Advertisement

இதழ் 5
சர்வேஷ் அவளை சாப்பிட அழைத்ததும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள். அவன் முகம் இயல்பாக தான் இருந்தது ஆனால் அவள் மனதினுள் தான் ஒரு பிரளயம் நிகழ்ந்தது. ‘இனி எந்த ஆணின் அக்கறையோ கரிசனமோ எனக்கோ என் மகளிற்கோ வேண்டாம்’ என்று மனதினுள் கூறிக் கொண்டவள் இறுகிய முகத்துடன், “உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி சார் ஆனால் நாங்கள் கிளம்புறோம்……………”
அவளது இறுக்கத்தை கவனித்தவன் யோசனையுடன், “ஸ்கூலில் நடந்ததை நினைத்து இப்படி சொல்றீங்களா? நீங்க கிளம்பியதும் அம்மா போன் பண்ணாங்க.. உங்களை பற்றி முழுவதும் சொல்லவில்லை ஆனால் உங்கள் திறமையில் எனக்கு திருப்தி ஏற்பட்டால் உங்களுக்கு வேலை தர சொன்னாங்க………………”
அவன் பன்மையில் பேசியதை கவனித்தவள், “பரவா இல்லை சார்.. உங்கள் நிலைமையில் யாராக இருந்தாலும் அப்படி தான் பேசியிருப்பார்கள்.. நான் கிளம்புறேன்” 
அவள் கிளம்புவதிலேயே குறியாக இருபது போல் தோன்றவும் அவன் கூர் பார்வையுடன், “ஏன்? என்னாச்சு?”
“புரியலை சார்”
“எதில் இருந்தோ தப்புவது போல்.. ஓட பார்ப்பது போல் இருக்கிறது.. அந்த எதுவோ நானா? ஏன்?”
அவனது கணிப்பில் அதிர்ந்தவள், “அப்படியெல்லாம் இல்லை சார்” என்று கூறினாள்.
ஒரு நொடி அவள் கண்களில் வந்து போன அதிர்வை கவனித்தவன், “அப்போ சாப்பிட வாங்க.. அம்மா இருந்திருந்தால் குழந்தையை பட்டினியாக அனுப்பி இருக்க மாட்டார்கள்” என்று ‘நான் குழந்தைக்காக தான் உன்னை அழைக்கிறேன்’ என்று சொல்லாமல் சொன்னான்.
“பரவா இல்லை சார்.. நான் கிளம்புறேன்” என்று கிளம்ப நினைத்தவள் அவனிடம், “ஒரே ஒரு ஹெல்ப் செய்ய முடியுமா சார்?”
“என்ன?”
“மேடம் போன் நம்பர் தர முடியுமா?”
அவன் யோசனையுடன், “எதற்கு?”
“அது.. கொஞ்சம் பேசணும்”
“என்ன திடீர்னு”
“இல்லை………..”
“இங்கே வந்த பொழுது அம்மா நம்பர் வாங்கும் எண்ணம் உங்களிடம் இல்லை.. இருந்திருந்தால் சொர்ணத்திடம் கேட்டு இருப்பீங்க”
“அது.. உங்களை பார்த்ததும் தான் கேட்க தோணியது”
“ஏன்?”
“நான் மேடம் கிட்ட பேசிக்கிறேன்”
“ஆச்சிக்கு உடம்பு முடியலை.. திடீர்ன்னு போன் வரவும் கிளம்பிய அவசரத்தில் தான் உங்களை பற்றி அம்மா சொல்லவில்லை.. தப்பா…………..”
