Advertisement

கசாட்டா 11:

காணாமல் போனதாகக் காதலை

தேடிக் கொண்டிருக்கும் நீ

அது உனக்குள்ளே ஒளிந்து

கிடப்பதை என்று அறிவாயோ?

சென்னையின் அந்தப் புகழ் பெற்ற நட்சத்திர உணவகத்தில் ராகுல் காத்துக் கொண்டிருக்க அடுத்தப் பத்தாவது நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தான் கௌதம்.

“மச்சான் வந்து ரொம்ப நேரம் ஆச்சாடா..?” என கேட்டபடியே ராகுலுக்கு எதிரே கிடந்த நாற்காலியில் அமர்ந்தான் கௌதம்.

“இல்லடா இப்போ தான் வந்து பத்து நிமிஷம் இருக்கும்…!”

“எதாவது ஆர்டர் பண்ணலாமா? என்ன சாப்பிடுற நீ..?” எனக் கௌதம் மெனு கார்டில் கண் பதிக்க,

“அது இருக்கட்டும்..! முதல்ல நீ சொல்லு என்ன திடீர் கல்யாணம்..?“ என்ற ராகுலின் குரலில் ஆர்வம் நிரம்பி கிடக்க,

“எதாவது ஆர்டர் பண்ணுவோம்டா… அதுக்கு அப்புறம் நடந்ததைச் சொல்றேன் சொல்றதுக்குத் தான வந்திருக்கேன்…” என்றவன் அங்கு வந்த பேரரிடம் ஆர்டரை குடுத்து விட்டுக் கௌதம் நடந்த அனைத்தையும் கூறி முடிக்கவும் உணவு வரவும் சரியாய் இருந்தது.

“கடைசில அத்தை பொண்ணையே கரெக்ட் பண்ணிட்டனு சொல்லு…. ஒரே குஜாலு தான் போ நீ கலக்குடா..!” என நண்பனை கேலி செய்ய,

“ஹேய்..! நீ வேற ஏன்டா நிலைமை புரியாம காமெடி பண்ற..?”

“ஏன்டா உங்க அத்தை பொண்ண தான கல்யாணம் பண்ணிருக்க..? உனக்குத் தான் அவளத்தான் பிடிக்குமே..! அப்புறம் ஏன் இந்தச் சலிப்பு சலிச்சுக்குற…?”

“என் அத்தை பொண்ணு யாருனு தெரியுமா..?”

“அது என்ன அத்தை பொண்ணு உன் வொய்ப்னு சொல்லுடா ஹா ஹா ஹா…” என மீண்டும் கேலி செய்து சிரிக்க,

“ஹேய் கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாத சரியா…?” என கடுப்படித்தவனிடம்,

“சரி சரி கோபப்படாத சொல்லு..! யாரு அந்தப் பொண்ணு..?”

“மது” என்றான் இறுகிய குரலில்…

“மதுனா யாரு மதுபாலா ஹீரோயினா…?”கௌதமின் முறைப்பில் அடங்கிய ராகுல் “யாரு உன் ஸ்டூடண்ட் மதுவா?” என்றதும்,

“டேய்..! திரும்பத் திரும்ப என் ஸ்டூடண்னு சொல்லாத… அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது….”

“ஹேய்..! சில் சில்… மது தான் உங்க அத்தை பொண்ணுனு உனக்கு எப்பிடிடா தெரியாம போச்சு… அதுவும் நீ அவ படிக்குற காலேஜ்ல வேலை பார்த்திருக்க அம்மாக்கு தெரிஞ்சிருக்குமே..? அவங்க கூடச் சொல்லாமலா இருந்தாங்க…”

“அதாண்டா எனக்கும் புரியலை… ஏன் சொல்லலைனு அப்புறம் அவங்ககிட்ட கேட்டேன்… அதுக்கு அவங்க சொல்றாங்க எனக்குத் தெரிஞ்சா எதாவது ஒரு சமயத்துல அவகிட்ட நான் அவளோட மாமா பையன்னு வெளிபடுத்திட்டா அவ உடனே ராகவன் மாமாகிட்ட சொல்லிடுவானு அத்தை எங்க அம்மாகிட்ட சொல்லி எனக்குத் தெரிய வேண்டாம்னு சொல்லிருக்காங்க… அவளுக்கும் தெரியப்படுத்தலையாம்….”

