Advertisement

அத்தியாயம்….23…1
ஜமுனா அழுதுக் கொண்டே… “அப்பாவை  எனக்கு அவ்வளவா நியாபகம் இல்ல ஜீ…என் சின்ன வயசுலேயே அப்பா இறந்துட்டார். அம்மா தான் எல்லாம் எனக்கு..அதே போல் தான் அம்மாவுக்கு எல்லாமே நான் தான். அப்பா இறக்கும் போது அம்மாவுக்கு இருபத்தி மூன்று வயசு தான்.
பாக்க ரொம்ப நல்லா இருப்பாங்க…என் கை பிடிச்சிட்டு தான் எங்கு என்றாலும் போவாங்க..அப்போ மத்த ஆம்பிள்ளைங்க அம்மாவை பார்த்து பேசுன பேச்சு எனக்கு அப்போ புரியல..ஆனா போக போக அதனோட அர்த்தம் புரிஞ்சப்ப ரொம்ப கஷ்டம்மா ஆயிடுச்சி ஜீ…
இதே நிலை ஆம்பிளைங்களுக்கு வந்தா…அவங்க கல்யாணம் செய்துக்குறாங்க..அவங்க பசங்கல வளர்க்குற பொறுப்பும் இரண்டாம் கல்யாணமாகி வந்த பெண்ணுக்கு இருக்குன்னு சொல்றாங்க.. ஆனா பெண்களுக்கு ..அப்படி இல்ல…
சரி தனியா கஷ்டப்பட்டு உழச்சி தன் மானத்தோட வாழனும் என்று நினச்சாலும்…இந்த பேச்சு..அதுவும் ஆம்பிள்ளைங்களோட இந்த பெண்கள்…பெண்களுக்கு பெண்கள் தான் முதல் எதிரியே ஜீ..ஏன்னா அம்மாவை  ஆம்பிளைங்களோட பெண்கள் தான் அதிகம் பேசி இருக்காங்க..
ஜீ இப்போ புது துணி வாங்கினா நாம அப்படியே தானே கட்டிப்போம்..ஆனா எங்க அம்மா அதை கட்டாம இரண்டு தடவை தண்ணில போட்டுட்டு தான் கட்டுவாங்க.” 
ஜமுனா பேச பேச அவளின் பேச்சை தான் கேட்கிறேன் என்பது போல தலை கோதிக் கொண்டு இருந்த சிக்கந்தர் ஜமுனாவின் இந்த   பேச்சு புரியாது போகவே தன் கை விரல் ஜமுனாவின் தலை கோதாது அப்படியே நின்று விட..
சிக்கந்தரின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு  இருந்த ஜமுனா அந்த முடி கோதலால் உண்டான அந்த ஆறுதல் இல்லாது போக அவன் முகத்தை  நிமிர்ந்து பார்த்தவள்..சிக்கந்தரின் யோசனையான முகத்தை பார்த்து விட்டு…
“ஏன்னா அம்மா புது புடவை கட்டிட்டு வெளியே போனா…மத்த பெண்கள்..பார்த்தியா புருஷன் செத்துட்டான் ஆனா நாள் ஒரு புது புடவை கட்டுறா…” என்று சொல்வாங்க..
அம்மா நாளு ஒன்றுக்கு எல்லாம் புதுசு கட்ட மாட்டாங்க ஜீ..அம்மா பணத்தை எப்போவும் பார்த்து பார்த்து தான் செலவு செய்வாங்க..அம்மா வயலில் வேலை  பார்ப்பதால் புடவை சீக்கிரத்தில் போயிடும்..
அப்போ புதுசு எடுத்து தானே ஆகனும்…அதை கூட  விலை கூடுதல்ல எடுக்க மாட்டாங்க மலிவா தான் எடுத்துப்பாங்க.. அப்பா இல்லாததால்.. எப்போவும் எல்லாத்திலும் கவனம் தான் அவங்களுக்கு..
அதே கவனம் எனை மீது வளர்ப்பதிலும் இருக்கும்.. அப்பா இல்லாத பெண் அது தான் எப்படி சுத்திட்டு இருக்கா என்றூ யாரும் ஒரு வார்த்தை தப்பா பேசிட கூடாதுன்னே என்னை அவங்க தனியா எங்கும் விட்டது கிடையாது.
