காதல்கொள் 15:
மறுநாள் காலை வாசலையே பார்த்துக்கொண்டு இருந்த சர்வாவை பார்த்து ராஜாவும் மதியும் “என்ன மாப்பிள்ளை யாரது வர சொல்லிருகீங்களா?” எதுவும் தெரியாது போல் கேட்க
“ஆமா ஒரு ப்ரென்ட் வரர்தா சொல்லிருக்காங்க” என்றவனை ராதி குறுகுறுப்புடன் பார்க்க மதி எப்போதும் போல் இருவரையும் கேலி செய்து ஒரு வழியாக்கி கொண்டு இருந்தாள்
அப்போது அவர்கள் ஏரியா வாண்டுகள் படைசூழ உள்ளே வந்தவனை கண்டு பே என விழித்தாள் மதி. சுற்றுமுற்றும் பார்க்க அப்போது தான் சர்வா ராதியை தவிர வேறு யாருமில்லை என்பதையே உணர்தாள்.
“மனசு விட்டு பேசுங்க” என்றவர்களும் தங்கள் அறைக்கு சென்றுவிட
 வேகமாய் மதி அருகில் வந்த விஷ்ணு ஒரே பிடியாய் அவளை இழுக்க அவன் கழுத்திலேயே அவள் உதடுகள் உரசிக்கொண்டு நின்றது.
“ஆ….” அவள் வாயை பிள்ளக்க
அதை இரு விரல்க்கொண்டு மூடியவன் “எங்க கடைசிவரை உன்னை பார்க்க முடியாமலே போய்டுமோனு பயந்துட்டேன்” என்று கூறி அணைத்துக்கொண்டான். 
வெகு நாட்கள் கழித்து பார்க்கும் அவனை கண்டு இவளும் நெகிழ எவ்வளவு நேரம் கடந்ததோ சிரிப்பு சத்தத்தில் சட்டென பதறி விலகிய மதி சுற்றிலும் பார்க்க அவர்கள் குடும்பமே நின்றிருக்க ராதி தான் அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டு இருந்தாள்.
“எங்ககிட்ட மறைத்து சந்தோசமா இருக்குற அளவுக்கு நடிக்க தெரிஞ்சிடுச்சுல…மாப்பிள்ளை சொல்லலைனா வாழ்க்கை முழுக்க இப்படியே உனக்குள்ளையே புதைச்சிட்டு இருப்ப….எங்களுக்கு பூரண சம்மதம்” என்று கூறிய செல்வனை அணைத்துக்கொள்ள அங்கே சந்தோச அலை பரவியது.
அனைவரும் இயல்பாக பேசி சிரித்துக்கொண்டு காலை உணவை முடிக்க சர்வா அனைவரையும் அழைத்தவன்
“சரி..அப்போ நாங்க கிளம்புறோம் ரொம்ப முக்கியமான வேலைல்லாம் அப்படி அப்படியே போட்டுட்டு வந்துட்டேன்” என்று கூற
“இன்னும் ரெண்டு மூணு நாள் இருந்துட்டு போலாமே மாப்பிள்ளை” என்று கூறிய அன்பரசியிடம் மறுமுறை கண்டிப்பாக வருவதாக சொல்லி சமாளித்து கிளம்பினான். 
எதற்கும் ஒரு வார்த்தைகூட பேசாமல் கிளம்பிவிட்டாள் ராத்விக்கா. எதுவும் கூறாமல் மௌனமாகவே அவனோடு கிளம்பியவளை அனைவரும் ஆற தழுவி ஏதோ இப்போது தான் புகுந்த வீடு அனுப்ப போவது போல் அழுது வைக்க அனைத்தையும் மௌனம் மௌனம் மௌனம் அப்படியே கடந்து கிளம்பினாள்.
அவளை குடும்பத்துடன் கடத்திக்கொண்டு வந்து வைத்து வலுக்கட்டாயயமாக பேசி தீர்த்த அதே அறை. அவள் அமைதியாய் படுக்கையில் அமர்ந்திருக்க அவன் கீழே வேலையாட்களிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தான். வேறொன்றுமில்லை ஒரு இரண்டு நாளைக்கு விடுமுறை சொல்லி அனுப்பியிருந்தான்.
