Advertisement

ஓம் நமச்சிவாய.
அத்தியாயம் நான்கிற்கு கருத்துக்கள் விருப்பங்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி..
அதே போன்று அத்தியாயம் ஐந்திற்கும் தங்களது கருத்துக்களையும்  பிழைகளையும் சுட்டி காட்டி என்னை வழிநடத்தி ஊக்கப்படுத்துங்கள் டியர்ஷ்… 
கதை போற விதம் படிக்குற உங்களுக்கு புடிச்சுருக்கா??… இல்ல ஏதும் எழுத்து நடைகளை மாத்தனுமா???…. 
கதை எப்புடி சரியான முறையில் தொய்வு இல்லாமல் நகர்ந்து போகுதா??…. 
இந்த அத்தியாயம் ஐந்து நம்ம வடிவழகி மகேஷ் வர்மாவை சுற்றி அவர்களின் சந்திப்பு பற்றி நகர்ந்து  செல்கின்றன . இந்த அத்தியாயம் புரியாதவர் அத்தியாயம் மூன்றை படித்து புரிஞ்சுகோங்கோ டியர்ஷ்…. 
என்னருகில் நீ இருந்தால்.
அத்தியாயம் ஐந்து.
காலை பொழுது மழை தூறல் மண்ணை நனைத்துக்கொண்டிருந்த நேரம் மண்வாசம் நாசியை தாக்கி ஒருவிதமான சுகந்ததை கொடுத்தது.
அதை ஆழ்ந்து அனுபவித்தபடி மக்கள் கூட்டம் சேர்ந்ததை பார்த்து.
மேக்ககாதலியின் பின் தன்னை மறைத்துக்கொண்டது அங்கு நடைபெறவிருக்கும். பந்தத்தை ஆசீர்வதிப்பதற்க்கு.
பஞ்சாயத்தில் மக்கள் ஏதோ அதிர்ச்சியான விசயம் கேட்டதை போன்று அமைதியாக இருந்தனர்.
ஏன் என்றால்??.. அவர்கள் அவ்வூரின் கவுன்சிலரை பார்பதற்கு கூட கால் கடுக்க ஒரு நாள் முழுவதும் நிற்கும் நிலை அந்த கிராமத்து மக்களுக்கு.
இங்கானால் ஒரு மாவட்ட கலெக்டர் ஒரு குற்றத்திற்க்காக தங்களது பஞ்சாயத்தில் கை கட்டி எந்த விதமான பந்தாவும் இன்றி பாமரன் போன்று நிற்கின்றார்.
என்ன பாவத்தப்பு எங்கள பண்ணவைக்க இருந்தீங்க ராசா??..
அன்றாடங்காட்சியான எங்களுக்கு பொழைப்பு தந்து எங்க வயிறு வாடாம காப்பாத்துற பெரியாத்தா பேரன் நீங்க.
இங்க இருக்கவுகல்ல பாதிபேர் பெரியாத்தா நிலத்துலதான் வேலபார்குறோம். எங்கள வேலைய்கு வந்தவுகலா நடத்தாம சொந்த மனுசமக்களாத்தான் நடத்தும் மகராசி அவுகவீட்டு புள்ள அதுவும் இல்லாம எம்மாப்பெரிய உத்தியோகம் பார்குறீக நாங்கள்லாம் நிமிர்ந்து பார்க்குற இடத்துல இருக்குற நீங்க எங்களுக்கு சமமா கைகட்டி நிக்குறீங்களேப்பு.
என்ன பாவத்த பண்ணவைக்க பார்க்குறீக இந்த நாற்காலியில் இருங்க ராசா.
மகேஷ்– இல்லங்க என்மேல பிழை இருக்கு நான் எப்புடி இருக்கமுடியும் பஞ்சாயத்துகுனு ஒரு முறை இருக்கு நான் அத மீற மாட்டேன்.
மகேஷின் பேச்சை கேட்டுக்கொண்டு அவ்விடம் வந்த பெரியாத்தா என்று அழைக்கபடும் பேச்சியம்மா தனது வயதுமுதிர்ந்த காலத்திலும். கம்பிரமாக தனது கொல்லுப்பேரனின் பேச்சில் அவனை ஒரு மெச்சுதல் பார்வை பார்த்துக்கொண்டே வந்து இருக்கையில் இருந்தார்.
பஞ்சாயத்து தலைவர். உங்களுக்கு சிரமம் தந்ததிற்கு எங்களை மன்னிச்சுருங்க பெரியாத்தா. நான் தீர்ப்பு சொல்லுவதற்கு நீங்கதான் வழிகாட்டனும் எனக்கு.
பெரியாத்தா– என்னதுக்கப்பு நீங்க பெரியவார்த்தை எல்லாம் சொல்லுகிட்டு. எல்லாருக்கும் இந்த ஊர்ல ஒரே நாயந்தேன். நான் வளர்த்த ஏன் பேரனாச்சே அப்புடித்தான் பதவிசா இடத்துக்கு ஏத்தமாதிரி நடந்துப்பான்.
