Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 29 (2)

 

கல்லூரி விஷயம், படிப்பு விஷயம் எல்லாம் முக்கால்வாசி நீலே சித்துவிடம் பேசிவிடுவதால் மானசவிற்கு அதிகம் அவனோடு பேசவும் வாய்ப்புகள் இல்லை. அதை அழகாய் அவளே தவிர்ப்பதாய் தான் தோன்றியது அவனுக்கு.

ஆக, மொத்தம் ஜெர்மன் வாசம் அவனுக்கு பழகிப் போனதோ இல்லையோ, மானசாவின் ஒவ்வொரு செயலுக்கும் சித்துவிற்கு இப்போது நன்கு அர்த்தம் புரிந்தது.

அவள் லேசாய் கழுத்தினை திருப்பி, ஒரு அட்டப் பார்வை பார்க்கிறாள் என்றாள், அங்கே நடப்பதோ இல்லை யாரேனும் பேசுவதோ அவளுக்குப் பிடிக்கவில்லை என்று அர்த்தம்..

இதைதான் முதலில் கண்டுகொண்டான்.

அடிக்கடி அவள் முன்னேயும் இப்படித்தானே பார்ப்பாள் அவனை.. அதெல்லாம் இப்போது நினைவில் வந்து தொல்லை செய்தது.

எப்படியாவது ஒருமுறை இவளை தனியே பிடித்து அமர வைத்து பிடிவாதமாகாவேனும் பேசிட வேண்டும் என்று நேரம் பார்த்துக்கொண்டிருக்க, அந்த சந்தர்ப்பம் தானே அமைந்தது.

நீல் இரண்டு நாட்கள் அவன் குடும்பத்தினரோடு இருந்துவிட்டு வருவதாய் கூற, “ஓகே நீல்..” என்றுவிட்டான்.

“மானசா வில் டேக் கேர் ஆப் யூ…” என்று அவன் சொல்ல, இவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“என்னது??!!” என்று நீல் கேட்க,

“நத்திங் நீல்.. நான் வந்து ட்வண்டி டேஸ் மேல ஆச்சு… இன்னும் மானசா என்னோட சரியா கான்வர்சேசன் கூட இல்லை… இதுல கேர் பண்ணுவாளா??” என,

“ஓ!!! காட்…” என்று நெற்றியில் தட்டிக்கொண்டான்.

“ரியல்லி.. எதுவும் பிராப்ளமா??!!!” என்று நீல் கேட்க “நோ நோ.. அதெல்லாம் இல்ல. ஜஸ்ட் நீ பேசுற மாதிரி அவ பேசலை தட்ஸ் ஆல்…” என்றுவிட்டு சித்து போக,

“அவ அப்படி இல்லையே…” என்றவன் “ஓகே நான் சொல்லிட்டு போறேன்..” என்றவன் மானசாவிடம் தான் என்றே சென்று நின்றான்.

“மனு.. நீ ஏன் இப்படி பீகேவ் பண்ற??” என்பது தான் அவனின் முதல் கேள்வியே.

“என்ன நீல்??!!”

“சித்துவ நீ ஏன் சரியா ட்ரீட் பண்ணல…??”

“அப்படின்னு யார் சொன்னா??” என்றாள் வேகமாய். எதையும் சொல்லிவிட்டானா?? என்று உள்ளே ஓர் திடுக்கிடல்.

“யார் சொல்லணும். நான் தான் பார்க்கிறேனே.. சித்துக்கு ஹெல்ப் பண்றது நமக்கு அலாட் பண்ண வொர்க்.. பட் மோஸ்ட்லி எல்லாமே நான் தான் பண்றேன். நீ எதுவும் கேர் பண்றது இல்ல..” என்று கண்டிக்க,

“நீதான் எல்லாமே பண்ற.. சோ நான் என்ன செய்ய??” என்றாள் வேண்டும் என்றே ஒன்றும் தெரியாதது போல்.

