Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 33

“ரியல்லி… ரெண்டு பேரும் பேசினீங்களா?? சூப்பர்.. ஒரு ப்ரேக் அப் அப்புறம் அதுவும் லாங் கேப் அடுத்து மீட் பண்றது செம பீல் இல்ல..” என்று நீல் பேசிக்கொண்டே போக, சித்து ஒரு புன்னகையோடு தான் பார்த்து அமர்ந்திருந்தான்.

மானசாவிற்கோ மற்றது விடுத்தது ‘சித்து என்ன சொல்லப் போகிறான்..’ என்பதிலேயே இருக்க,

“எஸ்.. அது ஒரு பீல்.. அதுவும் எதிர்பார்க்காம பார்க்கிறது வேற லெவல்னா, இவன் வரப்போறான்னு தெரிஞ்சே பார்க்கிறது இன்னொரு உணர்வு.. முன்னது என்னோடது.. அடுத்து அவளது..” என,

“வாவ்…. சித்து நீ இப்படியெல்லாம் பேசுவியா??” என்றவன் “ஹேய் மனு என்ன சைலன்ட் ஆகிட்ட..” என்று அவளின் தோளை தட்ட,  அவளுக்கே இதெல்லாம் புதிது தானே.

திகைப்பில் இருந்து இன்னும் முழுத்தாய் வெளிவராது நீலையும், சித்துவையும் காண  “என்ன மனு இப்படி ஷாக்காகி இருக்க..” என்றான் நீல்.

“நான் சொன்னதை கேட்டு ஷாக்காகி இருப்பா..” என்று சித்து சொல்ல,

“ஹா..!!” என்று இருவரையும் மாறி மாறிப் பார்த்தவள், “நான்.. நான் கிளம்புறேன்..” என்றாள் ஆழ மூச்சுவிட்டு.

“இரு மனு… சித்து எவ்வளோ அழகா சொல்லிட்டு இருக்கான்..” என்று நீல் சொல்லி முடிக்கும் முன்னமே,

“சித்து சொல்றது கதை இல்லை.. எங்… அவங்க லைப்ல நடந்தது.. நடக்கிறது.. புரிஞ்சுக்கோ..” என்று மானசா படபடக்க, அப்போதும் சித்திரைச் செல்வன் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே அவளினைக் காண,

“சாரி சாரி…..” என்று நீல் இருகரம் தூக்கியவன் “அப்புறம் என்னாச்சு சித்து.. எவரிதிங் ஓகேவா..” என்று கேட்க,

“ம்ம்ஹும்..” என்று உதடு பிதுக்கினான் மற்றவன்.

“வொய்..?!!! யூ ஆர் வெல் செட்டில்ட் நவ்.. இப்போவும் உனக்கு பயமா?? அவங்களை நல்லா பார்த்துக்க முடியாதுன்னு..” என,

“ஹா ஹா.. அப்படி இல்ல நீல்… அவளோட லெவலே வேற.. பட் இப்போ எனக்கு ஒரு கான்பிடன்ட் இருக்கு.. என்னால தி பெஸ்டா இல்லைன்னாலும், அவள சந்தோசமா பார்த்துக்க முடியும்னு..” என்று சித்து பதில் சொல்லிக்கொண்டு இருக்க,

“ரெண்டு பெரும் கொஞ்சம் ஸ்டாப் பண்றீங்களா??!!” என்று கத்திவிட்டாள் மானசா.

“என்ன மனு..??!!” என்று நீல் கேட்க,

“எப்படி ரெண்டு பேரும் இப்படி திங் பண்றீங்க.. உங்க சைட் மட்டும் பாக்குறீங்க.. பேசுறீங்க.. என்.. ம்ம்ச்.. அந்த பொண்ணு பத்தி கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா.. அவ எவ்வளோ பெரிய லெவல்ல வேணா இருக்கட்டும்.. பட்.. மனசு.. அதுல வர பெய்ன் எல்லாம் ட்ரூ தானே.. உங்களுக்கு கான்பிடன்ட் இல்லைன்னா வேணாம் சொல்றது..

