Advertisement

அத்தியாயம் 7:

சூரியனை கண்டு கரைந்திடும்

பனித்துளி போல நானும் உன்

நினைவுகளில் கரைந்திட

ஆசை கொள்கிறேன்!

கோவை மருத்துவமனை அதற்குரிய பரபரப்பில் இயங்கி கொண்டிருக்க, ட்ரைனிங் மாணவிகளை அழைத்து இதய நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய முதலுதவி பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அவர்களும் கவனத்துடன் அதை குறிப்பெடுத்துக் கொண்டனர்.

“ஓகே ஸ்டூடண்ஸ், இதை பற்றி இன்னும் டிடைலா கார்டியாலிக் ஸ்பெஷலிஸ்ட் மிஸ்டர். அருண் உங்களுக்கு சொல்லுவார். யூ பீப்பிள் ஹேவ் அ ஹாஃப் அன் ஹவர் ப்ரேக்” என்றபடி வகுப்பை முடித்துக் கொண்டு சென்றார்.

அதை கேட்ட அனன்யா “ஹோ சார் வந்தாச்சா. ஒரு மெசேஜ் கூட பண்ணி சொல்ல முடியலை வரட்டும் வச்சிக்குறேன்” என மனதிற்குள் பொருமியவள் தோழிகளுடன் கேன்டினை நோக்கி சென்றாள்.

அனைவரும் தங்களுக்கான மினி ப்ரேக் ஃபாஸ்டை ஆர்டர் செய்து வாங்கி கொண்டு அங்கிருந்த மேஜையில் அமர்ந்த வண்ணம் அரட்டையோடு உணவையும் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க,அந்நேரம் தன் காலை ரவுண்ட்ஸை முடித்துக் கொண்டு, தன்னுடன் பணிபுரியும் மருத்துவரான மிஸ்.மஹிமாவுடன் கேன்டின் உள்ளே நுழைந்தான் அருண்.

நுழைந்துதுமே அனன்யாவை கண்டவன் சூழ்நிலை அறிந்து யாரும் அறியாமல் அவளைக் கண்டு புன்னகை புரிய அனன்யாவோ அவனை கண்டு கொள்ளாமல் உணவை உண்பதிலும், தோழிகளுடன் பேசுவதிலும் மும்முரம் காட்ட யோசனை செய்தவன் “ஹோ நான் வந்ததை சொல்லலைனு மேடம்க்கு கோபம் போல” என சரியாய் யூகித்தவன் மஹிமாவுடன் அன்ன்யாவை தாண்டி இருந்த டேபிளில் அமர்ந்தான்.

“அருண் திடீர்னு இரண்டு நாள் லீவ் போட்டுட்டீங்க. எதும் விஷேசமா?” என மஹிமா கேட்க

“இல்லை மஹி போன வாரம் என் சிஸ்டர் கான்வகேஷனுக்கு வர சொல்லிருந்தாங்க அப்போ எமர்ஜென்சி கேஸ் இருந்ததால் போக முடியலை. அவங்களை பார்த்ததும் ரொம்ப நாள் ஆச்சுஅதான் இந்த வாரம் போயிட்டு வந்தேன்” என்றான்.

தன் காதுகளை கூர்மையாக்கி அவர்கள் பக்கமாய் வைத்திருந்த அனன்யா அருணின் விளக்கத்தை கேட்டதும் “விட்டா அவளுக்கு ரூட் மேப் போட்டு எப்படி போயிட்டு வந்தேன்னும் சொல்வான் போல ஆனால் என்கிட்ட ஜஸ்ட் ஒரு கால் பண்ணி சொல்லா விட்டாலும் ஒரு மெசேஜ் பண்ணி ரீச் ஆயிட்டேனு சொல்றதுக்கு என்னவாம் சரியான லூசு “என்று அவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

இருவரும் பொதுவாய் தங்கள் தொழிலை பற்றி விவாதித்துக் கொண்டிருக்க, அருண் மஹிமாவுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அடிக்கடி அனுவை தன் பார்வையால் தழுவிக் கொன்டிருந்தான். அப்போதும் அனு கவனிக்காமல் இருப்பதை கண்டதும் சற்று எரிச்சல் அடைந்தவன் அவள் பக்கம் திரும்பாமல் இருந்தான்.