நீ என்னப்பு இங்க என்னதேன் நடந்துச்சு சொல்லுய்யா??..
ப.தலை— பெரியாத்தா கேக்குறாக என்ன நடந்துசு வடிவும் நீங்களும் எப்புடி அந்த தோப்புல இரவ கழிச்சீகனு சொல்லுங்க தம்பி.
மகேஷ்– நான் பாட்டிய பார்க்க சென்னையில இருந்து மூன்று நாள் லீவுல வந்தேன். ஊருக்குள்ள வாந்ததும் எனக்கு போன் வந்துசிங்க.
அப்போ நான் அத கதைக்கும் போது யாரோ கல்லால என் கார் கண்ணாடிய ஒட்ச்சுட்டாங்க.
நான் ஒடைச்சது யாருனு தேடும்போது திரும்ப எங்க அப்பா கால் பண்ணினார்ங்க.
சிவசங்கர்.  ஹலோ நீ  கலெக்டர்ன்னா பெரிய இவனோ. ஒரு சைன் போடமாட்டியோ. நம்ம புள்ள கலெக்டரா இருக்கானே நமக்கு வேண்டிய வேலைகளை செய்து தருவான்னு பார்த்தா நீ பெரிய இவனாட்டம். அங்க போய் இருந்துடு ஒரு சைனுக்கு என்ன கால் பண்ணவைக்குற.
இது சரி இல்ல இருந்தாலும் புள்ளயா போய்டியே அதனால பரவாயில்ல உன்னோட ஈமெயிலுக்கு பைல் விபரம் அனுப்பி வைக்குறேன் நீ சைன் பண்ணி திரும்ப அனுப்பு ஓகே.
மகேஷ்– ஹலோ மிஸ்டர் சிவசங்கர் வர்மா கொஞ்சம் நான் சொல்லவற்தயும் நீங்க கேளுங்க ஓகே.
உங்களுக்கு அந்த டென்டர் கிடைக்ககூடாதுனுதான்.  அத சமிட் பண்ண இன்னைக்கு தான் லாஸ்ட் டேட்னு எல்லாம் தெரிஞ்சேதான். நான் சைன் பண்ணகூடாதுனு முடிவுல லீவ் எடுத்து பாட்டிமாவ பார்க்குறதுக்கு வந்துருக்கேன். தெளிவா புரிஞ்சுகிட்டிங்களா மிஸ்டர்.
சங்கர்— டேய் நான் உனக்கு அப்பன்டா அப்போ எல்லாம் தெரிஞ்சேதானே செய்துருக்க உன்னட்ட எப்புடி சைன் வாங்ககுறதுனு எனக்கு நல்லாவே தெரியும். அத நான் பார்த்துகிறேன் நீயா???… நானானு.
மகேஷ்– ஹலோ மிஸ்டர் நான் ஏன் உங்களுக்கு சைன் பண்ணமாட்டேனு காரணம் தெரிய வேண்டாமா??..
தீ கிரேட் கிரான்பா அதாகப்பட்டது உங்க டாடியின். இறுதி நேர ஆசைனும் சொல்லாம். ரெக்வெஸ்ட்னும். சொல்லலாம் அத எப்புடி வேணும்னாலும் நீங்க எடுத்துக்கலாம். அது உங்க விருப்பம். மிஸ்டர்.
தாத்தா எனது 15 வது வயதுல நான் பாட்டிகூட இருக்கும் போதும். என்ன பார்க்க வரச்சொன்னாறுனு நான் முதல்முதலா சென்னை வந்தேன்.
அத கொஞ்சம். நினைத்து பாருங்க. அவர் இறக்கும் தருணத்தில  அவரோட கடைசி ஆசைனு ஒன்னே ஒன்னுதான் கேட்டுகிட்டாறு ஏங்கிட்ட.
அது என்னவென்றால். அவருடைய மகன் அதாகப்பட்டது யூ  செய்த முதல் கவர்மெண்ட் ப்ரோஜக்ட் ஒரு பாடசாலை கட்டிமுடிச்சிங்கலாமே.
சீமெந்து குறைவா போட்டு கலவையில் கலப்படம் செய்து கட்டுனிங்கலாம். அந்த கட்டிடம் இடிஞ்சு விழுந்து நிறைய புள்ளைகள் உயிர்ழந்து.ஆசிரியர்கள் கை கால்களை இழந்துடாங்கலாமே.அதனால எத்தின குடும்பம் கஷ்டப்பட்டிருகும். என்னோட வம்சத்துக்கு எவ்வளவு சாபங்கள் திட்டுக்கள் விழுந்துருகும்னு அவர் ஏன் தான் உங்க குணம் தெரியாம நீங்க அவர்ட நல்லவர்னு நடிக்குறீங்கனு ஏதுவுமே சரிவர தெரிஞ்சுக்காம உங்கள நம்பி தொழில் சொத்து முழுவதையும். ஓரே புள்ளனு உங்க பேர்ல எழுதிவச்சுட்டமேனு சாகுற கடைசி நிமிசம் வரைக்கும் வருந்தி கவலை பட்டார்.
