Advertisement

அத்தியாயம்….23…2
காலை ஆறு ஏழரை  முகூர்த்தம் என்பதால் விடியற்காலை நான்கு மணிக்கே ஜமுனாவை எழுப்பி செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் செய்ய ஆராம்பித்து  விட்டனர். திருமணம் மிக எளிமையாக ஒரு சின்ன பார்ட்டி ஹாலில் மிக முக்கியமானவர்களுக்கு  மட்டுமே அழைப்பிதழ்  கொடுத்ததால் நூறு பேர் மட்டுமே திருமணத்திற்க்கு  கலந்துக் கொண்டனர்..
அந்த முக்கியமானவர்களில் சிக்கந்தரின் குடும்பத்தினரோடு ஜமுனாவின் அத்தை குடும்பத்தையும் கிஷோர் அழைப்பிதழ் கொடுத்து அழைத்திருந்தான்.
அத்தை அவர்களின் மகன்கள்  சூழ வந்தவர்கள் வந்த ஆட்களின் வசதியை பார்த்து கிஷோரிடம்… “அது தான் இங்கே செட்டில் ஆயிட்டலேப்பா..அங்க இருக்க அந்த  மதிப்பு இல்லாத காஞ்ச நிலத்த வெச்சி நீ என்ன செய்ய போற…? அதை எங்களுக்கே கொடுத்துடேன்.. சும்மா எல்லாம் வேண்டாம்.. அதுக்கு துட்டு கொடுத்தே வாங்கிக்கிறோம்.”
எப்போதும் அடிதடியில் இறங்கும் ஜமுனாவின் அத்தை  மும்பையில் கிஷோரின் வசதியையும் ஜமுனாவுக்கு கணவனாய் வர இருக்கும் சிக்கந்தரின் செல்வாக்கையும் பார்த்து பணிந்து பேரத்தில் இறங்கினார்.
“மதிப்பு இல்லாத நிலமா…? அந்த நிலத்தோட  மதிப்பு இப்போ என் கிட்ட இருக்கும் அனைத்து சொத்து மதிப்பை விட அதிகமானது.” என்று சொன்னவனின் பேச்சில் குழம்பி போய் பார்த்தவர்களிடம்…
“அந்த நிலம் என் மாமாவோட உசிர்..அந்த நிலம்  என் அக்காவோட நிம்மதி…அந்த நிலம் என் அக்கா மகளின் அடுத்து பெயர் சொல்லும் இடம்..அப்படின்னா அந்த இடம் என் கிட்ட இருப்பதை விட மதிப்பானது தானே…” என்று கிஷோர் கேட்டு வைக்க..
திரும்பவு ஜமுனாவின் அத்தை… “அப்போ அதை தர மாட்டிங்களா…?” என்று மீண்டும் ஒரு கொக்கியை மாட்ட…
“இந்த கல்யாணத்திற்க்கு உங்கல எதுக்கு அழச்சேன் தெரியுங்களா…?உங்களுக்கே தெரியும் நீங்க ஜமுனாவை மனதார வாழ்த்த மாட்டிங்கன்னு…உங்களுக்கு தெரிஞ்சது எனக்கும் தெரியும்..
அப்போ எதுக்கு கூப்பிட்டேன்.. அதுவும் ப்ளைட் டிக்கட் செலவு செய்து…? ஊருல அந்த சின்ன வயசுல இருந்த கிஷோர் இப்போ நான் இல்ல..அதை உங்களுக்கு காட்ட தான் உங்களை இந்த திருமணத்திற்க்கு அழச்சது..அதே போல் ஜமுனாவை கல்யாணம் செய்துக்கிறவனும் சாதரணமானவன் கிடையாது..அதை காட்டவும் தான் நான் உங்களை கூப்பிட்டேன்..
அங்கு எப்போ வேணாலும் ஜமுனாவும் மாப்பிளையும் வருவாங்க..அவங்க மேல உங்க கண்ணு எந்த வகையிலும் படக்கூடாது பட்டா.. அவ்வளவு தான். அதை நான் சொல்லாமலேயே உங்களுக்கு புரிய வைக்க தான் உங்களுக்கு இந்த அழைப்பு..” என்று  கிஷோர் ஜமுனாவின் அத்தையிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே..
