Advertisement

அத்தியாயம் 25
“என்னடா சொல்லுற? நீங்க ரெண்டு பேரும் இன்னும் ஹனிமூன் போகலையா? உனக்கு கல்யாணம் பண்ண இருந்த அவசரத்துக்கு பத்து மாசத்துலையே புள்ளய பெத்து என் கைல கொடுப்ப என்று இல்ல நினச்சேன்” எஸ்தர் மகனை கோபமாக முறைத்தது மட்டுமல்லாது நக்கல் வேறு செய்தாள்.
பராவை திருமணம் செய்துகொள்ள என்னெல்லாம் பிரச்சினைகள் வந்தது. ஜெராட் எப்படியெல்லாம் பேசினான் என்று அன்னையான எஸ்தர் கூடவே இருந்து பார்த்தவள் தானே.
“கல்யாணமாகி இப்போதான் பத்துமாசமே ஆகுது. நான் என்ன பிரேக்னன்ட்டாவா இருக்கேன்” பரா தனக்குள் முணுமுத்துக் கொண்டவள் “அத்த நீங்க ஊருக்கு கிளம்பனும் என்று சொன்னீங்களே நீங்க கிளம்புங்க பசங்க இருப்பாங்க” குழந்தைகளை பார்த்துக்கொள்ளத்தான் ஐவி இருக்காளே. அவள் பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையில் கூறினாள் பரா.
மருமகளை முறைத்தவள் “போற இடத்துல பசங்கள பத்தியே யோசிச்சிகிட்டு இருக்கவா? முதல்ல போற பயணத்தை போயிட்டு வாங்க நாங்க அப்பொறமா ஊருக்கு போறோம். இல்ல சம்பந்தி” என்று ஜான்சியிடமும் கூற ஜான்சியும் சரி என்றாள்.
அவர்கள் பாத் நகரத்தை விட்டு எங்கும் செல்லவில்லை. பாத் நகரிலுள்ள புராதான இடங்களை தான் சுற்றிப் பார்த்து தேனிலவை கொண்டாட முடிவு செய்திருந்தனர். நகரத்தை விட்டு எங்கும் செல்ல முடியாததற்கு காரணமே ஜெராட் புதிதாக ஆரம்பிக்கும் கம்பனியாக இருக்க, பரா அப்படியென்றால் நாம் எங்கும் செல்ல வேண்டாம் மாளிகையில்லையே இருக்கலாம் என்றாள். இதற்காகத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேனா? என்ற கோபத்தில் தான் கூறினாள்.
“மாளிகைல கொஞ்சம் கூட பிரைவசி இல்லனு தாண்டி வெளிய போலாம் என்று முடிவு பண்ணோம். இப்போ நீ வரியா? இல்ல நான் தனியா போகவா?” கடுப்பில் உச்சத்தில் மிரட்டிய ஜெராட் “அம்மா வேற ஊருக்கு போகணும் என்று உசுர வாங்குறாங்க. இவ என்னடான்னா வர மாட்டேன்னு உசுர வாங்குறா” இவர்களை சமாளிப்பதே தனது வேலையென்று முணுமுத்தான்.  
“என்ன கூடவே கூட்டிட்டு போய் கம்பனி வேலைகளை பாக்குறதுக்கு, தனியாக போய் கம்பனி வேலைய பாருங்க” இவளும் பதிலுக்கு முறைத்தாள்.
“சொன்னா புரிஞ்சிக்கடி…” மிரட்டினவன் கெஞ்ச ஆரமித்தான்.
“என்ன சத்தம் போட்டு கத்தி எங்கம்மாவ இங்க வரவச்சி பஞ்சாயத்தை கூட்ட போறீங்களா?”  ஜெராட் இறங்கி வந்தததும் கோப முகம் மாறாமல் வம்பிழுத்தாள்.
கடுப்பில் இருந்த ஜெராடுக்கு பரா வம்பிழுப்பது புரியவில்லை போலும், “போடி… போ…” என்றவன் கோபமாக குளியலறைக்குள் புகுந்திருக்க, அறை கதவில் இருந்த விண்ட்சிம்ஸ் சத்தமெழுப்பியது.