நீங்க செட்டில் ஆகிட்டா அப்ரோச் பண்றதும் என்ன மென்டாலிட்டி… உங்களோட மைன்ட் மேனிபுலேசன்க்கு எல்லாம் அந்த பொண்ணு சம்மதிக்கனுமா என்ன?? ஏன் அவளுக்குன்னு எதுவுமே இருந்திருக்காதா?? ஆர் அவளும் யோசிச்சிருக்க மாட்டாளா நம்மளோட பியூச்சர் இப்படிதான் இருக்கும்னு..

நீங்களா எப்படி டிசைட் பண்றது அவளால இதுல செட் ஆக முடியாதுன்னு.??!! நீங்களா ஒன்னு நினைச்சு.. நீங்களா ஒன்னு யோசிச்சு.. நீங்களா ஒன்னு முடிவு பண்ணி.. பட் உங்களோட எல்லா முடிவுக்கும் அவ ஓகே சொல்லனுமா??” என்று மானசா பொரிந்து தள்ளிட, ஆண்கள் இருவரும் வாயடைத்துத்தான் போயினர்.

இதில் இப்படியொரு கோணமா??!!!!

இல்லையா பின்னே.. நான் இதை நினைத்தேன்.. நான் அதை நினைத்தேன்.. இதனால் இப்படி செய்தேன் என்று தன்னிலை விளக்கமே கொடுத்துக்கொண்டு இருந்தால், மற்றவர் நிலையும் சிந்திக்கவேண்டும் தானே..

மானசா இருவரையும் ஏகத்துக்கும் முறைத்தவள் “இதுல பெருமை வேற..” என்று சொல்லிவிட்டு செல்ல,

“இப்போ ஏன் இவ்வளோ டென்சன் மனுக்கு..” என்று நீல் புரியாது கேட்க,

“லீவ் இட் நீல்… ப்ரீயா விடு.. நீயும் ரிலாக்ஸ் பண்ணு.. லைப்ல பர்ஸ்ட் நீ ஸ்டெடியாகு..” என்று சித்துவும் தோள் தட்டிவிட்டு செல்ல, நீல் தெளிந்தானோ இல்லை சித்திரைச் செல்வனிற்கு மனதில் ஒரு அமைதி குடிகொண்டு இருந்தது.

எப்படியும் தான் சொல்ல நினைத்ததை ஏதோ ஒரு வகையில் அவளிடம் சொல்லிவிட்டோம் என்ற நிம்மதி வேறு.. கண்டிப்பாய் மானசா யோசிப்பாள் என்ற நினைப்பே அவனுக்கு மகிழ்ச்சி கொடுத்தது.

அவனின் நினைப்பு வீண் போகவில்லை. மானசாவிற்கு அப்படியொரு தவிப்பாய் இருந்தது. அவளின் அறைக்குள் வந்து படுக்கையில் விழுந்தவள், உடை மாற்றவும் இல்லை. டேவிட்டும் ஜெனியும் ‘மனு..’ என்று அழைத்தமைக்கு கூட அவள் பதில் சொல்லவில்லை.

உள்ளே வந்து படுத்தவளுக்கு, பழைய நினைவுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக படையெடுக்க, எதெல்லாம் தன்னை அண்டிடவே கூடாது என்றெண்ணினாளோ இன்று அதன் பிடியில் வசமாய் சிக்கிக்கொண்டாள்.

வெளிவர அவள் சிந்தை சிறிதும் விரும்பவில்லை.

முதன்முதலில் சித்திரைச் செல்வனை கண்டது.. அவனோடு சண்டை இழுத்தது என்று எல்லாமே நினைவில் வந்து தொலைக்க, அவள் எப்போது உறங்கினாளோ  தெரியாது. மறுநாள் எழுந்ததும் “டேவிட் எனக்கு கோவில் போகணும்..” என, அவனோ வித்தியாசமாய் பார்த்தான்.

“என்ன மனு.. என்னாச்சு??” என,

“நத்திங்.. என்னவோ ஒருமாதிரி இருக்கு.. சோ கோவில் போகணும்.. டிராப் பண்றியா நீ ஆபிஸ் போற சைட் தானே..” என்று நிற்க,

“உனக்கு என்னாச்சு??” என்று கூர்மையாய் பார்த்தான்.

“நத்திங் டேவிட்…”

“பின்ன ஏன் இப்படி டிராப் பண்றியான்னு கேட்கிற.. எப்பவும் கூட்டிட்டு போன்னு தானே சொல்வ நீ..” என்றவன் “எதுவும் பிராப்ளமா..” என,

“நோ நோ.. அதெல்லாம் இல்லை.. ஜஸ்ட் ரொம்ப நாள் ஆச்சுல்ல.. அதான்…” என்றவள் டேவிட்டோடு கோவில் செல்ல,

நீலும், சித்துவும் இவளுக்காக கல்லூரி செல்ல காத்திருக்க, ஜெனி தான் அவர்களிடம் சொன்னாள் “ஷி வென்ட் டூ டெம்பில்..” என்று.

நீல் “அப்போ அவளே வந்திடுவா..” என,

“எப்படி சொல்ற நீல்..” என்றான் சித்து..

“மனு டெம்பில் போறப்போ எல்லாம் அவளே வந்திடுவா.. சோ கம் லெட்ஸ் கோ..” என்று நீல் சொல்ல,

“ம்ம் போலாம்..” என்று இருவரும் கல்லூரி கிளம்பிவிட்டனர்.

அங்கே முனீச் நகரில், ஒரு விநாயகர் கோவில் உண்டு. அங்கே அடிக்கடி இல்லை என்றாலும் மாதம் ஒருமுறையாவது மானசா செல்வது வழக்கம். மனதில் அமைதி வேண்டுமானால் அங்கே தான் செல்வாள்.

இன்றையோ தினமோ எதிலிருந்தோ தப்பிக்கும் உணர்வில் தான் இங்கு வந்தமர்ந்தாள் மானசா. எதிலிருந்து.. யாரிடமிருந்து தப்பிக்க என்பது அவளுக்கு விளங்கவில்லை. ஏனோ இன்றைய தினம் சித்துவை காணும் திடம் இல்லை.

அவன் ஏதேனும் கேட்கவில்லை என்றாலும் கூட, அவளால் அன்று சும்மா வாய் மூடி இருந்திட முடியாது. ஆகையினாலே மனது அமைதி பெற, ஒரு தெளிவு கிடைக்கவென்று அவள் கோவில் வந்துவிட, அன்றைய தினம் அவள் வகுப்பிற்கு செல்லும் எண்ணமும் இல்லை.

இப்படியெல்லாம் சொல்லாது கொள்ளாது அங்கே விடுமுறை எடுத்திட முடியாது. எல்லாம் தெரிந்தும் அவளால் அன்று எங்கேயும் செல்ல முடியாது. அங்கேயே கண்கள் மூடி ஒரு ஓரத்தில் ஆம்ர்ந்துவிட்டாள் மானசா..

நேரம் கடந்துகொண்டே இருக்க, அவளுக்கு ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.

பின் ஏனோ ஒரு கேள்வி ‘நான் ஏன் ஒரு முடிவிற்கு வர வேண்டும். அவன் எதுவும் என்னிடம் கேட்டானா?? இல்லையே நீலிடம் தன் மனதில் இருப்பதை பகிர்ந்து கொண்டான். அவ்வளவே… இதற்கு ஏன் நீ இத்தனை அவஸ்தை  படுகிறாய்??’ என்று.

“அதானே.. நான் ஏன் இவ்வளோ டென்சன் ஆகணும்.. ஏன் இவ்வளோ வொர்ரி பண்ணனும்….” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள் கண்கள் விழிக்க, அவளுக்கு எதிரே சற்று தள்ளி, சித்திரைச் செல்வன் கண்கள் மூடி அமர்ந்திருந்தான்.

சற்றே ஆசுவாசமாய் உணர்ந்த உள்ளம், அவனைக் கண்டதும் மீண்டும் பக்கென்று அடித்துக்கொள்ள, ‘இவன் எங்க இங்க??’ என்று பார்த்தாள்.