“மேடமை நான் தப்பா எதுவும் நினைக்கவில்லை.. அவங்களுக்கு என்ன சூழ்நிலையோ என்று தான் நினைத்தேன்…. (அவன் சிறு ஆச்சரியத்துடன் பார்த்தான்) அவங்க என்னை தவிர்க்க நினைத்து இருந்தால் க்ரஷில் பேசியிருக்க மாட்டாங்க”
“ஹ்ம்ம்.. அது ஒரு கிராமம்.. அங்கே சிக்னல் இருக்காது.. நான் அங்கே தான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.. என்ன சொல்லணும்………………”
“இல்லை சார் நானே பேசிக்கிறேன்” என்று அவள் சொல்லிக் கொண்டிருந்த போது அவனை சாரதா அழைத்தார்.
அவன், “அம்மா தான்” என்று கூறியபடி அழைப்பை எடுத்தான்.
“சொல்லுங்க மா”
“ப்ரனிஷா………..”
“அதை பற்றி நேரில் பேசிக்கலாம்… நான் இப்போ அங்கே தான் கிளம்பிட்டு இருக்கிறேன்.. ஆச்சி எப்படி இருக்கிறாங்க?”
“நான் வந்ததுக்கு இப்போ பரவா இல்லை ஆனால் கொஞ்சம் முடியாமல் தான் இருக்கிறாங்க”
“சரி நான் இன்னும் கால்-மணி நேரத்தில் கிளம்பிடுவேன்”
“சரி”
“ப்ரனிஷா இங்கே தான் இருக்காங்க.. உங்களிடம் ஏதோ பேசணுமாம்” என்றவன் அவளிடம் கைபேசியை நீட்டினான்.
அவள் தயங்கவும் அவன், “சிக்னல் கிடைப்பதே பெரிது.. சீக்கிரம் பேசுங்க”
தயங்கியபடி கைபேசியை வாங்கியவள் மகளை தூக்கிக் கொண்டு சற்று தள்ளி போய் பேசினாள்.
அவள், “ஹலோ”
“சொல்லு மா.. இண்டர்வியு நல்லா பண்ணியா?”
“நல்லா பண்ணேன் மேடம் ஆனா”
“என்ன? சர்வேஷ் கிட்ட நான் பேசவா?”
“இந்த வேலை எனக்கு நிச்சயம் கிடைக்கும்.. ஆனா.. எனக்கு.. இந்த வேலை வேண்டாம்”
“என்ன சொல்ற?”
“எனக்கு வேற ஸ்கூலில் வேலை வாங்கி தர முடியுமா?”
“என்னாச்சு?”
“ப்ளீஸ் மேடம்”
“எக்ஸ்பிரியன்ஸ் சர்டிபிகேட் இல்லாம வெளி ஸ்கூலில் வேலை…………………..”
“ஸ்கூல் இல்லைனா கூட பரவாயில்லை.. ஏதோ ஒரு வேலை…………………”
“அப்படி என்ன அவசியம்?”
“..”
“ரோஸி என்னை நம்பி உன்னை அனுப்பி இருக்கிறாள்.. உண்மையை சொல்லு.. அங்கே ஏதும் பிரச்சனையா? உன் இண்டர்வியு எத்தனை மணிக்கு நடந்தது?” என்ற அவரது கேள்வியில் இருந்து சர்வேஷின் திறமை இவரிடமிருந்து வந்திருப்பது என்று புரிந்துக் கொண்டாள்.
“ஒரு மணிக்கு”
“அப்போ நான் போன் பணியதிற்கு முன்.. சர்வேஷ் ஏதும்………………….”
“இல்லை மேடம்.. சார் எதுவும் தப்பா சொல்லலை”
“அப்பறம் ஏன்?”
“ப்ளீஸ் மேடம்”
“உண்மையை சொல்லு”
“அது..” என்று அவள் வெகுவாக தயங்கவும் அவர், “என்னை உன் அம்மாவை போல் நினைத்து சொல்லு”
“அது… வந்து.. நான் இப்படி சொல்வதால் என்னை தப்பா நினைக்காதீங்க மேடம்.. எனக்கு இங்கே வேலை பார்க்க கொஞ்சம் பயமா இருக்குது.. என் பயத்திற்கு அவசியம் இல்லாமலே கூட போகலாம் ஆனால் என் மனம் சூடு கண்ட பூனையாக அதை ஏற்க மறுக்கிறது.. நான் சர்வேஷ் சாரை என் வயதில் எதிர் பார்க்கவில்லை.. அது வந்து………………………….”
“எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க”
“இருக்கலாம் மேடம்.. ப்ளீஸ்”
“விமல் பண்ண தப்பை என் மகன் செய்ய மாட்டான்.. தடையாய் இங்கே எந்த கீதாவும் இல்லை”
“மேடம்” என்றவளது குரலில் அதிர்ச்சி பலமடங்கு இருந்தது.
அவர், “இது தான் காரணம் என்றால்……………………”
அதிர்ச்சியில் இருந்து மீண்டவள் சிறிது ஆவேசத்துடன் பேசினாள்.
“மேடம் விமல் தப்பானவர் கிடையாது.. அதே நேரத்தில் நான் இங்கே வந்ததிற்கு காரணம் கீதா கிடையாது.. ஏன் மேடம் ஒரு பெண்ணால் ஆண் துணை இன்றி தனியே வாழ முடியாதா? ஏன் நீங்கள் இல்லையா?”
“என் வாழ்க்கை வேறு.. என் கணவர் இறந்த போது எனக்கு வயது முப்பத்தேழு.. என் மகனின் வயது பத்து.. நீ உன் வாழ்க்கையை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை”
“என் வாழ்க்கை என் மகள் தான்”
“அவளிற்கு பின்.. அவள் திருமணத்திற்கு பிறகு?”
“எப்பொழுதும் அவள் மட்டும் எனக்கு போதும்”
“இப்பொழுது ஈஸியா சொல்லலாம் ஆனா பின்னாடி…………………….” என்று அவர் கூறிய போது சிக்னல் இன்றி அழைப்பு துண்டிக்கப்படவும் நிம்மதி மூச்சுடன் திரும்பியவள் கோபத்துடன் நின்றிருந்த சர்வேஷை பார்த்து அதிர்ந்தாள்.  
ப்ரனேஷ் அறைகளில் இருந்த தனது நோயாளிகளை பார்த்துவிட்டு தனது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது அவன் அருகே வந்த ஒருவன், “ஹே! நீ ப்ரனேஷ் தானே?” என்று ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக வினவினான்.
தனக்கு எதிரில் இருந்தவனை பார்த்த ப்ரனேஷ் சிறு புன்னகையுடன், “டேய் ஜீவா! எப்படி இருக்கிற?”
தனது பள்ளி நண்பனை தழுவிய ஜீவா, “நல்லா இருக்கிறேன்.. நீ எப்படி இருக்கிற? பார்த்து ஆறேழு வருஷம் இருக்குமா?”
“ஹ்ம்ம்.. நல்லா இருக்கிறேன்”
“உன்னை கடைசியா அசோக் கல்யாணத்தில் பார்த்தது”
சட்டென்று முகம் இறுகிவிட, “ஹ்ம்ம்.. நீ எங்கே இங்கே?”
“தெரிஞ்சவங்களை பார்க்க வந்தேன்”
“லண்டனில் தான் இருக்கிறியா?”
“இல்லை.. த்ரீ மன்த்ஸ் ஆன்சைட் இங்கே”
“எங்கே இருக்கிற?”
“XXXX ஏரியா.. நீ?”
“YYYY”
“முடிஞ்சா வீக்-எண்டு மீட் பண்ணலாம்”
“சூர்”
“அப்புறம் உன் பாமிலி பத்தி சொல்லு”
“அப்பா அம்மா இந்தியாவில் தான் இருக்கிறாங்க”
‘திருமணம் ஆகவில்லையா?’ என்பது போல் அவன் பார்த்த பார்வை புரிந்தாலும் கண்டுக்கொள்ளாதது போல், “உன் பாமிலி பத்தி சொல்லு”
“அம்மா அப்பா ஊரில் தான் இருக்கிறாங்க.. வைஃப் குழந்தைங்க சென்னையில் இருக்கிறாங்க..”
