Advertisement

அத்தியாயம் 6

ஆருத்ரா குடும்பத்தில் ஒரே பெண் குழந்தையாகிப் போக எல்லோரிடமும் செல்லம் கொஞ்சலானாள். அவள் கேட்டதும் உடனே கிடைத்து  விடும். வயதுக்கு வந்த பின் தான் வரளி நாயகி அதட்டி, அடக்க ஆரம்பித்தார். சக்கரவர்த்தியை பற்றி சொல்லவே தேவையில்லை. யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்பவர். மேனகை ஆருவை அடக்க பார்த்தால் அன்னையை அதட்டி காரியம் சாதிப்பவள். அதற்காக பிடிவாத குணமுடையவளும் அல்ல.

கார்த்திக்கின் மேல் எந்த கணம் காதல் வந்ததோ அந்த கணமே மனதில் அவனை கணவனாக நிலைநிறுத்தியும் விட்டாள்.  அவள் நினைத்தால் கார்த்தியிடம் தன் காதலை சொல்லி இருப்பாள். அவளை பொறுத்தவரையில் சொல்லி புரியவைப்பதல்ல காதல். மனத்தால் உணர வேண்டும். அதற்க்கு ஒரே வழி கார்த்தியை திருமணம் செய்வதே!

கார்த்தியின் பின்னால் அலைந்தே அவனை பற்றிய முழு விவரத்தையும் சேகரித்தவள், கவி, கார்த்திக் உறவை கண்டு வியந்தாலும், காதலில் உள்ள பொறாமை குணம் தலைத் தூக்க கார்த்திக்கு எல்லாமாக தான் மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்பினாள்.

மேனகை  அழைத்து ஆதி ஒரு  பெண்ணை காதலிப்பதாகவும் வீட்டில் நடந்ததையும்  கூறி கண்ணீர் வடிக்க  

“மாமாவா கொக்கா” சந்தோசத்தில் சீட்டியடிக்க

“நா என்ன சொல்லி கிட்டு இருக்கேன் நீ என்ன பண்ணுற?” மேனகை கோபமாக

“இங்க பாரு… மாமா யாரையும் லவ் பண்ணல நான் தான் லவ் பண்ணுறேன். நான் லவ் பண்ணுறேன்னு வீட்டுல சொன்னா பொண்ண ஒழுங்கா வளர்க்கல னு உங்கம்மா உன்னைத்தான் கேள்வி கேப்பாங்க, அதான் மாமா தன் மேல பலி விழுந்தாலும் பரவாலைனு அப்படி சொல்லி இருக்கிறார். புரிஞ்சுதா? அமைதியா வந்து பொண்ணு பாத்துட்டு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுற. இல்லையா நா ஓடிப்போய் கல்யாணம் பண்ணிப்பேன். என் புருஷன் வேற போலீஸ்காரன். பாத்து நடந்துக்க” அன்னையையே மிரட்டியவள் மறுமுனையில் பதிலையும் எதிர் பார்க்காது அலைபேசியை அனைத்து விட்டாள்.   

ஆருத்ராவுக்கு சந்தோசம் தாள முடியவில்லை.  காதலிப்பவனிடமே சொல்லவில்லை. தன் காதல் கைகூடுமா? என்ற கவலையில் இருந்தவளுக்கு பெண்பார்க்க சென்னை வருவதாக ஆதி குறுந்செய்தி அனுப்பி இருக்க, முதலில் செய்தது கோவிலுக்கு சென்று எல்லாம் நல்லபடியாக நடந்தேற வேண்டும் என்று வேண்டிக்கொண்டதே!