திடுக்கிட்ட பரா “ஒஹ்… ஜெராட ஒன்னும் சொல்லக் கூடாதோ உனக்கு கோபம் வருதோ?” ஐவிதான் விண்ட்சிம்மை சத்தமெழுப்பி தான் இருப்பதை காட்டியிருப்பாளென்று எந்த பக்கம் பார்த்து முறைக்க வேண்டும் என்று கூட புரியாமல் முறைத்தாள் பரா.
இப்படித்தான் பரா தனியாக இருக்கும் பொழுது மட்டும் விண்ட்சிம்ஸ் சத்தமெழுப்ப, பரா பெரிதாக கண்டு கொண்டிருக்கவில்லை. என்று ஐவி இக்கட்டான சூழ்நிலையில் இவர்களை காப்பாற்ற இவர்களின் கண்முன் தோன்றினாளோ அதற்கு பின் விண்ட்சிம்ஸ் சத்தமெழுப்பும் பொழுதெல்லாம் இது ஐவியின் வேலையாக இருக்குமோ என்று சந்தேகப்பட ஆரம்பித்தாள்.
பரா சில நேரம் அதை கண்டு அதிர்ந்து, அடிக்குரலில் கத்தினாலும், அது ஐவிதான் என்று உணர்ந்த நொடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வாள். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக ஐவியோடு பேச்சு வார்த்தையும் நடாத்தலானாள். ஆனால் அச்சம் மட்டும் நீங்கவேயில்லை. 
“எதுக்கு விண்ட்சிம்ஸ ஆட்டுற? அது காத்துல ஆடுதா? நீ ஆட்டுரியான்னே புரியல” என்று விண்ட்சிம்மையே உற்று பார்த்தாள்.
விண்ட்சிம்ஸ் எந்த சத்தமும் எழுப்பவில்லை. ஒருவேளை எதேச்சையாக நிகழ்ந்தது என்று நினைத்தவள் “ஐவி நீ இங்கதான் இருக்குறியா?” என்று கேட்க விண்ட்சிம்ஸ் இசைத்தது.
பரா அதிர்ந்தாலும் “உன்னோட வேலை தானா? இங்கதான் இருக்குறியா? பாத்தியா இவர் பண்ணுறத? இதுக்கு நான் ஹனிமூன் போகணுமா? பேசாம மாளிகையையே இருக்கலாம்ல நான் ஹனிமூன் போகவா? வேணாமா?” என்று கேட்க எந்த பதிலும் வரவில்லை.
“அது சரி ஒரு கேள்வியை கேட்டா தானே பதில் சொல்லுவா? அவளால பேசவா முடியும்” தலையில் தட்டிக் கொண்டவள் “நான் ஹனிமூன் போகவா?” என்று தெளிவாக கேட்க, விண்ட்சிம்ஸ் மீண்டும் இசைத்தது.
ஐவிக்கு ஜெராடின் சந்தோஷம் தானே முக்கியம். அதனால் போகச் சொல்லி இருப்பாள் என்றெண்ணியவள் “உனக்கு என் மேல கோபம் இருக்கா?” என்று கேட்க விண்ட்சிம்ஸ் அசையவே இல்லை.
ஐவி தன்னை ஏற்றுக்கொண்டது பராவுக்கு நிம்மதியை கொடுத்தது. தான் இல்லாமல் வீட்டில் உள்ளவர்கள் இருப்பார்களா? போகணுமா? என்ற எண்ணமும் மனதை அலைக்கழிக்கவே ஜெராடிடம் போக வேண்டாம் என்றிருந்தாள்.
“பசங்கள, வீட்டை, பெரியவங்க எல்லாரையும் பாத்துக்கிறியா?” என்று மீண்டும் கேட்டாள். அதற்கும் விண்ட்சிம்ஸ் இசைத்தது.
“இது போதும். நான் சந்தோஷமா போயிட்டு வரேன்” என்றவள் சட்டென்று “நீ ஜெராட் கூட பேசிக்கிட்டா இருக்க?” என்று  கேட்டிருக்க, அங்கே அமைதிதான் நிலவியது.
