Advertisement

11(2)

ஆமா ஆனா பாதியில பாதியில வேற வேற ஸ்கூல் மாத்தியிருக்கோம்..

 

அப்ப இது எத்தனாவது காலேஜ் மாமா..?”

 

காலேஜ் மட்டும் இது ஒன்னுதான் மாப்பிள்ள என்னவோ கூடப்படிக்கிற பொண்ணுக ரொம்ப திக் பிரண்ட்ஸாகிட்டாங்க போல அதான் சேட்டையை கொஞ்சம் குறைச்சிக்கிட்டா..

 

இப்போதுதான் அஸ்வினுக்கு வார்டன் சொன்னதும் கோவிலுக்கு மொட்டை போட வேண்டிக் கொண்டதும் நினைவுக்கு வந்தது..

 

  அவங்க அப்பா பெல்ட்டால அடி விளாசிடுவாரு.. உடம்பெல்லாம் பெல்ட் தடம் இருக்கும் மத்த பிள்ளைங்களா இருந்தா அடுத்த அடி வாங்க யோசிச்சு சேட்டையே பண்ணாதுக.. ஆனா இவ அடுத்த வாரமே அதுக்கு மேல பெரிய தப்பு பண்ணி அவங்க அப்பாக்கிட்ட அடி வாங்க நிப்பா.. இவரும் மத்தவங்க அவள திட்டுறது பொருக்க முடியாம அடிச்சிட்டு என்கிட்ட அவ்வளவு வேதனை பட்டுட்டு இருப்பாரு.. இன்னும் அவ மாறவே இல்லை தம்பி சேட்டைய இன்னும் குறைச்ச மாதிரி தெரியல.. நாங்க காலேஜ்க்கு கட்டின பீஸவிட இந்த மாதிரி குறும்பு பண்ணி தண்டம் கண்டினதே ரெண்டு மடங்கு இருக்கும்..

 

இப்ப சொல்லுங்க மாப்பிள்ள தெரிஞ்சே நாங்க மறுபடியும் உங்க வாழ்க்கையில வில்லங்கம் பண்ணலாமா.. அதான் பேசாம இருந்துட்டோம்.. தங்க ஊசிதான் அதுக்காக கண்ணுல எடுத்து குத்திக்கலாமா.. ஸ்ருதிய நீங்க கல்யாணம் பண்ணினா நம்ம ஸ்ரீயவும் நாங்க அடிக்கடி பார்க்க வசதியா இருக்கும் இவளுக்கும் ஸ்ரீன்னா உசிரு பிள்ளையா நல்லா பார்த்துப்பா..அப்படின்னு எங்க மனசு முழுக்க ஆசைதான்.. இருந்தாலும் அவ உங்களுக்கு வேண்டாம் மாப்பிள்ள..

 

அது சரி மாமா எதுக்கு வினோத் போன் பண்ணினதுக்கு அவ்வளவு கோபப்பட்டிங்க..?”

 

அது அவர்தான் சொன்னாரு போன் நம்பர் நீங்க கொடுத்ததா.. நம்ம ஸ்ருதிய அவருக்கு கல்யாணம் பண்றதும் விளக்க பிடிச்சிக்கிட்டு கிணத்தில குதிக்கிறதும் ஒண்ணுதான்.. நாளப்பின்ன அவர் உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுறக்கூடாதுல்ல ஏன்பா இந்த பொண்ணப்பத்தி தெரிஞ்சும் சொல்லாம விட்டுட்டியேன்னு அதான் மாப்பிள்ள..” முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள..

 

அஸ்வினுக்கு அவர் முகத்தை பார்த்து சிரிப்பு தாங்கவில்லை..

 

கற்பகத்தை பார்த்தவன் நீங்க என்னமா ஒன்னுமே சொல்லாம இருக்கிங்க..?” அவன் தலையை கோதிவிட்டவர்

ஸ்ருதிய மனசில வைச்சுத்தான் வேற எந்த பொண்ணையும் பிடிக்கலைன்னு சொன்னியாப்பா..??”

 

அப்படியெல்லாம் இல்லமா.. அவன் முகத்தில் வந்த வெட்கம் அதுதான் உண்மை என்றது..

