Advertisement

                   கொஞ்சும் ஏழிசை நீ – 23

“என்ன அதிசயம்… ரெண்டு பேருமே சிரிச்ச முகமா இருக்கீங்க??” என்று பாஸ்கர் கேட்க,

“கண்ணு வைக்காதடா டேய்..” என்றான் சித்து.

மானசா யாரோ என்னவோ பேசுகிறார்கள் என்று எழுதிக்கொண்டு இருக்க, ஷில்பா சுற்றி சுற்றி பார்க்க “நீ ஒழுங்கா கிளாஸ் எடு டா…” என்று சித்திரைச் செல்வன் சொல்லிவிட்டுப் போக,

“ம்ம்ம் என் நேரம்..” என்று நொந்துகொண்டான் பாஸ்கர்.

கிட்டத்தட்ட சிறிது நாட்களாகவே சித்திரைச் செல்வனுக்கும் சரி, மானசாவிற்கும் சரி இடையில் சண்டைகள் எதுவும் இல்லை. வெளிப்படையான பேச்சு வார்த்தைகள் கூட ஏதுமில்லை.

வகுப்பிற்கு வந்தால், அந்த வேலை. வேறு ஏதேனும் வேண்டும் என்றால் அதைப் பற்றிய பேச்சு. இவ்வளவு தான். அதைத் தவிர தேவையில்லாத கோபங்களோ, முகத் திருப்பல்களோ, சண்டைகளோ, எதுவுமில்லை.

காரணம் சித்திரைச் செல்வனே..!!

மானசாவிடம் ஒவ்வொரு முறையும் அதை இதை பேசி, அவளையும் நோகடித்து, பின் தானும் வருந்தி, இதற்கு ஒருமுறை அவளிடம் மனம்விட்டு பேசினால் என்ன என்று நினைத்தவன் பேசியும் விட்டான்.

அதுவும் கூட அவளுக்கு எதுவும் மனதில் சுருக்கென்று தைத்துவிடக் கூடாது  என்று பார்த்து பார்த்து தான் பேசினான்.

“தப்பு எதுவும் உன்மேல இல்லை மனு.. எல்லாமே என் பக்கம் தான்..” என்று அவன் சொல்லும்போது, அவளுக்கு காதல் இன்னும் பெருக்கெடுத்துத் தான் ஓடியது.

“அப்படியெல்லாம் எதுவுமில்ல..” என்று அவள் சமாதானம் செய்யவே முயல,

“ம்ம்ஹும் மனு.. ஐ க்னோ.. இப்படியெல்லாம் உன்னை நான் ஹர்ட் பண்ணிட கூடாதுன்னு தான் நான் எதுவுமே சொல்லல.. பட் இப்போ அதான் நடக்குது..” என்றவன், அவன் உருட்டிக்கொண்டு வந்த சைக்கிளின் சீட்டினில் கை மடக்கி குத்த,

“ஷ்.. என்ன இது..” என்று அவனின் கரம் பற்றிக்கொண்டாள் மானசா.

நன்கு இருள் சூழ்ந்து விட்டமையால், ஆட்கள் நடமாட்டம் இல்லைதான். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் இருக்க, அவர்களை எல்லாம் இவர்கள் கண்டுகொள்ளவில்லை.

அவளின் பதற்றம் கண்டு “ஒண்ணுமில்ல..” என்று அவனும் சொன்னவன், “எனக்கு திஸ் இயர் எப்படியாவது நான் ஸ்டடீஸ் முடிக்கணும் மனு.. அது எவ்வளோ பெரிய ப்ரெஷர் தெரியுமா??” என,

“ம்ம்ம் எனக்கு புரிஞ்சுக்க முடியுது சித்து சர்..” என்றாள் அவளும் சற்றே இறங்கிய குரலில்.

பேச்சு கூட கூட, இருவரின் நடையும் மெதுவாகிவிட, அதனை உணர்ந்தவள் “நம்ம உக்கார்ந்து பேசலாமா??” என்று கேட்க,

“ம்ம்ஹும் வேண்டாம்..” என்றான் வேகமாய்.

