Advertisement

அத்தியாயம்….15 
நிஷா திட்ட மிட்டப்படி அனைவரும் தயாராகி ஹாலில் காத்திருக்க..இந்த திட்டம் மிட்ட நிஷா மட்டும் தன் அறையில் இருந்து வெளியில் வராது..
நிமிடத்திற்க்கு ஒரு முறை… “இதோ..இதோ…வந்துட்டேன்.” என்று நிமிடத்திற்க்கு ஒரு முறை நிஷா குரல் மட்டும் வெளியில்  கேட்டது. இப்படியே நிறைய முறை கேட்ட நிஷாவின் குரலுக்கு பின் ஒரு வழியாக நிஷா தயாராகி வந்தவளை நம் ஜமுனா வாய் திறந்து அதிசயத்து பார்த்தாள்.
ஜமுனா நிஷாவை  ஜீன் போட்டு பார்த்து இருக்கிறாள். புடவை உடுத்தியும் பார்த்து இருக்கிறாள். ஏன் வீட்டில் இலகுவாக இரவு உடையிலும் பார்த்து இருக்கிறாள்.
இன்று முழு பாவடையும் அல்லாது பாதி பாவடையும் அல்லாது முட்டிக்கு கொஞ்சம் கீழ் இறங்கிய அந்த பாவடையையும்..அதன் மேல் பனியன் க்ளாத்தில் அந்த பாவடையின் தொடக்கத்தில்..
அதாவது இடுப்புக்கு தொடவா..தொடாது இருக்கவா என்ற நிலையில் இருந்த அந்த கையில்லா டீஷர்ட்டும்… சிறு பர்ஸ் என்று சொல்வதா…இல்லை ஹான் பாக் என்று சொல்வதா…இரண்டுக்கும் சேர்த்தி இல்லாது ஒரு கை பையை  கையின் முனையில் பிடித்துக் கொண்டு..
தன் முன் வந்து நின்ற நிஷாவை பார்த்து ஜமுனாவின் கண்கள் விரிந்து… “அட்டம்மா… இப்போ பார்த்தா நீங்க என்னோட வயசு கம்மி போல தெரியுது…உங்களுக்கு இது ரொம்ப நல்லா இருக்கு அட்டம்மா….” என்று சொன்ன ஜமுனாவின் பேச்சில் மகிழ்ச்சி இருந்தது.
இருந்தாலும் ஜமுனாவின் கண்களில் தெரிந்த ஏக்கத்தை பார்த்த சிக்கந்தர்… ‘இவளுக்கு இது போல் உடை உடுத்த ஆசையா….?’ என்று நினைத்தவன்…
“ஜாமூன் இப்போ நாம ஷாப்பிங் போறோம் தானே அப்போ  உனக்கும் இது போல் வாங்கிடலாம்.” என்ற அவனின் பேச்சில் மகிழ்ந்து ஜமுனா சிக்கந்தரை  பார்த்தவள்…
 பின் ஏதோ நினைத்துக் கொண்டு…… “இல்ல ஜீ எனக்கு இது போட்டா நல்லா இருக்காது. இது போல் உடை எல்லாம் போடுறவங்க போட்டா தான் நல்லா இருக்கும்.” இது தனக்கு போட்டால் நன்றாக இருக்காது என்ற சந்தேகத்தில்  ஜமுனா சிக்கந்தரிடம் சொன்னாள்.
“அது வாங்கி போட்டா தெரிஞ்சி போயிடுது நல்லா இருக்கா…?இல்லையான்னு….?” என்று சொன்னவன் அனைவரையும்  தன் காரில் அருகில் அழைத்து சென்றான்.
சிக்கந்தரின் புது காரை பார்த்த நிஷா… “புதுசா சிக்கந்தர்…?” என்று கேட்டவள்..பின் அவள் கேள்வி அடுக்கிக் கொண்டு வந்தது…
“என்ன பெனிபிட்…விலை…கிலோ மீட்டர் எவ்வளவு…?” என்று நிஷா சிக்கந்தரிடம் தொடர்ச்சியாக காரின்  விவரத்தை கேட்டுக் கொண்டாள்.
சிக்கந்தர் நிஷா கேட்ட கேள்வி அனைத்திற்க்கு பதில் சொன்னாலும், பார்வை மொத்தமும் ஜமுனாவிடம் மட்டுமே நிலைத்து இருந்தது. நிஷா கேள்வி கேட்கும் போது எல்லாம் ஜமுனாவின் பார்வை அதிசயத்து நிஷாவின் மீது விழுவதை குறித்துக் கொண்ட சிக்கந்தருக்கு அப்போது தான் ஒன்று உரைத்தது.
