Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 29 (1)

“மனு.. நீ.. நீ ஏன் இப்படி..?? நீ இப்படி என்னை பாக்குறது கூட என்னால டாலரேட் பண்ண முடியலை..” என்றவனின் குரலில் அப்பட்டமாய் ஓர் இயலாமை தான் தெரிந்தது.

அவளோ மிக அலட்சியமாய் “எப்படி பாக்குறேன்..??” என்று தலை சரித்துக் கேட்க,

“இதோ.. இதான்.. என்னை பார்க்கிறப்போ உனக்கு கொஞ்சம் கூட எதுவும் தோணலையா??” என்று பரிதவிக்க,

“என்ன தோணனும்?? எனக்கு புரியலை.. கொஞ்சம் க்ளியரா சொல்ல முடியுமா??” என்றாள் அப்படியொரு பாவனையில்.

அதைப் பார்க்கையில், சித்துவிற்கோ அவளை அப்படியே ஓங்கி ஒரு அறை வைக்கவேண்டும் போல் தான் வந்தது. முடியுமா அவனால். இங்கே அவளைக் கண்ட நொடி முதல் அவன் படும்பாடு என்ன?? அவளோ சர்வ சாதாரணமாய் ‘என்ன தோணனும்..’ என்று கேட்டால், அது எப்படி??

“மானசா…” என்று சித்து பல்லைக் கடிக்க,

“லுக் மிஸ்டர். சித்திரைச் செல்வன்.. எனக்கு நீங்க என்ன சொல்றீங்க.. என்ன சொல்ல வர்றீங்க இது எதுவுமே புரியலை.. கொஞ்சம் புரியும் படியா சொன்னா நல்லா இருக்கும்…” என்று மானசா வார்த்தைக்கு வார்த்தை நிதானம் கொடுத்து பேச, அவனோ அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நிதானம் இழந்து கொண்டு இருந்தான்.

உறுத்து விழித்து சித்து அப்படியே நிற்க “ம்ம் சொல்லுங்க…” என்றவள், அவனின் மௌனம் கண்டு

“ஓகே… நீல் வந்தா சொல்லிடுங்க..” என்று எழுந்து கிளம்பப் போக,

“மானசா…” என்று சற்று குரல் உயர்த்தியே சித்து அழைக்க,

“எஸ்..” என்றாள் வெகு அழுத்தமாய்.

“நிஜமா உனக்கு என்னைப் பார்த்து எதுவும் ரியாக்ட் பண்ண தோணலையா??”

“பர்ஸ்ட் நீங்க யார் எனக்கு?? உங்களை பார்த்து நான் ஏன் ரியாக்ட் பண்ணனும்..” என,

“மானசா…” என்று ஆக்ரோசமாய் அழைத்தவன், வேகமாய் அவளை நெருங்கி அவளின் கன்னம் பற்றி “ஏய் உனக்கு தெரியலையா?? நிஜமா சொல்லு என்னை பார்த்து உனக்கு எதுவும்.. எதுவுமே தோணலையா டி…” என, அவளின் கண்களில் அதை விட ஆக்ரோஷம் தெரிந்தது.

அப்போதாவது ஏதேனும் சொல்வாள் என்று சித்து அவளின் விழிகளை ஆழம் பார்க்க “டோன்ட் யூ ஹேவ் எனி சென்ஸ்…??” என்றாள் கண்களை இடுக்கி.

அவன் பார்வை மாறும்போதே, அவனின் கையை தட்டிவிட்டவள் “ஒரு பொண்ணுட்ட எப்படி பீகேவ் பண்ணனும்னு தெரியவே தெரியாதா??” என்றாள்.