“ஓ..!! ஓகே டூ டேஸ் நான் என் வீட்டுக்கு போறேன்.. நீயே எல்லாம் ஹேண்டில் பண்ணிக்கோ..  கிளாஸ் மட்டும் தான் வருவேன். இங்க சித்துக்கு என்ன வேணும்னாலும் நீ தான் செய்யணும்..” என்றுவிட,

“வாட்??! நீல் திஸ் இஸ் நாட் பேர்…” என்றாள் கோபமாய்.

“ஐ டோனோ…” என்றவன் “சித்து ஏதாவது கம்ப்ளைன்ட் பண்ணா தென் நானும் உன்மேல கம்ப்ளைன்ட் செய்வேன் மனு..” என்று மிரட்டிவிட்டு வேறு சென்றான்.

இது போதாதா மானசாவிற்கு…??!!

‘என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறான் இவன்..’ என்று சித்துவின் மீது ஆத்திரம் வர, அவன் இங்கு வருகிறான் என்று தெரிந்ததுமே அவள் நெஞ்சம் முதலில் ஸ்தம்பித்து பின் மெதுவாய் துடித்து பின் வேகமாய் படபடத்த உணர்வுகள் இப்போது கூட அவளுக்கு உணர முடிந்தது.

அவளின் மென்டர் வந்து சித்திரைச் செல்வன் பற்றிய விபரங்கள் அனுப்பி, நீங்கள் இருவரும் தான் பொறுப்பு என்று சொல்கையில் அவளுக்கு முதலில் இங்கிருந்து கிளம்பிடலாமா என்றுதான் தோன்றியது. கணினித் திரையில் ஒளிர்ந்த அவனின் புகைப்படத்தினை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

நல்லவேளை இவள் அங்கே செய்த சர்டிபிகேட் கோர்ஸ் முழுதாய் முடிக்கவில்லை என்பதால் அதனைப் பற்றிய பேச்சே இங்கு அவள் யாரிடமும் சொல்லவில்லை. இல்லையென்றால் ‘நீ படித்த இடம் தானே..’ என்று நீல் கேட்டால் இப்போது போல் சித்துவை அப்போது தவிர்த்திருக்க முடியாது.

டேவிட்டிற்கும் அடையாளம் தெரியவில்லை… நல்லதாகிப் போனது..

அன்றைய தினம், கிளம்பி ஊட்டி வந்தவள், ஏன் எதற்கு என்றெல்லாம் வீட்டினில் சொல்லவில்லை “அங்க இருக்க பிடிக்கல.. சோ போரிங்.. என்னால இனிமே அங்க முடியாது…” என்றாள் ஒரேதாய்.

தனுஜா, ராபர்டோடும் அவளின் நட்புக்களோடும் சேர்ந்து ட்ரிப் சென்றிருக்க, செந்தமிழ் மட்டும் தானே இருந்தார்.

“என்னாச்சு மனு??” என்று விசாரிக்க, “எனக்கு அந்த கோர்ஸ் பிடிக்கலப்பா.. சும்மா பேருக்கு நானும் படிச்சேன்னு டைம் வேஸ்ட்.. அதான் வந்துட்டேன்.. நீங்க போய் வெக்கேட் மட்டும் பண்றீங்களா??” என்று சொல்லி,

அப்பாவின் கேள்வி பார்வையை தவிர்த்து, மேலும் அது இதென்று பேசி ஒருவழியாய் அவரைத்தான் அனுப்பிவைத்தாள்.

அனுப்பியவளுக்கு ஒரு பயம் இருந்தது எங்கே அப்பா சித்துவை பார்த்து பேசுவாரோ என்று. ஆனால் நல்லவேளை திரும்பி வந்த மனிதர் “எதோ செமினார்னு சித்து பாஸ்கி எல்லாம் அங்க இல்லை… ஷில்பா மட்டும் தான் இருந்தா..” என,

‘அப்பாடி…’ என்ற உணர்வு..

