Advertisement

 காட்டு ரோஜா என் தோட்டத்தில் – அத்தியாயம்  –  11

 

அஸ்வின் அவள் இதழில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்க அவனால் தன் இயல்புக்கு திரும்பவே முடியவில்லை.. லவ்வ சொல்லாம இப்படியெல்லாம் பண்றது  தப்பு அஸ்வின்.. தன் மனது சொன்னதை கேட்காமல் முரண்டு பிடிக்க அவன் இதழ்களோ அவளை விடவே இல்லை.. அதன் மென்மையை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் மேல் வந்த சுகந்தமான மனத்தோடு அவள் இதழிலிருந்து வந்த மது நெடியும் வேறு உலகத்திற்கு அழைத்து செல்ல நிமிடங்களோ நொடிகளோ கடந்து கொண்டே இருந்தது.. இதுநேரம் வரை அவள் மேல் இருந்த கோபம் காற்றில் கற்பூரமாய் கரைய துவங்கியது..

 

தூங்கிக் கொண்டிருந்த ஸ்ருதியோ அவன் நெஞ்சில் கைவைத்து அவனை பின்னால் தள்ள அவன் சுதாரிப்பதற்கு முன்பே அவன் மேல் வாந்தி எடுத்திருந்தாள்.. உள்ளே சென்றிருந்த அனைத்தும் வெளியில் வந்திருக்க அஸ்வின் போட்டிருந்த கோர்ட் எல்லாம் வாந்தி ஒருநிமிடம் அவன் முகம் பின்னால் இல்லையென்றால் அவன் முகத்தில்தான் எல்லாம் நடந்திருக்கும்.. அப்படியே ஒரு நிமிடம் திகைத்தவன் என்ன செய்வது என புரியாமல் விழித்தான்..

 

முத்தம் கொடுத்த நிகழ்வு ரிவர்ஸில் போய்கொண்டிருக்க நிதர்சனம் உணர்ந்தவன் அவளை அப்படியே பின்னால் சாய்க்க அவள் முகம் மறுபடி முன்னால் வந்து மிச்சம் மீதி இருந்ததையும் அவன் மேல் எடுத்திருந்தாள்…

 

அடிப்பாவி இவ போதையில எடுக்கிறாளா.. இல்ல நாம முத்தம் கொடுத்தது பிடிக்காம வாந்தி எடுக்கிறாளா.. போதையில இருந்தாக்கூட எல்லாத்தையும் கரெக்டா செய்யுது பக்கி..

 

அவளுக்கு தெரியாம முத்தம் கொடுத்தீல அதுக்கான பலனை அனுபவி அஸ்வின்.. கோர்ட்டை கழட்டியவன் சட்டையை பார்க்க அதிலும் ஆங்காங்கே தெரித்திருந்தது.. சர்ட்டையும் கழட்ட அந்த இடம் இருட்டாய் இருந்ததால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.. வாட்டர்கேன் தண்ணீரில் தன் முகம் கைகால் அனைத்தும் கழுவியவன் தான் எப்போதும் வைத்திருக்கும் உடையிலிருந்து சர்ட்டை மட்டும் போட்டு போட்டிருந்ததை ஒரு கவருக்குள் போட்டான்..

 

ஸ்ருதி ஏதோ முனங்குவது போலிருக்க அவள் சீட் பெல்ட்டை கழட்டி வெளியில் அழைத்து வந்து தண்ணீரால் அவள் முகத்தை கழுவியவன் அவள் உடையிலும் ஆங்காங்கே இருந்த தண்ணீர் துளிகளை தன் கர்சிப்பால் துடைத்துவிட்டான்..

 

ம்மா பசிக்கிது ..”அவள் உளறிக்கொண்டிருக்க,

 

ப்பச் இவ சாப்பிடலயா..? நாமளும் அதப்பத்தி யோசிக்காம விட்டுட்டமே..” மறுபடி ஹோட்டலுக்குள் செல்ல மனதில்லாதவன் அவளை மீண்டும் காரில் அமரவைத்து காரை கிளப்பியிருந்தான்.. அவள் எப்போதும் சாப்பிடும் கையேந்திபவனுக்கு காரைவிட ஸ்ருதி அஸ்வினின் தோளில் தூங்கியிருந்தாள்..

 

அவளை காரைவிட்டு இறங்கச் சொல்லாமல் இவன் மட்டும் அவளுக்கும் தனக்கும் இரண்டு பிளேட் டிபன் வாங்கி வந்து ஸ்ருதியை எழுப்பிக் கொண்டிருந்தான்..

