Advertisement

அத்தியாயம் 5:

கண் சிமிட்டும் விண்மீன்களை

கண்டு நழுவாத இதயம்

உன் விழி மீனில் சிக்குண்டு

சிதறிப் போவதேனோ?

அனுவை மருத்துவமனை கல்லூரியில் இறக்கி விட்டவன் தன் நண்பன் ஹரிஷை காண இதற்கு முன் தான் வேலை செய்த கம்பெனியான விஸ்டா கம்ப்யூட்டர் சொலியூசனை நோக்கி தனது அப்பாச்சியை செலுத்தினான்.

நேராக உள்ளே சென்றவன் “ஹாய் டா ஹரிஷ்..!  எப்படி இருக்க..?” என்று ஹரிஷின் கேபினுக்கு அருகில் வந்து நின்று அவனது கூலர்ஸை கையில் சுழற்றியபடி கேட்க,

அதுவரை தனக்கு முன்னிருந்த கணிணியில் கவனத்தை பதித்திருந்தவன் திடீரென்று தன் நண்பனின் குரல் கேட்டதும் ஆச்சர்யத்தில் நிமிர்ந்தவன் “ஹே இளா எப்போடா ஊர்ல இருந்து வந்த? நான் நல்லா இருக்கேன் டா மச்சான்… நீ எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன் டா… நேத்து நைட் தான் வந்தேன்… அப்புறம் வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு..?”

“உனக்கு தெரியாதா எப்படி போகும்னு..? ஏதோ போயிட்டு இருக்கு.. புது புது ப்ராஜக்டா குடுத்து உயிரை வாங்குறானுங்க..”

“ஹா ஹா… என்ஜாய் டா மச்சி… யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..!!”

“ஏன் சிரிக்கமாட்ட நீ..? உன் ஆம்பிஷன் ஜாப் கிடைச்சதும் இங்க இருந்து எஸ்கேப் ஆயிட்டல்ல… இது மட்டுமா பேசுவ…. சரி சரி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்… நீ போய் ஹெச்.ஆரை பார்த்துட்டு வா… உன் வேலை விஷயம் என்னாச்சு கேட்டுட்டே இருந்தாரு…. நான் பெண்டிங் வொர்க்கை முடிச்சுட்டு வர்றேன்… கேன்டீன் போகலாம்..” என்றதும்

சரி என்று விட்டு அந்த காரிடாரின் மத்தியில் இருந்த அறையின் கதவை தட்டியவன் “மே கம் இன் சார்…” என்று கேட்க

“யெஸ் கம் இன்…” என்றவாறே வாயிலை நோக்கினார் விஸ்டா சொலியூஸனின் ஹெச்.ஆர் விஸ்வநாதன்.

உள்ளே நுழைந்து இளாவை கண்டவர் “ ஹலோ மிஸ்டர். இளா ஹவ் ஆர் யூ. ப்ளீஸ் பீ சீட்டட்”

“தேங்க் யூ சார். ஐ ம் ஃபைன் ஹவ் டூ யூ டூ” என்றவன் இருக்கையில் அமர

“யா ஐம் டூயிங் குட் யங் மேன். ட்ரைனிங் எப்படி இருந்துச்சு. எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா?”

“ஆமா சார் ட்ரைனிங் சூப்பரா போச்சு…. நெக்ஸ்ட் மந்த் ஜாயின் பண்ணனும் சார்”

“ஓ குட். என்ன திடீர்னு இந்த பக்கம் வந்திருக்கீங்க யூ வான்ட் எனி ஹெல்ப்”

“நத்திங் சார். ஹரிஷை பார்க்க வந்தேன் அப்படியே உங்களையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்”

சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு வந்தவன் ஹரிஷூடன் கேன்டினை நோக்கி சென்றான். இருவருக்குமான காஃபியை ஆர்டர் செய்து அதை வாங்கி கொண்டு அங்கிருந்த டேபிளில் இருவரும் அமர்ந்தனர்.

“ஹீம் அப்புறம் மச்சான் சிஸ்டரை பார்த்து பேசினியா? என்ன சொன்னாங்க”

“எங்கடா தூரத்துல இருந்து பார்த்தேன். பேசலை ஏன் அவளுக்கு என்னை நியாபகம் இருந்த மாதிரியே தெரியலைடா”

“லூசாடா நீ அவங்ககிட்ட பேசி பார்த்தா தான தெரியும் நியாபகம் இருக்கா இல்லை மறந்துட்டாங்களானு”

“நான் முயற்சி பண்ணாம இருந்திருப்பேனு நினைக்குறியா? இவ்வளோ நாள் அங்க இருந்தாலும் அவளை பார்க்குற சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. அன்னைக்கு தான் நானும் கொஞ்சம் ப்ரீயா இருந்தேன் சரி பேசணும்னு தான் அவ இருக்க பக்கம் போகலாம்னு நினைச்சேன் அப்போ அவ சிஸ்டர்கிட்ட ஏதோ சொன்னா அதுக்கு பிறகு இரண்டு பேரும் கிளம்பிட்டாங்க. என்னை என்ன பண்ண சொல்ற”

“சரி ஃபீல் பண்ணாத விடு மச்சி பார்த்துக்கலாம். எப்படியும் இன்னும் ஒரு மாசத்துல வேலையில் ஜாயின் பண்ணிருவல அப்போ கெத்தா போய் பேசுடா”

“ம்ம்ம் நானும் அதே தான் நினைச்சுட்டு இருக்கேன் பார்ப்போம். என் தலையில என்ன எழுதியிருக்குனு” என பெருமூச்சு ஒன்றை வெளியிட

“என்னடா விரக்தியா பேசுற எல்லாம் நல்லபடியா நடக்கும் டோன்ட் வொரி டா சியர் அப்”

“ஹம் ஓகே டா நான் கிளம்புறேன். ஈவ்னிங் ஃப்ரீயா இருந்தா வீட்டுக்கு வா”

“வீட்டுக்கா வேண்டவே வேண்டாம் நம்ம பாசக் கயிறு இருப்பாளே நான் வரலைப்பா. வேற எங்கேயாவது மீட் பண்ணலாம்”

“ஹா ஹா இரண்டு பேரும் இருக்கீங்களே அவ என்னடானா அவன் வரட்டும் இருக்கு கச்சேரினு சொல்றா? இங்க நீ அவளை கலாய்க்கிற “

“அண்ணன் தங்கச்சிகுள்ள ஆயிரம் இருக்கும் அதெல்லாம் நீ ஏன் கேட்குற” என பிரகாஷ் ராஜ் ஸ்டைலில் ஹரிஷ் பேச

“நான் கேட்கலைப்பா… நீங்க நடத்துங்க ஃபை டா” என்றவாறு அங்கிருந்து கிளம்பினான் இளா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அடுத்த நாள் பரபரப்பாக நேர்முகத் தேர்விற்காக கிளம்பிக் கொண்டிருந்த தனுவின் செல்போன் ஒலிக்க அதை அட்டென்ட் செய்தவள் “ ஹே வெண் இதோ கிளம்பிட்டே இருக்கேன் நீ அங்க போயிட்டியா”

“நான் வீட்டுல தான்டி இருக்கேன்… இன்னைக்கு ஏன் வண்டி சதி பண்ணிடுச்சுடி… டயர் பஞ்சர் நீ வர்ற வழியில என்னை பிக் பண்றியா..?”

“ஓகே..! நீ அங்கேயே வெயிட் பண்ணு… இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல வந்திடுறேன்…” என்றவாறு கிளம்பியவள் வெண்பாவின் வீட்டிற்கு சென்று அவளையும் கூட்டிக் கொண்டு ரிதம் டெக்கரேஷனை நோக்கி வண்டியை செலுத்தினாள்.

வழக்கம் போல ட்ராபிக் சிக்னல் சதி செய்ய சிறிது நேரம் காத்திருந்தவர்களின் அருகில் இடித்தாற் போல் ஒரு பைக் வந்து நின்றது. வண்டியை வந்து நிறுத்திய விதமே ஓட்டியவர்கள் நிதானத்தில் இல்லை என்பதை காட்டி குடுக்க, அவர்களிடம் இருந்து வந்த மதுவின் வாசனை அதை உறுதிப்படுத்தியது.

சிக்னல் விழுந்த மறுநொடி பைக்கின் பின்னால் இருந்தவன் வெண்பாவின் இடையில் கிள்ளிவிட்டு நகர அதில் திடுக்கிட்ட வெண்பா “பொறுக்கி நாயே..!” என முனங்க

“ஹேய் வெண்..! என்னடி யாரை திட்டுற..? “

“முன்னால போகுதே அந்த பொரம்போக்கை தான்… இடுப்புல கிள்ளிட்டு போறான்… நாசமா போறவன்…”

அதை கேட்ட மாத்திரத்தில் கோபத்தில் பொங்கியெழுந்த தனு வேகமாக சென்று அந்த பைக்கை ஓவர் டேக் செய்தவள் வண்டியிலிருந்து இறங்கினாள்.

அதை கண்டு பைக்கின் பின்னால் இருந்தவன் கோபமுற்று “ஏய் எதுக்கு எங்க பைக் முன்னாடி இப்படி நிறுத்திருக்க. நகருடி” என போதையில் உளற

“பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு மரியாதை இல்லாம வேற பேசுறியா உன்னைலாம் சும்மா விடக் கூடாது” என்றபடி அவனது காலரை பற்றியவள் ஓங்கி ஒரு அறைவிட அதில் கோபமுற்றவன்

“எவ்வளோ தைரியம் இருந்தா என்னையே கை நீட்டி அடிப்ப..?”

“ஆமாடா..! உன்னை கை நீட்டி அடிச்சது தப்பு தான்… கால்ல கிடைக்குறத கழட்டி அடிச்சிருக்கணும்… பொறுக்கி ராஸ்கல்!”

“இருடி… உன்னை என்ன பண்றேனு பாரு…” என்றபடி அவளை நெருங்கிய நேரம் அதற்குள் அங்கு வந்த ட்ராபிக் போலீஸ் “இங்க என்ன பிரச்சனை..? வண்டிய வேற நடு ரோட்டுல நிறுத்தி வச்சுருக்கீங்க…”என்று விசாரிக்க

நடந்ததை தனு அவரிடம் கூற அவர்களை கண்ணடித்தவர் இவர்களிடம் தான் பார்த்துக் கொள்ளுவதாகவும், நீங்க கிளம்புங்க என்று கூற தனுவும் வெண்பாவும் அங்கிருந்து கிளம்பினர்.  

“ஹேய் தனு..! என்னடி இப்படி பண்ணிட்ட ..? அவனுகளை பார்த்தாலே ரொம்ப மோசமானவங்க மாதிரி இருக்கு…. சனியன்கள் எப்பிடியோ போறாங்கனு விட்ருக்கலாம்டி…”

“என்னடி வெண் இப்படி சொல்ற..? இவனை மாதிரி பொறுக்கிங்க பண்றதை பார்த்துட்டு சகிச்சுகிட்டு அமைதியா போறதால தான் சுதந்திரமா எனக்கென்னனு சுத்திட்டு இருக்காங்க… இதை மொத்தமா தடுக்க முடியா விட்டாலும் நம்மால முடியுற போது அடக்கி வைக்குறதுல தப்பே இல்லைடி…!” என்று கூற அதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாய் தலை அசைத்தாள் வெண்பா.

இந்த விஷயத்தை அழகாக கையாண்ட தனு, பின்னால் தனக்கு நடக்கப் போவதை எப்படி எதிர்கொள்வாளோ?

ரிதம் டெக்கரேஷன் என்ற பெயருக்கு ஏற்றார் போல் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு வடிவமைக்கப் பட்டிருந்தது. உள்ளே நுழையும் போதே ஒரு வித அமைதியையும் திருப்தியையும் தரும் அளவிற்கு அதன் அமைப்பு கவர்ந்தது.நேர்முகத் தேர்வு நடக்கும் ஹாலில் சென்று அமர்ந்தவர்கள் தங்களின் முறைக்காக காத்திருக்க முதலில் வெண்பா அழைக்கப்பட்டாள். அறைக்குள் நுழைந்தவளின் கண்கள் சஜனின் தோற்றம் கண்டு மனதிற்குள் சிலாகித்துக் கொள்ள அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்ததும் சஜன் தன் கேள்விக் கணைகளை தொடுக்க அதற்கான அவளது பதில்கள் சற்று திருப்தியை தர தேர்வில் செலெக்ட் செய்யப்பட, அடுத்ததாக தனுவின் முறை வந்தது.

“மே கம் இன் சார்” என்று அனுமதி வேண்டி நின்றவளின் குரலைக் கேட்டவன் உடலில் திடீர் மின்சாரம் பாய்ந்தது போல் சடென்று நிமிர கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல் தன் காதல் தேவதை எதிரே நிற்க இமைக்க மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது செய்கை கண்டு சற்று குழம்பியவள் மறுபடியும் சற்று உரக்க “மே கம் இன் சார்” என்று கேட்க, அதில் கலைந்தவன் “ஹோ ஐம் சாரி ப்ளீஸ் கம் இன்” என்றான்.

அவள் அமர்ந்ததும் தனது ஃபைலை நீட்ட அதை வாங்கியவனின் கண்களோ அதை சற்றும் பார்க்காமல் ஃபைலின் மறைவில் இருந்து அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

தன்னை யாரோ உற்று பார்ப்பது போல் தோன்ற அவனை பார்க்க முயன்றவளை கண்டு கொண்டவன் “மிஸ்.தனுஷா உங்க அகாடமிக் அன்ட் இதுக்கு முன்னாடி வேலை செய்த எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் நல்லாவே இருக்கு…”

“தேங்க் யூ சார்..!” என்று கூற அவளுக்கு சந்தேகம் வராமல் ஒப்புக்காய் ஒரு சில கேள்விகள் கேட்டவன் அவளை தேர்வு செய்தான்.

அதன் பிறகு அவளை அனுப்ப மனம் இல்லாதவனாய் “என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கா” என்று கேட்க

“யெஸ் சார்..! எங்க காலேஜ் கான்வகேஷனுக்கு வந்திருந்திங்களே…! நியாபகம் இருக்கு சார்…”

“மறந்திருப்பீங்களோனு நினைச்சேன்… எனிவே கன்ங்கிராட்ஸ் அன்ட் வார்ம் வெல்கம் டு அவர் ரிதம் டெக்கரேஷன்ஸ்…!” என்று கை குலுக்க

அவனின் மனசாட்சியோ “அடப்பாவி! இதுக்கு முன்னாடி கூட ஒரு புள்ளைய செலெக்ட் பண்ணுனியே அவளுக்கு ஒரு வாழ்த்தாவது சொன்னியாடா” என்று கேட்டு வைக்க

“ஹலோ..! அந்த பொண்ணு என் கம்பெனியில வேலை பார்க்க போகுது…. பட் தனு மை ஸ்வீட் ஹார்ட் கோயிங் டூ பி எ ஓனர் ஆஃப் திஸ் கம்பெனி இன் ப்யூச்சர் காட் இட்” என்று பதில் கூற

“அடேங்கப்பா..! எனக்கு பதில் சொல்லும் போதும் இங்கிலீஷாடா அவ்வ்வ்வ்வ்வ்வ்” என்றபடி ஒளிந்து கொண்டது மனசாட்சி.

பதிலுக்கு தானும் மரியாதையாய் கை குலுக்கியவள் அவனது அறையை விட்டு வெளியேறினாள். அவள் வெளியேறியதும் தன் இருக்கையில் இருந்து எழுந்துவன் தன் உயர்த்திற்கு எம்பி குதித்து யாகூ என்று கத்தி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான்.

சந்தோஷம் தாளாமல் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்த தன்னை கண்டு அவனுக்கே வெட்கமாகி போனது. யார் சொன்னது பெண்களின் வெட்கம் மட்டும் தான் அழகு என்று?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நேர்முகத் தேர்வை முடித்துக் கொண்டு தனு வீட்டை அடைந்த போது மணி மதியம் ஒரு மணியை தொட்டிருந்தது. அன்று தியாவிற்கு கல்லூரி விடுமுறை ஆதலால் வழக்கம் போல் தன் தந்தையின் மாடியில் படுத்துக் கொண்டு தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்பா நீங்க தியா சாப்பிட்டீங்களா..? அண்ணன் எதும் போன் பண்ணனா..?” என்றபடி தன் கைப்பையை டேபிளில் வைத்துவிட்டு அவர்களுக்கு அருகில் சென்று அமர்ந்தாள்.

“சாப்பிட்டாச்சு தனு… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் போன் பண்ணி கேட்டேன்… தாம்பரம் வந்துட்டதா சொன்னான்…. நீ போய் சாப்பிடு..!” என்று தியா சொல்லவும் கதவு தட்டப்படவும் சரியாய் இருந்தது.

நான் போய் யாருனு பார்க்குறேன் என்றபடி தாமோதரன் எழ முயற்சிக்க “அப்பா நீங்க இருங்க நான் போய் யாருனு பார்க்குறேன்” என்று கூறிவிட்டு சென்றாள் தனு.