பட்டு வேஷ்டியும் பட்டு சட்டையும் சர சரக்க ஒரு கைய்யால் அந்த பட்டு வேஷ்டியின் நுனியை பிடித்த வாறே… கிஷோரை நோக்கி வந்து கொண்டு இருந்த சிக்கந்தர் வழியில் காண்போகளை  சிரித்த முகத்துடன் ..
“வாங்க…” என்ற ஒரு தலையசைப்போடு வந்து கொண்டு இருந்தவனின் அந்த தோரணையும்..பிறந்ததில் இருந்த சிக்கந்தரின் முகத்தில் ஒரு பணக்காரத்தனம் தென்படும்.. அதோடு இப்போது கூடுதலாய் எதையோ சாதித்த மகிழ்ச்சி..எதையோ என்ன ஜமுனாவின் மனதை வென்ற மகிழ்ச்சியோடு இப்போது அவளை கரம் பிடிக்கும் நேரம் நெருங்க நெருங்க..அவன் முகத்தின் புன்னைகை விரிந்துக் கொண்டே சென்றதால்..
அது இன்னும் அவன் முகத்திற்க்கு  கூடுதல் மெருக்கூட்ட…அவன் வந்ததில் ஜமுனாவின் அத்தை குடும்பம் மட்டும் அல்லாது அங்கு வந்திருந்த அனைவரும் ஒன்று போல் நினைத்தது… நமக்கு எல்லாம் வயது ஆக ஆக முகத்தில் சுருக்கம் வரும் இவனுக்கு என்ன தேஜஸ் கூடுது… என்று  நினைத்துக் கொண்டனர்..
தன்னை பார்த்த கண்களில் தெரிந்த பிரமிப்பை  பார்த்து சிக்கந்தருக்கு ஏனோ ஒரு கர்வம் தலை தூக்க..அப்போது தான்  ஐய்யர் மேடைக்கு புடவை வாங்க பெண்ணை அழைக்க குனிந்த தலை  நிமிராது நடந்து வந்த ஜமுனாவை பார்த்தவன் அப்படியே நின்று விட்டான்.
மாப்பிள்ளை வீட்டு சார்பாக புடவையை ஷ்யாமும்  அவன் மனைவி சுபத்ராவும் கொடுக்க அதை  அவர்கள் காலில் விழுந்து பணிந்து பெற்றுக் கொண்ட ஜமுனா அந்த தட்டை தூக்க  பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த நிஷா அந்த தட்டின் மொத்த சுமையும் தான் பிடிக்கும் படி தட்டின் கீழ் வைத்துக் கொண்டாள்.
தட்டை சும்மா பிடித்து நடந்தாலும்  தடுமாறியவளை  மேடையின் கீழ் நின்றுக் கொண்டு இருந்த சிக்கந்தர் இதை  பார்த்து விட்டு அவளிடம் ஓடியவன்… 
அவளையும் கூடவே அவள் கையில்  தாங்கியிருந்த தட்டையும் சேர்த்து பிடித்தவன் சுபத்ராவை நோக்கி முறைத்து விட்டு…
“தட்ட வாங்கிட்டு பக்கத்தில் இருக்க  யாரு கிட்டவாவது கொடுத்துட வேண்டியது தானே…இவ்வளவு கணம் கணக்கிறதை  நீ தான் எடுத்துட்டு வரனுமா…?” என்று கடிந்துக் கொண்டான்..
ஜமுனா ஏதாவது சொல்வாள் என்று  பார்த்து இருக்க அவளோ தன்னை பாராது அவளின் அந்த பக்கம் நின்றுக் கொண்டு இருந்த நிஷாவையே பார்த்திருக்க…
“நான் பேசிட்டு இருக்கே..நீ உன் அட்டம்மாவையே பார்த்துட்டு இருக்க…” என்று திரும்பவும் கேட்க..
