Advertisement

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ
  அத்தியாயம்  –  13
 
தன் பக்கத்தில் படுத்திருந்த சூர்யாவை பார்த்தவளுக்கு நம்பவே முடியவில்லை… அவங்க தானா..!!நம்பமுடியாமல் அவன் கையை நறுக்கென்று கிள்ள, இவள் முழிப்பதை பார்த்தவுடன்  வேண்டும் என்றே கண்ணை மூடிப்படுத்திருந்தவன்,
 ஐயோ ராட்சசி என்னடி பண்ற..??”
 
ஹிஹிஹி.. நீங்கதானான்னு டெஸ்ட் பண்ணிபார்த்தேன் நீங்கதான்..!!”
அடிப்பாவி கிள்ளியே அரைக்கிலோ சதையை எடுத்திட்டியே??” தன் கையை தேய்த்து விட்டவன் அவள் கால்மேல் தன் காலை தூக்கி போட,
முதல்ல காலை எடுங்க வீட்டுக்கே வராம ரொம்பத்தான் பிகுபண்ணுவிங்க..!! இப்ப என்ன வெளியில போகாம படுத்திருக்கிங்க..?? இன்னைக்கு ஒன்னும் வேலை இல்லையா..??” அவன் காலை எடுத்து விட,
 
இப்போது அவளையே முழுவதுமாக அணைத்தவன்,” அது இருக்கு எக்கச்சக்கமா..!! ஆனா இப்ப அது இல்லை பிரச்சனை ?? உங்க தாத்தாக்கிட்ட அங்க வரலைன்னு சொல்லு இங்கேயே இருக்கேன்னு சொல்லு..??”
 
எதுக்கு நீங்க என்கிட்ட பேசுற அந்த பத்து நிமிசத்துக்காகவா.. போங்க அதுக்கு வேற ஆளப்பாருங்க… நான் எங்க வீட்டுக்கே போய் ஒருமாசம் ஜாலியா எங்க வீட்டு ஆளுங்களோட இருந்துட்டு வரப்போறேன்…!!”
 
ஏய் அப்ப நான் பாவம் இல்லையா..? அங்க நீ போனா இந்த பத்து நிமிசம பேசுறதும் முடியாம போயிரும்டி, நான் சொல்றத கேளு..??”
 
அவன் வாயை எட்டி அடைத்தவள்,” அம்மாடி நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம் நான் இங்க வந்த நாள்ல இருந்து பார்த்துக்கிட்டுதானே இருக்கேன் … நீங்க என்கிட்ட பேசுறத,
 
இந்த ஒன்றரை மாசம் பேசாததையா இப்ப பேச போறிங்க..? உங்களுக்கு வேலைதான் முக்கியம் நான் முக்கியம் இல்லை…போங்க..??” அவனிடம் முறுக்கி கொண்டவள் அவனை விட்டு எழப்போக அவளை தடுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன்,
 
ஏய் காலையிலதான் நான் உன்னை பார்க்க முடியல, நைட் வரும்போது எப்பவாவது உனக்கு முழிச்சிருந்து என்னை பார்க்கனும் தோனியிருக்கா..? நீ இங்க வந்ததில இருந்து உன்னை முழிச்சிருந்து பார்த்ததை விட தூங்கிக்கிட்டு இருக்கும்போது பார்த்ததுதான் அதிகம்.. அப்ப உனக்கும் என்கூட பேச ஆசையில்லைன்னு தானே அர்த்தம்..!!!”
 
 அவன் மேலிருந்து தான் முகத்தை தூக்கி அவனை பார்த்தவள்,” ம்ம்ம் நான் என்ன ஆந்தையா ராத்திரிக்கெல்லாம் முழிச்சிருக்க.. நாங்களெல்லாம் பப்ளிக் பரிட்சை போதே நான் ஒன்பதரைக்கு மணிக்கு மேல முழிச்சிருந்ததில்ல இப்ப திடிருன்னு முழிச்சிருன்னா முடியுமா…??
என்னை அப்படியே வளர்த்துவிட்டுட்டாங்க..திடிருன்னு இப்ப கண்ணு முழின்னா முடியுமாங்க நானும்தான் அலாரம்கூட வைச்சுப்பார்த்திட்டேன்.. ம்கூம் முடியலை நான் என்னங்க பண்றது..??”அவனை பார்த்து தன் கண்களை உருட்டியவள் கண்ணுக்குள் தானும் தொப்பென குதித்தவன் அவள் கண்ணில் அழுத்தமாக முத்தமிட்டவனுக்கு சிரிப்பு தாங்கவில்லை..
 