அதுவரை ஒரக்கண்ணால் அருணை கவனித்துக் கொண்டிருந்தவள் அவன் அவள் பக்கம் திரும்பாமல் இருக்கவும் அவனை பார்க்க முயல அதை அருண் கவனித்து விட்டு சட்டென்று திரும்ப தன் நாக்கை கடித்துக் கொண்டு “அய்யோ பார்த்துட்டானே இனி இதை வைச்சு ரொம்ப கிண்டல் பண்ணுவானே என்ன பண்றது” என்று நினைத்துக் கொள்ள,

அவளது செய்கையை கண்டு தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன் “ஹோ அப்போ இவ்ளோ நேரம் என்னை கவனிச்சுட்டு தான் பார்க்காத மாதிரி நடிச்சியா உனக்கு இருக்கு”

“அருண் நான் எனக்கு காஃபி வாங்க போறேன் உங்களுக்கு எதும் வேணுமா?” என்றபடி மஹிமா டேபிளை விட்டு எழ முயல

“எனக்கு வேண்டாம் மஹி. நீ உட்கார் நான் போய் வாங்கிட்டு வர்றேன்” என கூறிவிட்டு சென்றவன் அங்கே இருந்து,

“மஹி காஃபி மட்டும் போதுமா இல்லை வேற எதுவும் வேணுமா?” என்று குரல் கொடுக்க

இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அனுவின் காதில் புகை வரத் தொடங்கிய நேரம் அவளை கண்ட அருண் மெலிதாக புன்னகைக்க அதில் வெறியானவள் கோபத்தோடு அங்கிருந்து சென்றாள்.

அவள் சென்றதும் மஹிமாவின் அருகில் வந்து காஃபியை கொடுத்துவிட்டு அமர அப்போது தான் நியாபகம் வந்தவளாய் “ஹான் அருண் சொல்ல மறந்துட்டேன் போன வாரம் பொண்ணு பார்த்துட்டு போனாங்கனு சொன்னேன்ல. அது ஃபிக்ஸ் ஆகி வர்ற மாதிரி இருக்கு மேக்ஸிமம் நெக்ஸ்ட் மன்த் என்ட்ல என்கேஜ்மென்ட் இருக்கும்”

“சந்தோஷமான விஷயத்தை இவ்ளோ லேட்டா சொல்ற எனிவே கன்கிராட்ஸ் ஐம் சோ ஹேப்பி ஃபார் யூ” வாழ்த்தை கூறி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்த,

அதில் மகிழ்ந்தவள் “தேங்க்ஸ் ப்ரோ. கண்டிப்பா என்கேஜ்மென்ட்க்கு வரணும். இப்போவோ உன்னை புக் பண்றேன் டீல்”

“ஷ்யூர் டா நான் இல்லாமல் என் சிஸ்டர்க்கு என்கேஜ்மென்ட்டா” என்றபடி அவனும் அவளின் மகிழ்ச்சியில் இணைந்து கொண்டாள்.

மஹிமா வீட்டிற்கு ஓரே பெண். கூட பிறந்தவர்கள் யாரும் இல்லாததால் எப்போதும் தனித்தே இருப்பாள். மற்றவர்களுடன் பேசி பழகவே மிகவும் கூச்சப்படுவாள். அவள் இங்கு வேலையில் சேர்ந்த போது அவளது தயக்கத்தை புரிந்து கொண்டு அருண் தான் தன்னால் முடிந்த அளவு அவளை தனிமையில் இல்லாமல் பார்த்துக் கொண்டான். தன்னுடைய தங்கையாக அவளை பார்த்துக் கொண்ட விதம் மஹிமாவை அருணை தன் உடன் பிறவா சகோதரனாக நினைக்க வைத்தது.

இப்போதும் அவளால் அருணை தவிர மற்ற யாரிடமும் சகஜமாக பேசி பழக முடியவில்லை. எந்த உதவியாக இருந்தாலும் அவள் நாடுவது அருணைத்தான்.

அது பல நேரங்களில் அனுவிற்கு சற்று பொறாமையை உண்டு பண்ணும் அதை அவள் அவனிடம் வாய்விட்டு கேட்ட்து இல்லை ஆனால் அருணுக்கு தெரியும். அதனால் தான் இன்று தன்னை கண்டு கொள்ளாமல் இருந்த அவளை வெறுப்பேற்ற இவ்வாறு செய்தான்.