“குழந்தைங்க என்ன வயசு?”
“பெரியவ பொண்ணு நாலு வயசு.. சின்னவன் பையன் ரெண்டு வயசு”
“சரி டா நான் கிளம்புறேன்”
“போன் நம்பர் தா” என்றதும் இருவரும் கைபேசி எண் பெற்றுக் கொண்டனர்.
தன் அறையை நோக்கி நகர்ந்த ப்ரனேஷ், “அசோக் எப்படி இருக்கிறான்?” என்று வினவியதும் ஜீவா அதிர்ச்சியுடன் அவனை பார்த்தான்.
அவனது அதிர்ச்சிக்கான காரணம் புரியாமல் ப்ரனேஷ், “என்ன டா?”
“அன்னைக்கு நீ சீக்கிரம் கிளம்பிட்டியா?”
“என்னைக்கு?”
“அதான்.. அவன் கல்யாணத்தன்று”
உள்ளம் மேலும் இறுக, “ஆமா.. அவசரமா போக வேண்டி இருந்தது.. சீக்கிரம் கிளம்பிட்டேன்.. ஏன்?”
“அசோக் இப்போ உயிருடன் இல்லை”
“என்ன டா சொல்ற?” என்று ப்ரனேஷ் பெரிதும் அதிர்ந்தான். 
“அசோக்கிற்கு என்னாச்சு? எப்படி?” என்றவனது குரல் இன்னமும் இயல்பிற்கு திரும்பவில்லை.
ஜீவா, “கல்யாணத்தன்றே அவன் இறந்துட்டான்.. மேசீவ் அட்டாக்”
அதை கேட்டதும் ஒரு நொடி தலை சுத்துவது போல் இருக்கவும் நண்பனின் கையை பற்றினான்.
ஜீவா, “ப்ரனேஷ் ஆர் யூ ஆல் ரைட்?”
“யா.. யா.. அம் பைன்” என்று சுதாரித்தவன், “அப்போ கல்யாணம்?” என்று சற்று எழும்பாத குரலில் கேட்டான்.
“கல்யாணம் நடக்கலை.. தாலியை வாங்கியவன் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிஞ்சுட்டான்.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறதுக்கு முன்னாடி மண்டபத்திலேயே இறந்துட்டான்”
“அந்த.. அந்த கல்யாண பொண்ணு!!!”
“எனக்கு தெரியாது ஆனா அன்னைக்கு சிலர் அந்த பொண்ணு ராசியால் தான் அசோக் இறந்துட்டான்னு சொன்னதை கேட்டேன்.. பாவம் அந்த பொண்ணு.. இன்னமும் நம்ம மக்களை திருத்த முடியலை………………..” என்று அவன் பேசிக் கொண்டிருந்தது எதுவும் ப்ரனேஷ் காதில் விழவில்லை.
ஜீவாவிற்கு கைபேசியில் அழைப்பு வரவும், அவன், “சரி டா.. நான் கிளம்புறேன்.. வீக் எண்டு மீட் பண்ணலாம்” என்று கூறி கிளம்பினான்.
தன் அறைக்கு சென்று இருக்கையில் அமர்ந்த ப்ரனேஷின் மனதினுள் பிரளையமே வெடித்தது என்று தான் சொல்ல வேண்டும்.. அலை அலையாய் பழைய நினைவுகள் அவனை மூழ்கியது.   
 
“அன்று இன்னும் கொஞ்ச நேரம் அங்கே இருந்திருந்தால் உன்னை இழந்திருக்க மாட்டேனே!!!” என்று வாய் விட்டு புலம்பியபடி எழுந்தவன் தனது இயலாமை தந்த கோபத்தில் மேஜையை ஓங்கி குத்த, கண்ணாடி மேஜை தூள் தூளாக நொறுங்க, கண்ணாடி துண்டுகள் அவனது கையை பதம் பார்த்தது.