கதவை திறக்கவும் தன் அண்ணன் அங்கு நின்றிருப்பதை கண்டவள் “அப்பா அண்ணன் வந்தாச்சு” எனக் குரல் கொடுத்தபடி அருணை அணைத்துக் கொள்ள, தானும் தங்கயை அணைத்து விடுவித்தவன் உள்ளே சென்றான்.

“வாடா அருண் ஐஸ்கிரீம்..! இப்போ தான் சார்க்கு வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா..? “ என்றபடி அவனது தோளை தட்டி தியா பேச

“ஏன் பாப்பா என்னைக்காவது அண்ணன்னு கொஞ்சமாவது மரியாதை குடுக்குறியா நீ” தாமோதரன் செல்லமாக கண்டிக்க

“விடுங்கப்பா அவள் மரியாதை கொடுத்தா தான் எனக்கு ஒரு மாதிரி இருக்கும்” என்று கூற

தனுவும் தியாவும் ஒருசேர “அண்ணன்டா” வீரம் பட ஸ்டைலில் கூற அதைக் கேட்டு தாமோதரன் சிரித்துவிட, மற்றவர்களும் சிரித்துக் கொண்டனர்.

மதிய உணவை தனுவும் அருணும் முடித்துக் கொண்டு ஹாலில் வந்து அமர அருண் தன் தந்தையிடம் “அப்பா ஈவ்னிங் நாம எல்லாரும் வெளிய எங்கேயாவது போயிட்டு வரலாமா?” என கேட்க,

குதுகலமான தனுவும் தியாவும் “போலாமே” என்றதும் தாமோதரனும் சரி என்பதாய் தலை அசைத்தார். முதலில் கோவிலுக்கு செல்வது என்றும் பின்னர் உணவகம் செல்லலாம் என முடிவு செய்தனர்.

@@@@@@@@@@@@@@@@

மாலையில் வெளியே செல்ல கிளம்பியவர்கள் கால் டாக்ஸியை புக் செய்து அதில் பயணம் செய்தனர். முதலில் கோவிலுக்கு சென்றவர்கள் கடவுளை தரிசித்துவிட்டு அப்படியே கடற்கரைக்கும் சென்றனர்.

நேரம் போவது கூட தெரியாமல் இயற்கையின் எழிலையும், அங்கே குழுமியிருந்த மக்கள் கூட்டத்தையும் நடை வண்டி கடைகளும் விற்கப்படும் தின்பண்டங்களின் வாசனையும் குளிர் காற்றும் மனதிற்கு இதம் அளிக்க அதை ரசித்துக் கொண்டிருந்தனர்.

இரவு கவிழத் தொடங்கிய நேரம் அங்கிருந்து கிளம்ப பிரபல உணவகத்தை அடைய அதுவரை சுற்றுப்புறத்தை கவனிக்காது இருந்தவள் அப்போது தான் அந்த உணவகத்தை அடையாளம் கண்டு கொள்ள செய்வதறியாது திகைத்தாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தனது கபோர்டில் இருந்து தனது நாட்குறிப்பை எடுத்த தியா மனதில் “எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது…? கொஞ்ச நாளாய் நான் எதிர் கொள்கிற எல்லா விஷயமும் உன்னை தான்டா நியாபகப்படுத்துது… நானும் இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது மறக்கணும்னு நினைக்கும் போதெல்லாம் நீ மறக்க கூடாது அவனையே நினைச்சு தவிக்கணும்னு சொல்ற மாதிரியே விதி என்னை உன் நினைவுகளை நோக்கி இழுத்துட்டு போகுது… “என்று வேதனைப்பட்டவள் தன் உணர்வுகளை கவிதையாய் வடித்தாள்.

சூரிய மொட்டு அவிழும்

நேரம் பரவும் ஒளிக்கற்றையாய்

உன் நினைவுகள்..!

காலை நேர தேநீர்

அது தரும் தித்திப்பாய்

உன் நினைவுகள்..!

மாலை நேர மயக்கம்

அதில் தெளியாததாய்

உன் நினைவுகள்..!

நிலவு காயும் வேளை

விடியத் துடிப்பதாய்

உன் நினைவுகள்..!

நித்தமும் உன் நினைவில் நான்..!

செனோரீட்டா வருவாள்.

Advertisement