அது கிஷோரிடம் தான் ஜமுனா இப்போது எப்படி இருக்காளோ அப்படியே இருக்கட்டும் என்று சொன்னது தவறு என்று. அவன் அதை சொன்னதற்க்கு காரணம்..மற்றவர்கள் போல் நம்மை நாம் மாற்றிக் கொள்ள கூடாது…
நாம் நாமாகவே இருக்க வேண்டும் என்று தான் அவன் அப்படி சொன்னது.ஆனால் இப்போது ஜமுனாவின் முகத்தில் தெரிந்த ஏக்கத்தையும், நிஷாவை ஏதோ அதிசய பிறவி போல்  ஆச்சரியத்தோடு பார்ப்பதையும் பார்த்து..
இவளுக்கு இதை எல்லாம் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து அவள் சூழ்நிலையில் தெரிந்துக் கொள்ளாது விட்டு இருப்பாளோ…
அப்படி இருந்தால்….நாம் அதை அவளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது…? என்று நினைத்தவனாய்… காரின் ட்ரைவிங் சீட்டில் அமர போனவனின் முன் தன் கை நீட்டினாள் நிஷா…நிஷாக்கு கார் ஓட்டுவது என்றால் அவ்வளவு பிடித்தம்.
சிரித்துக் கொண்டே காரின் சாவீயை அவளிடம் கொடுத்து விட்டு  காரின் பின்  பக்க கதவை திறந்து அமர்ந்தவன் தன் பக்கத்தில் சித்தார்த்தை அமர வைத்துக் கொண்டு…
“ஜாமூன் உட்கார்.” என்று சிக்கந்தர் பின் பக்கம் அமர அழைப்பு விடுத்தான்.
நிஷாவின் மீது இருந்த அந்த பிரமிப்பு பார்வை கூடியவளாய் சிக்கந்தர் காட்டிய இடத்தில் அமர்ந்துக் கொண்டவளின் பார்வை  நிஷாவை விட்டு அங்கும் இங்கும் அகலவில்லை.
அதுவும் நிஷா அந்த போக்கு வரத்து நெரிசலில் அநாவசியமாக  அந்த காரை கைய்யாண்ட விதம்…அதுவும் கிஷோர் கேட்ட கேள்விக்கு…
தன் ஓரப்பார்வையை அவன் மீது செலுத்தி… “டாலி டாலி…” என்று அழைத்து அவன் தொடையில் தட்டியும்… ஏதோ கிஷோர் சொன்ன ஜோக்குக்கு…நிஷா அவன் பக்கம் தன் உடலை கொஞ்சம் நகர்த்தி அவன் தோள் மீது சாய்ந்து பின் மீண்டும் சரியாக அமர்ந்து காரை ஓட்டியது.
இதை எல்லாம் ஏதோ ஏழாம் அதிசயம் போல் ஜமுனா நிஷாவை பார்த்து இருந்தாள்.சிறிது நேரம் ஜமுனாவின் பார்வையை பார்த்திருந்த சிக்கந்தர் கணவன் மனைவி ஏதோ அவர்களுக்கே உள்ள பாழையில் பேசி அடித்துக் கொள்வதும் சாய்ந்து கொள்வதுமாய் இருக்க…
அப்போதும் தன் பார்வையை  மாத்தாது…அவர்களையே பார்த்திருந்த ஜமுனாவை பார்த்து பல்லை கடித்த சிக்கந்தர்…
“ஏய் ஜாமூன்..வெளியே பாரு.” என்று ஜமுனாவை மெல்ல கடிந்துக் கொண்டான்.
“ஆ,..” என்று சொல்லிக் கொண்டு சிக்கந்தரை பார்த்த ஜமுனாவிடம்… மீண்டும்… “அங்கு என்ன பார்வை….?” என்று மெல்ல கேட்டான்.
அப்போது தான் மீண்டும் நிஷா கிஷோரை பார்த்த போத நிஷாவின்  இடது கையை கிஷோரின் வலது கை பிடித்துக் கொண்டு ஒன்றோடு ஒன்று பிணைந்து இருப்பதை பார்த்து சட்டென்று தன் பார்வையை திருப்பிக் கொண்ட ஜமுனா…
சிக்கந்தரின் பக்கம் ஒரு தர்ம சங்கடமான  பார்வையை செலுத்தி தலை கவிழ்ந்தவளை  மேலும் சங்கடப்படுத்தாது தன் கைய் பேசியை எடுத்து அதில் பார்வை இட்டுக் கொண்டு இருந்தவனை..