அப்பொழுது அவன் அறைக்கு வந்த ஜஸ்மின் அதிர்ச்சியுடன், “ஹே! என்னாச்சு?” என்று பதறியபடி அவனது கையை பிடித்தாள்.
ஜஸ்மின் வந்ததை கூட உணராத நிலையில் இருந்தவன் மீண்டும் கையை குத்த போக, அவனது கையை பிடித்து தடுத்தவள், “ப்ரனேஷ்.. ப்ரனேஷ்.. லுக் அட் மீ” என்று கத்தினாள்.
அவளது கத்தலில் சுயஉணர்வு பெற்றவன், “ஜஸ்.. நான் தப்பு பண்ணிட்டேன் ஜஸ்.. தப்பு பண்ணிட்டேன்”
“சரி பண்ணிடலாம்.. இப்போ கையை காமி”
“ச்ச்.. சரி பண்ண முடியாத தப்பு”
“முதலில் கையை காமி” என்று அவனை இருக்கையில் அமர செய்து கையை ஆராயத் தொடங்கினாள்.
அவள் கையை கட்டு போடும் வரை ஏதோ சிந்தனையில் இருந்தவன் தீடிரென்று, “ஜஸ் நான் உடனே இந்தியா கிளம்புறேன்” என்றான்.
அவன் தோளை தட்டிக் கொடுத்தவள், “சரி கிளம்பலாம்.. என்ன பிரச்சனைனு சொல்லு..”
“அது.. ஸ்வீட்டிக்கு அன்னைக்கு கல்யாணம் நடக்கலை.. அன்னைக்கு நான் கொஞ்சம் நேரம் பல்லை கடித்துக் கொண்டு அங்கேயே இருந்திருந்தால் என் ஸ்வீட்டியை மிஸ் பண்ணியிருக்க மாட்டேன்.. இல்லை.. நான் மிஸ் பண்ண மாட்டேன்.. அவள் எங்கேயோ எனக்காக காத்திருக்கலாம்.. நான் அவளை தேடனும்.. அதுக்கு உடனே இந்தியா போகணும்”
“கொஞ்சம் நிதானமா யோசி.. அது நடந்து ஆறு வருஷதிற்கு மேல் ஆகுது……………..”
“இல்லை என் உள் உணர்வு சொல்லுது………………..”
“ஒரு டாக்டரை போல் பேசு..”
“ச்ச்.. போடி உனக்கு புரியாது”
“இத்தனை நாள்.. இல்லை இத்தனை வருஷங்கள் உன் உள் உணர்வு தூங்கிட்டு இருந்ததா? எந்த நம்பிக்கையில் அவள் உனக்காக காத்திருப்பாள் னு சொல்ற? நீ…………..”
“எனக்கு நம்பிக்கை இருக்கிறது.. நான்……………..”
“ப்ரனேஷ்.. பிரக்டிகலா யோசி.. ஆறு வருஷம் ஆகி இருக்கிறது.. அவளுக்கு கல்யாணமே நடக்காமல் இருக்குமா? அவளை தேடிப் போய் அவள் வாழ்வில் புயலை வீசி விடாதே”
“..”
“நிதானமா யோசி ப்ரனேஷ்”
“..”
“என்ன?”
“உன் புருஷனை பார்த்துக்க சொல்லு.. நான் வீட்டிக்கு போறேன்” என்று கூறி அவன் எழவும்,
அவள், “தூங்கி எந்திரிச்சு.. நிதானமா யோசி”
சிறு தலையசைப்புடன் அவன் கிளம்பிச் செல்ல, அவனது நிலை கண்டு வெகுவாக வருந்திய ஜஸ்மின் தனது கணவனை தேடிச் சென்றாள்.
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement