Advertisement

மீண்டும் மீண்டும் ஜமுனாவின் பேச்சில் சிக்கந்தர் வாய் அடைத்து போக… முன்பு இன்று தனக்கு ஏமாற்றமா என்று நினைத்திருந்தவனுக்கு..ஏமாற்றம் இல்லையடா…ஜாக் பார்ட் தான் என்பது போல் ஜமுனாவின் பேச்சும் செயலும் இருக்க..
சிக்கந்தரும் பேச்சை வளர்க்காது… “அப்போ அந்த பாலை எடுத்துக் கொடுக்குறது.” என்று தன் பேச்சை தொடர…
ஜமுனாவோ சிக்கந்தருக்கு கொடுக்காது தான் முதலில்  குடித்து விட்டு மீதி பாலை அவனுக்கு கொடுத்தாள். அதை ஒரு நமுட்டு  சிரிப்போடு  வாங்கியவன் அந்த பாலை அருந்தி விட்டு சொம்பை அவளிடம் கொடுக்கும் போது…
“முதல்ல பாலை எனக்கு கொடுத்துட்டு தானே நீ குடிக்கனும்…?” என்று கேட்டான்.
    
  
அதற்க்கு ஜமுனா…  “ஒரே சொம்பில் இருவரும் பால் அறுந்த சொல்வது..இனி அனைத்தும் இருவரும் ஒரு சேர இருக்க தான்..அதாவது மத்தவங்க எச்சில யாரும் சாப்பிட மாட்டாங்க..
ஆனால் கணவன் மனைவிக்குள் அது எல்லாம் கிடையாது என்று தான் இருவரையும் குடிக்க சொல்வது அதை நான் குடித்து நீங்க குடிச்சா என்ன.. ஜீ…?இல்ல நீங்க குடிச்சி நான் குடிச்சா என்ன…? எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இருவரும் எச்சிலும் ஒன்னா தான் ஆகப்போகுது.” என்று ஜமுனா சொன்னதை கேட்டதும்..
இவ்வளவு நேரமும் அவள் பேச்சை கேட்டுக் கொண்டு  இருந்த சிக்கந்தரின் மனதில் தோன்றியதை கேட்கலாமா…?வேண்டாமா…? என்று  நினைத்திருந்தவன்…
“ஏன்டீ பார்க்க அம்மாஞ்சி போல இருந்துட்டு இதில் எல்லாம் படு விவரமா தான்டி இருக்க… சும்மாவா சொன்னாங்க  எனக்கு எல்லாம் தெரியும் என்பது  போல பேசுறவங்களோ கூட நம்பிடலாம்.. ஆனா எனக்கு ஒன்னுமே தெரியாது என்பது போல லுக் விடுறவங்கல நம்ப கூடாதுன்னு…” என்று சொல்லி விட்ட.. சிக்கந்தர் பின் தான்..
“அய்யோ..உனக்கு நீயே ஆப்பு  வெச்சிட்டியேடா….  அவ விவரமா இருந்தா உனக்கு தானேடா நல்லது…ஒன்னும் தெரியாதவளுக்கு சொல்லி கொடுத்துட்டு பிறகு வாழ்க்கை ஆராம்பிக்கும் நிலையிலேயா நீ இருக்க…” என்று அவனுக்கு அவனே திட்டிக் கொண்டு பயந்து போய் ஜமுனாவை பார்த்தான்.
ஆனால் அவன் பயந்த்திற்க்கு அர்த்தமே இல்லை என்பது போல்..ஒரு மயக்கும் பார்வையை பார்த்த ஜமுனா… “எனக்கு விவரம் இருக்கா…?இல்லையான்னு…?என் புருஷன் கிட்ட தான் சொல்ல முடியும்…அது தான் அதை பத்தி ஒன்னும் பேசாம இருந்தேன்..
இப்போ நீங்க  என்  புருஷன் அதான் பேசுறேன்… அதுவும் இல்லாம  எங்க ஊரில் எல்லாம் என் வயசுல கல்யாணம் முடிஞ்சி இந்நேரம் கையில் இரண்டும் வயித்துல ஒன்னும் என்று வெச்சிட்டு இருப்பாங்க…நானே லேட்..இதுல நீங்க விவரம் படு விவரம் என்று சொல்லிட்டு இருக்கிங்க…” என்ற அவள் பேச்சில் சிக்கந்தரின் வாய் தன்னால்…
“லைட்டை ஆப்.. பண்ணிடவா…?” என்று கேட்டான்.