ஹா..ஹா..ஹா.. அப்ப கண்முழிச்சு வேலை பார்க்கிற நான் என்ன ஆந்தையாடி..?? அவன் கன்னத்தை நறுக்கென கடித்தவன் நீ இப்படி இருக்கிறதுதான் எனக்கு பிடிச்சிருக்கு நீ நீயாவே இரு.. ஆனா இப்ப மரியாதையா உங்க தாத்தாக்கிட்ட சொல்லிரு அங்க வரலைன்னு…??”
 
ம்கூம் அது முடியாதுங்க. தாத்தா ஒன்னு சொன்னா நாங்க மறுத்து பேசவே மாட்டோம் வேணும்னா நீங்க .. ஆனா அது எதுக்கு..?? அத்தைக்கிட்ட சொன்னிங்க தானே வேலை நிறைய இருக்குன்னு நீங்க வேலையை பாருங்க நான் எங்க வீட்டுக்கு போறேன்..
 
அதெல்லாம் முடியாதுடி நான் வேணா சீக்கிரமா வீட்டுக்கு வர முயற்சி பண்றேன்..” அவனை விட்டு எழுந்தவளை தன்னை நோக்கி இழுக்க அவள் அவனை இழுக்கவென இருவரும் சண்டைப்போட்டுக் கொண்டிருக்க சூர்யா அவள் இழுத்த இழுவைக்கு சென்று கொண்டிருந்தான்..இருவரும் சண்டைபோடுவது போல நெருங்கி கொண்டிருந்தவர்கள் முடிவில் ஸ்ரீ சூர்யாவின் கால்மேல் ஏறிநின்று அவன் கழுத்தில் தன் கையை போட்டு அணைத்திருக்க,
 
அவள் இடுப்பில் கைகொடுத்து தன்னை நோக்கி இழுத்தவன் தன் உயரத்திற்கு அவளை தூக்கியிருந்தான்.. இருவர் முகமும் வெகு அருகில் ஒருவர் மூச்சுகாற்று மற்றவர்மேல் படும்படி இருக்க, அதற்கு மேல் முடியாமல் அவள் இதழில் முத்தமிட தன் முகத்தை அவள் அருகில் கொண்டு சென்றிருந்தான்..
 
அண்ணி அண்ணி…!!!” வெளியில் இருந்து ப்ரியா வந்து கதவை தட்ட, பதறியவள் அவனிடமிருந்து இறங்கி அவனை தள்ள அவன் தடுமாறி கட்டிலில் விழுவதைகூட கண்டு கொள்ளாமல் இவள் தன் மூச்சை இழுத்துவிட்டபடி கதவை திறக்க சென்றிருந்தாள்… கட்டிலில் கிடந்த சூர்யாவுக்குதான் ஒரு நிமிடத்தில் என்ன நடந்ததென்றே தெரியவில்லை…
 
கையில் இருந்த ஐஸ்கிரிமை சாப்பிட போகும்போது யாரோ அதை தட்டிவிட்டு மண்ணில் விழுந்தது போல இருக்க ஸ்ரீ ,”வா ப்ரியா..” என்றபடி அவளை அழைத்து வந்தாள்… ப்ரியாவின் குரல் கேட்கவும் சுதாரித்திருந்த சூர்யா கட்டிலில் எழுந்து அமர்ந்திருக்க,
சூர்யாவை பார்க்கவும் ஆச்சர்யத்துடன்,” அண்ணா..” என்ற அழைத்தபடி வேகமாக அவன் அருகில் வந்திருந்தாள்..
 
என்னடா காலேஜ் ஓபன் பண்ணிட்டாங்களா..??”
 
