Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 34

“திஸ் இஸ் டூ மச் மனு…” என்று நீல் சொல்லிக்கொண்டு இருக்க, மானசா காதிலேயே எதையும் வாங்கவில்லை. 

சித்துவும், அவன் உடைமைகளை எடுத்து பெட்டி கட்ட, “மன் ஆஸ்க் ஹிம் டு ஸ்டே ஹியர்…” என்று நீல் சொல்ல, அவளோ “நீல் ப்ளீஸ் இதை இப்படியே விடு..” என்றாள்.

“நோ… சித்து இஸ் மை கெஸ்ட்.. அவனை நீ போக சொல்றது இட்ஸ் நாட் ஃபேர்..  சித்து… நான் சொல்றேன் நீ இரு.. இங்கதான் இருக்கணும்…” என்று மானசவிடமும், சித்திரைச் செல்வனிடமும், நீல் மாறி மாறி பேச,

“விடு நீல்… இப்போ என்ன அதுனால.. நீ அங்க வா.. அவ்வளோதான்..” என்றான் சித்து.

“அப்போ நீ இங்க வரவே மாட்டியா??”                           

“ம்ம்ஹும் நோ.. ஒன்ஸ் கிளம்பினா கிளம்பினதுதான்.. ஐ டோனோ.. இந்த ஆபர் கேன்சல் பண்ணிட்டு நான் இந்தியா போனாலும் போயிடுவேன்…” என்று சித்து சொல்லிக்கொண்டு இருக்க,

“போங்க.. தாராளமா போங்க.. எல்லாரும் என்னை தப்பு சொல்லணும்.. அதானே.. வெல் டன்..” என்றவள், “உங்களோட சிச்சுவேஷனுக்கு ஏத்தபடி நீங்க டெசிஷன் எடுப்பீங்க.. அதுக்கெல்லாம் நான் என் மைன்ட் சேஞ் பண்ணிக்க முடியாது.. அண்ட் நீல் நீ..” என்று விரல் நீட்டி அவனை சுட்டியவள்,

“இதைபத்தி நீ எனக்கு தெரியாம தனு கிட்ட பேசின.. தென் நான் என்ன செய்வேன் எனக்குத் தெரியாது..” என்றாள் மானசா.

தனுஜா நாளை மாலை வருவதாய் இருக்க, சித்திரைச் செல்வனை இங்கிருந்து போகும் படி சொன்னதில் மானசா முடிவில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. சிறிய சலனம் இருந்ததுதான். இப்போதும் கூட இருக்கிறதுதான்.

அவனை ‘போ..’ என்று சொல்ல முழுதாய் மனது வரவில்லைதான்.

இருந்தும் அவளுக்கு அப்போது வேறு வழியில்லை. சூழலை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொள்ள மனசாவிற்கு இஷ்டமில்லை. சித்து இங்கே எதற்கு வந்தானோ அதை மட்டும் பார்க்கட்டும். தான் இங்கே எதற்கு வந்தேனோ அதை மட்டும் நான் பார்க்கிறேன்..

வேறெதுவும் வேண்டாம்.. எதுவுமே… எதையும் அவள் தீர்மானிக்கும் திடமில்லை. வேண்டும் என்று முடிவு செய்து பின் அது இல்லை என்றானால்??!! இனியும் அப்படியோர் நிலையை அவளால் தாங்கிக்கொள்ள இயலாது.

இல்லாது போனது இல்லாதே போகட்டும்..

புதிதாய் வந்து எதுவும் ஒட்டிக்கொள்ள வேண்டாம்..

இப்போது எப்படியோ இனியும் அப்படியே..

இதுமட்டும் தான் மானசாவின் எண்ணங்களாய் இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.

அன்று மானசாவும், சித்திரைச் செல்வனும், கோவில் சென்றுவிட்டு வர, பாஸ்கியோடு பேச வைத்தவன், பின் “அம்மாவோடு பேசுறியா??” என, அது மேலும் அவளுக்கு பதற்றம் கொடுத்தது.

பாஸ்கிக்கு இவர்கள் விஷயம் தெரியும். ஆனால் மீனா??!! அவர் ஏதேனும் கேட்டால் என்ன சொல்ல முடியும். ஓரிரு முறை அவர் அழைத்தமைக்கு கூட அவள் எடுக்கவில்லையே.. அப்படியே விட்டுவிட்டாளே. ஆண்டுகள் ஆனாலும் அதெல்லாம் அவரும் மறந்திருப்பாரா என்ன??!