இங்கு அனுவோ “என்னை பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கான் மனசுல. இந்த தடவை என்ன சமாதனப்படுத்தினாலும் விட்டுக் கொடுக்க கூடாது” என்ற நினைத்துக் கொண்டிருந்தவளின் தோளை யாரே தட்ட திரும்பியவள் அருணை கண்டதும் “நீங்க என்ன சமாதனம் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்” என்று அவன் கூற வருவதை கூட கேட்காமல் பட படவென பொரிய,

“மிஸ்.அனன்யா என்ன உளறிட்டு இருக்கீங்க. போங்க போய் எல்லாரையும் செமினார் ஹால்ல அசெம்பிள் ஆக சொல்லுங்க கிளாஸ்க்கு டைம் ஆகுது” என்றபடி அவளை கடந்து செல்ல,

அவனின் அலட்சியத்தில் கோபம் கொண்டவள் அதை வெளிக்காட்டவும் முடியாமல் நேராக செமினார் ஹாலில் கடைசி வரிசையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

வகுப்புகள் தொடங்கப்பட்டு முடியும் வரை அருண் அவள் பக்கம் செல்ல துடித்த பார்வையை அடக்கி கொண்டு எதுவும் அறியாதது போல் அவர்களுக்கு சில செயல்முறை விளக்கங்களை சொல்லிக் கொண்டிருந்தான்.

அது மேலும் அனுவிற்கு எரிச்சலை மூட்ட “மெசேஜ் அனுப்பலைனு கோபத்துல கண்டுக்காம இருந்தேன். அதுக்கு இவன் இவ்ளோ சீன் போடுறான். அனு செமினார் ஹாலுக்கு எல்லாரையும் வர சொல்லுனு சொல்ல வேண்டியது தான அதை விட்டுட்டு மிஸ்.அனன்யாவாம் மூஞ்சை பாரு.” என அவனை சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தாள்.

ஒருவழியாக வகுப்புகள் முடிந்து அனைவரும் செல்ல அருணும் தன் அன்றைக்குரிய வேலைகளை முடித்துவிட்டு அடுத்த ஷிப்ட்டிற்குரிய மருத்துவரிடம் ரிப்போர்ட்களை சப்மிட் செய்தவன் வீட்டிற்கு செல்ல புறப்பட்டான்.

வெளியே வந்தவன் தனது பைக்கை ஸ்டார்ட் பண்ண முயற்சிக்கும் போது பைக்கில் இருந்த சாவியை உறுவியவள் அவனை முறைத்துக் கொண்டிருக்க “அனன்யா என்ன இது சின்ன பிள்ளைங்க மாதிரி விளயாடிட்டு இருக்க சாவியை குடு”

“நீங்க மட்டும் இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்திங்க அப்போ தெரியலையா சின்ன பிள்ளைத்தனம்னு” என்றபடி தன் ஆட்காட்டி விரலில் சாவியை நுழைத்து சுற்றிக் கொண்டே இருக்க

“இப்போ சாவியை கொடுக்க போறியா இல்லையா?”என்று முகத்தை சற்று கடுமையாக வைத்துக் கொண்டு கேட்க, அவனது கடுமையை கண்டவளின் கண்ணில் நீர் கோர்க்க சாவியை அதன் இடத்தில் வைத்தவள் கலங்கிய கண்களை துடைத்தவாறே மருத்துவமனையை ஒட்டினாற் போன்று இருந்த அந்த பூங்காவினுள் சென்று அமர்ந்தாள்.

அவள் அழுதுகொண்டே சென்றதை கண்ட அருணின் மனம் இளக ஸ்டார்ட் செய்த பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு அவனும் அந்த பூங்காவிற்கு சென்றான்.

அனுவின் பின்னால் இருந்த அவளை அணைக்க “அதுவரை மட்டுபட்டிருந்த அழுகை உடைப்பெடுக்க சத்தம் போட்டு அழமுடியாமல் அதை அடக்க முற்பட்டவளுக்கு வாய் வலிக்க கண்ணீர் நில்லாமல் வந்து கொண்டிருந்தது.

கண்ணீர் துளிகள் அணைத்திருந்த அருணின் கைகளில் பட பதறியவன் அவளை தன் பக்கமாய் திருப்பியவன் அவள் ஏங்குவது கண்டு தன்னையே நொந்து கொண்டவனாய் “ஹேய் அனு சாரிடி நான் சும்மா உன்னை சீண்டுறதுக்கு தான் அப்படி பண்ணுனேன் அழாத ப்ளீஸ்” என்றவாறு அவளது முதுகை ஆதுரமாய் தடவி கொடுக்க,

