Advertisement

அத்தியாயம்….12 
வைதேகி சொன்ன உன் சொந்தம் என்ற வார்த்தை… ஜமுனாவுக்கு மூன்று தினங்களாய் அன்னை சொன்ன  …. “ நீ தனியா வளந்துட்ட…இனி அப்படி இருக்க கூடாது. மாப்பிள்ளை சொந்தங்கள் அனைத்தும் கிராமத்தவர்கள். அவர்களுக்கு பாசம் தான் ரொம்ப முக்கியம். இத்தனை நாள் இருப்பது போல் இனி நீ  இருக்க கூடாது. இனி மாப்பிள்ளையின் சொந்தங்கள் தான் உன் சொந்தங்கள்….”
காதில் ரத்தம் வழியும் வரை சொன்ன அறிவுரைப்படி…. “ மன்னிச்சிக்கோங்க…..” தண்டாயிதபாணி..சாந்தி இருவரையும் பார்த்து பொதுவாக புன்னகை பூத்தாள்.
பின் பாலாஜியை பார்த்து… “ நமக்கு என்ன  சொந்தமா ஆகனும்…..?” என்று கேட்டாள்.
வைதேகி சொன்ன உன் சொந்தம் என்பதை நம்  ஜமுனா…. பாலாஜியிடம் உங்கள் சொந்தமா….?  என்று பிரித்து கேட்டதை மாற்றவே அப்படி சொன்னதாய் நினைத்துக் கொண்டதால் தான்  சாதரணமாக கேட்டுக் கொண்டே சிரித்த முகத்துடன் அவர்கள் பக்கத்தில் அமர்ந்தாள்.
வைதேகிக்கும் பாலாஜிக்கும் இவள் செயலில் குழப்பத்துடன் பார்த்தனர் என்றால்… தண்டாயிதபாணிக்கு வைதேகி  தன் மகளிடம் சொன்ன உன் சொந்தம் என்ற வார்த்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ என்ன சொல்றா….?இப்போது  தன் மகள் விசயம் மறந்து ….தன் விசயம் விஸ்வரூபம் எடுத்து  எதிர் நின்று தன்னை மிரட்டியது.
சாந்தியின் முகத்திலும் குழப்பத்தின்  ரேகைகள். இவங்க நம்ம சொந்தமா….? என்று நினைத்த குழம்பிய முகம் பின் மலர்ந்தது. சொந்தம் என்றால் பாலாஜி உதவி செய்வாரே….
அந்த மகிழ்ச்சியில் தன்  தந்தையிடம்….” அப்பா இவங்க நமக்கு சொந்தமா…..?” கேட்டதுக்கு…என்ன பதில் சொல்வார். தனக்கே இது தான் என்று  தெளிவாய் தெரியாத போது….
“ உங்க மகள் கேட்குறா இல்ல…சொல்லுங்க சொந்தமான்னு….ஆ முக்கியமா என்ன சொந்தமுன்னு சேர்த்து சொல்லுங்க….” வைதேகியின் இந்த பேச்சியில்…
தண்டாயிதபாணிக்கு  புரிந்து விட்டது. ஜமுனா தனக்கு என்ன சொந்தம் என்று…. புரிந்த விசயம்…கடவுளே….அந்த உறவில் கருவுருவாகி விட்டதா….?
வைதேகி இப்படி தன்னந்தனியாக இருந்து இருப்பாள் என்று  நினைத்து கூட பார்க்கவில்லை. அதுவும் ஒரு மகளோடு…..வைதேகி கேட்டதுக்கு பதில் அளிக்காது ஜமுனாவை உற்று பார்த்தார்.
“ என்ன சார்…உங்க குடும்ப ஜாடை ஏதாவது தெரியாதான்னு பாக்குறிங்கலா….? கவலை படாதிங்க…. தெரிஞ்சாலும் நான் யாரு கிட்டேயும் சொல்றதா இல்ல….”வைதேகி பேச பேச தான் இவர் தனக்கு என்ன உறவு என்று  ஜமுனாவுக்கு புரிந்தது.
சாந்திக்கும் கொஞ்சம் புரிவது போல்….ஆம் அவளுக்கும் ஜமுனாவின் அன்னை பற்றி தெரியும். முன் எப்படியோ…எப்போது பாலாஜி ஜமுனாவுக்கு வலிய சென்று உதவினானோ..
அன்று  அந்த விடுதி முழுவதும் ஜமுனா பற்றிய பேச்சாக தான் இருந்தது. அந்த பேச்சில்….வைதேகி பற்றியும் விவாதிக்கப்பட்டது.அந்த பேச்சில்  ஒரு சிலர் ஆதரவாகவும் ஒரு சிலர்….. “ சீ… இவருக்கு என்ன குறச்சல்..போயும் போயும் இவருக்கு இந்த பெண் தான் கிடைத்ததா….” என்பது போல் பேச்சுகள் அப்போது எழுந்தன.