“டேய்..டேய் தட்டு கீழே என் கை இருக்குடா..அதை முதல்ல விடு.” என்று நிஷா சொல்லவும் தான் அந்த பெரிய தாம்பூலத்தட்டின் கீழ் அவனுக்கு  கைய் தட்டு பட…
குனிந்து பார்த்தவன் ஜமுனா கை அந்த தட்டில் மேல் புரம் சும்மா நான் பிடித்து இருக்கேன் என்பது போல் கை வைத்திருந்தாள். நிஷா தான் அந்த தட்டை தூக்க முடியாது  தூக்கி கொண்டு இருந்தாள்.
சிக்கந்தர் பெரிய ஹீரோ போல்  புது புடவையில் தட்டு தடுமாறியவளை வந்து  தாங்கி பிடிக்கிறேன்  என்று பக்கத்தில் அந்த தட்டின் முழு கணத்தையும் தாங்கிக் கொண்டு இருந்த நிஷாவை தள்ள பார்த்தான்.
பாவம்  நிஷா பக்கத்தில் பெரிய தூண் போல் ஒரு பெண் மணி நின்றுக் கொண்டு இருந்ததால் அவரை வைத்து கொஞ்சம் தடுமாறினாலும், நிலையாக தன் காலை தரையில் ஊன்றி நின்றுக் கொண்டாள்.
நிஷா சொல்லவும் தான் நிலையை புரிந்துக் கொண்ட சிக்கந்தர்.. “சாரி பாபி நான்  தான் ஜாமூன் விழ போறான்னு…” என்ற சிக்கதரின் வார்த்தையை அங்கு வந்த கிஷோர்..
“என் டாலிய விழ வைக்க பார்த்த…” என்று பேச்சும் சிரிப்புமாய்  எளிமையாக நடந்தாலும் ஒரு சின்ன சின்ன  நகை சுவையிலும்…. சிக்கந்தர்..ஜமுனாவின் காதல் பார்வையிலும்… நடக்க வேண்டிய அனைத்து சடங்கும் ஜமுனா வீட்டின் முறைப்படி எந்த  வித குறையும் இல்லாது ஜமுனா வெண்பட்டு உடுத்தி…
சிக்கந்தர் ஜமுனாவுக்கு தாலி கட்டும் போது அவன் கட்டிய பட்டு வேட்டியை இருகாலிக்கும் நடுவில் விட்டு தெலுங்கு முறைப்படி கட்டியதோடு தலைக்கு தலைப்பாகையும் சுற்றி  தான் ஜமுனாவின் கழுத்தில்  தாலியையும் கட்டினான்.
தருணின் மனைவி… “நம்ம முறை இது இல்லையே…” என்று ஏதோ சொல்ல வந்தவளையும்..தருண் ஷ்யாம் ஒரு சேர..
“உஷ்..” என்று அடுத்து பேசாது இனி வாய் திறப்பது என்றால் அது சாப்பிட மட்டும் தான் என்பது போல் வாய் திறக்காது சாப்பிட்டவர்கள் போகும் போது..
ஷ்யாம்.. “என்ன சிக்கந்தர் கல்யாணத்தை ரொம்ப சிம்பிளா செஞ்சிட்ட…..?” என்று  மட்டும் கேட்டான்.
அதற்க்கு  சிக்கந்தர்… “அடுத்த வாரம் கார் லான்ச் அன்னைக்கு தான் எங்கள் திருமண வரவேற்ப்பு இருக்கு கூப்பிடுறோம் வாங்க.” என்று கை கூப்பி அவர்கள் கொடுத்த மரியாதைக்கு பதில் மரியாதை செய்து அனுப்பினான்.
கடைசியாக போகும் போது மட்டும் தருண்… “வர்மா க்ரூப் வீழ்ச்சி அப்பாவே வீழ்வது போல..கொஞ்சம் யோசி.” என்று சொன்னான்.
அதற்கும் சிக்கந்தர்… “ஏன் வீழ்வானேன் எனக்கு கொடுக்க வேண்டியதற்க்கு உங்க ஷேரை வெளியில் விற்க ட்ரைப் பண்றது எனக்கே வித்துட்டு போயிடுங்க.. அதுவும் அந்த ஷேர் எல்லாம் என் பெயரில் இருந்தால் அப்பா ஆத்மா இன்னும் சந்தோஷமா தான் இருக்கும்.” என்று சொன்னான்.