“நீ என் கூட பேசினத அவர் கிட்ட சொல்லவா?” அதற்கும் அமைதிதான்.
பராவுக்கு ஐவி நினைப்பது புரிந்தது. ஜெராட் ஐவியோடு பேச ஆரம்பித்தால் தன்னிடம் நெருங்கி வரமாட்டான் என்று அவள் நினைக்கிறாள் அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே அவனை பார்த்தவாறு அமைதியாக இருந்திருக்கிறாள்.
எதிர்பாராத சூழ்நிலையில் ஆபத்து என்று வரும் பொழுது மட்டும் தன்னுடைய உயிரை காப்பாற்ற ஜெராடின் முன் தோன்றியிருந்தாள். அதன்பின்னும் அமைதியாகத்தான் இருந்தாள். தான் தனியாக இருக்கும் பொழுது மட்டும் தான் விண்ட்சிம்மை இசைத்து பேச முயன்றிருக்கிறாள். தான் தான் அதை புரிந்து கொள்ளாமல் அலறி, தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தேன்.
தான் ஜெராடை நெருங்க உதவி செய்ய வேண்டும் என்று அவள் எண்ணுகின்றாள். வழி தெரியாமல் இருந்தவளுக்கு விண்ட்சிம்ஸ் மூலம் வழி கிடைத்திருக்கிறது. ஜெராடோடு தான் சண்டை போடக் கூடாது என்றுதான் இப்பொழுது விண்ட்சிம்ஸ் இசைத்தது பேசியிருக்கிறாள்.
ஐவி என்றாலும் ஆவி தானே தான் அவளிடமிருந்து விலகி ஓட முயற்சி செய்ய அவள் தன்னிடம் மட்டும் உறவு வைத்துக் கொள்வதும் தங்களுக்கு உதவி செய்ய தான் என்று பராவுக்கு நன்றாகவே புரிந்தது.
“என்ன விண்ட்சிம்ஸ் கூட விளையாடி கிட்டு இருக்க?” என்றவாறு குளியலறையிலிருந்து ஜெராட் வர,
“என் புருஷன் ஹனிமூன் போக கூப்ட்டானே. சரி போலாம் என்று முடிவு பண்ணேன்” என்று புன்னகைத்தாள்.
“ஹேய் நிஜமாவா?” சந்தோஷத்தில் துள்ளி குதித்தவன் “இரு இரு… உன்ன நம்ப முடியாது. இன்னக்கி, இப்போவே கிளம்புறோம்” என்று உடனே துணிகளை பையில் அடுக்கியவன் அவளை அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.
செல்லும் பயணமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று சுற்றுலா தளங்களுக்கு பஸ்ஸில் பயணிக்கலாம் என்று முடிவு செய்தவன் பராவை அழைத்துக் கொண்டு பஸ்ஸில்தான் பயணித்தான்.
அதுவே அவளுக்கு வித்தியாசமான உணர்வை கொடுக்க, அனுபவிக்கலானாள்.
பயணம் ஆரம்பிக்கும் பொழுதே ஜெராட் “எதோ ஹனிமூன் வந்தோம் நாலு இடத்தை அவசரமா சுத்தி பார்த்தும் கிளம்பிட்டோம் என்று இல்லாம ரிலாக்ஸா தான் நம்ம பயணம் இருக்கணும். எந்த அவசரமும் இல்ல. நாம என்ன ஊர சுத்தி பார்கவா வந்தோம்” என்று வேறு முணுமுணுத்தான்.
அவனை முறைத்தவள் “அப்போ எதுக்கு வெளிய கூட்டிகிட்டு வந்தீங்க மாளிகைலயே இருந்திருக்கலாம்” என்றாள்.
“கோவிச்சுக்காதடி… நீ உன் வேலைய பாரு நான் என் வேலைய பாக்குறேன்” என்று இவன் ஒரு அர்த்தத்தில் சொல்ல
“ஆபீஸ் வேலை தானே” என்று இவள் அவனை வம்பிழுத்தாள்.