அதனால என்னட்ட சொன்னாரு அதுதானாம் நீங்க செய்த முதலும் கட்சியுமான கவர்மெண்ட் ப்ரோஜெக்டா இருக்கனுமாம். அதனால வந்த பாவத்தையே எந்த ஜென்மத்துல என்னத்த செய்து இல்லாம ஒழிக்க போறோம்னு தெரியல நான் இருக்குறவரைக்கும் என்னால அடுத்த வேல அவன் கைக்கு கிடைக்காம செய்துடேன். இனியும் கிடைக்கவிடகூடாது. என்னோட நண்பன் மகன் தான் இப்போ கலெக்டரா இருக்குறான் அவன்ட எல்லாதயும் சொல்லிருக்கேன். நீ கலெக்டரா வரும் வரை அவன் அத சரியா செய்வான். நீ கலெக்டருக்கு படிச்சு பதவிக்கு வா.
உங்க அப்பனே அவனோட பவர்ல இதே சென்னைக்கு உன்ன பதவிக்கு கொண்டுவருவான். அதுகு பிறகு நீதான் அந்த பொறுப்ப பார்த்துக்கனும். அவனுக்கு எந்த கவர்மெண்ட் வேலையும். கடைக்கவிடக்கூடாது.
அவன் தனிபட்ட முறையில வேல செய்யும் போது வேலையில ஏதும் குறை வராம செய்வான் பேர்கெட்டு போயிடகூடாதுனு.
நீ அவன் ரெத்தம்னாலும். பேச்சி ஆத்தா வளர்ப்பு தப்பி போகாதுனு இந்த பொறுப்ப உன்கிட்ட ஓப்படைக்குறேன்.
நீ ஏதும் படிப்பு படிக்க ஆசை வச்சுருந்தா அதை நான் உனக்கு பிள்ளையா பிறந்து படிச்சு உன்னோட ஆசைய நிறைவேற்றுவேன்.
இப்ப நீ என்னோட இந்த கடைசி ஆசைய நிறைவேற்றுவியானு??.. அந்த பெரிய மனுசன். ஏன்கிட்ட கேட்டுகிட்டாறு மிஸ்டர் சிவசங்கர் வர்மா.
அதெல்லாம் நான் இன்னும் மறக்கயில்ல. பசுமரத்து ஆணி மாதிரி மனசுல ஆழமா பதிஞ்சுட்டு. உங்கள அந்த தப்புக்கு பரிகாரம் பண்ணவைக்காம ஓயமாட்டேன்.
அதற்கு தான் நானும் சந்தர்பம் பார்த்து இருக்கும் போது தாத்தா சொன்ன மாதிரியே நீங்களே என்ன சென்னைக்கே போஸ்ட்டிங் போட்டு உங்களுக்கு ஆப்பு தேடிவந்து வாங்கிட்டிங்க மிஸ்டர்.
பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கனும்னு பாட்டி சொல்லிக்குடுத்துருக்காங்க.
அதுதான் மிஸ்டர்.போட்டு பேசுறேன். ஓகே நீங்க எனக்கு அப்பாவா இருக்கலாம். பட் நான் அத உணர்ந்து இருக்கனும். நீங்க எனக்கு உணர்த்தலயே. நான் என்ன பண்ணுறது??… 
அப்பான்னா ஒரு பாசம் பாதுகாப்பு வரணும். பயம் வெறுப்பு வரக்கூடாது மிஸ்டர் சிவசங்கர் வர்மா. மைன்டிட்.
சங்கர்–  என்டா நமக்கு ஒரு வேலையும் சரிவரமாட்டேங்குதே. குடுக்குற கொட்டேஷன் எல்லாம் ரிஜெக்ட் ஆகுதேனு நானும் பார்த்தா??.. எல்லாம் என்னபெத்த கிழவன்ட வேலையா??..
நீங்க இவ்வளவு யோசிச்சா நான் அதுக்கு மேல உங்களுக்கு செய்யாட்டி நான் என்ன சிவா???…
“நல்லா கேட்டுக்கோங்க கலெக்டர் சார்”.
இப்ப நீங்க இருக்கும் இடத்துக்கு பக்கதிலயே இரண்டு பொண்ணுங்களும். ஒரு சின்ன பையனும். இருந்தாங்கலாம். அதுல பார்க்க லட்சனமா இருந்த பொண்ண நம்ம பசங்க தூக்கிட்டாங்கலாம். சார்.
நீங்க போய் காப்பாத்துறதுகுள்ள நம்ம பசங்க பாசமா கை வச்சுற போறாங்க.
அதனால நீங்க சைன் பண்ணுறதுதான் உங்கட ஒரே சாய்ஸ் இப்ப ஒகே.
