Advertisement

கசாட்டா 8:

இரண்டு வருடங்களுக்கு முன் :

“தாமு…! மதி எங்க இன்னும் குட்டிமா தூங்குறாளா..? “ என தாமரையிடம் கேட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தார் ராகவன்.

“இன்னைக்குப் பரிட்சை முடிவு வருது… காலையிலயே எழுந்திருச்சு கோவிலுக்குப் போயிருக்கா..! “ என்று சொல்ல,

“ரிசல்ட் நினைச்சு ரொம்பப் பயந்துட்டா போல… சரி நிம்மதியா சாமி கும்பிட்டுட்டு வரட்டும்…“ என மகளைப் பற்றி அறியதவராய் சொல்ல,

மதியோ அவள் தோழி ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு ஸ்வேதாவின் தோப்பிற்குச் சென்றனர்… மதியும் ஸ்வேதாவும் சிறு வயது முதலே பள்ளித் தோழிகள்… அறுந்த வால் எனப் பெயர் பெற்றவர்கள். ஆனாலும் ஸ்வேதா மது அளவுக்குக் கிடையாது… தோப்பிற்குச் சென்ற மதி பம்பு செட்டில் குளித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த மதி,

ஷலாலா ஷலாலா ரெட்டை வால் வெண்ணிலா

என்னைப் போல் சுட்டிப் பெண் இந்தப் பூமியிலா

செ செ செவ்வந்தி என் தோழி சாமந்தி

வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி

கொட்டும் அருவி வி வி என்னைத் தழுவி வி வி

அள்ளிக் கொள்ள ஆசைக் கள்வன் இங்கே வருவானோ எனப் பாட,

ஸ்வேதா “இவளுக்குப் பெரிய த்ரிஷானு நினைப்பு… ஏன்டி என்ன ரிசல்ட் வரும்னு எனக்குப் பக் பக்னு மனசு அடிச்சுட்டு இருக்கு…? நீ என்னடானா குதூகலமா குளிச்சுட்டு இருக்க… சீக்கிரம் வாடி கோவிலுக்கு வேற போகணும்…”

“இவ என்னடி… எப்போ பாரு படிப்பு எக்ஸாம் ரிசல்ட்னுட்டு…எழுதிருக்கதுக்குத் தான்டி மார்க் வரும்… நீ இப்படி புலம்புனா எக்ஸ்ட்ரா மார்க் யாரும் போடுறேனு சொன்னாங்களா..? கிடைக்குற டைம்மை என்ஜாய் பண்ணணும்டி… அடுத்து வர்றதை அப்புறம் யோசிக்கலாம்…”

இந்தக் குணம் தான் அவளைப் பெரிய சிக்கலில் மாட்டிவிடப் போகிறது என அவள் அறியவில்லை…கோவிலில் கர்ம சிரத்தையாகச் சாமி கும்பிட்டு முடித்ததும் பரிட்சை முடிவை தெரிந்தது கொள்ளச் சென்றனர்.

ஒரு மணி நேரம் கழித்து “அப்பா நான் ரிசல்ட் பார்த்துட்டேன்…!“ என்று சந்தோஷ கூக்குரலோடு வீட்டிற்குள் நுழைந்தாள் மதி.

முகங்கொள்ளா சிரிப்புடன் வந்த மகளை எதிர்கொண்ட ராகவன் “ என்ன குட்டி எவ்வளவு மார்க் வந்திருக்கு…?“ என ஆர்வமாய் வினவ

அங்கு வந்த தாமரையையும் ராகவனையும் அருகில் அமர வைத்து “அப்பா நான் டென்த் பிடிக்கும் போது ஒன்று சொன்னேன் நியாபகம் இருக்கா..?“ எனக் கேட்க ராகவனும் , தாமரையும் என்னவென்று தெரியாமல் முழித்தனர்.