“ஹா ஹா ஹா நல்லா பண்றாங்கடா பிளானிங்…”

“டேய் உனக்கு என் நிலைமை சிரிப்பா இருக்கு…?”  என அவனை முறைக்க,

“ச்ச இல்லடா ரொம்ப ரொம்பச் சிரிப்பா இருக்கு…” எனக் காமெடி என்கிற பெயரில் ஒரு மொக்கையைப் போட அதில் கடுப்பான கௌதம் தனக்கு அருகில் இருந்த கிளாசில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் ஊற்றினான்.

“மச்சான் பேச்சுப் பேச்சா தான் இருக்கணும் …நோ வயலன்ஸ் ப்ளீஸ்..!”

“இதே மாதிரி மொக்கை போட்டுட்டே இரு மகனே..! அடுத்து சூடான காபி எடுத்து ஊத்தப் போறேன்…”

“சரி சரி விடு டா..! நாமெல்லாம் அப்படியா பழகி இருக்கோம்…” எனக் கௌதமிடம் சரண்டர் ஆனான்.

“அது..! அந்தப் பயம் இருக்கணும்…” என்று கௌதம் சொல்ல,

“போதும்..! உடனே தலை ரேஞ்சுக்கு பில்டப் குடுத்துருவீயே… ஜோக்ஸ் அபார்ட்.. இன்னும் எவ்வளோ நாள் அதையே நினைச்சுட்டு இருக்கப் போற..? “

“தெரியலடா..! மறக்கணும்னு தான் நினைக்குறேன்… ஆனா முடியலை..? என்னடா இவன் ஒவர் ரியாக்ட் பண்றான்னு கூட உனக்குத் தோணும்… ஆனால் அதைக் கடந்து வந்த எனக்குத் தான் அதோட தாக்கம் புரியும்…“

“ஹே மச்சான்..! எனக்குப் புரியாம இல்லைடா… ஆனா இப்போ உனக்குக் கல்யாணம் வேற ஆயாச்சு… உங்களுக்குள்ள பிரச்சனை எதுவும் இல்லைனு இன்னும் எவ்வளோ நாளுக்கு வீட்டில உள்ளவங்ககிட்ட மறைக்க முடியும்… நீ முதல்ல அந்த விஷயத்தை விட்டு வெளிய வா… காலம் எல்லாக் காயத்துக்கும் மருந்தா மாறும்.”

“ம்ம்ம் முயற்சி பண்றேன் டா”

அவனின் பதில் திருப்தி அளிக்காவிட்டாலும் மேலும் அதைப் பற்றிப் பேசி கௌதமை குழப்ப விரும்பாமல் ராகுல்”ஹீம் தட்ஸ் மை பாய்” என்று சூழ்நிலையைச் சகஜமாக்க முயல அது சரியாய் வேலை செய்தது.

“எது தூங்குவோமே அந்தப் பாய்-ஆ இல்ல பிரியாணி கடை வச்சுருக்காறே அந்தப் பாய்-ஆ?”

“ஹாங் உன் சங்காத்தமே வேண்டாம்… நான் கிளம்புறேனு சொல்ற பாய்..! “

ராகுலின் பதிலில் புன்னகைத்த கௌதம்“சரிடா..! நானும் கிளம்புறேன்” எனக் கூற இருவரும் கிளம்பினர்.