அவன் அருகில் அமர்ந்தவள் அவன் தோளில் சாய்ந்தபடி,” ஆமாண்ணா உங்களத்தான் பார்க்கவே முடியலை..நீங்க வீட்டுக்கு வர்றதும் தெரியலை போறதும் தெரியலை.. அண்ணியோட பொழுது போய்ட்டு இருந்துச்சு இப்ப அவங்களும் அவங்க வீட்டுக்கு போறாங்க… எனக்குத்தான் ரொம்ப போர் அடிக்கும்..
 
பீரோவில் இருந்து தனக்கு உடைகளை எடுத்தவள்,” சனி, ஞாயிறு லீவுக்கு அங்க வந்திரு ப்ரியா..நமக்கு அங்க ஜாலியா பொழுதுபோகும். நீங்க பேசிட்டு இருங்க நான் குளிச்சிட்டு வந்திருறேன்.. தாத்தா வந்தா சத்தம போடுவாங்க..”
 
சூர்யாவால் இன்னும் தன் சுயநினைவுக்கு திரும்பமுடியவில்லை..ப்ரியா ஏதேதோ கேட்டுக் கொண்டிருக்க வாய் சரியான பதிலை உரைத்தாலும் மனம் முழுதும் ஸ்ரீயே இருந்தாள்…
 
ஸ்ரீ குளித்து சேலை அணிந்து தலையில் துண்டோடு வெளியில் வர சூர்யாவிற்குள் தாபம் பொங்கியது.மனைவிக்கு ஒரு முத்தம்கூட கொடுக்காமல் அவள் அம்மா வீட்டுக்கு அனுப்ப மனமில்லை.. ஆனால் அதற்கு வழியில்லாமல் அடுத்ததாக சுபத்ராவும் அறைக்குள் நுழைந்திருந்தார்..
 
என்ன சூர்யா இன்னைக்கு சைட்டுக்கு போகலையா..?? ஸ்ரீ உங்க தாத்தா வந்திட்டாங்க கீழ வாம்மா…!!!  சூர்யா வா வந்தவங்கள வாங்கன்னு கூப்பிடு ..? ப்ரியா நீயும் வா..” கடகடவென சொல்லிக் கொண்டிருக்க,
 
இதோ அஞ்சு நிமிசத்தில ரெடியாயிருவேன் அத்தை..!! தலை மட்டும் சீவிட்டு வந்திருவேன்..அவசரமாக தலையை உதறியவள், கிளம்ப தயாராக
 
சுபத்ரா தன் மகன் மகளோடு கீழே இறங்கினார் ..அனைவரும் ஸ்ரீயின் தாத்தாவோடு சற்று நேரம் பேசிக் கொண்டிருக்க சூர்யாவின் நிலையோ அந்தோ பரிதாபமாக இருந்தது.. தாத்தாவிடம் எப்படி கேட்பது தொண்டைவரை வார்த்தை நின்றாலும் மரியாதை காரணமாக ஒன்றும் சொல்ல முடியாமல் மௌனமாக அமர்ந்திருந்தான்..
 
சுபத்ராவுக்கு தன் மகனின் நிலை புரிந்தாலும் பரிகார பூஜை என்று சொன்னதால் எதுவும் சொல்ல முடியாமல் இருந்தார்.. சூர்யா போய் ஸ்ரீ கிளம்பிட்டாளான்னு பார்த்துட்டு வா..??” தன் மகனை ஸ்ரீயிடம் கிளப்ப,
 
இதோ வந்திட்டேன் அத்தை..” தன் பேக்கோடு கிளம்பி வந்திருந்தாள்… அடிப்பாவி அம்மா அஞ்சு நிமிசம் டைம் கொடுத்தாங்க அதையும் கெடுத்திட்டா..!! சூர்யா அவளை முறைத்து பார்க்க,சுபத்ராவுக்கே சிரிப்பு தாங்கவில்லை..
 
அனைவருக்கும் டிபன் பரிமாறியவர்  சாப்பிடவும் காமாட்சியிடம் சொல்லிக் கொள்ளச் செல்ல காமாட்சி தன் கட்டிலில் படுத்திருந்தார்..இரண்டு மூன்று நாட்களாக அவருக்கு காய்ச்சல்.. சூர்யாவின் திருமணம் முடிந்து தன் வீட்டிற்கு சென்ற அவரது இரு மகள்களும் அதன் பிறகு இங்கு வரவே இல்லை..
 
