Advertisement

அத்தியாயம்…5 
“நீங்க  அவசரப்பட்டு இருக்க கூடாதோன்னு எனக்கு தோனுது… “ என்று ஜெய் தன் அண்ணன் கெளதமிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்.
“சரி அப்போ நான் என்ன செய்து இருக்கனும்..? நீயே சொல்.” என்று கெளதம் ஜெய்யிடம் கேட்டான்.
அப்போதும் ஜெய்… “இல்ல இது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று போகும் விசயம் கிடையாது. கொஞ்சம் யோசிச்சி பேசி இருக்கலாம்.” என்று இப்போதும் ஜெய் தன் அண்ணன் கேட்டதற்க்கு பதில் சொல்லாது, தான் சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னான்.
“தோ பார் எழுந்து வந்தேன் அவ்வளவு தான்.. உன் மனைவி உன்னை  அப்பட்டமா  பார்த்தாச்சி..அவள் முகத்தை பார்த்தே எனக்கு தெரிஞ்சி போச்சி..சரி கொஞ்சம் பயந்த சுபாவம் இருக்க பெண்..கூடவே வசதி வாய்ப்பு அவள் பார்த்து இருக்க மாட்டாள்.
அதே போல் இதை எத்தனை நாளுக்கு மூடி மறச்சி வைக்க முடியும்..சரி எப்போவோ தெரிய வேண்டிய விசயம். இப்போது தெரியட்டும் என்று சொல்லிட்டேன். அவ வீட்டை விட்டு ஓடின  அன்னைக்கு கூட..
சரி கொஞ்ச நாள் கோபத்தில் அவள் அம்மா வீட்டில் இருப்பா..பின்  தனக்கு  ஒரு தங்கை இருக்கு..நம்மால் அவள் வாழ்க்கை பாதிக்கும் என்று நினச்சி அவள் வந்துடுவான்னு பார்த்தா..  அவள் விட்ட  வக்கீல் நோட்டிஸ் வந்து இருக்கு..
ஏன்டா அவளை விசாரிச்சத்திம் அவள் கொஞ்சம் பயந்த சுபாவம் என்று தானே சொன்னாங்க..அதுவும் அவள் அப்பன் இப்பவோ அப்பவோ போவது போல் இருக்கு..ஒரே தங்கை.. வசதி கூட அந்த அளவுக்கு இல்ல.. கடந்த ஐந்து வருடமா இடம் பார்க்குறாங்க..பெண் சுமாரா இருப்பதனாலும், சவரன் அதிகம் போட முடியாத காரணத்தினாலும், இடம் தள்ளி போயிட்டு இருக்கு.. நம்ம வெச்ச டிடெக்டீவ் ஏஜென்சி இதை தானேடா சொன்னான்
அதனா. தான் நம்ம திட்டத்துக்கு இந்த இடம் தான் சரிப்பட்டு வரும் என்று முடிச்சோம். இப்போ என்ன இப்படி தைரியமா நோட்டிஸ்  விட்டு இருக்கா….?
தாங்கள் செய்தது சரி என்பது போலவும், அவளின் நிலையையும்,  அவளின் குடும்ப நிலையையும் பார்த்து அவள் தான் அடங்கி இங்கு இருந்து இருக்க வேண்டும் என்பது போலவும் பேசிய அந்த  நியாயஸ்தன் கெளதமனின் பேச்சை யாரும் எதிர்த்து பேசவில்லை.
ஏன் என்றால் அவர்களின் அனைவரின் திட்டமும் இது தானே..படித்து வேலைக்கு போகும் பெண்ணை எடுத்தாலும், தைரியமான வசதி படைத்த பெண்ணைய் எடுத்தாலும், தன் வீட்டில் நடப்பது தெரிந்தால், கண்டிப்பாக தங்களை வீதிக்கு கொண்டு வந்து விட்டு விடுவாள்.
இது போல் இருக்கும் பெண்ணை எடுத்தால், பயந்து போய் தங்கள் பேச்சை கேட்டு நடப்பாள் என்று அனைவரும் நினைத்திருக்க… வீட்டை விட்டு சென்றவளின் கோபம் தணிந்த பின் வருவாள்.. 
இல்லை வீட்டில் நிலை பார்த்து அவள் அப்பனே இங்கு கொண்டு வந்து விடுவான் என்று இருக்க..இவர்களின் எண்ணத்தை அனைத்தையும் பொய்யாக்கும் வகையாக தன் கையில் இருக்கு வக்கீல்  நோட்டிஸை பார்த்ததில் அதிர்ச்சியானதை விட..
