Advertisement

“அம்மாடி, சத்தியமா உன்னோட எனக்கு முடியலை, இதுக்கெல்லாம் என்கிட்டே பதிலே கிடையாது. உன்னோட சந்தேகம் எல்லாம் நீயே வெச்சிக்கோ. என்னை கேட்கவே கேட்காதே” என்று சொல்லவும்,
“இல்லை, அது நான் உங்களுக்கு இந்த மாதிரி எதுவும் செய்யறதில்லை” என்று ஆரம்பித்தாள்…
இன்னுமே சிரித்தவன் “வேலைக்காரங்க எல்லாம் இப்படி செய்வாங்களா என்ன? ஆணோ பெண்ணோ பிடிச்சவங்களுக்கு செய்வாங்க, நான் ஒரு கணவனா எனக்கு பிடிச்ச என்னோட மனைவிக்கு செய்யறேன். அதுவுமே இதெல்லாம் உனக்கு வராதுன்னு தெரியும். அதனால எனக்கு இயல்பா வருது”
“உன்னை எத்தனை வருஷமா பார்க்கறேன், உனக்கு இதெல்லாம் செய்யவே வராது. அவ்வளவு ஏன் வெளில சொன்னா வெட்கக் கேடு, நாம யூஸ் பண்ற பாத்ரூம் வாஷ் பண்ணியிருக்கியா நீ. நான் தான் பண்றேன். ஒரு நாள் நான் பண்ணினா இன்னொரு நாள் நீன்ற மாதிரி கூட இல்லை. நம்ம பெட்ரூம்குள்ள ரூம் கிளீன் பண்ண கூட நாம வேலைக்காரங்களை விடறது கிடையாது. அதையும் நான் தான் செய்யறேன்”
“சொல்லலாம் இதை செய், இப்படி செய்ன்னு இல்லை ஹெஃல்ப்க்கு உன்னை நிக்க வெக்கலாம். ஆனா எனக்கு இப்போ வரை அது தோணலையா இல்லை மனசு வரலையா தெரியலை எனக்கே தெரியலை. உனக்கு உங்க அம்மாவும் இப்படி சொல்லிக் கொடுத்து வளர்க்கலை. உங்க அப்பா உங்க அம்மாக்கு எதுவும் செஞ்சு நீங்க பார்த்தே இருக்க மாட்டீங்க.  அதனால உனக்கு அப்படி தோணுது”
“நானும் உனக்கு எதுவும் சொல்லிக் கொடுக்கலை. நாளைக்கு என் குழந்தைங்க இப்படி பொறுப்பில்லாம வளர்றதை நான் விரும்ப மாட்டேன். அப்போ அவங்களுக்கு கத்துக் குடுக்கும் போது அவங்களோட நீயும் கத்துக்கோ” என்றான்.
ரவியின் பதில்களில் ஷர்மிக்கு வாழ்க்கையே அழகாய் தோன்றியது. அவனை இறுக்கமாய் அணைக்கும் வேகம் எழ, முயன்று அமைதியானவள் வேண்டுமென்றே, “எனக்கு பொறுப்பில்லையா?” என்று செல்லமாய் முகம் சுருக்கினாள்.
“ம்ம், கொஞ்சம், பின்னே இருந்திருந்தா உங்க அப்பாக்கிட்ட நான் எப்படி தனியா குழந்தையை வளர்பேன், எனக்கு தெரியாதேன்னு பேசுவியா?” என்று கேட்க,
“ஹி, ஹி” என்று அசடு வழிய சிரித்தவள், “ரெண்டு நாள் உங்களை விட்டுட்டு இருந்ததுல பயந்துட்டேன், என்னை விட்டுடுவீங்கலோன்னு, நீங்க இல்லாம என்னால இருக்க முடியாதேன்னு” என்று சொல்ல,      
“அப்படி எல்லாம் உன்னை ஃப்ரீயா விட்டுடுவேனா என்ன? இன்னும் உன்னை எத்தனை விதமா நான் டார்ச்சர் பண்ணனும். பேபி இருக்குறதால எதுவுமே பண்ண முடியலை” என்று கண்ணடித்தான்
“அய்யே” என்று முகம் சுளித்து, நிஜமா எனக்கு எதுவும் தெரியலைன்னு கில்டியா இருக்கு, காஃபி போடுவேன், தோசை கூட நான் சுட்டா வட்டமா வராது. ஒரு சாம்பார் கூட வைக்க தெரியாது” என்றாள் கவலையாய்.