பொண்ணு எடுத்து பொண்ணு கொடுப்பதால் ஆருவை கவியின் வீட்டுக்கு அழைத்து செல்ல வரளி பாட்டி மறுக்க, பெண் பார்க்கும் படலம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஒரு விருந்தினர் அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவ்விருந்தினர் அறையோ இரண்டு உள்ளறைகளை குளியலறையோடு கொண்டு, பன்னிரண்டு பேர் அமரக்கூடிய சாப்பாட்டு மேசையும், இரண்டு சோபாக்களும், ஊஞ்சலுடன் கூடிய இரண்டு பக்கமும் பால்கனியும், இருவர் அமரக் கூடிய சிறு மேசையுடன் கதிரைகளும், வண்ண வண்ண விளக்குகளும், மனம் வீசும் மலர்களும் என்று பணத்தை நீராய் இறைத்து அவ்வறை மினி சொர்க்கமாக காட்ச்சியளித்துக் கொண்டிருந்தது.

இரண்டு குடும்பத்திலும் பேச்சு வார்த்தை ஆதி, வானதியின் இடையிலையே நடைபெற்றது. அந்த ஹோட்டல் ஆதிக்கு நன்கு தெரிந்தவருடையதாக இருக்க, எல்லா ஏற்பாட்டையும் வானதியே கவனித்துக் கொண்டார்.

பெண் பார்க்கும் படலம் என்பதால் கவிக்கு புடவை கட்டுமாறு வானதி வற்புறுத்த ஒரு டிசைனர் சாரியை கட்டியிருந்தாள் கவி. ஆருவோ கார்த்திக்கை கவரவென அழகிய வேலைப்பாடுகளோடு ஒரு டிசைனர் புடவையை தேர்ந்தெடுத்திருக்க, வரளி நாயகி பட்டுப்புடவை கட்டுமாறு உத்தரவிட்டிருந்தார். கனமான பட்டுப்புடவையை தலை நிறைய மல்லிகை பூ சூடி கல்யாண பெண் போலவே ஆருவும், டிசைனர் புடவையில் சின்ன நெற்றிப் பொட்டோடு தேவதையாய் கவியும் தயாராகி வந்தனர்.

ஹோட்டலுக்கு முதலில் வந்தது வானதியும், ராணியும், கவியும். கார்த்தி தன்னிடம் காதலை மறைத்து விட்டதாக கடுப்பில் இருந்த கவிக்கு அப்படி யாரை விரும்புகிறான் என்ற ஆவல் எட்டிப் பார்க்க, தன்னையும் பெண்பார்க்க வருகிறார்கள் என்பதை மறந்து விட்டாள்.

ஆதித்யா போர்மல் ட்ரெஸ்ஸில் தயாராகி வர வரளி நாயகி அவனையும் பட்டு வேட்டி சட்டையில் வருமாறு வற்புறுத்த

“டேய் மாப்பு உன் டிரஸ் கோட்டை மாத்தவே முடியாது. செலவும் மிச்சம்” என்று சீனு நக்கலடிக்க, வரளி பாட்டியின் வழியிலையே போய் தான் அவரை மடக்க வேண்டும் என்று நன்கு அறிந்தவனாக. சீனுவை  முறைப்பதை தவிர ஆதித்யாவுக்கு வேறு வழி தெரியவில்லை.

ஒருவாறு ஆதித்யாவின் குடும்பம் மொத்தமும் ஹோட்டலையடைய வணக்கம் வைத்தவாறு வானதி அனைவரையும் வரவேற்று அமர வைக்க, ஆருவின் கண்கள் கார்த்திக்கை தான் தேடியது.

ஆண்கள் நால்வரும் ஒரு சோபாவிலும் பெண்கள் மூவரும் ஒரு சோபாவிலும் அமர. வானதி தனியாக இருந்த சோபாவில் அமர்ந்து கொள்ள இருவர் அமரக் கூடிய மற்றுமொரு சோபாவில் ராணி அமர்ந்தார். 

“என்ன இது ரெண்டு பொம்பளைங்க மட்டும் இருக்காங்க? ஆம்பளைங்க இல்லாத வீடா?” மேனகை வேண்டுமென்றே கேக்க, ஆதித்யா பதில் சொல்ல முன் வானதியே சொல்லலானார்.

“என் கணவரும், கார்த்தியின் அப்பாவும் இராணுவத்தை சேர்ந்தவங்க இல்லையா? திடீரென அவங்களால வரமுடியல” அத்தோடு பேச்சை வானதி நிறுத்தி விட்டு அனைவருக்கும் அருந்த குளிர்பானம் கொடுக்க,

“கார்த்தி எங்க அத்த?” ஆதித்யா தான் கேட்டான்.

அவனின் “அத்த” என்ற விழிப்பிளையே முகம் மலர “ஒரு முக்கியமான கேஸ் விஷயமா கமிஷ்னரை பாக்க போய் இருக்கான். இப்போ வந்துடுவான்”

வந்த நேரத்திலிருந்தே  வரளி நாயகியின் கண்கள் வானதியை எடை போட்டுக்  கொண்டிருந்தது. படித்த மேதாவி என்று முகத்தில் எழுதி ஒட்டி இருக்க, திமிரும், ஆணவமும் நிறைந்தவளா இருப்பாளோ!

“அது சரி உங்க வீட்டு ஆளுங்க, மாப்புள வீட்டு ஆளுங்க யாராச்சும் ஆம்புளைங்க இருக்கணுமில்ல?” மேனகை தான் வாயை திறந்தாள்.

“எதுக்கு பாக்கு வெத்தலையை போட்டு குதப்பி இங்க இருக்குற பூச்சாடில துப்பவா?” சீனு மேனி வலிக்காமல் சொல்ல மேனகை அவனை முறைக்க ஆருத்ரா அன்னையை முறைக்கலானாள்.

“அம்மா வாய முடி கிட்டு அமைதியா இருக்குறதென்றா இரு. உன்னால ஏதாவது பிரச்சினை வந்து என் கல்யாணம் நின்னு போச்சு னு வை ஓடுகாலிய பெத்தவ என்ற பேருதான் உனக்கு வரும்” அன்னையை அடிக்குரலில் மிரட்டினாள் ஆருத்ரா.

“இவங்க யாரு?” ராணியை காட்டி கர்ண விஜயேந்திரன் கேக்க

“நான் தத்தெடுத்த அம்மா” என்றவாறே வந்த கவி ராணியின் அருகில் அமர்ந்து கொள்ள அங்கே ஆதியையும், ஆருவையும் கண்டு திகைத்து நின்றாள். அடுத்த நொடி கவி ஆருவை முறைக்க, ஆரு கவியை முறைக்கலானாள்.

“என்ன சொல்லுறா இவ?” என்ற ஆராய்ச்சி பார்வை தான் அனைவரிடமும். ஆதி ராணியை பற்றி சுருக்கமாக தாத்தா, பாட்டியிடம் எடுத்துக் கூற, கவியை வரளி நாயகிக்கு கொஞ்சம் பிடித்துப் போனது.

“ஓஹ் அப்போ அன்னைக்கி கார் கீ இந்த தக்காளியை எங்கயோ பாத்திருக்கேன் என்று பிட்ட போட்டு என் கிட்ட அவளை காதலிக்கிறதா சொல்லத்தான் பார்த்தானா? நான் தான் அது தெரியாம இவளை திட்டி அவன் வாய அடச்சிட்டேனா? அப்போ அவன்கண்ணன்தான் மாப்பிள்ளையா?” ஆதித்யாவை பார்த்தவளின் மனம் கொஞ்சம் ஏமாற்றம் அடைய, கார்த்திக்காக கல்யாணம் செய்வதாக சொல்லியாச்சு யாரா இருந்தா என்ன” கவியின் எண்ணம் இவ்வாறே இருந்தது.         

ஊர் கதைகளையும், ஆரு, கவியின் படிப்பை பற்றியும் பேச்சாக இருந்ததே ஒழிய யாரும் கல்யாண பேச்சை ஆரம்பிப்பதாக தெரியவில்லை. கார்த்திக் வேறு வர தாமதமாக ஆருவின் பதட்டம் கூடிக்கொண்டே போனது.