பள்ளி விட்டா வீடு. பின் கல்லூரி..அதை விட்டா அம்மா கூட வயலுக்கு போவேன் அவ்வளவு தான். அம்மா என் இருபது வயதில் இருந்தே மாப்பிள்ளை பார்க்க ஆராம்பிச்சிட்டாங்க ஜீ…ஆனா ஒன்னு கூட முடியல..என் அத்தையும் அவங்க பசங்களும் ஏதாவது இடம் முடிவது போல இருந்தா பேசி கலச்சி விட்டுடுவாங்க.
அம்மாவுக்கு எனக்கு ஒரு கல்யாணம் செஞ்சி பார்க்கனும்.அது தான்  அவங்களோட ஒரே சந்தோஷம் ஜீ…. எனக்கு தெரிஞ்சி அவங்க மனசு நிறஞ்சி சிரிச்சி நான் பார்த்தது இல்ல ஜீ..
எப்போவும் ஒரு கவனம் அவங்க கிட்ட இருந்துட்டே இருக்கும். இப்போ வீட்ட தாழ்ப்பாள் போட்டுட்டேன் என்று சொன்னா கூட அவங்களே அது போய் பார்த்தா தான் அவங்களுக்கு நிம்மதி..
ஒரு சில சமயம் அவங்க தான் தாழ்ப்பாள் போட்டு இருப்பாங்க..ஆனா அவங்களுக்கு ஒரு சந்தேகம் வந்துடும் நாம் போட்டோமா இல்லையான்னு… திரும்பவும் போய் பார்ப்பாங்க.. இப்படி எல்லாத்திலும் பயந்து போய் தான் இருப்பாங்க..
நான் கூட எதுக்கும்மா இப்படி பயப்படுறிங்கன்னு கேட்பேன்..உனக்கு  என் கவலை புரியாது புரியவும் வேண்டாம் என்று அவங்க சொல்லும் போதே அவங்க கண்ல இருந்து கண்ணீர் வரும் ஜீ…  என் இருபது வயசுக்கு மேல அவங்க வாயில் இருந்து வரும் வார்த்தை உன்னை ஒருத்தன் கையில் பிடிச்சி கொடுத்துட்டா  போதும் என்பதே… அந்த நாள் நாளை ஜீ..
எங்க அம்மா எனக்கு எது நடந்தால் சந்தோஷம்… நிம்மதி… என்று சொல்லிட்டு இருந்தாங்களோ..அந்த நாள் நாளை ஜீ..ஆனா அதை பார்த்து சந்தோஷப்பட அம்மா இப்போ இல்ல.. அவங்க வாழும் போது தான் நிம்மதியா வாழல..சாகும் போதாவது அந்த நிம்மதி அவங்களுக்கு கிடச்சி இருக்கலாம் ஜீ.” என்று சொல்லி தேம்பி அழுதவளை என்ன சொல்லி தேற்றுவது என்று  புரியாது சிக்கந்தரே கொஞ்சம் தடுமாறித்தான்  போய் விட்டான்.
அவள் சொல்வது அனைத்தும் உண்மை தானே..ஒரு பெண் இளமையிலேயே விதவையாகி விட்டால்..அப்பெண்ணை இந்த சமூகம்  எப்படி நடத்துக்கிறது. அது தான் பழமொழி இருக்கிறதே வேலி இல்லாத பயிர்..என்று ஆண்கள் நினைக்க..
பெண்களோ கணவன் இறந்து விட்டால் அவள் புது உடை உடுத்தினால் அவள் தவறானள்.. ஆண்கள் யாரிடமாவது பேசினால் அதுக்கு ஒரு கதை..என்று இருக்க அதை பார்த்து வளரும் அவர்களின் குழந்தை இதோ இது போல் தான்  ஆகும்..