முதலில் இவன் என்ன சொல்லி வைத்திருக்கானோ…

“என்ன சொல்லி இருக்கீங்க அம்மாட்ட??” என,

“நீ இங்கதான் இருக்கன்னு சொன்னேன்..” என்றவன் “வேற எதுவும் சொல்லலை.. சும்மா பேசு..” என்று இவனும் சொல்ல,

“இல்ல வேண்டாம்..” என்று மறுத்தாள் மானசா.

“ம்ம்ச்… நான் மட்டும் நீ சொல்றது கேட்கணும்.. பட் நீ அட்லீஸ்ட் ஒரு போன் கூட பேசமாட்ட..”

“இல்ல அதுக்கில்ல.. ஆன்ட்டி..” என்று தயங்கியவள், “அவங்க டூ த்ரீ டைம்ஸ் கால் பண்ணப்போ நான் அட்டென்ட் பண்ணல.. நான் என்ன சொல்லட்டும்..” என்றாள் சங்கடமாய்.

“உன்னோட போன் மிஸ் ஆகிடுச்சுன்னு சொல்லிருந்தேன்.. கேட்டா அதையே சொல்லிக்கோ.. இங்க புட் எல்லாம் சேரலை சோ அவங்கப்பா வேணாம் சொல்லி கூட்டிட்டு போயிட்டார்னு சொல்லிருக்கேன்.. அதையே நீயும் சொல்லிக்கோ..” என்றவன், “மோஸ்ட்லி கேட்க மாட்டாங்க.. பட் நீ அம்மாவோட பேசினா எனக்கு கொஞ்சம் மைன்ட் நிமதியா இருக்கும்..” என்றான் ஆழ்ந்த குரலில்.

“உங்களுக்கு எல்லாம் நிம்மதியா தான் இருக்கும்.. எனக்குதான் கில்டியா இருக்கும்..” என்று பிகு செய்ய,

“லுக் மனு.. என்னால தான் நீ இவங்களை எல்லாம் அவாய்ட் பண்ணிருக்க.. அதை கிளியர் பண்ணத்தான் பார்க்கிறேன்.. ஒன் டைம் பேசு போதும்..” என்றவன், மீனாவிற்கு அழைத்தே கொடுத்துவிட, அப்போதும் அவளுக்கு பேசுவது தவிர வேறு வழியில்லை.

பாஸ்கியோடு எளிதாய் பேசிவிட்டாள்.. மீனாவிடம் அது முடியவில்லை.

“இவன்கிட்ட எத்தன தடவ கேட்டிருப்பேன் தெரியுமா?? ஒரு போன் போட்டு குடு ஒரு வார்த்தை எப்படி இருக்கான்னு கேட்போம்னு.. பிடியே குடுக்கல… அப்புறம் நானா நினைச்சுக்கிட்டேன் சரி இந்நேரம் கல்யாணம் எல்லாம் ஆகிருக்கும்..” என்று மீனா சொல்ல, இவளுக்கு தான் தொண்டை அடைத்தது.

“இல்.. இல்ல ஆன்ட்டி.. அதெல்லாம் இல்ல… அது..”

“அதான் இப்போ பேசிட்டோமே.. இப்போவது நல்லா சாப்பிடுறியா… நீ அங்க இருக்கன்னு தெரியவும் தான் மனு கொஞ்சம் எனக்கு நிம்மதியாச்சு.. இவனை ஆறு மாசம் கண் காணாம அனுப்புறோமேன்னு உள்ள ஒருமாதிரி இருந்துச்சு..” என,

“அ.. அதெல்லாம் இங்க எதுவும் பிரச்சனை இல்லை ஆன்ட்டி..” என்றாள் மானசா.

“ம்ம் அவன்கிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லு மனு .. பாஸ்கி பய எல்லாம் கல்யாணம் குடும்பம் குழந்தைன்னு ஆகிட்டான். அப்போவே சொன்னேன் உனக்கும் ஒரு பொண்ணு பார்க்கிறோம்னு. இவன் கேட்கவேயில்லை. இப்போ அவங்கப்பாவும் சத்தம் போட்டுட்டாரு.. கொஞ்சமும் பிடிகொடுக்காம பேசறான்.. யாருக்கு என்னவோன்னு இருக்கான்.. இருக்கிறது ஒருத்தன். அவன் இப்படி இருக்க எங்களுக்கு சங்கடமா இருக்காதா..” என்றதும், மானசா வாயடைத்து தான் போனாள்.