முதல் நாளே ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பல தடவை மறு சீரமைக்கப்பட்ட பாத் அபே {Bath Abbey} ஆலயத்தை காண பராவை அழைத்து சென்றான் ஜெராட்.
நகரத்தின் மையத்தில் அமைந்திருப்பதால் பாத்தின் இருதயம் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் பெரியதொரு ரோமன் குளியல் தொட்டியும் இருப்பதை ஆச்சரியமாக பார்த்தாள் பரா.
ரோம பேரரசனான சீசரின் வாழ்க்கை வரலாறை அடங்கிய திரைப்படங்களில் பாத்திருந்தவளுக்கு, அந்த கலாசாரமும், ஆடை, அலங்காரமும் வாழ்க்கை முறையும் ஒருநொடி கண்முன் வந்துதான் போனது.
அன்று நாள் முழுக்க, புல்டெனி பாலத்தில் நடை பயணம் மேற்கொண்டு உணவருந்தியவர்கள். அவான் நதியில் படகு சவாரியும் மேற்கொண்டனர்.
அடுத்தநாள் மதியம் நெருங்கும் வரை தூங்கிருக்க, “இன்னைக்கு எங்க போறோம்” பரா ஆவலாக கேட்க,
அவளை முறைத்தவன் “நேத்து நடந்து நடந்து கால் வலிக்குது என்று என்ன உப்பு மூட்ட சுமக்க சொல்லாதது ஒண்ணுதான் குறை. இன்னைக்கும் போகணுமா உனக்கு? இத்தனை நாள் நான் பொறுமையா இருந்ததே பெரிய விஷயம். ஏதோ என் பொண்டாடி ஹனிமூன் போக ஆசைப்பட்டா என்று நான் பொறுமையா இருந்தா… நீ என் பொறுமையை ரொம்பதான் சோதிக்கிற. பகல்னு கூட பார்க்க மாட்டேன் பாஞ்சிடுவேன் பார்த்துக்க”
“இப்போ எதுக்கு இவன் கோபடுறான்” என்று பார்த்திருந்தவள் அவனது கடைசி வாக்கியத்தில் வெக்கத்தில் சிரித்தாள்.
“என்ன இளிப்பு…” கேட்டவனுக்கும் சிரிப்பாகத்தான் இருந்ததது. ஆனால் சிரிக்காமல் அவளையே பார்த்திருந்தான்.
இந்த கொஞ்சம் நாட்களாக பரா ஜெராட் அவளை நெருங்கும் பொழுது விலகி ஓடுவது போல் அவனுக்குத் தெரிய, இவள் அச்சப்படுகிறாளா? வெட்கப்படுகிறாளா? என்று புரியாமல் குழம்பினான். அவளுக்கு விருப்பமில்லையென்றால் வந்திருக்கவே மாட்டாளே தட்டிக்கழித்தானே பார்த்திருப்பாள் என்று ஜெராட் யோசித்துக் கொண்டிருந்தான்.
அது ஐவியின் ஆவி அவளை சுற்றுவதால் தான் என்று இவளும் ஜெராடிடம் கூறியிருக்கவில்லை. எங்கே ஐவியின் ஆவிக்கு தான் ஜெராடை நெருங்குவது பிடிக்க வில்லையோ என்றுதான் பரா ஒதுங்கி இருந்தாள். ஐவியோடு பேசிய பின்தான் அவள் எண்ணம் புரிந்தது. புரிந்த உடன் தானே ஜெராடோடு தேனிலவுக்கு கிளம்பி வந்திருந்தாள்.
நேற்று உண்மையிலயே நடை பயணத்தால் கால்கள் வலிக்க நேரங்காலத்தோடு தூங்கியுமிருந்தனர்.
ஒருநாள் வெளியே சுற்றலாம். இரண்டு நாட்கள் அறையிலையே இருக்கலாம் இதுதான் ஜெராடின் திட்டம். அவன் வந்த நோக்கம் நிறைவேற வேண்டாமா? {அதாங்க ஆபீஸ் வேலை} வரும் பொழுதே தெளிவாக பேசி விட்டுத்தான் அழைத்து வந்தான்.