“அய்யோ மறந்திட்டீங்களா..? சரி நானே சொல்றேன்… டென்த்ல கொஞ்சம் மார்க் கம்மியானதும் இப்போ விட்டதை +2 ல பிடிக்கிறேன்னு சொன்னேன்ல.. அதை இப்போ நிறைவேத்திட்டேன் பா…”என சொன்னதும் ராகவனுக்கும், தாமரைக்கும் மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை…

ராகவன் “பார்த்தியா என் பொண்ண..? நீதான் அவ படிக்கிறதே இல்லைனு எப்பவும் குற்றம் சொல்லிகிட்டே இருந்த… இப்போ பாரு..! “  என மகள் சொன்ன சந்தோஷ செய்தியில் மனைவியை நக்கலடிக்க,

“போதும் உங்க பொண்ணு புராணம்… அவள் நல்ல மார்க் வாங்கணும்னு தான் அப்படி சொன்னேன்… அவ நிறைய மார்க் எடுத்தா எனக்கு மட்டும் சந்தோஷம் இருக்காதா… சும்மா என் வாயை கிளறாதிங்க…“ கணவனைச் சாடினார்.

மதிப்பெண் எவ்வளவு எனத் தெரியாமலே இருவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க மதியின் கையில் இருந்த பேப்பரை பார்த்ததும் மூச்சடைத்து நின்றனர்.

ஆம் நம் நாயகி வாங்கியிருந்தது குறைவான மதிப்பெண்களே..! பார்டரில் செய்யாமல் முப்பது மதிப்பெண் அதிகம் வாங்கியது தான் அவளது சந்தோஷத்திற்கு மூலக் காரணம்.

“அடிப்பாவி..! என்னடி மார்க் இது..? இந்த லட்சணத்துல விட்டதைப் பிடிச்சுட்டேன்னு பில்டப் வேற கழுதை..!“ என மகளை வறுத்தெடுக்க

“சும்மா திட்டாதமா டென்த்ல நான் கம்மியா மார்க் எடுத்த போது என்ன சொன்னீங்க ரெண்டு பேரும்..? கூட ஒரு பத்து மார்க் எடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு சொன்னீங்களா இல்லையா..? இப்போ பாருங்க பார்டர் மார்க்கை விட 30 மார்க் அதிகம் வாங்கியிருக்கேன்”

“பாப்பா அது பத்து மார்க் வந்திருந்தா ரவுண்ட் ஆகி இருக்குமேனு சொன்னா உங்க அம்மா…! அதுக்கு நீ +2 ல இப்படி மார்க் வாங்குறதா..? என்னடா குட்டி நீ..?” என சலிப்பாக கூற,

“ஆமா இவ குட்டி..! ஏன் மடியில போட்டு தாலாட்டுங்க… ரெண்டு பூசை போடறத விட்டுட்டு இப்போ தான் கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க..?” என தாமரை கணவரிடம் பாய,

“அம்மா வொய் திஸ் கொலைவெறி..! ஏதோ இந்த அளவுக்கு மார்க் வாங்கிருக்கேனு சந்தோஷப்படுறதை விட்டுட்டு நொய் நொய்னு திட்டிக்கிட்டு இருக்கீங்க..?!” என்று சொன்னதும்,

“ஏன் சொல்லமாட்ட..? உன்னைலாம் அடிச்சு வளர்த்துருக்கணும்… நீ கேட்டது எல்லாம் வாங்கித் தர்றோம்ல அந்தக் கொழுப்பு உனக்கு…”

“பாருங்கப்பா..! அம்மா என்னாலம் சொல்றாங்கனு… எப்போ பாரு என்ன திட்டிக்கிட்டே இருக்காங்க…“ என பாசாங்கு அழு குரலில் தந்தையிடம் புகார் வாசிக்க

“அவ கிடக்குறா… இங்க இருக்கக் காலேஜ்ல நாளைக்குப் போய் அப்ளிகேஷன் வாங்கிட்டு வருவோம் சரியாடா…?” என்று சொல்ல,

“நோ நோ…. நான் சென்னையில தான் படிப்பேன்… அங்க இருக்கக் காலேஜ் அப்ளிகேஷன் என் ப்ரெண்ட் ஸ்வேதா நாளைக்கு அனுப்புறேன் சொல்லிருக்கா..?”