கவிக்கு எந்த வித பதட்டமும் இல்லை. அவள் கண்கள் ஆதித்யாவை தான் அளவிட்டுக் கொண்டிருந்தது. “பார்க்க ஹீரோ மாதிரி இருக்கான். இவன் எப்படி எம்.எல்.ஏ ஆனான். ஒரு வேல படிக்காம தருதலையா சுத்தினவனைத்தான் ஊர் மக்கள் நல்லவன் என்று நம்பி ஒட்டு போட்டாங்களோ என்னமோ! பொண்ணு பார்க்க பாண்ட், ஷார்ட் போட்டு வந்திருக்க கூடாது? பட்டிக்காடு, பட்டிக்காடு” உதட்டை  சுளித்து  நக்கலாக எண்ணிக் கொள்ள

தாத்தாவோடு பேசிக் கொண்டிருந்தாலும் கவியை கவனித்துக் கொண்டிருந்த ஆதிக்கு அவளின் முகபாவனைகளை, கடைசியில் அவள் உதட்டை சுளித்த விதமும் நெஞ்சை கொள்ளை கொள்ள அவளின் எண்ணப் போக்கை கைப்பற்ற மறந்தான்.

“ரொம்ப தூரத்திலிருந்து வந்திருக்கிறீங்க, பசிக்கும் சாப்பிட்டுட்டு மத்த விஷயங்களை பேசுவோமா?” ராணி தான் நியாபகப் படுத்தினார். ஆண்கள் இல்லாமல் வானதியிடம் என்ன பேசுவது என்று கர்ண விஜயேந்திரன் தயங்க மனைவியை பார்க்கலானார்.

ஆதி ஆசைபட்டன் என்பதற்காக கவியை கண்மூடி ஏற்றுக் கொள்ள வரளி நாயகி தயாராக இல்லை. கவியை பற்றி எதுவும் தெரியாது. அவளிடமே கேட்டு தெளிவு படுத்திக்க கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்தது.

“பசங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் புடிச்சு போச்சு” வரளி நாயகி கவி, ஆதியை  பற்றி சொல்ல கவியோ கார்த்தியின் மேல் மேலும் கோபப்பட்டாள்.

“எங்க வீட்டு பொண்ணு டாக்டருக்கு படிக்கிறா? நீ என்னம்மா செய்ற?” கொஞ்சம் பெருமை எட்டிப் பார்க்க வரளி நாயகி

“நானும் மெடிக்கல் தான் பாட்டி” அவரின் வயசை வைத்து கவி சாதாரணமாக பாட்டி என்று விட ஆதியின் முகத்தில் புன்னகை.  

அவள் சொன்னது புரியாமல் அவர் முழிக்க சீனு அவருக்கு புரியும் படி “ஆரு ரெண்டாம் கிளாஸ் பாட்டி, கவி சிஸ்டர் நாலாம் கிளாஸ்” என்று கைவிரல் கொண்டு காட்ட ஆருவை விட பெரிய படிப்பு என்று மனம் குளிர்ந்தார் வரளி நாயகி. ஆரு சீனுவை முறைக்க, சீனு கவியை சிஸ்டர் என்றதில் “அப்போ ஆதி தான் மாப்பிள்ளையா?’ மனதில் நிம்மதி பரவ அதை உணரும் நிலையில் கவி இல்லை.

“பாட, தெரியுமா? ஆட தெரியுமா? சமைக்க தெரியுமா?” என்றெல்லாம் வரளி நாயகி கேள்வி எழுப்ப எல்லாவற்றுக்கும் சீனுவே கவுண்டர் கொடுக்கலானான்.

“ஆமாம் பாட்டி அவங்களுக்கு நிரஞ்சனா ரமணன் வாய்ஸ், மைக்கல் ஜேக்சன் போல நல்லாவே ஆடுவாங்க, சமையல் மட்டும் சுமாரா பண்ணுவாங்கலாம்” ஆருவுக்கு சிரிப்பு பீறிட்டு வரவே

“அவங்க டாக்டருக்கு படிக்கிறவங்க பாட்டி இதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்க போகுது, நான் கூட வீட்டுல இருந்தாலும் படிப்பேன் இல்லையா” ஆருத்ரா கவியிடம் நட்புக் கரம் நீட்ட