பதில் சொல்லாது இருக்க மீனா தான் பேசினார் “இங்க எனக்கு அப்புறம் இந்த குடும்பத்த தாங்க ஆள் வேணாமா.. அட அவனையே பார்த்துக்க ஒருத்தி வேணாமா?? இங்க எங்க ஊர்லயே சொந்தத்துல ஒருத்தர் பொண்ணு தர்றேன் சொல்றார். எங்க வீட்டுக்கு ஏத்த பொண்ணு.. அவன்கிட்ட கொஞ்சம் சொல்லேன்..” என்று அவர் பேசிக்கொண்டே போக, மானசாவிற்குள் எதோ ஒன்று சுக்கு நூறாய் உடைவது போலிருந்தது.

“சரியா மனு.. அவன் வர்றப்போ இங்க அவனுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணனும் நாங்க சரியா.. இது உன்னோட பொறுப்பு..” என்று மீனா பேசி முடிக்க, எதுவும் சொல்லாது சித்துவிடம் அலைபேசியை கொடுத்து, மெதுவாய் எழுந்து நடந்திடத் தொடங்க, அவனுக்கும் புரிந்தது அம்மா என்ன பேசி இருப்பார் என்று.

“மனு நில்லு..” என்றபடி அவளோடு செல்ல, 

“வீட்டுக்கு போலாம்..” என்றவள் அதன் பின்னே எதுவுமே பேசவில்லை.

லேசாய் வேர்விட்ட ஆசை கூட இப்போது அப்படியே அமிழ்ந்து போக பின் இரண்டு நாட்கள் கழித்து சொன்னாள் “உங்களுக்கு வேற ரூம் ரெடி பண்ணிருக்கேன்..” என்று.

“சோ.. நான் போகணும்னு அப்படிதானே..” என,

“எஸ்..” என்றாள் அவனைக் காணாது.

“என்னைப் பார்த்து சொல்லு மனு…” என்று சித்து சொல்ல, அவளுக்கோ கண்கள் மெதுவாய் கலங்கத் தொடங்க,

“ப்ளீஸ்.. நான் அரேஞ் பண்ணிட்டேன்.. வந்து ஓகேவான்னு பாருங்க… இல்லன்னா நான் வேற..” எனும்போதே, அவளின் இரு கைகளையும் பற்றி தன்னை நோக்கி இழுத்து தனக்கு வெகு அருகே நிறுத்தியவன்,

“என்னைப் பார்த்து சொல்லு.. இங்க இருந்து போ அப்படின்னு…” என்றவன் அவளை இன்னும் தனக்கு நெருக்கமாய் நிற்கவைக்க,

“வாட் ஆர் யூ டூயிங்…”  என்று அரக்க பறக்க முழித்தவள், “கை விடுங்க.. யா.. யாரும் பார்த்திட போறாங்க..” என,

“நீ என்னைப் பார்த்து சொல்லு… போ அப்படின்னு நான் போயிடுறேன்…” என்று அதிலேயே அவன் பிடிவாதமாய் நிற்க,

“ப்ளீஸ் சித்து சர்…” என்றாள் கெஞ்சலாய்.

“எனக்கு இன்னொரு சான்ஸ் கொடேன் மனு…” என்று அவனும் கெஞ்சி நிற்க,

“எதுவும் மாறாது.. எல்லாமே அப்படியே தான் இருக்கு.. சோ.. நம்ம..” என்று அவள் பேச வந்தது பேச முடியாது போனது.

வார்த்தைகள் கோர்த்து அவளால் கோர்வையாய் பேசிட முடியவில்லை. இவனோடு வாழ்ந்திட வேண்டும் என்று எத்தனை கற்பனைகள் அவள் மனதில் இருந்திருக்கும். அதெல்லாம் பின் இல்லை என்றானது. அவனே அதனை எல்லாம் இல்லை என்றாக்கினான்.