“அது எதுக்கு…?” என்ற ஜமுனாவின் மறு பேச்சில் இப்போது சிக்கந்தர் மொத்தமாக ஆப் ஆகி..
“என்னடி லைட் ஆப் பண்ணினா தானே….அடுத்து…” என்று அதற்க்கு அடுத்து என்ன  என்று பேச கூசியவனாய் தன் பேச்சை பாதியில் நிறுத்த..
“அது தான் ஏன்…?” என்ற சிக்கந்தரின் பேச்சை ஜமுனா முடித்து வைக்க..
மீண்டும் சிக்கந்தர் தான்… “எப்படி…லைட்டில்…” என்று குழம்பி போனான்.
“எனக்கு லைட் ஆப் பண்னா பயம் தான் வரும்…” என்று சொல்லிக் கொண்டே ஜமுனாவின் கை பெட்ச்சிட்டின் மீது சென்றது.
“அதை ஏன் எடுக்குற…?” என்று சிக்கந்தர் கேட்டதற்க்கு…
“நீங்க லைட் ஆப் பண்ணா தான் ஆச்சின்னு இருக்கிங்க..எனக்கு லைட் ஆப் பண்ணா பயம்  தான் வரும். வேறு எதுவும் வராது என்று சொல்லிட்டேன்..அதுக்கு எப்படி…?எப்படின்னு…?இழுத்துட்டு இருந்தா..நான் இழுத்து போர்த்திட்டு தூங்க வேண்டியது தான்.” என்று ஜமுனா சொல்லி வாய்  மூடும் முன் தன் உதட்டை கொண்டு அவள் வாயை அடைக்க செய்தவன்.
“என்ன பேச்சுடீ பேச்சு எல்லாம் பலமா இருக்கு இருடீ..” என்று அவள் பேச்சில் பேசியதை அவன் செயலில் நிருபித்தான்.
விடிந்தும் விடியாத காலை பொழுதாகியும் அவர்களின் கூடல் தான் முடிந்த பாடில்லை..பேச்சில் இருந்த வேகம் ஜமுனாவின் செயலில் இல்லாது போக..கலைத்து இருந்தவளின் முடி கோதி விட்டு…
“ரொம்ப படுத்திட்டேனாடி…” என்று கொஞ்சியவனின் கைக்குள் தன்னை புகுத்திக் கொண்டவள்…
“இல்ல ஜீ..ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..”
அவர்களின் அந்த சந்தோஷ நிலையிலேயே கார் லான்ச்சும் வந்து விட..முதல் இரவுக்கு எடுத்த புடவையையும் நகைகளையும்  போட்டுக் கொண்டு ஜமுனா அங்கும் இங்கும் அலைந்ததை பார்த்து..
“ஏன்டி பாவாவோட மூட மாத்துற…? இந்த புடவையும் இந்த நகையும் எப்போ போட சொன்னா எப்போ போட்டுட்டு அலையுற டீ..” என்று சொல்லிக் கொண்டே அக்கம் பக்கம் பார்த்து விட்டு யாரும்  இல்லை என்று உறுதி படுத்தியவனாய் அவள் இதழை கையில் பிடித்து இழுத்து விட்டான்.
“இந்த புடவை நகை எல்லாம் அன்னைக்கு  நான் போட்டு இருந்தா அதை கழட்டவே காலை வரை ஆகி இருக்கும்.” என்று சொன்னவள் பின்…
தன் இதழ் தொட்டுக் கொண்டு இருந்த விரலை கடித்து விட்டு… “நான் கூட நீங்க அப்படியும் இப்படியும் பார்க்குறத பார்த்துட்டு வேற ஏதோன்னு நினச்சிட்டேன்.” என்று சொல்லி விட்டு தன் பாட்டுக்கு தன் வேலை பார்க்க சென்றவளை ஞே..என்று பார்த்துக் கொண்டு நின்றவனின் முதுகை தட்டிய கிஷோர்..
“வேலைய பாருடா வேலைய பாரு… “ என்று சொன்னதோடு நில்லாது..
“நீ என் அக்கா மகளை ரொம்ப படுத்துற போல..நான் சொன்னனே இல்லையா சின்ன பெண் பார்த்து நடந்துக்கன்னு.பாரு ஒரு வாரத்தில் சோர்ந்து போய் தெரியிறா..
நான் இன்னைக்கு நீ என்ன சொன்னாலும் வர வேற்ப்பு முடிஞ்ச உடனே கைய்யோட ஜமுனாவை என் கூட கூட்டிட்டு போறேன்… ஒரு வாரம் வெச்சிட்டு தான் நான் அனுப்ப போறேன்.” என்று கிஷோர் சொன்னதும்..