அந்த பேச்சோடு… வைதேகியின் பேச்சை ஒட்ட வைத்து பார்த்ததில் முழு அர்த்தமாய்  சாந்திக்கு விளங்கிய விசயம்… அதிர்ச்சியோடு தன் தந்தையை பார்த்தாள்.
 என்ன தான் கெட்ட மனிதராய் இருந்தாலும்…தன்  மகள் முன் குற்றவாளியாய்…அதுவும் இது போன்ற விசயத்தில் தலை குனிந்து இருப்பது என்பது….எவ்வளவு அவமானம்.
சாந்தியின் அதிர்ச்சியான முகத்தை பார்த்த வைதேகி “ பரவாயில்ல  உன் மகள் சொல்லாமலேயே புரிஞ்சிட்டா போல….” 
வைதேகி  சாந்தி, தண்டாயிதபாணியின் முகத்தை தான்  பார்த்தாரே ஒழிய தன் மகளின் முகத்தை பார்க்க தவறி விட்டார். இந்த செய்தி அவளுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும். தந்தை உறவு ..அவர் யார்…? என்று கூட தெரியாது. அவர் பெயர்  தெரியாது.
சிறுவயதில் தந்தைக்காக எவ்வளவு  ஏங்கி இருக்கிறாள். மற்ற பிள்ளைகளை பள்ளிக்கு அப்பா தன் வண்டியில்  அழைத்து வரும் போது பார்த்த அவள் கண்கள் அந்த வண்டியிலேயே தான் இருக்கும்.
“ அம்மா உங்களுக்கு வண்டி ஓட்ட தெரியாதா….?” இரவில் தன் அன்னையின் முந்தியை பிடித்து திருகிக் கொண்டே தினம் தினம் கேட்கும் கேள்விக்கு….
“ தெரியாதுடா செல்லம்.”
“கத்துக்கலாம்லே….”
“ கத்துக்கலாம்…ஆனா சைக்கிள் ஓட்ட தெரிஞ்சி இருந்தா…வண்டி ஓட்டுறது ஈஸி… எனக்கு சைக்கிளே ஓட்ட தெரியாது….அது தான்டா செல்லம்.”
அன்று சமாதானம் ஆன ஜமுனா மறு நாள் இரவு… “ அம்மா  அப்போ முதல்ல சைக்கிள் கத்துக்குறிங்கலா….?”
தன்னுடன் படிக்கும் பிள்ளைகள் தன் தந்தையுடனான வருகையை பார்த்து ஒவ்வொரு  நாளும் ஒவ்வொன்று சொல்லிக் கொண்டு வந்த ஜமுனா… அதன் பின் என்ன புரிந்ததோ…தந்தையை பற்றியோ….அதை ஒட்டிக் கொண்டு வரும் வண்டியை பற்றியோ வாய் திறக்காது இருந்தாள்.
ஒரு நாள் தன் தாயே தன் பிறப்பை பற்றி சொன்னதும் கொஞ்சம் அதிர்ந்து தான் போய் விட்டாள். அப்பா தப்பானவர்…கெட்டவர்..தங்களை விட்டு சென்று விட்டார் என்று நினைத்துக் கொண்டு இருந்தவள்.
உனக்கு அப்பாவே இல்லை…” என்னா எனக்கு திருமணமே ஆகவில்லை.” என்ற அன்னையின் பேச்சில்…. அன்று  என்ன மாதிரி உணர்ந்தாளோ..
ஆனால் போக போக….தன் அன்னையை நல்லா பார்த்துக்கனும். அதுக்கு நான் நல்லா படிக்கனும். முக்கியமா காதல் கீதல் என்று விழாம இருக்கனும்  என்ற உறுதியை எடுத்துக் கொண்டாள்.
அதன் பின் தந்தை என்ற பிம்பத்தை அவள் கற்பனை  செய்து கூட பார்த்தது இல்லை. இன்று தன் பிறப்புக்கு காரணமானவன் என்று ஒருவனை காட்டும் அன்னையின் பேச்சில் முதலில் அதிர்ந்தவள் பாலாஜி தன்னையே பார்ப்பதை பார்த்து….
ஏதூம் நடவாது போல… “ நான் எதுக்கு வந்தேன்னு மறந்துட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கேன் பாருங்க ….” தன் கையை அவன் முன் நீட்டி…. “ நல்லா இருக்கா  சொல்லுங்க ….?” அவளின் முகம் முழுவதும் சிரிப்பில் விரிந்து காணப்பட்டாலும், கண்ணில் தெரிந்த சோகம் இன்னும் கொஞ்ச நேரம் இங்கு இருந்தால் தாங்க மாட்டாள் என்று அவளை பற்றி அறிந்தவனாய்…
“ நீ எதிரில் இருந்து காட்டுனா சரியா தெரியல ஜம்மூ…. வா வெளியே போகலாம்.” ஜமுனா இரு கையிலும் மருதாணி முட்டி வரை வரைந்து இருந்ததால்…. அவனே எழுந்து வந்து அவள் தோள்களை பற்றி எழுப்பினான்.
இதை  பார்த்த வைதேகிக்கு கொஞ்சம் திமிராய் கூட இருந்தது… “ பார் என் மகளை நான் எவ்வளவு தைரியாய் வளர்த்து இருக்கேன். ஆனா நீ…” பக்கத்தில் இருக்கும் அவர் மகளின் புறம் பார்வையை செலுத்தி ஒரு ஏளன சிரிப்பையும் தண்டாயுதபாணியை பார்த்து உதிர்த்தார்.
தண்டாயிதபாணி என்ன மாதிரி உணர்கிறார் என்றே புரியவில்லை. அவர் வாழ்கையில் வைதேகியின் பங்கு என்பது உடல் தேவைக்கு மட்டுமே பயன் படுத்திக் கொண்ட ஒரு பெண்.
 அவள் வீட்டின் மேல் மாடிக்கு  வேலை மாற்றமாய் குடிபுகுந்த போது…. ஏதோ அரசு வேலைக்கு தேர்வு எழுதிக் கொண்டு இருக்கிறாள்  என்று அவர் தந்தை ஒரு நாள் ஏதோ பேச்சு வாக்கில் சொன்ன விசயம்.
அந்த வீட்டுக்கு போன புதிதில்  வைதேகியை அவன் சரியாக பார்க்க கூடவில்லை. ஒரு நாள் பெட்டிக் கடையில் சிகரெட் பிடித்துக் கொண்டு இருக்கும் போது…….பக்கத்தில்  நின்றுக் கொண்டு இருந்தவன் மற்றோருவனிடம்……..
“  நானும் ரொம்ப நாளா ட்ரைப் பண்றேன் பச்சி  மசிய மாட்டேங்குதுடா….” என்று சொல்ல…
மற்றொருவன்…”  உன் மூஞ்ச்சிக்கு அந்த பொண்ணு கேக்குதோ…..?” என்று சொல்லவும் தான் வைதேகியை  ஊன்றி கவனித்ததே…கவனித்ததில் …
 “ பரவாயில்ல நல்லா தான் இருக்கா….”  அதோடு விட்டு விட்டான். திருமணம் ஆகாமல் இருந்து இருந்தால்  கவனித்து இருப்பானோ…
ஒரு நாள் ஏதேச்சையாக அதே பெட்டிக் கடையில் சிகரெட் பிடித்துக் கொண்டு இருக்கும் போது..அன்று  இருந்த பையன்களே இருந்தார்கள். அந்த பெண் கடந்து சென்றதும்..தன்னை அவர்கள் ஒரு மாதிரி பார்ப்பதை பார்த்து….
ஏன் இவனுங்க நம்மை முறைக்கிறாங்க… என்று யோசிக்கும் போது,  ஒருவர் இன்னொருவனிடம் சொன்ன… “காத்திருந்த பெண்டாட்டியை நேத்து வந்தவன் திட்டிட்டு போவது இது தான் போல ….”  என்ற அந்த வார்த்தையும், அவர்கள் பார்த்த பார்வையும் ஒன்றாய் கலந்ததில் அவனுக்கு கிடைத்த தகவல்…
அந்த பெண் இப்போது கடக்கும் போது தன்னை பார்த்து இருக்கிறாள் என்பது…. அவர்கள் சொன்ன காத்திருந்த பெண்டாட்டி…நேத்து வந்தவன் தட்டிட்டு போனான் என்ற  வார்த்தையில்…
ஊரில்  தன் பெண்டாட்டி  தன் குழந்தையை சுமந்துக் கொண்டு தனக்காக காத்திருக்கிறாள் என்பதை மறந்து  வைதேகியை பார்வையிட ஆராம்பித்தான்.
பார்வை பார்வை கலந்து கவிபாட…வைதேகி அதை காதல் பார்வையில் நோக்கினாள் என்றால்…தண்டாயிதபாணி காம பார்வையில் நோக்கினான். விளைவு ஜமுனா…  பணியில் தன் ஊருக்கே கேட்ட மாற்றல் கிடைத்ததும்…தேனை உண்ட வண்டு போல் பறந்து விட்டது.