சிக்கந்தர் இந்த சமுகத்தை மனதில் சாடினாலும், அவளுக்கு எப்படி பேசினால் இந்த நினைவில் இருந்து விடுபடுவாள் என்று யோசித்தவன் பின்…
“ஜாமூன் உங்க அம்மா ஐந்து வருஷமா பார்த்துட்டு இருந்தாங்க..அப்போ முடிஞ்சி இருந்தா என் கிட்ட இருந்து தப்பிச்சி இருக்கலாம். நீ அதை நினைத்து தானே அழுற உண்மையே சொல்…” என்று கேலியாக பேசி அவளின் மனநிலையை மாற்ற முயன்றான். அவனின் அந்த முயற்ச்சி நன்றாகவே வேலை செய்தது.
 சாய்ந்திருந்த மார்பின் மீதே குத்திய ஜமுனா… “நான் ஒன்னும் அப்படி நினைக்கல..நீங்க அம்மா இருக்கும் போதே மாமய்யா கூட எங்க ஊருக்கு வந்து இருக்க கூடாதா… அப்படி மட்டும் வந்து இருந்தா நம்ம கல்யாணத்தை பார்த்துட்டாவது அவங்க போய் இருப்பாங்க. கடைசி காலத்திலாவது அவங்களுக்கு நிம்மதி கிடைக்கும்.” என்று சொன்னவளின் பேச்சி..இது உண்மை என்று எடுத்துரைக்க..
ஜமுனாவின் இந்த பேச்சில் ஏனோ சிக்கந்தருக்கு அந்த அளவுக்கு உவப்பானதாய் இல்லை என்று  தான் சொல்ல வேண்டும். முதலில் தான் கோமாவில் படுத்து இருந்தது.
அவள் சொன்னது போல் முன்பே நான் கோமாவில் இருந்து எழுந்தாலும் இவள் அம்மா எனக்கு கட்டிகொடுத்து இருப்பார்களோ..அதை நினைத்தவனின் மனது பட பட என்று அடித்துக் கொள்ள..
“ஜாமூன் அது நடந்ததா…?இது நடந்திருந்தால்..? என்று நாம நினைப்பதோடு நாளை  நடக்க இருக்கும் நம்ம கல்யாணத்தை பத்தி நினை ஜாமூன்.. உங்க அம்மா இது போல் சோகமா இருப்பதை விரும்புவாங்கலா…?அதுவும் நாளை கல்யணத்தை வெச்சிட்டு…?” என்று கேள்வி கேட்டு அவளின் முகத்தை தன் இரு கை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு கேட்டவன்.
அவள் இல்லை என்று தலை ஆட்டும் போது அவளின் அந்த கன்னம் அவன் உள்ளங்கையில் அழுத்தமாய் படியும் போது சொல்ல முடியாத ஒரு இதம் மனதில் எழ…
அவள் முகத்தில் இருந்து தன் கை எடுத்தவன் அவளின் கன்னத்தில் தன் இதழை மெல்ல ஒரு ஒத்தடம் போல் கொடுத்து எடுத்து விட்டு..
“ஜாமூன் உனக்கு எப்படியோ..ஆனால் எனக்கு இந்த திருமணம் ரொம்ப ரொம்ப முக்கியம்டா… எப்படி சொல்வது..எனக்கு சின்ன வயசு இருந்தே வாழ்க்கை வாழ..
எப்போவும் ஏதாவது வருத்தம் இருந்தாலும் அதையே நினச்சிட்டு நான் ரொம்ப  பீல் எல்லாம் செய்ய மாட்டேன். எனக்கு எங்க அம்மா மேல அப்போவிலிருந்தே கொஞ்சம் வருத்தம் தான்.
இதோ நீ சொன்னியே எங்க அம்மா எனக்காக தான் வாழ்ந்தாங்கன்னு..ஆனா  எங்க அம்மா அப்படி  இல்ல..என்னை பொறுத்த வரை அவங்க வாழ்க்கை அவங்க அவங்களுக்காக மட்டும் தான் வாழ்ந்தாங்கன்னு தான் சொல்லனும்..
அதை எல்லாம் சில சமயம் யோசிப்பேன் தான்..ஆனால் அந்த யோசிப்பு எல்லாம் கொஞ்ச நேரம் தான்.. என்னை பொறுத்த வரை வாழ்க்கை வாழ தான்..