“அவ்வளோ தூரம்லாம் வேண்டாம்டா… நீ இங்கேயே உனக்குப் பிடிச்ச படிப்பை படி. அப்பாவால உன்னை அவ்ளோ தூரத்துல விட்டுட்டு இங்க நிம்மதியா இருக்க முடியாது…”

“அப்பா சொல்றது தான் சரி… பேசாம இங்கயே படி…” என தாமரையும் சொல்ல,

“ப்ளீஸ் பா…! ஸ்வேதா வீட்டுல கூட அனுப்புறாங்கப்பா… என்னையும் அங்கேயே சேர்த்து விடுங்க… “

“அவங்க தாத்தா வீடு அங்க இருக்கு… அதுமட்டுமில்லை அவ நல்லா படிக்குற பொண்ணு கண்டிப்பா உன்னை விட அதிக மார்க் வாங்கிருப்பா… அவளுக்கு அங்க சீட் கிடைக்கும்…உன்னோட மார்க்குக்குக் கிடைக்குமா குட்டி..? “

“இப்டியே கொஞ்சுங்க விளங்கிரும்…” என தாமரை முணுமுணுக்க,

“அப்பா அவளும் ஹாஸ்டல்ல தான்பா தங்கப் போறா… அப்புறம் அவங்க வைக்குற டெஸ்ட்ல மார்க் எடுத்தா டேலி ஆயிடும்ப்பா…” என ராகவன் யோசனையில் மூழ்க

“அப்பா..! அங்க தான் மாமா வீடு இருக்கே… எதாவது தேவைனா மாமாகிட்ட கேட்குறேன்..? “எனச் சொன்னது தான் தாமதம்,

“அப்படி ஒரு யோசனை இருந்தா சென்னைக்குப் போகவே வேண்டாம்…!” என தடாலடியாய் ராகவன் சொல்லிவிட,

தந்தையின் குரலில் அப்பட்டமான கோபம் இருப்பதை உணர்ந்த மதி “சாரிப்பா… அவங்ககிட்ட எதுவும் கேட்க மாட்டேன்… சென்னைக்கு மட்டும் வேண்டாம்னு சொல்லிறாதிங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்…”

மகள் கெஞ்சுவதைப் பொறுக்க முடியாமல் ராகவனும் சம்மதித்தார்… அங்கு நடக்கப் போவது முன்னரே தெரிந்திருந்தால் போகாமல் இருந்திருப்பாளோ???

என்ட்ரன்ஸ் தேர்விலும் மது சற்று குறைவான மதிப்பெண்களே வாங்கியிருக்க, மகளின் ஆசையை புறக்கணிக்க விரும்பாது சிறிய தொகையை டொனேஷனாக தந்து கல்லூரியில் சேர்த்து விட்டிருந்தார் ராகவன்… இதோ மதியும் அவள் தோழி ஸ்வேதாவும் கல்லூரியில் சேர்ந்து ஒருவருடம் முடிய போகிறது… சேர்ந்த ஒரு மாதத்திலேயே அவர்களுக்கு என்று ஒரு கேங்க் உருவாக்கி விட்டனர்…ஆனாலும் ஜூனியர் என்பதால் அடக்கியே வாசித்தவர்கள் இரண்டாம் வருடத்திற்காகக் காத்திருந்தனர்…எதுக்கு என்றால் அப்போது தான் வரும் ஜீனியர்களிடம் இவர்கள் சீனியர் கெத்தை காட்டலாம்…

அந்த ஹோட்டலில் குழுமியிருந்த இளைஞர் கூட்டத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது… முதுநிலை பட்டபடிப்பை முடித்த கையோடு இந்தக் கெட்-டூ-கெதர் எனும் கூட்டமைப்புச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

“டேய் கௌதம் எங்க ஜாயின்ட் பண்றதுனு முடிவு பண்ணிட்டியா..?” என ஒருவன் கௌதமிடம் கேட்க,

“yes dude I have decided to join in AVS… “ என்றான் கௌதம்

“ஏய் மச்சான்..! ஏன்டா HSC கம்பெனியில நல்ல பேக்கேஜ் தரதா சொன்னியேடா… அப்புறம் ஏன் இதைச் செலெக்ட் பண்ணிருக்க..?” என்றான் கௌதமின் தோழன் ராகுல்.