கவியும் புன்னகைத்தவாறே “சமையல் மட்டும் கொஞ்சம் தெரியும் பாட்டி ஆனாலும் சமையல்கட்டு பக்கம் போக மாட்டேன்” உண்மையை உள்ள படியே சொல்ல

“நீ எதுக்கு மா சமையல் கட்டுக்குள்ள போகணும், உத்தரவு போட்டா உனக்கு என்ன வேணுமோ செய்ஞ்சு கொடுக்க, வேலைக்கு நிறைய பேர் எங்க ஜமீன்ல இருக்காங்க” கர்ண விஜயேந்திரன் அன்பாக சொல்ல அவரை நன்றியோடு ராணி பார்த்தார்.

ஆருவிடம் ராணியோ, வானதியோ எந்த கேள்வியும் கேட்க வில்லை. அது மேனகைக்கு ஒரு மிதப்பை கொடுத்திருந்தது. “என் மகள் ஜமீன் பொண்ணு அதான் எந்த கேள்வியும் கேக்காம இருக்காங்க” மனதுக்குள் பெருமையடித்துக் கொண்டிருந்தவள் “அப்படியெல்லாம் உன்ன விட்டுடுவேனா” என்று அன்பு மகன் சீனு நினைத்தானோ என்னமோ

“கவி சிஸ்டர் பரவாளையே உங்களுக்கு சமையலறை எங்க இருக்குனு தெரிஞ்சிருக்கு, எங்க பொம்முவுக்கு சாப்பிட மட்டும் தான் தெரியும். அவ சைஸ பார்த்தாவே புரியும். இவளெல்லாம் டாக்டராகி எத்துனை பேர கொல்ல போறாளோ!”  என்றும் போல் சீனு பேசி விட பொண்ணு பார்க்க வந்திருப்பவர்களிடம் இப்படியா பேசி வைப்பது என்று ஜமீன் பரம்பரையே அவனை முறைத்தது.

அதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட வானதியோ “நீ டாக்டராகி ஹாஸ்பிடல், நோயாளினு என்று அலையும் போது உனக்கு சமைக்கவே நேரம் இருக்காது, அத நாங்க பாத்துகிறோம். உன் புருஷன மட்டும் நேரத்துக்கு சாப்பிட வைமா… ” என்று புன்னகைக்க ஆருவுக்கு வானதியை ரொம்பவே பிடித்துப் போனது.

“ஐ ஏம் ரியலி சாரி. ஒரு கேஸ் விஷயமா கமிஷ்னரை பாத்து பேசியத்துல நேரம் போனதே தெரியல” சபை நாகரீகத்தோடு மன்னிப்பு கேட்டவாறே வந்த கார்த்தி ஆதியோடு கை குலுக்கி விட்டு மற்றவர்களுக்கு பொதுவாக ஒரு வணக்கத்தை வைத்தான் ஒழிய தனக்காக அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

“சரி எல்லாரும் சாப்பிடுவாங்க மத்ததெல்லாம் சாப்பிட்ட பிறகு பேசலாம்” வானதி தன்மையாக அழைக்க

“மேனகா போய் கூடமாட ஒத்தாசை பண்ணு, உன் பொண்ணையும் பொண்ணு பார்க்கத்தான் வந்திருக்காங்க, அவங்களும் மாப்பிள வீடுதான்” வரளி நாயகி மேனகையை விரட்ட

“அம்மா இருக்கட்டும் பாட்டி. நா பாத்துக்கிறேன்” அன்னை ஏதாவது பேசி விடுவாரோ என்று அஞ்சி ஆரு ராணியை பின் தொடர்ந்தாள்.

அமைதியாக அங்கே நடப்பதை பாத்திருந்த கவிக்கு வரளி நாயகித்தான்  இந்த குடும்பத்தின் ஆணிவேர் என்று புரிய அவரோடு சிலவிஷயங்களை பேச வேண்டும் என்று முடிவு செய்தாள்.

