Advertisement

இல்லைங்க இது என்னோட போனுதானுங்களே..??” அவரது குரலில் ஒரு அறியாமை தெரியவும் சட்டென தன் குரலை இறுக்கமாக்கியவன்,
 
ஹலோ நான் போலிஸ் இன்ஸ்பெக்டர் பேசுறேன்.. இந்த போன் யார்கிட்ட இருந்து வாங்கினிங்க..? நீங்க இப்போ எங்க இருக்கிங்க..? அந்த பொண்ணு எங்க..? உண்மையை மட்டும் சொல்லுங்க இல்லைனா போனை திருடிட்டிங்கன்னு ஸ்டேசனுக்கு வரவேண்டியது இருக்கும்..
 
 
ஐயோ ஐயா நீங்க போலிசுங்களா..?? நான் ஒரு தியேட்டரின் பெயரை சொன்னவர் இந்த தியேட்டருல வாட்ச்மேனா இருக்கேனுங்க.. இப்பதானுங்க 300 ரூபாய் கொடுத்து இந்த போன வாங்கினேன்.. அந்த பொண்ணுக்கூட இப்ப தியேட்டருலதானுங்க இருக்கு..
 
அடிப்பாவி 20000 போன 300 ரூபாய்க்கு வித்துட்டாளா.. அதுவும் சிம்மோட.. அவர்கள் வீட்டில் விபரத்தை சொல்லி பதறாமல் இருக்கச் சொன்னவன் நேராக தியேட்டருக்கு காரைவிட்டான்..
 
படம் முடிந்து வெளியே வரும்போது மணி பனிரெண்டிருக்கும்.. ஸ்ருதி வெளியில் வந்தவள் வந்திருந்தவர்கள் அனைவரும் கிளம்பியிருக்க ஸ்ருதியும் தன் வீட்டை நோக்கி நடக்க துவங்கினாள்.. வரும்போது இருந்த துள்ளல் இப்போது இல்லை.. அது ஒரு பாடாவதி படமாயிருக்க ரம்பமாய் அறுத்திருந்தார்கள்.. அவளுக்கு இடைவேளைக்கு பிறகு நல்ல தூக்கம்தான்.. இப்போதும் நடக்க முடியவில்லை தூக்கமும் கண்ணைச் சுழற்றியது..
 
வாட்ச்மேனிடம் சென்றவள் ,”அண்ணே என்னோட போனுக்கு யாராவது போன் பண்ணினாங்களா..?”
 
ஏம்மா ஏன் இந்த வேலை பார்த்து வைச்ச..? நான் ஏதோ வயித்து பாட்டுக்கு இந்த வாட்ச்மேன் வேலை பார்க்கிறேன்.. அதையும் விட்டுட்டு ஜெயில்ல களிதிங்க சொல்றியா போம்மா போ அதுக்கு வேற ஆளப்பாரு..??” அவளை கோபமாக அதட்ட,
 
அப்போதுதான் கவனித்தாள் அஸ்வின் காரை திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதை,” மாமா வந்துட்டாங்களா..!!” அவனை நோக்கி வேகமாக சென்று நல்லவேளை மாமா வந்திங்க.. கால் வலிச்சிச்சா.. எப்படிடா வீட்டுக்கு வர்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.. எனக்கு தெரியும் என்னை தேடி வருவிங்கன்னு அதான் மாமா போன எடுக்கிறதுக்கு இந்த வாட்ச்மேன அப்பாய்ட்மெண்ட் பண்ணியிருந்தேன்..?” அவள் போக்கில் பேசிக் கொண்டிருக்க அஸ்வினுக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்தாலும் வாயே திறக்கவில்லை..
 
 காரை கிளப்பியவன் வீட்டிற்கு வர கோகிலா.. ஸ்ருதிக்கு சரியான திட்டு இது எதையும் கண்டு கொள்ளாதவன் தன் அறைக்குச் செல்ல.. அதுவே தொடர்கதையாக இந்த பத்துநாட்களாக நடந்தது..
 
அவளுடன் பேசுவதே இல்லை.. கண்டு கொள்வதும் இல்லை.. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தான்.. காலையில் அலுவலகத்திற்கு சீக்கிரம் கிளம்பி செல்பவன் இரவு வீட்டிற்கு வர மணி பத்திற்கு மேலாக ஸ்ருதியை பார்ப்பதே இல்லை..
 