தன்டாயுபாணியின் வாழ்கையில் வைதேகியின் பங்கு அவ்வளவு தான். வாலிபத்தில் செய்த செயல் …வயது ஆன  போது தன் எதிரிலில் வீரியமாய் நிற்க்கும் போது….அதுவும் மகள் எதிரில்…
பாலாஜி ஜமுனா சென்றதும் …வைதேகியும்   தண்டாயிதபாணியை ஒரு அற்ப புழுவை பார்ப்பது போல் பார்த்த வாறே…அந்த இடத்தை விட்டு  அகன்றதும்…
தன்  மகளை நிமிர்ந்து பார்க்க அஞ்சியவராய் தலை குனிந்தே அமர்ந்து இருக்க…. அந்த விடுதியின் காவலாளி முருகேசன்…
“ சார் உங்கல போக சொல்லிட்டாங்க…” என்றூ சொன்னவர்..
சாந்தியின் பக்கம் திரும்பி… “  உங்க விசயமா பேசுறதா இருந்தா சார் இனி உங்கல மட்டும் இங்கு வர சொன்னார்.”  இதை சொல்லி விட்டு அவர் வேலை முடிந்து என்று அவரும் அந்த இடத்தை விட்டு போனதும்…
அந்த இடத்தில் சாந்தி தண்டாயிதபாணி மட்டுமே  இருந்தனர்… “ போ…லா….மா” திக்கி திணறி தண்டாயிதபாணி சாந்தியை அழைக்க…
திரும்பி அவரை பார்த்த சாந்தியின் கண் முன்  தன் பிரச்சனை வந்த அன்று தன் தந்தை தன்னிடம் பேசிய…. “ மானம்..மரியாதை குலப்பெருமை….” எக்ஸட்ரா…எக்ஸட்ரா வார்த்தைகள் காதில்  வந்து வந்து போயின…
“ நான் செஞ்சது  பெரிய பெரிய தப்பு தான். அவன நம்பி என் படத்தை அனுப்பினேன்…ஆனா நீங்க செஞ்சது தப்பு இல்ல துரோகம்…அம்மாக்கு இவங்களுக்கு  ஒரே சமயத்தில் சீ…” ஜமுனாவின் வயதையும்… தன் வயதையும் ஒத்து போவது போல் இருப்பதை பார்த்தே ஒரளவுக்கு சாந்திக்கு விளங்கி விட்டது.
“ நீங்க போங்க..நான் வரல….”
“ இந்த சமயத்துல நீ தனியா எல்லாம் வேண்டாம்மா….” சாந்திக்கு இருக்கும் பிரச்சனையில்  ஏதாவது செய்துக் கொள்வாளோ என்று பயந்து …
“ அப்பா மேல கோபம் இருந்தாலும் நீ இங்கு வேண்டாம்மா….இப்போ நம்ம வீடு தான்  உனக்கு பாது காப்பும்மா….” சாந்தியின் நலன் கருதி அழைத்தார்.
“ உங்களுக்கு அந்த பொண்ண பார்த்தா பாசமே வரலையா….?” ஜமுனா சிரித்து பேசிக் கொண்டு சென்றாலும் அந்த வயதில் இருக்கும் சாந்தியால் அவளின் மனநிலையை புரிந்துக் கொள்ள முடிந்தது.
ஆனால் இவர்…இவரின் செயலை பார்த்தால்…இவருக்கே ஜமுனாவை பற்றி இப்போது தான் தெரிகிறது என்று  புரிகிறது… “ அந்த பெண்ணை பார்த்து… “ பாசம்…” தான் வரவில்லை என்றாலும் ஒரு குற்றவுணர்ச்சி கூடவா வராது.
இப்போது கூட தன்னை தான் அழைத்து செல்ல பார்க்கிறார்.தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாகி இருக்கிறது ஏதாவது வருத்தம் இருக்கிறதா…. ?
இதை நினைக்க நினைக்க மனது ஆறவில்லை. முன் இது கேள்வி பட்டால் எப்படி நடந்து இருப்பாளோ…ஒரு ஆணால்  தான் சீர்கெட்டு போனதில்….தன் தந்தையும் அந்த வரிசையில் தான் உள்ளார் என்பதில் அவரை அறவே வெறுத்தாள்.
“ நான் வரல…நான் இங்கேயே இருக்கேன். நான் தப்பா  எல்லாம் எந்த முடிவும் எடுக்க மாட்டேன். நீங்க போகலாம்.” என்று  சாந்தி திட்ட வட்டமாக தண்டாயிதபாணியிடம் சொல்லி விட்டார்.
“ தனியா எப்படிம்மா….?” குரல் எழுப்பி சத்தமாக கூட அவரால் கேட்க முடியவில்லை. தயங்கி தயங்கி தான் கேட்டார்.
“ நீங்க இல்லேன்னாவே பாலாஜி சார்  எனக்கு உதவி செய்வாரு…தயவு செய்து நீங்க போயிடுங்க…” அவரை அனுப்பி விட்டு முதலில் தான் தங்கிய அறையிலேயே போய் முடங்கிக் கொண்டாள்.
 

Advertisement