 

ஸ்ருதி எழுந்திரு ஸ்ருதி ஸ்ருதி..” அவள் கன்னத்தை தட்ட வாந்தி எடுத்திருந்ததாலோ என்னவோ லேசாக கண்விழித்து பார்த்தவள் அஸ்வினை பார்க்கவும்,

 

 மாமா.. வீட்டுக்கு போகலையா..?”

 

போகலாம் நீ முதல்ல சாப்பிடு..”

 

தூக்கம் வருது மாமா.. வீட்டுக்கு போயிரலாம் அம்மா இருந்தா ஊட்டி விடுவாங்க..

 

அதுக்கு எதுக்கு அம்மா.. நான் ஊட்டி விடுறேன்..!!”

 

 டிபனை எடுத்து ஊட்டிவிட தூக்க கலக்கத்திலேயே அவளும் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.. வாயிலிருந்த சாப்பாட்டை விழுங்கக்கூட முடியாமல் சாமியாடிக் கொண்டிருந்தாள்.. ஒரு வாய் ஊட்டவும் அவளை எழுப்பி அதை விழுங்கச் சொல்லவும் என அவனுக்குத்தான் பொறுமையை சோதித்து கொண்டிருந்தாள்.. ப்பா தூங்குமூஞ்சி தனக்குள்ளே சிரித்தவனுக்கு அவள் செய்வதெல்லாம் பார்த்தால் சிரிப்புதான் வந்தது.. சரியான பொம்பள ரௌடி..

 

கால்கள் இரட்டையும் சம்மணமிட்டு அமர்ந்தவள் முகத்தை திருப்பி கண்ணாடியில் முட்டியபடி தூக்கிக் கொண்டிருந்தாள்.., இப்படி இருந்தா நாம எப்படி ஊட்டுறது .. சற்று பொறுத்தவன் சாப்பாடு ஊட்டுவதை நிறுத்திவிட்டு தண்ணீரால் வாயை துடைத்துவிட்டு தண்ணீரை அவளுக்கு புகட்டத் துவங்கினான்..

 

வாட்டர் கேனை வாயில் வைத்தபடியே அவள் தூக்கத்தை தொடர,” நம்மபாடு ரொம்ப கஷ்டம் போலயே.. இப்படியிருந்தா நாம எப்படி இவளோட குடும்பம் நடத்துறது… ஹாஹாஹா இனி நாம சீக்கிரமே வீட்டுக்கு வரனுமா..!!” அவனும் சாப்பிட்டு தன் காரை கிளம்பியிருந்தான்.. சற்று நேரத்திலேயே  தன் பொசிசனை மாற்றியவள் சம்மணமிட்டபடியே கண்ணாடிக்கு பதிலாக அவன் தோள்பட்டையில் முகத்தை புதைத்திருந்தாள்..

 

மகாராணிக்கு இதுல ஒன்னும் குறைச்சலில்ல.. இவ பண்ற அலும்பு தாங்க முடியல..ஸ்ரீயை போலவே அவனுக்கு தோன்றினாள். அக்காள் தங்கையோடு பிறக்காதவன் தன்தாய்க்கு பிறகு இவளோடுதான் நெருங்கி இருப்பதாக தோன்றியது.. ஒரு வாரத்தில் தன்னோடு வாழ்ந்த ஸ்வேதா இப்போது நினைவிலேயே வரவில்லை..

 

அப்படியே திரும்பி அவள் நெற்றியில் முத்தமிட்டு,” நீ ஏன்டி என் வாழ்க்கையில முதல்லயே வராம போன..?” பெருமூச்சு விட்டவன் காரின் வேகத்தை அதிகப்படுத்த தங்கள் வீட்டிற்குள் கார் நுழையவும் அவளை தன் கைகளில் ஒரு பூமாலையை போல தூக்கிக் கொண்டு வந்தான்..  கட்டிலில் படுக்க வைத்து அவள் போட்டிருந்த நகைகள் திரும்பி படுத்தால் குத்தும் போல தோன்றியதால் அதை கழட்டி பக்கத்தில் இருந்த மேஜை மேல் வைத்துவிட்டு போர்வையை போர்த்திவிட்டவன் அவள் நெற்றியில் மிருதுவாக தன் இதழை புதைத்திருந்தான்..