முதலிரண்டு நாட்கள் ஒன்றும் தெரியாமல் சாதாரணமாக இருந்த ஸ்ருதிக்கு அதுவே தினமும் தொடர ஏதோ இழந்ததை போலிருந்தது.. அவனிடம் பேசாமல் அவன் முகத்தை பார்க்காமல் இருப்பது அவளுக்கு ஏதோ போலிருக்க அன்று ஸ்ரீக்குட்டி தூங்கிக் கொண்டிருக்க கற்பகம் அவர் அறையில் இருந்தார்.. கிச்சனில் வேலையாக இருந்த கோகிலாவிடம் சென்றவள் அந்த கிச்சன் மேடையில் ஏறியமர்ந்து,
 
அம்மா மாமா என்கிட்ட பேசவே மாட்டேங்கிறாங்க..??ரொம்ப கோபமா இருக்காங்க போல..??”
 
ம்ம் அதுக்குத்தான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன்.. இவள கட்ட வேண்டாம்னு கேட்டாரா அந்த தம்பி.. இப்ப அவதிபடுறாரு..??”
 
ம்மா இத வேற நீங்க சொல்லி வைச்சிங்களா.. எனக்கு என்ன குறைச்சலாம்.. பெத்த பொண்ணவிட நேத்துவந்த மருமகன் உங்களுக்கு பெரிசாயிட்டாரா..??”
 
ஆமாடி பெரிசாத்தான் போயிட்டாரு.. அன்னைக்கு நீ பண்ணின காரியத்துக்கு உன்னை ஒரு அறையாவது வைச்சிருக்கனும்.. மாப்பிள்ள பேசாம இருக்காருல அப்ப நீ இன்னும் வாய் பேசத்தான செய்வ.. நீயென்ன சின்னப்பிள்ளையா பாவம் அவர் பிள்ளைய பார்ப்பன்னு உன்னை கட்டினா நீயென்னடான்னா அந்த ஸ்ரீக்குட்டியவும் கெடுத்து வைக்கிற..
 
அவர் உன்னைப்பார்ப்பாரா.. பிள்ளைய பார்ப்பாரா..இல்ல அவரு வேலையத்தான் பார்பாரா.. இதோ பாரு ஸ்ருதி ஒரு ஆம்பளைக்கு வீட்ல எந்த டென்சனும் இல்லாம இருந்தாத்தான் அவங்க வெளியில கொஞ்சம் நிம்மதியா வேலைப்பார்க்க முடியும் .. இங்க எப்ப என்ன பண்ணி வைப்பான்னு டென்சன்லயே இருந்தா எப்படி நிம்மதியா இருக்க முடியும் .. உங்கக்காவாலதான் அவருக்கு நிம்மதி இல்லாம அவமானத்தை கொடுத்திட்டு போனான்னா நீயும் அதே மாதிரி பண்ற..
 
ஊரு உலகத்தில போய் பாரு ஒவ்வொருத்தனுக பொண்ணுகள கல்யாணம் செஞ்சு என்னமாதிரி பாடு படுத்துறாங்கங்கன்னு..மாப்பிள்ள முதல்ல எங்கள எப்படி மரியாதை நடத்துறாருன்னு பார்த்தியா.. ஒரு அம்மா அப்பாவ கவனிக்கிற மாதிரி கவனிச்சிக்கிறாரு.. நேத்துக்கூட அப்பாவ ஏதோ ஒரு சுகர் ஸ்பெசலிஸ்ட்க்கிட்ட கூட்டிட்டு போய் காட்டியிருக்காரு.. இந்த காலத்தில இப்படி ஒரு தங்கமான பையன பார்க்கிறதே  அரிதுடி.. நீ அவருக்கு நல்லது பண்ணலைனாலும் பரவாயில்ல .. அவர் நிம்மதி கெடுக்காம இரு போதும்..
 
அம்மாஆஆஆஆ… தெரியாம உங்ககிட்ட கேட்டுட்டேன்.. அப்பப்பா.. என்னா அட்வைஸ் மழை.. எப்ப ஆடு சிக்கும் மாலை போட்டு வெட்டலாம்னு ரெடியா இருந்திங்களா.. நீங்க சொல்றதுக்கெல்லாம் ஆமான்னு மண்டையாட்டத்தானே சந்திரன்னு ஒருத்தர கடவுள் அனுப்பி வைச்சிருக்காரு.. அப்புறமும் ஏன் உங்க வேலையை என்கிட்ட காட்டுறிங்க.. அதுக்கு வேற ஆளப்பாருங்கம்மா.. என் மாமா என்கிட்ட கோபமா இருக்காரு.. இல்லை.. பேசுறாரு.. இல்ல பேசாம போறாரு அத நானே பார்த்துக்கிறேன்.. உங்ககிட்ட போய் சொல்ல வந்தேன் பாருங்க.. அங்கிருந்த வெண்டைக்காயை எடுத்து கடித்தபடி தன் அறைக்கு செல்ல கோகிலாவோ அவளை முறைத்தபடி நின்று கொண்டிருந்தார்..
 
