Advertisement

அத்தியாயம் 2

அந்த காலைப்பொழுதில் மெடிக்கல் காலேஜ் வாசலில் வந்து நின்ற  பஸ்ஸில் இருந்து இறங்கிய  மாணவியர்கள் சிலர் அங்கே இருந்த மரத்தடியில் காத்திருக்க, ஸ்கூட்டியில் வந்த சிலரும் நின்றிருந்தனர். கார்த்திக்கோடு அவனின் பல்சரில் வந்திறங்கினாள் கவிலயா.

“ஹாய் டி..” அவளுடைய நண்பிகள் அனைவரும் கையசைக்க

“கார்.. கீ நீ திரும்பிப் பார்க்காம அப்படியே போய்டு” நண்பிகளுக்கு ஹாய் சொன்னவள் கார்த்திக்கின் காதில் சொல்ல புன்னகைத்தவன்

“ஒரு பொண்ணையாச்சும் சைட் அடிக்க விடுறியா? அட்லீஸ்ட் இண்டடியூஸ் பண்ணியாச்சும் வைக்கலாமில்ல”

“செருப்பு பிஞ்சிடும். பேசாம போய்டு இல்ல போலீஸ்னு கூட பாக்க மாட்டேன்” கவி பல்கலைக் கடிக்க

அவளின் முகத்தில் விழும் முடியை ஒதுக்கி விட்டவன் “காலைலயே டென்ஷன் ஆகாது அம்மு. ஒழுங்கா படி” அவளின் கன்னம் கிள்ளி விட்டே பைக்கை கிளப்பினான்.

நுழைவாயிலில் இந்த காட்ச்சி அரங்கேற ஆயிரம் கண்கள் அவர்களை பார்க்க, பொறாமையாய் சில விழிகள்.

“ஏன் டி நாலு வருசமா எங்க கூட படிக்கிற உனக்கொரு அண்ணன் இருக்கிறதே இந்த ஒரு வாரமா தான் தெரியும். உங்கண்ணன எங்களுக்கு இண்டடியூஸ் பண்ணி வைக்க மாட்டியா?” கீதா பொரும

“அவன் என் அண்ணன்னு நா சொன்னேனா? அவன் என் பி.எப்” அவளை முறைத்தவள் அமைதியாக நடக்க,

ஆ… என்று வாயை பிளந்தனர் தோழிகள்.

“கங்கிராட்ஸ் டி. ரொம்ப ஹண்டசம்மா இருக்குறாரு, ஜோடி பொருத்தம் சூப்பர்” எல்லா குரல்களும் வாழ்த்தினாலும், பொறாமையும், துக்கமும் இழையோடியது.

பின்ன இருக்காதா நாலு வருடங்களாக கவிலாயாவை தெரியும். கவிலயா அந்த மெடிக்கல் காலேஜ் சேர்ந்த அன்றிலிருந்து கீதா, குமுதா, பிரபா, நிகிதா, அனைவரும் தோழிகள். எல்லா அரட்டையும் காலேஜ் உள்ளே! மட்டும் தான். தன்னை பற்றி அதிகம் பகிரவும் மாட்டாள். அவளின் விருப்பு, வெறுப்பு கூட இவர்களுக்கு இன்னும் சரியாக தெரியாது. வெளியே கண்டால் அதிகம் பேசவும் மாட்டாள். அவள் அவர்களுக்கு புரியாத புதிராகவே இருக்க,

 இந்த ஒரு வாரமாய் பல்சரில் ஒருவன் அவளை பிக்கப்பு, ட்ராப்பு னு சேவகம் செய்ய, அவனின் அழகும், கம்பீரமும், அவனை பற்றி அறிந்துக் கொள்ள தூண்டி இருக்க, கவியிடம் என்ன கேட்டாலும் புன்னகை முகமாக நகர்ந்து விட இன்று உண்மையை வர வழைத்து விட வேண்டும் என்று தான் கீதா அவ்வாறு கேட்டாள்.

ஆனாலும் மனதுக்குள் “இவளோட அண்ணனாகவே இருக்கணும்” என்று வேண்டுதல் வேறு வைக்க அவளின் வேண்டுதலை நிராகரித்த கடவுள் அவளுக்கு அதிர்ச்சி கொடுத்து விட்டார்.