இவள் வம்பிழுக்கின்றாளா? விருப்பமில்லையா? அச்சப்படுகின்றாளா? ஏதாவது அவள் சொன்னால் தானே புரிந்துகொள்ள முடியும் என்றுதான் அவள் முகத்தையே பார்த்திருந்தான்.
“என்ன?” “என்ன இவன் இப்படிக்கு பாக்குறான். பார்வையே சரியில்லையே” என்று பரா கேட்க,
“என்ன” பதிலுக்கு ஜெராடும் கேட்டான்.
“இல்ல கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி இங்க ஒருத்தர் பாஞ்சிடுவேன், கடிச்சிடுவேன் என்று சொன்னாரு. அவரு எங்கன்னு பார்த்தேன். நீங்க பேசுறத தவிர ஒன்னும் செய்ய மாட்டீங்களே” வம்பிழுக்கவென்றே இவள் ஆரம்பித்திருக்க,
“பாவம் கால் வலிக்குது என்று சொன்னாலே என்று உன்ன சும்மா விட்டது தப்பா போச்சு உனக்கு வாய் கொழுப்பு அதிகம்டி…” அவளை எட்டிப் பிடித்து “இந்த வாய் தானே ஓவரா பேசுறது?” என்றவாறே அவள் கீழ் உதட்டை பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் கொண்டு இழுத்தான்.
சட்டென்று அவனிடமிருந்து விடுபட்டவள் அவனது கன்னத்தில் பட்டென்று முத்தம் வைத்து விட்டு ஓட முற்பட ஜெராட் அவளை விட்டால் தானே.
இறுக அணைத்துக் கொண்டு “எங்க ஓடுற? கால் வலிக்குது என்று சொன்ன? ஓட மட்டும் கால் வலிக்கலையா?”
கைகளை அவன் கழுத்தில் மாலையாக கோர்த்துக் கொண்டவள் “என்ன இங்க இருந்து பெட்டுக்கு தூக்கிட்டு போங்க, பகல் என்றாலும் பரவால்ல நீங்க என்ன சொன்னாலும் கேட்குறேன்” என்றவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்ன முகத்தை அவன் மார்பிளையே மறைத்துக் கொண்டாள்.
பரா சாதாரணமா கூறியிருந்தால் ஜெராட் அவள் கூறியதன் அர்த்தத்தை ஆராய்ந்துக் கூட இருக்க மாட்டான். அவள் வெட்கமே அவளை காட்டிக் கொடுத்திருந்தது.
“ஹேய் என்ன சொன்ன நீ” ஜெராட் மீண்டும் கேட்க,
“ஒரு தடவைதான் சொல்ல முடியும்” அவன் முகம் பாராமல் இவள் கூற, ஜெராட் அவளை கைகளில் ஏந்தியிருந்தான். 
ஜெராட் கட்டிலை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பரா அவனது கன்னத்தில் முத்தம் வைக்கலானாள்.
அவள் இதழ் குவிக்கும் பொழுது நடையை நிறுத்தி அவள் புறம் திரும்பியவன் உதடு குவிக்க, அவளோ இவன் உதடுகளில் முத்தமிட்டிருந்தாள்.
“என்ன பண்ணுறீங்க? போங்காட்டம்” பரா வெக்கத்தோடு முறைக்க,
   
“நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே. நான் தான் எப்பவுமே உன்ன கிஸ் பண்ணுவேன். நீ நெருங்கி வர, நான் கிஸ் பண்ணுறேன். நீ ஓடுற. இன்னக்கி நீயாகவே வந்திருக்க. பேசி டைம வேஸ்ட் பண்ணனுமா?” புருவம் உயர்த்தியவன் அவள் இதழ் நோக்கி குனிந்தான். 
அதன்பின் இரண்டு நாட்களுக்கு அவர்கள் அறையை விட்டு எங்கும் செல்லவில்லை.
வீட்டுக்கு அலைபேசி அழைப்பு விடுத்து பேசியதை தவிர இந்த இரண்டு நாட்களில் வேறு வேலையும் இருவரும் பார்க்கவில்லை.