பின் இதோ.. இத்தனை ஆண்டுகள் கழித்து, மீண்டும் உள்ளத்தில் ஒரு சலனம். ஆசை.. எட்டிப் பார்த்து கண் சிமிட்டிய நொடி, ‘இது நடவாது போய்விட்டால் தாங்குவாயா??’ என்ற கேள்வி பிறக்க,

‘எதுவுமே வேண்டாம்..’ என்று தனக்குள்ள சுருண்டுகொள்ளவே விரும்பினாள்.

“சொல்லு மனு நம்ம?? ம்ம் சொல்லு என்ன நம்ம என்ன??” என்று சித்துவிற்கு அவளை இன்று பேச வைத்துவிடும் வேகம்.

அவள் மனதினில் என்னதான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வெறியே கொண்டது அவனுள்ளம். பிரிந்த காதலர்கள் ஒன்றிணைவது இல்லையா??!! பிணக்குகள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் பிரியங்கள் தானே வெல்லும். பிரிவோம் என்று சொன்னது அவன்தான். இல்லை என்றில்லை. இன்றோ அவனே அதனைக் கடந்துவந்து இப்போது அவளிடம் பேச, அவளுக்கு உடனே சம்மதம் சொல்லி ஏற்றுக்கொள்ள சிரமம் இருக்கும் தான்.

எல்லாமே அவனுக்கு புரிகிறது.. அவள் எதுவும் வேண்டாம் என்கையில் ஏன் என்றாவது அவனுக்கு தெரிந்துகொள்ள வேண்டும் இல்லையா??!!

“பேசு மனு…” என்றவனின் கரம் அவளை சுற்றி வளைக்க,

“ம்ம் ப்ளீஸ்.. வேணாம்..” என்றாள் முனங்களாய்.

“அதான் ஏன்??!!!”

“ஏன்னா…” என்றவளின் இதழ்கள் நடுங்க “எனக்கு சொல்ல தெரியலை.. பட்… அ.. ஆன்ட்டி..” என்றவள் தயங்க,

“அம்மாக்கு என்ன?? அந்த பொண்ணு பார்க்கிற விசயமா?? லுக் மனு.. அது நான் ஹேண்டில் பண்ணிப்பேன்.. நீ அதெல்லாம் கன்பியூஸ் பண்ணிக்காத..” என்ற அவனுக்குமே பரிதவிப்பு.

ஒருவார்த்தை சரி என்று சொல்லிவிட மாட்டாளா என்று.

“இல்ல அதில்ல..” என்றவள், “நீங்க முதல்ல என்னை விடுங்க…” என்று விலக முற்பட,

“நோ… நீ சொல்லு நான் விடுறேன்..” என்றான்.

“அதான் சொல்றேனே.. எதுவும் வேண்டாம்..” என,

“அதில்ல.. எந்தா சாரே சொல்லு..” என்று அவன் கேட்க “என்னது??!!” என்றாள் இமைகள் படபடக்க.

“எஸ்.. வேணாம் எல்லாம் சொல்லாத.. எந்தா சாரே சொல்லு அதுவே நீ ஓகே சொல்றது போலத்தான்..” என, சித்திரைச் செல்வன் பேசுவது அவளுக்கு என்னவோ அவன் புதிய பாசை பேசுவது போல வியப்பாய் இருந்தது.

“சொல்லு மனு..” என்றபடி அவன் அவளின் முகத்தோடு முகம் வைக்க,

“லீவ் மீ..” என்றாள் பிசிறிய குரலில்.

“ம்ம்ஹும்.. நீ இங்க வரணும்.. நானும் இங்க வரணும்.. நம்ம பார்க்கனும்னு இருக்கு மனு.. நம்ம டெஸ்டினி இது.. நம்மலே நினைச்சாலும் மாத்த முடியாது.. அக்சப்ட் பண்ணிக்கணும்.. என்னை நீயும் அக்சப்ட் பண்ணிக்கோ..” என்றவன் இதழ்கள் அவளின் செவிகளை உரச,

மானசாவோ என்ன முயன்றும் தன்னை கட்டுக்குள் கொண்டு வர முடியாதபடி தவிக்க, வார்த்தைகள் மட்டும் “வேணாமே..” என்றது பலமின்றி.