அவளின் டிபார்ட்மெண்டில் சில பெண்களும் அவனை சைட் அடிக்க தவம் கிடக்க கவியின் பி.எப் என்ற வார்த்தை நரசமாய் ஒலிக்க

“அடுத்தவ பாய் பிரெண்டுக்கு ரூட்டு விடுறதே நமக்கு வேலையா போச்சு” என்று சிலர் முணுமுணுக்க,

“கடவுளே பிக்கப்பு என்று ஒன்று இருந்தா.. ட்ராப்பு னு ஒன்னு இருக்கும், லவ் னு ஒன்னு இருந்த பிரேக் அப் னு ஒன்னு இருக்கு கவிகு பிரேக் ஆ…ப்ப சீக்கிரம் கொடு” என்ற பிராத்தினையும் வைத்தவாறே தங்களது வகுப்புக்களை நோக்கி நடந்தனர். 

   “சரியான கூமுட்டைங்க” பின்னாடி வரும் தோழிகளை வசை பாடியவாறே முன்னாள் நடந்தாள் கவி.

பிரேக் டைமில் அவளிடம் ட்ரீட் கேட்டு தோழிகள் படுத்தியெடுக்க,   “எனக்கு கல்யாணம் ஆனா என் புருஷன் கூட வந்து ட்ரீட் தரேன்” என்று கறாராக சொல்ல இதற்க்கு மேல் அவளை வற்புறுத்த முடியாதென்று தோழிகளும் விட்டுவிட்டனர்.

   வானதிதேவிக்கும், பித்யுத் பாண்டேக்கும் பிறந்த பேரழகிதான் கவிலயா. மதுரையில் ஒரு சிற்ரூரில் பிறந்து வளர்ந்த வானதிதேவிக்கு இரண்டு அண்ணன்கள், அப்பா செல்வபாண்டியன் ஊரில் மதிப்பும், மரியாதையும் குறையாது வாழ்ந்து கொண்டிருக்கும், ஊர் பஞ்சாயத்தில் முதல்மை வகிக்கும் உறுப்பினரும் கூட. மதுரையை மீனாச்சி ஆண்டாளும் அங்கே பெண்களுக்கு சம உரிமை இல்லை. வீட்டு வேலைகளோடு பெண்கள் இருந்து கொள்ளட்டும் என்று நினைக்கும் அப்பாவிடம் காலேஜ் படிக்கணும் என்று சொன்னதுக்கே கன்னத்தில் அரைவாங்கினாள் வானதி.

உயிர் தோழி சகுந்தலாவின் கல்யாணம் ஊரிலையே நடந்ததால் அங்கு செல்ல வீட்டார் அவளுக்கு தடைவிதிக்க வில்லை. சகுந்தலாவின் வருங்கால கணவர் மிலிட்டரியில் இருக்கின்றான் என்ற வரைக்கும் தான் தெரியும். தோழியின் கல்யாணத்தில் தான் பித்யுத்தை சந்தித்தாள். அவள் எங்கே சந்தித்தாள் வந்ததிலிருந்தே அவளை பாத்திருந்தவன் சந்திக்க சமயம் பாத்திருந்து காதலையும் சொல்லி விட்டான்.

பாடசாலை வாழ்க்கை முடிந்த உடனே சகுந்தலாவுக்கு அவளுடைய தாய்மாமன் பட்டாளத்து மாப்பிள்ளை சித்தார்த்துடன் கல்யாணம். அவனும் மிலிட்டரியில் சேர்ந்து ஒருவருடம் கூட இல்லை. பொண்ணு படிப்பை முடிச்சிட்டா சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் அக்கா அவனை பேசியே கரைத்திருக்க, மனதுக்கு இனியவளை மணக்க கசக்குமா? உடனே சரி என்று சொல்ல லீவில் ஊருக்கு செல்ல தயாரான நண்பனையும் இழுத்து வந்து விட்டான்.

பித்யுத் வந்ததிலிருந்தே வித்தியாசமான கலாச்சாரத்தை ரசித்தவன், பட்டு சேலையில், தலை நிறைய மல்லிகை பூ சூடி, பொருத்தமான அணிகலன்களுடன் பாதககொலுசு கிண்கிணி நாத்தமிசைக்க அழகுச் சிலையாய் வளம் வந்த வானதியின் மேல் காதல் கொள்ள அவள் பின்னாடியே அலைந்தான். தனியாக ஏதோ அறைக்குள் சென்றவளை வழி மறைத்து காதலை சொல்ல அவள் சொன்னதோ

“நா படிக்கணும். கல்யாணத்துக்கு அப்பொறம் என்ன படிக்க வைக்கிறீங்களா?”