கடைசியாக அவர்கள் அந்த நிலைக்கு தான் வந்து ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்தனர்…மற்ற ஷேர்  ஓல்டர்கள் எல்லாம் நீங்களே உங்க ஷேரை விற்பது வெளியில் தெரிந்தால் நம்ம பங்கு மார்க்கெட்டில் நம்ம ஷேர் விழாதா…? என்று கேள்வி எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
என்ன செய்வது என்று புரியாது தான் கடைசி முயற்ச்சியாய் சிக்கந்தரிடம் தருண் கேட்டது.. அவன் இவ்வாறு சொல்லவும்..
“அதே செய்து விடலாம்.” என்று சொன்னது ஷ்யாம் வர்மாவே…
“சிக்கந்தருக்கு என்றால் குடும்பத்தில் ஒருத்தருக்கு கைய் மாற்றி விடுவது போல் ஆகிவிடும். வெளியில் யாருக்கும் தெரியாது..வருடாந்திர மீட்டிங்கில் எப்போதும் போல் நாம் இருக்கலாம்..சிக்கந்தர் வந்தாலும் பெரிய விசயமா அனைவருக்கும் தெரியாது….நம்ம பெயரும் அடிப்படாது.” என்று முடிவு செய்தவர்களாய்..
தருணும் ஷ்யாமுன்… “அடுத்த முறை சென்னைக்கு வரும் போது பார்மால்ட்டீஸ் முடித்துக் கொள்ளலாம்.” என்று சொன்னதும்..
“ஒகே…” என்று  அவர்களிடம் கை குலுக்கி விடை கொடுத்தான்..
நீ எனக்கு விரோதியும் இல்லை. உறவும் இல்லை. அந்த முறையில் தான் சிக்கந்தர் அவனின் குடும்ப உறுப்பினர்களை  பற்றிய மதிப்பிடாய் தன்  மனதில் வைத்திருந்தான்.
அதுவும் இல்லாது இன்று  அவர்களிடம் சாதரணமாய் பேச மற்றொரு காரணம்..எந்த  நிலையிலும் இன்றைய நாளின் இனிமையை கெடுத்துக் கொள்ள  அவன் மனம் விரும்பவில்லை.
இன்று அல்லாது வேறு ஒரு நாள் தருண் அப்பா பெயர் வர்மா க்ரூப் என்று பேசியதற்க்கு என்னை கொல்ல பார்க்கும்  போது  இது எல்லாம் எங்கு போனது என்று கேட்டு இருப்பான்..
ஆனால் இன்றைய தினம் அதை நினைக்கும் போதே அவன் உடலின் மொத்த பாகமும் ஏதோ செய்தது…அவன் அதை உணரும் போது …அவன் மனமே… ‘என்னடா  டீன் ஏஜ் என்று நினைப்பா…’ என்று சொல்ல தான் செய்தது…
ஆனால் என்ன வயது இருந்தாலும் வாழ்க்கையின் முதல் அனுபவம்…அது   என்றும் ஸ்பெஷ்ல் தானே..அதை நினைக்கும் போதே அவன் மனதில் புன்னைகை தவழ வீட்டில் நுழைந்தவன் கண்ணில் ஜமுனா மாட்டாது போக ஜமுனா அறைக்கு சென்று பார்த்தவன் அங்கும் இல்லாது போக
‘எங்கு போனாள்…?’ என்று  நினைத்துக் கொண்டு கிஷோர் வீட்டின்  ஹாலில் அமர்ந்து விட்டான். தன் கையில் சில பேப்பர்களை வைத்துக் கொண்டு அங்கு வந்த கிஷோர்…
“என்ன சிக்கந்தர் இங்கு உட்கார்ந்துட்டு  இருக்க..உன் ரூமில் போய் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே…” என்று கேட்டதும் சிக்கந்தர் உடனே..
“ஜாமூன் அங்கு தான் இருக்காளா…?” என்று சொல்லிக் கொண்டே தான் அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்து எழ பார்த்தவனின் கை பிடித்து அமர வைத்த கிஷோர்..