அறையில் தனித்திருந்த மதுவின் மனதில் காலையில் கவியிடம் பேசியது ஓடிக் கொண்டிருந்ததது… ஏதோ ஒரு ஸ்டூடண்ட் தான் பிரச்சனையாம் எனக் கூறியது அவளது மூளைக்குள் ரிங்காரமிட்டுக் கொண்டிருந்தது… அவள் நினைவுகளும் பின்னோக்கி பயணமானது.

காலை விடுதியில் மிக உற்சாகத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தாள். ஏனோ இன்று அவள் மனம் சிறகடித்துப் பறப்பது போல் லேசாக இருந்தது… அதே மகிழ்ச்சியோடு ஸ்வேதாவுடன் கல்லூரியை அடைந்தாள் மது… வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கௌதமின் வகுப்புக்கான நேரமும் வந்தது.

“ஸ்டூடண்ட்ஸ்…! இன்னைக்கு நாம புரோகிராமிங் லேப்க்குப் போகலாம்… கொஞ்சம் புரோக்ராம்ஸ் வொர்க் அவுட் பண்ணலாம்… “என்றான்

அனைவரும் சரி என்பதாய் லேபரேட்டரியை நோக்கி செல்ல, மது “ஏன்டி ஸ்வேதா இவன் என்ன சிட்டி ரோபோ வா எப்போ பாரு கிளாஸ் இல்லனா லேப் எதாவது ஒன்னு செஞ்சிட்டே இருக்கான் முடியலைடி என்னால…?”

“என்னைக்குத் தான் நீ கிளாஸ் கவனிச்சுருக்கப் பேசிக்கிட்டே தான இருப்ப அப்புறம் என்ன..? “

“ஏன்டி சொல்ல மாட்ட… இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ…”

“போதும் டி..!  வா போகலாம்… லேட்டா போனா சார் உள்ள விட மாட்டாங்க….”

“அது வேற… ஒண்ணு இருக்கா இவன ஆர்யானு சொன்னதுக்குப் படி படினு நம்மள நான் கடவுள் ஆர்யா மாதிரி தலை கீழா நிற்க வைப்பான் போலயே…”

லேப்பிற்குள் அனைவரும் சென்று அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட சிஸ்டமில் புரோகிராம் எழுதிக் கொண்டிருக்க அடுத்த ஐந்தாவது நிமிடம் அங்கு “மது… கெட் அவுட்… “ எனும் கௌதமின் குரல் கேட்டது.

“ஹப்பா… மீ எஸ்கேப் யாகூ…” என மனதிற்குள் கூக்குரலிட்டு விட்டு வெளியே பவ்யாமாக முகத்தை வைத்துக் கொண்டு லேப்பை விட்டு வெளியேறினாள்.

வகுப்பு முடிந்து அனைவரும் வெளியே வர கௌதம் “மது..! நாளைக்கு ரெக்கார்ட் நோட் கம்ளீட் பண்ணி என் டேபிளுக்கு வரணும்…” என்று போகிற போக்கில் சொல்லி விட்டு போக,

“அட கருமமே..! இதுக்கு நான் வாயை மூடிக்கிட்டு உள்ளேயே உட்கார்ந்து டைம் பாஸ் பண்ணிருப்பேனே…. கொடுமைனு கோவிலுக்குப் போனா அங்க ஒரு கொடுமை திங்கு திங்கு ஆடுன கதையாய் போச்சே என் நிலைமை…” எனப் புலம்பிக் கொண்டிருக்க,

“ஹேய் மது..! சார் எதுக்கு உன்னை வெளிய அனுப்புனாங்க..?”