“ஐ க்னோ..” என்று கத்தியவன்,

“பட் நீ பண்றது சரியில்ல மனு…” என,

“நானா??!!!” என்று வியப்பினை காட்டியவள் “கம் கம்.. சிட் சிட்…” என்று எதிரில் இருந்த இருக்கையை காட்டி, “ம்ம் சொல்லுங்க மிஸ்டர் சித்திரைச் செல்வன்.. நான் என்ன பண்ணேன்.. எது சரியில்லை..” என்று மானசா கேட்டபடி அமர்ந்தே விட,

‘இதற்கு இவள் கிளம்பியே சென்றிருக்கலாம்..’ என்று தோன்றியது அவனுக்கு.

“அட உக்காருங்க…” என்று கை காட்டினால் எதிரே.

அவனுக்கோ, அவளருகே அமர்ந்து அவளின் கரத்தினை இறுக கோர்த்து, தன் மீது சாய்த்துகொள்ள வேண்டும் போலிருக்க, இறுகிப் போய் நின்றிருந்தான்.

“ம்ம் சொல்லுங்க…” என்று அப்போதும் அவள் ஊக்க,

“நீ போ…” என்றான் வெளியே கை காட்டி.

“அட..!!!” என்று பார்த்தவள் “நிஜமாவா??” என,

“எஸ்.. நீ போலாம்..” என,

“அதை நீங்க சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லை..” என்றபடி இன்னும் அழுத்தமாய் அமர்ந்தவள், பாதியில் நிறுத்தியிருந்ததை எடுத்துப் படிக்கத் தொடங்க, வேகமாய் அவளின் கையினில் இருந்து பிடுங்கி அதனை தூர வைத்தவன்,

“ஒழுங்கா என்னோட பேசு..” என்றான் அவளின் அருகேயே அமர்ந்து.

“ஓ..!!! காட்…” என்று சலித்தவள், “சீரியஸ்லி எனக்குத் தெரியலை.. நீங்க ஏன் இப்படி பீகேவ் பண்றீங்கன்னு..” என்று இரண்டு கைகளையும் விரித்து சொல்ல, அவள் சொல்லி முடிக்கும் முன்னம், அவ்விரு கைகளையும் பற்றி, தன்னை நோக்கி அமரும் படி செய்துவிட்டான் சித்து.

“ஹேய்..!! என்ன பண்றீங்க நீங்க…” என்று அவள் விலகப் பார்க்க,

“நோ… என்னை பாரு நீ..” என்று அவள் முகம் திருப்ப,

“ஷ்..!! உங்களை பார்த்து நான் என்ன செய்ய.. லீவ் மீ.. நான் கிளம்பனும்..” என்றாள் விட்டேத்தியாய்.

“இப்போதைக்கு நீ போக முடியாது..”

“இஸ் இட்…” என்று அவனைப் பார்த்தவள், “இங்க பாருங்க.. நான் இங்க நிம்மதியா இருக்கேன்.. நீங்க எதுக்காக வந்தீங்களோ அதை மட்டும் பாருங்க..” எனும்போதே, காலிங் பெல் சத்தம் கேட்க, மானசா தான் எழுந்து போனாள்.

“நீல்…” என்றுதான் நினைத்தான் சித்து.

ஆனால் வந்தது டேவிட்டும் அவனின் மகளும். டேவிட்டிற்கு சித்திரைச் செல்வனை அடையாளம் தெரியவில்லை. ஆனால் மானசாவிற்கு ஒரு காதலன் இருந்தான் என்பது நன்கு தெரியும். அதில் இருந்து வெளிவரவே அவள் ஜெர்மன் வந்தால் என்பதும் தெரியும்.

அடிக்கடி கேட்பான் “எந்த இடியட் உன்னை மிஸ் பண்ணது..” என்று..

 இப்போதோ “மனு…” என்று அந்த சிறுமி அவளை தொத்திக்கொள்ள, “ஹாய் பேபி.. பார்க் போலாமா…” என்றபடி அவளை மானசா தூக்கிக்கொள்ள,

‘கிளம்புகிறாளோ..’ என்று ஏக்கமாய் பார்த்தான் சித்து.