“ஏன்??!!”

“உக்காந்து பேசினா.. நான் உன்ன பார்த்து பேசணும்… என்னால அப்போ சிலது சொல்ல முடியாது.. இப்படி நடந்துட்டே பேசுறதுகூட ஒருவித எஸ்கேபிசம் தான்..” என, மானசா சிரித்துவிட்டாள்.

சிரிப்பினூடே “ஐம் சாரி.. பட் எனக்கு சிரிப்பு வந்திடுச்சு.. நீங்க.. நீங்க என்கிட்டே இருந்து எஸ்கேப் ஆக நினைக்கிறீங்களா??” என,

“ம்ம்ம் கொஞ்சம்..” என்றான் கண்களை சுருக்கி..

கிஞ்சித்தேனும் அவன் முகத்தினில் சிரிப்பில்லை.. அதுவே சொல்லியது அவனின் மனதினில் எப்படியானதொரு அழுத்தம் இருக்கிறது என்று. அவனின் அமைதியும், அழுத்தமும் கண்டே தன் சிரிப்பினை நிறுத்தியவள்

“சோ.. நான் உங்களை டிஸ்டர்ப் பண்றேனா??” என,

“நோ நோ.. அப்படி இல்லை. பட் எனக்கு இருக்க கமிட்மெண்ட்ஸ் நடுவில உன்னோட என்னால நார்மலா கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது மனு.. எனக்கும் ஆசை தான்.. இதோ கொஞ்ச நாள்ல நீ கோர்ஸ் முடிச்சிட்டு கிளம்பிடுவ.. அடுத்தது என்னன்னு எனக்கும் தெரியாது. பட் அதுக்குள்ள உன்னோட நான் எவ்வளோ டைம் ஸ்பென்ட் செய்யணுமோ அவ்வளோ இருக்கணும்னு ஆசைதான்.. ஆனா அதெல்லாம் மீறி, எனக்கு உள்ள ஒரு கில்டி பீல்.. என்னோட வொர்க் நான் பண்ணாம வந்திடுறேன்னு.. அப்பா அம்மா பையன் பெருசா படிக்கிறான்னு தானே இருக்காங்க.. உன்னோட பேசுற இந்த அளவு கூட நான் டெய்லி அவங்களோட பேசினது இல்லை…” என்றவன்,

பின் ஒரு தவிப்போடு “நான்.. நான் என்ன சொல்ல வர்றேன் புரியுதா??” என்று அவள் பக்கம் திரும்ப,

“ம்ம் என்னை பார்க்காதீங்க சித்து சர்.. நேரா ரோட் பாருங்க.. அப்போதான் மனசுக்குள்ள இருக்கிறது எல்லாம் வரும்..” என்று அவளும் சொல்ல,

“நீ இருக்க பாரேன்..” என்றவன், ஒரு மெல்லிய புன்னகையோடு பார்வையை திருப்பிக்கொள்ள,

“நீங்க சொல்ல வர்றது புரியுது சித்து சர்.. நானுமே கொஞ்சம் இல்லை ரொம்பவே பிடிவாதம் பண்றேன்னு நல்லாவே புரியுது.. சோ இனிமே சரியா இருந்துக்கலாம்..” என்றவள்,

“பட் ஒன் கண்டிசன்..” என்றாள் உறுதியாய்.

“என்னது??!!”

“ஒன்ஸ் என்னோட பேசிடனும்.. கால் பண்ணியாவது.. சும்மாவாவது.. எனக்கு இந்த உறுகி உறுகி பேசுறது எல்லாம் வராது.. சோ அட்லீஸ் என்ன பண்ற என்ன ஏது இப்படி ஓகே வா..” என,

“ஹா ஹா..” என்று சத்தமாய் சிரித்தவன் “எனக்கு சுட்டு போட்டாலும் அதெல்லாம் வராது..” என்றான் மனது லேசானது போல்.