“ஏன் வேணாம்?? நான் வேணாம் சொன்னப்போ நீ ரீசன் கேட்காம போயிட்ட.. இப்போ நான் கேட்கிறேன்.. நீ சொல்லு.. ஏன் வேணாம்…” என்றவன், அவளை அப்படியே தன் மீது சாய்த்துக்கொண்டு அங்கிருந்த கவுச்சில் அமர, ஒருவர் மட்டுமே அமர முடிந்த அந்த கவுச்சில், இருவர் அமர்ந்தால் எப்படி இருக்கும்..

மானசாவின் பிடிவாதங்கள் எல்லாம் இந்த நெருக்கத்தில் தகர்ந்துகொண்டு இருக்க, “சொல்லு மனு ஏன் வேணாம்..” என்றான் இப்போது கொஞ்சலாய்.

“அ.. அது.. எ.. எனக்கு பயமா இருக்கு…”

“என்ன பயம்??!!”

“அகைன் ஒருவேள இது வொர்கவுட் ஆகலைன்னா…” என்றவள் “நோ வே…” என்று தலையை குலுக்கி,

“இட்ஸ் இனப் சித்து சர்..” என்றவள், அவனில் இருந்து விலகி எழ முயற்சிக்க, “அது எப்படி அப்படி ஆகும்.. எங்க வீட்ல பிராப்ளம் இல்லை மனு. அப்பா அம்மாக்கு ஜஸ்ட் நான் மேரேஜ் ஓகே சொன்னா போதும்.. கண்டிப்பா உன்னை அவங்க நோ சொல்ல போறதே இல்லை..” என்று அவளுக்கு புரிய வைக்கும் நோக்கில் அவன் பேச முயல,

எப்படியோ அவனை விட்டு விலகி எழுந்தவள் “வேணாம்.. நான் எதையும் மாத்த முயற்சி பண்ணல.. என்னால யாரும் மாற வேண்டாம்.. எதுவும் மாற வேண்டாம்..” என்று முகத்தினை இறுக வைத்து சொன்னவள்,

“உங்களுக்கு பார்த்திருக்க ரூம் எப்போ பார்க்க போகலாம்..” என, அத்தனை நேரம் சித்திரைச் செல்வனுக்கு இருந்த ஒரு இதம் காணாது போக,

“சோ.. இதான் உன் முடிவு அப்படியா??” என,

“எஸ்..” என்று தலையை ஆட்டினாள்.

அன்றைய தின இரவே நீலிடம் சித்து சொல்லிவிட்டான். வேறு இடம் செல்கிறேன் என்று. சொன்னவன் அவனின் உடைமைகளை எடுத்து வைக்க, நீலோ  சம்மதிக்கவே இல்லை.

தனக்கு துணையாக மானசாவை நீல் அழைக்க அவளோ “நான் தான் போக சொன்னேன்..” என்றாள் பார்வையை எங்கோ வைத்து.

“வாட்??!! வொய்..??!!” என்று நீல் அதிர,

“சித்து சொன்ன பொண்ணு நான் தான்…” என, அது மேலும் நீலுக்கு அதிர்ச்சி தர, இவள் இப்படி பட்டென்று சொன்னது கண்டு சித்திரைச் செல்வனுக்கு அதிர்ச்சி தான்.

“யாருக்கும் சொல்லலைன்னு சொன்னீங்க தானே.. யாருக்கும் தெரியக்கூடாதுன்னு தான் நான் நினைச்சேன்.. பட் இப்போ சொல்லிட்டேன் போதுமா..” என்று சித்துவைப் பார்த்து கேட்டவள்,

“நீல் நீயாவது கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோ.. ஓகே வா.. லெட் ஹிம் கோ.. தனு வந்து பார்த்தா இதெல்லாம் பெரிய இஸ்யூ ஆகும்..” என,

“அதான் யாருக்கும் தெரியாதே எதுவும்..” என்றான் நீல்.

“டேவிட் கிட்ட கூட நான் சித்து பத்தி சொல்லலை.. அவனோட வீட்ல தான் நான் இருக்கேன். தனு வந்து சித்துவ பார்த்து பேசி, தென் எல்லாரும் ஏன் சொல்லலை கேட்டா.. நான் என்ன சொல்ல முடியும்? மோர் ஓவர்.. பழையதுனால இப்போ யார் நிம்மதியும் கெட வேணாம்…” என்று மானசா சொன்னதையே சொல்ல, நீலுக்கு கோபம் கோபமாய் வந்தது.