“பொறு..கொஞ்சம் பொறு..நீ சொன்னது போல இன்றைய நிகழ்வு உன் வீட்டில் தான்… அதுக்கு உண்டான நல்ல நேரத்துக்கு இன்னும் மூன்று மணி நேரம் இருக்கு…” என்று கிஷோர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சிக்கந்தர்..
“அதற்க்கு….” என்று கேட்டான்.
“அதுக்கு நீ கொஞ்சம் அடங்கி உட்கார்…நிஷா நீங்க சாப்பிடுறதுக்கு ஏதோ   ஸ்பெஷலா  செய்ய சொல்லி சாந்திக்கிட்ட பேசிட்டு இருக்கா..ஜமுனா  எங்க ரூமுல் தான் இருக்கா…”
சிக்கந்தருக்கு  ஜமுனா எங்கு இருக்கா என்று தெரிந்த உடன் மீண்டும் எழ பார்த்தவனை இப்போது கை பிடிக்காது முறைத்து பார்த்தவன்..
“கொஞ்சம் அடங்கி உட்கார மாட்டியாடா…?” என்று கிஷோர் சிக்கந்தரை பார்த்து கேட்கும் வேளயில் காலையில் மாப்பிள்ளைக்கு தோழன் போல் தான் உடுத்தி இருந்த ஷெல்வானியை மாற்றது அதே கெட்டப்பில் வந்து நின்ற சித்தார்த்..
சிக்கந்தரை பார்த்து… “இப்போ நான் தான் ஹீரோ போல் தெரியிறேன்.” என்று சொன்னவனுக்கு பதில் அளிக்காது..
சிக்கந்தர்  கிஷோரிடம்.. “உங்களுக்கு இந்த வயதில் இவ்வளவு பெரிய பைய்யன் இருக்கான்..ஆனால் எனக்கு….?” என்று கேட்டான்..
சித்தார்த்துக்கு சிக்கந்தரின் பேச்சு புரியாது… கிஷோரை பார்த்து… “என்ன டாட்..?” என்று கேட்க..
“அது ஒன்னும் இல்ல இன்னைக்கு அவனோட நீ அழகா இருந்தேன்னு அவனுக்கு கொஞ்சம் பொறாமை..நீ போடா..” என்று மகனை அனுப்பி வைத்து விட்டு…
“மூன்று மணி நேர தாமதத்தில் ஒன்னும் பெருசா ஆயிட போறது கிடையாது. அலையாதே …எங்க வீட்டு அம்மாய கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுடா…” என்று சொன்னவன்..
“பார்த்துடா…சின்ன பெண் பயந்துட போறா…” என்று பாவம் கிஷோர் கெஞ்சும் படி நிலைக்கு ஆளாக்கி விட்டே..
ஜமுனாவு சிக்கந்தரும் தங்கள் வீட்டுக்கு அதாவது சிக்கந்தரின் தந்தை வாங்கி கொடுத்த இல்லத்திற்க்கு சென்றனர்..தங்களின் வாழ்க்கையை தொடங்க.. கூடவே தங்களோடு கிளம்பி வந்த நிஷாவை சிக்கந்தர் கேள்வியாக பார்க்க..
“ஒரே ஒரு  நாள் என் டாலி  உன் வீட்டில் இருப்பா..நாளைக்கே இங்கு வந்துடுவாடா…” என்று  சிக்கந்தரின் அனுமதி பெற்று தன் மனைவியை அவர்களோடு அனுப்பி வைத்தான் கிஷோர்…
அடுத்த அத்தியாயம்..அதாவது 23…3..தான் கடைசி அத்தியாயம்… போன அத்தியாயத்தில் தவறாய்..23..4..என்று போட்டு விட்டேன்…
இன்னொன்று அடுத்த அத்தியாயம் படிக்கும் போது கொஞ்சம் கூச்சமாய் இருந்தால் காதை மூடிக் கொள்ளவும்..ஏன்னா நம்ம ஜாமூன் அடுத்த பதிவில் பேசும் பேச்சு அப்படியாக தான் இருக்கும்…

Advertisement