நீ சைன் பண்ணின அடுத்த செக்கன்ட் அந்த பொண்ணுக்கு எந்த சேதாரமும் இல்லாம வந்து சேரும். இல்ல நான் சைன் பண்ணமாட்டனு அதே பாட்ட திரும்பவும் படிச்சீங்கன்னா???
பிறகு நடக்க இருக்குற எதுகும் நான் பொறுப்புயில்ல என்ன நான் சொல்லுறது நல்லா புரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன்.
கிராமத்துக்காரவங்க பொண்ணுக்கு இப்புடி ஏதும் அகிட்டுனு தெரிஞ்சா மானம் போச்சினு குடும்பமா தொங்கிருவானுக கலெக்டர் சார்.
பைவ் மினிட்ஸ் டைம் தாறேன். நல்லா யோசிச்சு நல்ல முடிவா எடுங்க சார் ஒகே.
மகேஷ்– ஹலோ மிஸ்டர். வெயிட் இந்த பூச்சாண்டிக்கெல்லாம். நான் அசரமாட்டேன்.
“நூறு பேர் நல்லா இருக்கனும்னா நாலு பேர் உயிர் போறது தப்பில்ல ஓகே.”
“நீங்க உங்களால ஆனத பாருங்க”
நான் லாஸ்டா சொல்லுறேன் உங்களுக்கு மட்டும் இல்ல எந்த கொம்பனா இருந்தாலும் எனக்கு ஒன்னும் இல்ல.
நான் சைன் பண்ணி ஒரு வேலை நடாக்கனும்னா ஒன்னுக்கு நூறு தடவை சரி பார்த்து   ஏதும் பிழை இல்லாம பக்காவா இருந்தால் மட்டும் தான் நான் சைன் பண்ணுவன். ஒகே.
எனக்கு இப்ப உங்களோட வெட்டி பேச்ச கேக்க  டைம் இல்ல  நான் த்ரி டேஸ். பாட்டிமா கூட ஜாலியா டைம் ஸ்பென் பண்ணபோறேன் டோன் டிஸ்டப் மீ மிஸ்டர் ஒகே பாய்..
” பாய்ஸ் குயிக்கா எல்லா பக்கமும். அந்த பொண்ண தேடுங்க டைம் இப்ப  லெவன்தேர்ட்டி பாஸ்ட்டா நாம கண்டுபிடிச்சு அவங்க வீட்டுக்கு அனுப்பிறனும். ஒகே. நானும் தேடிப்போறேன். அந்த பொண்ணு போட்டோ அனுப்பிருக்கேன் உங்க செல்லுக்கு. பார்த்துகோங்க குயிக்”.
“மகேஷின். பாதுகாவலர்கள்.  ஒகே பாஸ் டோன்ட் வெரி நாங்க தேடிபோறோம்.”
************************
” சிவசங்கர் மதுரையிலும் அவரின் ஆட்களை வைத்திருகின்றார் அவர்கள் மூலம் தான்”.
“மகேஷ் மதுரை வந்ததையும் தனியாகவா இல்லை கார்ட்ஸ் யாரும்.உடன் வந்திருக்கின்றார்களா?? என்று கேட்டு”.
“மகேஷ் பாதுகாவலரை இடைவெளி விட்டு வரும் படியும். அவர்களுடன் எப்பொழுதும் தான் தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருந்தான்.”
“அவர்கள் அதை அறியாமல்  தனியாக மகேஷ் நிற்பதை பார்த்து தனியாக வந்திருப்பதாக கூறவும். அதை வீடியோ காலின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்ட சங்கர்.
“அதில் தெரிந்த மற்றய மூவரையும் யார் என்று விசாரித்து அதில் ஒரு பெண்ணை தூக்க சொன்னார்”.
“தூக்குவதற்கு முதல் வடிவை போட்டோ எடுத்து இந்த பொண்ணு ஒகேவா என்று கேட்டு தெளிவு படுத்திக்கொண்டனர். அந்த போட்டோதான் சங்கர் தற்போது மகேஷிற்கு வாட்சப்பில் அவன் நம்புவதற்கு அனுப்பி வைத்தார் சங்கர்”.
“சங்கர் அவளை தூக்க சொன்ன நேரம் வடிவழகி மகேஷின் கையில் மாட்டாமல் இருப்பதற்கு”.
“இவளின் நேரம் சரியின்மையால் அவர்கள் கடத்துவதற்கு ஏதுவாக இவளே வழியமைத்து வயல் வரம்பில் வேகமாக பொன்னியும் ராசுகுட்டியும் முன்னால் செல்ல இவள் கடைசியாக நடந்து சென்று கொண்டிருந்தால்”.
“அப்பொழுது சத்தம் இல்லாமல் பூனை நடை நடந்து இவளை மயக்க மருந்தை கலந்த துணியில் வாயை  மூடி அவள் திமிர முடியாமல் அழுத்தி தூக்கி போய்விட்டார்கள். சங்கர் ஏற்பாடு செய்த ரவ்டீஸ்”
” அது தெரியாமல் பொன்னியும் ராசுக்குட்டியும் வடிவு இருப்பதாக எண்ணி கதைபேசி கொண்டுவந்தனர்.”