சித்தார்த்தோடு மிலிட்டரி உடையில் கம்பீரமாக வந்திறங்கிய பித்யுத்தை அவளும் ரசித்தாள் தான் அது காதல் என்ற எண்ணமெல்லாம் இல்லை. “பார்க்க ஹிந்தி நடிகன் மாதிரி இருக்கான்” அவ்வளவுதான் அவளின் பார்வையின் அளவு. “வடநாட்டில் பெண்கள் கல்வி கற்கிறார்கள், வேலைக்கு செல்கிறார்கள் வீட்டில் தடையில்லை” என்று  தோழி ஒருத்தி சொன்னதை வைத்து காதலை சொன்னவனிடம் இப்படிக்கு கேட்டு வைத்தாள்.

புன்னகை முகமாகவே சரியென்று தலையாட்டியவன் அத்தோடு நிறுத்தவில்லை. அவளுக்கு பிடித்த படிப்புக்கான புத்தகங்களை வாங்கி தபால் மூலம் அனுப்பிக் கொண்டு தான் இருந்தான்.

சகுந்தலா கல்யாணம் முடிந்த பின் சித்தார்த்தோடு டில்லியில் குடிசெல்ல சகுந்தலாவிடமிருந்து வரும் கடிதங்களில் பித்யுத்தின் கடிதங்களும் இருக்க வானதியின் காதல் வீட்டாருக்கு தெரியாமலையே போய்விட்டது. 

சித்தார்த்துக்கும், சகுந்தலாவுக்கும் இவர்களின் காதல் தெரியும் என்றாலும் வெளியே யாரிடமும் சொல்லவில்லை. வானத்திற்கு  வீட்டில் மாப்பிளை பார்க்கும் நேரம் “நா படிக்கணும், வீட்டை விட்டு போறேன்” என்று தான் கடிதம் எழுதி வைத்து, வீட்டை விட்டு தோழியை காண டெல்லி புறப்பட்டாள்.

மூணு வருடங்கள் பித்யுத்தோடு கடித்தத் தொடர்ப்பில் இருந்தாலும், பாஷையும் இருவருக்கும் நடுவில் மதில் சுவரை எழுப்பியிருக்க, காதல் மொழி பேசி இருவருமே கொஞ்சவில்லை. எல்லாம் சாதாரணப் பேச்சுக்கள் தான். அவள் படிக்கட்டும் என்று இவன் இருக்க, அவனின்  மனதை படிக்க  இவள் முயற்சிக்கவுமில்லை.

சகுந்தலாவிடம் வந்து சேர்ந்த பின் தான் ஹிந்தியும் கற்றுக் கொண்டாள். அந்த நேரம் சகுந்தலா கர்ப்பமாக “இந்த விஷயம் தெரிந்தால் சகுவை அழைத்து செல்ல அக்கா வருவாளே! இங்கே இருக்கும் தேவியை கண்டால் ஊருக்கு விஷயம் தெரியவரும்” என்று சித்தார்த் சொல்ல உடனே பித்யுத்க்கும், வானத்திக்கும் எளிமையாக டில்லியில் திருமணம் நடந்து அவர்களின் வீட்டுப் பக்கத்திலையே குடியமர்ந்தனர். 

சகுந்தலாவை பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்த சித்தார்த் அவளின் பிரசவ சமயம் அவளோடு இருக்கவேண்டி காலம் நேரம் பார்க்காமல் டியூட்டியில் இருக்க, எட்டாம் மாதமே வழுக்கி விழுந்த சகுந்தலாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதகக சித்தார்த்துக்கு அலைபேசி வழியாக தகவல் சொல்ல கூடவே சகுந்தலாவின் பிரசவம் சிக்கலாகி இறந்து விட்ட செய்தியும். 