அந்த வாழ்க்கையை அதை இதை நினச்சி நாம வேஸ்ட் செய்ய கூடாது என்பது தான் என் எண்ணம்… ஒவ்வொரு நாளும் நாம் உணர்ந்து வாழனும். நம் வாழ்க்கையில் ஒரு நாளும் வீண் செய்ய கூடாது என்று நினச்சிட்டு இருந்த என்னை பதிமூன்று வருடம் நீண்ட வருடத்தை என்னை படுத்தே வீணாக்கி விட்டேன்.
எழுந்த எனக்கு தெரிஞ்ச விசயம் என் வீட்டு ஆளுங்களே என்னை கருணை கொலை செய்ய சொன்னதை..அதுவும் அதில் என் அம்மாவும் அடக்கம் என்று தெரிஞ்சதும்…” என்று  சொல்லிக் கொண்டே வந்த சிக்கந்தர் அந்த கடைசி வார்த்தையில் கண் மூடிக் கொள்ள..அதில்  இருந்து வீழ்ந்த அந்த கண்ணீர் துளி சொன்னது அவன் மனதால் எவ்வளவு அடி வாங்கி இருக்கிறான் என்று…
சிக்கந்தரின் கண்ணீரை துடைத்து விட்ட ஜமுனா… “ஜீ…” என்று  அவன் கன்னத்தை தட்ட..தட்டிய அவளின் கையை அப்படியே  தன் கன்னத்தில் பதிய வைத்துக் கொண்ட சிக்கந்தர்…
“எனக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்ததிற்க்கு காரணம் பொக்கிஷமா நீ எனக்கு கிடைக்க தானோன்னு நினச்சிட்டு தான் நான் இப்போ எல்லாம் என்னை தேத்திட்டு இருக்கேன் ஜாமூன்…நாளைய நாளை நான் ரொம்ப  வருடமா எதிர் பார்த்துட்டு இருக்கேன்.” என்று சொன்னவனின் பேச்சில் குழம்பி போய் ஜமுனா பார்க்க..
“ஆமா ஜாமூன் பதிமூன்று  வருடம் முன்னவே என் பிரன்ஸ்சுங்க எல்லாம் கேள்  பிரன்ஸ் அவங்க்குள்ள நடந்தது எல்லாம் என் கிட்ட சொல்லும் போது..என் வயசா  இல்ல என் உடம்பின் ஹார்மோன் எக்கசக்கமா கன்னா பின்னா என்று சுரக்குதான்னு தெரியல..எனக்கு அப்போ ஒரு பெண் வேண்டும் என்று தோனுச்சி..நிச்சயமும் செய்தேன்..ஆனா அடுத்து.. “ என்று உதடு பிதிக்கியவன்..
“ஜாமூன் அப்போ ஏதோ ஒரு பெண் தேவை என்று நினச்சவனுக்கு மனதுக்கு பிடித்த பெண் துணை தேவை அது தான் வாழ்க்கை அது தான் காதலுன்னு உன்னை எனக்கு கொடுத்து இருக்கார்… நாளைய நாள் எனக்கு ரொம்ப ரொம்ப  ஸ்பெஷலான நாள் ஜாமூன்.. அதில் நான் மட்டும் இல்லாம நீயும் சந்தோஷமா இருக்கனும்.
.புரியுதாடா…அப்புறம் ஜாமூன்…அந்த ஹார்மோன் அப்போ மட்டும் இல்ல இப்போவும் அதே அளவுல தான் சுத்துது…” என்று  சிக்கந்தர் சொன்னதும்..
ஜமுனாவின் கன்னம் தன்னால் சிவக்க.. கன்னம் மட்டும் சிவந்தால் போதுமா..உதடு என்ன பாவம் செய்தது என்று  சிக்கந்தர் நினைத்தானோ …என்னவோ… அவள் உதட்டின் மீது தன் உதடு வைத்து அதையும்  சிவக்க வைத்தே அங்கு இருந்து சென்றான்.
இக்கதை இதே அத்தியாயம் அதாவது இருபத்திமூன்றில்  இன்னும் இரு பதிவு..அதாவது…23…2..23…4 பதிவோடு முடிந்து விடும் நட்புக்களே…
 

Advertisement