அலைபேசி எடுத்துப் பார்த்தாள். நீல் எதுவும் மெசஜ் அனுப்பியிருக்கிறானா  என்று. எதுவும் அவன் அனுப்பிடவில்லை. சரி சித்து வேண்டி முடிக்கும் முன்னம் இங்கிருந்து கிளம்பிடலாம் என்று அவள் எழுந்த நொடி

“மனு.. உன்னோட பேசணும்..” என்று மெதுவாகவே அவன் குரல் ஒலித்தாலும், அது அவளுள் பேரிரைச்சலாய் தான் கேட்டது.

“எ… என்னது??!!” என்று அவள் கண்களை விரிக்க, எழுந்து அவளின் அருகே வந்து, அவளையும் அமர வைத்தவன், தானும் அவளருகே அமர்ந்துகொண்டான்.

அதன்பின் ஒன்றும் பேசவில்லை. அவளின் கையைப் பிடித்தபடியே இமைகளை மூடி திரும்பவும் இறைவனை வேண்ட தொடங்கிவிட்டான். அவன் என்னவோ அமைதியாய் கண் மூடி அமர்ந்துவிட, மானசாவிற்குத்தான் இது அவஸ்தையாய் இருந்தது.

எத்தனை நேரம் இப்படி இருந்திட முடியும்??!!

பொறுத்து பொறுத்துப் பார்த்தவள் “கடவுளே இவன்கிட்ட இருந்து காப்பாத்து..” என்று கண்களை அவளும் மூடிக்கொள்ள, இருவரின் மனதும் ஒரே நேரத்தில் இப்போது இறைவனை சரண் அடைய, யாரின் பிரார்த்தனைக்கு ததாஸ்து சொன்னாரோ பிள்ளையார் தெரியவில்லை.

“நீயும் நானும் சேர்ந்து பர்ஸ்ட் டைம் அதுவும் ஜெர்மன் வந்து கோவில் வரணும்னு இருக்கு மனு..”

அவன் குரல் ஆழ்ந்து ஒலிக்க, அவன் சொல்லிய சங்கதி கேட்டு “அட ஆமாம்..!!” என்று அவள் உள்ளம் துள்ளியது. அது நொடியில் அவளின் முகத்தினிலும் வெளிப்பட,

“சோ… இவன்கிட்ட இருந்து என்னை காப்பாத்துன்னு ப்ரே பண்ணாம, எங்களுக்கு ஒரு நல்ல வழி காட்டுன்னு கேளு மனு..” என, இப்போது மானசாவின் விழிகளில் அப்படியொரு ஆச்சர்யம்.

நான் நினைத்தது உனக்கெப்படி தெரியும் என்று.

“என்ன மனு நான் சொன்னது சரியா??!!” என்று சித்து கேட்க, அவள் எதுவும் சொல்லாது இருக்க “வெளிய எங்கயாவது போலாமா??” என்றான் சித்திரைச் செல்வன்.

கடமை.. கண்ணியம்.. பொறுப்பின் சிகரம் என்றெல்லாம் இவள் ஒருகாலத்தில் திட்டிய ஒருவன் இப்போது அவனுக்கிருக்கும் வேலையை எல்லாம் விட்டுவிட்டு வெளியே செல்வோமா என்று கேட்டு நிற்பது வியப்பிலும் வியப்பு அவளுக்கு.

“என்ன பாக்குற.. டுடே எனக்கு நோட்ஸ் கலக்ட் பண்றதுதான்.. சோ வந்துட்டேன்..” என,

‘அதானே பார்த்தேன்..’ என்று முணுமுணுத்தாள்.

“என்ன பாரு மனு..” என்று சித்து சொல்ல, “வெளிய போலாம்..” என்றாள் இங்கிருந்து கிளம்பினாள் போதும் என்பதுபோல.

“ம்ம் எங்க போறதுன்னு எனக்குத் தெரியாது நீதான் கூட்டிட்டு போகணும்..”

“இது வேறயா??” என்றபடியே எழுந்தவள் “பிள்ளையாரப்ப கடைசியில தும்பிக்கைய இவன் பக்கம் வீசிட்டீங்களே..” என்று எண்ணிக்கொண்டே தான் கோவில் விட்டு வெளிவந்தாள்.