 

மகன் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தவருக்கு சந்தோசம் தாங்கவில்லை.. என் கண்ணுக்கு அவ சின்ன பொண்ணா தெரிஞ்சா.. அதான் நான் ஸ்ருதிய பத்தி யோசிக்கல..சேட்டை எல்லாம் சின்ன பிள்ளையில செய்யுறதுதான்ணா.. அதுக்காக அதெல்லாம் ஒரு காரணமா சொல்லலாமா.. எனக்கும் ஸ்ருதிய ரொம்ப பிடிச்சிருக்கு.. இந்த வீட்டுக்கு ஸ்ருதிதான் மருமகள்.. நான் முடிவே பண்ணிட்டேன் ..ஸ்ருதி இந்த வீட்டுக்கு வந்திட்டா ஸ்ரீயப்பத்தி எனக்கு எந்த கவலையும் இருக்காது…

 

கோகிலாவோ எதுக்கும் நல்லா யோசிச்சுச்சுக்கோங்க தம்பி நாளப்பின்ன ஏதாவது பிரச்சனைனா எங்களால தாங்க முடியாது.. எங்களுக்கு நீங்க ரெண்டு பேருமே முக்கியம்.. அதான் அவளுக்கு இன்னும் கொஞ்சம் உலகம் புரியட்டும்னு பார்த்தோம்.. ஸ்வேதாவைதான் நாங்க புரிஞ்சுக்காம அவ வாழ்க்கையையும் கெடுத்து உங்க வாழ்க்கையையும் கெடுத்துட்டோம் இப்பவாவது எல்லாம் நல்லபடியா நடக்கனும்..

 

ஆனா ஸ்ருதி  முன்னத்துக்கு இப்ப எவ்வளவோ பரவாயில்லைன்னு தோனுது.. ஸ்வேதா இறந்தப்புறம் நிறைய மாறியிருக்கா.. ஆனா இவ்வளவு சேட்டை பண்ணினாலும் ரொம்ப தெளிவா இருப்பா .. குழப்பமே இருக்காது எதிலயும் யோசிச்சுத்தான் முடிவெடுப்பா..  ரொம்ப தைரியமானவ.. 

 

கற்பகமோ இப்படியே பேசிக்கிட்டே இருந்தா எப்படி ரெண்டு பேருமே உங்க முடிவ சொல்லாம இருக்கிங்க..?”

 

முடிவு என்ன அக்கா முடிவு எங்கள பொருத்தவரை கல்யாணத்துக்கு நாள் பார்த்திரலாம்.. ஆனா அவ என்ன சொல்வாளோன்னு தெரியலையே..?” சந்திரனுக்கும் கோகிலாவுக்கும் மகிழ்ச்சியில் கண்ணீரே வந்தது..

 

கண்டிப்பா அவ சம்மதம் இல்லாம இந்த கல்யாணம் நடக்காது மாமா.. போன தரம்தான் சம்மதத்தை கேட்காம விட்டுட்டேன் … இந்த முறையும் அதே தவற செய்ய மாட்டேன்..

 

அனைவரும் சற்று அமைதியாய் இருக்க,

 

சந்திரன் ஸ்வேதா இந்த அளவுக்கு அந்த பையன விரும்புறத தெரிஞ்சிருந்தா நான் அவங்க லவ்வுக்கு கண்டிப்பா சம்மதம் சொல்லியிருப்பேன் மாப்பிள்ள.. ரெண்டு பேரையும் வெளியில ரெண்டு மூனுதரம் பார்த்துட்டு அந்த பையனப்பத்தி விசாரிச்சப்போ அவங்க நல்ல வசதியானவங்கன்னு தெரிஞ்சிச்சு.. அதான் யோசிச்சு ஸ்வேதாவை கண்டிச்சேன்.. அவளும் தன்னோட முடிவுல உறுதியா இல்லாம உங்கள கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டா.. ப்பச் எல்லாம் என்னோட தப்புதான் மாப்பிள்ள.. ஆனா அவர மறக்கல..   இப்படி ரெண்டு மனசோட இருந்திருக்கா.. என்னத்த சொல்றது எல்லாம் எங்க நேரம் ..