“சித்து…” என்று அவனை அதட்ட,

“லீவ் இட் நீல்… ப்ரீயா விடு.. நம்மதான் டெய்லி பார்த்துக்க போறோமே…” என்று அவனை இலகுவாக்க முயல,

“மனு.. நீ பண்றது தப்பு..” என்றான் நீல்.

மானசா ஒன்றும் பேசினால் இல்லை. நீல் வந்து அழைக்கவும், அவனோடு வர, இவளைக் காணோம் என்று பின்னோடு இப்போது நேயா வர, சித்து பெட்டிக் கட்டுவது கண்டு நேயாவிற்கு என்ன புரிந்ததோ “வேர் ஆர் யூ கோயிங்??” என்று வினவினாள்.

“நத்திங் பேபி.. ஜஸ்ட் பேக்கிங் மை ட்ரெஸ்..” என,

‘அப்படியா…’ என்று நேயா மானசா முகம் பார்க்க, அவளோ குழந்தையிடம் கூட பொய் சொல்லவேண்டுமா என்றுதான் நினைத்தாள்.

இந்த ஒரு மாத காலத்தில், சித்துவிற்கும் நேயாவிற்கும் அப்படியொரு பிணைப்பு. மானசாவை விட இப்போது சித்து தான் நேயாவிற்கு நெருக்கம். டேவிட் கூட அவ்வப்போது கிண்டல் செய்வான்.

“என்ன மனு.. அவ்வளோதானா??” என்று.

இப்போதோ நேயா சுற்றி சுற்றி பார்க்க “நான் போகலை பேபி..” என்றான் சித்து..

இருந்தும் அவளுக்கு என்ன தோன்றியதோ, தட தடவென ஓடியவள், டேவிட்டை அழைத்துக்கொண்டே வந்துவிட்டாள்.

நீல் வந்து மானசாவை  அழைத்துச் செல்ல, இப்போது நேயாவும் வந்து இவனை அழைக்க, அவனுக்கு என்னவோ ஏதோவென்று தான் ஆனது.

“வாட் ஹேப்பன்…” என்று டேவிட் வர, மானசாவிற்கு ஐயோ என்று ஆனது.

நீலோ மானசாவை அப்பட்டமாய் முறைத்து நிற்க, சித்துவோ இதனை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

“என்னாச்சு??” என்று டேவிட் நீலிடம் கேட்க,

“சித்து இஸ் கோயிங் சம்வேர்..” என்று நீல் சொல்ல,

“வொய் சித்து.. இங்க என்ன பிராப்ளம்??” என்றான் டேவிட்.

“நத்திங் பிராப்ளம் டேவிட்.. ஜஸ்ட்..” என்று அவனும் என்ன சொல்வதென தெரியாது யோசிக்க,

“என்ன மனு…” என்றான் டேவிட்.

“ஹா..!!” என்று பார்த்தவள், “அது.. அ..” என்று திணற,

“இது என்னோட முடிவு தான் டேவிட்..” என்று சித்து சொல்ல, இப்படியே ஆளாளுக்கு ஒன்று பேச,

“அய்யோ போதும்…!! எல்லாம் கொஞ்சம் நிறுத்துங்க..” என்று மானசா குரலை உயர்த்திவிட்டாள்.

“இப்போ என்ன சித்து ஏன் போறாங்கன்னு தெரியனும்.. அதானே.. நான் தான்.. நான் தான் போகச் சொன்னேன்.. போதுமா??” என்றவள், “எஸ்.. நான்.. நான் தான் ரீசன்..” என,

“மனு…” என்றான் சித்திரைச் செல்வன் அதட்டுவது போல்.

“என்னால முடியல..” என்று முகத்தை மூடிக்கொண்டவள், “ஐ கான்ட் ஹேண்டில் திஸ்..” என,

“மனு ஹேய்.. என்னாச்சு..” என்று டேவிட் அவளை சமாதானம் செய்யப் போக, நேயாவும் “மனு…” என்று அருகில் செல்ல,

‘கிராதகி… யாருக்கும் தெரியக் கூடாதுன்னு சொல்லி சொல்லியே இப்போ இவளே எல்லாருக்கும் சொல்லிட்டு இருக்கா.. இதுல எதுவும் வேணாமாம்..’ என்று அவளை கடினப்பட்டே கடிந்தது அவனுள்ளம்.

Advertisement