கீதாவின் சார்பாக வக்கீல் நோட்டிஸ் வந்த அந்த லாயரின் பெயரில் தான் ஜெய்  கதிகலங்கி போய் விட்டான்.
ஜெய்யின் நண்பன் ஒருவன்  ஒரு பெண்ணிடம் அப்படி இப்படி நடந்து விட்டு, பின் வீட்டில் பார்க்கும் பெண்ணை மணக்க இருந்த நிலையில், அவனை சந்தி சிரிக்க வைத்த பெருமை நம் வக்கீல் குருமூர்த்தியையே சேரும்..
தன் நண்பனை  இந்த வக்கீல் என்ன…? என்ன…? கேள்வி கேட்டான். எப்படி..? எப்படி…/  எல்லாம் அவனை அசிங்கப்படுத்தினான்…அதுவும் அவன் நண்பனும் சாதரணமானவன் கிடையாது. கொஞ்சம் பணபலமும் அவனுமே கொஞ்சம் திறமையானவனும் கூட..
அவனை அந்த பெண் தன்னை ஏமாற்றினான் என்று குற்றம் சாட்டி நீதிமன்றம் வரை இழுத்த போது கூட இவன்… “காதும் காதும் வெச்சது போல கம்முன்னு இருந்து இருந்தா..இவளுக்கும் ஒரு திருமணம் நடந்து இருக்கும்..
இவனை பற்றி தெரியாது இப்படி இவளுக்கு இவளே  ஆப்பு வெச்சிக்கிட்டாளே…” என்று அப்போது ஜெய் இப்படி தான் நினைத்தான்.
அதற்க்கு காரணம் நண்பனின் பணம் பலமும், அவனின் அறிவு கூர்மையையும் வைத்து தான். கண்டிப்பாக அந்த பெண்ணிடம் எந்த எவிடன்சும் இருக்கும் படி வைத்து இருக்க மாட்டான். அதே போல் நீதிமன்றத்திலும் லாயர் கேட்கும் கேள்விகளுக்கு மாட்டிக் கொள்ளாத வகையில் தான் பதில் அளிப்பான்.
அதனால் கெட போவது அந்த பெண்ணின் பெயர் தான் என்று இவன் நினைத்திருக்க… ஆனால் நடந்ததோ… அவன் நினைத்ததிற்க்கு நேர் மாறாய்… அந்த நீதிமன்றத்தில் அந்த லாயர் கேட்ட ஒரு கேள்விக்கும் பதில் அளிக்க முடியாது
அவன் நண்பனுக்கே தெரியாத சூட்மசத்தில் ஒரு சின்ன இடத்தில் அவன்  செய்த அந்த சின்ன தவறான அந்த பெண்ணுக்கு நகை வாங்கி கொடுக்கும் போது  தன் கார்ட் கொடுக்கவில்லை..தன் முகவரி கொடுக்காது அந்த பெண்ணின் முகவரி கைய்பேசி எண்ணை தான் கொடுத்து இருக்கிறோம்.
இதில் நான் எங்கு மாட்ட போகிறோம்..அதுவும் இல்லாது அது நடந்து ஒரு வருடம் சென்ற நிலையில் நகை கடையில் இருக்கும் கேமிராவின் புட்டேஜை கூட அழித்து இருப்பர்… அதனால் நாம் மாட்ட மாட்டோம் என்று அவன் இருமாந்து இருந்தான்.
எத்தனுக்கும் எத்தன் என்பது போல் அழித்த புட்டேஜை பெற்றுக் கொண்டு அதற்க்கு என்று இருக்கும் வல்லூனர்களின் உதவியோடு அழித்ததை திரும்ப வர வழைத்து அந்த பெண்ணை அனைவரின் முன்னும் தலை நிமிர்ந்து வைத்து விட்டானே..
ஆம் அப்போது பத்திரிக்கை முதல் மீடியா வரை அனைத்திலும் அந்த பெண்ணை பற்றி தான் பேச்சு..அந்த பேச்சு ஜெய் நினைத்தது போல் தவறாய் இல்லை.
நீதிபதி ஜெய் நண்பனை… “நீ அந்த பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும்.” என்ற  தீர்ப்புக்கு..
அந்த பெண்… “நான் இவனை செய்துக் கொள்ள மாட்டேன்..என் உடம்பை பார்த்த இவனுக்கு என்னை கொடுப்பதை விட..இதை எல்லாம் அறிந்தும் என் மனதை பார்த்து மணக்க ஒருவன் வருவான்.” என்று சொன்னதும் குருமூர்த்தி அந்த நீதிமன்ற வளாகத்திலேயே அந்த பெண்ணை ஆதாரவாய் அணைத்த காட்சி தான் அனைத்து மீடியாக்களிலும் இடம் பெற்று இருந்தது.