“சுத்தம்…” என்றவள், “இப்போ எல்லாம் ஓகே வா..” என,

“ம்ம் கொஞ்சம்..” என்றவன் “உனக்கு எதுவும் சொல்லனுமா??” என்று கேட்க,

“இல்ல.. இதை நீங்க முன்னாடியே சொல்லிருந்தா நானும் உங்களை ரொம்ப எல்லாம் திட்டி இருக்க மாட்டேன்..” என்றாள் சற்றே குறும்பாய் அடிப்பார்வை பார்த்து.

“நீ எங்க என்னை திட்டின..??” என்றவன் புரியாது பார்க்க,

“அதெல்லாம் ரொம்ப திட்டினேன் டிசைன் டிசைனா.. மனசுக்குள்ள..” என்று மானசா சொல்லவும், இன்னமும் சித்திரைச் செல்வன் சிரிக்க,

“போதும்.. போதும்.. சைக்கிள் டேர்ன் பண்ணுங்க.. ஹாஸ்டல் போகணும்.. நீங்க போய் படிங்க..” என்று கண்டிப்பாய் சொல்ல,

“ஆரம்பிச்சுட்டியா நீ..” என்றவன் சைக்கிளை திருப்ப, மீண்டும் அவர்களின் நடை விடுதி நோக்கி நகர, பேச்சு இன்னமும் இன்னமும் மகிழ்ச்சியாகவே நீண்டது.

அதன் பின்னே இருவருக்கும் இடையில் பிணக்குகள் எல்லாம் இல்லை. வேண்டுமென்றே மானசா எப்போதாவது சீண்டினால் கூட, அதனையும் சித்திரைச் செல்வன் அழகாய் புரிந்து “போ டி..” என்று செல்லமாய் கடந்து போகப் பழகிக்கொண்டான்.

இப்படியே நாட்கள் நகர்ந்துவிட்டால் கூட போதுமென்று தான் தோன்றியது இருவருக்கும். நாள் செல்ல செல்ல அவனின் படிக்கும் நேரமும் அதிகரித்தது. இந்த ஆண்டிற்குள் முடித்துவிட வேண்டும் என்ற அவனின் உறுதி மானசாவை கொண்டும் மேலும் உறுதியானது.

இடையினில் சித்திரைச் செல்வன் முடிக்கவேண்டியவைகள் முடிக்காது விட்டிருக்க, அதன் பொருட்டு பாஸ்கரை தான் ஷில்பாவிற்கும் மானசாவிற்கும் அந்த வாரம் முழுவதும் வகுப்புகள் எடுக்கச் சொன்னான்.

அதற்கு மானசா எதுவும் சொல்வாளோ என்று பார்க்க, அவளோ அதனை பெரிய விசயமாய் கண்டுகொள்ளவே இல்லை. அதனால் தான் பாஸ்கர் அப்படிக் கேட்டதும் கூட.

அதற்கும் கூட இருவரும் பெரிதாய் எதுவும் ரியாக்ட் செய்யாது விட, “அட போங்கடா..” என்று வகுப்பு எடுக்கத் தொடங்கிவிட்டான்.

அடுத்தடுத்த நாட்களும் அப்படியே நகர, மானசா உற்சாகமாவே இருந்தாள், அன்றைய தினம் அவர்களின் லேப் முடிந்து அறைக்கு வர, செந்தமிழ் அழைத்துவிட,

“என்ன டாடி..” என்றதுமே,

“மனும்மா.. தனு எங்கேஜ்மென்ட் டேட்ல ஸ்மால் சேஜ்..” என,

“வாட்??!! பட் வொய் ப்பா..” என்றாள்.

“நம்ம பிக்ஸ் பண்ண டேட்ல ராபர்ட் க்ளோஸ் ரிலேசன் வீட்டு மேரேஜ் ஆம்.. சோ நம்ம இதை கன்சிடர் பண்ணித்தானே ஆகணும்.. ஜஸ்ட் த்ரீ டேஸ் முன்னாடி வச்சுக்கலாம்னு..” என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

மானசா மனதினில் கணக்கிட்டுப் பார்த்து “அப்பா.. அதுக்கு இன்னும் பைவ் டேஸ் தான் இருக்கு..” என்றாள் வேகமாய்.