“வடிவின் சத்தம் இல்லாமல் போனதும். அவளை தேடி தவித்து காணவில்லை என்றதும் வடிவின் வீட்டில் தகவல் சொல்லி தேடலை தொடங்கினர்.”
“எவ்வளவு தேடியும் ராஜதுரையால் வடிவை கண்டுபிடிக்க இயலாமல் போகவும். “
“மகளை காணவில்லை என்ற விபரத்தை அன்று இரவே பஞ்சாயத்து தலைவரிடம் சொல்லிவிட்டார்”.
தந்தை மகளை காணவில்லை என்று தவிப்பார் என்று  அதுதான் வடிவு கிடைத்தவுடன் ராஜதுரைக்கு மாடசாமி மூலம் தகவலை சொல்லிவிட்டார்.
அந்த நல் உள்ளம் கொண்ட பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி.
*********
கிழக்கு மாந்தோப்பு…..
ரவ்டீஸ்.. ஹலோ சார் நீங்க சொன்னமாதிரி அந்த பொண்ண தூக்கி கிழக்கு மாந்தோப்புல வச்சிருக்கோம். சார்.
சங்கர்..  ஒகேடா பீ கெயர் ப்புள். அவன் அவ்வளவு லேசுல யாரும் எப்புடியும் போகடும்னு விடுற ஆள் இல்லடா அந்த கிழவி அவன சென்டிமெண்ட் பெலோவா வளர்த்துருப்பா அதனால அவன் கண்டிப்பா அவன்ட பவர வச்சு தேடுவான் நீங்க ரொம்ப கவனமா இருங்க ஒகே.
இன்னைக்கு ஈவ்னிங் ஐந்து மணிவரை டைம் இருக்கு அதுவரை அந்த பொண்ணுக்கு சாப்பாடு தண்ணி ஏதும் குடுக்காதீங்க. அப்புடியே கெடக்கட்டும் என்ன நடக்குதுனு பார்ப்போம் அவனா நானா???…
“சரிங்க சார் நாங்க பார்த்துகிறோம்”
“ஏண்ணே பகல்ல இந்த தோப்புல அந்த புள்ளய வச்சிருக்கமே. ஏதும் பிரச்சினை இல்லயா”??..
டேய் நான் சார் வேல குடுத்ததும் உங்கள பொண்ண தூக்க சொல்லிட்டு வந்ததே இடம் பார்க்கதான்.
இந்த இடம் ஒருவன் ரெண்டு வாருசத்துக்கு முதல் வித்துடானாம்.
வாங்கினவன் பாரீன்ல இருக்கானாம் இடத்த பார்த்துக்க இன்னும் ஆள் போடலயாம். எல்லாம் தெளிவா விசாரிச்சிட்டுதான் இந்த இடத்த ஓகே பண்ணினேன்.
சார் திரும்ப போன் பண்ணுறவரை நாம இங்கதான் இருப்போம் அந்த பொண்ணு வாய கட்டி வச்சுருக்கு சோறு தண்ணி குடுக்கவேணாமாம். அப்ப நமக்கு இனி பெருசா வேல இல்ல.
கதவ நல்லா பூட்டி சாவி எடுத்துட்டு வாடா நேரம் இப்ப ரெண்டு மணி ஆச்சி நாம சரக்கடிச்சுட்டு சூடு ஆறமுன்ன பிரியாணி சாப்புடுவோம்.
மகேஷ்— ஒவ்வொரு  தோப்பாக தேடி அலையும் போது அவனது போன் அடித்தது. 
ஹலோ சார் நாங்க இந்த சைட் எல்லா இடமும் தேடிட்டோம். எங்கயும் இல்ல அந்த பொண்ணு.
மகேஷ்  “இப்ப என்ன செய்றது முரளி.”
கிட்டதட்ட ஆறு மணிவரை தேடியும் கிடைக்கயில்ல எங்க கொண்டுபோய் வச்சுருக்கானுகள்னு தெரியல முரளி.
முரளி  சார் கார்ல பெட்ரோல் இல்லயே கார் ஸ்டர்ட் ஆகுதில்ல.
மகேஷ்–  முரளி நீங்களும் பாஸ்கரும் கார அங்கயே விட்டுவிட்டு நடந்து நான் சொல்லுற இடத்துக்கு போங்க இப்போதைக்கு எங்க தோப்பு வீடுதான் நான் சொன்னேனு சொல்லுங்க எல்லா வசதியும் செய்து தருவாங்க.
நான் எப்புடியும் அந்த பொண்ண கண்டு பிடிச்சு அனுப்பிட்டு அங்க வருவேன் சரியா.