அப்போதும் அவள் அழுது கொண்டே இருக்க “அதான் சாரி சொல்லிட்டேன்ல அப்புறமும் அழுதா நான் என்ன பண்றது நீ என்ன பனிஷ்மென்ட்னாலும் கொடு” என்றவனின் குரலில் சற்றே கலக்கம் தெரிந்ததும் தான் தாமதம் சட்டென அழுகையை நிறுத்தியவள் “ப்ளீஸ் அரு நீங்க என்னை அவாய்ட் மட்டும் பண்ணாதிங்க அதை என்னால தாங்கிக்கவே முடியாது” என்றுவிட்டு அவனது மார்பில் சாய்ந்து கொள்ள,

அவளது தலையை கோதிவிட்டவாறே “என்னால உன்னை அவாய்ட் பண்ண முடியாதுடி விளையாட்டுக்கு தான் அவாய்ட் பண்ற மாதிரி நடந்துகிட்டேன்” என்ற அவனது வார்த்தையில் உண்மை தெரிய தனது கலக்கத்தை விட்டவள்

“விளையாட்டுக்கு என்றாலும் என்னை பார்க்காம அவாய்ட் பண்ண முடியுதுல உங்களால அதான் இன்னைக்கு செமினார் ஹால்ல பார்த்தேனே” என்று புகார் வாசிக்க,

அவளது குதுகலம் நிறைந்த குரலை கேட்டவனின் மனமும் லேசாக “அடிப்பாவி அந்த ரெண்டு மணி நேரமும் என் மனசை அடக்க எவ்ளோ கஷ்டப்பட்டேனு எனக்கு மட்டும் தான் தெரியும்” என்றபடி அவளது கைகளை தன் கையோடு கோர்த்ததுக் கொள்ள,

“இனிமே நீங்க விளையாட்டுக்கு கூட இப்படி நடந்துக்க கூடாது சரியா” என்று கேட்டுவிட்டு அவனது தோள் சாய, “உன்னை கஷ்டப்படுத்துற எதையும் செய்ய மாட்டேன்டி” என்றான்.

பி 2 காவல் நிலையம்:

ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குப் பதிவுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த இளா அங்கிருந்த தலைமை காவலரிடமும் உதவி ஆய்வாளரிடமும் அந்த கேஸ்களை பற்றி விவாதிக்கலானான்.

தேவையான தகவல்களை சேகரித்துக் கொண்டவன், தனது சந்தேகங்களையும் எவ்வித பந்தாவும் இன்றி கற்றுக் கொள்ள துடிக்கும் மாணவனாய் அவ்ர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டான். அவன் இங்கு வரும் போது இவன் எப்பிடியோ என்று நினைத்தவர்களின் மனதில் இச்செய்கை அவனின் மேல் ஓர் நல்லுணர்வு உருவாக்கி தந்தது.

இது தான் இளா முதலில் பார்ப்பவர்களுக்கு அவனது தோற்றமும், தன்னை அவன் கையாளும் விதமும் சற்று முசுடு, யாரையும் எட்டி நிற்க செய்வான் என்பது போல் தோன்றினாலும் அவனின் உண்மையான குணமும், அவனில் இருக்கும் மென்மையும் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.

அவர்களை அனுப்பிவிட்டு மீண்டும் கோப்புகளுக்குள் தன்னை நுழைத்துக் கொண்டவன் அதை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது சரியாக அவன்து தொலைபேசி சிணுங்கியது. அவனுடன் ட்ரைனிங்கில் பயிற்சி பெற்ற விஷ்வா தான் அழைத்திருந்தான்.

“ஹேய் விஷ்வா சொல்லுடா எப்படி இருக்க மச்சி” என்றான்.

“ஏன்டா நல்லவனே போன் பண்ணினது நான் என்னை பேச விடாம என்னமோ நீ கால் பண்ணின மாதிரி பேசுற. இவ்வளோ நாள் ஆச்சு ஒரு போன் பண்ணியாடா இது தான் நான் ஊருக்கு போனதும் போன் பண்றேன் சொன்ன லட்சணமா”

“ஹேய் பொறுமை பொறுமை இப்போ தெரியுதா நான் ஏன் உன்னை முந்திகிட்டு பேசுனேன்னு”

“அப்போ கூட நான் தான போன் பண்ணேன். இல்லைனா இப்போதைக்கு நீ போன் பண்ணிருப்பியா” என்றான் அவனை குற்றம் சாட்டும் குரலில்.