அன்று தன் நண்பன் பட்ட அவமானத்தை தான் பட நேருமா… என்று பயந்தத்தில் தான் ஜெய் தன் அண்ணனை இந்த வாங்கு வாங்கினான்.
ஆனால் இதை எதுவும் அறியாத அவன் அண்ணன் கெளதமும் , அண்ணி பத்ம ப்ரியாவும் “வா சாப்பிட…” என்று அழைத்தார்கள்.
“நீங்க இரண்டு பேரும் நிலமை தீவிரம் புரியாம பேசிட்டு இருக்கிங்க…” என்ன இவர்கள் இப்படி இருக்காங்க…? நான் எந்த அளவுக்கு பயந்து போய் இருக்கேன்.. தங்கள் விசயம் வெளியில் வந்தால்..எவ்வளவு பெரிய அசிங்கம்..எனக்காவது பரவாயில்ல..இவன் நிலை வெளியில் தெரிந்தால்..இவன் என்ன என்றால், எதுவும் நடவாதது போல சாப்பிட வான்னு  கூப்பிடுறான் என்ற கோபத்தில் இருவரையும் பார்த்து கத்தி விட்டான்.
“என்ன ஜெய்  உன் பொண்டாட்டி வக்கீல் நோட்டிஸை பார்த்துட்டு பயந்துட்டியா…?அது எல்லாம் அவளாள் ஒன்னும் பண்ண முடியாது. ஒரு பெண்ணை கல்யாணம் செய்யவே இத்தனை ஆண்டு இடத்தை பாரோ பார் என்று பார்த்திட்டு இருந்தான் அவளோட அப்பன் அந்த நோஞ்சான்..
இப்போ இவ போய் உட்கார்ந்துட்டா அந்த இரண்டாவது  பெண்ணுக்கு இவர் கல்யாணம் செஞ்சா மாதிரி தான்.. அதனால இதுக்கு எல்லாம் பயப்படாம சாப்பிட வாங்க…” என்று பத்ம ப்ரியா சொன்னாள்.
“நீ நிலமையின் தீவிரம்  புரியாம பேசுற ப்ரியா…இந்த வக்கீல்…” என்று அவனை மேலும் பேச விடாது கெளதம்..
“என்ன செய்ய முடியும்…? இவனால் அப்படி என்ன செய்ய முடியும்…?  கீதாவே  நான் என் கணவரோடு வாழ ஆசை படுறேன். நான் தான் தப்பா புரிஞ்சிட்டேன் என்று சொன்னா இவனால் என்ன செய்ய முடியும்…? நம்ம கிட்ட இருப்பதை உன் பொண்டாட்டி கிட்ட சொல்…
அவ்வளவு தான் அடுத்த செகண்ட் நம்ம கிட்ட வந்துடுவா… அதுக்கு தானே எல்லா ஏற்பாட்டையும் முன்னாடியே செஞ்சிட்டோம்.” என்று கெளதம் சொன்னதும் ஜெய்யுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது போல் இருந்தது.
ஆம் இது எந்த குடும்ப பெண்ணாலும், ஏத்துக் கொள்ள முடியாதது..கண்டிப்பா இங்கு வருவா..?என்ன நம்ம கிட்ட முன் போல பொண்டாட்டியா நடந்துப்பாளா…? அது இப்போதைக்கு இருக்காது என்றாலும், போக போக சரி செய்துடலாம்.. என்று ஒரு முடிவோடு ஜெய் சாப்பிட சென்றான்.
இங்கு குருமூர்த்தியும் ஒரு முடிவோடு தான் கீதாவையும், பத்மினியையும் அனுப்பி வைத்தான்… கீதா பேசியில் வந்த அழைப்பையும், பத்மினி கைய் பேசிக்கு வரும் அழைப்பையும் இவன் கேட்பது போல் அனைத்தையும் செய்து முடித்தவன்..
பத்மினியிடம்… “உங்க அப்பா கைய் பேசியையும் எடுத்துட்டு வாங்க…” என்று பத்மினியை பார்த்து சொன்னதும்..
“அப்பா கிட்ட போன் இல்ல..நானும் அப்பாவும் இதுவே தான் யூஸ் பண்ணிப்போம்..” என்று பத்மினி சொன்னதும்… 
“ஓ அப்போ சரி.” என்றவன் கீதாவை பார்த்து..