“ஹாங் புண்ணாக்கு தீர்ந்து போச்சாம்… அதை வாங்க அனுப்புனாங்க…“

” என்னைக் கலாய்க்காம சொல்லுடி என்னாச்சுனு…?” என ஸ்வேதா கேட்க,

“அது வந்து சின்ன அடிஷன் புரோகிராம்க்கே எனக்கு ஆயிரம் எரர் காட்டும்… இதுல பைனரி ஹீப் ட்ரீ புரோகிராம் வேறயா? அப்படினு சொன்னேன்”

“அதுக்கா உன்னை வெளிய போகச் சொன்னாங்க..?” என சந்தேகமான குரலில் கேட்க,

”இல்ல வேற ஒண்ணும் சொன்னேன்…” என இழுக்க, ஸ்வேதா என்ன என்பது போல் ஆர்வமாகப் பார்த்தாள்.

“அது ‘கீப்’ வேணும்னா தெரியும் எனக்கு ஹீப் லாம் தெரியாதுனு லைட்டா தான் முனங்கினேன்… அது எப்படியோ சாரோட பாம்பு காதுல விழுந்து தொலைச்சுருச்சு…”

“ஆனாலும் உனக்குக் கொழுப்புடி..! கீப் கூப் னு என்னடி இதெல்லாம்..? “

“ஹேய் டோன்ட் மிஸ்டேக் மீ… நான் “KEEP” இத தான் சொன்னேன் “

“ஹா ஆமா ..! நீ எதைச் சொல்லிருப்பேனு எனக்குத் தெரியும்…”

“ஹா ஹா கண்டுபுடிச்சுட்டியா கள்ளி “எனப் பேசியவாறே வகுப்புக்குள் நுழைய, தோழிகளுள் ஒருவளான கீதா “ஹேய் மது..! என்னடி எப்போ பார்த்தாலும் உனக்கும் கௌதம் சார்க்கும் முட்டிக்குது சம்திங் ராங்க்?”

“ஹைய்யோ அது ஒண்ணு தான் குறைச்சல்… நமக்கு அதெல்லாம் செட் ஆகாது மச்சி”

“ஏன்டி சார் செம ஹான்ஸ்செம் தான..?”

“ஹான்ஸ்செம் தான் பட் ஓவர் படிப்ஸ்டி… நானெல்லாம் ப்ளஸ் டூலயே தரிகினத்தோம் போட்டேன்… இங்க போன இயர் வைச்ச அரியரையே கிளியர் பண்ண முடியலை… இதுல இந்த மாதிரி படிப்ஸ் கல்யாணம் பண்ணோம்னு வை பிஜி பண்ணு பி.ஹெச்.டி பண்ணுனு உசிர வாங்குங்க… அப்புறம் நான் காதல் பரத் மாதிரி ‘நைஞ நைஞ’ அலைய வேண்டியது தான்…”

“ஹேய்…! அவ ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே எதோ கௌதம் சார் உன்னைக் கல்யாணம் பண்ண க்யூல நிற்குற மாதிரி இந்தப் பில்டப் கொடுக்குற… ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதுடி…” என கேலி செய்ய,

“அட போடி..! நமக்கு ஆயிரம் பிகர் மடியும் மச்சி… ஐ டோன்ட் நோ வொய் ஆல் த பிகர்ஸ் பாலேயிங் மைன் னு போயிட்டே இருக்கணும்…”

“உனக்கு வாய் மட்டும் இல்லைனா நாய் கவ்விட்டு போயிரும்…”

“ஹா ஹா ஹா… தேங்க்ஸ்..! தேங்க்ஸ்..! எனக்கு முன்னாடி புகழ்றது பிடிக்காது… சோ ஒரு நாலு பேர்கிட்ட என் பெருமையை எடுத்து சொல்லுங்க…. “

“அடிங்க..!” என ஸ்வேதாவும், கீதாவும் மதுவை துரத்த அன்றைய நாள் இனிதே கழிந்தது… அடுத்து வந்த மூன்று நாள்களும் மது ரெக்கார்ட் நோட்டை கௌதமின் டேபிளில் சமிட் செய்வதும் அவன் கரெக்ஷன் சொல்வதுமாய்க் கழிய மூன்றாம் நாள் மது ஏகத்திற்கும் கடுப்பானாள்.