“டேவிட்..” என்று அழைத்தவள், ஒரு பெயருக்காக சித்திரைச் செல்வனை அறிமுகம் செய்து வைக்க,

“ஓ.. ஹாய்.. இவருக்காக தான் நேத்து இந்தியன் க்ராசரீஸ் எல்லாம் ஷாப் பண்ணியா நீ…” என,

‘அடேய்..!!!’ என்றுதான் பார்த்தாள்.

சித்திரைச் செல்வனோ ஆவலாய் அவளைக் காண “நீல் வாங்கித் தர சொன்னான்..” என்று சொல்லி முடித்துவிட்டாள்.

“மனு கம் லெட்ஸ் கோ…” என்று சிறுமி அழைக்க,

“வெய்ட் குட்டிம்மா..” என்றவள் “ ஜெனி வந்தாச்சா??” என்று டேவிட்டிடம் கேட்க,

“இப்போதான்.. அம்மாவும் பொண்ணும் வந்தாங்க..” என்றவன் “எங்களோட வாங்களேன்..” என்று சித்துவையும் அழைக்க, அவனோ என்ன சொல்வது என்று தெரியாது மானசா முகம் பார்த்தான்.

“ஹேய் மனு இன்வைட் பண்ணலையா நீ??” என,

“இல்ல.. அ.. அது..” என்று இழுத்தவள் “நீல் வரவும் ரெண்டு பேரையும் இன்வைட் பண்ணலாம்னு இருந்தேன்..” என,

“நாளைக்கு நேயாவோட பர்த்டே.. சோ ஈவ்னிங் சின்னதா ஒரு பார்டி.. நீங்க கண்டிப்பா வரணும்..” என்று டேவிட் சொல்ல, பொதுவாய் ஒரு புன்னகை மட்டும் பூத்தான் சித்து.

‘அப்போ.. மனு அப்படியே தான் இருக்கிறாள்… என்ன தன் மீது கோபம்.. அதுமட்டும்.. மற்றபடி தன்னை யாரின் முன்னமும் காட்டிக்கொடுக்கவோ, இல்லை விட்டுக்கொடுக்கவோ அவள் தயாராய் இல்லை….’

இது ஒன்று போதாதா அவனுக்கு..!!

பொருளாதார ஏற்றங்களாவது இறக்கங்களாவது… வாழ்வு முறை மாற்றங்களாவது ஒன்றாவது…!!

அதெல்லாம் இப்போது எங்கோ ஓடிப்போனது அவனுக்கு..

என்னை கண்டுகொள்ளாது இருப்பதா?? அதுவும் மானசாவா??!!

‘நோ வே..!!!’

‘இந்தியா திரும்பி போறப்போ நீ என்னோட வருவ.. என்னோட மானசாவா வருவ… வரவைப்பேன்.. அப்போ சொல்லு  என்ன தோணனும்னு.. பார்த்துக்கிறேன்…’ என்று மனதினுள்ளே சூளுரைத்துக்கொண்டான்.

மறுநாள் மாலை நேயாவின் பிறந்தநாள் விழா. எளிய முறையில் வீட்டளவில் தான் ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். அதிகம் யாருமில்லை. டேவிட்டி மற்றும் ஜெனிதாவின் நட்புக்கள். நேயாவின் பள்ளி தோழமைகள். பின் அங்கே அருகருகே இருக்கும் குடியிருப்பில் இருக்கும் ஆட்கள் பின் நீல் மட்டும் சித்து.

இதுவே கிட்டத்தட்ட இருபது பேருக்கு மேலே இருக்க, அனைவருக்குமே சித்து புதியவனாய் இருந்தான். நீல் சிலருக்கு அறிமுகம் செய்துவைக்க, மானசாவும் கூட சிலருக்கு அறிமுகம் செய்து வைத்தாள். மாற்றவர்கள் முன்னிலையில் மானசா இவனிடம் அதிகம் ஒட்டவும் இல்லை. பேசாது முகம் திருப்பவும் இல்லை.