தான் கீழே விழுந்து அடிபட்டிருந்த போதும் தற்போது காய்ச்சலால் அவதிபட்டபோதும் எட்டிக்கூட பார்க்கவில்லை ..தன் மருமகளும், ஸ்ரீயும் ப்ரியாவும்தான் ஒருவர் மாற்றி ஒருவர் கவனித்துக் கொண்டனர்..
 
காய்ச்சல் என்றதும் தன் மகள்களுக்கு போன் செய்து அவர்கள் வீட்டிற்கு வரவழைத்துக் கொண்டனர்…ஊரறிய ரிசப்ஷன் வைத்தபிறகு தன் மகள்களை இரண்டாம்தாரமாக திருமணம் செய்வதில் அவர்களின் தந்தைகளுக்கு விருப்பம் இல்லை ..
 அதோடு அன்று சூர்யா பேசிய பேச்சை வைத்தே அவன் ஸ்ரீயை விடமாட்டான், மீறி நாம் ஏதாவது குட்டையை குழப்பினால் உள்ள வியாபாரமும் படுத்துவிடும்.. அதற்கு வேறிடத்தில் திருமணம் செய்துகொடுத்துவிடலாம் என முடிவு செய்து தன் மனைவிகளை அடக்கி வைத்திருந்தனர்..
 கமலியும் சிந்தியாவும் வரவில்லை சூர்யாவின் மனதை மாற்ற முயற்சி செய்கிறோம்  என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை…தங்கள் வீட்டிற்கு வரவழைத்துக் கொண்டனர்..
 
இத்தனை வருடங்களில் படிக்காத பாடத்தை  இந்த ஒன்றரை மாதங்களில் அப்பத்தா கற்றுக் கொண்டார்… என்றும் தன்னை கடைசிவரை பார்த்துக் கொள்வது தன் மகன்தான் அவன் குடும்பம்தான் என்பதை, அதோடு ஸ்ரீயின் நடவடிக்கைகளையும் பார்த்தவருக்கு தன் பேத்திகளை விட ஸ்ரீ ஒரு படிமேல் என்பதும் புரிந்தது…
 தன்னிடமாயிருக்கட்டும் வீட்டினர் அனைவரிடமும் அவள் நடந்து கொண்ட முறை ப்ரியாவிடம் நாத்தனார் என்ற வேற்றுமை பாராமல் சிறு தங்கைபோல நடந்துவதையும் பார்த்து இந்த குடும்பத்திற்கு ஏற்ற பெண் ஸ்ரீ என்பதையும் அவர் மனம் ஒத்துக் கொண்டது..
 
 
 
சூர்யாவுக்கும் ஸ்ரீக்கும் திருநீறை பூசிவிட்டவர், ஸ்ரீ தன் வீட்டிக்கு கிளம்புவதாக சொல்லவும் தன் கழுத்திலிருந்த இரட்டை வடத்தையும் தன் கைகாப்பையும் கழட்டி அவளுக்கு போட்டுவிட ஸ்ரீ எவ்வளவோ மறுத்தும் அவர் கேட்கவில்லை.. சூர்யாவுக்கும் தன் மனம் நிறைந்தது தன் அப்பத்தாவை அனைத்து இரு கன்னத்திலும் முத்தமிட்டவன்,
 
அப்பத்தா இந்த மாடல் உனக்கு பிடிக்கலைன்னு தானே அவளுக்கு கழட்டி போட்டுவிடுற.. சரி விடு நான் புது மாடலா உனக்கு வேற நகை ஆசாரிக்கிட்ட சொல்லி செய்யச் சொல்றேன்.. அப்புறமா ஆசாரியை வீட்டுக்கு வரச் சொல்றேன் நீ டிசைனை பார்த்துச் சொல்லு..??”
 
அவன் கன்னத்தை தடவியவர்,” போடா அரட்டை, கொடுக்கிறதா இருந்தா ஒரு கொள்ளு பேரனை பெத்துக் கொடுங்க நான் உசிரோட இருக்கும்போதே வளர்த்துவிடுறேன்.”
 