எங்கே செல்வது என்று அவளுக்கும் தெரியவில்லை. சிறிது தூரம் நடை பயணம். ஆங்காங்கே பயணிகள் இருக்கைகள் இருக்க, அதில் சில நேரம் அமரவும் செய்தனர். இது ஒரு வித்தியாசமான அனுபவமாய் இருந்தது இருவருக்கும்

வெளிநாட்டில்.. யாரையும் இவர்களுக்கும் தெரியாது . இவர்களை யாருக்கும் தெரியாது. சுதந்திரமாய்  கால் போன போக்கில் இப்படி நடப்பது அதுவே சுகந்தமாய் இருந்தது.

“இன்னும் எவ்வளோ தூரம் மனு.. இப்படியே நடந்தே இந்தியா போயிடலாமா??” என, அவனை எரிச்சலாய் பார்த்தவள் “எங்க போறதுன்னு தெரியலை..” என்றாள் அங்கிருந்த ஓர் பயணிகள் இருக்கையில் அமர்ந்து.

“ம்ம்.. சரி.. எனக்கு ரூம் பார்த்தட்டியா??” என்று சித்து கேட்கவும், அவளுக்கு திடுக்கென்று ஆனது ‘அப்.. அப்போ.. கிளம்பப் போகிறானா..’ என்று.

லேசாய் ஒரு சோர்வு வந்து அவளை சூழ்வது போலிருக்க “நீதானே சொன்ன மனு..” என்றான்.

“ம்ம் எஸ்.. நான்.. நான் இன்னும் எதுவும்..” என்று அவள் திணற,

“ஓகே லீவ் இட்.. ஐ வில் மேனேஜ்..” என்றவன் “பாஸ்கியோட பேசுறியா??” என்றான் சற்றே ஆவலாய்.

இப்படிக் கேட்டால், அவள் என்ன பேசுவாள் அவனோடு. இவனால் தானே அவனையும் ஒதுக்கினாள். அந்த எரிச்சல் தலைதூக்க, “நான் பேசலை..” என, அதற்குள் அவன் பாஸ்கருக்கு அழைத்திருந்தான்.

“ம்ம்ச் சித்து சர்..” என்றவள், கண்டிக்கும் தோரணையில் பார்க்க,

“பேசு.. அவன் சந்தோசப்படுவான்..” என்றபடி அலைபேசியை கொடுக்க, “ஹலோ மனு..” என்ற உற்சாகக் குரல் அலைபேசியின் வெளியே கூட கேட்டது மானசாவிற்கு.

அதற்குமேல் முடியாதென்று சொல்ல முடியாதில்லையா “ஹ.. ஹலோ பாஸ்கிண்ணா..” எனும்போதே அவள் குரல் நடுங்க, இங்கேயோ ஆதரவாய் சித்து அவளின் விரல்களை பற்றிக்கொண்டான்.

பாஸ்கருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. மானசாவிற்கும் கூட. இருந்தும் இவன் இப்படி விரல்பற்றி இருப்பது சிறு உறுத்தலாய் இருக்க, வெடுக்கென்று தன் விரல்களை மீட்டுக்கொண்டாள் மானசா. 

அவள் அப்படி செய்துவிட்டு, முகத்தை வெடுக்கென்று திருப்ப  “சரியான சிலுப்பி..” என்று சித்துவும் சொல்ல,

“பாஸ்கிண்ணா உங்க பிரண்ட் இங்க வந்து கூட என்னை ரொம்ப இரிடேட் பண்றாங்க..” என்று புகார் சொல்ல,

“அட கடவுளே அங்கே போயுமா உங்களோட பஞ்சாயத்து எனக்கு..” என்று பாஸ்கி சிரிக்க, அவளையும் மீறி மானசா முகத்தில் ஒரு புன்னகை..

அந்த புன்னகை எதிரில் இருப்பவன் கண்ணில் விழக்கூடாது என்று, வேகமாய் தலையை சிலுப்பிக்கொண்டது..

அப்போதும் அவன் “சிலுப்பி..” என,                                                           

“ம்ம்ச் சும்மா இருங்க சாரே…” என்று அவளையும் மீறி வார்த்தைகள் இப்போது சித்துவிடம்.    

Advertisement