“எஸ் டா.. அதான் உனக்கு இப்போ சொன்னாதானே லீவ் சொல்லிட்டு அட்லீஸ்ட் முதல் நாளே வர முடியும்..” என,

“என்னது முதல் நாளா.. டாடி…” என்று பல்லைக் கடித்தவள், “நான் நாளைக்கே கிளம்புறேன்..” என,

“இப்போவே இங்க வந்து என்ன செய்ய போற நீ..” என்றார்.

“என்ன செய்யவா.. நான்.. ஷாப்பிங் செய்ய வேண்டாமா?? எதுவுமே ரெடி பண்ணல நான்..” என்றவள், உஷ்ண மூச்சுக்களைத் தான் வெளிவிட்டாள்.

“நீ பெட்டர் அங்கவே ஷாப்பின் பண்ணிட்டு வா.. இங்க தனு எல்லாம் உன்னோட வர மாட்டா..” என்றவர் பின் கொஞ்சம் அழுத்தமாய் “சொல்றத கேளு மனு..” என,

வேறு வழியே இல்லாது “ம்ம் ஓகேப்பா..” என்றவள், அப்பாவிடம் சிறிது அடக்கி வாசித்ததை எல்லாம் தனுஜாவிடம் ஏற்றி வாசிக்க, அவளோ “டி.. எனக்கே டேட் சேஞ் பண்ணதுல எதுவுமே பண்ண முடியலை.. என்ன டென்சன் பண்ணாத நீ.. உன்னோட வேலை எல்லாம் முடிச்சிட்டு தான் வர . இங்க வந்து அது இதுன்னு ஏதும் கேட்க கூடாது..” என்றுவிட்டாள் முடிவாய்.

“ஹ்ம்ம் போங்க..” என்று கோபமாய் சொல்வது போல் சொல்லி வைத்தவளுக்கு சிக்கிய அடிமை ஒருத்தியே.. ஷில்பாவே.

அவளிடம் அனைத்தையும் சொல்ல, “இதுக்கேன் டென்சன்.. மதுரைல ஷாப்பிங் முடிச்சிட்டு டூ டேஸ் முன்ன கிளம்பு…” என்று அசால்ட்டாய் சொல்ல,

“கிளம்பா… ஹலோ.. நீயும் என்னோட வர.. உன்னோட சேட்டன்ஸ் ஆல்சோ கூட்டிட்டு போலாம்..” என்றவள், அடுத்தடுத்து சித்திரைச் செல்வனுக்கும் பாஸ்கருக்கும் அழைத்துச் சொல்ல,

பாஸ்கர் கூட ஒருவிதமாய் சரி என்றுவிட்டான். ஆனால் சித்து தான் “மனு எங்கேஜ்மென்ட்க்கு எல்லாம் நாங்க எதுக்கு.. மேரேஜ்னா கூட ஓகே..” என்று சொல்ல,

“நீங்க சொன்னப்போ நான் கேட்டேன் தானே.. நான் சொல்றப்போ நீங்க கேட்க கூடாதா..” என்றாள் ஆசையாய்.

“பட் ஒரு ப்ராப்பர் ரீசன் வேணாமா?? அதுவும் டூ டேஸ் முன்னாடியே கூப்பிடுற.. இட்ஸ் நாட் பாசிபிள்..” என்றான் முடிவாய்.

பாஸ்கர் அவன் முன்னே அமர்ந்து தானே தயங்கி தயங்கி சம்மதம் சொன்னான். மானசா சொல்லும் அந்த இரண்டு நாட்களில் அவர்கள் என்னென்ன படித்து முடிக்கவேண்டும் என்பது சற்று முன்னர் தான் இருவரும் முடிவு செய்தனர்..

அதெல்லாம் மனதில் கொண்டு சித்து மறுக்க, “சரி அப்போ எங்கேஜ்மென்ட் முதல் நாள் ஈவ்னிங் வந்து எங்கேஜ்மென்ட் முடிஞ்சதும் கிளம்புறீங்களா.. ப்ளீஸ்..” என்று அவளின் குரல் இறங்கிட இதற்கு மேல் அவனாலும் மறுக்க முடியவில்லை.