டியூட்டியில் இருந்த பித்யுத் வர முடியாமல் போக, வானதி கடிதம் எழுதி விட்டு சென்றிருந்தாலும் புறணி பேசித் திரியும் கூட்டம்  “படிக்கவென்று போனவ எவன் கூடயோ தான் போய் இருக்கணும்” என்று அரசால் புரசலாக பேசி இருக்க அதை உண்மை  படுத்துவது  போல்  சிர்த்தாதோடு கழுத்தில் தாலியும், வகிட்டில் கும்மம் இட்டு வந்திறங்கிய வானதியை சித்தார்த் தான் அவளை திருமணம் செய்துள்ளான் என்று தவறாக கருதி சித்தார்த்தின் அக்கா கண்ட படி பேசி விட

“அண்ணா நீங்க ஆகா வேண்டிய காரியத்தை பாருங்க, பாப்பாவா நா பாத்துக்கிறேன்”  கண்களை துடைத்துக் கொண்ட வானதி  குழந்தையை தூக்கிக் கொள்ள.

மனைவி இறந்து விட்டாள் என்ற செய்தி கேட்டு துடித்துக் கொண்டு வந்தவனை அக்கா என்ன பேச்சு பேசி விட்டாள் “கூட பொறந்தவன் மேல் இருக்கும் நம்பிக்கையின் அளவு இவ்வளவா?”  என்று கோபத்தில் இருந்தவன் எதிர்த்து பேசும் முன்  வானதியின் “அண்ணா” என்ற அழைப்பில் அங்கிருந்தவர்களுக்கு செருப்பால் அடித்தது போன்று இருக்க, அக்காவை முறைத்து விட்டே மனைவிக்காக கடைசி காரியங்களை செய்தான்.

இதற்கிடையில் வானதியின் அண்ணாக்கள் இருவரும் வந்து பிரச்சினை பண்ண ஆரம்பிக்க, அங்கே வந்த வானதியின் தந்தை செல்வபாண்டியன் குடத்திலிருந்து தண்ணீரை தலையில் ஊற்றி “என் பொண்ணு செத்து போய்ட்டா” என்று மாத்திரம் சொன்னவர் வானதியை திரும்பியும் பார்க்காது சென்று விட்டார்.

ஊராரோடு முற்றிலும் தொடர்பை விட்டவர்களாக  குழந்தையோடு நண்பனின் மனைவியை அழைத்துக் கொண்டு டில்லி வந்த சித்தார்த் மீண்டும் கேம்புக்கு செல்ல, கார்த்திக்கின் பொறுப்பு வானதியிடம் தானாக வந்தது. குழந்தை வந்த பின் தான் வானதியும் தனது வாழ்க்கையை பற்றி சிந்திக்கலானாள். கணவனின் மனதையும், காதலையும் மெல்ல மெல்ல உணர்ந்து கொண்டு அவனோடு வாழ்க்கை படகில் பயணிக்க ஆரம்பித்தாள்.

கார்த்திக்கு மூன்று வருடங்கள் கடந்த பின்னே கவி பிறந்தாள். கார்த்திக்கு அவள் தேவி மா ஆகிப் போக, கவிக்கும் அவள் தேவி மா ஆனாள். கவி பிறந்ததிலிருந்து இன்று வரை அவள் எல்லாவற்றுக்கும் கார்த்திக் தேவை பட்டான். எந்த ஒரு சிறு விடயத்தையும் அவனிடம் பகிராமல் அவள் விட்டதே இல்லை. அவள் வயதுக்கு வந்ததை கூட அவனிடமே முதலில் சொன்னாள். 

பாடசாலையில் மாதவிடாய் மற்றும் பெண்களின் அசௌகரியங்களை விளக்கி இருக்க, கவியை நன்றாக பார்த்துக் காணும் என்றவன் கவியிடமே போய் இதை பற்றி விளக்கி இருக்க, அவனிடமே வந்து சொல்லி இருந்தால் கவி.

வானதி தலையி அடித்துக் கொண்டாலும் இருவருக்கும் இருக்கும் பாசப்பிணைப்பை வைத்து நண்பர்கள் இருவரும் இவர்களுக்கு முடிச்சுப் போட்டத்தை எண்ணி அகமகிழ்ந்தாள்.

“தேவி மா கவி சின்ன பொண்ணுமா” என்று கார்த்திக்கும்,

“ஹி இஸ் மை பி.எப் மா நத்திங் எல்ஸ்” என்று கவியும் கடிந்த்துக் கொள்வாள்.

இன்னும் குழந்தைகளாகவே தங்களது மனதை புரியாமல் இருப்பதாக வானதியும், சித்தார்த்தும், பித்யுத்தும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாள் அவர்கள் இருவரின் பந்தமோ! உறவில் அடக்கிட முடியாது. கவிக்கு ஒவ்வொரு விடயத்திலும் கார்த்திக் தேவை பட்டான். பெற்றோரின் பிறந்த நாளா? திருமண நாளா? இல்ல அவளுக்கு ஏதாவது வாங்க வேண்டுமா? எல்லாவற்றிலும்  கார்த்திக்கின் பங்கு இருக்கும். அவனின் முடிவே இறுதியானது. அவன் மேல் கோபம் கொள்ளும் போது மட்டும் கார் கீ என்று கத்துவாள். 

கார்த்திக்கின் நிலையும் அதுவே! அன்னையில்லை என்று அவன் அழுததே இல்லை. கவி வானதியின் வயிற்றில் உருவான நேரத்திலிருந்து, இன்றுவரை அவளின் பாதுகாப்பையும், ஆசைகளையும் நிறைவேற்றுவதே அவன் கடமை என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

கவிக்கு கார்த்திக் தந்தையாக, தமையனான, தோழனாக பல பரிமாணங்கள் எடுப்பான். கவி கார்த்திக்கு அன்னையாக, செல்ல ராட்சசியாக, குழந்தையாக தோன்றுவாள். 

 “ஹாஹாஹா”

“எதுக்கு கவி இப்படி சிரிக்கிற, வண்டில இருந்து விழுந்துடப் போற”

“முதல்ல வண்டிய நிறுத்து கார்த்தி, முடியல”

“அங்க ஒரு காபி ஷாப் தெரியுது அங்க போய் பேசலாம்” வண்டியை நிறுத்தி இருவரும் இறங்கி காபி ஷாப்பை நோக்கி நடக்க

“ஏன் கார்த்தி ஹாவிங் பி.எப் னு மெஸேஜ் பண்ண என்ன அர்த்தம்”

“பிரேக் பாஸ்ட் சாப்பிட்டு கிட்டு இருக்கேன் னு அர்த்தம். வேறென்ன?” நெற்றியை சுருக்கினான் கார்த்திக்

“ஹாஹா இல்ல….. என் லூசு கிளாஸ்மேட்ஸ் ஹாவிங் பி.எப் னா.. பாய் பிரண்ட் கூட ஊரு சுத்துறதா தான் நினைப்பாங்க”

“அப்போ நீ என்னோமோ வேல பாத்து வச்சிருக்க. என்ன பண்ண என் செல்ல ஜி.எப்”

காபி ஷாப்பும் வரவே அமர்ந்து காபிக்கு ஓடர் கொடுத்தவள்

“அது ஒண்ணுமில்லடா ஒரு வாரமா நீ என்ன காலேஜ் ல கொண்டு போய் விடுறியே! உன்ன பாக்கவே கொஞ்சம் பொண்ணுக கூடுவாங்க”

“என்ன” என்ற ஆச்சரிய பார்வையை வீச அதை கண்டு கொள்ளாமல் அவள் கதையை தொடர்ந்தாள். அவனின் போலீஸ் கண்கள் எல்லாவற்றையும் அளவிட்டுக் கொண்டு தான் இருக்கிறது என்று கவியும் அறியாதவளல்ல.

“ஒரு வாரமா நீ யாரு? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் னு மண்டைய குடையிறாங்க. நானும் கண்டுக்காம போய்ட்டேன். இன்னைக்கு அந்த கீதா இல்ல கீதா அதான் டா வரிசையா தம்பிக மட்டும் இருக்கானு சொன்னேனே”

யோசனைக்குள்ளான கார்த்தியின் முகம்  நியாபகம் வந்தது போல் தலை ஆட அதன் பின்னே மீதிக் கதையை தொடர்ந்தாள் கவி.

“சட்டுன்னு நீ என் அண்ணனா னு கேட்டுட்டா டா, தம்பிக இருக்குற பொண்ணுக உன்ன சைட் அடிக்க தகுதியே! இல்ல”

“ஆ அப்பொறம்” என்ன சொல்லி இருப்பாள்  என்று அவன் அறிந்ததுதான். அவளே சொல்லட்டும் என்று விட்டு விட

“உடனே நீ என் பி.எப் னு சொன்னேன் பாரு, அங்க இருந்த எல்லா சிறுக்கீங்க வயித்துலையும் தீ எறிஞ்சி கருகிப் போச்சு” கைதட்டி சிரித்தாள் கவி.

பாடசாலையிலும் கார்த்திக் அவளின் பி.எப் என்று சொல்லி பெரிய பிரச்சினையை இழுத்து விட்டவள் தான் இந்த கவி. மலரும் நினைவுகளில் முகம் மலர்ந்தவன் 

“கடைசி வரைக்கும் நா முரட்டு சிங்களாவே அலைய வேண்டியதுதான்” சத்தமாக முணுமுணுத்தான் கார்த்திக்.

“டேய் அவளுங்க ஒருத்தியும் உனக்கு செட் ஆகாதுடா” மூக்கை சுருக்கி உதடு பிதுக்கி சொல்ல

“யாரு செட் ஆகாது, கீதாக்கு நாலு தம்பிங்க, அவளை விடு. குமுதாக்கு ஒரு அண்ணன் இருக்கான் அவன் வேற ஒரு பொண்ண லவ் பண்ணுறான். நிகிதாக்கு கல்யாணம் நிச்சயமாச்சு. பிரபா என்கிற பிரபாவதி ஐயராத்து பொண்ணு அவன்கண்ண குடுமி வச்சிருக்குறதால அவள நா பாத்துட கூடாதுன்னு நினைக்கிற”

“டேய் நீ போலீஸ் னு இப்படியெல்லாமவா டா நிரூபிக்கணும்” வெறுமையான குரலில் கவி அங்கலாய்க்க

“என் அம்மு என்ன செய்றா யார் கூட பழகுறா எல்லாம் எனக்கு தெரியணும்” அவளின் கன்னம் கிள்ளியவாறே சொல்ல

“காபி வந்துருச்சு” என்றவள் காபியை பருகியவாறே “டேய் ஹிட்லர் தேவி எங்களுக்கு கொடுத்த கெடு முடிய இன்னும் மூணு மாசம் தான் இருக்கு அதுக்குள்ளே லவ் பண்ணனும்!” என்னடா பண்ணுறது.

“உனக்கு புடிச்சா எனக்கு புடிக்க மாட்டேங்குது. எனக்கு புடிச்சா உனக்கு புடிக்க மாட்டேங்குது பேசாம தேவி மா சொல்லுற மாதிரி என்னையே கல்யாணம் செய்யேன். என்ன சொல்லுற?” கார்த்திக் கண்ணடித்து சிரிக்க,

“அடிங்க…” கீழுதடை கடித்தவாறே கையை தூக்கி அவனை அடிக்கப் போனவள் “யாராச்சும் சிக்குவா டா மூணு மாசம் டைம் இருக்கே” கார்த்தியை சமாதானப்படுத்த

“நா பாட்டுக்கு சிவனே னு இருந்தேன். என்ன கல்யாணத்துல கோர்த்து விட்டு, டீல் போடா வச்சி, என் நிம்மதியை குழச்சி, நல்லா குளிர் காயுற” அவளை திட்ட முடியாமல் தன்னை கடிந்தவாறு பேச

“பேசாம நாம ஓடிப்போய்டலாமா?” குழந்தையாக முகத்தை வைத்துக் கொண்டு கவி சொல்ல

“ஒரு போலீஸ் கிட்டயே இந்த பேச்சு பேசுறா” நொந்து விட்டான் கார்த்திக்

“சரி அழாம வா” அவனின் கையை பிடித்து இழுக்காத குறையாக நடந்தாள் கவி.

கவி கார்த்தியை பி.எப் னு சொல்லுறதும், கார்த்திக் கவியை ஜி.எப் னு சொல்லுறதும். வீட்டுலையே இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ரெடியா இருக்கும் போது இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ண ஜோடி தேடுறாங்க அதுலயும் ஏதொ விஷயம் இருக்கு அது என்னனு அடுத்த அத்தியாயத்துல சொல்லுறேன்.

இந்த பி.எப் க்கும் ஜி.எப் க்கும் பொருள் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க கியூட்டிபாய்ஸ்

  

Advertisement