டென்ஷனில் இருந்த மதுவிடம் வந்த ஸ்வேதா “ஏன்டி டல்லா இருக்க… என்ன நோட் சப்மிட் பண்ணிட்டியா..?”

“என்ன கோல்மால் பண்ணாலும் கண்டுபுடிச்சுறான் டி அவன்…. இப்போ திரும்பவும் கரெக்ஷன் சொல்லிருக்கான் கடுப்பா வருது…”

“ஹேய்..! அப்போ நான் உனக்கு ரெண்டு எக்க்ஷ்பிரிமென்ட் எழுதி குடுத்தேனே அதுவும் தெரிஞ்சிடுச்சா…?”

“ஹீம் அதெல்லாம் ப்ர்ஸ்டே கண்டுபிடிச்சுட்டான்….”

“அய்யயோ..! அத நான் தான் எழுதுனேன்னு சொல்லிட்டியா..?” என பதட்டமான குரலில் ஸ்வேதா கேட்க,

“இல்லைடி…!  ஜூனியர் எழுதி தந்தாங்கனு சமாளிச்சுட்டேன்”

”அப்புறம் இப்போ வேற எதுக்குக் கரெக்ஷன் “

“புரோகிராம் ரொம்பப் பெருசா இருக்குனு ஷார்ட் பண்ணி எழுதுனேன் அத கண்டுபுடிச்சு ரீ டூ போட்டுட்டான்”

“சரி விடு எழுதிக்கலாம்..! நீ ரெஸ்ட் ரூம் போய்ப் பிரஷப் ஆயிட்டு வா… நான் உனக்குக் கேன்டின்ல டீ வாங்கி வைக்குறேன்… “எனச் சொல்லி விட்டு செல்ல

“சரி..!”  என்பதாய் தலையாட்டிவிட்டு ரெஸ்ட் ரூம் நோக்கி நகர்ந்தாள்.

ஸ்வேதா மதுவிற்காகக் காத்துக் கொண்டிருக்க இருபது நிமிடம் கழித்து வந்தாள் மது.

மது வந்ததும் அவள் முகத்தைப் பார்த்த ஸ்வேதாவிற்கு அவள் ஏதோ யோசனையில் இருப்பது போல் தோன்ற, “மது..! என்னடி உனக்குப் பிடிச்ச ஸ்நாக்ஸ் வாங்கி வச்சுருக்கேன்… அதைச் சாப்பிடாம உட்கார்ந்திருக்க… “

“ஸ்வேதா எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு… நீ காலேஜ் விட்டதும் நேரா ஹாஸ்டலுக்குப் போய்டு… நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்…”

“என்ன வேலைடி..? நானும் உங்கூடவே இருக்கேன்… ரெண்டு பேரும் சேர்ந்தே ஹாஸ்டல் போலாம்…”

“ஹேய் சீனியர்ஸ்ட ஸ்டடி நோட்ஸ் கேட்டிருந்தேன்… அதை வாங்கிட்டு வர்றேன் நீ போ..!”

“இல்லை நானும்…” எனத் தொடங்க அவளை ஒருவழியாகச் சம்மதிக்க வைத்த மது காலேஜ் முடியும் நேரத்திற்காய் காத்திருந்தாள்.

அவள் செய்ய நினைத்திருக்கும் செயல் அவள் வாழ்க்கையில் பின்னாளில் சிக்கலை உண்டு பண்ணப் போகிறது என அறியாமல்….

கதவு தட்டப்பட அதன் ஓசையில் நினைவுக்கு வந்த மது கதவை திறக்க அங்கே கௌதம் நின்றிருந்தான்… இருவரும் ஒருவித குழப்ப நிலையிலேயே இருக்க ஒன்றும் பேசாமல் தங்களது இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டனர்

Advertisement