“இல்லை மச்சான்…! எனக்குச் சென்னையை விட்டு போக மனசில்லைடா… அது மட்டுமில்லை… இது என்னோட ஆம்பிஷன் ஜாப்டா… இதை விட்டு கொடுக்க நான் தயாரா இல்லை…”

கௌதமும், ராகுலும் உயிர் தோழர்கள் என்றே சொல்லலாம்…அவர்களிடம் மனம் முதிர்ந்த புரிதல் உண்டு…ஏன் என்னிடம் சொல்லவில்லை.. கேட்கவில்லை போன்ற எந்த ஒரு முரண்பாடும் அவர்களுக்குள் இருந்ததில்லை… அதற்காக எதையும் பகிர மாட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது… கௌதமை பற்றி முழுதாக அறிந்த நபர்களுள் ராகுலும் உண்டு… அவனால் சொல்ல முடிந்தால் சொல்லியிருப்பான் எனும் புரிதலும் நம்பிக்கையுமே அவர்களின் மத்தியில் நிலவும்…

இரண்டாம் வருடம் மிகக் கோலாகலமாகத் தொடங்கியது அந்தக் கல்லூரியில்.. மதி அன்ட் ஸ்வேதா அவர்களின் கேங்க் உற்சாகத்துடன் கல்லூரிக்குள் நுழைந்தார்கள்.

அங்கிருந்த மரத்தடியில் தங்கள் ஜாகையை அமைத்துக் கொண்டனர்… அந்த மரத்தடி கல்லூரி வாயில் தெளிவாகத் தெரியும் திசையில் இருந்தது…அவர்கள் அதைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் வரும் ஜுனியர்கள் கல்லூரி வாயிலில் நுழையும் போதே அவர்களில் ஒருவரை செலெக்ட் செய்து கலாய்க்கத்தான்…மணி சரியாக எட்டு முப்பதைக் கடக்கவும் மாணவ மாணவிகளின் கூட்டம் தங்கள் எதிர்காலக் கனவுகளைத் தேடி கல்லூரி வாயிலை நெருங்கவும் சரியாய் இருந்தது… ஒவ்வொருவராய் உள்ளே நுழையவும் தங்கள் அடிமையைத் தேர்வு செய்வதில் மும்முரமாய் ஈடுப்பட்டனர்.

யாரை செலெக்ட் செய்வது எனக் குழம்பியிருந்த போது மதி “ஹேய்… என் லக்கி நம்பர் 7 சோ ஏழாவதா யார் வர்றாங்களோ அவங்களயே செலெக்ட் பண்ணிருவோம்…” எனச் சொல்ல அனைவரும் ஓ ஹோ எனக் கூக்குரலிட்டனர்.

“ஒன், டூ, த்ரி என எண்ணிக் கொண்டே செல்ல ஏழாவதாக நுழைந்தவனைக் கண்ட அனைவரும் வாயை பிளந்தபடி நின்றனர்.