அதுக்கு வழியில்லாமத்தான் அவள பேக் பண்ணி அவ வீட்டுக்கு அனுப்புறிங்களே..??” தனக்குள் முனங்கி கொண்டிருந்தவனை,
என்னடா உனக்குள்ளயே பேசிக்கிற..”
ஹிஹிஹி …. சும்மா..!!”
 தன் பையிலிருந்து 2000 தாள் ஒன்றை எடுத்து ஸ்ரீயிடம் கொடுத்து ,”செலவுக்கு வைச்சுக்கத்தா..??”
 
வேண்டாம் என மறுக்க போனவளை ,”வாங்கிக்க அப்பத்தா கை ரொம்ப ராசியானது நான் எப்ப புது வேலை ஆரம்பித்தாலும் அப்பத்தா கையால ஒரு நூறு ரூபாய் வாங்கித்தான் ஆரம்பிப்பேன்..பணத்தை வாங்கி கொள்ள சொல்லியபடி அவரிடம் சொல்லிக் கொண்டு,” வா..” என்று அழைத்து வந்தவன்
 
 உன் பர்ஸ் எங்க ..??”அவள் கையில் இருந்த பர்ஸை வாங்கி தன் சட்டையிலிருந்த பணத்தை எண்ணிப்பார்க்காமல் அவள் பர்ஸில் வைத்து, இத செலவுக்கு வைச்சிக்கோ ..? இந்தா ஏடிஎம் கார்டு..”நம்பர் அதன் பின் நம்பரை சொன்னவன், எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கோ..??”
 
எனக்கு எதுக்குங்க இவ்வளவு பணம்..??”
 
ஏய் நான் சம்பாரிக்கிறது எல்லாம் யாருக்குடி..!! நமக்குத்தான் நீ செலவு பண்ணாட்டா நான் இப்படி கஷ்டப்பட்டு உழைக்கிறதெல்லாம் வீணா போயிரும்..
கலகலவென சிரித்தவள் ,”அப்ப பாருங்க நான் இங்க திரும்பி வரும்போது இதுல ஜீரோ பேலன்ஸ்தான் இருக்கும்..
 
அவள் சிரிப்பை பார்த்தவனுக்கு இன்னும் ஒரு மாசம் இவள நேரா பார்க்க முடியாதா.. ஏய் நான் போன் பண்ணும்போது எடுத்து பேசு.. அதிலயும் நான் சொல்றத கேட்காம இருக்காம இந்த ஒருதரம் மட்டும்தான் நீ உங்க வீட்டுக்கு போறதுக்கு ஒத்துக்கிறேன்.. அடுத்த முறை அங்க போய் தங்குற வேலையெல்லாம் வைச்சிக்கக்கூடாது சரியா..??” அவள் கையோடு தன் கையை வைத்து அழுத்தி விடுவிக்க இவளுக்கும் மனதில் ஏதோ தடம் புரள ஆரம்பித்தது..
 
ஸ்ரீ தாத்தாவோடு தன் பிறந்த வீட்டிற்கு வர, தாத்தா சுபாவையும் நீங்க போய் கூட்டிட்டு வரனுமா..??”
 
இல்ல ஸ்ரீ ஹரஷ் தம்பியே வீட்ல கொண்டுவந்து விடறேன்னு சொல்லிருச்சு..”
 
இவர்கள் வீட்டிற்குள் நுழையும் போதே ஹரிஷும் சுபாவும் ஒன்றாக நுழைய வீடே களைகட்ட ஆரம்பித்துவிட்டது .. அக்கா தம்பி மூவரும் ஒரே சத்தமிட்டு தங்கள் ஆரவாரத்தை துவக்க சற்று நேரம் இருந்து விட்டு ஹரிஷ் கிளம்பிவிட்டான்..
 
இரண்டு நாட்கள் ஒன்றாக திரிந்தவர்கள் ஜாலியாக அரட்டை அடித்தாலும் ஸ்ரீக்கு ஏதோ குறைவது போல ஒரு உணர்வு..!! என்னவென்று அறியமுடியவில்லை..
 
ஹரிஷ் காலையில் கடைக்கு செல்லும்முன் ஒரு எட்டு மணி போல சுபாவை பார்க்க வருபவன் அவளை கல்லூரியில் தானே விடுவதாக அழைத்துச் சென்று விடுவான்… மாலையில் அவனே அழைத்து வந்து அவளோடு பேசிக் கொண்டு இருந்து விட்டு செல்பவன் பின் ஒன்பது மணி போல அவளிடம் வந்து வீட்டிற்கு செல்வதாக சொல்லிச் செல்வான்..வர முடியவில்லை என்றால் போனில் தகவல் சொல்லிவிடுவான்…
 
சூர்யாவுக்கு ஆசையிருந்தாலும் அவன் வேலை பளு ஒரு ஐந்து பத்து நிமிடங்களுக்கு மேல் போனில் ஸ்ரீயோடு பேச முடியவில்லை..
 
அன்று காலை சுபாவுக்கு விடுமுறை விரதம் ஆரம்பித்து இரண்டு நாட்கள் ஆயிற்று.. விடுமுறை என்பதால் சுபாவை அழைத்து செல்ல ஹரிஷ் வராமல் இருக்க மணி ஒன்பதாகவும் ஹரிஷ்க்கு போன் செய்தவள் போன் எடுக்காமல் இருக்கவும் வீட்டிற்கும் வாசலுக்கும் நடக்க ஆரம்பித்தாள்..
 
தம்பி வந்து விளையாட கூப்பிட்டாலும் காதில் வாங்காமல் வாசலிலேயே கண்ணை வைத்திருந்தாள்..
நேரம் ஆக ஆக அவளுக்கு கண்கள் கலங்க ஆரம்பிக்க ஸ்ரீயோ, ஏண்டி இவ்ளோ டென்சனா இருக்க அவங்களுக்கு என்ன வேலையோ வருவாங்கடி..??”
 
பச் போக்கா.. வேலையா இருந்தா என்ன போன் பண்ணினாலும் எடுக்காம இருக்காங்க.. என்னாச்சுன்னு தெரியலையே..? அவனுக்கு என்னவோ ஏதோவென்று புலம்ப ஆரம்பித்தவள்,டெய்லியும் காலையில அவங்களோடவே இருந்துட்டு இப்ப அவங்கள பார்க்காம இருக்க முடியல..”கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் இவள் வாசலை நோக்கி ஓடினாள்..
 
காரில் இருந்து இறங்கிய ஹரிஷ் சுபா கையை எட்டி பிடித்திருந்தான்.. அவனிடம் அழுதபடியே,” ஏங்க நீங்க போனே எடுக்கலை நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா..??”
 
ஏய் ஸாரி ஸாரிடா, நான் போனை கவனிக்கலை கடைக்கு கொஞ்சம் சரக்கு வந்துச்சு அதை குடோன்ல இறக்க லேட்டாயிருச்சு இதுக்கு போய் யாராச்சும் அழுவாங்களா அத்தான் வந்திட்டேன் அழாத..??” அவள் கண்ணைத்துடைத்து விட்டவன் அவளோடு வீட்டிற்குல் நுழைந்திருந்தான்…
 
ஸ்ரீக்கு சுபாவின் மகிழ்ச்சியை பார்க்கும் போது மனம் நிறைந்திருந்தாலும் தன் கணவனின் நினைப்பும் கூடவே வந்திருந்தது.. இந்த இரண்டு மூன்று நாட்களாக ஹரிஷை பார்க்கும்போது தன் மனைவிமேல் வைத்திருக்கும் பாசமும் காதலும் வெளிப்படையாக தெரிந்தது..
 
சாதாரணமாக பேசும்போதே சுபா கையை பிடித்தபடி அவள் கூந்தல் முடியை ஒதுக்கியபடி என அவளின் ஒவ்வொரு நடவடிக்கையும் கவனித்தபடிதான் இருப்பான்.. யார் இருக்கிறார்கள் இல்லை என்பதை கவனிக்க மாட்டான் என் மனைவி அவளுக்கு நான் செய்கிறேன் என்பது போல இருக்கும் அவனது செய்கை..
 