அனுப்பிவிட்டு…சமையலறையில் ஏற்கனவே செய்து வைத்திருந்த  உணவு வகைகளை சாப்பாட்டு அறையில் எடுத்து அடுக்கியவன் இருவருக்குமான இடத்தையும் சரி செய்துவிட்டு தன் ஆருயிரை காண அறைக்கு செல்ல அங்கே அவளோ உட்கார்ந்த நிலையிலேயே சாய்ந்து சயனித்துக்கொண்டு இருந்தாள்.
ஒற்றை முடிகற்று முனுச்சியில் அசைந்தாட  ஜன்னகள் மூடி இருந்ததால் காற்று வசதி பற்றாமல் உதட்டின் மேல் பூத்த வேர்வை துளிகளுடன் குழந்தை போல் உறங்கிக்கொண்டு இருக்கும் அவளை காண காண அன்பு பெருகியது அவனுக்கு.
அவளருகில் சென்று அமர்ந்தவன் அந்த முடிகற்றை ஒதுக்கி நெற்றியில் முத்தமிட்ட அடுத்த வினோடி அவன் பிடாறி முடி கொத்தாக பற்றி உல்லுக்க ஆரமித்தாள் ராத்விக்கா.
“ஆஅ…ஆ….பேபி….விடும்மா”
“விடு….வலிக்குதும்மா….”
“ராதி….ஆ…விடு…”
“ஹே விடுடி….” அவன் கத்த கத்த உலுக்கியதுமல்லாமல் அவன் தோள்பட்டையில் நறுக்கென்ன கடித்து வைக்க ஒரே உதறாய் உதறி அவள்மேல் ஏறி உட்காந்தான் இவன்.
“ஆ…..ஹே…வைட்டா இருக்கடா வலிக்குது….”
“ஹான் எனக்கு மட்டும் இனிச்சிதா?”
“ஐயோ…” அவள் மூச்சு விடவே ஸ்ரமபட கட்டிலில் சாய்ந்தவன் அவளை இழுத்துக்கொண்டான் தன் கைவளைவில்.
“விடு..விடு…என்ன…இவ்வளவு நாள் ஆச்சா உனக்கு வரத்துக்கு போடா டேய்…விடு என்னை” அவள் கோவமாய் கத்த கத்த இவன் அணைக்க தேம்பலோடு அவன் நெஞ்சில் ஒன்றிக்கொண்டாள்.
“சாரி…” அவன் கண்களிலும் நீர் கசிவு.
“நான் உன்னை ரொம்ப்ப மிஸ் பண்ணேன்”
“நானும் தான்…”
“என்மேல தப்பிருந்தாலும் நான் வேணும்னு பண்ணாலும் உன் நல்லதுக்கு தான் பண்ணேன்” 
“தெரியும்”
“உனக்கு தெரியும்னு எனக்கும் தெரியும்”
“ம்ம்…”
“அப்படியும் ஏன் இவ்வளவு நாள் என்னை தள்ளி வைத்த?”
“தீஸ்வரன் தப்பிச்சிட்டான்”
“ஒ….”
“ராதாவும் மாரியும் அவனை கவனிச்சிகிறாங்க”
“நல்லாதானே இருக்கான்?”
“ஒ…எஸ்….” அவன் கண்களில் வெறியுடன் சிரித்தான்.
“நீ லாப்டாப் மாத்தி எடுத்துட்டு போனது தெரிஞ்சதுமே எனக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சு…இன்னொரு இழப்ப தாங்குற சக்தி என்கிட்ட சுத்தமா இல்லை அதுனால தான் உன்ன முதல்ல அனுப்பி வைத்தேன்”
************************
சமீபத்தில் அவர்கள் வீட்டில் வேலைக்கு சேர்ந்தவள் தான் லீலா.  வீட்டு வேலையாட்களை மேற்பார்வையிட என்று சேர்ந்தவள். அன்று அவள் மூலமே கடிதத்தை அனுப்பி இருந்தான் தீஸ்வரன். தொடர்ந்து கண்காணிக்க படுகிறோம் என்பதை உணர்ந்த ராதி அது யாரு என்று தெரிந்துக்கொள்ளவே கிட்டத்தட்ட ஒரு வாரம் அமைதியாக வலம் வந்தாள். 
