அத்தியாயம்…36

வீட்டிற்க்கு வந்த சக்தி வரதன் தன் பின் யார் வருகிறார்கள் வரவில்லை என்று  எதிர் பாராது தன் அறைக்குள் நுழைந்து   அறையின் கதவை  பட்  என்று சாத்தும் வேளயில்,  நித்திய ஸ்ரீ சட்டென்று அவள்  அந்த அறைக்குள் அவன் பின்னவே நுழைந்ததால் அவள் முகம் தப்பியது..

இல்லை என்றால்  மரத்தால்  ஆனா,  அந்த தேக்கு கதவு அவள் முகத்தில் பட்டால், அதுவும் சக்தி சாத்திய வேகத்தில் அவள் மூக்கு உடைப்பட்டு இருக்கும் என்பது உறுதி…

அதே கோபத்தில் கட்டிலில் அமர்ந்தவன் தன் பின் வந்த சக்தியை … “ இப்போ எதுக்கு என் பின்னவே வர்ற…” என்று நித்திய ஸ்ரீயிடம் கோபமாக கத்தினான்..

இது அவர்கள் இருவருக்குமான அறை .. இதில் ஏன் வந்தாய் என்று கேட்பதே அபத்தமான ஒன்று தான்.. இருந்தும்  சக்தி வரதன் கேட்டான்.

ஏன் கோபம்..? எதற்க்கு கோபம்…?  என்றே தெரியவில்லை.. இது போல்  நித்திய ஸ்ரீயிடம் தன் கோபத்தை அவன் காட்டியது கிடையாது.. திருமணத்திற்க்கு முன் மிரட்டலை  காட்டி இருக்கிறான்.. ஆனால் கோபம்.. அதுவும்  அவள் எதுவும் செய்யாத போது இந்த கோபம் அபத்தம் தான்…

ஆனால் அவனின் இந்த அபத்தமான கோபம் எதனால் என்று நித்திய ஸ்ரீக்கு தெரிந்து இருந்ததால்… புன்னகையுடன்..

“ ஏன்னா இது நம்ம ரூம்.. அது தான் வந்தேன்…” என்று சிரித்துக் கொண்டே பேசியவளின் முகத்தை பார்த்தவனுக்கு ஏதோ ஒரு புரியாத நிலை..

இன்றைய நாளை அவன் எவ்வளவு ஆவளோடு   எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருந்தான் என்பது அவன் மனது அறிந்த ரகசியம்…

அதுவும் அவன் மேலை நாட்டுக்கு எல்லாம் சென்று வந்தவன்.. மேல் படிப்பே மேல் நாடு தான். அங்கு செக்ஸ் என்பது சர்வ சாதரணம்..

காபி சாப்பிடலாமா..? என்று கேட்பது போல் அங்கு ஒரு பெண்ணுக்கு ஆணை பிடித்தால் உடனே..

 ஒரு சிலர்  “ டேட்டிங் போகலாமா…?” என்று அழைப்பர்.. அது அவர்கள் கலாச்சாரம்… அதில் தவறும் கிடையாது. அதற்க்கு மேல் விருப்பம் இருந்தாலும், வெளிப்படையாக தன் ஆசையை வெளிப்படுத்தி விடுவார்கள்.. அது போல் ஒரு சில பெண்கள் அவனிடம் தன் விருப்பத்தை சொல்லியும் இருக்கிறார்கள்..

 மற்றதை பழகிய அவனால் எனோ இதை மட்டும் மனது ஏற்றுக் கொள்ளவில்லை.. அதற்க்கு காரணம் அவனுக்கே  விளங்கவில்லை தான்..

தன்னுடம் பயலுபவர்கள்.. அதுவும் இந்தியர்கள் இவனுடன் ரூமை சேர் செய்தவர்கள். ஒரு சில நாள் பெண்ணையும் அழைத்து வருவர்..