“ஜெராட் இதுதான் நீங்க பார்க்க வந்த ஆபீஸ் வேலையா?” பரா அவனை வம்பிழுத்தாலும் விட்டு விலகாமல் ஒட்டிக் கொண்டே இருந்தாள். 
“ஆமா யாரோ ஊர சுத்தி பாக்கணும் என்றாங்க. அந்த பொம்பள எங்க காணாம போனாங்களோ தெரியல” என்று இவனும் வம்பிழுத்தான்.
“ஆமா… ஆமா.. எனக்கு மட்டும் தான் இப்போ எங்கயும் போக மூட் இல்ல பாருங்க” இவள் சிரிக்க,
“கம்பனி வேல ஒன்னத்தையும் பார்க்கல டேவிட் திட்ட போறான்” ஜெராடும் சிரித்தான்.
அனைத்து வேலைகளையும் முடித்த பின்தான் அறையை விட்டு வெளியவே சென்றனர்.
அறைக்குள்ளவே ஒருவாரம் ஓடியிருக்க, நாமா வீட்டுக்கு போகலாம் என்றாள் பரா.
அவளை வெளியே அழைத்து வந்து ஏமாற்றி விட்டோமோ என்று நினைத்தான் ஜெராட்.
“நாம இன்னொரு நாள் வரலாம்” ஜெராடை சமாதானப்படுத்தலானாள் பரா.
“இல்ல வா உன்ன ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் என்றவன் அழைத்து சென்றது {Stonehenge}  ஸ்டோன்ஹெஞ்ச் பாறாங் கற்களை பார்க்க.
அவற்றை வியப்போடு பார்த்த பரா “இந்த இடத்த, கற்களை நான் இதற்கு முன்ன பாத்திருக்கேன்” என்றாள் பரா.
“எப்போ போன ஜன்மத்துலயா?” கிண்டலடித்தான் ஜெராட்.
அவனை முறைத்தவள் “சினிமாலதான். நான் வேற எங்க பார்க்க” என்றாள்.
“ஆமா… நான் கூட சின்ன வயசுல ராபின்ஹூட்ல பார்த்து வியந்திருக்கேன். சின்ன வயசுல புரியாம பார்த்தேன். இங்க வந்த பிறகுதான் இன்னும் ஷாக் ஆனேன். உண்மையிலயே இப்படி ஒரு இடம் இருக்கு எங்குறத என்னால நம்பவே முடியல. சினிமாலையும், ட்ராவல் ப்லோக்ஸ்லயும் எவ்வளவு இடங்களை காட்டுறாங்க. நம்ம உலகத்துல இந்த மாதிரியான இடங்கள் கூட இருக்கானு ஆச்சரியமா இருக்கு” என்றவன் பராவோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டான். 
இவர்கள் சந்தோசமாக வீடு வர, அதை விட சந்தோஷமாக வீட்டார் இவர்களை வரவேற்றனர்.
“நாங்க வரும் போதே எஸ்தர் பெட்டியோட வாசல்ல இருப்பாங்க என்று நினச்சேன்” என்று அன்னையை வம்பிழுத்தான்.
“போடா…” என்று எஸ்தர் மகனின் தோளில் அடிக்க, “நிஜமா கனவு கூட வந்தது” என்று சிரித்தான் ஜெராட்.
“பசங்க சமத்தா இருந்தாங்களா?” பரா அன்னையர்களை ஏறிட,
“ஆ… குட் பாய் அண்ட் குட் கர்ள். இல்ல பசங்களா” பதில் பால்ராஜிடமிருந்து வந்தது.
தினமும் பாத்திமாவுக்கு அலைபேசி அழைப்பு விடுத்து அங்கிருக்கும் பேரக் குழந்தைகளோடு வீடியோ கால் பேசுகிறார் என்று பரா அறிந்ததுதான். முன்பு விட தந்தையின் முகம் பளிச்சென்று இருக்க புன்னகைத்தாள்.