“ம்ம் ஓகே.. நான் பாஸ்கிக்கிட்ட பேசிட்டு சொல்றேன்..” என்றதுமே,

“சரி..” என்று வைத்துவிட்டாள்.

“ஏன்டா அந்த பொண்ணு ஆசைபடுதுல..” என்று பாஸ்கி சொல்ல “எல்லாருக்கும் தான் ஆசை இருக்கும்.. பட் பிராக்டிகலா திங் பண்ணு.. நம்ம டூ டேஸ் முன்ன போயி என்ன செய்வோம்.. இவளும் நம்மோடவே சுத்திட்டு இருப்பா.. அங்க அவளுக்கு வேலை இருக்காதா..??  அப்படியே அவளால வர முடியாதுன்னாலும் ஷில்பா நம்மளோட தனியா வர முடியுமா??” என,

“ஆமால்ல…” என்றான் பாஸ்கர் இழுத்து.

“ஆமாவே தான்… இதெல்லாம் அவதான் யோசிக்கலன்னா.. நீயுமா..” என,

“சரிடா சரிடா.. நீதான் யோசிக்கிறதுல சிங்கம்.. நீ சொன்னா சரிதான்.. இப்போ மானசா கிட்ட தெளிவா சொல்லி சரி பண்ணி விட்ரு..” என்றுவிட்டு போனான்.

பின் சித்துவும் அழைத்து அவளிடம் சொல்ல “ம்ம்ம் ஓகே.. அப்போ என்னோட ஷாப்பிங் மட்டும் வரணும்..” என்று அவள் அடுத்த படி போக,

“அடடா.. என்ன நீ..” என்று கேட்டாலும்,

அவள் “ப்ளீஸ்.. ப்ளீஸ்…” என்று சொல்லவும் “ஓகே போலாம்..” என்றான் இவனும்.

அப்படி கிளம்பிச் சென்ற ஷாப்பிங்கில் மானசா வாங்கியவைகளை பார்த்து சித்திரைச் செல்வனுக்கு நிஜமாவே மூச்சடைத்துதான் போனது.

சில்பா மானசாவோடு கிளம்பிவிட, இவர்கள் இருவரும் முதல் நாள் சென்று பின் விசேசம் முடிந்து அன்றைய மாலை ஒன்றாய் வருவதாய் ஏற்பாடு ஆகிட, “ஷாப்பிங் முடிச்சிட்டு நாங்க அப்படியே பிளைட்..” என்றாள் மானசா.

“ என்ன பண்றது பிளைட் எல்லாம் உங்க ப்ரைவேட் யூஸ்க்கு தான்..” என்று பாஸ்கர் கிண்டலடிக்க,

“பஸ்ல தானே போவ நீ.. எப்பவும்..” என்றான் சித்து.

“எஸ்.. பட் இப்போ டைம் இல்லல..” என்று அவள் சர்வ சாதாரணமாய் சொல்ல, என்னவோ சித்துவிற்கு முகம் சுண்டி போனது.

நேரம் இருந்தாலும், இல்லையென்றாலும் கூட அவனால் இதெல்லாம் யோசிக்க முடியாத ஒன்று. அதாவது இப்போது. எதிர்காலத்தில் எப்படியோ அது தெரியாது. இது போதாது என்று அவள் வாங்கிய உடைகளையும் அதன் விலைகளையும் பார்த்தால், நிஜமாகவே அவனுக்கு மனதும் சுனங்கித்தான் போனது.

பத்தாயிரம் என்பது எல்லாம் சர்வ சாதாரணம் என்பது போல் ஆடைகளை மானசா பார்க்க, அதிலும் ஷில்பாவிற்கு ஒன்று, ஆண்கள் இருவருக்கும் வேறு பார்க்க,

“அதெல்லாம் வேண்டாம்..” என்றுவிட்டான் பட்டென்று.

பாஸ்கரும் “வேண்டாம் மனு..” என,

“ம்ம்ச்.. இதென்ன ரெண்டு பேரும் இப்படி பண்றீங்க…” என்றவள், “அதெல்லாம் இல்ல வாங்குவேன்..” என்று அடம் பிடிக்க,

ஷில்பா கூட தயங்கியே “வேண்டாம் மனு..” என்றாள்.

“அட… ஏன்.. ஒரு விசேசம்னா புதுசு போட வேண்டாமா.. அங்க தனு எல்லாம் இந்நேரம் அவ பிரண்ட்ஸ்க்கு வாங்கி தள்ளிருப்பா.. என்ன நீங்க…” என்றபடி அவள் எடுத்துப் பார்த்த ஒரு சட்டையின் விலை ஐந்தாயிரம்..

“இது ஓகே வா…” என்று அவள் சித்துவிடம் காட்ட, அவனோ இப்போது பகிரங்கமாகவே முறைத்தான்.

“என்ன??!!” என்று அவள் புரியாது பார்க்க,

அவள் கையில் இருந்த அந்த சட்டையை வாங்கி, அங்கிருந்த கண்ணாடி மேஜை மீது வைத்துவிட்டு, “வா…” என்று சற்று தள்ளி அழைத்துச் சென்றவன்

“நாங்க வரணும்னா நீ உனக்கு மட்டும் வாங்கு..” என,

“அ..!! பின்ன நீங்க எல்லாம் புது..” என்று சொல்லும்போதே,

“ஒரு பங்க்சனுக்கு வர்றப்போ எப்படி வரணும்னு எங்களுக்கு தெரியும்.. நீ புதுசு வாங்கிக் கொடுத்துத்தான் போட்டு வரணும்னு இல்லை புரிஞ்சதா..” என்றான் வார்த்தைகளை கடித்துக் குதறி.

“என்னது??!!!” என்று கேட்டவளின் விழிகள் ஒரு வலி நிறைந்த அதிர்ச்சியை காட்ட,

“லுக்.. உன்னை ஹர்ட் பண்ணனும்னு நான் சொல்லல.. பட் ட்ரூ இதான் மனு.. உன்கிட்ட பணம் இருக்குங்கிறதுக்காக எங்களை எல்லாம் தர்ம சங்கடம் பண்ணாத புரிஞ்சுக்கோ..” என, மழுக்கென்று அவளுக்கு கண்களில் நீர் வந்துவிட்டது.

“ஷ் …!!!!” என்று அவன் தலை முடியை அழுத்தமாய் கோதியவன்,

“சொன்னா புரிஞ்சுக்கோ..” என,

“ம்ம் ஓகே..” என்றாள் மெதுவாய் கண்களை துடைத்து.

“உனக்கு மட்டும் எடு வா..” என்று சித்து முன்னே எட்டு வைக்க,

“அப்.. அப்போ நீங்களே செலெக்ட் செய்ங்க..” என்றாள் அப்போதும் முகம் மாறாது.

நின்று பின் திரும்பி அவளைக் கண்டவன் “நிஜமா எனக்கு இவ்வளோ காஸ்ட்லியா எல்லாம் செலெக்ட் பண்ண தெரியாது..” என்று சொல்ல,

“பரவாயில்ல உங்களுக்கு என்ன எடுக்க வருதோ பாருங்க..” என்று அவனோடு நடக்க,

“அங்க என்னமாதிரி போடுவாங்கன்னு எனக்கு தெரியாது.. சோ நீயே பாரு.. நான் கூட நிக்கிறேன்..” என, பின் வேறு வழியே இல்லாது அவள் தான் பார்த்தாள்.

அவளுக்கு விபரம் தெரிந்ததில் இருந்து வரும் பழக்கம் சட்டென்று எப்படி மாறும். அவளோ விலையே பார்ப்பதில்லை. அவனோ அதனை தான் முதலில் பார்த்தான். இருவருக்குமான வாழ்வு முறை வித்தியாசமும், பொருளாதாரா ரீதியான ஏற்ற இறக்கமும் இப்போதே நன்கு புலப்பட்டது..    

 

Advertisement