“சரி சரி விடுடா நீ பண்ணுனா என்ன நான் பண்ணுனா என்ன? நாம எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு மச்சி”

“ஆமா ஆமா நம்பிட்டேன். அன்னைக்கு வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டதுக்கு வர்றேனு சொல்லிட்டு கடைசி நேரம் வரலை ஊருக்கு கிளம்பிட்டேனு சொல்ற அம்மா எவ்வளோ வருத்தப்பட்டாங்க தெரியுமா? இது தான் ஒண்ணுக்குள்ள ஒண்ணாடா நாதாரி”

“சாரி டா ஐ ம் எக்ஸ்ட்ரீம்லி சாரி அன்னைக்கு ஒரு முக்கியமான ஒருத்தரை பார்க்க வேண்டியதா போச்சு அதான் லாஸ்ட் மினிட்ல வர முடியாம போச்சு அம்மாகிட்ட சொல்லிடு நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா வர்றேனு ஓகே கோப்ப்படாதடா”

“ஓகே இவ்வளோ சொல்றதால விடுறேன். ஆமா அது யாரு முக்கியமான ஒருத்தர் ம்ம் ஒருத்தரா? இல்லை ஒருத்தியா? சொல்லு சொல்லு “என கேட்க

“ஹம்ம் ஒருத்தி தான். சொல்றது என்ன கூடிய சீக்கிரம் அவளை உனக்கு காட்டுறேன் “என்றான் புன்னகைத்தபடி,

“இளா என்னடா வெட்கப்படுறியா? அய்யோ இந்த நேரம் பார்த்து நான் உன் பழக்கத்துல இல்லாம போயிட்டேனே மச்சான்”

“ஹேய் ஓவரா ஓட்டாதடா? இதெல்லாம் உனக்கு புரியாது. சரி அதை விடு உனக்கு எங்க போஸ்டிங் போட்டுருக்காங்க”

“ஹைய்யோடா இப்போவாது கேட்கணும்னு தோணுச்சே அசோக் நகர்டா” என்றான்.

“இந்த வீக் என்ட்ல மீட் பண்ணுவோம் ஓகே உன்னை நான் ஒரு இட்த்துக்கு கூப்பிட்டு போவேன் நீ வரணும் சரியா?”

“என்னமோ பண்ணித்தொலை எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் பிறகு கூப்பிடுறேன் “என்று சொல்ல

“ஆரம்பிச்சுட்டான்யா சின்சியர் சிகாமணி. எனிவே பை டா” என்று போனை வைத்தான் விஷ்வா.

எங்க கூப்பிட்டு போக போறான் இவன் என்று ஒரு நொடி சிந்தித்தவன் மறுகணமே விட்டு போன இடத்திலிருந்து தன் பணியை கவனிக்கலானான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காலையிலேயே அனைவரையும் கான்பிரன்ஸ் ஹாலில் ஒன்றுகூட செய்யுமாறு சஜன் தனது பி.ஏ வினோத்திடம் சொல்ல அவனும் சரி என்பதாய் வெளியே சென்று அதற்குரிய வேலைகளில் இறங்கினான்.

தனு, வெண்பாவிடம் விஷ்யம் சொல்லப்பட வெண்பா “ என்ன வினோத் சார் திடீர்னு கான்பிரன்ஸ் ஹாலுக்கு வர சொல்றிங்க. எதும் பிரச்சனையா?”

“அப்படிலாம் எதுவும் இல்லீங்க வெண்பா. சார் சொல்ல சொன்னார் சொல்லிட்டேன் அவ்ளோ தான் எனக்கும் எதுக்குனு தெரியாது” என்று சொல்ல

“அய்யோ வினோத் சார் அநியமாயத்துக்கு இப்படி கிரீன் பேபியா இருக்கீங்களே?”

“கிரீன் பேபியா என்ன சொல்றா இவ” என்று நொடி குழம்ப,

அவனது முகத்தில் இருந்தே தான் சொன்னது அவனுக்கு புரியவில்லை என்று அறிந்து கொண்டவள் “கிரீன் னா பச்சை பேபினா புள்ளை இட்ஸ் ஈக்வோல்ட் பச்சை புள்ளைனு அர்த்தம்” என்று தான் கூறியதற்கு ஒரு ஈக்வேஷனையே உருவாக்கி சொல்ல

அதை கேட்டு தலையில் அடிக்காத குறையாய் அவளை ஒரு பார்வை பார்க்க அவளோ அதை கண்டு கொள்ளாது “அவர் சொன்னா அப்படியே மண்டையை ஆட்டிக்கிட்டு வந்திடுவீங்களா? ஏன் எதுக்கு எப்படினு கேட்க மாட்டிங்களா? என்று மீண்டும் அவன் மேல் ஒரு குற்ற பத்திரிக்கை வாசித்தாள்.