ஷில்பாவோடு அவ்வப்போது பேசுவாள்.. இப்போதும் கூட.. ஆனால் பாஸ்கியோடு பேச்சினை நிறுத்திக்கொண்டாள். அவன் அழைத்தமைக்குக் கூட “பாஸ்கிண்ணா ப்ளீஸ்… சொல்றேன் தப்பா நினைக்கவேணாம்.. உங்களோட பேசினா ஆட்டோமெட்டிக்கா உங்க பிரண்ட் நியாபகமும் சேர்த்து வரும் எனக்கு.. சோ ப்ளீஸ்…” என்றுவிட்டாள்.

பாஸ்கருக்கும் சங்கடமாய் தான் இருந்தது. இருந்தும், இதனை சொல்கையில் அவளுக்கும் எத்துனை தர்மசங்கடமாய் இருந்திருக்கும் என்பதை புரிந்துகொண்டான்.

வயது வித்தியாசம் இல்லாது, பாலின பாகுபாடு பாராது சில நேரங்களில் அமையும் நட்புக்கள் எல்லாம் வாழ்வில் என்றுமே தவறவிடக் கூடாதவை..!!

சித்திரைச் செல்வன் ஒருவன் எடுத்த முடிவினால் இங்கே இவர்களும் நட்பிழப்பு ஏற்பட்டது தான் மிச்சம்.

அதன் பின்னான நாட்கள் மானசாவிற்கு நிச்சயமாய் கடினமான நாட்களே. நல்லவேளை தனுஜா அங்கில்லை. கிட்டத்தட்ட இருபது நாட்கள் ஆகியது அவள் திரும்ப வர. செந்தமிழ் முக்கால்வாசி பொழுது வீட்டில் இருப்பதில்லை என்பதால் இவளுக்கு தனக்குள் மூழ்கிட யாரும் தடையாய் இருக்கவில்லை.

அப்பாவினோடு சேர்ந்து தான் உண்பாள். சில நேரம் வெளியே செல்வாள்.. பல நேரம் அறையினில் கிடப்பாள். ஏதோ ஒரு யோசனை.. உள்ளுக்குள்ளே அவளை போட்டு அரித்துக்கொண்டே இருக்க, டேவிட் தான் இதனை கவனித்தான் முதலில். டேவிட், ராபர்ட்டின் நண்பன். இவளுக்கும் சிறு வயது முதலே நன்கு பழக்கம். 

“வாட் ஹேப்பன் மனு… நீ முன்னமாதிரி இல்லையே..” என்று கேட்க.,  “நீ ஏன் இங்க சுத்திட்டு இருக்க.. நீயும் ட்ரிப் போயிருக்கலாமே..” என்றாள்.

“நான் போனா.. ஜெனி என்னை பிச்சிடுவா…” என்றவன், அவள் கருவுற்று இருப்பதை சொல்ல,

“ஹேய் பிராடு.. இதெல்லாம் நீ முன்னாடியே சொல்லமாட்டியா.. பின்ன என்ன கிளம்பு நீ ஜெர்மன் போ..” என்று துரத்தினாள்.

“அடடா.. இங்க கொஞ்சம் வொர்க்ஸ் இருக்கு.. முடிச்சிட்டு பிளைட் ஏறத்தான் போறேன்..” என்றவன் “சரி சொல்லு என்ன பிராப்ளம் உனக்கு??” என,

“எனக்கென்ன பிராப்ளம்.. ஐம் ஆல்ரைட்..” என்றாள் இலகுவாய்.

“மனு… உனக்கு பொய் சொல்ல தெரியாது.. வரவும் செய்யாது.. சோ சொல்லு என்ன ப்ராப்ளம்.. நீ திடீர்னு வரவுமே நினைச்சேன் சம்திங் என்னவோன்னு..” என்றவன்,

“என்ன மனு லவ் பிராப்ளமா..?” என, அதிர்ந்து போய் பார்த்தாள்.