தங்கள் ஜோடிகளோடு அமர ஆதியும், ஆருவும் எதிர்பாத்திருக்க,  ஜமீன் குடும்பம் ஒரு பக்கமும், மிலிட்டரி குடும்பம் ஒரு பக்கமும் என்று அமர, அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று ஆதியிடம் கேட்டறிந்தே வானதி ஏற்பாடு செய்திருந்தார். 

“யார் பரிமாறுவாங்க” வந்ததிலிருந்தே அமைதியாக இருந்த சக்கரவர்த்தி வாய் திறக்க,

“ஏன் உனக்கு பசிச்சா நீ பரிமாறி கிட்டு சாப்பிட மாட்டியா? அதுக்காக ஊர்ல இருந்து ஆளையா கூட்டிட்டு வர முடியும். உன் பொண்டாட்டிய பரிமாற சொல்லு. இல்லையா சாப்பிடமா உக்காந்திரு” இந்த தடவ சீனு உசாராக குரலை தாழ்த்தி சக்கரவர்த்தியை தாக்க

“என்ன சீனு” என்ற ஆதியின் குரலுக்கு

“ஒண்ணுமில்ல மச்சான் நா பரிமாறுறேன்னு சொன்னேன். அம்மா பரிமாறினா தான் சாப்பிடுவாராம்” என்று இளிக்க

“மகனே நானே போட்டு சாப்பிடுறேன். அதுக்காக என் சோத்துல கைய வைச்சிடாத” என்றவர் “போலீஸ்காரரே! நீங்க திருடனை விரட்டி பிடிப்பீங்களா? இல்ல ஓட விட்டு சூடுவீங்களா? முதல்ல உங்க துப்பாக்கி சுடுமா?” என்றவர் சத்தமாக சிரிக்க சீனு தலையில் அடித்துக் கொண்டான்.

சக்கரவர்த்தி என்ன மாதிரி என்று இன்று வரை யாரும்க்குமே புரியவில்லை. சபையில் என்ன பேச வேண்டும்? யாரிடம் என்ன பேச வேண்டும் என்ற வரை முறை புரியாமல் பேசி விடுபவர். ஆருத்ரா தந்தையை முறைக்க,

சீனுவோ “இவர் வாய் தான் எனக்கு வந்திருக்கு” என்று முணுமுணுக்க கார்த்திக் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு

“சுடும் மாமா. ஓடாதே நில்லு னு சொல்லியும் அவன் ஓடினா விரட்டி போய் சுட்டுடுவேன்” என்று புன்னகைக்க, ஆருத்ரா தன்னவனை கண் சிமிட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தாள்.

“கார்த்திக் நீங்க என் தங்கச்சி கட்டிக்க போறீங்க உங்கள நா மாப்புளனே! கூப்பிடலாம் இல்ல”  சீனு கண்சிமிட்டியவாறே “துப்பாக்கி சுடுதான்னு கேட்டாரில்ல ஓட சொல்லி சுடுங்க நம்பிடுவார்” என்றவன் அமைதியாக சாப்பிடலானான்.

“என்ன போட்டு தள்ளுறதுலையே நீ குறியா இருக்க” கோபமாக சொன்ன சக்கரவர்த்தி மேனகையின் புறம் திரும்பி “அந்த மீன வை சாப்பிட்டுட்டே செத்து போறேன்”

இவர்களின் நக்கல், நையாண்டி பேச்சில் கவி சிரித்தவாறே சாப்பிட “கல்யாணத்த ஒழுங்கா பேசி முடிப்பாங்களா?” என்ற சந்தேகம் ஆருத்ராவுக்கு வந்தது. 

பெண்கள் ஊர் கதைகளையும், ஆண்கள் நாட்டு நடப்பையும் பேசியவாறே உண்டு முடித்து கல்யாண பேச்சை ஆரம்பிக்க சோபாவில் அமர்ந்தனர்.