“டிரஸ்ட் மீ, நீ அம்மாவான உடனே எல்லாம் உனக்கு தானா வந்துடும்”
அப்போதும் விடாமல், “ஆனா ஒரு ஹஸ்பண்டா எல்லாம் நீங்க எனக்கு செய்யறீங்க, ஆனா வைஃப்பா நான் எதுவும் செய்யறதில்லை” என்று சொல்ல,                       
“லூசு மாதிரி உளறாத, வீட்ல எல்லா வேலைக்கும் ஆள், சமைக்க, சுத்தம் பண்ண எல்லாம், வேற எனக்கு தேவையானது என்ன நீ செய்யாம போயிட்ட? நான் ரொம்ப ரொம்ப சாட்டிஸ்ஃபைட் என் லவ் லைஃப்ல, ஐ ஜஸ்ட் லவ் தி மொமென்ட்ஸ் வித் யூ, எனக்கு வாழும்போதே நீ சொர்கத்தை காமிக்கற” என்றான் சரசமாக.
“சீ, என்ன பேசற நீ?” என்று செல்லமாய் வெட்கப்பட்டாள்.
“இதெல்லாம் சீ யா போடி, என்னோட சொந்த வாழ்க்கையில வேலை வேலை முன்னேற்றம்ன்னு ஓடற எனக்கு சந்தோஷம் தரக் கூடிய ஒரே விஷயம் நீ மட்டும் தான். இதெல்லாம் உனக்கு புரியாது போ. அதனால தான் நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணியிருந்தா நிம்மதியா இருந்திருப்பேன்னு சொன்னது எக்ஸ்ட்ரீமா என்னை பேச வெச்சிடுச்சு” என்றவளை பார்த்தான்.
ஷர்மிளா விழி விழித்து பார்த்தாள் “பா, என்னமா பேசறாண்டா இவன்?” என்பது போல.
அந்த பாவனையில் ஈர்க்கப்பட்டவன், அவசரமாக என்ன என்று ஷர்மி உணரும்முன்னே வேகமாய் அவளின் இதழில் இதழொற்றி விலக,     
வேகமாய் சுற்றம் பார்த்தாள் ஷர்மி, “நம்மை தவிர காக்கா குருவி கூட இல்லை, பால் ஆறுது குடி” என்றான் அசராமல்.
“அப்போ எதுக்கு அவசரமா குடுத்தீங்க, எனக்கு இது பத்தாது” என்று குறைபட்டாள்.
ரவி மீண்டும் சுற்றம் பார்த்தவன், ஷர்மிளாவை பார்த்தான். அவளின் முகத்தில் அவன் நெருங்க காத்திருக்கும் ஆவல். வெளிப்புறம் கால் போட்டு காரின் இருக்கையில் அமர்ந்திருக்க. காரின் கதவிற்கும் அமர்ந்திருக்கும் அவளிற்கும் இடையில் நின்றவன், அவளின் மீது பாரம் போடாமல் சாய்ந்து காரின் கதவை அவனின் பின்புறம் சாய்த்து ஷர்மியின் முகத்தினை நெருங்க…
ரவியின் கண்கள் “நீ கொடு” என்ற பாவனை காண்பிக்க, “நீதான் கொடுக்கணும்” என்று பதிலுக்கு பார்த்திருந்தாள். சில நொடி அருகாமை அதற்கு மேல் இருவருக்கும் தாள முடியாமல் இருவர் இதழும் முற்றுகையிட, ஆவேசமாய் ஒரு முத்தம். இடைவெளி விட்டு விட்டு சில பல நிமடங்கள் விலக மனமில்லாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
பின் முயன்று இருவரும் விலகினர், ஷர்மியின் மனதில் நிறைவான புன்னகை, கூடவே “பாருடா முத்தம் எல்லாம் கேட்டு வாங்கறேன்” என்று குறைபட்டாள்.