அவனை ஒரு பார்வை பார்த்த சிக்கந்தர்…” சரி.” என்று சொல்லி விட்டு சென்றவனின் முதுகை இப்போது கிஷோர் தான் ஞே என்று பார்க்க வேண்டியதாயிற்று.
போகும் போது சிக்கந்தர் இதை தான் நினைத்துக் கொண்டான்.. “அவள் வந்தா கூப்பிட்டு போங்க..” என்று…
அந்த கார் லான்ச்சில் பெரிய மனிதர்கள் அனைவரும் வந்து இருந்தனர்…அனைவருக்கும் சிக்கந்தர் ஜமுனாவை மனைவி என்று மிக பெருமையாக அறிமும் படுத்தினான்.
அவர்கள் பேசும் சரளமான ஆங்கில உரையாடலுக்கு பதில் கொடுக்க  முடியாது கொஞ்சம் கொஞ்சம் திக்கி திணறி  பேசியவள் பின் தன் கணவனிடம்..
“நான் இப்படி பேசுவது உங்களுக்கு அவமானமா இருக்கும்லேங்க…” என்று கேட்டதற்க்கு சிக்கந்தர்..
“நீ இப்படி என் கிட்ட கேட்பது தான் என்னை அவமானம் படுத்துது ஜாமூன்…நம் அறிவு மொழியில் இல்லை..நீ எந்த அளவுக்கு விசயத்தை தெரிஞ்சி வெச்சி இருக்க..அதில் தான் இருக்கு உ.ன் கிட்ட  எனக்கு போதுமான அறிவு இருக்கு…
அதுக்கு என்று நீ இப்படியே இருன்னு சொல்லலே… உனக்கே விருப்பம் இருந்து நான் இது கத்துக்கனும் தெரிஞ்சிக்கனும் என்று நீ நினச்சா மட்டும் சொல்..நான் அதுக்கு உண்டான ஏற்ப்பாட்டை பார்க்கிறேன்.” என்ற சிக்கந்தரின் பேச்சில் மயங்கியவளாய்..
‘ஜமுனா… “ இப்போ என் விருப்பம் நான் அம்மாவா ஆகிறதில் தான் இருக்கு பாவா…” என்று அவன் மார்ப்பில் மீது சாய்ந்துக் கொண்டு அவள் கொஞ்சிய கொஞ்சலில்…
“இனி எனக்கு அது தான்டி முழு நேர வேலை.” என்று தன்னவளை தன்  மீது சாய்த்துக் கொண்ட சிக்கந்தரின் மனது நிறைந்து விட்டது..
மாலையில் உறவு முறை அனைவரும் வரவேற்ப்புக்கு வந்து விட்டனர்..திருமணத்தை எளிமையாக செய்தவன் வர வேற்ப்பை பணத்தை அள்ளி தெளித்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்..
அனைவரும் ஒன்று போல்… “சிக்கந்தர் தொழிலிலும் சரி திருமணத்திலும் சரி லேட்டா வந்தாலும் லேட்டாஸ்ட்டா வந்துட்டான்…” என்பது தான்..
சிக்கந்தரின் குடும்ப உறுப்பினர் அனைவருமே வந்து இருந்தனர்..கல்யாணத்தில் பேசிய அந்த சிற் சிறு பேச்சு கூட இல்லாது இருந்த இடம் தெரியாது வாழ்த்தி விட்டு சென்று விட்டனர்..
சிக்கந்தர் பக்கத்தி நின்றுக் கொண்டு இருந்த ஜமுனாவை அனைவரும் முன் கட்டி அணைத்தவன்….  “தனக்கு பிடித்த பெண்ணும்..தன்னை பிடித்த பெண்ணும் மனைவியாய் கிடைத்து விட்டால் எவ்வயதிலும் இளமையோடு இருக்கலாம்.” என்று சொன்னான். 
சிக்கந்தர் தன் அன்னையை  அவர் மீது இருக்கும் அன்புக்காக பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும், தன் தந்தை மீது இருக்கும் அன்புக்காகவும்… தன் கடமைக்காகவும் மகன் என்ற கடமையை செய்தான்.
          இக்கதை நிறைவு பெற்று விட்டது… அடுத்த கதையோடு உங்களை சந்திக்கிறேன்..அதற்க்கு முன் கொஞ்சம் லீவ் வேண்டும்.
         

Advertisement