மேலும் இரண்டு நாட்கள் சென்றிருக்க அன்று சந்திரன் அலுவலகத்தில் ஏதோ ரிட்டயர்டு பார்ட்டி என சந்திரனும் கோகிலாவும் சென்றிருக்க அஸ்வின் வரும்போது வீடே அமைதியில் இருந்தது.. இன்று காலையில் இருந்தே அஸ்வினுக்கு ஸ்ருதியின் நினைவுதான் எவ்வளவுநாள்தான் பேசாமல் இருப்பது, அன்று அவளை காணாமல் தவித்தவன் கடும் கோபத்தில்தான் இருந்தான்.. அன்று மட்டும்தான் அந்த கோபம்.. ஆனால் மற்ற நாளில் எல்லாம் கோபம் போல் நடிப்புதான்.. எத்தனை நாள்தான் நடிப்பது தினம் அவள் தூங்கும் முகத்தையே பார்ப்பவனுக்கு அவள் சிரிப்பை பார்க்கும் ஆசையில் எட்டுமணிக்கே வீட்டிற்கு வர ஹாலில் யாருமில்லை..
 
உடை மாற்றி மாடிக்கு வர அங்குதான் கற்பகத்தோடு ஸ்ருதியும் ஸ்ரீயும் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார்.. ஸ்ருதி தன் தோழிகளோடு போனில் பேசிக் கொண்டிருக்க கற்பகம் பேரனை வைத்திருந்தார்..
 
அஸ்வினை பார்க்கவும் வா கண்ணா..” தன் மகனை தூக்கி கொஞ்சியவன் தாயோடு அமர இந்த நான்கைந்து நாட்களாக மகன் மருமகளிடம் பேசாமல் முறுக்கி கொண்டு திரிவதை கண்டிருந்தவர் இப்போது இருவரையும் தனியாக விடலாம் என முடிவெடுத்து,
 
 
கண்ணா மணியாச்சு நான் குட்டிக்கு சாப்பாடு ஊட்டுறேன்..?”  பேரனோடு கீழிறங்க,
 
தாய் இருந்தாலாவது அவரோடு பேசும்வாக்கில் அவளை சைட் அடிக்கலாம் என நினைத்தவன் இப்போது அவரும் எழுந்து போகவும் தானும் போகலாம் என நினைத்து அவர் பின்னால் இரண்டெட்டு எடுத்து வைக்க போனை பேசியபடியே அஸ்வின் கையை எட்டி பிடித்து போக விடாமல் தடுத்தவள் அவனை ஊஞ்சலில் அமரவைத்து அவன் மடியில் தலைவைத்திருந்தாள்..
 
இத்தனை நாட்களுக்கு பிறகு ஸ்ருதியின் அண்மை.. அவள் தலையை கோத, அவளை இறுக்கி அணைக்க, நெற்றியில் முத்தமிட மனம் தவிக்க கோபத்தை இன்னும் இழுத்து பிடிப்பது போல கையை தளர விட்டிருந்தான்.. அவள் தலையை தூக்கப் போக போனை கட் செய்தவள் அவன் கையை தடுத்து தலையை நன்கு அழுத்தி படுத்தாள்..
 
ஏய் எழுந்திரிடி..??”
 
ப்பா.. மாமா என்கிட்ட பேசிட்டிங்களா..!! ரொம்பத்தான் பண்றிங்க மாமா..”
 
போடி பிசாசே.. எழுந்துக்கோடி..?? நீ பண்றத எல்லாம் நாங்க பொறுத்துக்கனும்.. ஆனா நான் எதாவது திட்டினா மட்டும் நீ சொல்லாம கொள்ளாம வீட்டவிட்டு போவ.. தேவையே இல்ல.. உன்கிட்ட பேசவும் வேணாம்.. நீ பண்ற கொடுமையெல்லாம் அனுபவிக்கவும் வேணாம்..
 