 

எக்காரணம் கொண்டும் ஸ்ருதியை தன்னால் விட முடியாது என தோன்ற அவளையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தவன் பெருமூச்சோடு தாயின் அறையில் தூங்கி கொண்டிருந்த ஸ்ரீயை முத்தமிட்டு தன் அறைக்குள் நுழைந்தான்..

 

இரவு நேரம் கழித்து படுத்ததாலோ என்னவோ அஸ்வின் கண்விழிக்கும் போதே மணி எட்டிற்கு மேல் இருந்தது.. அலுவலகத்திற்கு இன்று விடுமுறை அஸ்வினுக்கு மட்டும் மதியத்திற்கு மேல் வேலையிருந்ததால் மெதுவாக எழுந்து குளித்து ஹாலுக்கு வர அங்குதான் சந்திரனும் கோகிலாவும் கற்பகத்தோடு பேசிக் கொண்டிருந்தனர்..

 

இருவரையும் வரவேற்றவன் கண்களால் ஸ்ருதியை தேடி ,”ம்மா ஸ்ரீ எங்கம்மா..?”

 

ஸ்ருதி உள்ள குளிப்பாட்டுறாப்பா.. இரு காப்பி கொண்டு வர்றேன்..?”

 

 அவர் கிச்சனுக்குள் நுழைய அவன் அவர்கள் இருவரின் சிரிப்பு சத்தம் கேட்கும் இடம் நோக்கிச் சென்றான்.. பாத்ரூம் கதவு திறந்திருக்க உள்ளே ஸ்ரீயை குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள்.. ஸ்ரீக்கு குஷி தாங்கவில்லை பாத்டப்பில் இருந்த தண்ணீரை தன் இரு கைகளால் அடித்து அடித்து விளையாடிக் கொண்டு தண்ணீரை ஸ்ருதி மேல் தெளித்து கொண்டும் இருக்க ஸ்ருதி ரசித்தபடியே அவனுக்கு சோப் போட்டுக் கொண்டிருந்தாள்.. இருவரும் அவர்களுக்கான உலகத்தில் இருப்பதை ரசித்தவன் சத்தம் செய்யாமலே அந்த அறை கதவை சாத்திவிட்டு ஹாலுக்கு வந்தான்..

 

சந்திரன்,” ஸாரி மாப்பிள்ள நைட் ஒரு அர்ஜண்ட் வேலை அதான் உடனே கிளம்புற மாதிரி ஆயிருச்சு.. கோவிச்சுக்காதிங்க..?”

 

அச்சோ என்ன மாமா இதுக்கெல்லாம் ஸாரி கேட்டுக்கிட்டு விடுங்க.. அவர் ஏதோ தயங்குவது போலிருக்க சொல்லுங்க மாமா என்ன கேட்கனும்..?”

 

அது வந்து மாப்பிள்ள காலையில வினோத்துன்னு ஒருத்தர் போன் செஞ்சிருந்தாரு.. நம்ம ஸ்ருதிய பத்தி விசாரிச்சாரு..

 

ஸ்ருதிய பத்தி விசாரிக்க என்ன மாமா இருக்கு..?”

 

அதான் மாப்பிள்ள நானும் கேட்டேன்..  மேல படிக்க வைக்க போறிங்களா இல்ல கல்யாணம் பண்ணப்போறிங்களான்னு கேட்டாரு.. எனக்கு இருந்த கோபத்துக்கு நான் ஏதாவது பேசியிருப்பேன் நம்பர் நீங்க கொடுத்திங்கன்னு சொன்னதால போனை கட் பண்ணிட்டேன் அவர் யாரு என் பொண்ணப்பத்தி விசாரிக்க நான் படிக்க வைக்கிறேன் கல்யாணம் பண்றேன் அது எங்களோட விருப்பம்தானே..

 

இதுக்கு ஏன் மாமா இவ்வளவு கோபம் வயசு பொண்ணு வீட்ல இருந்தா இப்படி அலயன்ஸ் வர்றது சகஜம்தான்.. நானே ஒன்னு உங்ககிட்ட கேட்கனும் மாமா..??”

 

கேளுங்க..மாப்பிள்ள..?”

 

கிச்சனில் இருந்த தாயையும் கோகிலாவையும் அழைத்து அவர்களையும் சோபாவில் அமரவைத்து சற்று தயங்கி இருந்தவன் தன் மூச்சை இழுத்துவிட்டு ,”உங்க மூனு பேர்க்கிட்டயும் ஒன்னு கேட்கனும்.. நீங்க மூனு பேரும் என்னப்பத்தி என்ன நினைக்கிறிங்க..?”

 

சந்திரனோ பதறியவர்,” என்ன மாப்பிள்ள என்னன்னமோ கேட்கிறிங்க உங்களுக்கென்ன நீங்க ரொம்ப தங்கமானவர் எனக்கொரு மகன் மாதிரி என்னாச்சு மாப்பிள்ள..?”

 

நீங்க சொல்லுங்க அத்த..?”

 

என்னத்த சொல்ல சொல்றிங்க தம்பி.. ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்டவரோட வாழாம செத்து போன ஸ்வேதாவோட துரதிஷ்டத்தைத்தான் நினைச்சு நானும் உங்க மாமாவும் வருத்தப்படுறோம்..

 

அம்மா நீங்க..?”

 

அவன் கையை பிடித்தவர்,” என்னாச்சு கண்ணா என்பிள்ளையப்பத்தி நான் எதுக்கு மத்தவங்ககிட்ட சொல்லனும்.. எனக்கு தெரியும் என் பையனப்பத்தி..

 

அப்ப ஏன்மா ஸ்ருதி இருக்கும்போது எனக்கு வேற இடத்தில பொண்ணு பார்க்கிறிங்க..? ஏன் நான் ஸ்ருதிய நல்லா பார்த்துக்க மாட்டேனா..? அந்த அளவுக்கு கெட்டவனா.. இல்ல அவளுக்கு தகுதி இல்லாதவனா.. ?ஏன் மாமா ஒருவேளை ரெண்டாம்தாரம்னு பொண்ண கல்யாணம் பண்ண விருப்பமில்லையா.. நான் எதுல மாமா குறைச்சிட்டேன்.. நீங்களே எனக்கு கல்யாணம் பண்ண பொண்ணு தேடுறதாலதான் நான் இந்த கேள்விய கேட்கிறேன்.. உங்களுக்கே உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக் கொடுக்க விருப்பம் இல்லாத அளவுக்கு நான் என்ன மாமா தப்பு பண்ணினேன்.. மூவரும் அப்படியே அதிர்ச்சியில் நிற்க அப்படி ஒரு அமைதி.. உள்ளே ஸ்ருதி, ஸ்ரீ இருவரின் குரல் இப்போதுதான் பேச ஆரம்பிக்கும் ஸ்ரீக்கு ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுக்கும் குரல் கேட்டது..

 

சந்திரன் அப்படியே அமர்ந்திருக்க கோகிலாதான் வாயை திறந்தார்.. எங்க ஒரு பொண்ணாலதான் உங்க குடும்ப மானமே போச்சு.. அதுக்கே நீங்க மன்னிச்சு எங்ககிட்ட இந்த அளவுக்கு பேசுறதே பெரிசு தம்பி.. எங்க பொண்ண உங்களுக்கு வேணாம் சொன்னதுக்கு நீங்க காரணம் இல்ல அவதான் காரணம்..எனக்கே அடிக்கடி தோனும்.. இப்படி தங்கம் மாதிரி மாப்பிள்ளை இந்த காலத்துல கிடைக்காதேன்னு ஆனா உங்க நல்ல குணத்துக்கு இந்த அடாவடி சரியா வரமாட்டாளேங்கிற பயம்தான் .. இவ கொஞ்சம் வெடுக்கு வெடுக்குன்னு பேசுவா.. சேட்டையும் ரொம்ப பண்ணுவா.. இனியாச்சும் உங்க வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைச்சேன் ஸ்ருதிய கல்யாணம் பண்ணினா அவ பண்ற எல்லாத்தையும் தாங்கிக்கனும்..

 

 

சந்திரனோ,” உங்களுக்கு தெரியாது மாப்பிள்ள இவளப்பத்தி.. ப்பா அவ்வளவு ஒரு சேட்டை உங்க அத்தை இவ வயித்தில இருந்தப்போ பக்கத்தில இருக்க ஆஞ்சிநேயர் கோவிலுக்கே அடிக்கடி போவா.. கேட்டா எங்க அம்மா சொல்வாங்க அப்பத்தான் அனுமார் மாதிரி நல்ல பலசாலியா பொறப்பான்னு… பார்த்தா இவளும் அதே மாதிரிதான் பிறந்தா என்ன பலசாலியா இல்லாம ஒரு குட்டி அனுமார் மாதிரி மரத்துக்கு மரம் தாவ மட்டும்தான் இல்ல மத்தபடி எல்லாக் குரங்குசேட்டையும் பண்ணுவா..

 

ஸ்கூல் எத்தனை மாத்தியிருக்கோம்ன்னு நினைக்கிறிங்க.. ஏதாவது ஒரு ஸ்கூல்ல இருந்து போன் வந்தாலே ரெண்டு பேருக்குள்ளயும் சண்டை வந்திரும் யாரு போறதுன்னு நான் போகமாட்டேன் நீ போகமாட்டேன்னு.. ப்பா அத நினைச்சா இன்னும் மறக்க முடியாத அனுபவங்கள்..

 

கோகிலாவோ ,”முதல் முதல்ல ஸ்கூல்ல இருந்து எனக்கு போன் வந்தப்போ எனக்கு ரொம்ப சந்தோசம் நம்ம பொண்ணு ஏதோ சாதிச்சிட்டா போல பாராட்டத்தான் கூப்பிடுறாங்கன்னு கெத்தா போய் இறங்கினேன்.. அவங்களும் ஒரு பெரிய ஹாலுக்கு கூட்டிட்டு போய் நடுவில் இருந்த சேர்ல உட்கார வைச்சு சுத்தி இருந்த சேர்ல அவங்க உட்கார்ந்தாங்க..

 

அவங்க ஒவ்வொருத்தரா திட்ட ஆரம்பிச்சாங்க பாருங்க திட்டுறாங்க திட்டுறாங்க நான் அழுதாலும் அவங்க விடல.. இவளும் எல்கேஜியில இருந்து பிளஸ் டூ பசங்க வரைக்கும் வம்பிழுத்து வைச்சிருக்கா..

 

 ஸ்கூல் பசங்க சைக்கிள்ல காத்த இறக்கி விடுறது, அவங்கள பாடத்தை கவனிக்கவிடாம பின்னால இருந்து காலால எத்தி விடுறது, விளையாடும் போது தள்ளிவிடுறது.. அவங்க சாப்பாட்டை இவ சாப்பிடுறது, ஸ்டாப் ரூம்ல ஒரு பச்ச பாம்ப பிடிச்சு விட்டது ,அவங்க குடிக்கிற தண்ணியில மிளாகாய்தூள கலக்கி விடுறது, மார்க் கம்மியா போட்டாங்கன்னு இவளே எல்லார் பேப்பரையும் ரெட் இங்கால திருத்தி விடுறது, சயின்ஸ் லாப்ல இருக்க எலும்புகூட ஒரு பையன் மேல போட்டு அவன் காய்ச்சல் வந்து பத்துநாள் ஹாஸ்பிட்டல்ல இருந்தான்.. ஹாஸ்பிட்டல் செலவு நாங்கதான் பார்த்துக்கிட்டோம்.. அவங்க மிஸ் திட்டினாங்கன்னு அவங்கள பாத்ரூம்ல  ஒருநாள் முழுவதும் அடைச்சு வைச்சதுன்னு இப்ப நான் சொன்னது எல்லாம் ஒரு பிரசண்ட்தான் மாப்பிள்ள ஆனா இன்னும் ஏகப்பட்டது இருக்கு.. ஒருதரம் ஸ்கூல் பஸ்ஸ நிறுத்தலைன்னு கண்ணாடியிலகூட கல்லவிட்டு எறிஞ்சிட்டா.. அதுக்கு வேற நாங்க தெண்டம் கட்டினோம்…ப்பா ப்பா முடியல..

 

 

கேட்டுக் கொண்டிருந்த அஸ்வினுக்கும் கற்பகத்திற்கும் சிரிப்பு.. அஸ்வின் ஏதேதோ காரணங்களை நினைத்து குழம்பிக் கொண்டிருக்க இப்படி ஒரு காரணத்தை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை..இப்போது அவன் மனமோ இவர்கள் சம்மத்தித்து விடுவார்கள் என நம்பிக்கையை கொடுத்தது..

 

ஸ்கூல் முடிக்கிறதுக்குள்ள பதினெட்டு ஸ்கூல் மாத்தியிருக்கோம் மாப்பிள்ள.. ??”

 

ஹாஹா என்ன மாமா இருக்கிறதே 12th வரைக்கும் தானே..

 

Advertisement