கார் நின்றதும் இறங்கி உள்ளே சென்று விட்டாள். அவனால் அவளை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவன் மீது அவ்வளவு கோபத்தில் இருந்த போதும் கூட மருத்துவர் காயம் எப்படி ஆனது என கேட்டதுக்கு “கம்பி கிழிச்சிடுச்சு.” என பொய் கூறினாள்.

மருந்து மாத்திரை கவரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றவன் அவள் சோர்ந்து போய் படுத்திருப்பதை பார்த்ததும் மருந்து கவரை அங்கு வைத்து விட்டு அவளுக்கு சாப்பிட எதாவது செய்ய நினைத்து  கிச்சன் சென்றான்.

அவன் கோபத்தில் தட்டிவிட்ட காப்பி கிச்சன் முழுவதும் சிந்தி காய்ந்து போய் கிடந்ததை பார்த்ததும் தன் மீதே கோபம் வந்தது.

அதை க்ளீன் பண்ணி முடிக்கும் போது நொந்தே விட்டான். இருந்த டயர்டில் சமைக்க முடியும் என்றே தோன்றவில்லை. ஆனாலும் பசிவேறு பின்னி எடுக்க உடனே என்ன சமைப்பது என கிச்சனை அலசியவன்  நூடூல்ஸ், பாஸ்த்தா பாக்கெட்டை பார்த்ததும் தான் மூச்சே வந்தது. திருமணத்திற்கு முன்பு அவன் வாங்கி வைத்தது. மது வந்த பிறகு நூடூல்ஸ் பாஸ்த்தாவுக்கு எல்லாம் வேலை இல்லாமல் போய் விட்டதால் இப்போது அது கை குடுத்தது. அவனுக்கு தெரிந்தவிதத்தில் செய்து முடித்தவன் இருவருக்கும் தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு மீதி இருந்த பாலை சூடு செய்து டம்ளரில் ஊற்றிக் கொண்டு ரூமிற்கு சென்றான்.

மது கண்களை மூடி படுத்திருப்பதை பார்த்ததும் ‘அதுக்குள்ள தூங்கிட்டாளா?’ என நினைத்துக் கொண்டே உள்ளே சென்று கொண்டு வந்த உணவை வைத்து விட்டு அவளின் அருகில் சென்று “மதி!” என்றான்.

அவள் பதில் சொல்லாமல் இருந்தாலும் கருவிழி அசைவை வைத்து அவள் தூங்கவில்லை என்பதை கண்டு கொண்டான்.

“நீ தூங்கலைன்னு எனக்கு தெரியும். ப்ளீஸ்  எழுந்து சாப்பிட்டு மாத்திரை போட்டு படுத்துக்க மதி. அதுக்கு அப்புறம் நான் உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன்” என்றதும்

எழுந்து அமர்ந்து விட்டாள். ஆனால் அவள் முகத்தில் கோபம் துளியும் குறையவில்லை. அவனுக்குமே அது புரிந்து தான் இருந்தது.

அவளை மேலும் பேசி கோபபடுத்தாமல் உணவு தட்டை எடுத்து அவளிடம் குடுத்தான்.

“சுமாராகத்தான் இருக்கும். உன் அளவுக்கு எல்லாம் எனக்கு சமைக்க தெரியாது. ப்ளீஸ் இன்னைக்கு மட்டும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ.” என்றான்.

அவளும் உணவை மறுக்க வில்லை. வாங்கிக் கொண்டாள்.

அவள் மறுக்காமல் வாங்கிக் கொண்டதில் அவனுக்கே ஆச்சர்யம் தான்.

அவன் பார்வைக்கான அர்த்தம் புரிந்தவள், “எனக்கு சாப்பாட்டோட அருமை தெரியும்.” என்றவள் சாப்பிட ஆரம்பித்தாள்.

சாப்பிட்டு முடித்து மாத்திரை போடும் வரை அமைதியாக இருந்தவன்,  “ஏன் மதி அப்படி பண்ண? உனக்கு என்மேல தானே கோபம் ஏன் உன்னையே காயப்படுத்திக்கிட்ட? நல்ல வேளை காயம் பெருசா இல்லை. இல்லைனா என்ன ஆகியிருக்கும். கோபத்துல என்ன செய்யறன்னு கூட யோசிக்க மாட்டியா?” என்றான்.

“தெரிஞ்சு தான் கைய கிழிச்சிக்கிட்டேன். என்னால என்ன பண்ண முடியும்னு இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். அதே கத்திய திருப்பி குத்த முடியாம நான் என்ன காயப்படுத்திக்கல. அப்படி செய்ய எனக்கு ஒரு நொடி போதும்.”

“கணவன்ங்ற உரிமையில நெருங்குனீங்கனா கண்டிப்பா தடுக்க மாட்டேன். அதே உங்களோட ஆம்பளைங்ற ஈகோக்கு தீனி போட கிட்ட நெருங்குனீங்கன்னா உயிர விட  மட்டும் இல்லை எடுக்கவும் தயங்க மாட்டேன்.” நிதானமாக அதே சமயம் அழுத்தமாக சொல்லிவிட்டாள்.

அவள் பதிலில் அதிர்ந்து போய் பார்த்தான் சூர்யா. அந்த நொடி சூர்யாவுக்கு மதுமதி  புதியதாக தெரிந்தாள்.

Advertisement