‘விருந்தினன்..’ அந்த முறையில் மட்டுமே அவளின் பேச்சுக்கள் இருக்க, அதுவே அவனுக்கு பெரும் அழுத்தம் கொடுத்தது.

அமைதியாகவே இருந்து நடப்பதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தான். கேக் வெட்டினர். பின் சிறுவர்கள் எல்லாம் ஒரு பக்கம் விளையாட, பெரியவர்களின் அரட்டை. பின் சிறிது நேரத்தில் எளிய விருந்து, அது நடந்துகொண்டு இருக்கும்போதே ஒருபக்கம் மெல்லிய இசை ஒலிக்க, சிலர் ஜோடியாய் நடனம் ஆடிடத் தொடங்க, அடுத்து அடுத்து இருந்ததில் பாதிக்கும் மேலே மெதுவாய் தங்களின் உடலினை அசைத்து ஆடிக்கொண்டு தான் இருந்தனர். மதுவகை வேறு..!!

கண் கூசும்படி எதுவும் இல்லை.

இருந்தும் இவன் யாரோடு சென்று ஆடிட முடியும், நீல் “கம் சித்து.. லெட்ஸ் ஹேவ் ட்ரிங்க்ஸ்…” என்றமைக்குக் கூட வேண்டாம் என்று விட்டான்.

அங்கே ஹாலில் ஒருப்பக்கம் போடப் பட்டிருந்த சோபாவில் அமர்ந்துகொள்ள, சிறிது நேரத்தில் தன்னருகே வந்து அமர்வது மானசா என்று புரிந்தது. திரும்பிப் பார்த்தவன், அவளின் பார்வை எதிரே ஆடிக்கொண்டு இருப்பவர்கள் மீது இருப்பது கண்டு,

“நீ போய் டான்ஸ் பண்ணல..??” என்று கேட்டான்.

ஊட்டியிலேயே பார்த்தானே…!!

அவனை வெட்டும் ஒரு பார்வை பார்த்தவள், “எனக்குத் தெரியும் ஆடணுமா இல்லையான்னு…” என்று பட்டென்று கூற,

“ஆமாமா…” என்றான் கிண்டல் செய்யும்விதமாய்.

அவனின் தொனி அவளை சீண்ட, “உங்களுக்கு இதெல்லாம் பிடிக்கலன்னா எந்திரிச்சு போங்க…” என,

“சரி அப்போ என்னோட நீ வா.. நம்ம தனியா டான்ஸ் பண்ணலாம்..” என, “வாட்??!!” என்று மானசா அதிர்ந்து பார்க்க,

“ம்ம் வா…” என்றான் இவனும் உறுதியாக.

“ம்ம்ச்…” என்று தலையை இட வலமாய் அசைத்தவள் “உங்கக்கிட்ட வந்து உட்கார்ந்தேனே என்னை சொல்லணும்…” என்று எழுந்து சென்றுவிட்டாள்.

இப்படித்தான் அடிக்கடி. காலையில் நீல், சித்து, மனு மூவரும் ஒன்றாய் கிளம்பித்தான் செல்கிறார்கள். சித்து மதியத்திற்கு மேலே வந்துவிடுவான். வந்து அங்கே அருகே இருக்கும் இடங்களை எல்லாம் சுற்றித் திரிவான்.

இப்போது கொஞ்சம் எல்லாமே பழகியிருந்தது. புரிந்ததும் கூட.

மாலை நேரத்தில் தான் நீலும், மானசாவும் வருவார்கள். சில நேரம் மானசா நேரே நீலோடு இங்கே வந்து பின் டேவிட் வீட்டிற்கு செல்வாள். இல்லையோ வராதுமே போய்விடுவாள்.

ஏன் வரவில்லை என்று கேட்கவும் முடியாது இல்லையா??!!

Advertisement