அவன் தாடையை பிடித்து தன்புறம் திருப்பியவள்,” ஸாரி மாமா ப்ளிஸ் ப்ளிஸ்..
 
போடி..” வாய் பேசினாலும் ஒருவாரத்திற்கு பிறகு கிடைத்த அவள் அண்மையை விடமனதில்லை.. பேசாமல் இருந்தான்..
 
 பேசுங்க மாமா ரொம்ப பண்ணாதிங்க.. அன்னைக்கு கோபத்திலதான் தியேட்டருக்கு போனேன்.. படமா அது ச்சை கர்மம் கர்மம்.. கழுத்தில ரத்தம் மட்டும்தான் வரலை..
 
அவன் அமைதியை தாளமுடியாதவள் அவன் கன்னம் இரண்டிலும் தன் கையை வைத்து அழுத்தி,” மாமா.. பேசமாட்டிங்களா.. அப்போ நான் சொல்றத மட்டும் கேளுங்க.. ரெண்டு மூனு நாளா எனக்கு பசிக்கிது ஆனா சாப்பிடமுடியல.. தூக்கம் வருது ஆனா தூங்க முடியல..
 
அவளை மடியில் இருந்து சட்டென எழுப்பியவன்,” கிளம்பு ஒரு தரம் ஹாஸ்பிட்டலுக்கு போய்ட்டு வந்திரலாம்.. இந்த முறையாச்சும் ஆரம்பத்திலேயே பார்த்திரலாம்..?” போனை எடுத்து டாக்டரின் நம்பரை அழுத்தப் போக போனை வெடுக்கென பறித்தவள்,
 
அவனை நெருங்கி அமர்ந்து இது என்னன்னு எனக்கே தெரியும் மாமா..
 
தெரியுமா.. காலையில என்ன சாப்பிட்ட எதுவும் சாப்பிட்டது ஒத்துக்கலையோ..?” அவன் வாயை தன் கைகளால் அடைத்தவள்,
 
சும்மா இருங்க மாமா நான் சொல்ல வற்ரத முழுசா கேளுங்க.. அவன் கண்ணோடு தன் கண்களை கலக்கவிட்டவள்,
 
மாமா.. அதுவந்து …. அதுவந்து .. எனக்கென்னமோ நான் உங்கள லவ் பண்றேன்னு தோனுது..
 
அதுவரை ஏதேதோ நினைத்துக் கொண்டிருந்த அஸ்வினின் கண்களில் ஒரு ஒளிவந்திருக்க அடிப்பாவி லவ் பண்றதத்தான் இப்படி சொல்றாளா..
 
அவனை இன்னும் நெருங்கி அமர்ந்து அவள் மூச்சுக்காற்று அவன் மேல்தான்.. எனக்கு உங்களையே பார்த்துக்கிட்டு இருக்கனும், உங்ககிட்ட பேசிட்டு இருக்கனும், இப்படி கட்டிட்டு இருக்கனும், அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு இப்படி கிஸ் கொடுக்கனும்னு தோனுது.. அப்ப அது லவ்தான மாமா..
 
என்னாச்சு மாமா இப்படி முழிக்கிறிங்க.. லவ் பண்றேன்னுதான சொன்னேன்..ஏன் பேயடிச்ச மாதிரி இருக்கிங்க.. நான் என்ன அவ்வளவு மோசமாவா இருக்கேன்.. எனக்கு உங்க மேல ஏதோ சம்திங் சம்திங் ஆரம்பிச்சிருச்சு மாமா அவன் மறுகன்னத்திலும் முத்தமிட வர சட்டென முகத்தை திருப்பியவன் இந்த முறை சரியாக அவள் இதழ் தன்னிதழில் பதியுமாறு பார்த்துக் கொண்டான்..
 
                                                        “ இதழில் கதை எழுதும் நேரமிது
                                                          இதழில் கதை எழுதும் நேரமிது
                                                இன்பங்கள் அழைக்குது ஆ…
                                                       மனதில் சுகம் மலரும் மாலையிது
                                                  மான் விழி மயங்குது ஆ…
                                                           மனதில் சுகம் மலரும் மாலையிதுது
                                             இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
                                                         இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
                                            இரு கரம் துடிக்குது தனிமையும்
                                                      நெருங்கிட இனிமையும் பிறக்குது
                                            இதழில் கதை எழுதும் நேரமிது…”
 
                                                                                                                      இனி……….????
                                                           

Advertisement