நானும் இருக்கேன் என்பது போல் சித்தார்த்… “ஹீரோ நான் அங்கு உட்கார்ந்துக்குறேன்.” என்று சிக்கந்தர் அமர்ந்து இருந்த இருக்கையை காட்டி சொல்லவும்… 
ஒரு  நிமிடம் தயங்கி விட்டு பின் தன் மடி மீது சித்தார்த்தை அமர வைத்து அப்படியே கொஞ்சம் நகர்ந்து தான் இருந்த இடத்தில் சித்தார்த்தை அமர வைத்து விட்டு ஜமுனா பக்கத்தில் அமர்ந்த சிக்கந்தர்…
ஜமுனாவின்  பக்கம் பார்வையை செலுத்தாது, மீண்டும் தன் பேசியை எடுத்து நோட்டம் விட்டு கொண்டு இருந்தவனின் காதருகிலும் கழுத்து பகுதியிலும்  ஜமுனாவின் மூச்சு காற்று படவும்… உடல் எல்லாம் ஏதோ செய்ய   சட்டென்று அவள் பக்கம் பார்த்தான்…
இப்போது அவன் முகத்துக்கு மிக நெருக்கமாக ஜமுனாவின் முகம் மிக நெருக்கமாக இருக்க..இப்போது அவளின் அந்த மூச்சின் வெப்ப காற்று கழுத்துக்கு பதிலாக அவன் முகத்துக்கு இடம் மாறி..இன்னும் அவனை ஏதோ செய்தது…
தன் கண் இரண்டையும் இறுக மூடிக் கொன்டவனாய்…மெல்ல மிக மிக மெல்ல… “எ…ன்..ன… ஜாமூ…ன்.” என்று கேட்டான்.
அவனால் அந்த இரு வார்த்தை பேசுவதற்க்குள் அவன் தொண்டையில் இருந்து வார்த்தை வருவேனா என்று அடம் பிடித்து வார்த்தைகள் அவன் தொண்டைக்குள்ளையே சிக்கிக் கொண்டு  வார்த்தைகளும் அவனுக்கு தத்தளித்தே வெளி வந்தது.
“இல்ல நீங்க என்னை தப்பா நினைக்கலே தானே….?” என்று  சிக்கந்தர் போலவே மெதுவான குரலில் ஜமுனா கேட்டாள்.
‘என்ன தப்பு எதுக்கு தப்பு..?’ இப்போது எதுவும் அவன் மனதில் ஏறவில்லை.. அவள் பேச பேச அவளின் மூச்சு காற்றோடு அவள் வாயில் இருந்து வந்த அவளின் உமிழ் நீரின் மனமும் அவனை வந்து தாக்கியதில்…
‘இவ இப்படி பேசிட்டு இருந்தா என்னை எல்லோரும் தப்பா நினைக்கும் படி நான் ஏதாவது செய்து  விட போறேன்னு எனக்கு பயமா இருக்குடீ…’
இது வரை ஜமுனாவை ஜாமூன்..என்னடா என்னம்மா…அம்மாயி..என்று பேசிக் கொண்டும்…. நினைத்து கொண்டும் இருந்த சிக்கந்தர்… இப்போது முதன் முதலாய் உரிமையாக டீ என்று நினைத்து..அவள் மீது தன்னையும் அறியாது  சிக்கந்தரின் மனது ஆதிக்கம் செலுத்தியது…
இப்போது  சிக்கந்தரின் மனதில் கள்ள தனம் புகுந்து  எப்போதும் செய்யாத திருட்டு தனத்தை இப்போது செய்தான்…முன் இருக்கையில் அமர்ந்து இருந்த தன் ஜீயையும் பாபியையும் பார்த்தவன்..
அவர்கள் இருவரும் தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டு இணைந்த கைகளை விடாது இன்னும்  அதில் இறுக்கத்தை கூட்டி அவர்களுக்கே உண்டான ரகசிய பாஷையில் மெல்ல பேசிக் கொண்டு இருந்தனர்.
பின் சிக்கந்தர் தன் பக்கத்தில் அமர்ந்து இருந்த சித்தார்த்தை பார்க்க…அவன் வயதுக்கே உண்டான துடி  துடிப்பில் வெளியே சிரித்த வாறு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.
யாரும் தங்களை கவனிக்கவில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்ட சிக்கந்தர் இது வரை  போதிய இடை வெளி விட்டு ஜமுனாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த சிக்கந்தர் மெல்ல நகர்ந்து  ஜமுனாவே உணராத வகையில் அவள் பக்கம் இன்னும் நெருங்கி அமர்ந்துக் கொண்டான்.