“நாங்கெல்லாம் அப்படி கிடையாது தெரியுமா? முதல்ல நாங்க வேலை பார்த்த இடத்துல கேட்டு பாருங்க எதையும் அலசி ஆராய்ச்சி பண்ணி கேள்வி மேல கேள்வி கேட்டு தான் ஓகேனு சொல்லுவோம்” என்று தன் வீர பராக்கிரமத்தை சொல்ல

“ஓ அப்படியா ஆனா நாங்க விசாரிக்கும் போது அந்த கம்பெனியிலயே வேலை செய்யாம ஓபி அடிக்குற ஓரே ஆள் நீங்க தானு சொன்னாங்க” என்று அவனும் அவளுக்கு சரி சம்மாய் வம்பிழுக்க

அவனின் பதிலில் “அய்யோ அசிங்கபட்டுட்டியே வெண்பா” என்று நெற்றியை தேய்த்தவாறே தனக்குள் முனகி கொள்ள, அவளது செய்கைகள் ஒவ்வொன்றையும் சுவாரஸ்யமாக ரசித்துக் கொண்டிருந்தான் வினோத்.

“என்ன எனக்கு தெரிஞ்சிடுச்சேனு நினைக்குறியா” ஒருமையில் அவளை அழைக்க,

அவன் திடீரென்று ஒருமையில் அழைத்துதை கூட கவனிக்காமல் அவனுக்கு பதில் குடுக்க எண்ணியவள் “அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா. அப்படியே இருந்தாலும் தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகட்டும் நம்ம வினோத் தான” என கூற

அவளின் பதிலை ஆர்வமாக கேட்க ஆரம்பித்தவன் “நம்ம வினோத் தான” என்றதில் ஸ்தம்பித்தவன் அதற்கு மேல் அவள் சென்றதையோ இல்லை கான்பிரன்ஸ் ஹாலில் ப்ராஜக்ட் வெற்றிகரமாக முடிந்ததால் நாளை கம்பெனியில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று அறிவித்த்தையோ எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை எல்லாவற்றிலும் இயந்திரத்தனமாக கலந்து கொண்டாலும் கண்கள் மட்டும் வெண்பாவிடமே ஓட்டப்பட்டிருந்தது.

தான் எண்ணுவது அதிகப்படி தான் என மூளைக்கு தெரிந்தாலும் அவளை ரசிக்க தொடங்கிவிட்ட மனமோ அது உரிமையால் தான் அப்படி சொன்னாள் என வக்காளத்து வாங்கியது.

வேலைக்கு சேர்ந்த இவ்வளவு நாட்களில் வெண்பா தனுஷா தவிர வேறு யாரிடமும் இப்படி சரிக்கு சரியாய் பேசி கண்டதில்லை. தன்னிடம் அவள் இயல்பாய் பேசுவது அவனுக்கும் பிடித்துதான் இருந்தது. அடிக்கடி அவளை பார்ப்பதும் உண்டு. ஆனால் அதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இன்று ஏனோ அவள் மேல் இருந்த பிடித்தம் மெல்ல மேலெழும்பி அங்கும் இங்கும் அசையாது அவளை பார்வையால் வருட வைத்தது. தான் செய்வது தவறோ என்று ஒரு கணம் எண்ணிய நொடி அவனது மனதில் ஒன்று பளிச்சிட்டது.

இத்தனை வருடம் இங்கு வேலை பார்க்கும் தனக்கு எந்த பெண்ணிடமும் இப்படி ஒரு எண்ணம் வரவில்லை. அப்படியே அழகாய் இருப்பதால் தான் தனக்கு இவ்வாறு தோன்றுகிறதா? என்றால் அதுவும் இல்லை ஏன் தனுஷா கூட வெண்பாவை விட அழகு தான். அவளை பார்த்து அப்படி ஒன்றும் தோன்றவில்லையே என்று ஆராய்ந்தவனின் மனம் ஒரு முடிவிற்கு வந்தது. ஆம் தான் வெண்பாவை காதலிக்கிறோம் என்று தெரிந்து கொண்டான்.

இவ்வளவு நேரம் ரசனையோடு அவளை தழுவிய பார்வை இப்போது காதல் பார்வையாய் மாறிப்போனது.

செனோரீட்டா வருவாள்.

 

Advertisement