சாரிப்பா லீவ்ல கூட அங்க இருக்க விடாம எங்க ஊருக்கு வந்து சுத்தி பாருங்கனு கூப்புட்டு வந்து வேலை தந்துடேன். ரியலி சாரி.
பாஸ்கர்— என்ன சார் எங்கட்ட போய் சாரி கேக்குறீங்க ஊருக்காக நியாயமா வேலை செய்ற உங்களுக்கு. நாங்க இது செய்ய மாட்டோமா என்ன. நீங்க கவனமா இருங்க.
மகேஷ்— இந்த ஊர்ல என்ன ஏதும் செய்ய முடியாமதான் யாருனே தெரியாத பொண்ண அந்த ஆள் தூக்க சொல்லிருகாறு.
வேற வழில என்னால உடனே கண்டு புடிச்சுருக்க முடியும். பட் இதுல ஒரு பொண்ணு சம்மந்தபட்டுருக்காளே அதுதான் விசயம் யாருக்கும் தெரியுறத நான் விரும்பல முரளி.
எனக்கு ஒன்னும் ஆகாது நீங்க சேப்ப போய்டு எனக்கு எஸ் எம் எஸ் அனுப்புங்க ஒகே பாய்.
“ஓகே பாஸ்”
**********
மகேஷ்— நம்ம போனும் ஆப் ஆகபோகுதே. இதுதான் தேடாத லாஸ்ட் இடம் இங்கயும் இல்லன்னா  இனி நம்ம  வழில தான் தேடனும்.
இனி கார் போகாது நடந்து தான் போகனும். உள்ள போய் பார்ப்போம்.
ரவ்டீஸ்.–  அண்ணே சரக்கு காலிச்சுணே.. ஐஞ்சு ப்புள் பாட்டில் இவ்வளவு கெதியா முடிஞ்சுதே.
டேய் எவன்டா சத்தம் போதுறஊஊ
என்னால முடியலதா நீங்க அவள கவனமா பார்த்துகோங்க.தா .
சரிணே நான் செடியா பார்துகுவேதா.
மகேஷ்—- உனக்கு வந்த சோதனைய பாருடா நீ ஒரு பொண்ண தேடி அலைவேன்னு யாரும் சொல்லிருந்தா அவன் பைத்தியம்னு சிரிச்சுருபேன்.பட் இப்ப அப்புடி நடக்குதே இந்த அப்பனால எனக்கு எவ்வளவு கஷ்டம்.
“ம் ம் ம் தட் தட் ” அந்த பக்கம் ஏதோ சத்தம் வருதே.
ஐயோ இப்புடி குடுச்சிபோட்டு உருண்டு கிடக்குறானுகளே அந்த பொண்ணுக்கு என்னாசோ தெரியல கதவு பூட்டி இருக்கு.
இவன்டதான் சாவி  இருக்கு.
உள்ள யாரு இருகீங்க இருட்டுல ஒன்னும் தெரியல.
“ம் ம்” கொஞ்சம் முன்னாடி வாம்மா பொண்ணு.
அவளை கண்டுபிடித்து வாய் கட்டை அவிழ்தான்.
வடிவு— தண்ணி.
ஏன்கிட்ட இல்ல வெளிய வாங்க போய் அவனுகள்ட இருந்தா??.. எடுத்து தாறேன்.
இந்தாங்க குடிங்க. இப்புடி இருட்டா இருக்கு. எந்த வழியால ரோட்டுக்கு போகனும்னு தெரியுமா??.
வடிவு —- பனமரம் கொஞ்சம் அமைதியா இரு எனக்கே பசி மயக்கமா இருக்கு. எனக்கு சோறு தராம அவனுகள் மட்டும் பிரியாணி சாப்புடுருக்கானுகள்.
நாளைக்கு இவானுக அம்புட்டு பேருக்கும் வாந்தி பேதி புடுங்கும் பாரு.
என்னால எங்கயும் நடந்து போகஏலாது. முடிஞ்சா தூக்கிடு போ..
பொன்னியும் ராசுகுட்டியும் என்ன இவனுகள்ட தனியா மாட்ட விட்டுப்போட்டு ஓடிட்டாங்க நாளை அம்மா கையால நல்லா சாப்புட்டு தெம்பாகிட்டுதான். போய் மண்டையில கொட்டனும். அதுங்களுக்கு நாளைக்கு தெரியும் இந்த வடிவு யாருனு….
திடீரென்று இடியுடன் மழை பெய்தது. கைதாங்கலாக வடிவை கூட்டிச்சென்றான். மகேஷ்.
என்னால இனி நடக்க ஏலாது மயக்கமா வருது
மகேஷ்– மழையும் அதிகமாக பெய்யுது வாங்க நாம இந்த மோட்டார் ரூம்ல ஒதுங்கி இருப்பம்.
வடிவு– சரி சரி என்ன யாரு ஏன் தூக்கிட்டு போனாங்கனு தெரியல அம்மா அடிக்கும் இனி இப்புடி எங்கயும் வெளிய விடாதுனு நானே கவலையா இருக்கேன்.