இவன் எதிரில் கதவையும் அடைத்து இருக்கின்றனர்.. அப்போது எல்லாம் அவனுக்கு ஒன்றும் தோன்றியது கிடையாது.. இன்னும் கேட்டால் அவனின் நட்பு.. உனக்கு …

 “ ஹார்மோனில் ஏதோ பிராப்லம் போல அந்த ஷா எவ்வளவு அழகான பெண்.. அவளே உன்னை டேட்டிங் கூப்ப்பிடுறா.. நீ  அவளிடம் இன்ரெஸ்ட் இல்லேன்னு சொல்லி இருக்க..” என்று சொன்ன நண்பனிடம். 

“ நிஜமா இன்ரெஸ்ட் இல்லேடா.. அதை அவ கிட்ட சொல்லாம உன் கிட்டயா சொல்ல முடியும்…” என்று இவன் சொன்னதற்க்கு அந்த நண்பன்..

“ அது தான் உனக்கு ஹார்மோன் பிராப்லம் இருக்கா..? இல்லையா… டெஸ்ட் செய்து பார்த்துடலாம்..” என்று சொன்னவனுக்கு..

“ என்ன டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக போறியா…?” என்று சக்தி வரதன் கேட்டதற்க்கு..

“ அதுக்கி ஏன்டா டாக்டர்  கை வசம் இது இருக்கும் போது…” என்று அவன்  காமித்த சைட்டில் ஏகப்பட்ட வித விதமான அது போலான நீல படங்கள்..

 எந்த வித மறுப்பும் சொல்லாது பார்த்தான் தான்.. பார்க்க மட்டும் தான் செய்தான்.. பார்க்கும் படங்களின் எண்ணிக்கை அதிகமானதே ஒழிய.. அதை செயல் முறை படுத்த இவன் பெண்களை நாடியது கிடையாது..

அவன் பார்த்த கேட்ட… என்று அனைத்துமே நாடவும் தேடவும் நினைத்தது நித்திய ஸ்ரீயிடம் மட்டுமே…  அதற்க்கு அவள் இதோ இப்போது தயாராக தான் இருக்கிறாள் என்பது அவனுக்கு புரிகிறது.. ஆனால் அவனின் தேடல் தொடங்க தான் இப்போது அவன் மனம் நாடவில்லை…

 நித்திய ஸ்ரீ சக்தி வரதனிடம் வித விதமாக.. “ என்ன பிரச்சனை…?  என்ன பிரச்சனை…? ” என்று அவனுக்கு என்ன பிரச்சனை என்று அறிந்தே கேட்டாள் தான்..

ஆனால் அதற்க்கு.. “ ஒன்றும் இல்லை ஸ்ரீ நீ படு…” என்று அவனும் சொன்னதே சொல்ல..

இவள் கேட்க நினைத்தாள் தான்… “ உங்களுக்கு ரிஷி மீது பொறாமையா என்று…?” 

ஆனால் ஏனோ கேட்கவில்லை.. அவனின் ஈகோ  காமித்தால் இவள் கோபத்தை காண்பித்து இருக்கலாம்.. அவன் தன் உறவின்  உரிமையை காண்பிக்கிறான்.. அவனுக்கு உண்டான அந்த உரிமையை அவன் தான் பெற வேண்டுமே ஒழிய தான் பெற்றுக் கொடுக்க முடியாது என்று நினைத்து..

அவன் எதிரிலேயே அவன் வாங்கி கொடுத்த  நகையை கழட்டி பின் தன் சேலையை அதற்க்கு என்ற அறைக்கு சென்று மாற்றி இலகிய உடையை அணிந்துக் கொண்டு எப்போதும் தன் பக்கத்தில் படுக்க தயங்கும்  ஸ்ரீ இன்று படுத்தவள்..

“ என்ன படுக்கைலையா…?” என்று அவள் அவனை பார்த்து கேட்ட அந்த கேள்வியின் அர்த்தம் சக்தி வரதனுக்கு புரிய தான் செய்தது..

இருந்தும் புரியாத்து  போல்.. “ இல்ல தூக்கம் வரல …நீ தூங்கு..” என்று சொல்லி அவன் தன் ஆபிஸ் அறைக்கு சென்றவனை பார்த்தவள்.. தெளியட்டும் தெளிந்து அவனே வரட்டும் என்று நினைத்து அமைதி காத்தாள்.