லீலா தான் அந்த கருப்பாடு என்பதனை கண்டு பிடிக்க அவளுக்கு பெரிய விஷயமாக இல்லை. ஆனால், இவர்கள் தேவை தான் என்ன என்பதை புரிந்துக்கொள்ளவே ஒரு வாரம் எடுத்தது. முதலில் சர்வாவின் தோல்வி பின் அவனின் முக்கிய பணசேர்க்கை தகவல்கள் மற்றும் வெளிநாட்டு பங்குதாரர்களின் தகவல்கள் இன்னும் பல அரசியல்வாதிகளின் பினாமி பற்றிய தகவல்கள் என்று அறிந்து பதித்து வைத்து இருந்த சர்வாவின் மடிகணினி என்பது புரிந்து போயிற்று.
அப்படி தான் சரிபட்டு வராத வகையில், இருவரையும் சமயம் பார்த்து போட்டு தள்ள திட்டம் தீட்டி இருப்பதையும் அவள் யாரோடோ தொலைபேசியில் பேசிக்கொண்டு இருப்பதை கேட்டு கண்டுபிடித்தாள்.
இவளை துரத்தினால், இன்னொருத்தியோ இன்னொருவனோ எவ்வளவு பேரை ஒழிப்பது? தீஸ்வரன் கையில் சிக்குவதே இதனின் முடிவு என்பதை புரிந்துக்கொண்டாள்.
தீஸ்வரன் சர்வாவின் கையில் சிக்காமல் போக்கு காண்பிப்பதையும் அவனை பிடிக்க சர்வாவின் முயற்ச்சியையும் அறிந்தவளாயிற்றே? நாம் கொஞ்சம் பிசகினாலும் சர்வாவின் உயிருக்கே ஆபத்து என்பதை புரிந்தவள் தீவிரமாக யோசித்து எடுத்த முடிவு தான் இந்த திட்டம்  
வீட்டினுள்ளே ஒற்றன் ஒருவனை வைத்திருப்பதை கண்டு பிடித்தவள் அன்று சர்வாவின் அறையினுள் சென்று அவனுடைய மடிகணினியை எடுத்தவள் கொண்டு சென்று அவனுடைய அலுவல் அறையில் இருக்கும் மடிகணினியை மாற்றி வைத்துவிட்டு வந்தவள் அவனுக்கு மருந்தை கொடுத்து மயக்கம் அடைய செய்தாள்.
அதன்படி லீலா பார்க்குமாறே அனைத்தையும் செய்தாள். அவளுக்கு தெரியாமல் செய்த ரெண்டே விஷயம். ஒன்று மாரி மற்றும் ராதாவிற்கு கிளம்புமுன் தகவல் சொன்னது, முக்கியமாக லீலாவை பற்றி. இரண்டாவது கையேடு மருத்துவரை தயார் படுத்தி வைத்து இருந்தது. 
*************************
“ராதா உன்ன கடத்தின வண்டி பின்னாடியே தான் அவங்களுக்கு தெரியாமலே போல்லோ பண்ணி வந்துட்டு இருந்தான். டாக்டர் ‘நான் கொடுத்த மாத்திரை தானே கொடுக்க சொன்னானு’ அவர்குள்ளையே பேசிட்டு எனக்கு தெளிய எப்படியும் நாலு மணி நேரம் ஆகும்னு சொல்லிட்டாங்க போல மாரி தவிச்சி போய்ட்டான். என்கூட இருக்கறதா இல்லை உன்னை காப்பாற்ற வரர்தானு…அப்படி என்னடி கொடுத்த?”