உன்ன நிமிர்ந்து ரெண்டு தரம் பார்த்து ஓடுனதுக்கே கழுத்து வலிக்குதுனு கடுப்புல இருக்கேன்.
நீ வேற சும்மா நொய்யு நொய்னு சத்தம் போடாம கொஞ்சம் சாஞ்சு  கீழ எறங்கி இரு தோள்பட்டையில நான் சாஞ்சு தூங்குறேன்.
முத்துக்கு தெரியாம எப்புடி அவளோட பலகாரம் எடுக்கலாம்னு இரவு முத்து தூங்குற வரைக்கும் நான் தூங்குற மாதிரி கண்ணமுடிட்டு படுத்துருந்தனா சரியா தூக்கமில்ல இன்னைக்கு கடும் அலைசல் வேற அசதியா இருக்கு.
நீயும் வேணும்னா அந்த சிவத்துல சாஞ்சு தூங்கேன்…  “ஆவ் கொட்டாவி விட்டாள்”
மகேஷ்—- ஏன் நீங்க என்ன பார்த்து ஓடுநீங்க????..
வடிவு–  ஐயோ பசி கலைப்பு ஒழறீட்டியேடி வடிவு சரி சமாளிச்சுருவம். நாம பார்காததா?..
“ஆமா இவரு பெரிய அப்பாடக்கரு. பயந்து ஓடுறாங்க போவியா”??.
ஹலோ மரியாதையா  பேசிபழகுங்க நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன் வா போனு சொல்லுறீங்க. உங்க வயசென்ன??..
ஏன் என்னோட வயச தெரிஞ்சு எனக்கு மாப்புள பாக்க போறியா???…
” உனக்கு இது தேவையாடா மகேஷ்”
மகேஷ்  — ஹலோ பொண்ணு நான் யாருனு தெரியுமா???…
வடிவு … ஆமா இவரு பெரிய ஜில்லா கலெக்டரு வந்துடாரு பெருசா??..
மூச் இனி சத்தம் வரக்கூடாது சரியா??… சமத்தா இப்ப நீ தூங்கு
“என்னடா மகேஷ்  அரைக்காபடி சைஸ் இருந்துட்டு இந்த பொண்ணு இந்த போடு போடுது.
  “அம்மாடி இது வாயா வேறேதுவுமா???.. இவள கட்டுறவன் பாடு கஷ்டம் தான்”….
“அடுத்த நாள் அதி காலை ஐந்து மணி”….
ஏய் யாருப்பா நீங்க ஏன் இங்க இருக்கீங்க ஏம்மா வடிவுபுள்ளதானே நீயு. ஏம்மா எழுந்துரு..
வடிவு ம்மா மொத முத்துவ ஏழுப்புமா ஏய் முத்து ஏழுந்துருடி.
“முத்து என்று நினைத்து மகேஷிற்கு அடித்து அவனை ஏழுப்பிவிட்டு அவன் எழுந்து நிமிர்ந்து இருந்ததும்  தோளில் சாய்ந்தவள் அவனின் மடியில் விழுந்தால்”
வடிவு.. என்ன நம்ம வீட்டுகுள்ள மழை பெய்யுது.
“ம்மா என் மேலையே நீ தண்ணிதெழுச்சிட்டியா??.. இரு வாறேன் உன்ன கட்டி புடிச்சி அழுக்காகி விடுறேன்.உன்ன திரும்ப குளிக்க வைக்குறேன்.  இப்பெல்லாம் உடனேக்கு உடன பழி வாங்கிறனும்டி வடிவு..
ஏம்மா வடிவு  இது ஒன்னோட வீடு இல்ல மொத கண்ணமுளிச்சு பாரு நான் சுந்தரம் இது ஏன் தோப்பு மோட்டார் ரூம் வடிவு.
“மெதுவாக ஒன்றன் பின் ஒன்றாக கண்ணை கசக்கி முளித்து பார்த்தால்”..
ஐயோ அப்போதுதான் நேற்று நடந்தது அனைத்தும் நியாபகம் வந்தது. வடிவழகிக்கு.
சுந்தரம்–  யாரு தம்பி நீங்க வடிவு கூட எப்புடி இங்க??? 
மகேஷ் .. நாங்க நேத்து மழையில மாட்டிடம் ஐயா அதுதான் வழிமாறி இங்க வந்துட்டோம்….
“சரி அத நீங்க தலைவர் ஐயாகிட்ட விபரமா பஞ்சாயத்துல சொல்லுங்க என்ன காரணமா இருந்தாலும் நீங்க ரெண்டு பேறும் வயசு ஆண் பெண் இப்புடி தனிய தங்கினது தப்புதானே”..
“வாங்க ஐய்யா வீட்ட போவோம்” …
சற்று நேரம் கழித்து…. பஞ்சாயத்து தலைவர் வீடு
“ஐயா ஐயா”
வெளியே வந்த அவரது மனைவி நேசமணி ஐயா இப்பதான் தோப்புக்கு போனாரு சுந்தரமண்ணே  உள்ளாற வாங்க வந்து இருங்க  செத்த நேரதால வந்துடுவாறு..