“சாம்பிரதாயப்படி பொண்ணு பார்க்க வந்திருக்கணும், என் பையன் வேலையும், வீட்டுக்கு மாப்பிள்ளையா வரப்போற தம்பி போலீஸ் வேளையில்  இருக்குறதாலயும், பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்க போறோம், அவங்க வேற படிக்கிறதாலையும் இப்படி திடு திடுப்பென்று ஏற்பாடு பண்ண வேண்டியதா போச்சு” வரளி நாயகி பேச்சை ஆரம்பிக்க

“காலத்துக்கு ஏத்தா மாதிரி நாமளும் மாற வேண்டி இருக்கு” வானதியும் இன்முகமாக சொல்ல

“ஜமீன் சோத்துல பாதி சொத்து என் பொண்ணுக்கு தான் அதுல பாதி ஆருவுக்கு வரும்” எடுத்த எடுப்பிளையே வரளி நாயகி சொத்தை பற்றி பேச கார்த்திக் முகம் மாறினான்.

அதை கண்ட ஆருத்ராவோ! “பாட்டி என் சொத்துக்காக அவங்க பொண்ணு எடுக்கல இப்போ எதுக்கு இந்த பேச்சு”

“இல்லமா கல்யாணம் என்று வரும் போது எல்லா விஷயமும் பேச வேண்டி இருக்கு” என்றார் கர்ண விஜவேந்திரன்.

“தோட்டம், தொரவு, மில்லு னு இருந்தாலும் எல்லாம் பாத்துகிறது ஆதியும், என் கணவரும் தான். என் தலையீடு கொஞ்சம் இருக்கும். மாப்புள போலீஸ் என்கிறதால இது எல்லாம் அவருக்கு ஈடு பாடு இருக்குமோ! தெரியல. இருக்குற சொத்தை வரும் சந்ததிகளுக்குக்காக காப்பாத்திக்க கொடுக்கணுமில்ல” வரளி நாயகி சொல்ல  வானதிக்கு அவர் பேச்சில் நியாயம் இருப்பதாகவே தோன்றியது.

“அதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணலாம் பாட்டி” ஆதித்யா “இப்போ இந்த பேச்சு வேணாம் என்ற ரீதியில் தடுக்க,

“சீதனம் நாங்க எதிர் பார்க்க மாட்டோம், உங்க பொண்ணுக்கு என்ன செய்ரீங்களோ நீங்க செய்ங்க” பொதுவாக கல்யாணம் என்றாலே பெண்கள் பேசுவதை பேசினார் வரளி நாயகி.

“பெருசா சொத்து னு எதுவும் என் பொண்ணுக்கு நா சேர்த்து வைக்கல, அவ படிப்புதான் அவளுக்கான சொத்து. கொஞ்சம் நக சேர்த்து வச்சிருக்கேன். கல்யாண செலவும் எல்லாம் நாங்களே செய்ரோம். கார்த்திக் அம்மா நகைகள் அவனுக்கு வரப்போற பெண்ணுக்காக பத்திர படுத்தி வச்சிருக்கேன்” வேறு என்ன என்ற ரீதியில் வானதி நிற்க,

“அப்போ நிச்சயத்துக்கு நாள் குறிக்கலாமா?” கர்ண விஜயேந்திரன் கேக்க

“மாப்பு என்னடா நடக்குது இங்க பொண்ணுக்கு மாப்பிள்ளையும், மாப்பிளைக்கு பொண்ணையும் புடிக்க வேணாமா? கவி சிஸ்டர் வேற முறைச்சு கிட்டே நிக்குறாங்க, எதுக்கும் தனியா பேசிட்டு” சீனு ஆதியின் காதை கடிக்க,

“அதற்க்கு முதல் நா எம்.எல்.ஏ சார் கிட்ட தனியா பேசணும்” கவி பால்கனி பக்கம் நகர

“மாப்பு உன் ஆளுக்கு ரொம்பதான் தைரியம். போ.. போய் பேசு” சீனு கிண்டலடிக்க

“இவ என்ன பிரச்சினையை கிளப்ப போறாளோ!” என்ற சிந்தனையிலையே கவியை பின் தொடர்ந்த ஆதிக்கு அவள் கல்யாணத்தை நிறுத்த சொன்னதை இரண்டு கைகளையும் கோர்த்து தாடை மீது  வைத்து பார்த்திருந்தான்.

  

Advertisement