“இனி இதை நான் பார்த்துப்பேன்.. நான் உங்க கிட்ட எதிர் பார்ப்பது ஒன்றே ஒன்று தான்..நேர்மை..என் கிட்ட எதுவும் மறைக்க கூடாது. இதை போய் எப்படி சொல்வது…? 
இது எல்லாம் பெரிய விசயமா..? இப்படி நீங்களே ஏதாவது  நினச்சிட்டு என் கிட்ட சொல்லாம விட்டு இருக்க கூடாது.. நீங்க நினைக்கிற ஒரு சின்ன விசயம் தான் நாளை பெரிய விசயமா நமக்கு எதிரா வந்து நிற்க்கும்.” என்று கீதாவை அனைத்துக்கும் ஏற்பாடு செய்து தான் அனுப்பி வைத்தான்.
குருமூர்த்தி எதிர் பார்த்தது போலவே  கீதாவை தொடர்பு கொள்ளாது அவள் தங்கை பத்மினியின் பேசியில் அழைத்தான். ஜெய் நினைத்தது அந்த வக்கீல் கீதாவின் பேசியை தொடர்பு கொண்டால் அவன் கேட்கும் படி ஏதாவது செய்து விட்டால்…
இந்த விசயம் தெரிந்தால் கீதா அந்த வக்கீல் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டாள் .
ஆனால் தான் கீதாவிடம் பேசியதை அந்த வக்கீல் கேட்டால்..பெண்ணுக்கு வாதாடவே பிறந்தவன் போல் நடந்துக் கொள்ளும் அந்த வக்கீல், கீதா பின் வாங்கினாலும் இவன் பின் வாங்க மாட்டான் என்று நினைத்து தான் ஜெய்  பத்மினிக்கு அழைத்தான்.
ஜெய் பத்மினியை அழைத்த அந்த அழைப்பை குருமூர்த்தியும் ஏற்று இருக்க… “என்னம்மா மச்சினி எப்படி இருக்க…?  நீ இருப்பதுக்கு சொல்லவா வேண்டும்.. உன் அக்கா போல வத்தலா இல்லாம நீ சும்மா கும்முன்னு தான் இருப்ப…” 
எப்போதும் பத்மினியிடம்.. “என்னம்மா எப்படி இருக்க….? அப்பா நல்லா இருக்காரா..? கடை எப்படி போகுது…? எந்த உதவி என்றாலும் என் கிட்ட கேளும்மா.. மருமகன் என்பது ஒருவகையில் மகன் போல தான்.அதனால என் கிட்ட உதவி கேட்பதில் கூச்சம் எல்லாம் பட கூடாது.” என்று நான் ஒரு உயர்ந்த மனிதன் என்பது போல் பேசுபவன் இன்று பேசிய பேச்சில் பதிமினி அருவெறுத்து ஏதோ திட்ட வாய் எடுக்கும் வேளயில்..
அவனே… “என்ன மச்சினிச்சி எப்போதும் நாகரிகமா பேசுபவன் இப்போ இப்படி பேசுறேன்னு யோசிக்கிறியா…? உன் அக்கா உன் கிட்ட எல்லாம் சொல்லி இருப்பா… இனி உன் கிட்ட என் கிட்ட மறைக்க என்ன இருக்கு…? உன் அக்கா கிட்ட மறைக்காதது போலவே உன் கிட்டவும் மறைக்க நான் விரும்பல நீ விரும்பினா….?” என்று மச்சினிச்சிக்கும் நூல் விட்டான்.
“டேய் டேய் இருக்குடா உனக்கு..உன்னையும் உன் நொண்ணனையும் கோர்ட்ல சந்தி சிரிக்க வைக்கல.. வைக்கிறோம்டா…” என்று  பத்மினி கீதாவை போல் அல்லாது நன்றாகவே வாயில் இருந்து அவளுக்கு தெரிந்த வண்ணமயமான வார்த்தைகளை மாலையாய் கோர்த்து  அவனுக்கு போட்டும் பத்மினிக்கு கோபம் அடங்கவில்லை .
இன்னும் ஏதாவது திட்ட அவள் வாய் எடுத்த நொடி அவன் சொன்ன.. அந்த வார்த்தையில் பத்மினியின் வீரம் எல்லாம் எங்கோ போய் “என்ன…?என்ன…” என்று தன் கைய் பேசியை தவற விட்டாள்.
தவற விட்டது அவள் கைய் பேசியை மட்டுமா…? இல்லை கீதாவுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தையுமா….? பார்க்கலாம்.
 

Advertisement