ஜமுனாவும் அதை உணராது..தன்னை தெளிவு படுத்தி விட வேண்டும் என்று… “நான் அட்டம்மாவையும் மாமய்யாவையும், நான் அவங்க என்ன பண்றாங்கன்னு  பார்க்கல….” என்று ஜமுனா சொன்னதும்..
சிக்கந்தருக்கு அவளின் நெருக்கத்திலும், அவள் அறியாதன்மையின் பேச்சிலும். அப்படியே அவளை  அணைத்துக் கொள்ள துடித்த போதிலும் தன்னை அடியக்கியவனாய்…உதட்டில் ரகசிய புன்னகை சிந்தி…
“அப்போ எதுக்கு பார்த்த…? 
ஜமுனா போலவே அவனும் மிக மெல்ல பேசுவதாய்… முன் இருக்கையில் அமர்ந்து இருந்த இருவருக்கும் கேட்க கூடாது என்ற எண்ணித்திலும் அவன் ஜமுனாவின் முகத்துக்கு மிக மிக நெருங்கி கேட்டான்.
அந்த நெருக்கமான பேச்சில் சிக்கந்தரின் மீசை முடி அவள் கன்னத்தில் லேசாக தடவி சென்றது. அந்த லேசான தடவலே ஜமுனாவுக்கு குறு குறு என்று இருந்தது போலும்… அதனால்   கன்னத்தை  தன் கை கொண்டு துடைத்து விட்டவளாய்…
“அட்டம்மாவோட ட்ரஸ்… அவங்க என்னம்மா அழகா பயம் இல்லாம ஓட்டுறாங்க…அப்புறம் அப்புறம்… “ என்று ஜமுனா தயங்கி தயங்கி பின்…
“எங்க ஊருல எல்லாம் புருஷன் பெண்டாட்டினா கூட மத்தவங்க எதிரில் நெருக்கமா கூட நிக்க மாட்டங்க… “ என்று சொன்ன ஜமுனா…
தொடர்ந்து…. “ அப்புறம் எங்க ஊருல  ஆம்பிள்ளைங்க  மத்தவங்க முன்ன மனைவிக்கு மரியாதை எல்லாம் தர மாட்டாங்க..இன்னும் கேட்டா மத்தவங்க முன்னாடி மனைவியை அதட்டி உருட்டி பேசி…
அனைவரும் பார்க்க பாரு நான் ஆம்பிள்ளை என் பொண்ணாட்டிய எப்படி வெச்சி இருக்கேன் பாரு..என்று அவங்க மார் தட்டி சொல்லிட்டு இருப்பாங்க. ஆனா மாமய்யா மனைவி கார் ஓட்ட இப்படி இருப்பது…” என்று அடுத்து பேசாது அமைதியாகி விட்டவளை…
“ஏன் இது தப்புன்னு நினைக்கிறியா….?” எப்று சிக்கந்தர் கேட்டதும்…
“அய்யோ இது தப்பு இல்ல..தப்பு இல்ல..இது தான் பார்க்க நல்லா இருக்கு..எனக்கு இப்படி தான் பிடிச்சி இருக்கு….எங்க ஊர் ஆம்பிளைங்களே நினச்சாலே எனக்கு எரியும்.. பெண்டாட்டி அவங்க அடிமை மாதிரியே அவனுங்க நடந்துக்குறதை பார்த்து….” என்று ஜமுனாவின் பேச்சின் மூலம்..
சிக்கந்தர்  தெரிந்துக் கொண்டது இது தான்..அவளுக்கு அனைத்தையும் கற்க ஆசை…நிஷா போல் தைரியமான பெண்ணாய் இருக்க விரும்புகிறாள்..அதாவது  தைரியமாய்…  மாடலாய்.. இருக்க நினைக்கிறாள் என்று அவளை பற்றி  கணித்தவனாய்…
“உனக்கும் கார் ஓட்ட ஆசையா இருக்கா….?” என்று சிக்கந்தர் ஜமுனாவை பார்த்து கேட்டான்.
ஜமுனா உடனே … “இருக்கு..இருக்கு…” என்று கண்களில் ஆசை மின்ன அவள் சொன்ன வத்த்தில்…
“சரி ஓட்டலாம்.” என்று சிக்கந்தர் சொன்னதும்..
“எப்படி எனக்கு தான் ஓட்டவே தெரியாதே…” என்று அவள் உதட்டு பிதிக்கி சொன்ன விதத்தில்.