மறுநாள் அலுவலகம் சென்றவன்  தன் முன் அமர்ந்திருந்த ரிஷியை பார்த்ததும்..

“ என்ன ரிஷி பாண்டிச்சேரி போவதா நேத்து ப்ளான் செய்து இருந்திங்க.. ஏன் போகலையா…?” என்று கேட்டான்.

“ இல்ல போகல…” என்று சொன்ன ரிஷி  ..

“ ஏன்…?” என்று சக்தி வரதன் ரிஷியிடம் கேட்டான்.

“ இல்ல மாமா வேண்டாம் என்று  சொல்லிட்டார்… எனக்கும் நேத்து நீ மூட் ஆவுட்ல இருப்பது போல தெரிஞ்சது.. நான் அங்கு போனாலும் உன்னை பத்தி தான் நினச்சிட்டு இருப்பேன்.. . அதுவும் இல்லாம கன்னிகா நித்திய ஸ்ரீயும் வரட்டும் என்று  சொல்லிட்டா…” என்று ரிஷி சொல்லவும்..

“ ஓ ஸ்ரீ வரட்டும்.. ம் வருவா வருவா.. கூட்டிட்டு போங்க…” என்று சக்தி வரதன் பேசும் தோனியும் குரலின் மாறுபாடும் ரிஷிக்கு ஏதோ ;போல் இருக்க..

“ என்ன சக்தி உனக்கும்  ஸ்ரீக்கும் ஏதாவது பிரச்சனையா…? இன்னும் உங்களுக்குள் எதுவும் சரியாகலையா…?

நான் சொல்றேன்னு தப்பா நினச்சுக்காத.. நேத்து பார்ட்டியில் உன் அம்மா லட்சுமி அத்தையிடம்  கொஞ்சம் கிராண்டா வந்து இருக்கலாமே..

எப்போ பார் என்ன அது அதர பழசு காலத்து நகைய போட்டுட்டு… இல்லேன்னா என் கிட்ட கேட்டு இருந்தா கொடுத்து இருப்பேன்னே… இப்போ  எல்லோர் கிட்டேயும் உங்களை எப்படி என் சம்மந்தி என்று அறிமுகம் படுத்துவது..

இருக்க பட்ட இடத்தில் பெண் கொடுத்தா மட்டும் போதாது.. அதுக்கு தகுந்தது போல இருக்கவும் செய்யனும் என்று துர்கா  ஆன்டி சொன்னதுமே லட்சுமி அத்தை முகம் ஒரு  மாதிரி ஆயிடுச்சி சக்தி..

உன் வீட்டில் இது போலவே பேசிட்டு இருந்தா எப்போவும் உனக்கும்  நித்திய ஸ்ரீக்கும் ஒரு இணக்கமே வராது…” என்று சொன்ன ரிஷியை சக்தி வரதன் பார்த்தான்.

“ஆமாம்டா. இப்போ நேத்து நடந்ததை முழுவதும் இல்லை என்றாலும் அத்தை தன் பெரிய மகள் கிட்ட சொல்ல தானே  செய்வாங்க.. அத்தை சொல்லவில்லை என்றாலுமே பக்கத்தில் கன்னிகா இருந்தா.. அவள்  அவ அக்கா கிட்ட சொல்லாமலேயே இருப்பா… 

என்ன தான் இருந்தாலும் பெண்களுக்கு பிறந்த வீட்டு மனிதர்களை இப்படி நடத்தினா அவங்க அதை பொறுத்து போக மாட்டாங்க. சக்தி.. நீ கொஞ்சம் துர்கா ஆன்டி கிட்ட பேசுனா நல்லா இருக்கும்…” என்று  ரிஷி சொன்னது  தான் தாமதம்..

நேற்றில் இருந்து அவனுக்கு இருந்த மன உளச்சல்.. அதுவும் இது பற்றிய ஆன நினைவு.. இப்போது ரிஷியும் அதையே சொல்லவும்..