இல்லஅம்மிணி நாங்க இப்புடி திண்ணையிலயே இருக்குறோம்..
நேசம் –சரிண்ணே நீ உள்ள வா வடிவு
” யாரு?.. வடிவு அந்த தம்பி பார்த்தா பெரிய வீட்டு புள்ள போல இருக்கு”..
எங்க இருந்து வாறீங்க??.. நீ ஏன் சோர்வா இருக்க..
ப தலை– அடடே வா சுந்தரம் யாரு இந்த தம்பி நீ தலையே போனாலும் இன்நேரம் வயலுக்கு போகாமஇருக்கமாட்ட என்ன சங்கதி…
சுந்தரம்– ஐயா எனக்கு நேரம் ஆச்சுதுங்க நான் வயலுக்கு போகனுமுங்க…
நான் போறேன் நீங்க தம்பிட்ட எல்லாதயும் கேளுங்க உள்ளாறதான் வடிவுபுள்ளயும் இருக்குங்க. நான் வாறேன் ஐயா..
சரிய்யா போகலாம் இரும் இந்த குளிருக்கு இதமா காப்பி குடுசுட்டு போகலாம் செத்த நேரங்கழிச்சு போனா ஒன்னும் ஆயிறாது..
“நேசம் காப்பி போடுத்தா”
“வடிவு இந்தா புள்ள இத நீ குடி நான் அவங்களுக்கு இத குடுத்துட்டு வாறேன்”…
“வடிவு வெளிய வாத்தா”
“எங்க வடிவு போன நேத்து முழுதும் துரை உன்ன தேடி அலைஞ்சான்”…
தம்பி நீங்க யாரு???….
நான் பெரியாத்தா கொள்ளுப்பேரங்கையா….
மாடசாமி.. ஐயா  போ போயி ராஜதுரைட்ட வடிவு இங்க நம்ம வீட்டுகு வந்துட்டாம்.. பயபுட வேணாமாம் பஞ்சாயத்துகு வந்துறவாம்னு சொல்லு….
முனியா   ஐயா நீ காலை  8.30 கு பஞ்சாயத்து இருக்குனு தண்டோரா போட்டு சொல்லு…
“தம்பி நீங்க வெளியூர் இந்த ஊருக்குனு சில கட்டுப்பாடு இருக்கு அது படிதான் நாங்க எல்லாரும் நடந்துக்கனும்.
” புள்ள எங்க ஊரு நேத்து வடிவ காணயில்லனு அவங்க அப்பா தேடி அலைஞ்சான்.. எத்தின பேருட காதுல இந்த விசயம் விழுந்துனு தெரியல இப்ப நீங்க வரும் போதும் எத்தின பேர் பார்த்தாங்களோ தெரியாது”..
அதானல இந்த விசயத்த பஞ்சாயத்துல விசாரிக்குறது தான் முறை நீங்க அங்க வந்து என்ன நடந்துனு சொல்லுங்க…
சரிங்கையா நாங்க ஏதும் தப்பு பண்ணல என்னோட சூழ்நிலை இப்புடி ஆகிட்டு….  நாங்க வாறோம்…
“சரிப்பா உள்ளாற போய் இருங்க”
“நானே முறையா பெரியாத்தாட்ட விசயத்த சொல்லி பஞ்சாயத்துகு கூப்புடுறதுதான் முறை  நான் போய்டு வாறேன்”…
“நேசம் புள்ளைகள யாரையும் பார்க விடாதத்தா… புள்ளைகள் சோர்ந்து தெரியுது குளிக்க வைத்து சாப்புட கூடு… நான் இதோ வாறேன்” ….
வடிவு–  என்ன டிப்பன் மா மொத சாப்புட தாங்க நான் அப்புறம் குளிக்குறேன்.
மகேஷ்— என்ன டிசைன்டா இவ??…
***********
“பஞ்சாயத்து நடக்கும் இடம்”
மகேஷ்—- என்னோட தரப்புல இதுதான் நடந்துசீங்க ஐயா நான் ஏதும் ஒழித்து மறைத்து சொல்லயில்ல நடந்ததை அத்தனையும். விபரமா சொல்லிட்டேன்…
“சரிப்பா”
ப தலை– ஏன்மா வடிவு தம்பி நடந்ததை தெளிவா சொன்ன மாதிரி நீயும் உன்னோட தரப்பு விளக்கத்தை தெளிவா சொன்னாதான் நான் சரியா தீர்ப்பு சொல்லமுடியும்….
நீ ஏன் மா அங்க போன???……
மகேஷ்—-   நான் இந்த பொண்ணுகூட தனியா பேசனுங்க ஐயா…….
தனியாக என்ன ரகசியம் பேசுவார்களோ????….   தொடரும்…..

Advertisement