“இல்ல…நீ தண்ணி அடிச்சிட்டு வந்ததும் எனக்கு செம்ம சந்தோஷம்”
“ம்ம்…ஊர்ல இருக்க பொண்டாட்டிலாம் இப்படி இருந்த சண்டையே இருக்காது” அவன் சிரிக்க
“ஆசை தான்…கொன்னுடுவேன் இனி தண்ணி அடிச்சிங்கனா”
“சரி சரி சொல்லு”
வாகாக அவன்மேல் சாய்ந்தபடி “ஆனா நீங்க கொஞ்சமும் தள்ளாடாம ஸ்டெடியா இருந்ததும் எனக்கு பே னு ஆகிடுச்சு. அப்படியே அந்த மாத்திரையை தரலாமானு வேற டவுட் அதான் என்னமோ பண்ணினேன்…அப்படியும் உங்களுக்கு ஹீவியா ஆகிட்டு இருக்கு”
“மண்டு…உனக்கு ஏதாவது ஆகிருந்தா என் உயிரே போயிட்டு இருக்கும்டி” அவளை இறுக்கிக்கொள்ள
“நீங்க வருவிங்கா மாட்டிங்களா எனக்கு பக்கு பக்குனு இருந்தது”
“முட்டாள் மாதிரி திட்டம் போட்டு அதுவும் புருஷனுக்கு தெரியாம பண்ண இப்படி தான் ஆகும்”
ரோசத்தோடு “நான் என்ன முட்டாள்தனம் பண்ணேன்”
“ஏன்டி என்கிட்ட சொல்லிருந்தா ஒரே நிமிஷம்கூட ஆகாது அந்த லீலாவ ஒரு வழியாக்க”
“ஆனா…அந்த தீஸ்வரன்…அவன் ஒரு வெத்து வேட்டு…இரண்டு நாள் போயிருந்தா அவனே சிக்குற மாதிரி ஒரு விஷயம் சிக்கியிருக்கற்தா ஸ்பி சொல்லிருந்தாறு அதுனால தான் நானே விட்டு வைத்தேன் அதுக்குள்ள முந்திரிகொட்டை மாதிரி” அவள் தலையில் லேசாய் கொட்ட
“ம்ம்…ம்ம்…”என்று அவன் மார்பிலேயே தன் முகத்தை புரட்ட அங்கு வேறுமாதிரியான தண்டனைகள் கிடைக்க ஆரமித்து இருந்தன.
மாலையும் வந்து தென்றலும் தீண்டிய பின்னரும் அவளை தீண்டியது பத்தவில்லை என அவன் இறுக்கிக்கொண்டு தூங்க அவள் மெல்ல அவனிடமிருந்து விலக முயற்ச்சிக்க அவளை மேலும் இறுக்கிக்கொண்டு விட மறுத்தான்.
“ம்ம்…பசிக்குது…” அவள் பசி என்றதும் உடனடியாக எழுந்துவிட்டான்.
மதியம் எடுத்து வைத்துவிட்டு வந்த உணவு கெட்டிருக்க அதை ஒதுக்கிவிட்டு தோசை ஊற்றி சாப்பிட ஆரமித்தார்கள்.
“அந்த லீலாவும் தீஸ்வரனும்?”
“லீலாவ குழந்தைகள் கடத்தின குற்றத்துக்காக போலிஸ் பிடிச்சிட்டு போய்டுச்சு” என்று கூற
“உங்க வேலையா?” என்று முறைக்க
“சச்சச்ச…நான் இல்லை அவள் தொழிலே அதான் நான் ஜஸ்ட் பிடித்துக்கொடுத்தேன்”
“தீஸ்வரன்?”
“ஒரு கை ஒரு கால் எடுத்தாச்சு முழுசா. ஹாஸ்பிட்டல்ல இருக்கான் அடுத்து மனநல மருத்துவமனைல சேர்க்க சொல்லிருக்கேன்”
“ஐயோ”
“அதுவே உனக்கு ஒண்ணும் ஆகாததுனால சும்மா விட்டது”
“சரி…வீட்டுக்கு போலாமா?”
“எது வீட்டுக்கா?”
“ஆமா…ஏதோ முக்கியமான வேலை இருக்கறதா சொல்லி தானே இன்றைக்கே கிளம்பினோம்?”
“ஆமா ஆமா முக்கியமான வேலை”
“என்ன விஷயம்?”
குறும்பு குரலில் “அதுவா… ‘காதலே உன்னை காதலாய் காதல்கொண்டாச்சு…சோ அதை கொண்டாட இன்னும் ஒரு வாரம் இங்க…அப்புறம் அலாஸ்கா”
“அப்புறம்?” கண்கள் மின்ன கேட்க
“அப்புறம்…நாலு குழந்தைங்க அவங்க கல்யாணம்..வருஷா வருஷம் ஒரு ஹனிமூன்” அவன் கண்ணடித்து கூற
“அம்மாடியோ…நாலா?” அவள் வாயை பிளக்க “அப்படியோ…நாலே தான்” என்று ஒரே எட்டில் அவளை அடைந்து தூக்கிக்கொண்டு தட்டா மாலையாக சுற்ற அவள் கிளுக்கி சிரித்தாள்.
காதல்கொண்டார்கள்…காதலாக…!!!
மகிழ் குழலி