“நீதான் என்கிட்டே இருந்து எடுத்துக்குவியே உன்னை யாரு எடுக்க வேண்டாம்னு சொன்னா?” என்று சொல்லியபடி பால் க்ளாசை திரும்ப எடுத்து கையில் கொடுத்தான்.      
அவனும் குடித்து பின் க்ளாஸ் கழுவி காரின் பின் போட்டு காரை எடுக்க நினைக்க,
அங்கேயிருந்த கிளம்ப ஷர்மிக்கு மனதேயில்லை. அது ஒரு அத்துவான காடு கிளைச்சாலை. ஒரு வாகனமோ ஒரு ஆசாமியோ இதுவரை வரவில்லை.   
என்னவோ அவனிடம் எல்லாம் பேசவேண்டும் என்று தோன்ற, “சரி என்னோட டவுட் கேட்கலை, வேற டவுட் கேட்கட்டுமா?” என்றாள்.
“டவுட் கிவுட் எதுக்கும் என்னால பதில் சொல்ல முடியாது, சொல்ல மாட்டேன்” என்றான் ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராய்.
“போ, போ, கர்ப்பமா இருக்குற மனைவி எது கேட்டாலும் ஹஸ்பன்ட் செய்வான்” என்றாள் செல்லச் சிணுங்கலாய்.
“என்ன செய்வான்? பெரிய கேட்பரீஸ் வாங்கி கொடுப்பான். அவ்வளவு தான் செய்வான், நானும் செய்யறேன்”  
“போங்க, போங்க” என்று முகம் தூக்க, அதில் இறங்கியவனாய், “கேளு கேளு, இன்னைக்கு உன் கிட்ட மாட்டிகிட்டேன் போல” என்றான் செல்லச் சலிப்பாய்.
“நேத்து ரொம்ப தெளிவா இருந்தீங்க, இன்னைக்கு கோபப்படறீங்க”
“நேத்து எங்கம்மாவும் உங்கப்பாவும் அப்செட் பண்ணினாங்க, அதை மனசுக்குள்ள சார்ட் அவுட் பண்ணினேன் தெளிவானேன். ஆனா நீ என்ன சார்ட் அவுட் பண்ற விஷயமா? நீ என்னோட வாழ்க்கைடி?” என்றான்.
“அப்போ உங்கம்மா?”
“எங்கம்மாக்கென்ன? எப்பவும் எங்கம்மா தான்! அவங்களை மாத்தவும் முடியாது, அவங்க மாறவும் மாட்டாங்க. அவங்களோட நான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போய்டுவேன். ஆனா உன்கிட்ட பண்ணனும்ன்னு இல்லை புரிஞ்சதா?”  
“சத்தியமா புரியலை”  
“போடி” என்றான் கடுப்பாக.     
“சரி விடுங்க, என்ன சொன்னார் உங்க சாமி தெளிவா இருந்தீங்க?” என்று மீண்டும் கேட்டாள்.
“ம்ம், செய்த செயலுக்கு வருத்தப்படாத, யாரும் உன்னுடைய செயலை அங்கீகரிக்க வேணும்ன்னு நினைக்காதே, உன் மனசுக்கு சரின்னு பட்டா செய்! அப்படி செய்யும் போது அதற்கான விமர்சனம் யார் செஞ்சாலும் அதை கடந்து போயிட்டே இருன்னு சொல்லிட்டார்” என்றான் புன்னகை முகமாக.
“அடப்பாவி, நீ அப்பாவி ஆகி நல்லவனாகிட்டியோன்னு நினைச்சேன்” என்று போலியாய் வருத்தம் காண்பிக்க, 
“சே, சே, அது எதுக்கு? நான் இருக்குற மாதிரியே இருக்கேன். எல்லோரும் நான் நல்லவனா? கெட்டவனான்னு கன்ஃபியுஸ் ஆகட்டும்” என்றான் விரிந்த புன்னகையுடன்.
“சரி மத்தவங்களை விடு, நீ சொல்லு, நான் நல்லவனா? கெட்டவனா?” என்று ஷர்மிளாவை பார்த்து கேட்டான்.
“இதை தான் பல வருஷமா யோசிச்சுட்டு இருக்கேன், பதில் கண்டுபிடிச்சா சொல்றேன் இல்லை நீங்களே சொல்லிடுங்க” என்றாள் அவளும் இலகுவாகவே.

Advertisement