அவளின் அதிர்வே  அப்படிதான் என்று சொல்லிட “ஓகே… இதுல இருந்து வெளிய வர முடியுமா பாரு.. மேல படிக்கனுமா படி.. ஆர் ட்ரிப் போகறியா போ… இல்லையா என்னோட ஜெர்மன் வர்றியா வா..” என,

“நோ ஐ வில் மேனேஜ்..” என்றாள் உறுதியாய்.

சொல்லிவிட்டாளே தவிர அது அவளால் முடியத்தான் இல்லை. வெளிக்காட்டிக்கொள்ளாது எத்தனை நாள் இருந்திட முடியும்.?

அதிலும் தனுஜா அவ்வப்போது ஏதேனும் கேட்கையில் திணறலாய் இருந்தது. ஒருவழியாய் தனுஜா ராபர்ட் திருமணம் முடியவும் “நான் அங்க வந்து மேல படிக்கவா??” என்று டேவிட்டிடம் கேட்க,

“தாராளமா வா.. நீ அப்ளை பண்ணு.. பார்த்துக்கலாம்..” என்றுவிட்டான்.

அப்படி கிளம்பி வந்தது தான் இங்கே.. வந்தவள் முதுகலை முடித்து, இங்கேயே ஆராய்ச்சி மாணவியை சேர்ந்தும் விட்டாள்.

கொஞ்சம் கொஞ்சமாய் நிதானித்து, தன்னை தனக்குள்ளிருந்த மீட்டெடுத்து, வாழ்வின் நிதர்சனம் புரிந்து மனதில் அமைதியை சுமந்துகொண்டு அவள் இருக்கும் நேரம் பார்த்துதான் நிகழ்ந்தது சித்திரைச் செல்வனின் வரவு என்பது.

அவ்வளோதான்.. ஆண்டு கணக்கில் அவள் தனக்கு தானே சொல்லியிருந்த அதனை அறிவுரைகளும் நொடியில் காணாது போய், அவனின் புகைப்படம் பார்த்து கண்ணீர் வர வைத்துவிட, தவித்துத்தான் போனாள் மானசா.

அதிலும் அவனை எப்படி நேர்கொண்டு பார்ப்பது, அவனோடு எப்படி பேசுவது.. திருமணம் ஆகியிருக்குமோ??!! இதெல்லாம் யோசித்து யோசித்து மிகவும் சோர்ந்து போக, நீலோ இவளுக்கு உடல் நலம் தான் சரியில்லை என்றெண்ணி

“நீ ப்ரீயா விடு நான் பார்த்துக்கிறேன்..” என்றுவிட்டான்.

இருந்தும்..!!!

அவனைக் காண்கையில் தான் இதுபோல் கண்ணீர் சிந்திவிட்டால்??!!

தான் வேண்டாம் என்றவள், இத்தனை ஆண்டுகள் கடந்தும் தன்னைப் பார்த்து கண்ணீர் விடுகிறாள் என்ற கர்வம் அவனுள் வந்துவிடாதா..?? அந்த நேசம் அப்படியே தான் இருக்கிறது என்று தெரிந்துவிடாதா??

‘கூடவே கூடாது…’ என்று முடிவெடுத்துக்கொண்டாள் மானசா..

அவனைக் காண்கையில் தான் மிக மிக இயல்பாய் இருக்க வேண்டும்… இதுமட்டுமே அவள் மனதில். அடிக்கடி அவனின் புகைப்படங்களை எல்லாம் பார்த்துக்கொண்டாள். அவனுக்கு மெயில் அனுப்பியது, அவனின் சந்தேகங்களை எல்லாம் தெளிவு செய்தது எல்லாம் இவளே..

போனில் பேசியது மட்டுமே நீல்..

இப்போது அவனே வந்து ‘உன்னை கம்ப்ளைன்ட் செய்வேன்..’ என்றுவிட்டு போக, கோபம் வந்துவிட்டது இவளுக்கு..

நேராய் சித்துவை தேடித்தான் போனாள்.. 

 

Advertisement