முதலில் இவளுக்கு கார் ஓட்ட கத்து கொடுக்கும் முன் வேறு ஏதாவது கற்று கொடுத்து விட போகிறேன் என்று  பயந்தவனாய் அவள் முகத்தில் படிந்திருந்த தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு…
“கத்துக்கிட்டா போச்சு….” என்று சொன்னான்.
“கத்துக்கிட்டாவா….” என்று இழுத்த ஜமுனா….. “யாரு கிட்ட….?” என்ற ஜமுனாவின் கேள்வியில்…
“கார் ரேசர் வீட்டில் ஒருவருக்கு இருவர் இருக்க  யாரு கிட்ட கத்துக்கிறதுன்னு கேட்குற….?” என்று சிக்கந்தர் கேட்டான்.
“நீங்க தான் உங்க வீட்டுக்கு போயிட்டிங்களே….” என்று ஜமுனா போயிட்டிங்களே என்று  சொல்லும் போதே கோபமாக சொன்னதை கேட்டவனின் மனது என்னவோ செய்தது.
“நான் போனது உனக்கு கோபமா….?” என்று ஏதோ  எதிர் பார்ப்பாய் சிக்கந்தர் ஜமுனாவிடம் கேட்டான்.
“ஆமாம் கோபம் தான்… அட்டம்மாக்கு கூட உங்க மேல கோபம்..மாமய்யா தான் அவன் வீடு தனியா இருந்தா தானே பெண் பார்க்க வசதியா இருக்கும்.. 
 பெண் வீட்டு ஆளுங்க பையன் வீடு பார்த்துட்டு பெண் கொடுக்கன்னு… மாமய்யா அட்டம்மாக்கிட்ட சொல்லி அவங்களை சமாதானப்படுத்துவாங்க…. அது என்ன ஜீ உங்கள பார்த்து கொடுக்காத பெண்ணை உங்க வீட்டை பார்த்து கொடுத்தா… அது எதில் சேர்த்தி….” என்று ஜமுனா சிக்கந்தரிடம் எதார்த்தமாய் தான் கேட்டான்..
ஆனால் அதை கேட்ட சிக்கந்தருக்கு தான் என்னவோ போல் ஆனது…ஆம் சிக்கந்தர் முதலில் ஜமுனாவை பார்த்தால் மட்டும் போதும் என்று தான் நினைத்திருந்தான்..இந்த நினைப்பு எல்லாம் காரில் ஏறி அமரும் வரை இருந்தது..
ஏன் சித்தார் நடுவில் அமர்ந்து ஜமுனாவும்  சிக்கந்தரும் இரு  புறம் அமர்ந்து வந்த போதில் கூட சிக்கந்தருக்கு இந்த நினைப்பு மட்டும் தான்…
ஆனால் சிக்கந்தர் நடுவில் அமர்ந்ததும்…ஜமுனாவின் மூச்சு காற்றில் கழுத்தில் பட்டதும் பாதி கவிழ்ந்தான் என்றால் அவள் மூச்சு காற்று முகத்தில் மோத முழுவதும் விழ்ந்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்..
சிக்கந்தர் ஜமுனாவிடம் பேசிக் கொண்டு வந்தாலும், மனது தன்னால்.. மன கணக்கு போடலாயிற்று… ‘எனக்கு என்ன குறை….? வயது கொஞ்சம் கூட…அதை விடுத்து எனக்கு என்ன குறை இருக்கு…?
வசதி இருக்கு..நான் நல்லா சம்பாதிக்க போறோன்னு ஜீக்கே நல்லா தெரியும்… அவர் எதிர்க்க தான் நான் திருமணம் செய்ய தகுதி உடையவானான்னு  மருத்துவ மரிசோதனையே செய்தேன்…
 நான் கேட்டா  அவர் அக்கா கூத்துற கொடுக்க மாட்டாரோ..என்று  அவன் மனதில் கணக்கிட்டு கொண்டு வந்தவன்..
ஜமுனா  அவங்க ஊர் கணவன்மார்களை பற்றி பேச பேச… ‘என் பங்காரு நான் அப்படி இருக்க மாட்டேன்டீ…நீ ஒன்று என்று சொல்ல ஆராம்பித்த உடனே…நான் தோப்புகரணம் போட ஆரம்பித்து விடுவேன் என் பங்காரு…’ என்று அவன் மனதில் எண்ணிக் கொண்டு வந்தவனுக்கு..
அவன் நினைத்ததில் ஒன்றான அவன் வசதியை ஜமுனா சொல்லி காட்டி அதை பார்த்து பெண் கொடுத்தால் என்ற அவள் பேச்சில்… மீண்டும் அவன் மனது பழைய நிலைக்கு தள்ளப்பட்டது.
  
 

Advertisement