“ஹனிமூனும் போயிட்டு வந்துட்டீங்க. என்ன மருமகளே சரியா பத்து மாசத்துல புள்ளய பெத்து கைல கொடுப்பியா? கைல புள்ளய வாங்க நான் இங்க இருக்கணும் இல்ல” எஸ்தர் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்பதை மறைமுகமாக கூறினாள்.
“உங்க பையனுக்கு உங்க கிட்ட இருந்துதான் அத்தனை சேட்டையும் வந்திருக்கு அத்த” என்ற பரா அறைக்கு சென்றாள்.
“நான் என்ன கேட்டா அவ என்ன சொல்லிட்டு போறா?” மகனிடம் முறையிட்டாள்.
“உனக்கு சரியா நடிக்கக் கூட தெரியல்னு சொல்லிட்டு போறா” சிரித்த ஜெராட் அன்னையின் கன்னம் கிள்ளி “ஊருக்கு போய்த்தான் ஆகணும்னா போயிட்டு வா” சந்தோஷமாக கூற எஸ்தர் நிம்மதியாக புன்னகைத்தாள்.
அறைக்கு வந்த பரா “ஐவி இருக்குறியா? நானும் ஜெராடும் ஹனிமூன் போயிட்டு வந்துட்டோம்” என்று கூறியவாறே விண்ட்சிம்சை பார்த்தாள். அது அசையவில்லை.
“என்ன வந்த உடனே ரூமுக்கு ஓடி வந்துட்ட. இன்னமும் ஹனிமூன் மூட்லதான் இருக்குறியா?” பராவை பின்னாலிருந்து அணைத்தவாறு கேட்டான் ஜெராட்.
அவன் கைகளை பிடித்துக் கொண்டு “ஏன் இருக்கக் கூடாதா?”  என்று அவனையே கேட்க,
“இது போதும். இந்த முன்னேற்றம் போதும்” என்று சிரித்தான்.
“அப்பா… அம்மா” என்று லெனினும் ஜெஸியும் ஓடி வந்து ஜெராடையும், பராவையும் கட்டிக்கொள்ள,
“வாங்கடா. வாங்கடா” என்று ஜெராட் இருவரையும் நெஞ்சோடு சேர்த்தணைத்து தட்டமலை சுற்றி கட்டிலில் விட்டான்.
“ரெண்டு பேரும் சமத்தா இருந்தீங்களா” பரா கேட்க,
“ஆமா ப்ளவர் ஆன்டி பார்த்துக்கிட்டாங்க” என்றாள் ஜெஸி.
“ஆன்டியா? யார் அது?” ஜெராட் புரியாமல் பராவை பார்க்க,
ஐவியை தான் ஜெஸி சொல்கிறாள் என்று பராவுக்கு புரிந்தது.
ஐவிக்கு உருவமில்லை. என்றால் குழந்தைகள் பயந்து விடுவார்களென்று நீண்ட ஒரு கவுனுக்குள் புகுந்து, கைக்கு கையுறை, முகக்கவசம், விக் மற்றும் தலையில் பூக்களான கிரீடம் அணிந்துதான் குழந்தைகளின் முன் தோன்றுவாள்.
கேட்டால் அவள் தேவதை என்று கூறியிருக்க, ஜெஸி பிளவர் ஆன்டி என்று பெயரிட்டிருந்தாள்.
“பக்கத்து வீட்டுலதான் இருக்காங்க கூப்பிட்டா வந்துடுவாங்க” என்று பரா குழந்தைகளிடம் சொல்லி வைத்திருக்க, அவர்களது அறைக்குள் மட்டும் தான் ஐவியின் நடமாட்டம் இருக்கும். அதுவும் வீட்டில் ஜெராட் இல்லாத பொழுது மட்டும்.
லெனின் எதோ சொல்ல வர “பக்கத்து வீட்டு பொண்ண சொல்லுறாங்க” என்று லெனினை பேச விடாது கிச்சுகிச்சு மூட்ட, தலையணை சண்டையும் அங்கே ஆரம்பமா, சிரிப்பலை ஓயாவே இல்லை.
ஓவியமாக இருந்த அவர்களை ஓரமாக இருந்து பார்த்திருந்தாள் ஐவி.

Advertisement