 

அத விடுங்க மாமா அதப்பத்தி இனி பேச வேண்டாம்.. இன்னொரு முக்கியமான விசயம் நான் உங்க பொண்ணுக்கிட்ட சம்மதம் வாங்க அவ வழியிலதான் போகனும்.. நான் கல்யாணத்தைப்பத்தி பேசினா என்னக்கூட ரூம்ல வைச்சு ஒருவாரம் பூட்டினாலும் பூட்டுவா.. வம்புகாரி.. அவ சம்மதம் சொல்றவரைக்கும் அவ என்ன வந்து கேட்டாலும் என்னைய கேட்க சொல்லுங்க..  எல்லாம் என்னோட விருப்பம் சொல்லிருங்க..

 

மூவரும் ஒரே போல அதுக்கென்ன அப்படியே செஞ்சுருறோம்..

 

கற்பகமோ எனக்கு வீட்டுக்கு ஒரு மருமக வந்தா போதும்.. கடவுளே..” சந்தோசமாக பூஜை அறைக்குள் நுழைந்தார்.. கோகிலா தன் பேரனுக்கு இட்லியை ஊட்டுவதற்காக எடுத்துச் சென்றார்..

 

சந்திரன் சொல்லிக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பியவர் மாப்பிள்ள அந்த வினோத்கிட்ட சொல்லி எனக்கு போன் பண்ண வேண்டாம்னு சொல்லிருங்க..?”

 

 சரி மாமா தன் அறைக்குள் நுழைந்தவனுக்கு அப்படி ஒரு சந்தோசம் இதுக்கு போயா இத்தன நாள் குழம்பிட்டு இருந்தோம்.. முதல் போட்டோ காட்டின அன்னைக்கே அவங்ககிட்ட பேசியிருந்தா இந்நேரம் கல்யாணத்துக்கு நாள் குறிச்சிருக்கலாம்..

 

கட்டிலில் படுத்தவனுக்கு சந்தோசத்தில் அப்படியே தூக்கம் சொக்கியது .. ஸ்ரீயின் கொலுசொலி இப்போது நடக்க கற்றுக் கொண்டதால் அவன் எல்லா அறைக்கும் ஓட்டம்தான்.. அஸ்வினின் அறைக்குள் நுழைந்தவன் எப்போதும போல அந்த கபோர்டின் அருகில் சென்று அதிலிருந்த அனைத்தையும் இழுத்துப் போட ஆரம்பித்தான்..

 

டேய் குட்டிப் பையா உன் வேலைய நீ ஆரம்பிச்சிட்டியா.. நான் பீரோ பூட்டாம விட்டுட்டேனா.. இதுக்காக தினம் பாட்டிக்கிட்ட நான் திட்டு வாங்குறேன்.. இவ்வளவு  விளையாட்டு சாமான் இருக்கும் போது அந்த கப்போர்ட்ல இருக்க துணியெல்லாம் இழுத்து போட்டு அதுக்குள்ள போய் ஏறி உட்கார்ந்துக்கிறியா.. பாவம் பாட்டி தினம் அந்த டிரஸ மடிக்க முடியாம கஷ்டப்படுறாங்க..” பேசியபடி அவனை தூக்கியவன் கப்போர்டை இழுத்து பூட்டி கட்டிலில் தன் மகனோடு அமர..

 

பின்னால் ஸ்ருதி குரல் டேய் உங்கப்பாவ தேடி வந்திட்டியா..? நான் எல்லா ரூமையும் தேடிட்டு வர்றேன்.. இத மட்டும் ஊட்டிக்க..?” இட்லியை ஊட்டிவிட அதை வாங்க மறுத்தவனோ தலையை இருபக்கமும் ஆட்டிக் கொண்டிருந்தான்..

 

இருபக்கமும் கையை கொண்டு சென்றவள்,” ப்பச் என்ன மாமா என்ன வேடிக்கை இங்க என்ன டான்ஸா ஆடுறாங்க.. எங்களையே பார்க்கிறிங்க.. அவன் தலையை ஒரு பக்கமா பிடிங்க..