எந்தச் சாலையில் போகின்ற

மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்

ஆப்பிள் போலே இருப்பானே…

ஸ்வேதா “ஏன்டி… அவனைப் பார்த்தா ப்ர்ஸ்ட் இயர் மாதிரி தெரியலையே..?“ என்று சொல்லவும்,

மற்றொருவளும் அதை வழிமொழிய மதி “ஒருவேளை பிஜி ஸ்காலரா இருப்பானோ..?” எனத் தன் சந்தேகத்தை முன் வைக்க,

மதியின் மற்றொரு தோழியான கீதா “ஆனா அவன் கூடப் பேசிட்டு வரது எங்க தெரு பையன் டி… அவன் ப்ர்ஸ்ட் இயர் தான் ஜாயின் பண்ணிருக்கான்…” என சொல்ல,

மதி “எதுவோ ஒண்ணு… அவனைக் கூப்பிடுங்க கச்சேரியை ஆரம்பிப்போம்…” என்றதும்,

“ஹலோ சார் இங்க வாங்க..? “என அவனை அழைத்ததும் அவனோ யாரை அழைக்கிறார்கள் எனத் தெரியாமல் சுற்றும் முற்றும் பார்க்க,

மதியோ “ஹலோ..! ப்ளு சர்ட் உன்னைத்தான் இங்க வா..!” என்றாள்.

அவன் அவர்களை நெருங்கிய வந்ததும் பொரியத் தொடங்கினான் “கொஞ்சம் கூட மரியாதைங்கிறதே கிடையாதா..? வா.. போனு பேசிறீங்க. இதைத் தான் காலேஜ்ல படிக்கிறீங்களா..?” என குரல் உயர்த்த,

“ஏன்டி…! ஸ்வேதா நாம வானு மட்டும் தான சொன்னோம்… போனு ஏதும் சொன்னோம்…நீங்க யாராவது சொன்னனீங்களாடி..?” எனக் கேட்டு சிரிக்க அவனுக்கோ கோபம் ஏறிக் கொண்டே போனது.

அவன் “யாரு நினைச்சு பேசிட்டு இருக்கீங்க..? நான் புதுசா ஜாயின் பண்ணிருக்க லெக்சரர்…” என்று சொல்ல,

“ஹோ… இப்பிடி சொன்னா நாங்க பயந்துருவோமா..? பாஸ் ஆர்யா மாதிரி காமெடி பண்ணாதிங்க சிரிப்பு சிரிப்பா வருது…!” என்றதும்,

அவன் கோபத்தில் கொந்தளிக்கும் முன் அவனது செல்போன் ஒலிக்க ‘இடியட்’ என்றவாறு “ஹலோ கௌதம் ஹியர்…!“ எனத் தொலைப்பேசியில் பதிலளித்தவாறே அங்கிருந்து நகர்ந்தான்.

“ஏன்டி..! சந்தடி கேப்புல அவனை ஆர்யானு சொல்ற இதெல்லாம் உனக்கு ஓவரா இல்லை…? “எனத் தோழிகள் அவளை வார

“போங்கடி..! “என மதி சலித்துக் கொண்டாள்.

காரில் சன்னலின் ஓரம் அமர்ந்து கௌதமை முதலில் சந்தித்த நிகழ்வுகளை நினைத்துக் கொண்டே வந்த மதி அசதியில் தூங்கிவிட இதுவரை அவள் முகப் பாவனைகளைக் கவனித்துக் கொண்டே வந்த கௌதம் அவள் உறங்க தொடங்கியதும் சன்னல் வழியே வேடிக்கை பார்க்கலானான்.

திடீரென எதோ முனங்கல் சத்தம் கேட்க அவள் புறம் திரும்பிய கௌதமிற்கு மதி ஏதோ முணு முணுப்பது போல் இருக்க மெல்ல அவள் புறம் சாய்ந்து அவள் கூறுவதைக் கேட்க முயன்றான்.

“போங்கடி..! அவன் ஆர்யாவை விட அழகா தான் இருக்கான்…” எனச் சன்னமாக முணங்க அதன் காரணம் உணர்ந்த கௌதமின் இதழ்களுக்கிடையில் புன்னகை அரும்பியது… அந்நேரம் வண்டி குலுங்கியதில் கௌதமின் தோள் சாய்ந்தாள் மதி.

குளு குளு வெண்பனி போல..

சல சல சல்லடையாக..

பல பல கற்பனை மோத.. பறக்கவா உன் நினைப்பாக..

 

Advertisement