அவளிடம் மட்டும் இல்லாமல் ஸ்ரீயிடமும் அவள் தம்பியிடமும் நன்றாக பேசுவான்.. தாத்தாவிடம்தான் அதிகம் பேசுவான் அவன் பேச்சில் அவர் மேல் அவனுக்கு அதிக பாசமும் மரியாதையும் இருப்பது தெரியும். தன் அம்மாவிடம் மருமகன் என்ற கெத்து இல்லாமல் வீட்டு விசயங்களை பேசி தெரிந்து கொள்வான்… ஸ்ரீயின் மண்டைக்குள் வண்டு குடைய ஆரம்பித்தது..
 
சுபா தன் தாய் வீட்டில் இருந்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை வந்து விடுகிறான் இல்லையென்றால் போனிலாவது பேசிவிடுகிறான்.. ஆனால் சூர்யா ஒரு முறைதான் அதுவும் ஐந்து பத்து நிமிடங்கள்தான், அவன் வீட்டில் இருக்கும்போது அவனை அதிகம் தேடாத அவள் மனது சூர்யாவை விட்டு பிரிந்து வந்த பிறகு அவனையே நினைக்க ஆரம்பித்திருந்தது..
 
அப்ப அவங்க தாத்தா சொல்லி கல்யாணம் பண்ணதாலத்தான் நம்மள வந்து பார்க்காம இருக்காங்களோ..!!. இவளுக்கு அவன் அங்கேயே இருக்கச் சொன்னது ,வேலை அதிகம் என்றது என்பது எல்லாம் மறந்து ஹரிஷை போல தன்னையும் தன் கணவன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஏக்கம் வந்திருந்தது..
 
விளையாட்டு குறைந்தது ,பேச்சு குறைந்தது எந்த நேரமும் சூர்யா மட்டுமே நினைவில் இருந்தான்… ஒன்பது மணிக்கு மேல் முழிக்க மாட்டேன் என்று சொன்னவள் இரவு பனிரென்டு மணிவரை தன் கணவனை நினைத்து கொண்டிருந்தாள் ..
 
இன்னேரம் வந்திருப்பாங்களா ,சாப்பிட்டிருப்பாங்களா என அவள் எண்ணம் யாவிலும் சூர்யாவே வியாபித்திருந்தான்.. சூர்யாவிடம் இங்கு வரச் சொல்லி வாயே திறக்கவில்லை எப்பத்தான் நம்மள பார்க்கனும்னு தோனுதுன்னு பார்ப்போம் என எண்ணியவள் அவன போன் செய்யும் போதும் அவனை பேசவிட்டு அவன் குரலை மட்டும் கேட்டபடி இருப்பாள்…அந்த குரல் அவளை வசியம் செய்ய ஆரம்பித்திருந்தது..
 
ஆயிற்று இங்கு வந்து பத்து பதினைந்து நாட்களாக போகிறது..!!! ஸ்ரீ ஆளே பாதியாக மெலிந்துவிட்டாள்..அன்று தம்பியும் தங்கையும் தங்கள் பள்ளி கல்லூரி சென்றிருக்க தாத்தாவும் அம்மாவும் தாலிபெருக்கி போடுவதற்கான பொருட்களை வாங்க கடைக்கு சென்றிருந்தார்கள்…
 
அரைமணி நேரம் சென்றிருக்கும் வாசலில் அழைப்பு மணி ஒலிக்கவும் தன் தாயோ என நினைத்து கதவை திறக்க வாசலில் சூர்யா…!!!அவனை பார்க்கவும் அதிர்ச்சி, சந்தோசம் அதோடு அதிகமாக அழுகை பொத்துக்கொண்டுவர வேகமாக அவனிடம் ஓடி வந்தவள் அவனை இறுக அணைக்க இந்த வேகத்தை, எதிர்பார்க்காதவன் அவளோடு திறந்த கதவில் சாய்ந்திருந்தான்… அவளை, அவள் தோற்றத்தை ,அவளின் செய்கையை, அழுகையை பார்த்தவன் பார்த்தபடியே நின்றிருந்தான்..!!!
 
                                                                   இனி………….??????

Advertisement