 

ஆர்டர் போட ஆரம்பிச்சிட்டாளா..  அவன் தலையை அவளுக்கு வாகாக பிடித்தான்.. அவள் அவர்கள் அருகில் அமர்ந்து அவனுக்கு விளையாட்டு காட்டியபடி சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்க அவனோ அவளை தலையிலிருந்து கால்வரை ரசித்துக் கொண்டிருந்தான்.. இப்போதுதான் தலைக்கு ஊற்றியிருப்பால் போல தலையை அப்படியே விரித்து விட்டிருக்க தலையிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது.. ஒரு மெரூன் நிற டாப் கருப்பு நிற பட்டியாலா பேண்ட் அவள் போட்டிருந்த ஷால் இவள் இளமையை மறைத்தும் மறைக்காமலும் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது..

 

அவள் ஸ்ரீயோடு பேசி சிரிக்கும் போது கன்னத்தில் விழும்குழியில் அவன் மனம் சிக்கிக் கொள்ள அந்த கன்னக்குழியில் தன் இதழை பதிக்க அவன் இதழ் துருதுருத்தது.. அவளை பார்த்துக் கொண்டே ஸ்ரீயின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட ஸ்ரீயின் வாய் கன்னம் என முகம் முழுவதும் பரவியிருந்த இட்லி அவன் முகத்திலும் பட்டிருந்தது,..

 

இருவர் முகத்தை பார்த்தவளுக்கு பக்கென ஒரே சிரிப்பு.. ஹாஹாஹா நல்ல வெண்ணைய் தடவின அனுமார் மாதிரி இருக்கிங்க அப்பாவும் மகனும்.. இயல்பு போல தண்ணீரால் இருவர் முகத்தையும் துடைத்துவிட அஸ்வின் இதை எதிர்பார்க்கவே இல்லை..

 

தன் முகத்தில் பதிந்த அவள் விரல்களின் மென்மையை மீண்டும் மீண்டும் உணரத் துடிக்க அப்படியே அவளை கையோடு சேர்த்து தன் மார்பில் புதைத்து கொள்ள ஆசைவர மனமோ பேயாட்டம் போட துவங்கியது..

 

டேய் குட்டி இப்பதான குளிச்சு டிரஸ் போட்ட அதுக்குள்ள வீணாக்கிட்டியா.. இரு வேற டிரஸ் எடுத்துட்டு வர்றேன்..

 

அவள் சாப்பாட்டு கிண்ணத்தோடு கிச்சனுக்கு சென்றவள் வேறு உடையோடு அஸ்வின் அறைக்கு வர ஸ்ரீதன் தகப்பனின் நெஞ்சில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தவன்  அவன் மார்பு முடிகளோடு விளையாடியபடி,” ப்பா..

 

மகன் தலையை கோதிக் கொண்டிருந்தவனின் கை அப்படியே அந்தரத்தில் நின்றது..

 

மறுபடி ப்பா

 

குட்டி.. அப்பா சொன்னியா மறுபடி சொல்லு அப்பா சொல்லு அப்பா

 

ப்பா…”

 

அவ்வளவுதான் அவன் முகமெங்கும் முத்தமிட துவங்கினான்.. வாசலில் நின்றிருந்த ஸ்ருதியோ,” குட்டிக்கு நான்தான் மாமா அப்பான்னு சொல்லிக் கொடுத்தேன்..

 

குட்டிப்பையா சொல்லுங்க அது யாரு..

 

ப்பா

 

தங்கக்குட்டி, பவுனுக்குட்டி, செல்லக்குட்டி நான் யாரு..?”

 

ம்மா 

 

ஐயோ சூப்பர் சூப்பர் பார்த்திங்களா மாமா எப்படி என்னோட டிரைனிங்..?”

 

ம்ம் என்னை அப்பான்னு சொல்லிக் கொடுத்த சரி.. அது ஏன் உன்னப்போய் அம்மான்னு சொல்லிக் கொடுத்த.. என்னையாரு அடுத்து கல்யாணம் பண்றாங்களோ அவங்களதான் இவன் அம்மான்னு சொல்லனும்.. உன்ன வேணா சித்தின்னு சொல்லிக் கொடு..??”

 

அவ்வளவுதான் முகம் பத்ரகாளியாய் மாற மூக்குவிடைக்க கண்ணீர் தளும்ப சூலம் இல்லாத காளியாய் அவன் முறைத்தபடி நின்றாள்..

 

                                                இனி…………….????

Advertisement