“ நான் என்ன செய்யிறது.. எங்க வீட்டில்  ஸ்டேட்டஸ் ஸ்டேட்டஸ்…  அது தான் முதல்ல பார்ப்பாங்க.. என்னையும் அவங்க அப்படியே வளர்த்தாங்க.. அதுவும் என் அத்தை இவங்களுக்கு மேல்… அப்படி வளர்ந்த நான்..

என் ஸ்டேட்டஸ் உள்ள பெண் மீது ஆசை வந்து இருக்கனும்.. என்ன செய்யிறது.. வரல.. ஸ்ரீயே தான் பிடிச்சி இருந்தது…

நானும் ஸ்டேட்டஸ் பார்த்து அவளை மட்டும் ஏத்துட்டு அவள் வீட்டை சுத்தமா ஒதுக்க தான் நினச்சேன்.. ஆனா இப்போ ஸ்ரீக்கு பிடிச்சது எல்லாம் எனக்கும்  பிடிப்பது போல அவள் அப்பா அம்மாவையும் பிடிச்சி தான் போனது..

ஆனால் அந்த பிடித்தம்  என் குணம் அவங்களுக்கு தெரிஞ்ச பின் வந்ததால்… என்னை பழைய மாதிரியே தான்  அவங்க பார்க்கிறாங்க.. 

ஆனா உன்னை.. உங்க அம்மா அப்பா உன்னை எல்லோரையும் ஒண்ணா பார்க்கனும் நடத்துனம் என்று சொல்லிக் கொடுத்ததால், உன் பிடித்தம் கன்னிகா ஆனதும் உன் குணமே அவங்களை  ஈர்த்தும் விட்டது..

போதாதிற்க்கு உன் அப்பா அம்மாவையும் அத்தை  மாமாவுக்கு பிடிக்குது… இப்போ போய் நான் என் அப்பா அம்மா கிட்ட இப்படி பேசு … இப்படி நடந்துக்கங்க  என்று சொல்லிக் கொடுக்க முடியுமா…?  சொல். சொல்லி கொடுக்க முடியுமா சொல்..

நான் மாறி இருக்கேன் தானே.. நான் தானே அவங்க மாப்பிள்ளை.. அதுவு மூத்த மாப்பிள்ளை.. ஆனா ஆனா இவங்க இவங்க…” என்று கத்தி பேசிக் கொண்டே இருந்த சக்தி வரதன் தன்  முன் நின்றுக் கொண்டு இருந்த ஷண்முகத்தை பார்த்து அப்படியே தன் பேச்சை நிறுத்தி விட்டவன்..

அடுத்து என்ன பேசுவது என்று அவன் முழித்து இருக்கும் போது ஷண்முகம்.. வயது கூட பாராது..

“ தப்பு தான் சக்தி… நான் அப்படி உங்க கிட்ட நடந்துக்க்ய்ட்ட்து தப்பு தான்.. அதுவும் நீங்க அறிமுகம் படுத்திய ரிஷி.. உங்க சின்ன பெண்ணுக்கு இவன் சரியா இருப்பான் என்று நீங்க சொன்னவர் கிட்ட ஒரு மாதிரியாகவும் உங்க கிட்ட ஒரு மாதிரியாகவும் நடந்து கிட்டது  தப்பு தான்..” என்று அவர் மன்னிப்பு கேட்கவும்..அமர்ந்து இருந்த சக்தி வரதன் எழுந்து அவரிடம் சென்று..

“ என்ன மாமா.. மன்னிப்பு எல்லாம் இன்னும் கேட்டா நான்  தான் உங்க கிட்ட  நடந்த விதத்திற்க்கு மன்னிப்பு கேட்கனும்…” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போது  ஒரு  டாக்குமெண்டில் கைய்யெழுத்து இட  என்று அந்த இடத்திற்க்கு வந்த துர்கா…

“ எதுக்கு மன்னிப்பு கேட்கனும்..” என்று கேட்டார்…